RSS

அவள் ஓஃப்லைன் போனாளே

அவள் பறந்து போனாளே, என்னை மறந்து போனாளே..

..................Its My Remix........

அவள் ஓஃப்லைன் போனாளே ,என்னை மறந்து போனாளே
நான் ஒன்லைன் வந்ததும் வேண்டுமென்றே (அவள்) ஓஃப்லைன் போனாளே

என் ஃபோட்டோக்கு லைக்கில்லை
என் போஸ்டுக்கு கொமெண்ட் இல்லை
என்னைக் கணக்கில் எடுக்கவில்லை
என் காதலை ஏற்கவில்லை (2)

fb இல் வேறு ஒப்சனில்லை
என் பிகர் (எனக்கு) ஒன்லைனில்லை
என்னோடு சற்றுக்கு அவளில்லை
யாரும் ஆறுதல் சொல்லவில்லை (2)

அவள் ஓஃப்லைன் போனாளே, என்னை மறந்து போனாளே
நான் ஒன்லைன் வந்ததும் வேண்டுமென்றே (அவள்) ஓஃப்லைன் போனாளே

என் சற்றினை ஒன்லைன் வைத்தேன்
அவள் வரும் வரை காத்திருந்தேன்
அவள் (ஒன்லைன்) வந்ததும் பார்த்தாளே
எனக்கு ஓஃப்லைன் போட்டாலே (2)

அவள் என்னை ஒதுக்கி வைத்தாள்
நான் அவளை ஒதுக்கமாட்டேன்
என் உயிரே அவள் அல்லவா
ஏனோ ஓஃப்லைன் போட்டுச் சென்றால்.......... (2)

அவள் ஓஃப்லைன் போனாளே என்னை மறந்து போனாளே
நான் ஒன்லைன் வந்ததும் வேண்டுமென்றே (அவள்) ஓஃப்லைன் போனாளே

(ரீமிக்ஸ் கவிஞர் : சுஹைல் )

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயமும் வடிவேலு காமெடியும்.....


பூச்சியத்தால் பெருக்குதல் என்று கணிதத்தில் ஒன்று உண்டு. அதாவது நாம என்னதான் கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல், சமன்பாடுகள் என போட்டு பக்கம் பக்கமா கணக்குச் செய்தாலும் ஏதாவது ஒரு பக்கத்தால் வரும் பூச்சியம் அதனோடு பெருக்குப்பட்டு விடை பூச்சியமாகிடும்.  

அது போலத்தான் நாம என்னதான் பில்டப்பு பண்ணி பக்கம் பக்கமா வசனம் பேசினாலும் எவனாவது ஒருத்தன் ஒத்த சொல்லால நம்மள நோஸ்கட் பண்ணிட்டு போயிடுவான் இதைத்தான் பூச்சியத்தால் பெருக்குதல் என்று சொல்லுவோம்.

இதேபோலத்தான் நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகையை முன்னிட்டு அரசு பல தயாரிப்புகள் ஏற்பாடுகள் செய்திருந்தது. அமைச்சர்கள் எம்.பி கள் என பலராலும் பல விடயங்கள் நவநீதம் பிள்ளைக்கு கூறப்பட்டது. எப்பாகத்திற்கும் சென்று அவர் யாரையும் சந்திக்க வசதிசெய்து கொடுக்கப்பட்டது. இந்த ஐஸ்வைத்தல்கள் எல்லாம் அரசாங்கத்தின் மீது அவருக்கு நன் மதிப்பு வரவேண்டும் அரசு பற்றி நல்ல கருத்துக்களை அவர் உலகுக்கு சொல்லவேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டது. ஆனால் இதையெல்லாம் ஒரு வாரமாக அனுபவித்துவிட்டு/அவதானித்துவிட்டு; போகும் போது அம்மையார் “இலங்கையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது” என்ற அறிக்கையை விடுத்துவிட்டு சென்றுவிட்டார். இது இலங்கை அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஐஸ்வைத்தல்களையும் பூச்சியத்தால் பெருக்கியதாகிவிட்டது.

இவற்றையெல்லாம் நினைக்கும் போது வடிவேலுவின் இந்தக் காமெடிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=tPqWjIagNcE

தோசை எப்படி செய்யவேண்டும் என்ற ஒரு பெரிய விரிவுரையே வடிவேலு வெயிட்டருக்கு கொடுப்பார் எல்லாத்தையும் ஆர்வமாகக் கேட்ட வெயிட்டர் மிகச் சாதாரணமாக அண்ணனுக்கு ஒரு தோசைனு சொல்லிட்டு போவார். இங்கு வடிவேலு - இலங்கை அரசு
வெயிட்டர்
- நவநீதம் பிள்ளை
தோசை மாஸ்டர்
- சர்வதேசம் / ஐ.நா

அரசியல் ஆய்வாளர் : அஹமட் சுஹைல் (நாந்தாங்கோ..........)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தம்புள்ளை-மஹியங்கனை-கிராண்ட்பாஸ் அடுத்து.........???

நோன்புக்கு கண்டி கொழும்புனு மாறி மாறி இஃப்தார் கொடுத்தானுங்க... இப்போ கிராண்ட் பாஸ்ல மொத்தமா எல்லாரும் சேர்ந்து பெருநாள் ட்ரீட் கொடுத்துட்டானுங்க......

ஒரு குழு வந்து பள்ளிய உடைக்கும்
இன்னொரு குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்
அங்கவெச்சு எல்லாருமா சேர்ந்து முடிவைத் திணிப்பானுங்க...


ஆக பெளத விவகார அமைச்சும் சரி, அரசும் சரி தங்கள் ஆசையை அடக்குமுறையை மத வெறியைக் காட்ட ஏதோ ஒரு சந்தர்ப்பத்தைப் பாத்திருக்கின்றது என்பது மட்டும் 100% புலனாகிறது.

 தம்புள்ளை பள்ளியில் ஆரம்பித்து... பொது பலசேனவின் மூலம் ஹலால் பிரச்சினை ஆரம்பித்து அதனை நீக்கியாச்சு,
அடுத்து மஹியங்கனைப் பள்ளி, அதனை அடுத்து மாடு அறுப்பது, இப்போது க்ராண்ட்பாஸ் பள்ளி...

இந்தப் பிரச்சினைகளையெல்லாம் ஆரம்பிப்பது யாரோ காடையர்களாக இருந்தாலும் கடைசியில் அந்தக் காடையர்களுக்குச் சார்பாகவே முடித்துவைப்பது அரசாக இருக்கிறது.
ஆகா அந்தக் காடையர்களுக்கும் அரசுக்கும் என்ன வித்தியாசம்?
அவர்கள் அரசின் பூரண அனுசரனண பெற்றவர்கள் என்பது சிறுபிள்ளையும் விளங்கிக்கொள்ளும் வெளிப்படை  உண்மை.

அரசின் சில உயர்மட்ட அமைச்சர்களின் அறிக்கைகளை படிக்கக் கிடைத்தது. படிக்கும் போது சிரிப்பும் கூடவே ஆத்திரமும் வருகிறது.

இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் அரசிற்கு எதிரான சக்திகளின் சதி நடவடிக்கையாம், அரசிற்கு அபகீர்த்தி ஏற்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளாம்..... #$%^&*(*&^%$

அரசுக்கு எதிரான சதிகாரர்கள்... என்றால் என்ன செய்யவேண்டும்..? அவர்களைக் கைதுசெய்து இந்து சதிகளுக்கு மூளை யார்? அவர்களின் நோக்கம் என்ன? அடுத்த இலக்கு என்ன என்று ஆராய்ந்து அவற்றைத் தடுத்து அரசிற்கு ஏற்படும் களங்கத்தைத் தீர்க்க முனைய வேண்டும். ஆனால் அதைச் செய்தார்களா இல்லை... தாக்குதலில் பங்குபற்றிய ஒருகாடையன் கூட கைது செய்யப்படவில்லை. கமராக்களில் தெளிவான காட்சிகள் இருந்தும் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதுவும் நாட்டில் பயங்காரவாதத் தடுப்புச் சட்டம் அமுலில் உள்ள நிலையில்.

அமைச்சர் ஒருவர் சொல்லியிருந்தார்.... மனித உரிமைப் பிரச்சினையில் அரசு மாட்டிக்கொண்டிருக்கும் தருணம், பொதுநலவாய உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறவிருக்கும் தருணம் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் சதி வேலையே இது என்று சொல்லியிருந்தார்.... எனக்கென்ன சந்தேகம் என்றால்.... இப்படி ஒரு காரணத்தை இலகுவாகக் கூறி தப்பித்துவிடலாம் என்ற தைரியத்தில் ஏன் இதை நீங்களே செய்திருக்கக் கூடாது...?
இதுவரை ஒருத்தனையாவது கைது செய்யாத நிலையில் அதுதான் உண்மை என எண்ணத் தோன்றுகின்றது...

அல்லாஹ்விற்கு பொய்யாக உருவம் அமைத்து அதனை எரித்தீர்கள்...
இன்று அவனது இல்லத்திலும் கைத்துவிட்டீர்கள்... அல்லாஹ்வின் கோவப் பார்வை உங்களை அழிப்பதை நாங்கள் கண்குளிரப் பார்க்கும் காலம் வெகு தூரத்திலில்லை..... அல்லாஹு  அக்பர்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS