RSS

லலித் மோடிக்கு ஆப்பு ரெடி........

ஐ.பி.எல் போட்டிகளின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவிருகின்றது. இறுதிப் போட்டியில் தொடர் முழுவதும் சிறப்பாகச் செயற்பட்டுவந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.
















மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் சச்சின் டெண்டுல்கர் இறுதிப் போட்டியில் ஆடுவது சந்தேகத்துக்கிடமாகவுள்ளது. கையில் ஏற்பட்ட காயமே இதற்குக் காரணம்.அவர் விழையாடாதவிடத்து சஹீர்கான் தலைவராகலாம்.


எது எப்படியோ ஐ.பி.எல் போட்டிகள் முடிவை எட்டியிருந்தாலும் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளும், வெளியாகிவரும் தகவல்களும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

ஆரம்பம் முதலே ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாக பல சர்ச்சைகள் நிலவி வந்தாலும் அவை லலித் மோடியின் பண பலம், அரசியல் செல்வாக்கு என்பவற்றால் முடக்கப்பட்டிருந்தன. இருந்த போதும் மெல்லப் புகைந்துகொண்டிருந்த பிரச்சினைகள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கும் லலித் மோடிக்கும் இடையிலான முறுகள் நிலை காரணமாக பூதாகரமாகியுள்ளன.

ஐபிஎல் கொச்சி அணியில் ரூ.70 கோடி மதிப்புள்ள பங்குகளை தன் தோழிக்கு இலவசமாக சசி தரூர் பெற்று தந்ததாக சர்ச்சை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து சசி தரூர் தன் அமைச்சர் பதவியை கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஏப் 18) ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாகவும்,லலித் மோடி தொடர்பாகவும் ஏராளமான பிரச்சினைகளும் மர்மங்களும் வெளிவரத் தொடங்கின.

இதன் ஒரு கட்டமாக ஐ.பி.எல் தலைவர் லலித் மோடி, தன் நெருங்கிய கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் வருமான வரித் துறை வசம் இருப்பதாக,

ஏப் 19 2010 தேதியிட்ட எகானமிக் டைம்ஸ் நாளிதழ், முதல் பக்க செய்தி வெளியிட்டிருந்தது.

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடப்பதாக எகானமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியை ஐபிஎல் தலைவர் லலித் மோடி திட்டவட்டமாக மறுத்திருந்தார்.


இது தொடர்பில் லலித் மோடி கூறுகையில், “எகானமிக் டைம்ஸ் வெளியிட்ட சூதாட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது. 20/20 ஆட்டங்களின் பெயரை கெடுக்கும் நோக்கில் இந்த செய்தி வெளியிடப் பட்டுள்ளது. இதனை வெளியிட்ட எகானமிக் டைம்ஸ் நாளிதழ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப் படும்.” என்றார்.



இது இப்படி இருக்க லலித் மோடி தொடர்பில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டத்தில் போட்டி முடிவுகள் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அதன்படியே போட்டிகள் முடிவடைகின்றன. ஐ.பி.எல் தலைவர் லலித் மோடியே ஆட்டங்களின் முடிவைத் தீர்மானிப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.



சில ஆண்டுகளுக்கு முன்னர் பல தோல்விகளைச் சந்தித்து வந்துள்ள லலித் மோடி ஐ.பி.எல் தலைவரான பிறகு ஒரு ஜெட் விமானம், ஒரு அதி வசதி படகு, பி.எம்.டபிள்யூ கார்கள் என்று நினைத்துப் பார்க்கமுடியாதளவு சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



இந்த குற்றச் சாட்டுகள் தொடர்பில் உரிய முறையில் லலித் மோடி பதிலளிக்காததால் அவர் மீதான சந்தேகம் வலுப்பெற்றுவருகின்றது.

இவரது டிவிட்டர் பதிவுகளே இவருக்கு எதிரான சந்தேகங்களை அதிகரிக்கச் செய்துள்ளன.

போட்டியின் இடையில் வழங்கப்படும் யுக்தி வகுப்பு இடைவேளையானது சூதாட்டக்காரர்களுக்கு போட்டி நிலைமையை மாற்ற லலித் மோடியினால் செய்துகொடுக்கப்பட்ட ஏற்பாடே என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஐ.பி.எல் போட்டிகள் அனைத்திற்கும் வி.ஐ..பி. அந்தஸ்துடன் வருகை தரும் டெல்லியைச் சேர்ந்த சமீர் துக்ரல் என்ற பிரமுகர் லலித் மோடியின் பினாமியாக சூதாட்டங்களை நடத்தி வருவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

ஐ.பி.எல் அணிகளின் வெளிப்படையான உரிமையாளர்களாக ஓரிருவரே வெளிப்படுத்தப்பட்டாலும் மறைமுகமாக பலர் இவற்றில் பங்குதாரர்களாக இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. பல அரசியல்வாதிகளும் முக்கிய புள்ளிகளும் தங்கள் கறுப்புப் பணங்களை ஐ.பி.எல் போட்டிகளில் முதலீடு செய்துள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தற்போது உசாராகியுள்ள இந்திய வருமான வரித் துறையினர் ஐ.பி.எல் இல் விழையாடிவரும் அணிகளின் உரிமையாளார்கள்,பங்குதாரர்கள்,வீரர்கள், பணத்தினை பங்கீடு செய்யும் முறை, ஏலம் மற்றும் அணியை விற்பனை செய்தமை தொடர்பான அனைத்து விபரங்களையும் கேட்டு பி.சி.சி.ஐக்கு அழைப்பானை அனுப்பியுள்ளனர். இதன் மூலமாக இன்னும் பல உண்மைகள் வெளிவரலாம் என்று நம்பப்படுகின்றது.


இது இப்படி இருக்க...

லலித் மோடி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களான ஐ.பி.எல் அணிகள் தொடர்பில் தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவியமை, வருமான வரி மோசடி, ஐ.பி.எல் கணக்குகளில் மோசடி, தொலைக்காட்சி உரிமம் வழங்குவதில் மோசடி போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரை விசாரித்து அவரது தலைமைப் பதவியைப் பறிக்க பி.சி.சி.ஐ முடிவுசெய்துள்ளது.


வருகிற 26-ந்தேதி ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் மும்பையில் நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் லலித்மோடியின் தலைவர் பதவி பறிக்கப்படும் என நம்பப்படுகிறது.


இதற்கிடையே ஐ.பி.எல். ஆட்சி மன்றகுழு கூட்டத்தை தான் மட்டுமே கூட்ட முடியும். இந்த கூட்டம் சட்ட விரோதமானது. சட்டப்படி செல்லாது என்று லலித்மோடி கூறியுள்ளார். மேலும் தான் அந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

அதோடு கூட்டத்தை மே 1-ந்தேதிக்கு தள்ளி வைக்குமாறும் கேட்டுள்ளார்.

பி.சி.சி.ஐ தலைவர் சசாங்க் மனோகர் இதனை மறுத்துள்ளார்.

கிரிக்கெட் வாரியத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மோடி இல்லாமலே இந்த கூட்டம் நடைபெறும். 26-ந்தேதி திட்டமிட்டபடி ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெறும். அதில் எந்த விதமாற்றமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கட் வாரியமான பி.சி.சி.ஐயின் அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருப்போம்…...

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஏப்ரல் என்கெளன்டர்

இந்த ஏப்ரல் விடுமுறைக்கு எங்காவது போகனுமே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே நண்பர் பாசித்திடமிருந்து அழைப்பு வந்தது, நாளை காலை உல்லை போவம் வாரீங்களா என்று கேட்டார். சரி என்று ஏற்றுக் கொண்டேன்.



ஞாயிற்றுக் கிழமை காலை 7மணியளவில் ஊரிலிருந்து உல்லை நோக்கிய எங்கள் பயணம் ஆரம்பமானது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நாங்கள் நால்வர். ஏற்கன்வே அதிகாலையிலேயே அங்கே சென்றிருக்கும் நண்பர்களோடு இணைந்து உல்லையவே கலக்குற. இதுதான் திட்டம்.



நான் எனது சகோதரரின் passion plus மோட்டார் சைக்கிளிலும், பாசித் நண்பரின் pulsar மோட்டார் சைக்கிளிலும் புறப்பட்டோம். சம்மாந்துறையிலிருந்து உல்லை ஏறத்தாள 72கி.மீ

காலை உணவு, எரிபொருள் நிரப்பியமை என்பவற்றைச் சேர்த்து 72 கி.மீ தூரத்தை ஒன்றரை மணித்தியாலத்துக்குள் ஓடி முடித்தோம்.



ஓட்டமா அது. சும்மா பறந்தோமில்ல. எனது மோட்டார் சைக்கிளின் அதியுயர் வேகம் மணித்தியாலத்திற்கு 90கி.மீ. சம்மாந்துறையிலிருந்து அக்கரைப்பற்று வரையில் சராசரியாக மணித்தியாலத்திற்கு 70 கி.மீ வேகத்திலும் அக்கரைப்பற்றிலிருந்து உல்லைவரை சராசரியாக மணித்தியாலத்திற்கு 85 கி.மீ வேகத்திலும் பறந்தோம். எனது மோட்டார் சைக்கிளின் பின் டயரில் எந்த விதமான தவாளிப்புகளுமே இல்ல. இப்படியானதொரு நீண்ட தூரப் பயணத்திற்கு அதனைப் பயன்படுத்தவே முடியாது, ஆனாலும் வீதிகள் எல்லாம் புதிதாக அமைக்கப்பட்டு நேர்த்தியாக இருந்தமையால் நம்பிக்கையோடு அதியுயர் வேகமான மணிக்கு 90 கி.மீ வேகத்தில் அதிக தூரத்தைக் கடக்க முடிந்தது.



காலை 8.30 மணியளவில் உல்லை வந்தாச்சு.

அங்கிருந்த நம்ம நண்பர்களோடு இணந்து உல்லையை அதாவது கடற்கரையை உற்சாகமாய் ஒரு வலம் வந்தோம். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மக்களின் வருகை அதிகமாகவிருந்தது.



உயரமான பறன் ஒன்றின் மேலேறி அக்கடற்கரையின் வனப்பைக் கண்டுகளித்தோம். அந்த பறன் மீதிருந்தே ஏராளமான புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். பின்னர் 9 மணியளவில் குளிப்பதற்காக கடலில் இறங்கினோம் சொன்னா நம்பமாட்டீங்க சுமார் 6 மணித்தியாலங்கள் கடலை விட்டு வெளியில் வரவே இல்லை.

(கடலைக் காணாமல் கண்டியா..? என்னதான் குளிச்சாலும்…….. இது போன்ற மொக்கை கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது.)



பந்து மாற்றுதல், சுழியோடுதல், மணலினால் குளிப்பாட்டுதல், மணலினால் தாக்குதல், அலையை எதிர்த்து நிற்றல் என்று ஏகப்பட்ட விளையாட்டுக்கள். பந்து மாற்றி விளையாடும் போது எதிரணியைச் சேர்ந்த ஒருவனின் நகம் பட்டு எனது தோள்பட்டையில் சிறிய காயம், அதிலும் கடல் நீர் படுவதால் பயங்கர எரிச்சல் வேறு என்ன செய்ய…..



இவ்வாறு 6 மணித்தியாலக் குளியல்.விளைவு ஏற்கனவே அஜித் மாதிரி அழகா வெள்ளையா இருந்த நான் கொஞ்சம் கறுப்பாகிட்டன்.

(பின்ன அந்த வெயிலுக்குள்ள 6 மணி நேரம் குளிச்சா என்ன பண்ணும்.)



ஒருவாறாக அங்கிருந்து புறப்பட்டு பகல் உணவையும் உண்டுவிட்டு 3.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டோம். இப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர். மீண்டும் சராசரியாக மணித்தியாலத்திற்கு 85 கி.மீ வேகத்தில் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.



எனக்கு முன்னால் Pulsarஇல் சென்று கொண்டிருந்த பாசித்தும், றுமைஸும் (பின்னாலிருந்தவர் றுமைஸ்) விழுந்து எழும்பிக் கொண்டிருந்தார்கள். வேகமாக வந்து ஒரு வளைவில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் சறுக்கி இருவரும் விழுந்துவிட்டார்கள். மோட்டார் சைக்கிள் விழுந்து சுமார் 10 அடி தூரத்திற்கு சறுக்கிச் சென்றிருந்தது. நல்ல வேளை வீதியின் மறு ஓரத்தில் மணல் இருந்ததால் பாரிய காயங்களோ, சேதங்களோ வரவில்லை. தெய்வாதீனமாக எதிரே எந்த வாகனமும் வராததினால் ஒன்றும் நடக்கவில்லை. இல்லையேல்…………………………..

றுமைஸின் தலைக் கவசத்திலுருந்த காயத்தைப் பார்த்த போது புரிந்தது அவர் அந்த தலைக் கவசத்தைப் போடாது விட்டிருந்தால் என்ன ஆயிருக்குமென்று… உண்மையில் மரண அடி அது.



எல்லாவற்றையும் சீர் செய்து கொண்டு, பயண வேகத்தைக் குறைப்பதென்ற முடிவோடு புறப்பட்ட போது பாசித்தும் றுமைஸும் கேட்ட முதல் கேள்வி எந்த வழியால நாம வந்தம், இப்ப எதால போகப்போறம் என்றதுதான். காரணம் விழுந்த அதிர்ச்சி ஒன்று மற்றது மோட்டார் சைக்கிள் சுழன்று; வந்த திசைக்கு எதிர் திசையை நோக்கியிருந்தது.



வேறு ஒருவரை வாகனத்தை ஓட்டச் சொல்லிவிட்டு அவ்விருவரையும் எங்களின் மோட்டார் சைக்கிள்களில் வருமாறு அழைத்தோம், இல்லை எங்களால் சமாளிக்க முடியும் என்று அவர்கள் கூறினர், பயணம் தொடர்ந்தது.



ஒலுவில் கடற்கரைக்குச் சென்று அங்கும் சிறிது நேரம் கலர்ஸ் காட்டிவிட்டு மாலை 6.30 மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மூணு மணியாயிடுச்சே இன்னும் கிளம்பலையா..??

என்ன கொடும சார் - பகுதி 2


காதல் புனிதமானது, அழகானது. இனிமையான உணர்வு அது. ஆனால் அந்தக் காதல் இப்போது அதே புனிதத் தன்மையோடு, அதே அழகோடு இருக்கிறதா என்றால் அது சந்தேகமே….




பருவகாலச் சீட்டு மாதிரி காலத்துக்குக் காலம் காதலிகளையும், காதலர்களையும் மாற்றிக் கொள்ளும் நாகரீகமே இப்போது அதிகம் உள்ளது.

உண்மையான காதல் என்றால் அந்தக் காதலின் காரணமாக படிப்பு வீணாவது, பெற்றோருடன் சண்டை வருவது, எதிர்காலம் கேள்விக்குறியாவது எதுவுமே இருக்கக் கூடாது.

பல மணி நேரம் ஃபோனில் பேசிப் பேசியே தங்கள் படிப்பையும், எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கிய பல காதலர்களை நான் பாத்திருக்கின்றேன். அவர்களின் அட்டகாசங்களை எனது முன்னைய பதிவில்(என்ன கொடும சார் - 1 இல்) குறிப்பிட்டுள்ளேன்.


இன்று விகாரமகா தேவிப் பூங்கா காதலர்களைப் பற்றி…………………..

அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. நம்ம நண்பர்கள் சிலரை ஒன்றாக சந்திக்க ஒரு வாய்ப்புக் கிட்டியது. எல்லோரும் சேர்ந்து மருதானையிலுள்ள சம்மாந்துறை சாப்பாட்டுக் கடையில் பகல் உணவை உண்டுவிட்டு எங்காவது போகலாம் என்று திட்டம் போட்டோம். வெயிலாக இருப்பதனால் முதலில் விகாரமகா தேவிப் பூங்கா சென்றுவிட்டு பிறகு காலிமுகத்திடல் போவதாக முடிவெடுத்தோம்.



முதலில் விகாரமகா தேவிப் பூங்கா. இரண்டு மணியளவில் விகாரமகா தேவிப் பூங்கா போயாச்சு. குச்சி ஐஸ், பஞ்சுமிட்டாய், ஐஸ்கிறீம் என்று விதவிதமா வாங்கிக் கொட்டிக்கொண்டே பார்கினை ஒரு ரவுண்ட் அடிச்சா…… சீ……அத என் வாயால சொல்லணுமா…? (வாயாலதான் சொல்லனும்)


அழகான மரங்களுக்கிடையில் அசிங்கமான காட்சிகள். யாரு பெத்த பிள்ளைகளோ வேற இடம் கிடைக்காமல் இங்கவந்து…………………. சுற்றி என்ன நடக்குது என்று தெரியாமலேயே உல்லாச உலகம் எனக்கே சொந்தம் என்ற எண்ணத்தில் உல்லாசம் கண்டுகொண்டிருந்தார்கள். வித விதமான கோணங்களில்.


(அப்போ... இதயெல்லாம் நானும் ரசிச்சனா என்டுதானே கேக்குறீங்க..?? எனக்கு வேற வேல இல்ல. நமக்கு தெரிஞ்ச யாராவது இருகாங்களா.. என்டு நம்ம நண்பர்களோட சேர்ந்து சும்மா ஒரு நோட்டம்விட்டன் அவ்வளவுதான்)

இந்த காட்சிகளைக் கண்டுகளிப்பதற்கென்றே இன்னுமொரு கூட்டம். கையில் கமராக்களுடன். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாமே இருந்தது யாருக்கு பாத்துடு போறவங்களுக்கு.



சரி இவற்றையெல்லாம் பார்க்க சகிக்காமல் ஓரிடத்தில் அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் சரியாக 3 மணியாகும் போது காவலர்கள் எல்லோரும் விசில் ஊதிக்கொண்டு வந்தார்கள். அப்போது புதர்களுக்குள்ளிருந்தும், மறைவான இடங்களிலிருந்தும் சோடி சோடியாக ஏராளமானோர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். இவ்வளவு பேரும் எங்கிருந்தார்கள் என்று யோசிக்குமளவிற்கு எங்கெங்கெல்லாமிருந்தோ சாரை சாரையாக சோடிகள். வெளியே வந்தவர்களில் அனேகமானோர் பார்கினைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சிலர் எதுவுமே நடக்காதவர்கள் போல ஆங்காங்கே அமர்ந்து கொண்டார்கள்.



எனக்கு எதுவுமே புரியவில்லை. அப்போது என் நண்பன் சொன்னான். 3 மணி ஆனால் காவலர்கள் இப்படி ஊதிக்கொண்டு வருவார்களாம் அப்போது புதருக்குள் சில்மிசங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமாம். காரணம் சிறு பிள்ளைகளும், குடும்பத்தவர்களும் வரும் நேரமாம். அந்நேரத்தில் இவர்களின் லீலைகள் வருபவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடுமாம்… அதனால் அவர்களை வெளியேற்றுகின்றார்களாம்….

என்ன கொடுமை சார் இது…??


அநாச்சாரங்களுக்கும், கலாச்சார சீரழிவுகளுக்கும் ஒரு களம். அவர்களின் காம லீலைகளை அரங்கேற்ற ஒரு மேடை. தேவையா இது…. அதுவும் 3மணிவரை எதுவேண்டுமானாலும் பண்ணலாம் 3 மணிக்கு பின்னர் வெளியேறிவிட வேண்டும் என்ற கட்டுப்பாடு வேறு.. ஏன் 3 மணிக்கு முன்னர் எந்தச் சிறு பிள்ளைகளும் பார்க்கிற்கு வருவதில்லையா?? இல்லை எவரும் குடும்பத்தோடு வருவதில்லையா?



அநேகமாக குடும்பத்தோடு சுற்றுப் பயணம் வருபவர்களும், சுற்றுலா வரும் பாடசாலை மாணவர்களும் தங்கள் பகலுணவை இங்குதான் வந்து உண்பார்கள். அவர்களுக்கு இவை அசெளகரியமில்லையா?? இவர்களின் காமக் கூத்துகளைப் பார்க்கும் பிஞ்சு உள்ளங்கள் வழி கெட்டுவிடாதா?



இந்த சோடிகளுக்கு வேண்டுமானால் தனியே ஒரு காட்டினை உருவாக்கி அங்கே விதம் விதமான புதர்களையும் வளர்த்து ”மனிதர்கள் உட்செல்லத் தடை” என்று பெயர்ப்பலகையையும் கொழுவிவிட்டால் எந்த இடையூறுமில்லாமல் உல்லாசம் காணுவார்களே இந்தக் கிராதகர்கள்.



மாலை 3 மனியளவில் விகாரமகா தேவிப் பூங்கா வாசலில் நின்று கொண்டால் நிறையப் பேரின் வண்டவாளங்களை கண்டுவிடலாம்.

(அப்பாடா ஏதோ நம்மளால முடிஞ்சது… இனி நம்ம வேலையப் பாப்பம்…..)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS