RSS

அவனுங்கள நிறுத்தச்சொல் நானும் நிறுத்துறன்.


நண்பன் : விட்ருடா இந்த ஃபேஸ்புக்க விட்டுடு

நான் : செத்துருவண்டா விட்டா செத்துடுவன்

நண்பன் : அப்போ நீ கடைசிவரைக்கும் இப்படித்தான் இருக்கப்போறியா? நிறுத்தவே மாட்டியா?

நான் : நிறுத்துறன் ஆனா அவங்களையெல்லாம் நிறுத்த சொல் நானும் நிறுத்துறன்

நண்பன் : யார?

நான் : எல்லாரையும்

நண்பன் : யார??????????????

நான் : நான் போடுற ஸ்டேடஸ் நல்லா இருந்தாக் கூட (எப்பவாச்சும் ஒரு நாளைக்கு நல்லா இருக்கும்) வந்து நக்கலா கொமெண்ட் பண்ணிப் போறானே...
 அவன நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறன்.

அப்பாவிப் பையன் (நாந்தான்) என் ஃபோட்டோவ ஃபேஸ்புக்ல போட்டதும் மெசேஜ்ல சூப்பரா இருக்குனு சொல்லிட்டு கொமெண்ட்ல வந்து நக்கலடிக்கானே...
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

கிட்னியையும் மூளையையும் பாவிச்சு கஸ்ட்டப்பட்டு ஒரு ஸ்டேடஸ் யோசிச்சு போட்டா அதக் கொப்பியடிச்சு அவண்ட சொந்த போஸ்ட் மாதிரிப் போர்ரானே துரோகி...
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

விடிய விடிய ஒன்லைன் இருந்துட்டு நம்ம கூட பேசமா பொண்ணுங்ககூட கடல போட்டுட்டு காலையில கேட்டா இல்ல மச்சான் ஒன்லைன்ல போட்டுட்டு அப்டியே தூங்கிட்டண்டானு பொய்யா அள்ளி விடுறான் பார்.....
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

நாம ஒன்லைன் இருக்கும்வரை ஒழிஞ்சு இருந்துட்டு; நாம ஓஃப்லைன் போனபிறகு ஓடிவந்து நம்ம ஏரியால நமக்கு எதிரா கொமெண்ட் போறானே....
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

English சொல் ஒண்ணுக்கு கூட ஸ்பெலிங் தெரியாம இங்லிஸ்ல Status/Comment போட்டுட்டு கேட்டா அது Face book English, shortcuts அப்படின்னு பீடர் விடுவானே... அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

பக்கத்து தெருவில இருக்குற பெட்டிக் கடைக்குப் போய் சவர்க்காரம் வாங்கினாக் கூட Status I went  shopping. Sooo Tired  னு Status போட்டு படம் காட்டுறானே....
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

பக்கத்து கட்டில்ல படுத்துக்கிட்டே மச்சான் I miss you. Where are you da னு ஸ்டேடஸ் போட்டு கடுப்பேத்துவானே ரூம் மேட்.....
 அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

நாம என்னதான் போஸ்ட் போட்டாலும் ஒரு லைக் கூட பண்ணாம ஒரு பொண்ணு ஹாய் னு போட்டாக் கூட முதல் ஆளாப் போய் லைக் பண்ணி ஹாய் டியர்னு ஒரு கொமெண்டும் போட்டுட்டு வர்ரானே.....
அவன நிறுத்தச்சொல் நான் நிறுத்துறன்
.

நமக்கு ஒரு மேஜர் ஒப்ரேசன் இருந்து அதை ஒரு ஸ்டேடஸா போட்டாலும் அந்த ஸ்டேடசை ஸ்கிப் பண்ணிட்டு "ltl cold" னு போட்டிருக்கிற ஒரு பொண்ணு ஸ்டேடஸ்க்கு போய் “ so sad, get well soon, tc dear " நு பாசத்த பொழியுறானே பாசக்காறன் ......
அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறன்.

நம்ம லெப்டொப்பையும் நம்ம டொங்கலையும் கடன் வாங்கி நமக்கு எதிராவே ஸ்டேடஸ், கொமெண்ட் போடுவானே துரோகி....
 அவனை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறன்.

ஃபேஸ்புல நாங்க என்ன டைம் பாசுக்கா இருக்குறம். இல்ல அதையே தொழிலாப் பண்றம். வேற தொழில் இல்லடாக் கண்ணா

நண்பன் : நெஞ்சத் தொட்டு சொல்லுடா இதெல்லாம் டைம் வேஸ்ட்னு ஒனக்குத் தெரியல? தப்பில்ல...?

நான் : இல்லதப்பில்லடா நாம பண்ற கூத்தப் பார்த்து நாலு பேர் லைக்குறாங்கண்ணா எதுவுமே தப்பில்ல

 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவள் ஓஃப்லைன் போனாளே

அவள் பறந்து போனாளே, என்னை மறந்து போனாளே..

..................Its My Remix........

அவள் ஓஃப்லைன் போனாளே ,என்னை மறந்து போனாளே
நான் ஒன்லைன் வந்ததும் வேண்டுமென்றே (அவள்) ஓஃப்லைன் போனாளே

என் ஃபோட்டோக்கு லைக்கில்லை
என் போஸ்டுக்கு கொமெண்ட் இல்லை
என்னைக் கணக்கில் எடுக்கவில்லை
என் காதலை ஏற்கவில்லை (2)

fb இல் வேறு ஒப்சனில்லை
என் பிகர் (எனக்கு) ஒன்லைனில்லை
என்னோடு சற்றுக்கு அவளில்லை
யாரும் ஆறுதல் சொல்லவில்லை (2)

அவள் ஓஃப்லைன் போனாளே, என்னை மறந்து போனாளே
நான் ஒன்லைன் வந்ததும் வேண்டுமென்றே (அவள்) ஓஃப்லைன் போனாளே

என் சற்றினை ஒன்லைன் வைத்தேன்
அவள் வரும் வரை காத்திருந்தேன்
அவள் (ஒன்லைன்) வந்ததும் பார்த்தாளே
எனக்கு ஓஃப்லைன் போட்டாலே (2)

அவள் என்னை ஒதுக்கி வைத்தாள்
நான் அவளை ஒதுக்கமாட்டேன்
என் உயிரே அவள் அல்லவா
ஏனோ ஓஃப்லைன் போட்டுச் சென்றால்.......... (2)

அவள் ஓஃப்லைன் போனாளே என்னை மறந்து போனாளே
நான் ஒன்லைன் வந்ததும் வேண்டுமென்றே (அவள்) ஓஃப்லைன் போனாளே

(ரீமிக்ஸ் கவிஞர் : சுஹைல் )

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயமும் வடிவேலு காமெடியும்.....


பூச்சியத்தால் பெருக்குதல் என்று கணிதத்தில் ஒன்று உண்டு. அதாவது நாம என்னதான் கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல், சமன்பாடுகள் என போட்டு பக்கம் பக்கமா கணக்குச் செய்தாலும் ஏதாவது ஒரு பக்கத்தால் வரும் பூச்சியம் அதனோடு பெருக்குப்பட்டு விடை பூச்சியமாகிடும்.  

அது போலத்தான் நாம என்னதான் பில்டப்பு பண்ணி பக்கம் பக்கமா வசனம் பேசினாலும் எவனாவது ஒருத்தன் ஒத்த சொல்லால நம்மள நோஸ்கட் பண்ணிட்டு போயிடுவான் இதைத்தான் பூச்சியத்தால் பெருக்குதல் என்று சொல்லுவோம்.

இதேபோலத்தான் நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகையை முன்னிட்டு அரசு பல தயாரிப்புகள் ஏற்பாடுகள் செய்திருந்தது. அமைச்சர்கள் எம்.பி கள் என பலராலும் பல விடயங்கள் நவநீதம் பிள்ளைக்கு கூறப்பட்டது. எப்பாகத்திற்கும் சென்று அவர் யாரையும் சந்திக்க வசதிசெய்து கொடுக்கப்பட்டது. இந்த ஐஸ்வைத்தல்கள் எல்லாம் அரசாங்கத்தின் மீது அவருக்கு நன் மதிப்பு வரவேண்டும் அரசு பற்றி நல்ல கருத்துக்களை அவர் உலகுக்கு சொல்லவேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டது. ஆனால் இதையெல்லாம் ஒரு வாரமாக அனுபவித்துவிட்டு/அவதானித்துவிட்டு; போகும் போது அம்மையார் இலங்கையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என்ற அறிக்கையை விடுத்துவிட்டு சென்றுவிட்டார். இது இலங்கை அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஐஸ்வைத்தல்களையும் பூச்சியத்தால் பெருக்கியதாகிவிட்டது.

இவற்றையெல்லாம் நினைக்கும் போது வடிவேலுவின் இந்தக் காமெடிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=tPqWjIagNcE

தோசை எப்படி செய்யவேண்டும் என்ற ஒரு பெரிய விரிவுரையே வடிவேலு வெயிட்டருக்கு கொடுப்பார் எல்லாத்தையும் ஆர்வமாகக் கேட்ட வெயிட்டர் மிகச் சாதாரணமாக அண்ணனுக்கு ஒரு தோசைனு சொல்லிட்டு போவார். இங்கு வடிவேலு - இலங்கை அரசு
வெயிட்டர்
- நவநீதம் பிள்ளை
தோசை மாஸ்டர்
- சர்வதேசம் / .நா

அரசியல் ஆய்வாளர் : அஹமட் சுஹைல் (நாந்தாங்கோ..........)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS