RSS

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1

ம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ் தனது குடிசையில் குடிசை ஓவியர் ஓமக்குட்டனுடன் ஏதோ செய்துகொண்டிருக்கின்றார். இந்த நேரம் பார்த்து நம் அமைச்சர் மங்குனிப் பாண்டியன் அங்கே வருகிறார்.


அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: மன்னா என்ன இது கொடுமை.

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: எது அமச்சரே?

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: இல்லை மன்னா இங்கே உங்கள் பட்டுப்போன உடல் மறைக்கப்பட்டிருகிறது; அங்கே அவனின் தலை மறைக்கப் பட்டிருக்கிறது எனக்கொன்றும் புரியவில்லை மன்னா.


இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: இந்த தேய்ந்து போன றப்பர் செருப்பு போன்ற என் தலை அந்த கட்டுமஸ்தான உடலோடு இணையப்போகின்றது.



அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: அப்படியென்றால் கொலையா மன்னா.

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: உனக்கு ஒரு எ…………….. புரியாது என்கூடவே இருந்தால் உனக்கும் என் மக்குப் புத்திதானே வரும்.
அமைச்சரே நானொரு மொள்ளமாரி, கேப்மாரி என்பது ஒரு புறமிருக்கட்டும். எனது இந்த நசுங்கிப் போன உடம்பை எதிர்கால சந்ததியினர் பார்த்தார்களேயானால் காறித் துப்பிவிடுவார்கள். காலில் போட்டிருப்பதைக் கொண்டு அடித்துவிடுவார்கள். ஆடு,மாடுகள் கூட என்மேல் கழிந்துவிடும். வாழும் போதும் அடிவாங்கி மாண்ட பிறகும் அடிவாங்க இந்த உடம்பால் முடியாது அமைச்சரே…..

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: ஆமாம் மன்னா. இப்பொழுதே உங்கள் உடம்பு மலேரியா வந்த மண்புழு மாதிரித்தான் இருக்கிறது……


இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: ம்ம்…………………….(ஆஹா நம்ம வீக்னஸ்ஸ விபரமாச் சொல்றானேய்யா..?)
இப்படி வராலாற்றில் அடிவாங்கியே காலம் தள்ளும் மானங்கெட்டவனாய் நான் இருக்க விரும்பவில்லை. அதானால் என்ன செய்யலாம் என்று களிவறையில் உட்கார்ந்து யோசித்தபோது பாழாய்ப்போன என்மனதில் உதித்ததுதான் இத்திட்டம். இதைப் பார்த்தாவது நம் வருங்காலச் சந்ததியினர் இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ் என்பவன் இந்த உலகமே அசிங்கப்படுத்தும் ஒரு மடையன், ஒரு கிறுக்கன் என்று நம்பிவிடுவார்களில்லையா…..? ஹஹ்ஹா
எப்படி என் திட்டம். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே……

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: ஆமாம் மன்னா நீங்கள் ஒரு சொங்கி என்பது இந்த மக்களுக்கு தெரியவா போகிறது.?
சரி மன்னா எதற்காக இவனது உடலை உங்கள் உடலோடு சேர்த்து வரைகிறீர்கள்.

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்:  நீயொரு மங்குனி அமச்சர் என்பதை மணிக்கொருமுறை நிரூபித்துக் கொண்டிருக்கிறாய். (அது சரி என்கூட இருந்தா அவன் புத்தி இப்படித்தானேயிருக்கும்.)

இவன் யார் தெரியுமா? நானொரு பெண்ணின் பின்னால்(கலைப்பீடம்) சுற்றி அலைந்தது உனக்குத் தெரியும்தானே.



அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: ஆமாம் மன்னா. ஒன்றாக சேர்ந்து அடியும் வாங்கினோமே….. என்னா... அடி. அத மறப்பனா மன்னா?

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: அடேய்… அரச ரகசியத்தை அம்பலப்படுத்தாதடா சோமாரி.

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: ஸ்ஸ்ஸ்சாரி மன்னா, நீங்கள் கூறுங்கள்.

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: (மன்னர் அமைச்சரின் காதில் மெதுவாக சொல்கிறார்.) அன்று நம்மிருவரையும் அடித்து மிதித்து, சாக்கடைக்குள் முக்கி எடுத்தானே அவன்தாண்டா இவன்.

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: அவனா இவன். ஐய்யோ ஆளைவிடுங்கள் மன்னா.

(அமைச்சர் ஓடத் துவங்குகிறார். மன்னர் அமைச்சரின் கையைப் பிடித்து ஏதோ ரகசியமாகச் சொல்கிறார்.)





மன்னர் என்ன சொன்னார் அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பிறகு சொல்கிறேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS