RSS

புலியோட்டம்



    ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் சக்தி fm அறிவிப்பாளராக கடமையாற்றியிருக்கின்றேன். அந்த காலகட்டத்தில்தான் பலரது அறிமுகங்கள் எனக்குக் கிடைத்தன. என்னையும் பலர் அறிந்துகொள்ள சக்தி fm பெரிதும் உதவியது. குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் எம்மூரவர்கள் எம் நாட்டவர்களுடன் அறிமுகம்/நட்பும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் அறிமுகம்/நட்பும் சக்தி fm வாயிலாகத்தான் கிடைத்ததென்றால் அதுமிகையாகாது. சக்தி fm இற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


                                                         ****  ****

    சக்தி fm இல் நள்ளிரவு ராத்திரியின் சொந்தக் காரன் நிகழ்ச்சி செய்ய ஆரம்பித்து 2வது நாள். விக்கி அண்ணாவுடன் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தேன்.  நள்ளிரவு இரண்டு மணி இருக்கும் பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

    விக்கி : தம்பி 3 மணிவரை calls attend பண்ணுவம் அதுக்கு பிறகு புலியோட்டம் ஓடுவம்
    (எனக்கு புரியவில்லை.)

    நான் : என்ன அண்ணா?
    விக்கி : 3 மணிக்குப் பிறகு புலியோட்டம் போட்டால் சரி.

    எனக்கு புதியதாய் இருந்தது. இவர் என்ன சொல்கிறார். மீண்டும் கேட்க தயக்கம்; நான் வேறு புதிது; திரும்பத் திரும்ப கேட்டால் கோபப்பட்டுவிடுவாரோ என்ற தயக்கம்.

    ஆனால் அது என்ன என்று அறிந்துகொள்ள ஆர்வம். ”எதைச் சொல்லியிருப்பார்.  ஒரு வேளை செம குத்துப் பாடல்கள்/Fast beat பாடல்கள் போடுவம் என்று சொல்றாரோ…? இருக்காதே இப்பவே நாக்கு மூக்கா ரக குத்துப்பாடல்கள் தானே போட்டுட்டு இருக்கம். இதைவிடக் குத்து/fast beat கு எங்கே போறது. என்னவா இருக்கும்?” என்று சந்தேகத்துடனே நிகழ்ச்சியைத் தொடர்ந்தேன். அந்த நேரம் செல்லச் செல்ல அந்த சந்தேகமும் மறந்துவிட்டது

    பின்னாளில் நான் தனியாக நிகழ்ச்சி செய்யும்போதுதான் புலியோட்டமென்றால் என்னவென்று நானாகவே தெரிந்துகொண்டேன்.

    அதாவது வானொலிகளில் பாடல்களை ஒலிபரப்ப பயன்படுத்தும் மென்பொருளில் 3 options இருக்கிறன.

  1. Manual Play : ஒவ்வொரு பாடலையும் நாமாகவே paly பண்ணவேண்டும்
  2. Semi Auto : இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து தானாகா ஒலிக்கும் 3வது பாடலை நாம் play பண்ண வேண்டும்
  3. Fully Auto : play list இல் உள்ள அனைத்துப் பாடல்களும் ஜிங்கிள்களும் ஒன்றன் பின் ஒன்றாய் Auto ஆக Play ஆகும்.

  4. பொதுவாக நள்ளிரவு நிகழ்ச்சி செய்யும்போது நள்ளிரவு 3 மணிக்குப் பின்னர் ”Fully Auto”  போட்டுவிட்டு அறிவிப்பாளர் ஓய்வெடுப்பார்/தூங்குவார்.

    அந்த ”Fully Auto”  தான் புலி ஓட்டம்ஆகியிருக்கிறது அவரது பாணியில்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS