RSS

நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயமும் வடிவேலு காமெடியும்.....


பூச்சியத்தால் பெருக்குதல் என்று கணிதத்தில் ஒன்று உண்டு. அதாவது நாம என்னதான் கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல், சமன்பாடுகள் என போட்டு பக்கம் பக்கமா கணக்குச் செய்தாலும் ஏதாவது ஒரு பக்கத்தால் வரும் பூச்சியம் அதனோடு பெருக்குப்பட்டு விடை பூச்சியமாகிடும்.  

அது போலத்தான் நாம என்னதான் பில்டப்பு பண்ணி பக்கம் பக்கமா வசனம் பேசினாலும் எவனாவது ஒருத்தன் ஒத்த சொல்லால நம்மள நோஸ்கட் பண்ணிட்டு போயிடுவான் இதைத்தான் பூச்சியத்தால் பெருக்குதல் என்று சொல்லுவோம்.

இதேபோலத்தான் நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகையை முன்னிட்டு அரசு பல தயாரிப்புகள் ஏற்பாடுகள் செய்திருந்தது. அமைச்சர்கள் எம்.பி கள் என பலராலும் பல விடயங்கள் நவநீதம் பிள்ளைக்கு கூறப்பட்டது. எப்பாகத்திற்கும் சென்று அவர் யாரையும் சந்திக்க வசதிசெய்து கொடுக்கப்பட்டது. இந்த ஐஸ்வைத்தல்கள் எல்லாம் அரசாங்கத்தின் மீது அவருக்கு நன் மதிப்பு வரவேண்டும் அரசு பற்றி நல்ல கருத்துக்களை அவர் உலகுக்கு சொல்லவேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டது. ஆனால் இதையெல்லாம் ஒரு வாரமாக அனுபவித்துவிட்டு/அவதானித்துவிட்டு; போகும் போது அம்மையார் இலங்கையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என்ற அறிக்கையை விடுத்துவிட்டு சென்றுவிட்டார். இது இலங்கை அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஐஸ்வைத்தல்களையும் பூச்சியத்தால் பெருக்கியதாகிவிட்டது.

இவற்றையெல்லாம் நினைக்கும் போது வடிவேலுவின் இந்தக் காமெடிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=tPqWjIagNcE

தோசை எப்படி செய்யவேண்டும் என்ற ஒரு பெரிய விரிவுரையே வடிவேலு வெயிட்டருக்கு கொடுப்பார் எல்லாத்தையும் ஆர்வமாகக் கேட்ட வெயிட்டர் மிகச் சாதாரணமாக அண்ணனுக்கு ஒரு தோசைனு சொல்லிட்டு போவார். இங்கு வடிவேலு - இலங்கை அரசு
வெயிட்டர்
- நவநீதம் பிள்ளை
தோசை மாஸ்டர்
- சர்வதேசம் / .நா

அரசியல் ஆய்வாளர் : அஹமட் சுஹைல் (நாந்தாங்கோ..........)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

ஆத்மா சொன்னது…

நல்லாச் சொல்லியிருக்கிறீங்க போங்க,,,

:))))