RSS

எனக்கிருந்த மற்றுமொரு சவாலையும் நான் வெற்றிகரமாக முறியடித்துவிட்டேன்...

எனக்கிருந்த மற்றுமொரு சவாலையும் நான் வெற்றிகரமாக முறியடித்துவிட்டேன்... மிகுந்த மகிழ்ச்சியாகவிருக்கின்றது...


இன்று அதிகாலை நிகழ்ச்சிக்காக நேற்றிரவு நேரகாலத்தோடு தூங்கவேண்டும் என்று எண்ணினேன் ஆனாலும் 12மணியளவில்தான் தூங்கமுடிந்தது...சரியாகத் தூங்கவுமில்லை. சரியாக 4 மணிக்கு அழைத்துச் செல்ல வாகனம் வரும். அதற்கு முன் தயாராகவேண்டும்.. பயம், பதற்றம்

ஒரு வேளை என்னை அறியாமல் தூக்கம் போய்விட்டால் என்ன நடக்கும்..? என்ற கற்பனை வேறு.. தூக்கமே வரவில்லை.அதிகாலை 1 மணியிலிருந்து 2.50வரை 10 நிமிடத்துக்கொரு முறை விழிக்குறதும், நேரத்தைப் பாக்குறதும்.. முடியல்ல...

எப்படியோ உரிய நேரத்துக்கு கலையகம் வந்தாச்சு...

நிலையத்தின் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் போதுள்ள நடைமுறைகளை இன்றுதான் அறிய முடிந்தது... அவை சுவாரஸ்யமானவை..

அலுவலகத்தில் அன்றைய தினத்தின் பத்திரிகைகளை பெறவேண்டும், தொழில் நுட்ப உதவியாளரின் அறையில் கையொப்பமிட்டு அன்றைய நாளின்

வர்த்தக நிரலைப்(Buisness Schedule) பெறவேண்டும், கலையகத்திலுள்ள நிகழ்சி நிரலை(Program Schedule) சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

தேசிய கீதம் - நிகழ்ச்சி ஆரம்பம்
“நேரம் ஐந்து மணி இது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தென்றல்.நேயர்கள் அனைவருக்கும் இனிய காலைப் பொழுதின் இதமான வணக்கம். இன்று மே மாதம் 11ம் நாள் 2010ம் வருடம் புலர்ந்துள்ள இந்நாள் நம்மனைவருக்கும் இனிதான நன்நாளாக அமைவதோடு இன்றைய நாளில் யாரெல்லாம் நற்காரியங்களை நாடியிருக்கின்றார்களோ அவர்களின் நற்காரியங்கள்அனைத்தும் இனிதே நிறைவேற வேண்டுமென இறைவனை வேண்டி இன்றைய தென்றலின் நிகழ்ச்சிகளை இனிதே ஆரம்பிக்கின்றோம்”
 இது நான் இன்றைய நிகழ்ச்சியை ஆரம்பித்த விதம்.
இன்றைய குறள் - கீதாஞ்சலி - என்றும் இனியவை - காலை 6 மணி பிரதான செய்திகள் - வைகறை நாதம் - பொங்கும் பூம்புனல் - தகவல் மஞ்சரி.

அதிகாலை 5 மணிமுதல் 9 மணிவரை தொடர்ச்சியாக 4 மணித்தியாலங்கள். அதிகாலை 2.50க்கு எழுந்ததிலிருந்து 6 மணி பிரதான செய்திகளின் போது கிடைத்த சிறிய இடைவெளியில் அவசரமாக குடித்த Tea ஐத் தவிர வேறு எந்த உணவுமில்லை, நேரமுமில்லை. ம்....... என்ன செய்வது....

இன்றைய நிகழ்ச்சிகளை அவதானமாகவும், ஆர்வமாகவும், அனுபவித்தும் தொகுத்து வழங்கினேன்.. அப்படி இருந்தும் ஒரு சிறு பிழை நேர்ந்துவிட்டது...

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட ஒரு நிகழ்ச்சி தொடர்பாக எனக்கிருந்த தெளிவின்மை காரணமாக ஒரு சிறு பிழை நடந்துவிட்டது. அது தவிர மற்றப்படி எல்லாம் சிறப்பாகவே அமைந்தது.

நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் பாராட்டினர். சிரேஸ்ட அறிவிப்பாளர்கள் முக்கியமாக கட்டுப்பாட்டாளர் மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி அனைவரும் மனம் திறந்து பாராட்டினர். பாடல் தொகுப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு என்பன சிறப்பாக அமைந்ததாகப் பாராட்டினார்கள். அதே நேரம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற குறிப்பிட்ட அப்பிழையை சுட்டியும் காட்டினர். முதல் தடவை என்பதாலும், இந் நிகழ்ச்சியை இதற்கு முன்னர் சரியாகக் நான் கேட்காததாலும் இச்சிறு பிழை இடம்பெற்றதாகவும் கூறினர். அது நூற்றுக்கு நூறு உண்மையே..

எனது இன்றைய நிகழ்ச்சி தொடர்பில் நண்பர்கள், சிரேஸ்ட அறிவிப்பாளர்களின் பாராட்டினால் நான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.

இதை விடவும் இன்றைய நாளில் நான் சந்தோசப்பட இன்னுமொரு முக்கிய விடயமிருக்கின்றது. எனது குரலில் தென்றலில் ஒரு விளம்பரம் ஒலிக்கப் போகின்றது.

சிரேஸ்ட அறிவிப்பாளர் கனிஸ்டா லூக்கஸ் அக்காவுடன் இணைந்து இவ் விளம்பரத்திற்கு குரல் கொடுத்திருந்தேன். விளம்பரம் என்பதைவிட அறிவித்தல் என்றே கூறவேண்டும். “யாழ்fm இல் பகுதி நேர அறிவிப்பாளராக இணைய விரும்புகிறீர்களா” என்று அது ஆரம்பிக்கின்றது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் யாழ்fm ற்கான பகுதி நேர அறிவிப்பாளருக்கான விண்ணப்பம் கோரும் அறிவித்தல் அது.

இதன் மூலமாக நான் இல்லாத நேரத்திலும் தென்றலில் என் குரல் ஒலிக்கப்போகிறது.


மிகுந்த மகிழ்ச்சியாகவிருக்கின்றது...

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS