RSS

இந்த 30 நாட்களுக்குள் என் வாழ்வில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்(ல்)கின்றேன்.

பெப்ரவரி மாதம் இறுதியில் இருந்து மார்ச் மாதம் இறுதி வரையான 30 நாட்களுக்குள் என் வாழ்வில் எத்தனையோ  விசயங்கள் நடந்துவிட்டன.

தொடர்ச்சியான பரீட்சைகள், தொடர்ச்சியான பயணங்கள் இப்படி எத்தனையோ....

இந்த  30 நாட்களுக்குள் என் வாழ்வில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்(ல்)கின்றேன்.

 ஏறத்தாழ 4 மாத பயிற்சிகளின் பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின்
    தென்றல் அலைவரிசையில் எனக்கு பகுதி நேர அறிவிப்பாளராக நியமனம் கிடைத்தது.
   பயிற்சி முடித்த 16 பேரில் 5 பேருக்கு மாத்திரமே தென்றலில் நியமனம் கிடைத்தது.
   மற்றவர்களுக்கு தேசிய சேவை.
  நியமனக் கடிதம் கிடைத்த சந்தோசமான செய்தியை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள
முடியாத நிலைமை, காரணம் மறுநாள் எனக்கு பரீட்சை இருந்தது.

தொடர்ச்சியான பரீட்சைகளின் காரணமாக நியமனம் கிடைத்து 10 நாட்களின் பின்னர்தான்  நிகழ்ச்சி செய்ய வாய்ப்புக் கிட்டியது.
இது வரையில் 4 நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன்.மீண்டும் பரீட்சை என்பதால் இந்த வாரம் நிகழ்ச்சிகள் செய்ய முடியவில்லை.


ஒரு வாரம் பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கொழும்பில் தங்கியிருக்கக் கூடிய அற்புதமான வாய்ப்புக் கிட்டியது. அற்புதமான அந்த நாட்கள் என் சோகத்தையெல்லம் மறக்கடித்த அழகிய நாட்கள். அந்த நாட்களுக்காய் மீண்டும் ஏங்கிக்கொண்டிருக்கின்றேன்.

கடந்த வார இறுதியில் என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய விரிவுரையாளரான கலாநிதி.நசீர் அவர்களோடு கதைக்கும் வாய்ப்புக் கிட்டியது. பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளரான இவர், (Visiting Lecturer)ஆக எங்களுக்கு வருவது வழமை.

அதன்படி கடந்த வாரம் வந்த அவர் என்னோடு நீண்ட நேரம் பேசினார். எனது எதிர் காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள பல ஆலோசனைகளைக் கூறினார், அத்தோடு அறிவிப்புத் துறைமீதுள்ள எனது ஆர்வத்தை கூறைத்துக் கொள்ளுமாறும், இந்த துறையை மார்க்க அடிப்படையிலும், கடந்த கால நிகழ்வுகள் அடிப்படையிலும் விழக்கினார். இது தொடர்பாக பல மணி நேரம் எனக்கு அறிவுரையும் ஆலோசனையும் தந்தார். அவர் கூறிய விடயங்கள்  அனைத்தும் உண்மையே..

சிறிது சிறிதாக விலகிவிடுவதாகவும், என் எதிர்காலத்தை வேறு துறையில் அமைத்துக் கொள்வதாகவும் அவருக்கு நான் வாக்குறுதி அளித்திருக்கின்றேன். சிறு வயதிலிருந்து ஆர்வம் கொண்டு படிப்படியாக முன்னேறி அடைந்த அடைவு இது.
சிலதை அடைய சிலதை இழந்துதானே ஆகனும், அது தானே நியதி.. பார்க்கலாம்...

இவைதான் கடந்த 30 நாட்களில் என் வாழ்வில் நடந்த குறிப்பிட்டு சொல்லக் கூடிய முக்கிய நிகழ்வுகள்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS