RSS

லலித் மோடிக்கு ஆப்பு ரெடி........

ஐ.பி.எல் போட்டிகளின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவிருகின்றது. இறுதிப் போட்டியில் தொடர் முழுவதும் சிறப்பாகச் செயற்பட்டுவந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.
















மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் சச்சின் டெண்டுல்கர் இறுதிப் போட்டியில் ஆடுவது சந்தேகத்துக்கிடமாகவுள்ளது. கையில் ஏற்பட்ட காயமே இதற்குக் காரணம்.அவர் விழையாடாதவிடத்து சஹீர்கான் தலைவராகலாம்.


எது எப்படியோ ஐ.பி.எல் போட்டிகள் முடிவை எட்டியிருந்தாலும் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளும், வெளியாகிவரும் தகவல்களும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

ஆரம்பம் முதலே ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாக பல சர்ச்சைகள் நிலவி வந்தாலும் அவை லலித் மோடியின் பண பலம், அரசியல் செல்வாக்கு என்பவற்றால் முடக்கப்பட்டிருந்தன. இருந்த போதும் மெல்லப் புகைந்துகொண்டிருந்த பிரச்சினைகள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கும் லலித் மோடிக்கும் இடையிலான முறுகள் நிலை காரணமாக பூதாகரமாகியுள்ளன.

ஐபிஎல் கொச்சி அணியில் ரூ.70 கோடி மதிப்புள்ள பங்குகளை தன் தோழிக்கு இலவசமாக சசி தரூர் பெற்று தந்ததாக சர்ச்சை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து சசி தரூர் தன் அமைச்சர் பதவியை கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஏப் 18) ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாகவும்,லலித் மோடி தொடர்பாகவும் ஏராளமான பிரச்சினைகளும் மர்மங்களும் வெளிவரத் தொடங்கின.

இதன் ஒரு கட்டமாக ஐ.பி.எல் தலைவர் லலித் மோடி, தன் நெருங்கிய கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் வருமான வரித் துறை வசம் இருப்பதாக,

ஏப் 19 2010 தேதியிட்ட எகானமிக் டைம்ஸ் நாளிதழ், முதல் பக்க செய்தி வெளியிட்டிருந்தது.

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடப்பதாக எகானமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியை ஐபிஎல் தலைவர் லலித் மோடி திட்டவட்டமாக மறுத்திருந்தார்.


இது தொடர்பில் லலித் மோடி கூறுகையில், “எகானமிக் டைம்ஸ் வெளியிட்ட சூதாட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது. 20/20 ஆட்டங்களின் பெயரை கெடுக்கும் நோக்கில் இந்த செய்தி வெளியிடப் பட்டுள்ளது. இதனை வெளியிட்ட எகானமிக் டைம்ஸ் நாளிதழ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப் படும்.” என்றார்.



இது இப்படி இருக்க லலித் மோடி தொடர்பில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டத்தில் போட்டி முடிவுகள் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அதன்படியே போட்டிகள் முடிவடைகின்றன. ஐ.பி.எல் தலைவர் லலித் மோடியே ஆட்டங்களின் முடிவைத் தீர்மானிப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.



சில ஆண்டுகளுக்கு முன்னர் பல தோல்விகளைச் சந்தித்து வந்துள்ள லலித் மோடி ஐ.பி.எல் தலைவரான பிறகு ஒரு ஜெட் விமானம், ஒரு அதி வசதி படகு, பி.எம்.டபிள்யூ கார்கள் என்று நினைத்துப் பார்க்கமுடியாதளவு சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



இந்த குற்றச் சாட்டுகள் தொடர்பில் உரிய முறையில் லலித் மோடி பதிலளிக்காததால் அவர் மீதான சந்தேகம் வலுப்பெற்றுவருகின்றது.

இவரது டிவிட்டர் பதிவுகளே இவருக்கு எதிரான சந்தேகங்களை அதிகரிக்கச் செய்துள்ளன.

போட்டியின் இடையில் வழங்கப்படும் யுக்தி வகுப்பு இடைவேளையானது சூதாட்டக்காரர்களுக்கு போட்டி நிலைமையை மாற்ற லலித் மோடியினால் செய்துகொடுக்கப்பட்ட ஏற்பாடே என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஐ.பி.எல் போட்டிகள் அனைத்திற்கும் வி.ஐ..பி. அந்தஸ்துடன் வருகை தரும் டெல்லியைச் சேர்ந்த சமீர் துக்ரல் என்ற பிரமுகர் லலித் மோடியின் பினாமியாக சூதாட்டங்களை நடத்தி வருவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

ஐ.பி.எல் அணிகளின் வெளிப்படையான உரிமையாளர்களாக ஓரிருவரே வெளிப்படுத்தப்பட்டாலும் மறைமுகமாக பலர் இவற்றில் பங்குதாரர்களாக இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. பல அரசியல்வாதிகளும் முக்கிய புள்ளிகளும் தங்கள் கறுப்புப் பணங்களை ஐ.பி.எல் போட்டிகளில் முதலீடு செய்துள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தற்போது உசாராகியுள்ள இந்திய வருமான வரித் துறையினர் ஐ.பி.எல் இல் விழையாடிவரும் அணிகளின் உரிமையாளார்கள்,பங்குதாரர்கள்,வீரர்கள், பணத்தினை பங்கீடு செய்யும் முறை, ஏலம் மற்றும் அணியை விற்பனை செய்தமை தொடர்பான அனைத்து விபரங்களையும் கேட்டு பி.சி.சி.ஐக்கு அழைப்பானை அனுப்பியுள்ளனர். இதன் மூலமாக இன்னும் பல உண்மைகள் வெளிவரலாம் என்று நம்பப்படுகின்றது.


இது இப்படி இருக்க...

லலித் மோடி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களான ஐ.பி.எல் அணிகள் தொடர்பில் தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவியமை, வருமான வரி மோசடி, ஐ.பி.எல் கணக்குகளில் மோசடி, தொலைக்காட்சி உரிமம் வழங்குவதில் மோசடி போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரை விசாரித்து அவரது தலைமைப் பதவியைப் பறிக்க பி.சி.சி.ஐ முடிவுசெய்துள்ளது.


வருகிற 26-ந்தேதி ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் மும்பையில் நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் லலித்மோடியின் தலைவர் பதவி பறிக்கப்படும் என நம்பப்படுகிறது.


இதற்கிடையே ஐ.பி.எல். ஆட்சி மன்றகுழு கூட்டத்தை தான் மட்டுமே கூட்ட முடியும். இந்த கூட்டம் சட்ட விரோதமானது. சட்டப்படி செல்லாது என்று லலித்மோடி கூறியுள்ளார். மேலும் தான் அந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

அதோடு கூட்டத்தை மே 1-ந்தேதிக்கு தள்ளி வைக்குமாறும் கேட்டுள்ளார்.

பி.சி.சி.ஐ தலைவர் சசாங்க் மனோகர் இதனை மறுத்துள்ளார்.

கிரிக்கெட் வாரியத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மோடி இல்லாமலே இந்த கூட்டம் நடைபெறும். 26-ந்தேதி திட்டமிட்டபடி ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெறும். அதில் எந்த விதமாற்றமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கட் வாரியமான பி.சி.சி.ஐயின் அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருப்போம்…...

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS