RSS

ஃபேஸ்புக் நைட் (FB Night)


பசியிருக்கும் தூக்கமிருக்கும் மனமிருக்காது
பிகரு ஒன்னு சற் வந்தால் தூக்கம் வராது
பிகரு ஒன்னு சற் வந்தால் தூக்கம் வராது
தூக்கம் கண்ணைப் பறித்தாலும்  ஆசைவிடாது
தட்டிலிருக்கும் சாப்பாட்டை திண்ண நேரமிராது

பசியிருக்கும் தூக்கமிருக்கும் மனமிருக்காது
பிகரு ஒன்னு சற் வந்தால் தூக்கம் வராது

கட்டவிழந்த மனது சற்பண்ண பெண்களைத் தேடும்
பாதித் தூக்கம் வந்து வந்து கண்களை மூடும் -
கட்டவிழந்த மனது சற்பண்ண பெண்களைத் தேடும்
இருந்தும்
பாழாய்ப்போன மனதில் இன்னும் சற் பண்ணத் தோணும்
பக்கத்து வீட்டு சேவல் அதிகாலையில் கூவும்
அந்த நேரம் புத்திக்குள் சில்லூரி கத்தும்


Fb Chatku நேரமும் இல்லை காலமும் இல்லையே
அடுத்த நாளும் இந்த நிலையில் மாற்றமில்லையே
Fb Chatku நேரமும் இல்லை காலமும் இல்லையே
அடுத்த நாளும் இந்த நிலையில் மாற்றமில்லையே

தப்பு என்று மனசு சொல்லும் புத்தி கேட்பதில்லையே
அடுத்த நாளும் Face book வந்தால் இந்த நிலையே

பசியிருக்கும் தூக்கமிருக்கும் மனமிருக்காது
பிகரு ஒன்னு சற் வந்தால் தூக்கம் வராது



 (ரீமிக்ஸ் கவிஞர் : அஹமட் சுஹைல்)





Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சீ சீ இந்த பிகர் அட்டு பிகர்ர்ர்ர்

ஒரு ஊர்ல ஒரு பைய்யன் இருந்தானாம்.
அவன் ஒவ்வுருநாளும் ஃபேஸ்புக் வரும் போதும்
ஒரு அழகான ஃபிகர் People you may know பகுதியில இருக்குமாம்
இவனுக்கும் அந்த ஃபிகர் மேல ரொம்ப ஆசையாம்..
ஆஹா சூப்பர் ஃபிகருப்பா.. இத எப்படியாவது ஃப்ரெண்டாக்கி
அப்புறம் லவ் பண்ணி செட்டில் ஆகிடனும்னு ஆசையாம்,

சரி இன்னைக்கே ஆரம்பிச்சிடுவம்னு சொல்லி
அந்த பிகருக்கு Friend Request அனுப்பினானாம்
அந்த நாள் முழுதும் வெயிட் பண்ணிப் பாத்தானாம்
Friend Request accept ஆகவே இல்லையாம்.
சரின்னு அடுத்த நாளும் வந்து பாத்தானம் அப்பவும்
Friend Request accept ஆகில்லையாம்.
இப்படியே ஒரு வருசம் காத்திருந்தான் அப்பவும்
Friend Request accept ஆகில்லையாம்.

வெறுத்துப் போன அவன் “சீ சீ இந்த பிகர் அட்டு பிகர்ர்ர்ர்
எண்டு மனச தேத்திக்கிட்டு
அடுத்த பிகருக்கு Request அனுப்புறதில்ல பிசியாகிட்டானாம்.





நாங்களும் பண்ணுவோமில்ல ரீமேக்கு...
-- ரீமேக் டிரெக்டர் - சுஹைல் --

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வேர்ல்ட் கப் - சோக கீதம்










போ போ போ நீ கப்ப கொண்டு போ
போ போ போ எனக்கு கப்பு வேணாம் போ
எனக்கு ஒன்னும் கவலை இல்ல போடா சமி போ
நீ என்ன வேண்னாலும் ஆட்டம் போடு சோகமில்ல போ
போ போ போ நீ கப்ப கொண்டு போ
போ போ போ எனக்கு கப்பு வேணாம் போ

அடுத்த வேர்ல்டுகப்பிலும் ஃபைனல்
வரத்தான் போறோம் பார்மகனே
இலங்கை போல கிரிக்கட் ஆட எவரும் இல்ல
சொல்லப் போற நீதானே நீதானே
வெஸ்டிண்டீஸ் நீயே கப்பத் தூக்கிட்டியே
எதிர் பாராத நேரம் ஃபோர்மாகி நீயும்வெண்டுட்டியே.

போ போ போ நீ கப்ப கொண்டு போ
போ போ போ எனக்கு கப்பு வேணாம் போ

 ஆண்டவனே எங்கள் அணியில் என்ன குறை கூறு
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ள நீரு
ஓய்ந்திடாமலே  நான்கு ஃபைனல் வந்தோம்
மாறிடாமலே நான்கிலும் தோல்வியைத் தழுவினோம்
கண்டவனெல்லாம் கூடி கேலி பேசுறான்
ஓடி ஒழிஞ்சவனெல்லாம் நக்கல் பண்ணுறான்

போ போ போ
சமி நீ நாட்டைவிடுப் போ
போ போ போ
நீ எக்கேடோ கெட்டுப் போ

ஓஓஓஓஒ
மூன்று முறை  தோற்றும் அழுததில்லை நானும்
இம்முறை தோற்றதால் நான் அழுவதென்ன நியாயம்
அணி பலமாக இருந்ததினால் கிண்ணம் நமெக்கென்று நானும் நம்பினேன்
வழமைபோல் அணி சொதப்பிடவே சாகப் பார்க்கிறேன்
கிண்ணம் வெல்லாமல் போனதினால் போச்சு நிம்மதி
நான்காம் முறையும் கிண்ணம் கிடைக்கலையே
எல்லாம் நம்விதி நம்விதி

எனக்கு ஒன்னும் கவலை இல்ல போடா சமி போ
நீ என்ன வேண்னாலும் ஆட்டம் போடு சோகமில்ல போ

போ போ போ
நீ கப்பைத் தூக்கிப் போ
போ போ போ
எங்களுக்கு அதிஷ்டமில்ல போ

அடுத்த வேர்ல்டுகப்பிலும் ஃபைனல்
வரத்தான் போறோம் பார்மகனே

இலங்கை போல கிரிக்கட் ஆட எவரும் இல்ல
சொல்லப் போற நீதானே நீதானே

வெஸ்டிண்டீஸ் நீயே கப்பத் தூக்கிட்டியே….
சொல்லாமக் கொல்லாமா எதிர் பாராத நேரம்
ஃபோர்மாகி அடிச்சிட்டியே..

போ போ போ

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

---------இதுவும் கடந்துபோகும்---------



சொல்றதுக்கு எதுவுமே இல்லைங்க…. குறித்த நாளில் சிறப்பாக விளையாடிய அணி இறுதியில் வென்றது. அது இறுதிப் போட்டியாக இருந்ததும் எமது இலங்கை அணியாக இல்லாது விட்டதும் எமக்கு வேதனைதான்…

தொடர்ச்சியாக 4 உலகக் கிண்ண இறுதிப்போட்டிகள் வருவதற்கு தனித்தன்மையான / அதீத திறமை வேண்டும். அந்த இறுதிப்போட்டிகளில் வெல்வதற்கு கொஞ்சம் அதிர்ஷ்ட்டமும் வேண்டும்…. எமக்கு கிண்ணம் வெல்லும் திறமையும் இருந்தது அதனை வெல்ல முழுத்தகுதியும் இருந்தது.
ஆனால் அதிர்ஷ்ட்டம்தான் இதுவரை கிட்டவில்லை.

உலகக் கிண்ணம் எனும் என் ஆசை, கனவு, பிரார்த்தனை எல்லாம் 4வது முறையும் தவிடு பொடியானதில் எனக்கு மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது.
எவளவோ ஏமாற்றங்கள் கண்ட மனது என்றாலும் இந்த மாதிரியான ஏமாற்றங்கள் ஏற்படுத்தும் வலி பாரியதாகவே இருக்கின்றது.
கடந்த தோல்விகளைவிட இந்தத் தோல்வி சொந்த மண்ணில், சொந்த நாட்டு ரசிகர்களின் முன்னால் பெறப்பட்ட இந்தத் தோல்வி கொடுமையானது.
ஆரம்பச் சுற்றுடனே வெளியேறியிருந்தால் கூட இவ்வளவு கவலை வந்திருக்குமா என்பது சந்தேகமே.

இலங்கை அணியின் தோல்வியை கிரிக்கட் ரசிகனாக ஏற்றுக்கொள்கிறேன்…..ஆனால் இலங்கை கிரிக்கட்டின் ரசிகனாக இந்தத் தோல்வியை மனம் ஏற்க மறுக்கிறது.

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் சொல்லவரவில்லை, சொல்லியும் பயனில்லை. எம்மவர்களின் பிழைகள் முதல் 10 ஓவர்களில் 32 ஓட்டங்களைக் கொடுத்துவிட்டு மீதிப் பத்து ஓவர்களில் 105 ஓட்டம் கொடுத்த போது எமது வெற்றியின் முதல் படி சறுக்கியது, மலிங்க 4 ஓவர்களில் 54 ஓட்டம் கொடுத்தபோது இரண்டாவது படி சறுக்கியது, டில்சானின் டக் அவுட் மூலம் 3வது படியும், மழையின் சிறு தூத்தலைக் கண்டு மஹெல டக்வேர்த் லூயிஸ் ஓட்ட இலக்கை கடக்க அவசரப்பட்டு ஆட்டமிழந்தபோது நாம் தோற்றேவிட்டோம்.

மீதமான வீரர்கள் தமது நம்பிக்கையை இழந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தமையும் இறுதி நம்பிக்கையாய் இருந்த ஜீவன் மெண்டீஸ் - திசெர பெரேராவின் ரன் அவுட்டோடு நாம் படு தோல்வி அடைந்தோம். அந்நேரம் இலங்கை ரசிகர்களாகிய எம் மனதில் பேரிடி விழுந்தது.

இறுதிப் போட்டியின் மொத்தம் 40 ஓவர்களில் முதல் பத்து ஓவர்கள் மாத்திரம் எம் கை ஓங்கியிருந்தது அதன் பின்னரான 30 ஓவர்களும் மே.இ.தீவுகள் அணியின் கை ஓங்கியிருந்தது.

மே.இ.தீவுகள் அணியை விட திறமையால் எம் அணி மேலோங்கித்தான் இருந்தது. ஆனால் எம் அணியினர் இலகுவாக அழுத்தத்திற்கு ஆளாகித் தவித்தார்கள் ஆனால் மே.இ.தீவுகள் அணியினர் சிறப்பாக அழுத்தத்தினைக் கையாண்டார்கள் கட்டுப்படுத்தினார்கள். ஒவ்வொரு ஆட்டமிழப்பின் போதும் அவர்களின் நடனம் நமக்கு வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது ஆனால் அதுதான் அவர்களின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவியது என்றால் மிகையாகாது.. அந்த இடத்தில்தான் இலங்கை அணி சறுக்கிவிட்டது.

திசேர பெரேராவின் ஆட்டமிழப்போடு என்னால் அதற்கு மேல் மெச்சைப் பார்க்கவே முடியவில்லை. பார்க்கும் சக்தி எனக்கிருக்கவில்லை அதற்குப் பின்னர் என்ன நடந்தது, யார் யார் எத்தனை ஓட்டங்கள் பெற்றார்கள்? மே.இ.தீவுகள் அணியின் வெற்றிக் கொண்டாட்டம் எப்படி இருந்தது? (நிச்சயமாக Gangam Style இருந்திருக்கும் என்பது உறுதி) எதுவுமே தெரியாது.இலங்கை அணி எத்தனை ஓட்டங்களால் தோற்றது என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

இந்தத் தோல்விக்குப் பின்னர் நான் பார்க்கும் எல்லோரும் சந்தோசமாய் இருப்பது போலும், எல்லோரும் என்னைப் பரிதாபமாய்ப் பார்ப்பது போலும் ஒரு உணர்வு.

வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு இந்தத் தோல்வியால் எவ்வளவு அழுத்தம், கவலை இருக்குமோ அதைவிட பலமடங்கு அழுத்தம், கவலை அந்த வீரர்களுக்கு இருக்கும். உண்மையில் 4 உலக்கிண்ண இறுதிப்போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி என்பது எவ்வளவு பெரிய கவலை என்பது இலங்கை அணியின் ரசிகர்களாகிய எமக்குத்தான் தெரியும்.

இலங்கை கிரிக்கடின் Die Heart Fan ஆன எனக்கு இந்தத் தோல்வி தந்த ரணம் ஆறுவதற்கும் கவலை நீங்கி வழமைக்குத் திரும்பவும் பல நாட்கள் ஆகும்.
ஒவ்வொரு முறையும் இலங்கை அணி தோற்கும் போதும் இலங்கை அணி மீது வெறுப்பு வந்ததே இல்லை. கிரிக்கட் மீது வெறுப்பு வரும். இனி கிரிக்கட் பார்க்கவே கூடாது கிரிக்கட்டுக்கு அடிமையாகிவிடக்கூடாது என்றுதான் நினைப்பேன். ஆனால் அடுத்த தொடர் ஆரம்பமாகும் போதும் முன்னரைவிட பல மடங்கு நேசத்தோடு இலங்கை அணிக்கு என் ஆதரவு இருக்கும்….. முடியவில்லை இலங்கை கிரிக்கட்டிலிருந்து என்னால் தூரமாக முடியவில்லை.

அணிக்கு ஆதரவு வழங்குவதும் அப்புறம் மனம் நொறுங்குவதும் பின்னர் மீண்டும் ஆதரவு வழங்குவதும் என்று செல்கிறது என் வாழ்க்கை.

என்னைப் பொறுத்தவரையில் இலங்கைக் கிரிக்கட் அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த தலைவர் மஹெல ஜயவர்த்தன. வீரர்களை ஆக்ரோசமாக அதே நேரம் கிரிக்கட் ஸ்ப்ரிட்டோடு வழி நடத்துவதில் வல்லவர். மஹெலவின் பல தன்மைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதற்குப் பல காரணங்கள். இப்படி என்னை மிகவும் கவர்ந்த தலைவர் மஹெல தனது தலைமையில் ஒரு உலகக் கிண்ணத்தைதானும் வெல்லவேண்டும் என்பது எனது மிகப் பெரிய ஆசை. ஆனால் இவ்வாசை இனி நிறைவேற வாய்ப்பில்லை என்பதே எனக்கு மிகப் பெரும் கவலை.

கடந்த 2011 உலகக் கிண்ணக்கிரிக்கட் போட்டிகள் நடைபெற்றபோது எனக்கு பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு இறுதி செமஸ்டர் பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோற்றபோது எந்நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. என்னால் படிக்கக் கூட முடியவில்லை. என் தாய் ஃபோன் பண்ணி என்னிடம் நல்லாப் படிக்காய் தானே என்று கேட்டபோது என்னால் பொய் சொல்ல முடியவில்லை. என்னால் படிக்க முடியவில்லை இலங்கையணியின் தோல்வி என்னை மிகவும் பாதித்துவிட்டது என்று வேதனையோடு கூறினேன். அவர்களுக்கும் என் வேதனை புரிந்தது எனக்கு ஆறுதல் சொன்னார்கள். என் பெற்றோர் சகோதரர்கள் எல்லோரும் அடிக்கடி ஃபோன் பண்ணி என்னைத் தேற்றியதால்தான் என்னால் மீதமிருந்த பரீட்சையை எழுதிமுடிக்க முடிந்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படி? ஏன் இப்படி ஒரு முட்டாள்தனமான ரசிகனாக் இருக்கிறேன் என்று எனக்கு புரியவே இல்லை.

அப்படி ஒரு நிலைதான் இம்முறையும் ஆனால் நல்லவேளை இம்முறை பரீட்சைகள் எதுவுமில்லை. ஆனாலும் மனதில் இருக்கும் வலி இன்னும் ஆறவில்லை. ஆனால் மற்றவர்கள் வழமைக்குத் திரும்பிவிட்டதைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது.
ஏன் என்னால் மட்டும் முடியவில்லை….? ஹ்ம்ம் இதுவும் கடந்து போகும்.

கிரிக்கட் ஒரு விளையாட்டுதான் அதற்கு நான் இப்படி அடிமையாய்க்கிடப்பது அதிகம்தான்… மூளை சொல்கிறது மனது கேட்குதில்லையே.

இந்தத் தோல்வி தந்தவலி இன்னும் அதிகமாகும் என்பதால் FB,Cricinfo போன்ற தளங்கள் பக்கமோ வேறேதும் இணையத்தளங்கள்பக்கமோ, டீவி, ஸ்போர்ட்ஸ் நியூஸ் பக்கமோ போகவே இல்லை.இந்த இரண்டு நாட்களையும் கடத்த நான் பட்டபாடு ஹ்ம்ம்ம்… மனதை ஆறுதல்படுத்த என்னென்ன செய்யலாம் என்று தேடிய போதுதான் நான் இருக்கும் மாபோளை நகருக்கு மிக அண்மையில் எலகந்த என்னுமிடத்தில் ஒரு அழகிய கடற்கரை இருப்பது அறியக்கிடைத்தது. புண்பட்ட நெஞ்சுக்கு ஒரு ஆறுதல்….ஹ்ம்ம்ம்

பார்ப்போம் இதுவும் கடந்து போகும்

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என்னடா மக்கள்ஸ்....? இந்த வாட்டி அடிச்சிடுவீங்கதானே...?

***** இலங்கை கிரிக்கட் அணிக்கு தீவிர ரசிகனின் இதயத்தில் இருந்து ஒரு கடிதம் ****

என்னடா மக்கள்ஸ்....? இந்த வாட்டி அடிச்சிடுவீங்கதானே...?

அடுத்தடுத்து வேர்ல்ட் கப் ஃபைனலுக்கு வந்து ஆசை காட்டி மோசம் பண்ணி எங்கள சாச்சுப்புட்டீங்க இந்தவாட்டியாவது ஏதாவது பண்ணுங்க மக்கள்ஸ்.... ஹார்ட் பீட் இப்பவே செக்கனுக்கு 500, 1000 எண்டு எகிறுது.....

ஆப்படிக்கிறதா இருந்தா ஆரம்ப சுற்றுலையே அடிச்சிட்டு கிளம்பிடனும்
அரையிறுதி, இறுதிவரை வந்தெல்லாம் அடிக்கப்புடாது...... இந்தவாட்டி ஆப்படிக்கமாட்டீங்கன்னு நம்புறன் இத்துனோண்டு மனசு அது ஓவர் இடியையெல்லாம் தாங்காதுப்பா.......
பாத்து ஏதாச்சும் பண்ணுங்க...... எங்களால முடிஞ்ச துஆக்கள நாங்க கேக்குறோம்....

விவரம் தெரிய ஆரம்பிச்ச காலப்பகுதியில 1996 ல உலகக் கிண்ணத்த வென்று அடி மனசுல இனம்புரியாத ஒரு பாதிப்பத் தந்துட்டீங்க
அந்த வயசுல மனசுல பசுமரத்தாணி போல பதிந்த கிரிக்கட் அதுவும் கிண்ணம்வென்ற இலங்கை அணி, வெற்றிக்கொண்டாங்கள்,
ஊடகங்களில் வெளியான செய்திகள் எல்லாம் சேர்ந்து என் நாடு, என் அணி, என் மக்கள் என்றொரு உணர்வை மனதில் உருவாக்கி ஆட்கொண்டுட்டு......

அந்த அணியில் இருந்த வீரர்கள்தான் என் முதல் கதாநாயகர்கள் அவர்களோடு ஆரம்பித்த கிரிக்கட் உணர்வு இன்னும்
ஆழமாத் தொடருது

சனத் ஜயசூரிய, ரொமேஸ் களுவிதாரன, மஹனாம, மார்வன் அடபத்து, அரவிந்த எண்டு பாத்து பாத்து பக்குவப்பட்ட மனசு. ஜயசூரிய - களுவிதாரன அடியப்பார்க்க எத்துன மாலை நேர வகுப்புகள கட் அடிச்சிருப்போம்...
 நாங்க இன்னைக்கு வகுப்புக்கு போறதா இல்லையான்னு
தீர்மானிக்கிறதே சனத் ஜயசூரியதான்... வகுப்பு தொடங்கும் வரை அவரு அடிச்சா வகுப்பு கட்,  அதுக்குமுன்னாடி அவுட்டான வகுப்புக்கு
போவோம்....

 அந்த அடிப்படையில வந்த மனசு என்ன நடந்தாலும் அடங்கமாட்டேங்குது..... இனியும் அடங்காது போலிருக்கு....


எந்தவொரு தொடருக்கும் நீங்க போகும் போதும் அணி எவ்வளவு பலவீனமாகவிருந்தாலும் நீங்க ஏதாச்சும் பண்ணுவீங்க சாதிப்பீங்கன்னு
நம்பிப் பார்ப்போம்...  ஆதரவு தருவோம்..ஆனா இம்முறை நல்ல பலமா, நல்ல ஃபோர்ம்ல இருக்கீங்க. நம்பிக்கை, எதிர்பார்ப்பு எல்லாம் பலமடங்கு அதிகமா இருக்கு ஏமாத்திடாதீங்கடா செல்லம்ஸ்...


மனசு என்னென்னமோ உளறுது.... உடம்பெல்லாம் சிலிர்க்குது.. என்னாகுமோ ஏதாகுமோ....?
இப்பவே செம டென்சன்.., சாப்பிட முடியல, தூங்க முடியல, சிந்தனையெல்லாம் இந்த உலகக் கிண்ணம் பற்றிதான்...
ஹ்ம்ம்ம்ம்ம்ம்... இன்னும் எவளவோ சொல்ல நினைச்சன் எல்லாம் சொல்ல முடியல அடுத்த மடலில் சந்திப்போம்....

பாவிப் பய சின்ன வயசுல இருந்தே இப்புடி (இலங்கை) கிரிக்கட்டுக்கு சீரியஸ் ரசிகனாகிட்டு ஒவ்வொரு மெச் நடக்கும் போதும் படுறான் பாடு
அநியாயமா ஒரு உசுர சாச்சுப்புடாதீங்கடா.... உங்கள ரொம்ம்ம்ம்ம்ம்ப நம்பிட்டு இருக்கோம்...

யா அல்லாஹ்...


நன்றி

இப்படிக்கு
இலங்கை கிரிக்கட்டின் தீவிர ரசிகன்
_அஹமட் சுஹைல்-

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வடை போச்சே (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -4)


    வடிவேல் சிங்கமுத்து காமெடிகள்ள ரொம்பவும் ஃபேமசான கொமெடி ஒன்னு இருக்கு.. “என்ன வேணும் எண்ண வேணும்அது மாதிரி நம்ம லைஃப்லையும் ஒரு காமெடி நடந்துதுன்னா பாருங்களேன்……

    அதுக்கு முன்னாடி சிங்களத்துல அவுறுதுஎன்ற சொல்; வருடம்(Year) என்பதற்கும் பயன்படுத்துவாங்க, புதுவருடப் பிறப்பு (New year) அதற்கும் பயன்படுத்துவாங்க….

    சரி நம்ம மேட்டருக்கு வரலாம்



    எங்க பல்கழைக் கழக பட்டமளிப்பு விழா கொழும்பு BMICH ல ஏப்ரல் 5ல் நடந்துது. அதற்கான உத்தியோக பூர்வ படப்பிடிப்பாளர்களாக கண்டியில் இருக்கும் புகைப்பட நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்திருந்தாங்க. பட்டமளிப்பு நிகழ்வுகள் ஆரம்பமாக முதலிலேயே அவர்களுக்குரிய கட்டணங்கள செழுத்தி பற்றுச்சீட்டும் வாங்கியாச்சுவிழாவும் திருப்தியா முடிஞ்சுது..(எங்க டீன் என் பெயரை பிழையாக உச்சரிச்சதத் தவிர)

    பட்டமளிப்பு விழா முடிஞ்சு ஒவ்வொருத்தரும் வெளியேறிக்கொண்டிருக்கும் போது நானும் நம்ம புகைப்படப் பிடிப்பாளர்கள்கிட்ட ஃபோட்டோக்களை எப்ப எடுக்கலாம் என்று கேட்கலாம் என்று அவர்கிட்ட போனன்….
    அவர் சிங்களவர்

    நான்:  அண்ணா இந்த ஃபோட்டோகள எப்ப எடுக்கலாம்..?
    (ayye me photos tika kavadhdha ganda puluvan)

    அவர் : இந்த வருசத்துக்குப் பிறகு
    (me avuruddhen passe..)

    நான் : அண்ணா சொல்லுங்க.. எப்ப எடுக்கலாம்..?
    Ayye kiyannakko kavaddha ganda puluvan

    அவர் : வருசத்துக்குப் பிறகு எடுக்கலாம் தம்பி
    (Avuruddhen passe puluvan malli…)

    நான் : ஐய்யோ அண்ணா பகிடி பண்ணாம சொல்லுங்கோவன்
    (Ane aiiye vihilu karannethuva kiyannako….)

    அவர் : பகிடி இல்ல தம்பி இந்த வருசத்துக்குப் பிறகுதான் எடுக்க ஏலும்
    (Vihilu ne malli me avuruddhen passe thama ganda puluvan)

    நான் : இத டிவலொப் பண்ணித்தர ஒரு வருசம் போகுமா?
    (Meka develop karanda avuruddhek oonedha)

    அவர் : அப்படி இல்ல தம்பி வருசத்துக்கு எல்லாரும் லீவு போட்டுட்டு போயிடுவாங்கதானே, அவங்க லீவு முடிச்சிட்டு வந்த பிறகுதான் வேலைய ஆரம்பிப்போம். அதனால வருசம் முடிஞ்சு ஒன்று அல்லது ரெண்டுகிழமையாலதான் இதை எடுக்கலாம்
    (Ehema nevei malli avuruddhekata okkomala nivaadu dhaala  yanava nedha.. Nivaduven passe thamai vede patanganne…  aenisha avuruddhen passe sathi eka dhekakin ganda puluvan….)

    அப்போதான் க்ளிக் ஆச்சு….
    ஏய் நீ எந்த அவுறுதுவ சொன்ன….? அடப்பாவி…..
    நான் வருசத்தப்பற்றி கதைச்ச இந்தப் பயபுள்ள புதுவருடம் ஏப்ரல் 14 ஐப் பற்றி கதைச்சிருக்கான்…..

    அச்சச்சோ வடை போச்சே…. அப்புறம் ஒரு மாதிரியா சேப் பண்ணீட்டு

    நான் : அண்ணா நீங்க சொன்னது ஏப்ரல் 14 புதுவருசத்தப்பற்றியா…?

    அவர் : ஆமா நீங்க என்ன நினைச்சீங்க…?

    நான் : நான் நினைச்சன் ஃபோட்டோ தர ஒருவருசம் போகும்னு சொல்றீங்கண்ணு..

    அப்புறம் நாங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து சிரிச்சிக்கிட்டோம்
    ஒரே சிரிப்புதான் நகைச்சுவைதான் காமெடிதான் போங்க..

    அப்புறம் அவருக்கு Happy New Year சொல்லிட்டு நான் வந்துட்டன்... அப்புறமாத்தான் யோசிச்சன் ஆரம்பத்துலையே ஆங்கிலத்துல பேசிருக்கலாமோ... என்று





Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS