RSS

என்னை மிகவும் பாதித்த குட்டிக் கதைஒரு மனிதன் தனது வேலை முடிந்து தாமதமாகவும் மிகுந்த களைப்பு,எரிச்சலுடன் வீடு வந்த போது தனது 5 வயது மகன் வாசலில் தனக்காக காத்திருப்பதைக் கண்டான். இருந்தும் அவன் அதைப் பொருற்படுத்தாமல் உள்ளே வந்து கதிரையில் அமர்ந்த போது.
 மகன் தந்தையைப் பார்த்து.

மகன் : அப்பா நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா..?

தந்தை : கேளு என்ன விசயம்..?
மகன் : அப்பா நீங்க ஒரு மணித்தியாலத்துக்கு எவ்வளவு பணம் சம்பாதிப்பீங்க..?

தந்தை : இது உனக்கு தேவையில்லாத விசயம். ஏன் நீ இப்படியான கேள்விகள என்கிட்ட கேற்கிறாய்..?
(தந்தை ஆவேசமாகக் கேட்டார்)

மகன் : நான் தெரிஞ்சு கொள்ளனும்.  தயவு செய்து சொல்லுங்கப்பா.. ஒரு மணித்தியாலத்திற்கு நீங்க எவளவு காசு உழைப்பீங்க…?

தந்தை : நீ கட்டாயம் தெரிஞ்சுக்கனுமா..? சரி நான் ஒரு மணித்தியாலத்திற்கு 100/= சம்பாதிப்பன்

மகன் : ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ்..
(
என்று கவலையோடு தலையைக் குனிந்தான் அந்த சின்னப் பைய்யன்)
சிறிது மெளனத்தின் பின்னர்.
 அப்பா தயவுசெய்து எனக்கு ஒரு 50/= கடனாகத் தரமுடியுமா…?


தந்தைக்கு ஆத்திரம் அதிகரித்தது.
அப்போ நீ என்கிட்ட 50/= காசு வாங்கி வீணான விளையாட்டுப் பொருள் அல்லது தேவையில்லதா செலவு செய்யத்தான் இதெல்லாம் கேட்டிருக்காய் என்ன..? நீ எப்படி இப்படி சுயநலவாதியாய் மாறினாய்..? இந்த மாதிரி அற்ப விசயங்களுக்காகவா நான் இவளவு கஸ்ட்டப்பட்டு உழைக்கன்..?”

போ.. பேசாம உன் ரூமுக்குப் போய் தூங்கு போ..”
(
தந்தை ஆவேசாமாகக் கத்தினார்)

அந்தச் சின்னப் பைய்யனும் மிகுந்த கவலையோடு தலை குனிந்தபடியே தனது அறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டான்.


 அவனுக்கு காசு வேண்டுமென்பதற்காகஅவன் எப்படி இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்கலாம்..?
மகனின் கேள்வியை நினைத்து தந்தைக்கு கோவம் உச்சத்தில்.


சில மணிநேரத்தின் பின் தந்தையின் கோவம் குறைந்தது. சிந்திக்கலானார்.
அவன் ஏன் காசு கேட்டான்..? அவன் அடிக்கடி என்னிடம் காசு கேட்டு கஸ்ட்டப்படுத்துவதில்லையே.. இப்போது காசு கேட்டிருகிறான் என்றால் நிச்சயமா அவனுக்கு ஏதோ முக்கியமான தேவை ஒன்றிருக்கு. அதனாலதான் அவன் 50/= கேட்டிருக்கிறான்.

இப்படி அமைதியாக யோசித்த தந்தை. நேரே தனது மகனின் அறைக்குச் சென்று மூடியிருந்த கதவைத் திறந்தார். கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்து

மகன்.. தூங்கிட்டீங்களா….?தந்தை கேட்டார்.


இல்லப்பாமுழிச்சிட்டுதான் இருக்கன்மகனின் பதில்.

நான் யோசிச்சு பாத்தன் மகன், நான் உங்ககிட்ட ரொம்பக் கோவமா நடந்துக்கிட்டன், ஒஃபீஸ்ல நிறைய வேலை, வீட்டுக்கு வருவதற்குக் கூட தாமதம், அந்தக் கோபத்த நான் உங்கமேல காட்டிட்டன். கவலப்படாதீங்க. இந்தாங்க நீங்க கேட்ட 50/=.

என்று அன்பொழுகப் பேசிய தந்தை தனது சட்டைப் பையிலிருந்து 50/= பணத்தை எடுத்து மகனிடம் கொடுத்தார்.

மகிழ்சியோடு தன் தந்தையைப் பார்த்த மகன் 
ஆஹ்ரொம்ப நன்றிப்பா” 

என்று குதூகலத்துடன் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டான்.

பின்னர் தனது தலையணைக்கு கீழே கைய்யைப் போட்டு கசங்கிய நிலையில் கிடந்த சில காசுத்தாள்களையும், நாணயக் குற்றிகளையும் எடுத்தான்.
ஏற்கனவே தன் மகனிடம் காசு இருப்பதைக் கண்ட தந்தைக்கு மீண்டும் கோவம் வந்தது.

ஆனால், அந்த சின்னப் பையனோ  தனது கைய்யிலுள்ள பணத்தை மெதுவாக எண்ணினான்.
எண்ணி முடிந்ததும் நிமிர்ந்து தன் தந்தையைப் பார்த்தான்.


ஏற்கனவே உன்கிட்ட காசு இருக்கு. அப்படி இருக்கும் போது ஏன் என்கிட்ட மேலதிகமா காசு கேட்டாய்” 
தந்தை கோபத்தோடு கேட்டார்.

ஏன்னா என்கிட்ட முதல்ல இருந்த காசு போதாது. ஆனா இப்போ சரியா இருக்கு

என்று சொன்ன அந்தச் சின்னப்பயன் தன் தந்தையை நோக்கி வந்து அவர் முன்னே நின்று

அப்பாஇதோ என்னிடம் 100/= இருக்கு. இதை வாங்கிக்கிட்டு உங்க நேரத்துல 1 மணித்தியாலத்தை எனக்குத் தரமுடியுமா…?” 
என்று கேட்டான்.
சில கண அமைதிக்குப் பின்னர் பையன் தொடர்ந்தான்.

அப்பா தயவு செய்து நாளைக்கு வீட்டுக்கு நேரத்தோட வாங்கப்பாஉங்க கூட இரவுச் சாப்பாட்ட சாப்பிடனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசைப்பா..
என்று கெஞ்சும் குரலில் கூறிய அவன் தனது கையிலிருந்த 100/= ஐ தன் தந்தையிடம் நீட்டினான்.

மகனின் வார்த்தைகளைக்கேட்ட தந்தை உடைந்தே போனார். தன் சின்ன மகனை அப்படியே தனது இரு கரங்களாலும் அள்ளி எடுத்து முத்தமிட்டார். தனது பிழைக்காக மகனிடம் கெஞ்சி மன்னிப்புக்கேட்டார்.

தந்தையின் கண்ணீரால் மகனின் உடல் நனைந்தது.***
இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருப்பவர்களுக்கான ஒரு சிறிய நினைவூட்டல் இது. தொழிலுக்காக,பணத்துக்காக எமது நேரத்தை செலவிடும் நாங்கள். எம்மீது பாசம் வைத்திருப்பவர்களோடு பழக,பேச நேரத்தை ஒதுக்க முயற்சிப்பதில்லை.

நாங்கள் எவ்வளவுதான் கஸ்ட்டப்பட்டு உழைத்தாலும் நாளைக்கு நாங்கள் இறந்தபின் நாம் வேலை செய்த நிறுவனம் நஸ்ட்டப்படுவதும் இல்லை இழுத்து மூடப்படுவதுமில்லை. நமது இடத்திற்கு வேறொருவரைப் பிரதியிட்டு அந்த நிறுவனம் தொடர்ந்தும் இயங்கும்.

ஆனால் நமது குடும்பமும் உறவுகளும் நமது இழப்பினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நமது இழப்பானது அவர்கள் மரணிக்கும் வரை ஒரு பேரிழப்பாகவே இருக்கும்.

வாழ்கைக்கு பணம் தேவைதான் ஆனால் பணமே வாழ்க்கையல்ல..Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

தரங்கவின் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது


இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் உபுல் தரங்கவுக்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் 3 மாதத்திற்கு போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது.

கடந்த உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் போது இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற அரையிறுதிப்போட்டிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து சோதனையிலையில் இவரது உடலில் தடைசெய்யப்பட்ட Prednisone and Prednisolone உள்ளடங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

.சி.சியின் அறிக்கைப் படி உபுல்தரங்க தனது ஆட்டத்திறனை அதிகரிக்க அல்லாமல் தோள்பட்டைவலிக்கான மருத்துவ தேவைக்காக எடுத்துக்கொண்ட ஆயுள்வேத மருந்து மூலமே இது உட்கொள்ளப்பட்டமை உறுதியானதால் இதனை .சி.சியும் ஏற்றிருப்பதால் உபுல் தரங்கவிற்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இக்குற்றம் சிறியது, பாரதூரமற்றது என்பதாலும் இது வேண்டுமென்றோ திட்டமிட்டோ இடம்பெறவில்லை என்பதை .சி.சி ஏற்றுக்கொண்டிருப்பதாலும் இவருக்கு மே 9 ,2011 என்று பிற் தேதியிடப்பட்டு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் 9ம் திகதியோடு இத்தண்டனை நிறைவுக்கு வருகிறது.


இது தொடர்பில் .சி.சி அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில்
இந்தமாதிரியான  சம்பவங்கள் ஏனைய வீரர்களுக்கு
ஒரு விழிப்பூட்டும் சம்பவமாக எதிர்காலத்தில் மருந்துகளை உற்கொள்ளும் போது எச்சரிக்கையாக நடந்துகொள்ளத் தூண்டும்” என்றார்.

இது தொடர்பில் உபுல் தரங்க கூறுகையில்”என் சக வீரர்களுக்கு எனது சம்பவம் ஒரு படிப்பினையாகும். எதிர்காலத்தில் மருத்துவத் தேவைகளை
நிறைவேற்றிக்கொள்ளும் போது எச்சரிக்கயாக இருக்க இச்சம்பவம் வழிவகுக்கும். எனவே எனக்கு நிகழ்ந்தது போல் அவர்களுக்கு இனி  நிகழாது” என்று தெரிவித்தார்.


எது எப்படியோ தரங்கவிற்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என்று பல ஊகங்கள் வெளியிடப்பட்ட நிலையில் 3 மாத தடை என்பது அதுவும் பிற்திகதியிடப்பட்ட 3 மாதத் தடை என்பது தரங்கவிற்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் ஓரளவு திருப்தியான விடையாமாகவே இருக்கும்.

தற்போது சிறந்த ஃபோமில் இருக்கும் தரங்க அதே ஃபோமோடு மீண்டும் அணிக்குத் திரும்ப எனது வாழ்த்துக்கள்.


Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நாங்களும் பெரிய்ய்ய்ய்ய கவிஞராக்கும்....


வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா

ரீமிக்ஸ்.


பழகியதை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் அனுப்பிவைத்த (காதல்) கடிதங்களைப் பாரடா கண்ணா

காதல் கொண்ட பெண்ணை இன்று காணோமே கண்ணா
காதலித்தவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா....?
என்னைக் காதலித்தவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி பழகச்சொல் கண்ணா
அவள் இல்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
இந்த மூஞ்சுக்கு நான் கொஞ்சம் ஓவர்தான் கண்ணா
அதனால் பில்டப் காட்டாம பேசச் சொல் கண்ணா

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -அவள் பறந்து போனாளே 
எனை மறந்து போனாளே..
நான் பார்க்கும் போதே
பக்கத்து வீட்டுக்காரன் காரிலேறிப் போனாளே...

என்னிடம் காறில்லை
குறைந்தது பைக்கும் இல்லை
என் உழைப்புக்கு வாங்க முடியவில்லை
என் உழைப்புக்கு கார் வாங்க முடியவில்லை

அவள் பறந்து போனாளே 
எனை மறந்து போனாளே..
நான் பார்க்கும் போதே
பக்கத்து வீட்டுக்காரன் காரிலேறிப் போனாளே...

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -


ஓடி விளையாடு பாப்பா
No NO we want Remix. 
ok start music

CityVille விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

உன் ஃபோட்டோவை பப்லிஸ் பண்ணு பாப்பா
அதை நக்கலடிச்சால் வைய்யாதே பாப்பா

காலை எழுந்தவுடன் Facebook-பின்பு
மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல wall போஸ்ட்
மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -”ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்..”
நோ நோ இது பழசு. ரீமிக்ஸ் வேணும்
ஓகே ஓகே

”ஃபேஸ்புக் வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் கொமெண்ட் பண்ணாமல் இருக்க வேண்டாம்
Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
கொமெண்ட் பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்.”

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -


உசுரே போகுதே உசுரே போகுதே
Exam பேப்பர நீ கொண்டு தருகையில
நானும் படிக்குறன்
எழுதித்தான் பாக்குறன்.. 
Timeக்குள் எழுத முடியலயே...

Lecturer ஆக நீ(ங்க) இருந்தும் என் நிலை உங்களுக்கு புரிய்லயா
கஸ்ட்டமான பாடமென்டு தெரிஞ்சிருந்தும் டைம்ம குறக்கீங்களே அறிவில்லையா...?

(இது நமக்குள்ளையே இருக்கட்டும். Lecturer கிட்ட போட்டுக் குடுத்துடப்படாது)
- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -


எங்க ஆத்தா
கரண்ட் கனெக்சன் எடுத்தா..
பைப்லைன் கனெக்சன் எடுத்தா
டெலிஃபோன் கனெக்சன் எடுத்தா
ஆனா ADSL கனெக்சன் எடுக்காம விட்டுப்புட்டாவே...?

(ஒவ்வொரு நாளும் டொங்களுக்கு ரீ லோர்ட் பண்ணிப் பண்ணி என் சொத்துதான் அழியுது...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

-சுஹைல்-

இன்னும் வரும்...


நான் என்ன சொல்றேன்னா :
நோ நோ அப்படியெல்லாம் அக்கினிப் பார்வைய நம்ம மேல பாய்ச்சப்புடாது.

இதெல்லாம் நாங்க எங்க ஃபேஸ்புக் சுவர்ல(Wall) கிறுக்கின ரீமிக்ஸ்ஸுங்க... நம்ம ஃபேஸ்புக் நண்பர்கள் லைக் போட்டு கொமெண்ட் போட்டுத்தாக்கின இத நம்ம பதிவுலக நண்பர்களோடையும் பகிர்ந்துக்குவோமேன்னு ஒரு ஐடியா வந்துச்சுங்க.. அதனாலதான் இது...
இன்னும் வரும்...

உங்களுக் பிடிச்சிருந்தா... பிடிச்சிருக்கும் So வோட்ட கொமெண்ட பாத்துப் போட்டுக் கொடுங்க


Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நேத்து ராத்திரி யெம்மா....................இன்று சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் ஆசிரியர் இடமாற்ற பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்கும்
முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது. இதில் கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ நிசாம், சம்மாந்துறை வலயக்
 கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்
பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மாலை 3 மணியளவில் ஆரம்பமான இக்கூட்டத்தை அறிந்த  ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் சம்மாந்துறை பிரதேச செயலாளர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர். கட்டடத்திற்குள் நுழைய முற்பட்டபோது பொலீசார் தடுத்ததால் கட்டிடத்தை சுற்றிவழைத்தனர்.
முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் மக்கள் கூட்டம்
முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் மக்களில் இன்னொரு தொகுதிசுமார் 6 மணித்தியாலங்களுக்கு மேலாக கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் வெளியேற முடியாவண்ணம்
 சுற்றி வழைத்து முற்றுகையிட்டனர். நிலைமயினைக் கட்டுப்படுத்த மேலதிக பொலீசார் வரவழைக்கப்பட்டபோதும் மக்கள் தமது முற்றுகையைத் தளர்த்தவில்லை.

ஆசிரியர் இடமாற்றத்தினை ரத்துச் செய்ய வேண்டும், வலயக் கல்விப்பணிப்பாளரை உடனடியாக இடமாற்ற வேண்டும்
ஆகிய கோரிக்கைகளுக்கு உறுதியான முடிவு கிடைக்கும் வரை அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிய மக்கள்
அதில் விடாப்பிடியாக நின்றனர்.


இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எழுதி கையொப்பமிட்ட கடிதம் மக்கள் முன்னிலையில் கொண்டுவரப்படுகையில் 
இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எழுதி கையொப்பமிட்ட கடிதம் எல்லோர் முன்னிலையிலும் காட்சிப்படுத்தப்படுகையில் 

இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எழுதி கையொப்பமிட்ட கடிதம் சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் மக்கள் முன்னிலையில் வாசிக்கப்படுகையில்


இறுதியாக இரவு 9 மணியளவில் மாகாண கல்விப் பணிப்பாளர் தனக்குள்ள அதிகாரத்தின்படி ஆசிரிய இடமாற்றத்தினை
தற்காலிகமாக ரத்துச் செய்வதாக வெள்ளைத் தாளில் எழுதி ஒப்பமிட்டார். இந்த கடிதம் பொலிஸ் உயர் அதிகாரி (ஏ.எஸ்.பி என நினைக்கின்றேன்)
முன்னிலையில் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் கைய்யொப்பமிடப்பட்டு பின்னர் இது மக்கள் முன்னிலையில் சம்மாந்துறைப்
பொலிஸ் பொறுப்பதிகாரியினால் வாசித்துக்காட்டப்பட்டது.

ஓரளவு திருப்தியடைந்தாலும் தற்காலிகமாக என்பதை மாற்றி நிரந்தரமாக என்று உறுதியளிக்குமாறு மீண்டும் கோசமிட்டனர்.
மீண்டும் சிக்கல் நிலை தோன்றியது.இருந்தும் தனக்குள்ள அதிகாரத்தின்படி தற்காலிகமாகத்தான் இடை நிறுத்தமுடியும் என்று கூறிய
மாகாணப் பணிப்பாளர் இது தொடர்பில் விசேட கவனம் எடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.
முற்றுகை வெற்றிகரமாக முடிந்ததையிட்டு மகிழ்வுடன் திரும்பிச் செல்லும் ஊர் மக்கள்

இதன் பின்னர் மக்கள் ஓரளவு அமைதியடைந்தனர்.அத்தோடு  இரவு 10 மணியளவில் பொலீசாரின் விசேட பாதுகாப்போடு
மக்களின் கூக்குரலுக்கு மத்தியில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் கட்டடத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் 10.15 அளவில் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் மன்சூர் அவர்கள் மக்களின் கூச்சலுடன் கூடிய உணர்ச்சி
அலைகளுக்கு மத்தியில் பொலீசாரின் தீவிர பாதுகாப்பில் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் செல்லும் போது வாடிய அச்சம் கலந்த
முகத்துடன் சென்றதைக் காண முடிந்தது. பலரது அபிமானம் வென்ற முன்னாள் உயிரியல் பாட ஆசிரியரான இந்நாள் சம்மாந்துறை
வலயக் கல்விப் பணிப்பாளரின் இன்றைய நிலையை நினைக்கையில் மனதுக்கு மிகவும் கவலை தந்தது.

சம்மாதுறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் பொலிஸ் பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்படுகையில்
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல் நிலை இவ்வாறு தொடர இவ்விடமான்றங்களை தற்காலிகமாக இடை நிறுத்த ஜனாதிபதி உத்தவிட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.


Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

றோஸ் போல் - ஒரே காமெடியாப் போச்சுது..நேற்று இலங்கை இங்கிலாந்து Test போட்டி நடக்கும் போது commentators அடிக்கடி சொன்ன விசயம்றோஸ் போல் Test.


றோஸ் போல் Test மெச்ல டில்ஸான் விளையாட மாட்டார், அவருக்கு பதிலா  யாரு விளையாடுவார்?
றோஸ் போல் Test மெச்ல இலங்கை அணிக்கு யாரு தலைமை தாங்குவார்…? றோஸ்போல் Test மெச்லஅண்டர்சன் வந்தா யாரு வெளிய போவார் அப்படின்னு  அடிக்கடி றோஸ் போல் றோஸ் போல்னே பேசிட்டு இருந்தாங்க.

  
சரி அடுத்த மெச்ல ரெட் போலுக்கு பதிலா றோஸ் போல் பயன்படுத்தி விளையாடப்போராங்க போல. ஏற்கனவே அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை Test  போட்டிகளின் சுவாரஸ்யத்தக் கூட்டுறதுக்கு டெஸ்ட் போட்டிகள இரவு பகல் ஆட்டமா நடாத்தப்போறம் அதுல சிவப்பு பந்துக்குப் பதிலா றோஸ் பந்து பயன்படுத்தப்படும் அப்படின்னெல்லாம் அறிக்கை விட்டுட்டு இருந்திச்சாஒருவேள அப்படி ஒரு மெச்சாத்தான் இது இருக்குமோன்னு நினச்சு.

 இந்த வரலாற்று முக்கியமான நிகழ்வு சம்பந்தமான தகவல்கள சட்டுபுட்டுன்னு  திரட்டி நம்ம ப்லொக்ல ஒரு பதிவா போட்டுடலாமேன்னு கூகுள் அங்கிள்கிட்ட ஒரு சேர்ச்ச போட்டா...

அது றோஸ் போல் Rose Ball  இல்ல Rose Bowl அதாவது 3வது டெஸ்ட் நடக்கப்போற கிரவ்ன்டோட பெயராம் அது... அவ்வ்வ்வ்வ்


ஒரே காமெடியாப் போச்சுது…..

ஆனாலும் ஒன்னுங்க சல்லடை போட்டு தேடினதுல சில விசங்கள தெரிந்துகொள்ள முடிஞ்சதுங்கோ..

1.2001
ம் ஆண்டு முதல் பாவனையிலுள்ள இந்த மைதானத்துல முதலாவது ஒரு நாள் போட்டி 2003ம் ஆண்டுதானுங்க நடந்திருக்கு.

2.Rose Bowl  மைதானத்துல இதுவரை Test  போட்டிகள் நடந்ததே இல்லீங்க.

3.ஜூன் 16ம் திகதி இலங்கை -இங்கிலாந்து அணிகள் மோதும் Test  போட்டிதானுங்க இந்த மைதானத்துல நடக்கப்போற கன்னி Test  போட்டியாமுங்க...

நீங்களும் பாத்துக்கோங்க:
1. 
http://en.wikipedia.org/wiki/Rose_Bowl_(cricket_ground)


Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS