RSS

எம்சீ காக்காவின் நெத்தியடி…….

நம்ம ஊர்ல எம்.சீ காக்கானு ஒருத்தர் இருக்காரு. அவரு கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர். ஆனா திடீரென பழகுறவங்களுக்கு அவர பாத்தா அப்படி ஒரு எண்ணமே வராதுசில நேரம் அவர் யோசிக்குறமாதிரி நல்ல மனநிலையில உள்ளவங்ககூட யோசிக்கமாட்டாங்க..

ஒரு நாள் எம்சீ காக்க செஞ்ச வேலையா நினைச்சா விழுந்து விழுந்து சிரிக்கலாம்

இப்படித்தான் அன்னைக்கு நம்ம எம்சீ காக்காவீட்ல இருந்தாரு.. அந்த நேரம் பள்ளிவாயல்ல அசர் தொழுகைக்கான அதான் ஒலித்ததுநம்ம எம்சீ காக்கா என்ன பண்ணினார் உடனடியா வுழூ செய்துட்டு பள்ளிக்குப்  போய்இமாம் ஜமாத் ஆரம்பிக்க முதல்லையே தனியா அசர் தொழுது  முடிச்சிட்டு வெளிய வந்தாரு

இதப்பாத்துட்டு இருந்த நம்ம பள்ளி முஅத்தினார்எம்சீ காக்காவ கூப்பிட்டார்.


முஅத்தினார் : என்ன எம்சீஇன்னும் இமாம் ஜமாஅத் ஆரம்பிக்கல.. நீங்க என்ன 
                                       தனியா தொழுதுட்டு போறிங்க என்ன இது.. ஜமாஅத்தா தொழுதுட்டு          
                                       போகலாமே

எம்சீ: இங்க வாங்க மோதினார்இத வாசிங்க
               
             (அப்படின்னு சொல்லிட்டு பள்ளி சுவர்ல தொங்கிக் கொண்டிருந்த பலகையைக்   
               காட்டினார்..)

முஅத்தினார் : ஆமா அதுக்கு என்ன இப்போ..?

எம்சீ : அதுல என்ன எழுதி இருக்கு சத்தமா வாசிங்க..

முஅத்தின்: பிறர் உங்களை தொழுவிக்க முதல் நீங்கள் தொழுது    
                           கொள்ளுங்கள்

எம்சீ : ஆமா அதத்தான் நான் செய்தன்இமாம் வந்து தொழுவிக்க முதல் நான்    
                தொழுதுட்டன்… சரிதானே… வர்ட்டா….
                       (அப்படி சொல்லிட்டு போயிட்டே இருந்தார்)

முஅத்தின் : @@@@@@@@@@@@@@


** அநேகமான பள்ளிவாயல்கள்ள சந்தூக்கின் படம் போட்டு அதன் கீழே இந்த வாசகத்தைப் போட்டிருப்பாங்க…” பிறர் உங்களை தொழுவிக்க முதல் நீங்கள் தொழுது கொள்ளுங்கள் மரணத்திற்கு முன் தொழுது கொள்ளுங்கள் அதாவது உங்கள் மரணத்தின் பின்னர் பிறர் உங்களுக்கு ஜனாசா தொழுகை தொழுவிக்க முதல் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள் என்பதை அது குறிக்கும்….. ஆனா நம்ம எம்சீ காக்காட அறிவு எப்படி வேலை செய்திருக்குனு பாருங்களன்….

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் நண்பண்டா அப்பா ஓடிட்டாராமில்ல...

பொதுவா சில நண்பர்கள அவங்க நம்ம கூட பல நாள் பழகிருந்தாலும் அவங்க குடும்பம் சம்பந்தமா நமக்கு எதுவும் தெரியாம இருக்கும். அவங்க குடும்பத்துல எத்துன பேர்., அவங்க அப்பா அம்மா என்ன பண்றாங்க இது எல்லாம் தெரியாமலே பழகுவம். ஆனா சிலர்  இருக்காங்களே பழகின முதல் நாளே நம்மளப் பத்தின தகவலகளையெல்லாம் திரட்டி எடுத்துடுவாங்க,

அதுவும் அவங்க விசாரிக்கிற விதமே தனி. முதல்ல அப்பா அம்மால ஆரம்பிச்சுஅப்புறம் அக்கா தங்கச்சில போய் முடியும். அதுலையும் வீட்டுல தங்கச்சி யாரும் இருந்தா அத மட்டும் ரொம்ப டீப்பா விசாரிப்பாங்க….

நமக்கு மட்டும் அழகான தங்கச்சிமார் இருந்துட்டா போதுமே அப்புறம் நாம ஹீரோதான். நண்பர்கள்ட இது மாதிரியான விசாரிப்புகளின் போது நடக்கும், நடந்த சுவாரஸ்யமான விசயங்கள் நிறைய இருக்கு.அதையெல்லாம் அப்புறம்  சொல்றன்,

இப்போ என்  நண்பன் ஒருத்தன் கூட நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்த பகிர்ந்துகொள்கிறேன். உண்மையாவே நடந்த சம்பவம் இது.

ஒருநாள் நான் பாடசாலை மைதானத்துல விளையாடி முடிச்சிட்டு உட்கார்ந்திட்டு இருக்கும் போது என் நண்பன் ஒருத்தன் என்கிட்ட  வந்து பேசிட்டிருந்தான். அவன் ரொம்ப குறும்பா நக்கலா பேசக்கூடியவன். அவன்கூட பேசிட்டே இருக்கும் போது அவன் என் குடும்பத்தினரபத்தி  விசாரிச்சான் நானும் சொன்னன்.
அப்புறம் நான் விசாரிச்சன்….  முதல்ல அப்பா அம்மாவுல இருந்து ஆரம்பிப்பமே எண்டு நினைச்சு ஆரம்பிச்சன்..

நான்: சரி உங்க வாப்பா(அப்பா) என்ன பண்றார்…?

நண்பன் : அவரா அவரு ஓடிட்டார்டா….

நான் : என்னது…?

நண்பன் : ஆமாடா ஓடிட்டார்டா.

நான் : டேய் சொல்லுடா என்னடா பண்றார்…?

நண்பன் : உண்மையாத்தாண்டா ஓடிட்டார்.

நான் : மச்சான் விழையாடாம சொல்லன் என்ன செய்றார்.

நண்பன் : சத்தியமா ஓடிட்டார்டா..

நான் : அடப்பாவி….. யார்கூடடா ஓடிட்டார்…? எப்ப ஓடினார்..? இந்த வயசுல ஏண்டா ஓடினார்??

நண்பன் : டேய் டேய்.. இருடா…. ஓடிட்டார்னு சொன்னத்துக்கு இவளவு கேள்வி கேட்டு எங்க வாப்பாவ அவமானப்படுத்தாதடா...

நான் : இல்ல மச்சான் ஓடினா அப்புறம் என்ன மரியாத வேண்டிக் கிடக்கு..
              நீ ஒன்னும் கவலப்படாதடா மச்சான் அந்தாள் ஓடினா என்ன இனி                             அந்தாள மறந்துடுடா.. அந்தாள்கூட பேசாதடா......

நண்பன் : டேய் அவரு ஓடிட்டார்னா அது இல்லடா அவர்ட தொழில் ஒடிட்டர்    Auditorஅவர்ட தொழில கொஞ்சம் மாத்தி சொன்னதுக்கு….இப்படியாடா….? மன்னிச்சு விட்டுடுடா...

பயபுள்ள காமெடிக்கு ஒரு எழுத்த மாத்தி அவங்க அப்பாட பெயரையே டெமேஜ் பண்ணிட்டான்….

அதுக்கபுறம் நான் மிச்ச விசயங்கள விசாரிக்கவே இல்ல... அப்பாவையே ஓடிட்டார் எண்டவன் மத்தவங்களப் பத்தி என்னத்த சொல்லப்போறானோ... எண்டு நினச்சிட்டு விட்டுட்டன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் நண்பண்டா அப்பா ஓடிட்டாராம்.....

பொதுவா சில நண்பர்கள அவங்க நம்ம கூட பல நாள் பழகிருந்தாலும் அவங்க குடும்பம் சம்பந்தமா நமக்கு எதுவும் தெரியாம இருக்கும். அவங்க குடும்பத்துல எத்துன பேர்., அவங்க அப்பா அம்மா என்ன பண்றாங்க இது எல்லாம் தெரியாமலே பழகுவம். ஆனா சிலர்  இருக்காங்களே பழகின முதல் நாளே நம்மளப் பத்தின தகவலகளையெல்லாம் திரட்டி எடுத்துடுவாங்க,

அதுவும் அவங்க விசாரிக்கிற விதமே தனி. முதல்ல அப்பா அம்மால ஆரம்பிச்சுஅப்புறம் அக்கா தங்கச்சில போய் முடியும். அதுலையும் வீட்டுல தங்கச்சி யாரும் இருந்தா அத மட்டும் ரொம்ப டீப்பா விசாரிப்பாங்க….

நமக்கு மட்டும் அழகான தங்கச்சிமார் இருந்துட்டா போதுமே அப்புறம் நாம ஹீரோதான். நண்பர்கள்ட இது மாதிரியான விசாரிப்புகளின் போது நடக்கும், நடந்த சுவாரஸ்யமான விசயங்கள் நிறைய இருக்கு.அதையெல்லாம் அப்புறம்  சொல்றன்,

இப்போ என்  நண்பன் ஒருத்தன் கூட நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்த பகிர்ந்துகொள்கிறேன். உண்மையாவே நடந்த சம்பவம் இது.

ஒருநாள் நான் பாடசாலை மைதானத்துல விளையாடி முடிச்சிட்டு உட்கார்ந்திட்டு இருக்கும் போது என் நண்பன் ஒருத்தன் என்கிட்ட  வந்து பேசிட்டிருந்தான். அவன் ரொம்ப குறும்பா நக்கலா பேசக்கூடியவன். அவன்கூட பேசிட்டே இருக்கும் போது அவன் என் குடும்பத்தினரபத்தி  விசாரிச்சான் நானும் சொன்னன்.
அப்புறம் நான் விசாரிச்சன்….  முதல்ல அப்பா அம்மாவுல இருந்து ஆரம்பிப்பமே எண்டு நினைச்சு ஆரம்பிச்சன்..

நான்: சரி உங்க வாப்பா(அப்பா) என்ன பண்றார்…?

நண்பன் : அவரா அவரு ஓடிட்டார்டா….

நான் : என்னது…?

நண்பன் : ஆமாடா ஓடிட்டார்டா.

நான் : டேய் சொல்லுடா என்னடா பண்றார்…?

நண்பன் : உண்மையாத்தாண்டா ஓடிட்டார்.

நான் : மச்சான் விழையாடாம சொல்லன் என்ன செய்றார்.

நண்பன் : சத்தியமா ஓடிட்டார்டா..

நான் : அடப்பாவி….. யார்கூடடா ஓடிட்டார்…? எப்ப ஓடினார்..? இந்த வயசுல ஏண்டா ஓடினார்??

நண்பன் : டேய் டேய்.. இருடா…. ஓடிட்டார்னு சொன்னத்துக்கு இவளவு கேள்வி கேட்டு எங்க வாப்பாவ அவமானப்படுத்தாதடா...

நான் : இல்ல மச்சான் ஓடினா அப்புறம் என்ன மரியாத வேண்டிக் கிடக்கு..
              நீ ஒன்னும் கவலப்படாதடா மச்சான் அந்தாள் ஓடினா என்ன இனி                             அந்தாள மறந்துடுடா.. அந்தாள்கூட பேசாதடா......

நண்பன் : டேய் அவரு ஓடிட்டார்னா அது இல்லடா அவர்ட தொழில் ஒடிட்டர்    Auditorஅவர்ட தொழில கொஞ்சம் மாத்தி சொன்னதுக்கு….இப்படியாடா….? மன்னிச்சு விட்டுடுடா...

பயபுள்ள காமெடிக்கு ஒரு எழுத்த மாத்தி அவங்க அப்பாட பெயரையே டெமேஜ் பண்ணிட்டான்….

அதுக்கபுறம் நான் மிச்ச விசயங்கள விசாரிக்கவே இல்ல... அப்பாவையே ஓடிட்டார் எண்டவன் மத்தவங்களப் பத்தி என்னத்த சொல்லப்போறானோ... எண்டு நினச்சிட்டு விட்டுட்டன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இலங்கையின் புதிய அமைச்சரவை

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் 2ம் தவணை ஆரம்பித்ததன் பின்னர் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது இதன்படி பிரதமருடன் இணைத்து 10 சிரேஸ்ட அமைச்சர்களும் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 31 பிரதியமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.



டி எம் ஜயரத்ன - பிரதமர், புத்த சாசன மத விவகார அமைச்சர்

சிரேஸ்ட அமைச்சர்கள்:

ரட்னசிறி விக்கிரமநாயக்க  - நல்லாடசி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் 
டியு குணசேகர                          - மனிதவள சிரேஷ்ட அமைச்சு
அதாவுத செனவிரட்ன          -  கிராமிய விவகார சிரேஷ்ட  அமைச்சு
பி.தயாரட்ன,                               -  உணவு மற்றும் போஷாக்குத்துறை
ஏ எச் எம் பௌஸி                -   நகர செயற்பாடுகள்
எஸ் பி நாவின்ன,                  -   நுகர்வோர் சேமநலன் 
பியசேன கமகே                       -  தேசிய வளங்கள் சிரேஷ்ட அமைச்சர் 
திஸ்ஸ விதாரண                   -   விஞஞான விவகாரம்
சரத் அமுனுகம                      -   சர்வதேச நிதி ஒத்துழைப்பு 

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 50  போ்

நிமல் சிறிபால டி சில்வா      -    நீர்வழங்கல்-வடிகால் முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன,          -   சுகாதார துறை
சுசில் பிரேம்ஜயந்த                    -   கனியவளதுறை 
ஆறுமுகன் தொண்டமான்     -   கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி 
தினேஷ் குணவர்தன                -    நீர்வழங்கல் துறை 
டக்ளஸ் தேவானந்தா               -   பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் 
ஏ.எல்.எம்.அத்தாவுல்லா,          -    உள்ளுராட்சி - மாகாணசபை 
ரிசாத் பதியுதீன்,                           -    கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
பாடலி சம்பிக ரணவக்க          -    மின்சக்தி - சக்திவலுத்துறை 
விமல் வீரசங்ச                              -    நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு பொதுவசதிகள்
ரவூப் ஹக்கீம்,                              -    நீதித்துறை 
பசில் ராஜபக்ச                               -    பொருளாதார அபிவிருத்தி 
வாசுதேவ நாணயக்கார             -    தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு 
எஸ்.பி.திஸாநாயக்க                  -    உயர் கல்வி 
ஜி எல் பீரிஸ்                                -    வெளிவிவகாரம் 
டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன     -    அரசநிர்வாக - உள்நாட்டலுவல்கள் 
சுமேதா ஜி ஜயசேன,                 -    நாடாளுமன்ற விவகாரம் 
ஜீவன் குமாரதுங்க                      -    அஞ்சல்துறை 
பவித்ரா வன்னியாராச்சி           -    தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி
அநுர பிரியதர்சன யாப்பா,       -    சுற்றாடல் துறை 
திஸ்ஸ கரலியத்த                       -    சிறுவர் அபிவிருத்தி - மகளிர் விவகாரம் 
காமினி லொகுகே,                        -    தொழில் மற்றும் தொழிலுறவு 
பந்துல குணவர்த்தன,                  -    கல்வி 
மஹிந்த சமரசிங்க,                       -    பெருந்தோட்டத்துறை 
ராஜித சேனாரத்ன                           -    மீன்பிடி, நீர்வள அபிவிருத்தி 
ஜனக பண்டார தென்னகோன்,   -    காணி மற்றும்   காணி அபிவிருத்தி 
பீலிக்ஸ் பெரேரா,                              -    சமூக சேவைகள் 
சி.பி.ரட்னாயக்க,                                 -    தனியார் போக்குவரத்து சேவை 
மஹிந்த யாப்பா அபேவர்தன,   -    விவசாயத்துறை 
கெஹலிய ரம்புக்வெல்ல,           -    ஊடக மற்றும் செய்தித்துறை 
குமார வெல்கம,                              -    போக்குவரத்து 
டளஸ் அழகப்பெரும,                  -    இளைஞர் விவகார மற்றும் திறன் மேம்பாட்டு 
ஜோன்ஸ்டன் பர்ணான்டோ,      -    கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
சந்திரசிறி கஜதீர                              -    புனருத்தாபன மற்றும் சிறைச்சாலை சீரமைப்பு 
சாலிந்த திஸாநாயக்க                  -    தேசிய வைத்திய துறை
ரெஜினோல்ட் குரே,                        -       சிறு ஏற்றுமதி பயிர் அபிவிருத்தி

டிலான் பெரேரா,                               -    வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி 
ஜகத் புஸ்பகுமார,                           -    தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி
ரி.பி.ஏக்கநாயக்க                               -    கலாசார மற்றும் கலைவிவகாரம் 
மஹிந்த அமரவீர,                           -    அனர்த்த முகாமைத்துவம் 
எஸ்.எம்.சந்திரசேன                        -    விவசாய சேவை மற்றும் வனவிலங்கு 
குணரத்ன வீரக்கோன்                   -    மீள்குடியேற்றதுறை 
மேர்வின் சில்வா                             -    மக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் விவகாரம்
மஹிந்தானந்த அளுத்கமகே,     -    விளையாட்டுத்துறை 
தயாஸ்ரீ த திசேரா,                           -    அரச வள மற்றும் தொழில்துறை அபிவிருத்தி 
ரஞ்சித் சியம்பலாபிட்டிய,          -    தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்பம்
ஜகத் பாலசூரிய                              -    தேசிய மரபுரிமைகள் 
லக்ஷ்மன் செனவிரட்ன              -    உற்பத்தி திறன் அபிவிருத்தி
நவின் திசாநாயக்க                       -    அரச முகாமைத்து மீளமைப்பு 
பிரியங்கர ஜயரட்ன - சிவில் விமான சேவைகள்,

பிரதியமைச்சர்கள் 31 போ்

சுசந்த புஞ்சி நிலமே,                       -    மீன்பிடி, நீர்வளத்துறை 
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,  -    பொருளாதார அபிவிருத்தி 
ரோஹித்த அபேகுணவர்தன,       -    துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் 
பண்டு பண்டாரநாயக்க,                 -    தேசிய வைத்திய துறை 
ஜயரத்ன ஹேரத்,                             -    கைத்தொழில், வர்த்தகவிவகாரம்
துமிந்த திஸாநாயக்க,                   -    இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி
லசந்த அழகியவண்ண,                -    நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு பொதுவசதிகள்
ரோஹண திசாயக்க,                      -    போக்குவரத்து 
எச்,ஆர்.மித்ரபால,                            -    கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி 
நிர்மல கொத்தலாவல,                -    துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் 
பிரேமலால் ஜயசேகர,                  -    மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை 
கீதாஞ்சன குணவர்தன,               -    நிதி மற்றும் திட்டமிடல் 
விநாயகமூர்த்தி முரளிதரன்,     -    மீள்குடியேற்றம் 
பைசர் முஸ்தபா,                            -    தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி
இந்திக பண்டாரநாயக்க,              -    உள்ளுராடசி மற்றும் மாகாண சபைகள்
முத்துசிவலிங்கம்,                          -    பொருளாதார அபிவிருத்தி
சிறிபால கம்லத்,                             -    காணி மற்றும் காணி அபிவிருத்தி 
டபிள்யூ.பி.ஏக்கநாயக்க,               -    வடிகாலமைப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவம் 
சந்திரசிறி சூரிய ஆராயச்சி,      -    சமூகசேவைகள் 
நந்திமித்ர ஏக்கநாயக்க,               -    உயர்கல்வி 
நிரூபமா ராஜபக்ஷ,                      -    நீர்வழங்கல் துறை
லலித் திசாநாயக்க,                      -    சுகாதாரம் 
சரண குணவர்தன,                       -    கனியவள தொழில்துறை 
காமினி விஜித் விஜயமுனி சொய்சா, - கல்வித்துறை 
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,      -    சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம் 
வீரகுமார திசாநாயக்க,                -    பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் 
ஏ.டி.எஸ்.குணவர்தன,                   -    புத்த சாசன மதவிவகார 
ஏர்ல் குணசேகர,                              -    பெருந்தோட்டதுறை 
பசிர் ஷேகுதாவுத்,                           -    கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
அப்துல் காதர்,                                   -    சுற்றாடல் 
டுலிப் விஜேசேகர                           -   அனர்த்த முகாமைத்துவம்

** நாடு வளம்பெற வேண்டும் நல்ல மழை பெய்ய வேண்டும்.................


நன்றி:

3.lankasri.com

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யெம்மாடி எம்புட்டு அழகு....

நம்ம சிங்கங்க ஆட்டத்துல மட்டுமில்ல ஆடையிலையும் கலக்குதுங்க இல்ல...

பாருங்களேன்........ எம்புட்டு அழகு

இன்னாத்திது கோர்ட் போட்டுட்டு டம்பர் போட்டிருக்கேள்..
ட்ரெஸ்ஸவிட தாடி சூப்பர் பாஸ்

தலைக்கு சால்வன்ன ரொம்ப இஸ்ட்டமோ?
வாஸி வீ மிஸ் யூ






சிங்கம் ஐ லைக்யூடா...
சூப்பர் மேன் மாதிரி ஜம்பர் வெளியில இருக்கோ..?


வாடா என் செல்லமே.........
உங்க ஸ்டைலே தனிதான் பாஸ்


ம்ம்... நீல கலர்ல பேக் போட்டிருந்தா இன்னும் நல்லாரிந்திருக்குமே...

கலாச்சார உடையில் நம் சாதனை மன்னன் எப்புடீ..??
தல கலக்குறீங்க போங்க

என்ன ட்ரெஸ் போட்டாலும் உங்க ஹெயார் ஸ்டைலுக்கு ஈடாகுமா பாஸ்??
அந்த பேக்ல என்ன இருக்கு தல..?
கை வீசி நடக்கமாட்டீங்களோ..?
நல்லாத்தான் கீரபா...
சங்கா... வழி நடத்துறீங்களோ...ம்ம் நடத்துங்க நடத்துங்க
தல உங்க லுக்கு சூப்பர்
அணியின் அச்சாணிகள் மூவர்

முக்காத குறிப்பு:
1.இது (நடந்தது) போனமாசம் ஆனா நான் ப்லொக்ல போட்டது இந்த மாசம்
2.டெய்லி மிரர் இணையத்தில் சுட்ட புகைப்படங்கள்... யார்கிட்டையும் சொல்லிடாதீங்க...



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம்

.

நேற்று என் நண்பி ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன விடயம் என்னை மிகவும் பாதித்தது.... லண்டனில் உள்ள என் நண்பி தன் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தைதான் என்னிடம் கூறினார்....

அது இதுதான்...

இலங்கையின் சாய்ந்தமருதைச் சேர்ந்த  ஃபைசுல் இஹ்ஸான் நேற்று முன் தினம் (12/11/2010) லண்டனில் அகால மறணமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.



இவரது ஃபேஸ்புக் கணக்கு....(Click பண்ணவும்)
Add as Friend என வருகிறது.. இவரை நண்பனாக்க நான் தயார்.. ஆனால் அதை உறுதிப்படுத்த அவர் இப்போ இல்லையே...

.இவர் எனக்கு முன்னர் அறியப்பட்டவரோ நண்பரோ அல்ல... ஆனாலும் எந்நாட்டைச் சேர்ந்தவர், எனது ஊருக்கு அருகிலுள்ள ஊரைச்சேர்ந்தவர்




தொழில் நிமித்தம் லண்டனில் இருந்த இவர். ஈஸ்ட் லண்டனில் வசித்துவந்தார். நேற்று முன்தினம் 12/11/2010 இலங்கை நேரப்படி நள்ளிரவு 2.30 மணியளவில் இவரது வீட்டில் இடம்பெற்ற தீவிபத்தில் இவர் மரணமானார்.  தீவிபத்துக்குரிய காரணம் இதுவரை தெரியவில்லையாம்.

இவரது  துயரால் இன்னலுறும் இவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மேலைத்தேய கலாச்சாரம் Vs கீழைத்தேய கலாச்சாரம்.

மேலைத்தேய கலாச்சாரம் Vs கீழைத்தேய கலாச்சாரம்.

மேலைத்தேய மக்களினதும் கீழைத்தேய மக்களினதும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்தப் படங்கள்  நகைச்சுவையாக இருந்தாலும் பல உண்மைகளும் சுவாரஸ்யங்களும் இவற்றுள் புதைந்துகிடக்கின்றன.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல தகவல்களைத் தாங்கியுள்ள இந்தப் படங்களை நீங்களும் பார்த்து யதார்த்தங்களை அறிந்துகொள்ளுங்கள்.

* நீல நிறத்தால் கட்டமிடப்பட்டது மேலைத்தேய மக்களின் கலாச்சாரம்
  * சிவப்பு நிறத்தால் கட்டமிடப்பட்டது கீழைத்தேய மக்களின்  கலாச்சாரம்


வாழும் விதம்(Way of Life)

தொடர்புகள்(Contacts)


க்யூவில் காத்திருக்கையில்(Queue when Waiting)

ஞாயிற்றுக் கிழமை வீதியில்(Sundays on the Road)


பார்ட்டியில்(Party


                                   உணவு விடுதியில்(In the restaurant)




                                  பிரச்சினைகளை கைய்யாளும் விதம்(Handling of Problems)


                                 மூவேளை உணவு(Handling of Problems)



                                     போக்குவரத்து(Transportation)

வயது முதிர்ந்த காலத்தில்(Elderly in day to day life)


உயர் அதிகாரி(The Boss)



காலநிலைக்கேற்ற மனோநிலை(Moods and Weather)

குழந்தை(The child)

கருத்துகள்(Opinion)

நேர முகாமைத்துவம்(Punctuality)

குறிப்பு :
இதை மின்னஞ்சல்கள் மூலம் பலர் அறிந்திருக்கலாம் அறியாதவர்களுக்காகவே இதைப் பகிர்ந்துகொண்டேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS