RSS

நேத்து ராத்திரி யெம்மா....................



இன்று சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் ஆசிரியர் இடமாற்ற பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்கும்
முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது. இதில் கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ நிசாம், சம்மாந்துறை வலயக்
 கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்
பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மாலை 3 மணியளவில் ஆரம்பமான இக்கூட்டத்தை அறிந்த  ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் சம்மாந்துறை பிரதேச செயலாளர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர். கட்டடத்திற்குள் நுழைய முற்பட்டபோது பொலீசார் தடுத்ததால் கட்டிடத்தை சுற்றிவழைத்தனர்.
முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் மக்கள் கூட்டம்
முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் மக்களில் இன்னொரு தொகுதி



சுமார் 6 மணித்தியாலங்களுக்கு மேலாக கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் வெளியேற முடியாவண்ணம்
 சுற்றி வழைத்து முற்றுகையிட்டனர். நிலைமயினைக் கட்டுப்படுத்த மேலதிக பொலீசார் வரவழைக்கப்பட்டபோதும் மக்கள் தமது முற்றுகையைத் தளர்த்தவில்லை.

ஆசிரியர் இடமாற்றத்தினை ரத்துச் செய்ய வேண்டும், வலயக் கல்விப்பணிப்பாளரை உடனடியாக இடமாற்ற வேண்டும்
ஆகிய கோரிக்கைகளுக்கு உறுதியான முடிவு கிடைக்கும் வரை அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிய மக்கள்
அதில் விடாப்பிடியாக நின்றனர்.


இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எழுதி கையொப்பமிட்ட கடிதம் மக்கள் முன்னிலையில் கொண்டுவரப்படுகையில் 
இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எழுதி கையொப்பமிட்ட கடிதம் எல்லோர் முன்னிலையிலும் காட்சிப்படுத்தப்படுகையில் 

இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எழுதி கையொப்பமிட்ட கடிதம் சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் மக்கள் முன்னிலையில் வாசிக்கப்படுகையில்


இறுதியாக இரவு 9 மணியளவில் மாகாண கல்விப் பணிப்பாளர் தனக்குள்ள அதிகாரத்தின்படி ஆசிரிய இடமாற்றத்தினை
தற்காலிகமாக ரத்துச் செய்வதாக வெள்ளைத் தாளில் எழுதி ஒப்பமிட்டார். இந்த கடிதம் பொலிஸ் உயர் அதிகாரி (ஏ.எஸ்.பி என நினைக்கின்றேன்)
முன்னிலையில் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் கைய்யொப்பமிடப்பட்டு பின்னர் இது மக்கள் முன்னிலையில் சம்மாந்துறைப்
பொலிஸ் பொறுப்பதிகாரியினால் வாசித்துக்காட்டப்பட்டது.

ஓரளவு திருப்தியடைந்தாலும் தற்காலிகமாக என்பதை மாற்றி நிரந்தரமாக என்று உறுதியளிக்குமாறு மீண்டும் கோசமிட்டனர்.
மீண்டும் சிக்கல் நிலை தோன்றியது.இருந்தும் தனக்குள்ள அதிகாரத்தின்படி தற்காலிகமாகத்தான் இடை நிறுத்தமுடியும் என்று கூறிய
மாகாணப் பணிப்பாளர் இது தொடர்பில் விசேட கவனம் எடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.
முற்றுகை வெற்றிகரமாக முடிந்ததையிட்டு மகிழ்வுடன் திரும்பிச் செல்லும் ஊர் மக்கள்

இதன் பின்னர் மக்கள் ஓரளவு அமைதியடைந்தனர்.அத்தோடு  இரவு 10 மணியளவில் பொலீசாரின் விசேட பாதுகாப்போடு
மக்களின் கூக்குரலுக்கு மத்தியில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் கட்டடத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் 10.15 அளவில் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் மன்சூர் அவர்கள் மக்களின் கூச்சலுடன் கூடிய உணர்ச்சி
அலைகளுக்கு மத்தியில் பொலீசாரின் தீவிர பாதுகாப்பில் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் செல்லும் போது வாடிய அச்சம் கலந்த
முகத்துடன் சென்றதைக் காண முடிந்தது. பலரது அபிமானம் வென்ற முன்னாள் உயிரியல் பாட ஆசிரியரான இந்நாள் சம்மாந்துறை
வலயக் கல்விப் பணிப்பாளரின் இன்றைய நிலையை நினைக்கையில் மனதுக்கு மிகவும் கவலை தந்தது.

சம்மாதுறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் பொலிஸ் பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்படுகையில்
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல் நிலை இவ்வாறு தொடர இவ்விடமான்றங்களை தற்காலிகமாக இடை நிறுத்த ஜனாதிபதி உத்தவிட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

றோஸ் போல் - ஒரே காமெடியாப் போச்சுது..



நேற்று இலங்கை இங்கிலாந்து Test போட்டி நடக்கும் போது commentators அடிக்கடி சொன்ன விசயம். றோஸ் போல் Test.


றோஸ் போல் Test மெச்ல டில்ஸான் விளையாட மாட்டார், அவருக்கு பதிலா  யாரு விளையாடுவார்?
றோஸ் போல் Test மெச்ல இலங்கை அணிக்கு யாரு தலைமை தாங்குவார்…? றோஸ்போல் Test மெச்லஅண்டர்சன் வந்தா யாரு வெளிய போவார் அப்படின்னு  அடிக்கடி றோஸ் போல் றோஸ் போல்னே பேசிட்டு இருந்தாங்க.

  
சரி அடுத்த மெச்ல ”ரெட் போலுக்கு” பதிலா ”றோஸ் போல்” பயன்படுத்தி விளையாடப்போராங்க போல. ஏற்கனவே அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை Test  போட்டிகளின் சுவாரஸ்யத்தக் கூட்டுறதுக்கு டெஸ்ட் போட்டிகள இரவு பகல் ஆட்டமா நடாத்தப்போறம் அதுல சிவப்பு பந்துக்குப் பதிலா றோஸ் பந்து பயன்படுத்தப்படும் அப்படின்னெல்லாம் அறிக்கை விட்டுட்டு இருந்திச்சா…ஒருவேள அப்படி ஒரு மெச்சாத்தான் இது இருக்குமோன்னு நினச்சு.

 இந்த வரலாற்று முக்கியமான நிகழ்வு சம்பந்தமான தகவல்கள சட்டுபுட்டுன்னு  திரட்டி நம்ம ப்லொக்ல ஒரு பதிவா போட்டுடலாமேன்னு கூகுள் அங்கிள்கிட்ட ஒரு சேர்ச்ச போட்டா...

அது றோஸ் போல் Rose Ball  இல்ல Rose Bowl அதாவது 3வது டெஸ்ட் நடக்கப்போற கிரவ்ன்டோட பெயராம் அது... அவ்வ்வ்வ்வ்


ஒரே காமெடியாப் போச்சுது…..

ஆனாலும் ஒன்னுங்க சல்லடை போட்டு தேடினதுல சில விசங்கள தெரிந்துகொள்ள முடிஞ்சதுங்கோ..

1.2001
ம் ஆண்டு முதல் பாவனையிலுள்ள இந்த மைதானத்துல முதலாவது ஒரு நாள் போட்டி 2003ம் ஆண்டுதானுங்க நடந்திருக்கு.

2.Rose Bowl  மைதானத்துல இதுவரை Test  போட்டிகள் நடந்ததே இல்லீங்க.

3.ஜூன் 16ம் திகதி இலங்கை -இங்கிலாந்து அணிகள் மோதும் Test  போட்டிதானுங்க இந்த மைதானத்துல நடக்கப்போற கன்னி Test  போட்டியாமுங்க...

நீங்களும் பாத்துக்கோங்க:
1. 
http://en.wikipedia.org/wiki/Rose_Bowl_(cricket_ground)


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிட்டடிக்கிறது எவ்ளோ ரிஸ்க் இருக்கு தெரியுமா..?


பிட்டடிக்கிறது அவளவு ஈசியா போச்சா..?  அதுல எவ்ளோ ரிஸ்க் இருக்கு தெரியுமா..? 



ஒரு வருசமா தொடாத புத்தகத்த ஒரே நாள் ராத்திரல எடுத்து விடிய விடிய கண்ணு முழிச்சி வந்த கேள்வி எது வராத கேள்வி எது? வரப்போற கேள்வி எதுன்னு தெரிஞ்சிகிட்டு..  அத சின்னச் சின்னதா எழுதி அத உடம்பு பூரா அங்கங்க எடுத்து சொருகி... அந்த ஒடம்பு பூரா எங்கெங்க பிட்ட வெச்சிருக்கோம்னு அதுக்கு ஒரு மேப்ப போட்டு அந்த மேப்ப எடுத்துகிட்டு எக்ஸாம் ஹோளுக்கு போனா..

 
 


அங்க ஒரு முறட்டு வாத்தியார் வந்து நிப்பாரு. அந்த வாத்தியார சமாளிச்சி அக்கம் பக்கத்துல இருக்கிறவங்கள சமாளிச்சி இத சமாளிச்சி அத சமாளிச்சு உட்கார்ந்தா அந்த நேரம் பாத்து எக்சாம் இன்ஸ்பெக்சன் குரூப் வரும். அவிங்க பிடிச்சாங்கன்னா லைஃப்ஃபே போயிடும். அவிங்கள சமாளிச்சு….

அப்புறமா கேள்விய வாசிச்சு விளங்கி அது.. எந்த செக்சன்ல வருது..? அதுக்குரிய பிட்டு எங்க இருக்குன்னு... போட்டு வெச்ச பிட்-மேப்ல தேடி அது இருக்குற இடத்த கண்டு பிடிச்சி சுப்பர்வைசர் கண்ணுல மண்ணத் தூவிட்டு அந்த பிட்ட எடுத்து சின்னச் சின்னதா எழுதின பிட்ட.. ஜூம் பண்ணி வாசிச்சு. அத பேப்பர்ல எழுதுறதுக்குள்ள சீவன் போயிடும்.

அப்புறம் மத்தக் கேள்விகளையும் வாசிச்சி அதுகளுக்குரிய பிட்டுகளையும் தேடிப் பிடிச்சி அதையும் ஜூம் பண்ணி வாசிச்சி எழுதுறதுன்னா சும்மாவா..? அதுல எம்புட்டு ரிஸ்க் இருக்குன்னு தெரியுமா..?
 



கேள்விய வாசிச்சு விளங்கனும், அதுக்குரிய பிட்டு எங்க இருக்குன்னு மேப்ப பாத்து தெரிஞ்சுக்கனும். அந்த பிட்ட சுப்பர்வைசருக்கு தெரியாம எடுத்து ஜூம் பண்ணி வாசிச்சு அத பேப்பர்ல எழுதி பிட்ட உடம்புல எங்க இருந்து எடுத்தமோ அங்க வெக்கிறதுன்னா சும்மாவா..? இதுல டைமிங் எவளவு முக்கியமின்னு தெரியுமா..?


 
 
 இப்படி டைமிங்லையும் ரைமிங்லையும் பிட்டடிச்சிட்டிருக்கும் போது...அதுகுள்ள ஒருத்தன் பின்னாடி முதுக சொறீவான்.  அவனுக்கு என்ன வேணும்னு அவனப்பாக்காமலே தெரிஞ்சிகிட்டு… அவனுக்கும் பிட்ட காமிச்சி நம்மளும் பாசாகி அவனையும் சேர்த்துப் பாசாக்கி…. நீங்கெல்லாம் படிச்சி வாங்கின பட்டத்த... நாங்கெல்லாம் பிட்டடிச்சி வாங்குறதுல எவளவு ரிஸ்க் இருக்கு தெரியுமா..?

வீட்ல படிச்சிட்டு எக்சாம் ஹோள்ள போய் வாந்தி எடுக்கிற உங்களுக்கெல்லாம் எங்க தெரியப்போகுது பிட்டடிக்கிறதோட மகிம...?


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS