RSS

எனது தந்தையே இனிமேல் நீங்கள் என்னுடன் கதைக்க வேண்டுமானால் தொலைபேசியை நாடவேண்டாம்(பூகம்பம் - அதிர்வு 1)

அவர் ஒரு மறைவான ராணுவ மனிதன்

 யஹ்யா அய்யாஸ்


தொலைபேசி அழைப்பு ஒரு முறை வந்ததுதுண்டிக்கப்பட்டதுமீண்டும் வந்தது... துண்டிக்கப்பட்டது.. மூன்றாவது முறை வரவில்லை. மறுமுறை கைத் தொலைபேசியில் மணி அடிக்கத் தொடங்கியதும் உஸாமாவின் மனைவி அதனைக் கையில் எடுத்தாள். அது தனது கணவரின் நண்பருக்கான அழைப்பு என அறிந்துகொண்ட அவள் ஸுப்ஹ் தொழுகைவரை விழித்திருந்து பின் உறங்கிக் கொண்டிருக்கும் கணவனை எழுப்பி அவர் மூலம் அதனை அவரது நண்பனுக்கு அனுப்பினாள். அவள் அப்பாவி, விஷயங்களின் பாரதூரம் பற்றி ஓரளவு அறிவு இருந்தாலும் நடக்கப்போவது பற்றி ஊகிக்கக் கூடிய சக்தி அவளுக்கு இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாளா என்ன?

அப்போது நேரம் சுமாராக 9 மணி இருக்கும்.ஜும்மாவுடைய நாள் என்பதால் பள்ளிக்குப் போகும் நேரத்தை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்நண்பனை எழுப்பி கைத்தொலைபேசியை கையில் கொடுத்துவிட்ட உஸாமா நண்பனின் அறையில் உற்கார்ந்துகொண்டு கதவை மூடிக்கொண்டான். தனது ஆருயிர் நண்பனின் தந்தை பேசுகிறார் என்பது அவனுக்குத் தெரியும். ஏனெனில் அதனை எதிர்பார்த்தே அவர்கள் நின்றனர்.

யா வாலிதி…. (எனது தந்தையே) அஸ்ஸலாமு அலைக்கும்…” என உஸாமாவின் நண்பன் வாயாற வாழ்த்தினான். பாலைவனத்தின் கடும் வெயிலில் இருக்கும் போது காய்ந்து வரண்டு போன வாய்க்கு குளிர்ந்த பானம் கிடைத்தால் ஏற்படும் இன்பம் தனது நண்பன் தொலைபேசியில் கூறிய வார்த்தைகளால் உஸாமாவுக்கு ஏற்பட்டது. புன்முறுவல் பூத்தவண்ணம் தனது நெஞ்சைத் தடவிக் கொண்டான் அவன்.

உரையாடல் தொடர்ந்தது…. “எனது தந்தையே இனிமேல் நீங்கள் என்னுடன் கதைக்க வேண்டுமானால் தொலைபேசியை நாடவேண்டாம். தொலைபேசியைப் பாவிப்பது என்னைப் பொறுத்தமட்டில் ஆபத்தானதுஎன நண்பன் கூறி முடிப்பதற்குள் புசுக்”  என ஒரு சப்தம்தான் கேட்டது. அருகிலிருந்த உஸாமா திடுக்கிட்டான். “ …..  என்னஎன திகைப்புடன் அறையை உற்று நோக்கினான். புகை மண்டலம் அறையை ஆக்கிரமித்திருப்பதைக் கண்டான்.

பலஸ்தீனை மீட்ட சுல்தான் ஸலாஹுதீன் அய்யூபி, யூதர்களுக்கெதிரான போராட்டத்துக்கு அஸ்திவாரம் போட்ட இஸ்ஸுதீன் அல் கஸ்ஸாம் ஆகியோர் போன்று கருதப்பட்டு வந்த தனது நண்பன் விழுந்து கிடப்பதையும் அவனது காது உட்பட தலையின் வலது பக்கமும் வலது கையும் சிதைந்து கிடப்பதையும் பார்க்க அவனது கண்கள் மறுத்தேவிட்டன. அவனது கண்களில் இருந்து கண்ணீர் பொங்கிப் பிரவாகிப்பதற்கென கண் இமைகளுடன் போராடிக்கொண்டிருந்தது……. இறுதியில் வெற்றிபெற்று பீறிட்டுப் பாய்ந்து அவனது தாடியை நனைத்துக்கொண்டு கீழ் நோக்கி வடிய ஆரம்பித்தது. அதுக்கென்ன தெரியும்? உஸாமாவின் உள்ளம் வேண்டிக்கொண்டதால்தானே வெளிவருகிறது

உஸாமாவின் இதயத்துடிப்பு படார்படார்என நெஞ்சுடன் வேகமாக மோதிக்கொண்டிருந்தது. கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தனஆனால் கைவிரல்களோ ஒருவனது கழுத்தை நெரிப்பதற்கு தயாராகும் விதத்தில் வட்டமாக வளைந்த நிலையில் காணப்பட்டன. இப்போது உஸாமா தனது ஆருயிர் நண்பனது உடலுக்கு உயிரூட்டுவதற்கும், தமது எதிரியின் உயிரை பலி எடுப்பதற்கும் ஆயத்தமான நிலையில் தோற்றமளித்தான். அவன் அதிக பதற்றத்துடன் காணப்பட்டான்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்எனக் கூறி அவன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டான்ஒரு நிமிடமேனும் அவ்விடத்தில் வீணாக்க விரும்பாமல் உடனே நண்பன் மீளாத்துயிர் கொண்டிருக்கும் அறையை மூடிவிட்டு வெளியேறினான். தனது மனைவியிடம் விசயத்தைக்கூறி, அவளையும் பிள்ளைகளையும் அவ்வறையின் பக்கம் போகவேண்டாம் என எச்சரித்தான் உஸாமா.

கதாஇப் (கதாஇப் இஸ்ஸுத்தீன் அல் கஸ்ஸாம் - அதாவது இஸ்ஸுத்தீன் அல் கஸ்ஸாம் படைப்பிரிவு. ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவு இதுதான்) இன் மறைவிடத்துக்கு தொலைபேசி அழைப்பு பறந்ததுஇஸ்ரேலிய இயல்பு வாழ்வில் ஒரு செயற்கைப் பூகம்பத்தை ஏற்படுத்திய, பலஸ்தீன போராட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் காட்டித்தந்த, அந்த ஜீவனின் குரல் ஓய்ந்த செய்தி கதாஇபுக்கு எத்திவைக்கப்பட்டது.

அதி நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி மிக நுட்பமாகத் திட்டமிடப்பட்ட இந்த நாச வேலையை இஸ்ரேல் புரிந்துள்ளது என கதாஇபுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அசம்பாவிதம் பற்றிய செய்தியை தமது மறு அறிவித்தல் வரும்வரை யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம் என கதாஇபின் மறைவிடத்திலிருந்து உஸாமாவுக்கு அறிவுறுத்தல் வந்தது.

உஸாமாவுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. சிலை போல் திகைத்து நின்றான். சுவரைப் பார்த்தான். நிலத்தைப் பார்த்தான். முகட்டைப் பார்த்தான். நாற்காலியைப் பார்த்தான்எத்திசையை அவன் நோக்கினாலும் தனது அருமை நண்பனின் புன் முறுவல் பூத்த முகமே அவனது கண்களுக்குள் நிழலாடிக்கொண்டிருந்தது. அவன் அப்படியே தன்னையும் அறியாமல் வீட்டின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த சாய்வு நாட்காலியில் அமர்ந்துகொண்டான்

அவனது கண்கள் பத்து நாட்கள் அழுது புலம்பிய ஒருவரது கண்களைப் போன்று சிவந்து காணப்பட்டனகவலையின் வடு காரணமாக கன்னம் வீங்கியிருந்தது. அடிக்கடி அவன் தனது கீழ் உதட்டினை பற்களால் கடித்துக்கொண்டான்.

அப்படியே இருக்கும் போது தனது மனக்கண்களின் கதவை யாரோ தட்டுவது போன்று உணர்ந்தான்….

பிஃர்ஸைத் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது இருவரும் ஒன்றாக வாழ்ந்த காலம். ஒரே வீட்டில் அறை எடுத்துத் தங்கிய காலம். இது சுமார் 10 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. அய்யாஸ் ஒரு சாதரண நண்பன் என்றால் உஸாமா இதை எப்போதோ மறந்திருப்பான். ஆனால் அல்லாஹ்வுக்காக இணைந்த உள்ளங்கள் ஆயிற்றேஎப்படி மறப்பது? தனக்கும் அய்யாஸுக்கும் முதல் முதலில் ஏற்பட்ட சந்திப்பை நோக்கி அவனது எண்ணங்கள் விரைந்தன….

அய்யாஷுடன் பல்கலைக் கழகத்தில் கூட்டாக இஸ்லாமியப் பணி புரிந்த காலத்தை மீட்டினான். யூதர்கள் இஸ்லாமிய பூமியான பலஸ்தீனை ஆக்கிரமித்தது பற்றி இருவரும் அடிக்கடி கதைப்பதுண்டு.

உஸாமா…! பலஸ்தீன் எங்களுடையது தானே. யூதர்களை விட அதில் எமக்குத்தானே அதிக உரிமையுண்டு..?” என அய்யாஷ் அடிக்கடி கூறுவார்.
யூதர்களின் இருதயத்தை வெடிக்கவைக்கும் சக்தியை எமக்கு அல்லாஹ்  தந்தால் அவர்களைத் துரத்தியடிப்பது இலகுவான காரியம் உஸாமா!! “ என்பார்.
ஆம் அய்யாஷ், நாம் முதலில் ஒன்றுபடவேண்டும், அப்போதுதான் அல்லாஹ்வின் உதவி எம்மைநாடி வரும்”  என உஸாமா பதில் கொடுப்பார்.

நாட்கள்  உருண்டோடினஇருவரும் பட்டம் பெற்று வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது. “உஸாமா..! எம்மை எதிர் நோக்கும் நாட்களில் செய்வதற்கென ஏதாவது திட்டம் உன்னிடம் உண்டா..?” என அய்யாஷ் ஒரு நாள் கேட்க,
 “ஏன் அப்படிக் கேட்கிறாய் எனக்கு விளங்கவில்லையே…!?”
 
அட.. ! இன்னும் சில நாட்களில் எமது படிப்பும் பரீட்சைகளும் முடிவடைந்துவிடும். அப்போது மூட்டை முடிச்சுகளை சுறுட்டிக்கொண்டு வீடு நோக்கி நடைபோட வேண்டி வரும். அந்த நாட்களைப் பற்றியே நான் கேட்கிறேன் உஸாமா!!”

.. அதையா நீ நினைத்து வருந்துகிறாய்..? உண்மையில் எனது எண்ணமும் இந்த நாட்களில் அதனையே சுற்றிக்கொண்டிருக்கிறது…” என உஸாமா பதில் கொடுத்தார்.

இருவரும் படிப்பை முடித்துவிட்டு பிரிந்து சென்றுவிட்டனர்….



                       தொடரும்................ 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS