*** நாட்குறிப்பில் ஒரு பக்கம்…***
2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துக்கொண்டிருந்த காலம்.
அப்பொழுது நான் பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றலில் பகுதிநேர அறிவிப்பாளராக கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.
ஒரு நாள் காலையில் உல்லாச வேளை நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தேன். நிகழ்ச்சியில் 45வது நிமிடத்தில் தங்கப் புதையல் என்று ஒரு பகுதி அதில் பழைய பாடல் போடவேண்டும். நான் MGR இன் விவசாயி படத்தில் ”கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி” என்னும் பாடலை தெரிவு செய்து ஒலிக்கவிட்டிருந்தேன்.
பாடல் ஒலித்துக்கொண்டிருக்கையில் அவசர அவசரமாக சிரேஸ்ட்ட அறிவிப்பாளர்கள் இருவர் ஒலிபரப்பு உதவியாளரின் பகுதிக்குள் நுழைந்து ஒலிபரப்பு உதவியாளரோடு ஏதோ பேசினர். உடனே ஒலித்துக்கொண்டிருந்த பாடல் நிறுத்தப்பட்டு வேறொரு பழைய பாடல் ஒலிபரப்பானது.
எனக்குப் புரியவே இல்லை. அறிவிப்பாளர் பகுதியில் இருந்து கண்ணாடியினூடாக அதனை அவதானித்துக்கொண்டிருந்த நான் ஒ.ப.உதவியாளரின் பகுதிக்குச் சென்று ”ஏன் பாட்டை மாற்றினீர்கள்” என்று கேட்டேன்.
அப்பொழுது அங்கிருந்த இரு சிரேஸ்ட அறிவிப்பாளர்கள் இருவரும். ”தம்பி நாங்கதான் அந்தப் பாடலை மாற்றச் சொன்னோம். நல்ல பாடல்தான் நல்ல தெரிவுதான் ஆனால் நாடு இப்போதிருக்கும் சூழலில் இந்த அரசியல் சூழலில் இந்தப் பாடல் பொருத்தமற்றது. இந்தப் பாடல் முழுதும் ஒலிபரப்பானால் உங்களுக்குதான் பிரச்சினை வரும். உங்ககிட்ட Explanation கேட்பாங்க. அதான் நிறுத்தினோம். இல்லன்னா உங்களுக்கும் பிரச்சினை எங்களுக்கும் பிரச்சினை. இனி தேர்தல் முடியும்வரை இவ்வாறான அரசியல் கருத்துப்பாடல்களை ஒலிபரப்பாதீங்க”. என்றனர்.
எனக்கு அந்தப் பாடல் ஒலிபரப்ப எந்த உள்நோக்கமும் இருக்கவில்லை. பிடித்த பாடல் என்பதால் ஒலிபரப்பியிருந்தேன்.
“அப்டி என்ன அண்ணா இருக்கு அந்தப் பாட்டுல.?” கேட்டேன்.
”அந்தப் பாடலை இறுதிவரை தனியாகக் கேட்டுப் பாருங்கள் புரியும்” என்று சொல்லிட்டுப் போயினர்.
அந்தப் பாடலை Preview இல் ஒலிக்கவிட்டுக் கேட்டேன்.
சர்ச்சைக்குரிய அந்த வரிகள் இவைதான்.
//இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேணும் எங்கும் ஒரே சின்னக் கொடி -அது
பஞ்சம் இல்லை என்னும் அன்னக் கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக் கொடி//
குறிப்பு : அப்பொழுது ஜனாதிபதிக்கெதிராக போட்டியிட்ட சரத் ஃபொன்சேகாவின் தேர்தல் சின்னம் “அன்னம்”