RSS

புலியோட்டம்  ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் சக்தி fm அறிவிப்பாளராக கடமையாற்றியிருக்கின்றேன். அந்த காலகட்டத்தில்தான் பலரது அறிமுகங்கள் எனக்குக் கிடைத்தன. என்னையும் பலர் அறிந்துகொள்ள சக்தி fm பெரிதும் உதவியது. குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் எம்மூரவர்கள் எம் நாட்டவர்களுடன் அறிமுகம்/நட்பும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் அறிமுகம்/நட்பும் சக்தி fm வாயிலாகத்தான் கிடைத்ததென்றால் அதுமிகையாகாது. சக்தி fm இற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


                                                       ****  ****

  சக்தி fm இல் நள்ளிரவு ராத்திரியின் சொந்தக் காரன் நிகழ்ச்சி செய்ய ஆரம்பித்து 2வது நாள். விக்கி அண்ணாவுடன் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தேன்.  நள்ளிரவு இரண்டு மணி இருக்கும் பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

  விக்கி : தம்பி 3 மணிவரை calls attend பண்ணுவம் அதுக்கு பிறகு புலியோட்டம் ஓடுவம்
  (எனக்கு புரியவில்லை.)

  நான் : என்ன அண்ணா?
  விக்கி : 3 மணிக்குப் பிறகு புலியோட்டம் போட்டால் சரி.

  எனக்கு புதியதாய் இருந்தது. இவர் என்ன சொல்கிறார். மீண்டும் கேட்க தயக்கம்; நான் வேறு புதிது; திரும்பத் திரும்ப கேட்டால் கோபப்பட்டுவிடுவாரோ என்ற தயக்கம்.

  ஆனால் அது என்ன என்று அறிந்துகொள்ள ஆர்வம். ”எதைச் சொல்லியிருப்பார்.  ஒரு வேளை செம குத்துப் பாடல்கள்/Fast beat பாடல்கள் போடுவம் என்று சொல்றாரோ…? இருக்காதே இப்பவே நாக்கு மூக்கா ரக குத்துப்பாடல்கள் தானே போட்டுட்டு இருக்கம். இதைவிடக் குத்து/fast beat கு எங்கே போறது. என்னவா இருக்கும்?” என்று சந்தேகத்துடனே நிகழ்ச்சியைத் தொடர்ந்தேன். அந்த நேரம் செல்லச் செல்ல அந்த சந்தேகமும் மறந்துவிட்டது

  பின்னாளில் நான் தனியாக நிகழ்ச்சி செய்யும்போதுதான் புலியோட்டமென்றால் என்னவென்று நானாகவே தெரிந்துகொண்டேன்.

  அதாவது வானொலிகளில் பாடல்களை ஒலிபரப்ப பயன்படுத்தும் மென்பொருளில் 3 options இருக்கிறன.

 1. Manual Play : ஒவ்வொரு பாடலையும் நாமாகவே paly பண்ணவேண்டும்
 2. Semi Auto : இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து தானாகா ஒலிக்கும் 3வது பாடலை நாம் play பண்ண வேண்டும்
 3. Fully Auto : play list இல் உள்ள அனைத்துப் பாடல்களும் ஜிங்கிள்களும் ஒன்றன் பின் ஒன்றாய் Auto ஆக Play ஆகும்.

 4. பொதுவாக நள்ளிரவு நிகழ்ச்சி செய்யும்போது நள்ளிரவு 3 மணிக்குப் பின்னர் ”Fully Auto”  போட்டுவிட்டு அறிவிப்பாளர் ஓய்வெடுப்பார்/தூங்குவார்.

  அந்த ”Fully Auto”  தான் புலி ஓட்டம்ஆகியிருக்கிறது அவரது பாணியில்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

கற்றுக்கொண்ட பாடங்களும் பெற்றுக்கொண்ட படிப்பினைகளும்


இலங்கை கிரிக்கட் வரலாற்றின் மிக மோசமான தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இலங்கை வீரர்களினதும் ரசிகர்களினதும் மனதை உடைத்துவிட்ட மிக மோசமான தொடர் இது.

உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பமாக 3 மாதங்களே உள்ள நிலையில் இந்தத் தொடர் தோல்வி இலங்கை வீரர்களின் உளநிலையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமென்பது மறுக்க முடியாத உண்மை.

பல எதிர்வினைகளை இந்தத் தொடர் தோற்றுவிற்றிருந்தாலும் அவற்றை எமக்குச் சாதகமாக்கிப் பார்த்தோமானால்

இந்தத் தொடர் இலங்கைத் தெரிவாளர்களை ஆழமாக சிந்திக்க வைத்திருக்கிறது. இதன் மூலம் எழுந்தமானமான அணித் தெரிவு இல்லாமல் மிக நுணுக்கமாக ஆராய்ந்து மிகச் சரியான அணியினை தெரிவு செய்ய வேண்டிய தேவையினை அது அவர்களுக்கு உணர்த்தியுள்ளது.

இங்கிலாந்து தொடர் வெற்றி ஆசியக் கிண்ண, T20 உலகக் கிண்ண வெற்றிகள் என்று இந்த வருடத்தில் பெறப்பட்ட வெற்றிகளால் இலங்கை அணி வீரர்களுக்குள் ஏற்பட்டிருந்து over confident இனை பூசியமாக்கிவிட்டிருக்கிறது. எனவே இது அவர்களை தீவிரமான பயிற்சி மற்றும் அதீத ஈடுபாட்டோடு விளையாடுவதற்கு உந்தும். (இதனையும் சாதகமாகக் கொள்ளலாம்)

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்களை அவர்கள் முன்னதாக தாம் தீர்மானித்துவைத்திருக்கும் உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சி திட்டத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தி இன்னும் நுட்பங்களுடன் கூடிய அதிக பயிற்சிகளினை வழங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டுள்ளது.

இலங்கை அணியினர் தமது பெட்டிங் பவர் பிளே ஓவர்களை எவ்வாறு வினைத்திறனாக பயன்படுத்துவது என்பதிலும் கவனம் செலுத்தவேண்டிய தேவையினை இத்தொடர் உருவாக்கியிருக்கிறது.

இந்தத் தொடர் முழுவதும் இலங்கையின் பந்துவீச்சு, களத்தடுப்பு, துடுப்பாட்டம் என அனைத்து துறைகளும் அ School boy cricket எனும் அளவுக்கு பாடசாலை மட்டத்துக்கு ஒப்பானதாகவே இருந்தது. சர்வதேச தரத்தில் இருக்கவில்லை. எனவே இதில் அதிக கவனம் செழுத்தவேண்டிய தேவையை அணி வீரர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் இந்தொடர் உணர்த்தியுள்ளது.

இந்தத் தொடர் முழுவதும் மெத்யூஸ் தனது வழமையான ஃபோர்மில் இருப்பதையும் டில்சான்,மஹெல ஆகியோர் சராசரியான ஃபோர்மில் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது. கிடைத்த இரு போட்டிகளிலும் அரைச் சதங்களைப் பெற்றதன் மூலம் திரிமான்ன தனது இடத்தினை சிறப்பான முறையில் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இவர்கள் தவிர சங்கக்கார உட்பட யாருமே இந்தத் தொடரில் சிறப்பாகச் செயட்படவில்லை. எனவே தெரிவாளர்களுக்கு தெரிவுக்கான பரப்பு பாரிய அளவில் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

டில்சானுக்கு சோடியாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக யாரினைக் களமிறக்குவது என்ற பாரியதோர் சிக்கல் நிலை தற்போது உருவாகியுள்ளது. காரணம் குசால் பெரேரா, தரங்க ஆகிய இருவரும் Out of form இல் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.   முதல் ஓரிரு ஓவர்களுக்குள்ளே முதலாவது விக்கட் வீழ்த்தப்படுவதால் ஏனைய வீரர்களுக்கு அது பாரிய அழுத்தத்தினை கொடுப்பதோடு ஓட்ட வேகத்திலும் பாதிப்பினை ஏற்படுத்திவிடுகிறது.

 எனவே என்னைப் பொறுத்தவரையில் அனுபவம் வாய்ந்த மஹெல ஜயவர்த்தன  ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக டில்சானுடன் களமிறங்க வேண்டும்.(இதுவே மஹெலவின் விருப்பமும் கூட) மத்திய வரிசையில் தரங்கவை களமிறக்குவதன் மூலம் வலுவான ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியும் மத்திய வரிசையில் சங்கா, மெத்யூஸ், திரிமான்ன, தரங்க போன்ற வீரர்களும் இருப்பதன் காரணமாக துடுப்பாட்டம் வலுப்பெறும்.

உலகக் கிண்ண இறுதி அணியில் மெத்யூஸ், மஹெல, சங்கா, டில்சான், திரிமான்ன, ஹெரத், சமிந்த இரங்க, தம்மிக பிரசாத்,(மலிங்க - பூரண குணமடைந்தால்) ஆகியோர்கள் உறுதியாகியுள்ள நிலையில் ஏனைய 7 பேரினை தெரிவு செய்யவேண்டிய தேவைதான் காணப்படுகின்றது என்பது எனது கணிப்பு. மஹ்ரூஃப், டில்ஹார ஃபெர்னாண்டோ, டில்சான் முனவீர, ஜீவன் மெண்டிஸ் போன்றவர்களையும் அணியில் மீண்டும் இணைத்துக்கொள்ள தெரிவாளர்கள் ஆர்வம் காட்டவேண்டும்.

சராசரியாக 140 km/h வேகத்தில் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்களையும்
முரளி,ஹெரத், சசித்ர போன்று விக்கட்டுக்களைக் கைப்பற்றும் சுழல் பந்துவீச்சாளர்களையும்.  உருவாக்க வேண்டிய அவசிய தேவையினை இலங்கை கிரிக்கட் இந்தத் தொடர் மூலம் உணர்ந்திருக்கும்.

இலங்கை அணியில் மெத்யூஸ், மஹெல, திசர இவர்களைத் தவிர
ஏனைய வீரர்களுக்கு ஆறு ஓட்டங்களை விளாசும் ஆற்றல் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது, டில்சான், சங்கா ஆகியோரின் துடுப்பிலிருந்தும் ஆறு ஓட்டங்கள் கிடைப்பது மிக அரிதான ஒன்றாகவே இருக்கின்றது. எனவே ஆறு ஓட்டங்களை அதிரடியாக விளாசும் ஆற்றலையும் இலங்கை வீரர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க இந்தத் தொடரில் எமக்குக் கிடைத்த ஒரேயொரு சந்தோசம் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பெற்றுக்கொண்ட முதலாவது சதம். அதுவும் அதிரடியான சதம்.
 பல சதங்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் கடைநிலை வீரர்கள் விக்கட்டுகளை பறிகொடுத்ததாலும் தனது தனிப்பட்ட சாதனையைவிட அணியினை முற்படுத்தியதனாலும் மெத்யூசின் பல சதங்கள் பெறும் வாய்ப்பு கை நழுவிப் போனது.
 90 என்ற இலக்கில் இருந்த கண்டம் மெத்யூசிற்கு இப்போது நீங்கியுள்ளது. இனி மெத்யூஸ் பல சதங்கள், சாதனைகளைச் சுவைப்பார் என நம்பலாம்.

முதலாவது சதத்திற்கும் இவ்வாண்டில் 1000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற பெருமைக்கும் மற்றும் சகல துறை ஆட்டக்காரர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்றமைக்குமாகச் சேர்த்து வாழ்த்துக்கள் Anjiiii…..

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

அவர்கள் அடிக்கவில்லை இவர்கள் கொடுத்தார்கள்.

வாற bats man எல்லாம் 100 அடிக்குறானுங்க.
Bowlers எல்லாம் விக்கட் எடுக்குறானுங்க… எல்லாரும் அடிச்சு பழகிக்குறானுங்க.
என்ன ஆச்சு நம்ம அணிக்கு.
உலகக் கிண்ணத் தொடருக்கு முதல் இலங்கை அணியினை முற்றாக மறுசீரமைக்க வேண்டியது மிக முக்கிய தேவை.
டில்ஹார ஃபெர்னாண்டோ, மஹ்ரூஃப், ஜீவன் மெண்டிஸ் போன்றவர்கள் மீண்டும் அணிக்கு வரவேண்டும்.
*****************************************

1996ம் ஆண்டு முதல் நான் பார்த்துவரும் இலங்கை கிரிக்கட் அணியின் மிகக் கேவலமான தொடர் இது. அதிலும் மிகக் கேவலமாக ஆடிய போட்டி இன்றைய போட்டி. இந்தத் தொடர் முழுதும் இந்தியர்கள் சிறப்பாக ஆடினார்கள் என்பதை விட இலங்கை அணியினர் ஓட்டங்களையும் விக்கட்டுக்களையும் வாரி வழங்கினர் என்பதே உண்மை.

பந்துவீச்சு எதிரணியினரை மிரட்டவில்லை.
துடுப்பாட்டத்தில் அதிரடி இல்லை.
களத்தடுப்பில் சுறு சுறுப்பு இல்லை.
ஆக மொத்தத்தில் அவர்கள் அடிக்கவில்லை இவர்கள் கொடுத்தார்கள்.

இந்த தொடர் முழுவதும் 100 அடித்த இந்திய வீரர்கள் அனைவருக்கும் இலங்கை வீரர்கள் 2, 3 வாய்புகள் வழங்கியிருந்தனர். ஏகப்பட்ட பிடிகளைத் தவற விட்டனர். இன்றைய் போட்டியில் கூட ரோஹித் சர்மா 4 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை இலகுவான பிடி ஒன்றினை திசர தவற விட்டதன் மூலம் இலக்கு 404 ஆனது.

இன்று ரோஹித் சர்மாவின் 4 பிடியெடுப்பு வாய்புகளைக் கோட்டை விட்டனர். இப்படி விட்டால் 200 என்ன 300 அடிப்பதுகூட பெரியவிடையமல்ல.(ரோஹித் சர்மாவின் திறமையினை குறைத்துமதிப்பிடவில்லை ஆனால் இதே ரோஹித் சர்மா அவுஸ்திரேலிய, இங்கிலாந்து மண்ணில் 100 ஓட்டங்கள் பெறட்டும் அவர் திறமையானவர் என ஒத்துக்கொள்கின்றேன்.)


இந்த தொடரில் இலங்கையின் மோசமான ஆட்டத்திற்கு இலங்கை கிரிக்கட் நிருவாகமே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். அவசரமான தொடருக்கு பணத்தை வாங்கொக்கிக்கொண்டு ஒத்துக்கொண்ட கிரிக்கட் நிருவாகம் உண்மையிலேயே தொடருக்காக மட்டும் பணத்தைப் பெற்றுக்கொண்டதா இல்லை தொடரினை மொத்தமாக தாரைவார்ப்பதற்கும் சேர்த்து பெற்றுக்கொண்டனரா என எண்ணத்தோணுது.

இந்தத் தொடருக்கு ஒத்துக்கொண்டதன் மூலம் இலங்கை கிரிக்கட் நிருவாகமானது…………..

இலங்கை கிரிக்கட்டுக்கு கேவலாமான வரலாற்றுப் பதிவினை உருவாக்கி விட்டனர்.
சிரேஸ்ட வீரர்களின் முறுகளையும் அதிருப்தியையும் சம்பாதித்துக்கொண்டனர்.
சிறப்பான தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.
வெற்றிகரமான ஆண்டாக இருந்த இவ்வாண்டை படுதோல்வியோடு முடித்து வைத்துவிட்டனர்.
இலங்கை வீரர்களினதும் ரசிகர்களினதும் உளவியலில் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டனர்.


இந்தத் தொடர் முழுவதும் இலங்கை அணியினரின் ஆட்டம் சிம்பாப்வே கென்யா அணியினரின் ஆட்டத்தை விடவும் படுமோசமாக இருக்கிறது.
நுவன் குலசேகர, அஜந்த மெண்டிஸ் ஆகியவர்களின் சரக்குத் தீர்ந்தாச்சு இனியும் அவர்கள் அணிக்கு தேவையில்லை. குசல் பெரேரா ??????
இலங்கை திருநாட்டில் குறைந்தபட்சம் 140km/h வேகத்தில் பந்துவீசும் ஒருவர் கூடவா இன்னும் பிறக்கவில்லை…?

பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு அனைத்திலும் இலங்கை அணி இந்தத் தொடர் முழுவதும் படு மோசம். அணி வீரர்கள் சோர்ந்த நிலையில் ஆடுகின்றனர். வழமையான இலங்கை அணியின் தரத்தில் 10% கூட கிடையாது.

மார்வன், வாஸ் இருவரின் பயிற்றுவிப்பும் கேள்விக்குறியாகி நிற்கின்றது. சமகாலத்தில் விளையாடிய வீரர்களை பயிற்றுவிப்பாளர்களாக அணியில் வைத்திருப்பது அணியின் திறனில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் அது சிறந்ததொரு வெளியீட்டினை(Out put) தராது என்பதும் எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அதுவே இப்பொழுது நடைபெறுகிறது. இலங்கை அணியினை உலக தரத்திற்குக் கொண்டுவருவதற்கான ஆற்றல், நுட்பம் மார்வனிடம் இருப்பதாக நான் நம்பவில்லை.


இந்தத் தொடர் இலங்கை கிரிக்கட்டிற்கும், கிரிக்கட் நிருவாகத்திற்கும் பல படிப்பினைகளைத் தந்திருப்பதோடு உடனடியானதும் அதிரடியானதுமான பல மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய நிலைமையினை வலிந்து உருவாக்கிவிட்டிருக்கின்றது என்பதே யதார்த்தம்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

ஃபேஸ்புக் சிட்டிசன்

மைலோர்ட் மார்க் அவர்களே ஃபேஸ்புக்ல நான் போடுற ஒவ்வொரு போஸ்ட்டும் என் இருதயக் கூட்டுக்குள்ள இன்னும் பத்திரமா இருக்கு. கொந்தளிக்குற கடல் எனக்கு வெளியில இல்ல உள்ள இருக்கு.

இந்த நீதிமன்றத்தில் ஒலிக்கும் என் குரல் பேஸ்புக்கில் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் கடைசிக் கதறல்.
 என்னுடைய அழுகை பேஸ்புக்கில் லைக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் அழுகை.
என்னுடைய ஆத்திரம் நல்ல ஸ்டேடஸ் போட்டும் லைக் கிடைக்காத ஒரு சமுதாயத்தின் ஆத்திரம்.

நான் தனி ஆள் இல்ல. நல்ல நல்ல ஸ்டேடஸ் போட்டுவிட்டு லைக் கிடைக்காதா கொமெண்ட் கிடைக்காதா என்று தினம் தினம் ஏங்கும் அத்தனைபேரினதும் ஆத்மா.

ஒரு பொண்ணு ஹாய் நு சொன்னா லைக் போடுவாங்க
Im sick னு போட்டா take care dear னு பாசத்த பொழிஞ்சிருப்பாங்க
ஆனா நாங்க I met an accident, im injured னு போட்டா என்னானு கேக்க ஒரு நாதி இல்ல.
இத தட்டிக் கேட்கதான் நான் இங்க போராடிட்டு இருக்கன்.

மார்க் : சரி அவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்…? சொல்லுங்கள்..?

கணம் நீதிபதி மார்க் அவர்களே என் ஸ்டேடஸ்க்கு லைக் போடதவர்கள், கொமெண்ட் பண்ணாதவர்கள் ஃபேஸ்புக் பாவிப்பதில் இருந்து இடைநிறுத்தப்படவேண்டும்.
இவர்களின் ஃபோட்டோ அல்பங்கள், போஸ்டுகள் அனைத்தும் தடைசெய்யப்படவேண்டும்.. ஃபேஸ்புக் பாவிக்க இவர்கள் அருகதையற்றவர்கள் என்று சொல்லி இவர்களின் பேஸ்புக் கணக்குகள் தடைசெய்யப்படவேண்டும்.

இவர்களுடைய மனைவி, காதலி,தாய்,தகப்பன், மாமன், மாமி, மகன், மகள்,
சித்தப்பன், பெரியப்பன், பேரன், பேத்தி
இவர்களுக்கு பெண் கொடுத்தோர். பெண் எடுத்தோர், பிள்ளைக்குப் பெண் கொடுத்தோர், அவர்களுக்கு பெண் கொடுத்தோர் என்று அனைவரின் பேஸ்புக் அக்கெளண்டுகளும் சேர்த்து தடைசெய்யப்படவேண்டும்.
இவர்களது ட்விட்டர் கணக்குகளும் தடைசெய்யப்படவேண்டும்.

இது என் ஸ்டேடஸ்க்கு லைக் அல்லது கொமெண்ட் பண்ணாத கூட்டத்திற்கு ஒரு எச்சரிக்கை....
இது உடனே நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இந்த தண்டனைகள் உடனே நிறைவேற்றப்படவேண்டும்.

The fb accounts of the all the acquits and the relatives should be canceled without mercy

- அஹமட் சுஹைல் -

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இலங்கை கிரிக்கட் தந்த மற்றுமொரு கிரிக்கட் ஜாம்பவான் ”மஹெல”

தெனகமகே ப்ரபோத் மஹெல டீ சில்வா ஜயவர்த்தன என்ற முழுப்பெயரைக் கொண்ட மஹெல ஜயவர்த்தன (மைய்யா)1977 மே 27 ல் கொழும்பில் பிறந்தவர்.
இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் மூத்தவர்.வலது கை துடுப்பாட்ட வீரர்


இந்த மகத்தான வீரன் தனது 17 வருட டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் அடைந்த அடைவுகளும் பெற்றுக்கொண்ட சாதனைகளும் அளப்பரியவை.

 சிறந்த துடுப்பாட்ட வீரர், கனவான், சிறந்த களத்தடுப்பாளர், சிறந்த ஸ்லிப் ஃபீல்டர். கருத்துக்களை நேரடியாகப் பேசும் நேர்மையானவர். சிறந்த அணித் தலைவர். நுட்பங்களுடன் கூடிய சிறந்த கிரிக்கட் அறிவினைக் கொண்டவர். சிறந்த Team Player. இலங்கை கிரிக்கட்டிற்காகவும் அதன் வெற்றிக்காகவும் தனது அனைத்தையும் கொடுத்தவர்.மனித நேயமிக்கவர்…. இப்படி மஹெலவின் பண்புகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட மஹெல தனது லாவகமான மற்றும் ஸ்டைலான துடுப்பாட்டத்தின் காரணமாக இலங்கையிலும் சர்வதேச ரீதியில் பலலட்சக்கணக்கான கிரிக்கட் ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டவர்.அவரது cover-drive,  flick, cuts & late cut என்பன அற்புதமானவை.

இலங்கை கிரிக்கட் மஹெல சங்காவின் தலைமைத்துவத்தினை அடுத்து தலைமைத்துவ இடைவெளியோடு தடுமாறியபோது இலங்கை அணிக்கு ஒரு  ஊன்றுகோலாக  அணித்தலைமையை மீண்டும் ஏற்று அணியை வழிநடத்தியமை மஹெலவின் அணி மீதான அர்ப்பணிப்புக் சான்று. பொதுவாக பல முன்னாள் தலைவர்கள் தலைமைப் பதவியிலிருந்து விலகியபின் அணியில் குறைந்த ஈடுப்பாட்டுடன் விளையாடுவதை பலதடவைகளில் அவதானித்திருப்போம். ஆனால் மஹெல அவ்வாறல்லாமல் தலைமைத்துவத்திலிருந்து விலகிய பின்னரும் அணியின் வெற்றிக்காக புதிய தலைவர்களோடு அர்ப்பணிப்புடன் இணைந்து  செயற்பட்டமை, தனது அனுபவம் நுட்பம் என்பவற்றை  அவர்களோடு பகிர்ந்து அணியின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடியமை ஈகோவினையும் தாண்டிய ஒரு ஈடுபாடு, ஒரு அர்ப்பணிப்பு மஹெலவுக்கு அணி மீதிருந்தமையை பலராலும் உணர்ந்துகொள்ள முடியும்.

நான் அடிக்கடி சொல்வதுபோல் அர்ஜுனவின் தலைமைக்குப் பிறகு இலங்கை அணிக்குக் கிடைத்த மிக அற்புதமான அர்ப்பணிப்பான தலைவர் மஹெல என்றால் அது மிகையாகாது.

இன்று வாரத்தின் முதல் நாள் திங்கட் கிழமை வேலை நாள் என்றிருந்தும் மைதானம் நிறைந்த ரசிகர்களின் வருகை மஹெலவுக்கு சொல்லியிருக்கும் அவர் எப்படிப்பட்ட சேவையை இலங்கைக் கிரிக்கட்டுக்கு வழங்கியிருக்கின்றார். அவரை எந்தளவுக்கு மக்கள் நேசித்தார்கள் என்று.

ஒரு அணியாக இலங்கை வீரர்கள் இந்தத் தொடரை வென்று மஹெலவுக்கு சமர்ப்பித்திருந்தனர். அரங்கு நிறைந்த ரசிகர்கள் மைதானத்திலும் ஏனையவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் தமது கெளரவத்தினை நமது சாதனை வீரனுக்கு கொடுத்திருந்தனர்.
இதைவிட எப்படி ஒரு மாவீரனுக்கு அணியினாலும் ரசிகர்களாளும் கெளரவத்தினைக்கொடுத்திட முடியும்?? 
இந்த வெற்றி, ரசிகர்களின் அன்பு நிச்சயம் மஹெலவுக்கு பிரியாவிடையின் வலியை இயலுமானவரை குறைத்திருக்கும்.

மஹெலவின் குடும்ப மற்றும் கிரிக்கட் வாழ்க்கை.
இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூத்தவரான மஹெல தனது கிரிக்கட்டின் ஆரம்ப காலகட்டத்தில் தனது தம்பியினை இழந்தார்.  மஹெலவின் தம்பி தனது 16வது வயதில் மூளைப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இந்த இறப்பு மஹெலவின் தனிப்பட்ட மற்றும் கிரிக்கட் வாழ்கையைப் பெரிதும் பாதித்தது. இந்த இழப்பு; புற்றுநோய்க்கு எதிராக போராட மஹெலவைத் தூண்டியது. நாட்டில் முன்னெடுக்கப்பட்ட HOPE cancer project ற்கு தனது அதியுச்ச பங்களிப்பினை வழங்கிவருகிறார். அத்தோடு தனது சகோதரனின் நினைவாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் 750 படுக்கைகளைக் கொண்ட புற்று நோய் பிரிவினை உருவாக்கிவருகிறார். இதற்கு ஏனைய இலங்கை கிரிக்கட் வீரர்களும் பங்களிப்பு செய்துவருகின்றனர்.

ஒரு குழந்தையின் தந்தையான மஹெலவுக்கு அவரது மனைவி க்ரிஸ்டினா மற்றும் மஹெலவின் பெற்றோர் ஆரம்பம் தொட்டே பக்கபலமாக இருந்து வருகின்றமை உலகறிந்தது.பல கிரிக்கட் ஜாம்பவாங்களை எமக்குத் தந்த நாளந்தாக் கல்லூரியின் பழைய மாணவர்.

1997 ஆகஸ்ட்டில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது தனது டெஸ்ட் அறிமுகத்தை மஹெல மேற்கொண்டார். 
இவர் இலங்கை அணியின் 69வது டெஸ்ட் கிரிக்கட் வீரராக தனது அறிமுகத்தினை மேற்கொண்டார்.

மகெல அறிமுகமான இப்போட்டியில்தான் இலங்கை அணி டெஸ் போட்டிகளில் ஒரு இனிங்சில் ஒரு அணி பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களான 952/6 என்ற உலகசாதனையை நிகழ்த்தியிருந்தது. இப்போட்டியில் மகெல 66 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

மஹெலவின் டெஸ்ட் சாதனைகள் :

இதுவரையில் 149 டெஸ்ட் போட்டிகளில் 250 இனிங்ஸ்களில் விளையாடியுள்ள மஹெல 34 சதங்கள் 50 அரைச் சதங்கள் அடங்களாக 11,814 ஓட்டங்களை 49.84 என்ற சராசரியில் பெற்றிருக்கின்றார்.
 
இவரால் தென்னாபிரிக்க அணிக்கெதிராகப் பெறப்பட்ட 374 என்ற ஓட்டம்தான் இலங்கை வீரர் ஒருவரால் டெஸ்ட் இனிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்… இதன் மூலம் 300 ஓட்டங்களைப் பெற்ற முதலாவது இலங்கையின் டெஸ்ட் அணித் தலைவர் என்ற பெருமையையும் ஒரு இனிங்சில் ஒரு வீரரால் பெறப்பட்ட அதுகூடிய ஓட்ட எண்ணிக்கை வரிசையில் நான்காமிடத்தினையும்.ஒரு வலது கைத் துடுப்பாட்ட வீரர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டம் எனும் பெருமைகளையும் பெற்றுக்கொண்டார்.

2006 ல் அப்போது அணித் தலைவராக இருந்த மார்வன் அதபத்து காயம் காரணமாக  அணியிலிருந்து விலக அவரிடமிருந்து தலைமைப்பதவியைப் பொறுப்பெடுத்த மஹெல தனது தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தினை இங்கிலாந்தில் எதிர்கொண்டார். இச்சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரினை 1-1 என்று சமப்படுத்தியதோடு ஒருநாள் தொடரை 5-0 என்று இங்கிலாந்து அணியை Whitewash செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

2009ல் பாக்கிஸ்தான் அணிக்கெதிராக பாக்கிஸ்தானில் வைத்துப்பெறப்பட்ட டெஸ்ட் சதத்தின் மூலமாக டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்த வீரர் என்ற பெருமைக்கு உரித்துடையவரானார்.

டெஸ்ட் போட்டிகளில் மூன்று தொடர் நாயகன் விருதினையும் 9 ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருக்கிறார். மஹெல பெற்றுக்கொண்ட 3 தொடர் நாயகன் விருதும் இங்கிலாந்து அணிக்கெதிராகவே பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில் தென்னாபிரிக்க மண்ணில் மாத்திரமே மஹெல ஒரு டெஸ்ட் சதத்தையேனும் பெற்றிருக்கவில்லை.

இவ்வருடம் காலியில் நடைபெற்ற பாக்கிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்டின் 2வது இனிங்சில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கியதே மஹெல டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய முதலாவதும் இறுதியுமான சந்தர்ப்பமாகும்.

தான் பெற்றுக்கொண்ட 34  டெஸ்ட் சதங்களில் 5 சதங்கள் 2007 இல் பெறப்பட்டது. இதுவே மஹெலவினால் ஒரு ஆண்டில் பெறப்பட்ட அதிகூடிய டெஸ்ட் சதங்களாகும்.

148 டெஸ்ட் போட்டிகளில் 22 இனிங்ஸ்களில் பந்துவீசியுள்ள மஹெல 310 ஓட்டங்களுக்கு மொத்தமாக 6 விக்கட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 7 இரட்டைச் சதங்களைக் கடந்திருக்கின்றார். இதில் ஒரு முச்சதமும் அடங்கும்.

1997ல் இந்தியாவுக்கு எதிராக 7ம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடியமையே மஹெல விளையாடிய கடைநிலையாகும். இதுவே மஹெல 7ம் இலக்கத்தில் விளையாடிய ஒரேயொரு சந்தர்ப்பம்.

15 தடவைகள் மஹெல ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்திருக்கின்றார்.

38 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய மஹெல 18 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருந்தார். வெற்றி சதவீதம் 47.36 ஆகும்.

அணித்தலைவராக செயற்பட்ட காலப்பகுதியில் 59.11 என்ற சராசரியில் 3665 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதி 14 சதங்களும் அடங்கும்.


உலகளாவிய ரீதியில் 50 மைதானங்களில் மஹெல டெஸ்ட் போட்டிகளை விளையாடியிருக்கின்றார்.

மஹெல 60 டெஸ்ட் தொடர்களில் ஆடியிருக்கின்றார்.

முரலியின் பந்துவீச்சில் மஹெல மொத்தமா 77 பிடிகளை எடுத்துள்ளார். இதுவே குறித்த ஒரு பந்துவீச்சாளருக்கு குறித்த ஒருவீரர் எடுத்த அதிகூடிய பிடிகளாகும்.

 டெஸ்ட் போட்டிகளில் 205 பிடிகளை எடுத்ததன் மூலம் அதிக பிடிகளை எடுத்தவர்கள் வரிசையில் மஹெல 2வது இடத்திலுள்ளார் (ட்ராவிட் 210)

624 என்ற உலகசாதனை இணைப்பாட்டத்தை குமார் சங்கக்காரவோடு இணைந்து நிகழ்த்தியிருந்தார். இதுவே எந்தவொரு விக்கட்டுக்காகவும் ஒரு இனிங்ஸில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாகும்.

2009இல் மஹெலவால் பெறப்பட்ட 1194 ஓட்டங்களே குறித்த ஒரு ஆண்டில் மஹெலவால் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.

இங்கிலாந்து அணிக்கெதிராக மொத்தமாகப் பெறப்பட்ட 2212 ஓட்டங்களே மஹெலவால் ஒரு அணிக்கெதிராக பெறப்பட்ட மொத்த அதிகூடிய ஓட்டங்களாகும்.

இலங்கைக்கு வெளியே 61 டெஸ் போட்டிகளில் விளையாடியுள்ள மஹெல 39.71 சராசரியோடு 4647 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார்.

 அதிக தடவைகள் நான்காம் இலக்க வீரராகக் களமிறங்கிய மஹெல 9451 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார். இது நான்காம் இலக்க வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கைகளில் இரண்டாவதாகும்.(முதலாவதிடம் சச்சின்)

மஹெல மற்றும் மார்வன் அதபத்து ஆகியோர் மாத்திரமே டெஸ்ட் போட்டிகளில் Retired Out  முறை மூலம் ஆட்டமிழந்த (வெளியேறிய) இருவீரர்களாவர். 2001ம் ஆண்டு பங்களதேஸ் அணிக்கெதிராக SSC மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போதே அதபத்து 201 ஓட்டங்களைப் பெற்ற போதும் மஹெல 150 ஓட்டங்களைப் பெற்றபோதும் அணித்தலைவர் சனத் ஜயசூரியவினால் பெவிலியனுக்கு மீள அழைக்கப்பட்டிருந்தனர்.

மஹெல பெற்றுக்கொண்ட 34 சதங்களில் 23 உள்நாட்டில் பெறப்பட்டவை. 14 சதங்கள் மஹெல அணித் தலைவராக இருக்கும்போது பெற்றுக்கொண்டவை.

மஹெல பெற்றுக்கொண்ட விருதுகள்.

2006ம் ஆண்டில் ICC இனால் வழங்கப்பட்ட ஆண்டின் சிறந்த அணித் தலைவர் விருதினை வெற்றிகொண்டார்.

2013 ஆண்டு ICC இன் sprite of cricket விருதினை வென்றிருந்தார்.

முன்னதாக தனது தலைமைத்துவத்தின் கீழ் 2007ம் ஆண்டு sprite of cricket விருதினை அணிக்குப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

2007ம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையினால் வழங்கப்படும்
Wisden Cricketer of the Year விருதினைப் பெற்றுக்கொண்டார்.

1994ம் ஆண்டு best schoolboy cricketer award இல் இரண்டாமிடத்தினைப் பெற்றார்.

                  --------------------------------------------------------------------------------------


இப்படிப் பல சாதனைகளின் சொந்தக்காரராக இருந்தும் தலைக்கனம், தற்பெருமை, மேதாவித் தனம் எதுவுமே இல்லாத மனிதர். யாராலும் விரும்பப்படக் கூடிய அற்புத மனிதர், மனிதநேசர். மஹெலவின் துடுப்பாட்ட ஸ்டைலுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பது போல மஹெலவின் அந்தக் குழந்தைச் சிரிப்புக்கும் பல ரசிகர்கள் நிச்சயம் இருப்பார்கள். கிரிக்கட்டின் வாழ்நாள் ஹீரோக்களில் ஒருவர் மஹெல என்றால் அது மிகையாகாது.

மஹெலவின் ஓய்வு என்னைப் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு மிகுந்த கவலைதான். இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் மஹெல தொடருவார் அவரது cover-drive,  flick, cuts & late cuts என்பவற்றை ஒருநாள் போட்டிகளில் காணலாம் என்பதே இப்போதைக்கு எமக்கிருக்கும் ஆறுதல்.

மஹெலவின் ஓய்வு இலங்கைக் கிரிக்கட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தோற்கும்போது கிடைத்த வலிகளை விட மஹெலவின் ஓய்வு தந்த வலி அதிகம்.

மஹெலவின் எதிர்காலம், அவர்தம் குடும்ப வாழ்க்கை, அனைத்தும் மகிழ்சிகரமானதாகவும் அவரின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமானதாகவும் அமைய என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.


We miss you Mayyaa!!!!!!!!!!


தகவல் மூலங்கள் : Wikipedia,  Island Cricket, Cricinfo & WisdenIndia

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பெருநாள் காசு இல்லனா.. அன்பாச் சொல்லிட்டு அனுப்பிடவேண்டியதுதானே.. அதுதானேய்யா ஒலக வழக்கம்


நான் சுத்தி வழைச்சுப் பேச விரும்பல
சம்பந்தப்பட்டவங்களப் பார்த்து நேரடியாவே கேக்குறன்..
பெருநாள் கொண்டாடுறீங்களா? இல்ல அராஜகம் பண்றீங்களா..?
என்ன பண்ணினான் அந்தப் பையன்? என்னையா தப்பு பண்ணீனான்?
ஏதோ ஆர்வக் கோளாறுல பெருநாள் காசு கேட்டுட்டான்...
பெருநாள் காசு இல்லனா.. சாரி காசு இல்லன்னு அன்பாச் சொல்லிட்டு அனுப்பிடவேண்டியதுதானே..
அதுதானேய்யா ஒலக வழக்கம்.
அத விட்டுப் போட்டு அம்பது பேர் முன்னாடி இந்த வயசுலையும் பெருநாள் காசு கேக்குறார்னு சொல்லி அசிங்கப்படுத்திருக்க நீயி…..
அட அசிங்கப்படுத்தினாலும் பரவால்லையா… போறவாற சின்னப் பிள்ளைங்களையெல்லாம் கூப்பிட்டு அங்கிள் கிட்ட பெருநாள் காசு கேளுங்கடான்னு கடுப்பேத்தியிருக்க நீயி...
அம்புட்டு பசங்களுக்கு பெருநாள் காசு கொடுக்குறதுக்கு இது என்ன கவர்மெண்ட் கஜானாவா இல்ல ஒலக வங்கியா?
ஏதோ அந்தப் பையன் பாடியில அவன் வீட்ல சாப்பிட்ட பலகாரம், மஸ்கட் தந்த எனர்ஜி இருந்ததனால அவன் ஓடி எஸ்கேப் ஆகிருக்கான்யா….
அப்டில்லாம அந்தப் பசங்க கிட்ட மாட்டி காசப் பறிகொடுத்திருந்தா அவன் dongle ற்கு யாரு ரீலோர்ட் பண்றது அவன் ஃபேஸ்புக் அக்கெளண்ட யாரு மெயிண்டைன் பன்றது…?
இவ்வளவு ஏன் முந்த நாள் கூட இப்டி ஒரு சம்பவம் நடந்துது.
இதே பையன் இன்னொரு சொந்தக்காரன் வீட்ட போய் பெருநாள் காசு கேட்டான்யா…
ஆனா அந்த சொந்தக்காரங்க அந்தப் பையன உன்னைய மாதிரி இம்புட்டு அசிங்கப்படுத்தல்ல..
ஒரு ஒரு மணிநேரம் ஆறுதலாப் பேசிட்டு அனுப்பிருக்காங்கையா
அதுவும் எப்டி பிள்ளைக்கு மனம் நோகக் கூடாதுங்குறதுக்காக ஃபலூடா, ஐஸ்கிறீம், அப்பிள், ஒரேஞ்னு வெராய்டி வெராய்டியா கொடுத்துட்டு. அப்புறம் பெருநாள் காசு இல்லனு நாசூக்கா சொல்லி அனுப்பிருக்காய்ங்கை..
அந்த நாகரீகம் கூட தெரியாது உனக்கு…..?
எப்டியெல்லாம் அசிங்கப்படுத்திப்போட்ட…
ஒரு பச்சத் தண்ணி கூட கொடுக்காம திருப்பி அனுப்பிருக்க நீயி…
எப்படியெல்லாம் கேட்டுப் பார்த்தான் அவன்…
கடைசிவரை ஒன்னுமே கொடுக்காம அனுப்பிருக்க..
இரக்கமில்லையா உனக்கு….?
(யாவும் கலப்படமற்ற கற்பனை )

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

VOPL உம் அண்ணனின் அட்டகாசங்களும்

** நாட்குறிப்பில் ஒரு பக்கம் ***
----- VOPL உம் அண்ணனின் அட்டகாசங்களும்.------

கடந்த வருடம் நம்ம அண்ணாத்தை ஒருவர் VOPL (Virakesari Online Primer League) விளையாட ஒரு மாதத்துக்கு முதலே ரெடியாகிட்டார். அடிக்கடி ஃபோன் பண்ணி ரூம்லதானே நிப்ப நான் கொழும்பு வந்தா உன் ரூம்லதான் தங்கணும் என்று ஒரு மாதமாக சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஒரு நாள் கொழும்பில் எனது ரூமில் தங்கியிருக்கிறேன் நம்ம அண்ணாத்தை ஃபோன் பண்ணினார்.

அவர் :எங்கடா கொழும்புலதானே இருக்க காலைல கொழும்புக்கு உண்ட ரூமுக்கு வாறன்.

(காலை 4.30க்கு வந்து சேர்ந்தார். நானும் அவருக்கு தூங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துவிட்டு வசந்தம் டீவியின் எமது பார்வை நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தயாரானேன்.)

நான் : பாஸ் நீங்க தூங்குங்க ப்ரோகிராம் முடிச்சிட்டு 7.15க்குள்ள வந்துடுவன வந்த உடனே கிளம்பிடுவம்.

அவர் : சரிடா சரிடா உன் லெப்டொப்ப ஒன் பண்ணி தந்துட்டு போ. ஒன்லைன்ல உண்ட நிகழ்ச்சியப் பாப்பம்.

நான் : அப்போ தூங்கலையா…?

அவர் : தூங்குறதான் எதுக்கும் ஒன் பண்ணி தந்துட்டு போ…

(நானும் லெப்டொப்பை ஒன்பண்ணிக் கொடுத்துட்டு நிகழ்ச்சிக்காக கலையகம் சென்று மீண்டும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு 7.15 ற்கெல்லாம் ரூமிட்கு திரும்பிவிட்டேன். ரூமுக்கு வந்து பார்த்தால் ரூம் அப்பவே சுத்தமாத்தான் இருந்தது நம்ம பாசு மேலும் சுத்தப்படுத்திவிட்டு மெச் விளையாடப் போக தயாராக இருந்தார்.
நானும் தயாரானேன் நான் தயாராகிக் கொண்டிருக்கும் நேரம் நம்ம அண்ணாத்தை நிண்ட இடத்துல துள்ளுறார் ஓடுறார், கைய கால நீட்டுறார்.. )

நான் : என்ன பாஸ் இது

அவர் : வோம் அப்டா வோம் அப்…

நான் : ஓஹ்ஹ்ஹ் ஓகே ஓகே

நான் : சரி வாங்க போகலாம் (பைக்ல போகும்போது) பாஸ் சாப்பிட்டுட்டு போவமா..?

அவர் : இல்லடா ஏற்கனவே லேட் ஆகிட்டு கிரவுண்டுக்கு போயிட்டு அங்க பக்கத்துல ஏதும் கடையில சாபிடுவம்

(கிறவ்ண்டுக்க வந்தா சும்மா இரிப்பம்னு இல்ல பெட்ட வாங்கி ரெண்டு சொட் போளை வாங்கி ரெண்டு போள்.. ஃபுல் ப்ரக்டிஸ் )

நான் : பாஸ் சாப்பிட்டுட்டு வருவமே செம பசி

அவர் : இருடா இரு

(அப்டி சொல்லிட்டு ஏதோ சாவு வீட்டுக்கு வந்த அரசியல்வாதி அங்க இருக்கிர எல்லார்க்கிட்டையும் வாண்டட்டா போய் அளவளாவுற மாதிரி நம்ம அண்ணாத்தையும் எல்லார்கிட்டையும் சுக நலம் விசாரிக்குது. எனக்கோ பசி அகோரம். )

நான் : பாஸ் வாரீங்களா இல்ல நான் போய் சாப்பிட்டு வரட்டுமா…?

அவர் : சரி வா போவம்….

நான் : பைக்ல போவமா

அவர் : இல்ல நடந்து போவம் பக்கத்துலதான் ஒரு கடை இருக்கு குயிக்கா போய்ட்டு வந்துருவம்.

(சாப்பாட்டுக் கடையில வெறும் பொல்ரொட்டியும் கட்ட சம்பலும்தான் இருந்துது. )

நான் : பாஸ் என்ன சாப்பிடுறீங்க….?

அவர் : இல்லடா நான் ஒண்டும் சாப்பிடல; சாப்பிட்டா சரியா விளையாட முடியாது ஒரு டீ மட்டும் குடிக்கிறன்.

நான் : ஒரு பொல் ரொட்டியாவது சாப்பிடுங்க பாஸ்…

அவர் : இல்லடா பசியோட போனதான் வெறியோட விளையாடலாம்

நான் : ஓ.. ஓகே ஓகே நமக்கு அப்டியெல்லாம் இல்ல பாஸு, வயிறுதான் முக்கியம். ( சொல்லிட்டே நான் ரெண்டு பொல் ரொட்டி ஒரு டீ நம்ம பாஸு பாதி ரொட்டி ஒரு டீ சாப்பிட்டோம்.சாபிட்டுவிட்டு கிரவுண்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தோம்….
வரும்போதே நம்ம பாஸ் துள்றாரு பாயுறாரு கைய முன்னுக்கு பின்னுக்கு சுத்துறாரு… )

நான் : என்ன பாஸ் வோமப்பா….?

அவர் : ஓமடா ஓமடா…..

நான் : ஓ… இருக்கட்டும் இருக்கட்டும்….

அவர் : டேய் வாடா கொஞ்சம் ஓடுவம்… அப்பதான் உடம்பு வேருக்கும் எல்லா தசைகளும் இழுபடும்….

நான் : ஓ இதுவும் வோமப்ல வருதா பாஸ்…..

அவர் :ஓம்டா ஓடுவமா..?

நான் : ஓகே ஓடிட்டா போச்சு…..

வோமப் பில்டப் எல்லாத்தையும் முடிச்சாச்சு. அண்ணன் ஒரு டீம் நான் வேறொரு டீம்…
அண்ணண்ட டீமுக்குதான் முதல் மெச் அண்ணந்தான் ஓபனர். அண்ணன் கலக்குவார் எண்டு நானும் நம்பி உட்கார்ந்து பார்த்தன்

அண்ணனை நோக்கி வேகமாக வீசப்பட்ட பந்து ஆம் அண்ணன் ஓங்கி அடித்தார் மட்டையில் படாமல் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு அண்ணன் ஆட்டமிழந்தார்.

அடுத்த மெச்சிலும் அண்ணன் முதலாவது பந்திலேயே ஓங்கியடித்து மட்டையில் படாமல் LBW முறையில் ஆட்டமிழந்து அண்ணன் வெளியேறினார்.

3வது போட்டியில் அண்ணனுக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இப்படி ஊர்ல இருந்து சில பல ஆயிரங்கள செலவு பண்ணி கொழும்பு வந்து எல்லாப் போட்டிகளிலும் டக்-அவுட் ஆகிப்போன நம் அண்ணனை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்ந்தேன்.

தொடரில் நான் விளையாடிய அணி சம்பியன். அண்ணனின் அணி படு தோல்வி. எல்லா மெச்களும் முடிந்து ரூமுக்கு வரும் வரை அண்ணன் என்னருகில் வரவே இல்லை. வந்தால் ஏதும் சொல்லிடுவேனோ என்ற தயக்கம். அங்கு வந்திருந்த பிரபல அறிவிப்பாளார் ஒருவரின் குட்டி மகனோடு ஒரு ஓரமாக விளையாடிக்கொண்டிருந்தார். அந்தக் குட்டிப் பையனோடு விளையாடத்தான் தான் சரி என்பதை அவர் தாமதமாகத்தான் புரிந்துகொண்டார்…

ரூமுக்கு வந்ததும் அண்ணனின் வேண்டுகோள் கட்டாயப்படுத்தலின் காரணமாக சினி சிட்டி தியட்டரில் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் பார்த்து அண்ணனின் சோகத்தைக் கொஞ்சம் குறைத்தோம். என்னா டைமிங்.

குறிப்பு : இதில் வரும் அண்ணாத்தை யாரென்று நான் சொல்லமாட்டேன். ஆனால் இந்தக் கதையை ஒரு குறும்படமாக இயக்கினால் @ Kanapathipillai Prapakaran அவர்தான் இந்தக் கதையின் ஹீரோ…..
காரணம் அவரால் மாத்திரமே இந்த கதையை உள்வாங்கி உயிரோட்டமாக ,யதார்த்தமாக நடிக்க முடியும்.
பாஸ் கால்சீட் கொஞ்சம் ஒதுக்கி வைங்கோ

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

ஐ.நா வே வந்தாலும் உன்னை ஒன்னும் பண்ண முடியாதுடா

---- சும்மா லொலலாயி................---

இலங்கையில் ஆட்கடத்தல் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு விசாரிக்க இலங்கை வந்திருக்கு. நம்ம மன்னர், ரணில், மங்கள உட்பட எல்லோரும் பஞ்சாயத்துக்கு வந்திருக்காங்க... மகனைத் தொலைத்த கோபாலுவிடம் விசாரணை

**** பஞ்சாயத்து ஆரம்பம். ***

ஆணைக் குழு தலைவர் : கோபாலு உன் பேச்சக் கேட்டுதான் பஞ்சாயத்தக் கூட்டிருக்கம் உன் பையன யாரு கடத்தினன்னு சொல்லு அதுக்குரிய தண்டனையக் குடுத்துடுவம்

கோபாலு : அது வந்துங்க......

மகி : டேய் குர்ரா குர்ரா… ஏகே 47அ. ஏகே 47 இப்ப தேவப்படாது தேவப்பட்டா பின்னாடி வாங்கிக்குறன். எதுக்கும் லோர்ட் பண்ணி வெச்சிக்க..

மங்கள : தலைவரே இதமாதிரி நிறைய ஆளுங்க காணாம போயிருக்காங்க. கடத்தல் காறனுகள எப்டியாவது கண்டுபிடிச்சு தூக்கில போடனும்

மகி : (ஆஹா மகிந்தா ஒவ்வொருத்தனும் இருக்குற வேகத்தப் பார்த்தா உன் அரும பெருமைக்கு ஆபத்து வந்துடுப் போல இருக்குடா…. ரொம்பக் கவனமா டீல் பண்ணி ஆட்டத்தக் கலச்சிடு ராசா)
ஆ….. ஆ.. பஞ்சாயத்து நடக்கட்டும் பஞ்சாயத்து நடக்கட்டும்… யாரா இருந்தாலும் தைரியமா சொல்லப்பா நீயி… பயப்புடாத….. ம்ம்ம்ம்ம்ம் பயப்புடாதடா…………

தலைவர் :ஏண்டா தயங்குற தைரியமா சொல்லுடா

மகி : சொல்லு நீதான் தைரியமான ஆளாச்சே சொல்லு.. ம்ம்ம்.... சொல்றா…..

தலைவர் : இதுக்குப் போயி ஏண்டா பயப்புர்ர சொல்றா

மகி: அட என்ன பெருசு வெவரமில்லாம பேசிட்டு இருக்க… நம்ம ஊர்க்காரங்க குணம் தெரியாம பேசிட்டு இருக்க…. இன்னார்தான்னு கோபாலு சொன்னான்னா பின்னால ஏதும் பிரச்சின வரும்னு யோசிக்கிறான் அவன் இல்லடா கோபாலு…? அப்டித்தானே….??

தலைவர் : என்னடா கோயில் மாடுமாதிரி தலையாட்டுற பயப்புடாம சொல்லுடா

ரணில் :
தலைவரே நான் என்ன நினைக்குறன்னா…

மகி: டேய் நீ என்ன நினைக்குறது…? அவன் நினைக்கவேணாம அவன் பொண்டாட்டி பிள்ளைங்க பற்றி என்னமோ நெனைக்குறன் நொனைக்குறண்டுட்டிருக்க…..

ரணில் : அப்ப பஞ்சாயத்துல நான் ஒன்னும் சொல்லக்கூடாதா….?

மகி : சொல்லக்கூடாதுடா சொல்லக் கூடாது உனக்கு சொல்ல உரிமை கிடையாது… நீ பாட்டுக்கு ஏதாவது சொல்லிட்டுப் போயிட்டேன்னா அனுபவிக்கிறது யாரு…. ப…. ப்ப்பாஅ அவந்தானே நீ பஞ்சாயத்துல உக்காந்து கிழிச்சது போதும் போடா போ….. பெரிய மனுசங்க பேசுறப்போ பேசின குத்திடுவன்.. நீங்க பேசுங்க பெருசு.. என்னடா மொறப்பு அவன் அவன் கஸ்ட்டம் அவ அவனுக்குத்தானேடா தெரியும்….

தலைவர் : ஏண்டா பயப்புர்ரா…..

மகி : அட என்ன தலைவரே….கோபாலு என்னைமாதிரி தைரியமான ஆளா இருந்தாலும் பரவால்ல கொஞ்சம் பயந்தவந்தானே…. ஏற்கனவே நம்ம ஊர்ல ஒரு அம்மாவும் பிள்ளையும் அண்ணன காணம் அவன ராணுவம்தான் கடத்தினன்னு சொன்னப்போ நம்ம பசங்க வீடு பூந்து அம்மாவையும் மகளையும் தூக்கி அம்மாவ ஒரு ஜெயில்லையும் மகள இன்னொரு ஜெயில்லையும் போட்டாங்களா இல்லையா…? அதெல்லாம் இவன் கண்முன்னாடி வந்து போகுமா இல்லையா…. பயப்புடதானே செய்வான்… லேசு வாக்குல கேளுங்க சொன்னா சொல்லட்டும் சொல்லலன்னா உட்ருவம்….

மங்கள : தயங்காம சொல்லுப்பா நாங்க இருக்கமில….

மகி : நீ இருப்பயா அவன் இருக்க வேணாமா….?

தலைவர் : டேய் மகி நீ தேவையில்லாம குறுக்க குறுக்க பேசுற

மகி : சம்பந்தப்பட்டவன் நாந்தான்யா பேச முடியும் அவனுக்குன்னு வேற யாரு இருக்கா….?

ரணில் : மகி வந்ததுல இருந்து நானும் பாத்துட்டு இருக்கன்… நீயே பேசிட்டு இருக்க அவனையும் பேச விடுய்யா….

மகி : எப்பிர்ரா பேசுவான் எப்பிடி பேசுவான். நீங்களே ஆளாளுக்கு பேசிட்டிருந்தா அவன் எப்பிர்ரா பேசுவான் நாய்களா…? நீங்கெல்லாம் இன்னைக்கு பஞ்சாயத்த முடிச்சிட்டு கெளம்பிடுவீங்கடா… அப்புறம் அவன் தனியாதானே இந்த ஊருக்க சுத்தனும். அவனுக்கும் அவன் உசிருக்கும் என்னடா உத்தரவாதம் இருக்கு…?

தலைவர் : டேய் மகி வந்ததுலிருந்து நானும் பாத்துட்டு இருக்கன் நீயே குறுக்க குறுக்கப் பேசிட்டு இருக்க. பஞ்சாயத்து தலைவர் நான் இருக்கன் நீயார்ரா குறுக்க குறுக்கப் பேசுறதுக்கு… அடிச்சா மீசப் பிச்சிக்கிட்டுப் போயிரும். உக்கார்ரா சும்மா.. கோபாலு நீ சொல்றா….

கோபாலு : ஐயா அது வேற யாருமில்லிங்க ….

மகி : பாத்தீங்களாய்யா இன்னும் சொல்றானில்ல பாத்தீங்களாய்யா… ஐய்யா…. குர்ரா அந்த AK47 இவன இங்கையே சுட்டுப் போட்டுர்ரன்… பெரிய மனிசன் காலையில இருந்து கேட்டுட்டு இருக்கீங்க சொல்றானா அவன்.... விடுங்கைய்யா…. டேய் சொல்றா சொல்றா நீயி சொல்றா….சரியான ஆளா இருந்தா சொல்றா…. இவளவு நேரமா கேட்டுட்டு இருக்கம் சொல்றானா பாருங்க...அயோக்கியப் பயல ராஸ்கல்….

தலைவர் : இர்ரா இர்ரா நான் கேக்குறன் நீ இர்ரா…. சொல்லித் தொலையேண்டா….

கோபாலு : ஐய்ய்ய்யா........என் பையன கடத்தினது யாருன்னு தெரியல.. யாரோ கடத்துற மாதிரி கனவு கண்டன்…. பஞ்சாயத்து கூட்டினது எனது தப்பு மன்னிச்சிடுங்க……

மகி : ஆ… போ… போ…. அவனே கடத்தினது யாருன்னு தெரியலன்னுட்டான் போ போ எந்திரிச்சுப் போ... பஞ்சாயத்துன்னா உடனே கூட்டத்தப் போட்டுர்ரது… போ போய் சோத்தப் பொங்கி கொழம்பு வெச்சு சாப்பிடுட்டு வேலையப் பாரு..ஊட்டுல யாரும் காணாமப் போனா யார்டையும் சொல்லிக் கேவலப்படாம என்கிட்ட சொல்லுங்கடா.. ஆ ஊன்னா கூடிர்ரது….

** ஐ.நா வே வந்தாலும் உன்னை ஒன்னும் பண்ண முடியாதுடா மகிந்தா இப்பிடியே மெயிண்டைன் பண்ணு… ஆ.. போ…. போ…
(கதை திரைக்கதை திரைக்குப் பின்னால் கதை உல்டா ரீமேக்கியது எல்லாம் - அஹமட் சுஹைல் .)

 

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

விசாகா கல்லூரி பழைய மாணவன் (நாங்களும் க்ரேஜுவட்டாக்கும் செமஸ்டர் - 05)

>>>> நாட்குறிப்பில் ஒரு பக்கம் >>>>>
---- விசாகா கல்லூரி பழைய மாணவன் ----

பல்கலைக் கழக நாட்களில் ஒரு நாள் விடுதி அறையில் நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஒவ்வொருவரும் தாம் படித்த பாடசாலைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அப்படியே ஒவ்வொருவரும் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து தாம் படித்த பிரபல பாடசாலைகள் பற்றிய பேச்சு ஆரம்பமானது.

அப்போது ஒவ்வொருவரும் தாம் படித்த ரோயல், டீ.எஸ் போன்ற பாடசாலைகள் பற்றி கதைத்தோம்.

அந்த நேரம் பார்த்து அமைதியாக இருந்த நண்பனொருவன்…..

”நான் 5ம் ஆண்டு ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணின. எனக்கு பிரபல பாடசாலையான கொழும்பு விசாக்கா கல்லூரியில் படிக்க வாய்ப்புக் கிடைச்சுது. ஆனா நான் போகல. அந்த ஸ்கூலால லெட்டர் வந்துது. நான் வீட்டாக்களோட போய் பார்த்தன். ஹொஸ்டல் வசதியெல்லாம் தாறண்டு சொன்னாங்க. ஆனா எங்க வீட்ட வெளியூருக்கு அனுப்பி படிப்பிக்க விரும்பல. அதால நான் போகல இல்லன்னா நானும் விசாக கொலீஜ்ல படிச்சிருப்பன்”
என்று சொல்லி முடித்தான்.

நாங்கள் நண்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரிப்பை அடக்கிக்கொள்ள முயன்றும் முடியவில்லை. எல்லோருமே கோரசாக சிரித்தோம்.

நாங்கள் சிரித்த காரணம் அவனுக்கு புரியவேயில்லை. மீண்டும்

“ என்ன பொய் சொல்றன் எண்டுதானே சிரிக்கிறீங்க. எனக்கு வந்த லெட்டர் இன்னமும் இருக்கு நான் ஒருநாளைக்கு கொண்டுவந்து காட்ரன் பாருங்க” என்றான்.

இப்பொழுது நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்…..

அவனுக்கு கொஞ்சம் குழப்பம் ,கொஞ்சம் கோபம்; கேட்டான் “ ஏண்டா சிரிக்கீங்க”

கட்டலில் இருந்து கீழே விழுந்து சிரித்துக்கொண்டிருந்த நான்…

“டேய் பக்கி விசாகா கொலீஜ் எங்குறது இலங்கையில இருக்குற ஃபேமசான Girls School டா”
என்று சொல்லிக்கொண்டே எனது சிரிப்பைத் தொடர்ந்தேன்.

அவனது முகத்தில் அசடு வழிந்தது.

O/L, A/L பரீட்சைகளுக்கு மொடல் பேப்பர்கள் வெளியிடுவதில் ரோயல் கல்லூரி மற்றக் கல்லூரிகள் போல விசாக்காக் கல்லூரியும் பிரபலம் அதில் அந்த பெயரை தெரிந்துகொண்டு ஆர்வக் கோளாறில் சொல்லிவிட்டான் நம்ம பய. அதுக்காக தனிப் பெண்கள் பாடசாலையில படிச்சன் எண்டா சொல்றது..

அன்று முதல் நமது நண்பர் “ விசாகா கல்லூரி Old boy" , விசாகா கல்லூரி மாணவி” என்று பல பெயர்களால் அழைக்கப்படலானார்.** முன்னைய செமஸ்டர்களுக்கு

1. நாங்களும் க்ரேஜுவேட்டாக்கும் (செமெஸ்டர் - 1)

2.நண்பேண்டா.. (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -2)

3.பத் அடுவென் ஃபுல் ரைஸ் (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -3)

4.வடை போச்சே (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -4)
 

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..

ஊரு விட்டு வெளியூர் வந்து குடும்பத்தை பிரிந்திருக்கும் போதுதான் குடும்பத்தின் மீது பாசம் பொங்கும். குறிப்பாக தாய் மீது பாசம் பொங்கிப் பிரவாகிக்கும் தாய் நமக்காக செய்யும் தியாகங்கள் பட்ட கஸ்டங்கள் நினைவு வரும். தாயைப் பிரிந்து வெளியூரில் இருக்கும்போது தாயைப் பற்றி கவிதை எழுதச் சொன்னால் தாயின் பெருமையை கட்டுரையில் வடிக்கச் சொன்னால் பக்கம் பக்கமாக கவிதையும், புத்தகம் புத்தகமாக கட்டுரையும் வரும். தாயைக் கையில் தாங்கனும் போலிருக்கும், தாயை உக்கார வைத்து பணிவிடை பல புரியத் தோணும். அதுவே ஊருக்கு வந்து தாயருகில் இருக்கும்போது எல்லாம் தலைகீழாக மாறிவிடும். தாய் கேட்கும் சிறு உதவிகூட பல நேரங்களில் உதாசீணப்படுத்தப்படும்... இதுதான் இன்று பலரது நிலை.

தினமும் 3 வேளையும் தாய் வடித்துக்கொட்டும் உணவை அவருக்கு உணவு இருக்குமா இல்லையா என்றுகூட யோசியாது பானை பானையாய்த் தின்றுவிட்டு பிள்ளைகளும் கணவனும் சென்ற பின் மிஞ்சுவது தனது கால் வயிற்றுக்கும் போதாத நிலையில் தனக்கு போதுமாக்கிக் கொண்டு அல்லது பகல் சாப்பாட்டில் மிஞ்சிய கொஞ்ச உணவையும் காலைச் சாப்பாட்டில் மிஞ்சியதையும் (பகல் சமைத்த சோற்றோடு காலையில் சமைத்த இடியப்பம்/ரொட்டியையும்) கலந்து உண்டுவிட்டு முக மலர்வோடு இருப்பார்.. தனக்கு உணவு போதாமல் விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது உணவை பிள்ளைகளும் கணவரும் தாராளாமாகச் சாப்பிட்டுவிட்டார்கள் என்ற மகிழ்ச்சிதான் அவரது வெளிப்பாடாக இருக்கும்.

இப்படிப் பல பெருமைகளைத் தியாகங்களைக் கொண்டா தாய்மாரின் மீதான பிள்ளைகளின் பாசம் இன்று ஃபேஸ்புக் ஸ்டேடசோடு மட்டுமே நின்றுவிடுவது துரதிஸ்ட்டம்.

ஐயிரண்டு திங்கள் அல்லல் பட்டு அயராது பாதுகாத்து எம்மைப் பெற்ற தாயை இன்றைய தினத்திலாவது நினைவுகொள்வோம்,,

எனது  நட்பிலுள்ள தாய்மார்களுக்கும் நட்புகளின் தாய்மாருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..

 

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நகரத்துப் பையன் Vs கிராமத்துப்புப் பையன்

நகரத்துப் பையன் Vs கிராமத்துப்புப் பையன்
&
நகரத்துப் பெற்றோர் Vs கிராமத்துப் பெற்றோர்.

 காலையில் எழுந்து தயாராகி ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ் போட்டுக்கொண்டு,தோளில் துடுப்பு மட்டையைப் கொழுவிகொண்டு பெற்றோர் ஆசியோடு,அவர்களின் வழியனுப்புதலோடு கிரவ்ண்டுக்கு போறவன் - நகரத்துப் பையன்

எப்படா அப்பா வெளியில போவாரு..? எப்படா அம்மா அடுப்படியில பிசியாவானு காத்திருந்து சோர்ட்ஸுக்கு மேலால டவுசர போட்டு அல்லது ட்ரவுசருக்கு மேலால சாரன உடுத்தி மறைச்சுக்கிட்டு வீட்டின் பின்புறமா/வாசலில் எங்கேயோ ஒழித்துவைத்த துடுப்பு மட்டை, விக்கட்டுகளை மதிலுக்கு மேலால் தூக்கிப் போட்டு திருடனைப்போல் ஒழிந்து ஒழிந்து கிரவுண்டுக்குப் போனால் அவன் - கிராமத்துப் பையன்

கிரவுண்டில் மகன் விளையாடும் அழகைக் கண்டு பெருமைப்பட்டு கரகோசம் செய்து உட்சாகப்படுத்தி மகிழ்ந்தால் அது - நகரத்துப் பெற்றோர்...

கிரவுண்டில் விளையாடிக்கொண்டிருக்கும் மகனை தேடிவந்து கன்னத்தில் ரெண்டு விட்டு, காதைத் திருகி தர தரவென இழுத்துச் சென்றால் அது - கிராமத்துப் பெற்றோர்...

சில நூறு கிலோமீற்றர் நிலப்பரப்பு வித்தியாசத்தில் பெற்றோரின் மனங்களில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்......

குறிப்பு : எனது பெற்றோர் இவ்விடையத்தில் எனக்கு பூரண சுதந்திரம் தந்திருந்தமை நான் பெற்ற பாக்கியம்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

கிரிக்கட் விழையாடியே சின்னாபின்னமாயிருந்தால் .........

----- மலரும் நினைவுகள் ----

அந்தக் காலத்துல
ஒரு kookaburra cricket bat (soft ball bat) 120/= தொடக்கம் - 150/=
ஒரு ரப்பர் போல் -15 /=
ஒரு டென்னிஸ் போல் - 20 /=
ரெண்டு கலர்ல வர்ர டென்னிஸ் போல் - 25 /=
டின் போல் - 50/= என்று விலை போச்சு...
இதெல்லாம் எனக்கு யாருமே வாங்கித் தரல..
நானாகவே வாங்கினன் அந்த வயசுலையே நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துக் கஸ்ட்டப்பட்டு வாங்கினன்....
எப்டி உழைச்சன் ....?
வீட்ல.......
ஒரு தடவை கடைக்குப் போனால் = 5/=.
நெல்லுக் குற்றப் போனால் = 5 /=அல்லது 10/=.
ஒருவாரத்துல எல்லா நாளும் ஓதப்பள்ளி(மத்ரசா ) போனால்= 5 /= (ஊக்குவிப்புத் தொகை)
வாசல்ல புல்லு செருக்கிக் கொடுத்தால் = 5/=
வாசல் & வீடு கூட்டினால் = 5/=
தேங்காய் உரித்து+ திருவிக் கொடுத்தால் = 2/=*தேங்கய்களின் எண்ணிக்கை
தவிரவும்
மதிய உணவுக் காசுகள மிச்சம் பிடிச்சு பெருநாள் காலங்களில் உழைச்சதுகள மிச்சம் பிடிச்சுதான் இந்த போல் பெட் எல்லாம் வாங்கினன். சும்மா இல்ல இதெல்லாம் 5 தொடக்கம் 18 வயசுல நான் பட்ட கஸ்ட்டங்கள்.
இப்டிக் கஸ்ட்டப்பட்டு உழைச்சு கிரிக்கட் bat ,ball வாங்கி கிரிக்கட் விழையாடியே சின்னாபின்னமாயிருந்தால் சகோ... நீயும் என் நண்பேன்டா.....

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

கண்டுபிடிச்சிட்டன் நான் கண்டு பிடிச்சிட்டன்

கண்டுபிடிச்சிட்டன் நான் கண்டுபிடிச்சிட்டன் காணமல் போன மலேசிய விமானத்த ஏன் இன்னும் கண்டுபிடிக்கல்ல எண்ட மேட்டர நான் கண்டுபிடிச்சிட்டன்...

இந்த ஃபோட்டோவ பாருங்க


விமானத்த தேடிட்டு இருக்கும் மலேசிய விமானப் படை வீர வீராங்கணைகளப் பாருங்க... கண்ணுக்கு விளக்கெணைய விட்டுக்கிட்டு சீரியஸா விமானத்தத் தேடாம இந்த விளக்கெண்ணைங்க ஜொல்ஸ் பண்ணிக்கிட்டு இருக்குதுக.. இப்டி இருந்தா எப்டி விமானத்தக் கண்டுபிடிக்கிறது...?

அதனால மலேசியப் பிரதமருக்கு நான் என்ன சொல்றன் எண்டால்
1. பொண்ணுங்களையும் பசங்களையும் சேர்ந்து தேடவிடாம தனித்தனியா தேட அனுப்புங்க. (இல்லன்னா தேடுற டைம்ல இப்டி ஜொல்ஸ் விட்டுட்டு விமானத்த எங்காச்சும் காட்டுக்குள்ள பார்க் பண்ணிட்டு புதருக்குள்ள இதுக ஒதுங்கிடும்)

2. இந்த மாதிரி எந்தெந்த ஏரியால பொண்ணுங்களும் பசங்களும் சேர்ந்து தேடுதல்ல ஈடுபட்டிச்சிகளோ அங்க திரும்ப வேற குரூப்ப தேட விடுங்க.... (ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்த கேப்ல விமானத்த கவனிக்காம மிஸ்பண்ணிருக்கலாம்)

மலேசியப் பிரதமரின் கவனத்திற்கு (அவருக்கு விளங்கணும் எண்டதுக்காக மலே மொழியிலையும் ட்ரான்ஸ்லேட் பண்ணிருக்கன்)

Jadi apa yang saya colran Akhir Perdana Menteri Malaysia
1. Menghantar kanak-kanak lelaki untuk mencari tetavitama gadis itu secara berasingan. ( Di mana lagi anda mencari taimla ipti jols taman liar di suatu tempat dan mempunyai putaruk vimanatta meninggalkan mengetepikan ituka yang )

2. Kanak-kanak lelaki seperti gadis-gadis dengan apa eriyala tetutalla itupatticcikalo lagi ke sana .... Mari carian kuruppa ( Romantik dan perasan kepla vimanatta )

 

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

ஏன் தம்பி….? MH370 ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா…?

விமானம் கடத்தப்பட்டது தொடர்பில் மலேசிய அரசாங்கம் தனக்குத் தெரிந்த உண்மை விடையங்களை மறைப்பதாக சீனாவுக்கு சந்தேகம்… இதனை நேரில் விசாரிக்க ஐ.நா சபையில் பான்கீமூன் தலைமையில் பஞ்சாயத்து நடத்துறாய்ங்க. ஏகப்பட்ட கேள்விகளால கடுப்படைந்த நிலையில மலேசியப் பிரதமர் விசாரனைக்குப் போறாரு

பான் கீ மூன் : என்ன பிரச்சின?

சீனப் பிரதமர் : பிளைட்ட காணாம ஆக்கிட்டு 10 நாள் ஆச்சு அவங்களுக்கு எதுவுமே தெரியாதுங்குறாங்க… ஆனா அவங்க உண்மைய கண்டுபிடிச்சிட்டு சொல்ல மாட்டேங்குறாங்க

பான் கீ மூன் : ஏற்கனவே ஆயிரம் பிரச்சின அதுல இது வேறையா…? ஏப்பா தம்பி அந்த ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா….?

மலேசியப் பிரதமர் : என்ன கண்டுபிடிச்சிட்டியா….?

பான் கீ மூன் : ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியாப்பா…?

மலேசியப் பிரதமர் : என்ன கண்டுபிடிச்சிட்டியாப்பா….?

பான் கீ மூன் : ஏன் தம்பி….? MH370 ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா…?

மலேசியப் பிரதமர் : என்ன ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா…?

பான் கீ மூன் : ஏற்கனவே பத்துநாளுக்கு மேலாச்சு…..

மலேசியப் பிரதமர் : என்ன பத்துநாளுக்கு மேலாச்சு…..?

பான் கீ மூன் : ஏய்யா நான் சரியாப் பேசுறனா…?

சீனப் பிரதமர் : சரியாத்தான் தலைவரே பேசுறீங்க…

பான் கீ மூன் : இப்ப பத்து நாளுக்கு மேல ஆயிட்டதால பெரிய பிரச்சினை வரும்…

மலேசியப் பிரதமர் : என்ன பிரச்சினை வரும்…?

பான் கீ மூன் : ஏய்யா நான் சரியாத்தானே பேசுறன்...?

ரஷ்யப் பிரதமர் : ரொம்பக் கரெக்டு….

பான் கீ மூன் : கரெக்டு…. பிரச்சினைய விட்ரு..

மலேசியப் பிரதமர் : என்ன பிரச்சினைய விட்ரு..?

பான் கீ மூன் : ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா…?

மலேசியப் பிரதமர் : என்ன கண்டுபிடிச்சிட்டியாப்பா….?

பான் கீ மூன் : ஏய்ய்ய்ய்ய்… என்னைய்யா பேசுறான் அவன்…

சீனப் பிரதமர் : ஐய்யா அவன் சரியான கல்லூரி மங்கன் புரியும்படியா கேப்பில்லாம பேசுங்க…

மலேசியப் பிரதமர் : என்ன கேப்பில்லாம பேசுங்க…?

பான் கீ மூன் : ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியாடா…?

மலேசியப் பிரதமர் : என்ன ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியாடா…?

பான் கீ மூன் : ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா…?

மலேசியப் பிரதமர் : என்ன ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியா

பான் கீ மூன் : ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியாடா..?

மலேசியப் பிரதமர் : என்ன ப்ளைட்ட கண்டுபிடிச்சிட்டியாடா…?

பான் கீ மூன் : இந்த மாதிரி மொள்ளமாரிப் பயலுக்கெல்லாம் பஞ்சாயத்துப் பண்ணக் கூப்பிடாதீங்க.. மனிசனா இவன்…

மலேசியப் பிரதமர் : என்ன மனிசனா இவன்?

பான் கீ மூன் : டேய்ய்ய்…

சீனப் பிரதமர் : ஐய்யா…
கோவப்படாதீங்க

பான் கீ மூன் : என்ன
கோவப்படாதீங்க

சீனப் பிரதமர் : பொறுமையா இருங்க

பான் கீ மூன் : என்ன பொறுமையா இருங்க?

சீனப் பிரதமர் : வீட்டுக்குப் போங்க

பான் கீ மூன் : என்ன வீட்டுக்குப் போங்க…?

சீனப் பிரதமர் : ஐய்யா

பான் கீ மூன் : என்ன ஐய்யா….
என்ன ஐயய்யா

சீனப் பிரதமர் : ஆஹா தலைவரே குழம்பிட்டாரே…
நோக்கு சந்தோசம்தானே நல்லா இருந்த மனிசனா இப்டிப் பன்னிட்டுயே…

மலேசியப் பிரதமர் : என்ன இப்டிப் பன்னிட்டுயே…?

சீனப் பிரதமர் : திரும்பத் திரும்ப பேசுற நீ

மலேசியப் பிரதமர் : என்ன திரும்பத் திரும்ப பேசுற நீ?

சீனப் பிரதமர் : திரும்பத் திரும்ப பேசுற நீ
திரும்பத் திரும்ப பேசுற நீ
திரும்பத் திரும்ப பேசுற நீ

ரஷ்யப் பிரதமர் : ஏப்பா… தலைவரு தப்பிச்சிட்டாரு சீனா போயெ போய்டே…

மலேசியப் பிரதமர் : என்ன போயே போய்டே…

(ஐ.நா பஞ்சாயத்துக்கு வந்த அம்புட்டுப்பேரும் மயங்கி விழுந்துட்டாய்ங்க..

ஙொஙொய்யால இனி எவனாவது என்கிட்ட ப்ளைட் எங்கன்னு கேப்பீங்க மலேசியப் பிரதமர் கம்பீரமா வெளியில போறார்...)

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

என்ன ஒரு வில்லத்தனம்........

பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட நாடகப் போட்டி.

அந்தப் பாடசாலை மாணவர்கள் நான்கு ஐந்து தடவைகள் ஒத்திகை பார்த்தபின் சிறப்பாக தமது நாடகத்தை மேடையில் நடத்திக்கொண்டிருந்தனர். அதில் ஒரு காட்சி அயல் வீட்டவர்கள் இருவர் குப்பை கொட்டுவது தொடர்பாக வாக்குவாதப்படுவது போன்றதொரு காட்சி...

வாக்குவாதம் உக்கிரமடைந்து சென்றுகொண்டிருக்கின்றது. அதில் ஒரு மாணவன் சண்டையின் உச்சக்கட்டத்தில் அடுத்து பேச வேண்டிய வசனங்களை மறந்துவிட்டான். அந்த வசனங்கள் கோபாவேசத்துடன் பேசப்படவேண்டிய வசனங்கள் துரதிஸ்ட்ட வசமாக அவனுக்கு அது மறந்துபோய்விட்டது.
அதனை சமாளிப்பதற்காக தனக்குத் தெரிந்த தூசண வார்த்தைகளையா கலந்து பேசுவது...?? இதில் மற்றயவனின் தாயை இழுத்து வேறு பேசிவிட்டான்.

மற்றவன் சும்மா விடுவானா அவன் மாறி இவனுக்கும், இவனது தாய்க்கும் தூசண வார்த்தைகளால் ஏசிவிட்டான். சண்டை உக்கிரமடைந்து செல்கின்றது. ஏனைய பாடசாலை ஆசிரியர்கள் அதிர்ச்சியுடன் தலையில் கைவைத்தபடி மற்ற மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்தபடி

நிலைமைய உணர்ந்த நாடகம் நடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சுதாகரித்துக்கொண்டு ஒருவாறு தமது நாடகத்தை முடித்துவிட்டு கீழே இறங்கிவிட்டனர்.

பலத்த சர்ச்சை, விமர்சனங்களின் பின்னர் மாணவர்கள் மீண்டும் மேடையேறி “நாடகத்தை யதார்த்தபூர்வமாக நடிக்கவேண்டும் என்பதற்காக சில தகாத வார்த்தைகளைப் பேசிவிட்டோம் இதற்காக அனைவரிடத்திலும் மன்னிப்புக் கோருகின்றோம்” என்று மன்னிப்புக்கோரியதன் பின்னர்தான் விடயம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததாம்.

(எனது பாடசாலை சக ஆசிரியர் ஒருவர் தான் முன்னர் கற்பித்த பாடசாலையில் தனக்கு நடந்த சம்பவம்பற்றிக் கூறி நான் வயிறு வலிக்கச் சிரித்த ஒரு கதை)

 

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

அந்தப் பொண்ணு காதலில் விழுந்துவிட்டாள்

குடும்பத்தோட எல்லாரும் வெளிய போகும் போது “நீங்கெல்லாம் போங்க எனக்கு தலை வலிக்குது நான் வரல்ல” என்று ஒரு பொண்ணு சொன்னாலோ

வீட்டிற்கு சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து வீடு கலகலப்பாக இருக்கும் போது ஒரு பொண்ணு தன் ரூமிட்குள் ஒதுங்கிக் கொண்டாலோ அல்லது ரூமிட்குள் அடிக்கடி சென்று வந்தாலோ

குடும்பத்தோடு வாகனத்தில் வெளியில் செல்கையில் ஒரு பொண்ணு பின் சீட்டில் அதுவும் கோணர் சீட்டில் உட்கார்ந்து ஃபோனை நோண்டிக்கொண்டிருந்தாலோ

பயணங்களின் போது தன் ஃபோனை அடிக்கடி கீபேட் ஒன் பண்ணி பார்த்தாலோ அல்லது ஹேண்ட் பேக்கில் உள்ள ஃபோனை அடிக்கடி வெளியில எடுத்து எடுத்து பார்த்தாலோ...

நேரகாலத்தோடு இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு தன் ரூமிட்குள் சென்று ஒரு பொண்ணு கதவை மூடிக்கொண்டாலோ

வீட்டிற்கு உறவினர்கள் வந்திருக்கும் போது தன் வயதை ஒத்த பெண்ணோடு ரூமிட்குள் சென்று ஒரு பொண்ணு ரகசியமா பேசிக்கொண்டிருந்தாலோ

ஃபோன் இன்பொக்ஸிலுள்ள, out box இலுள்ள மெசேஜ்களை ஒரு பொண்ணு அடிக்கடி டிலீட் பண்ணி விட்டாலோ

குடும்பத்தினரோடோ அல்லது நண்பர்களோடோ அதிக நேரம் செலவிடாமல் அடிக்கடி தனிமையை நாடினாலோ அல்லது உறவினர்களோடு அதிக நேரம் செலவிட நேர்ந்தால் அசெளகரியமாக காணப்பட்டாலோ

”அந்தப் பொண்ணு காதலில் விழுந்துவிட்டாள்” என்றும் 2 Side Love கரைபுரண்டு ஓடுது என்றும் அர்த்தம்...

--- ஆய்வு : பேராசிரியர் சுஹைல் ----

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

--- மலரும் நினைவுகள் ----

அல்லி அர்ஜுணா படத்திலிருந்து  jaanaki, Srinivas பாடிய

எந்தன் நெஞ்சில்ல் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்...
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே.....

பாடல் ஒலிக்கிறது என் மனதிலும் பாடசாலை சம்பவமொன்று நினைவு வருகிறது.

இந்தப் பாடலை O/l படிக்கும் போது பாடசாலையில் ஒரு நாள் எதேச்சையாக பாடிக்கொண்டு போனேன்.  என் பின்னால் வந்த மாணவி ஒருத்தி சீ... போடா என்று
வெட்கப்படுக்கொண்டே ஓடினாள் யாரென்று திரும்பிப் பார்த்தால் என் நண்பி பாஹிமா... ஏன் அப்படி வெட்கப்பட்டாள் அவள்? என்று யோசித்த போதுதான் புரிந்தது.
 நான் பாடிய பாடல் வரிகள்தான் காரணம் என்று

எந்தன் நெஞ்சில்ல் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்... என்ற வரிகள் அவளுக்கு

எந்தன் நெஞ்சில் பாஹிமா
உன் எண்ணம் பாஹிமா

என்று கேட்டிருக்கிறது...... ஹ்ம்ம்ம்ம்ம்

அதுக்கப்புறம் விடுவமா நாங்க... பாஹிமாவை எங்க பார்த்தாலும் எந்தன் நெஞ்சில்ல் பாஹிமா
உன் எண்ணம் பாஹிமாதான்..... அவளும் முறைச்சிட்டு ஒரே ஓட்டமாய் ஓடிடுவாள்...... ஹ்ம்ம் அது ஒரு காலம்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

சுதந்திர தின வாழ்த்துக்கள்பல்கலைக் கழக நாட்களில் பல சிங்கள நண்பர்களோடு முரண்பட்டுக்கொண்டதும், வாக்குவாதப்பட்டதும் இலங்கை-பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டிகள் நடைபெறும் நாட்களில்தான்.

என்னதான் இலங்கை எம் தாய்நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு உயிரைக் கொடுத்து நாம் ஆதரவு வழங்கினாலும் சில சிங்கள நண்பர்களுக்கு என்னவோ நாம் பாக்கிஸ்தான் ஆதரவாளர்கள் என்கிற நினைப்புதான்.

ஹொஸ்டலில், கெண்டீனில் உள்ள டீவிகளில் இலங்கை-பாக்கிஸ்தான் போட்டிகளைப் பார்க்கும்போது இலங்கை அணி வீரர்கள் பாக்கிஸ்தான் விக்கட்டினை வீழ்த்திவிட்டாலோ அல்லது எமது துடுப்பாட்ட வீரர்கள் 4 , 6 என விளாசிவிட்டாலோ அவர்கள் எம்மை நக்கலடிப்பதும் கேலி செய்வதும் வழக்கம்.
இலங்கை அணி வென்றுவிட்டால் அவர்கள் எங்களை வென்றுவிட்டதாக எப்படி அடி? ”என்று நக்கலாகக் கேட்பதும். இலங்கை பாக்கிஸ்தானிடம் தோற்றுவிட்டால் இப்போ உங்களுக்கு சந்தோசம் என்ன? பாருங்கடா அடுத்த மெச்ல அடிப்போம் என்று சவால் விடுவதும் பல சிங்கள நண்பர்களது வாடிக்கை.

அருகில் இருந்து நம்மை அவதானித்த பின்னரும் இலங்கை அணியின் ஒவ்வொரு வெற்றியின் போதும் எமது மகிழ்ச்சியைப் பார்த்த பின்னரும் சிலர் இப்படிக் கேட்பது வேதனை. அதனால் இலங்கை-பாக். போட்டிகள் நடைபெறும்போது சிங்கள நண்பர்களோடு சேர்ந்து பார்ப்பதையே தவிர்த்துவந்தேன்.

இப்படித்தான் ஒரு முறை இலங்கை அணி வெல்லவேண்டும் என மிகவும் எதிர்பார்த்த ஒரு போட்டியில் இலங்கை அணி தோற்றுவிட்ட கவலையோடு நான் பல்கலைக் கழகம் செல்கையில் என்னோடு நன்றாகப் பழகிய சிங்கள நண்பனொருவன் இப்போது உங்களுக்கு உள்ளுக்குள்ள நல்ல சந்தோசமா இருக்குமே.. ஏண்டா இப்படி துரோகிகளா இருக்கீங்க?” என்று என்னிடம் கேட்க நான் அவனோடு வாக்குவாதப்பட்டு பல்கலைக் கழகப் பிரியாவிடையின் போதும் அவனோடு பேசவே இல்லை.

இன்றைய சுதந்திர தின நிகழ்வுகளின் போது எனக்குள் இந்த பழைய ஞாபகங்கள் வந்து சென்றன.

இலங்கையில் பிறந்து வளர்ந்து தாய் நாட்டு பற்றோடு இருக்கும் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்துக்கு தமது நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டிய துர்ப்பாக்கியம். எமது நாட்டுப் பற்றை நிரூபிக்கவேண்டியது சிங்களவர்களுக்கு அல்ல நாட்டிற்கே.

எவன் என்ன சொன்னாலும் எத்தனை பலசேனாக்கள் ஊளையிட்டாலும் நாம் என்றும் இலங்கையரே. எம் நாட்டின் மீதான பற்று பாசம் ஒரு போதும் குறைந்துவிடாது.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS