RSS

உலகக் கிண்ண உதைப் பந்தாட்டப் போட்டிகள் 2010.

2010 உலகக் கிண்ணப் போட்டிகள் பற்றிய எனது சிறப்புப் பதிவினை முன்னரே தந்துவிட வேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தபோதும் பல்கலைக் கழகத்தில் படிப்பு கொஞ்சம் அதிகமானதாலும், எனக்கேட்பட்ட சுகவீனம் காரணமாகவும் சிறிது தாமதமேற்பட்டுவிட்டது.

எது எப்படியோ உலகக் கிண்ணப் உதைப் பந்தாட்டப் போட்டிகள் தொடர்பில் நான் அறிந்தவை, பத்திரிகைகள், இணையத் தளங்கள் மூலமாக தேடிப் பெற்றுக்கொண்ட முக்கிய குறிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.


உலகக் கிண்ண உதைப் பந்தாட்டப் போட்டிகள் 2010.


உதைப்பந்தாட்டப் போட்டிகள் சுமார் 60 வருட வரலாறு கொண்டவை.
இற்றைக்கு சரியாக 30 வருடங்களுக்கு முன்னர் 1950 ஜூலை 13ம் திகதி உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாகின.

உதைப்பந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு திருவிழாவான 2010 உலகக் கிண்ணப் போட்டிகள் இம்முறை கோலாகமாக தென்னாபிரிக்காவில் நேற்று ஆராம்பமாகின. 32 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டிகள் மொத்தமாக 31 நாட்கள் இடம்பெறவுள்ளன.

நேற்று கண்கவர் நிகழ்ச்சிகளோடு 2010 ம் ஆண்டுக்கான உதைப்பந்தாட்டத் திருவிழா மிகச் சிறப்பாக ஆரம்பமாகியது.

நேற்றைய நாள் இரண்டு போட்டிகள் இடம்பெற்றன. ஆனால் இரண்டுமே வெற்றி தோல்வியின்றியே முடிவடைந்திருந்தன.

முதலில் தென்னாபிரிக்கா மற்றும் மெக்சிக்கொ அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் தலா 1 கோல்களைப் போட்டதன் காரணமக போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

உருகுவே மற்றும் ஃபிரான்ஸ் அணிகளுக்கிடையில் இடம் பெற்ற இரண்டாவது போட்டியும் கோல்கள் எதுவும் போடாத நிலையில் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

2010 உலகக் கிண்ணப் போட்டிகளில் பெரிதும் பிரகாசிக்கப் போகும் வீரர்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்படும் வீரர்கள் இவர்கள்தான். இம்முறை இவர்கள் மீதான எதிர்பார்ப்புகளே அதிகமாகவிருக்கின்றன்.


1.லியோனல் மெஸ்ஸி, விங்கர், அர்ஜென்டினா
2.மைகான், தடுப்பாட்ட வீரர், பிரேசில்,
3.வேயன் ரூனி, ஸ்டிரைக்கர், இங்கிலாந்து
4.சாமுவேல் எட்டோ, ஸ்டிரைக்கர், காமரூன்
5.இகர் கசில்லாஸ், கோல்கீப்பர், ஸ்பெயின்
6.கிளின்ட் டெம்ப்சி, மிட் பீல்டர், அமெரிக்கா
7.கிறிஸ்டியானோ ரொனால்டோ, விங்கர், போர்ச்சுகல்
8.பெர்னாண்டோ டோரஸ், ஸ்டிரைக்கர், ஸ்பெயின்
9.ஸ்டீவன் பியனார், மிட்பீல்டர், தென் ஆப்பிரிக்கா
10.ராபின் வான் பெர்ஸி, ஸ்டிரைக்கர், ஹாலந்து
11.பிராங்க் ரிபெரி, மிட்பீல்டர், பிரான்ஸ்



இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் மொத்தமாக 32 அணிகள் பங்குபற்றுகின்றன. போட்டிகளை நடத்தும் நாடு என்பதால் தென்னாபிரிக்க அணி சிறப்பு அணியாக இணைக்கப்பட்டுள்ளது.



இம்முறை பங்குபற்றும் அணிகளின் விபரம் வருமாறு
.(2010 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னரான நிலை)

1.தென்னாபிரிக்கா : தரப்படுத்தலில் 83வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 2.

2.உருகுவே : தரப்படுத்தலில் 16வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 10 . முதலாவது உலகச் சம்பியன். மொத்தமாக 2 தடவை உலகச் சம்பியனாகியுள்ளது.

3.மெக்சிக்கோ: தரப்படுத்தலில் 17வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை13 .

4.ஃபிரான்ஸ் : தரப்படுத்தலில் 9வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 12 . உலகச் சம்பியனாகியுள்ள தடவை 1.

5.ஸ்பெயின் : தரப்படுத்தலில் 2வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை12 .

6.சுவிட்ஸர்லாந்து: தரப்படுத்தலில் 24வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 8.

7.சிலி : தரப்படுத்தலில் 18வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 7 .

8.ஹொன்டூராஸ் : தரப்படுத்தலில் 38வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 1 .

9.ஆர்ஜெண்டீனா : தரப்படுத்தலில் 7வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 14 . இது இதுவரை 2 தடவைகள் உலகச் சம்பியனாகியுள்ளது.

10.தென்கொரியா : தரப்படுத்தலில் 47வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 7.

11.கிரேக்கம் : தரப்படுத்தலில் 13 வது இடம். விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 1.

12.நைஜீரியா : தரப்படுத்தலில் 21 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 3.

13.இங்கிலாந்து : தரப்படுத்தலில் 8 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 12. உலகச் சம்பியானான தடவைகள் 1.

14.ஐக்கிய அமெரிக்கா : தரப்படுத்தலில் 14 வது இடம். விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 12

15. அல்ஜீரியா : தரப்படுத்தலில் 30 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 2

16.ஸ்லோவேனியா : தரப்படுத்தலில் 25 வது இடம். விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 1.

17.ஜேர்மணி : தரப்படுத்தலில் 6வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 16. 3 தடவை உலகக் கிண்ண சம்பியனாகியுள்ளது.

18.சேர்பியா : தரப்படுத்தலில் 15 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 10.

19.அவுஸ்திரேலியா : தரப்படுத்தலில் 20வது இடம். இதுவரை விளையாடியுள்ள போட்டிகளின் எண்ணிக்கை 2.

20.கானா : தரப்படுத்தலில் 32வது இடம். இதுவரை விளையாடியுள்ள போட்டிகளின் எண்ணிக்கை 1.

21.டென்மார்க் : தரப்படுத்தலில் 36வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 3.

22.நெதர்லாந் : தரப்படுத்தலில் 4 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 8.

23.ஜப்பான் : தரப்படுத்தலில் 45வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 3.

24.கெமரூன் : தரப்படுத்தலில் 19வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 15.

25.இத்தாலி : தரப்படுத்தலில் 5வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 16. 4 தடவை உலகக் கிண்ண சம்பியன்.

26.பரகுவே : தரப்படுத்தலில் 31வது இடம். விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 7.

27.நியூசிலாந்து : தரப்படுத்தலில் 78வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 1.

28.ஸ்லோவாக்கியா : தரப்படுத்தலில் 34 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 8.

29.போர்த்துக்கல் : தரப்படுத்தலில் 3 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 4.

30.பிரேசில் : தரப்படுத்தலில் 1வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 18. 5 தடவை உலகக் கிண்ணச் சம்பியன்.

31.ஐவரி கோஸ்ட் : தரப்படுத்தலில் 27வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 1.

32.வடகொரியா : இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 1.

இதுவரை உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்ற ஆண்டுகளும் வெற்றி பெற்ற நாடுகளும்.

ஆண்டு     வென்ற அணி

1930                 உருகுவே
1934                 இத்தாலி
1938                 இத்தாலி
1950                 உருகுவே
1954                 ஜேர்மனி
1958                 பிரேசில்
1962                 பிரேசில்
1966                 இங்கிலாந்து
1970                 பிரேசில்
1974                 ஜேர்மனி
1978                 ஆர்ஜெண்டீனா
1982                 இத்தாலி
1986                ஆர்ஜெண்டீனா
1990                ஜெர்மனி
1994                பிரேசில்
1998               ஃபிரான்ஸ்
2002               பிரேசில்
2006                இத்தாலி
2010                ?????

இதுவரை காலமும் இடம்பெற்ற உலக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிள்  தொடர்பான சிறப்புப் பார்வை.
.(2010 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னரானது)

** பிரேசில் அதிகபட்சமாக 5 தடவைகள் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.


** பிரேசில் உதைப்பந்தாட்ட ஜாம்பவான் பீலே 1958ல் வேல்ஸுக்கு எதிராக தனது 17வயதும் 239 நாட்களிலும் பெற்ற கோலே உலகக் கிண்ணத்தில இளம் வீரர் ஒருவர் பெற்ற கோலாகும்.

** ஜேர்மனி அதிகபட்சமாக 92 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளது.

** உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை விட்டுக் கொடுத்த அணி ஜேர்மனியாகும்.

** இந்தோனேசியா குறைந்த பட்சம் ஒரேயொரு உலகக் கிண்ணப் போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ளது.

** உலகக் கிண்ண போட்டித் தொடர்களில் அதிக போட்டிகளுக்கு அணித் தலைவராகச் செயல்பட்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆர்ஜெண்டீனாவின் டியாகோ மரடோனாவாவார். இவர் 1984-1994 வரை 16 போட்டிகளை வழி நடத்தியுள்ளார்.

** உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக வெற்றியீட்டிய அணி பிரேசில் ஆகும். பிரேசில் இதுவரை 64 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.


** அதிக உலக்கிண்ணப் போட்டிகளில் தோல்வியடைந்த அணி மெக்சிகோவாகும்.இது இதுவரை 22 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.


** கெமரூனின் ரொஜர் மில்லர் 1994ம் ஆண்டு தனது வயது 42 ஆண்டுகளும் 39 நாட்களுமாகவிருக்கும்போது ரஸ்யாவுக்கெதிரான போட்டியொன்றில் கோளொன்றைப் போட்டார். இதுவே உலக்கிண்ணப் போட்டியொன்றில் வயதான வீரர் பெற்றுக் கொண்ட கோலாகும்.

** உலக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களைப் போட்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் பிரேசிலின் ரொனால்டோ ஆவார். இவர் மொத்தமாக 15 கோல்களைப் போட்டுள்ளார்.

**உலக்கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களைப் போட்டுள்ள அணி பிரேசிலாகும். இது இதுவரை 201 கோல்களைப் போட்டுள்ளது.

** 2002ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தில் துருக்கி 11வது வினாடியில் கோல் போட்டது. இந்த கோலைப் போட்ட ஹகன் சுகுர் உலகக் கிண்ண போட்டியொன்றில் அதிவேக கோல் போட்டவர் என்ற சாதனைக்கு சொந்தக் காரணானார்.

** 1982 ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஹங்கேரி அணி எல்சல்வடோர் அணிக்கு எதிரான போட்டியில் 10 கோல்களைப் போட்டதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியொன்றில் அணியொன்று போட்ட அதிக கோல்கள் என்ற சாதனையை தனதாக்கிக் கொண்டது.

** 1998ம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் மொத்தமாக 171 கோல்கள் போடப்பட்டன.இதுவே உலகக் கிண்ணத் போட்டித் தொடரில் பெறப்பட்ட அதிக கோல்களாகும்.

** உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரேசில் அதிகபட்சமாக 11 தொடர் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

** பெனால்டி சூட்-அவுட் மூலம் அதிக உலகக் கிண்ணப் போட்டிகளை வென்ற அணி ஜேர்மனியாகும். ஜெர்மனி பெனால்டி சூட்-அவுட் மூலம் 4 போட்டிகளில் வெற்றியீடியுள்ளது.

** 1950ம் ஆண்டில் ரியோடி ஜெனீரோவில் நடந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் உருகுவே - பிரேஸில் அணிகள் மோதின. இந்தப் போட்டியை பார்வையிட அரங்கில் 199854 பேர் வந்திருந்தனர். உலகக் கிண்ணப் போட்டியொன்றை பார்வையிட அதிகம் பேர் வந்த சந்தர்ப்பம் இதுவேயாகும்.

** 1930ம் ஆண்டு உருகுவேயில் நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ண போட்டியில் ருமேனிய - பெரு அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை கண்டுகளிக்க 300 பார்வையாளர்கள் மாத்திரமே வந்திருந்தனர். உலகக் கிண்ண போட்டி ஒன்றை பார்வையிட மிகக் குறைவான ரசிகர்கள் வந்த போட்டி இதுவாகும்.

** வட அயர்லாந்து வீரர் நோர்மன் வைட் சைட் 1982ம் ஆண்டு யூகோஸ்லாவியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது வயது 17 ஆண்டுகளும் 41 நாட்களுமாகும். இவரே உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய இளம் வீரராவார்.

** இதுவரை நடைபெற்ற அனைத்து உலகக் கிண்ணப் தொடர்களில் பங்குபற்றிய ஒரே நாடு பிரேசிலாகும்.

** 1958,1998, மற்றும் 2006ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளில் அதிகபட்சமாக தலா 4 ஓன் கோல்கள் போடப்பட்டன.

** ஃபிரான்ஸ் வீரர் சினடின் சிடேன் மற்றும் பிரேசிலின் கபு ஆகியோர் அதிகபட்சமாக உலகக் கிண்ணத்தில் 6 எச்சரிக்கை அட்டைகளைப் பெற்றுள்ளனர்.

** உலகக் கிண்ணத்தில்போட்டியிலிருந்து வேகமாக வெளியேற்றப்பட்டவர் உருகுவேயின் பெடிஸ்டா ஆவார். 1986ம் ஆண்டு ஸ்கொட்லாந்துடனான போட்டியில் போட்டியின் 56வது வினாடியில் இவர் வெளியேற்றப்பட்டார்.

**உலகக் கிண்ணப் போட்டிகளில் போட்டியொன்றில் அதிக கோல்கள் போட்டவர் ரஷ்ய வீரர் ஒலெக் ஸ்லென்கோ ஆவார். அவர் 1994ம் ஆண்டு கெமரூனுக்கு எதிரான போட்டியில் 5 கோல்களைப் போட்டார்.

** 2002ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் பிரேசில் 7 வெற்றிகளைப் பெற்றதே தொடர் ஒன்றில் அணி ஒன்று பெற்ற அதிக வெற்றியாகும்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS