RSS

ஆசியக் கிண்ணம் 2010 இறுதிப் போட்டி இன்று

ஆசியக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி இன்று தம்புள்ளை மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. இலங்கை இந்திய அணிகள் மோதிக்கொள்ளும் இவ்விறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக 3 முறை கிண்ணம் வென்ற அணி என்ற சாதனையையும், அதிக தடவைகள் (5தடவை) ஆசியக் கிண்ணத்தை வென்ற அணி என்ற பெருமையையும் தனதாக்கிக் கொள்ளும். மறு புறத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 15 வருடங்களின் பின்னர் ஆசியக் கிண்ணத்தினை வென்ற சந்தோசம் கிடைப்பதுடன் அதிக தடவை ஆசிய கிண்ணத்தினை (5 தடவை) வென்ற பெருமையும் கிட்டும்.

கடைசியாக இலங்கை இந்திய அணிகள் மோதிக்கொண்ட 15 இறுதிப் போட்டிகளில் இலங்கை அணி 7 இறுதிப் போட்டிகளிலும் இந்திய அணி 6 இறுதிப் போட்டிகளிலும் வென்றிருக்கின்றன.

கடந்த செவ்வாய்க் கிழமை இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுகளால் இலகுவாக வெற்றியீட்டி அதே மனத்திடத்துடன் இன்று களமிறங்குகின்றது.
எது எப்படியோ இன்று இடம்பெறப் போகும் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது. எனவே இரு அணிகளும் வெற்றிக்காக உயர்ந்த பட்சம் போராடும் என நம்பலாம்.

இன்று எதிர்பார்க்கபடும் அணி.

இலங்கை:
1.உபுல் தரங்க 2.திலகரத்ன டில்சான் 3.குமார் சங்ககார 4.மஹெல ஜயவர்த்தன 5.திலின கண்டம்பி/திலான்  சமரவீர 6.ஏஞ்சலோ மெத்தியூஸ் 7.சாமர கபுகெதர 8.ஃபர்வீஸ் மஹ்ரூஃப் 9.நுவான் குலசேகர 10.லசித் மலிங்க 11.முத்தையா முரளீதரன்

இந்தியா:
1.கெளதம் காம்பீர் 2.தினேஸ் கார்த்திக் 3.ரோஹிட் சர்மா 4.மஹேந்திர சிங் தோனி 5.விராட் கோலி 6.சுரேஸ் ரெய்னா 7.ரவீந்ர ஜடேஜா 8.ஹர்பஜான் சிங் 9.ப்ரவீன் குமார் 10.சஹீர் கான் 11. அசீஸ் நெஹ்ரா



ஆசியக் கிண்ணப் தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் போது எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான புகைப்படங்களில் சிலவற்றை நகைச்சுவையாகப் பகிர்ந்திருக்கின்றேன். அதையும் பாருங்களேன்.


பாருங்களேன் இன்னாமா போஸ் குடுத்திருக்காய்ங்க என்று.....





























Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாசக்கார பய புள்ளைங்க..

பாசக்கார பய புள்ளைங்க..
கொஞ்ச நாள் ஊர்பக்கம் போகாததுக்கு என்னமா அன்ப பாய்ச்சுறாய்ங்க....

மச்சான் எப்படா ஊருக்கு வர்ர? எங்குறதும். சுஹைல் நாநா எப்ப ஊருக்கு வாறிங்க எண்டு கேக்குறதும். நாம கிரிக்கட் விளையாடுரல்லியா
எங்குறதும்? ஊர் பொன்னுங்க கலர்ஸ் கூடிட்டு நீங்க வந்தாத்தான் சரியாகும் எங்குறதும். ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்களும். அச்சச்சோ எவ்ளோ பாசம்.


நம்ம பசங்களுக்கு பதில் சொல்லி சொல்லி முடியல்ல. அதுதான் எல்லாருக்கும் பொதுவா ஒரு லெட்டர் இல்ல ஒரு மடல் ஆ...ஆ....ஆ ஒரு கடிதம்னே வெச்சுக்கலாம்.


மக்கள்ஸ் கவலப்படாதிங்க. நான் வந்துடுவன். நான் மட்டும் என்ன உங்கள விட்டுட்டு இங்க சந்தோசமாவா இருக்கன்? கலண்டர்ல சிவப்பு கலர்ல ஏதாவது நாள் இருக்கான்னு பாத்துட்டுத்தான் இருக்கன். ஞாயிற்றுக் கிழமைய தவிர வேற ஒன்னையும் காணலியே...? நீங்க கவலப்படாதிங்க இன்னும் கொஞ்ச நாள் பாப்பம்...

லீவு தரல்லியோ எவனுக்காவது ஒருத்தனுக்கு இருட்டடி கொடுத்தா கொஞ்ச நாளைக்கு கெம்பச மூடிடுவாங்க. அப்புறம் ஒன்னுமே தெரியாத மாதிரி நானும் வந்துடுவன்.
சரியா?

யாருக்கு இருட்டடி எண்டுதானே கேக்குறீங்க? ரெண்டு மூனு பேர் இருக்கானுக. எல்லாரையும் நோர்ட் பண்ணி வெச்சிருக்கன்.
சொன்னா நம்ப மாட்டீங்க ரெண்டு மூனூ லெக்சர்ஸ்மாரும் இருக்காங்க. கஞ்சப் பசங்க. மார்க்ஸ் போடவே மாட்டானுங்க.ஏதோ அவங்க ஊட்டு காச தாற மாதிரி.
சும்மா மார்க்ஸ அள்ளிப் போட்டா என்ன கொறஞ்சா போயிடும்? நீங்க கோவப்படாதிங்க. நான் பாத்துக்குறன். நீங்க வேற அவசரப்பட்டு
விக்கட் பொல்லு, பெட் அது இதெல்லாம் தூக்கிட்டு வந்துடாதிங்க. அன்னனுக்கு அவமானமா போயிடும். நானே பாத்துக்குறன். தேவப்பட்ட
கூப்பிடுறன் என்ன?

லீவு கிடச்சா தப்பிச்சானுங்க. இல்லன்னா அவ்ளோதான்....

நான் ஊருக்கு வந்தா அப்புறம் கச்சேரி ஆரம்பம்தான். அதுவரைக்கும் கொஞ்சம் மனச கல்லாக்கிட்டு கவலைய மறந்து இருங்க என்ன?
நான் சொல்லித் தந்த மாதிரி கிரிக்கட் விளையாடுங்க. லைப்ரரி மதில்ல நம்ம இடத்த யாருக்கும் விட்டுக் குடுத்துடாதிங்க. அதோட இப்பவே உண்டியல்ல காசுகள சேமிச்சு வெச்சுக்கங்க. அப்புறம் கிழங்குக் கடைக்கு போக காசு இல்ல, கொத்துரொட்டி சாபிட காசு இல்ல பீசா சாப்பிட காசு இல்ல எண்டு என் உயிர வாங்கப்படாது. ஏன்னா போன முற மாதிரி இந்த முற செலவழிக்க முடியாது. காரணம்தான் தெரியுமே? ஃபோன் ஒண்டு வாங்குறதுக்கு நானும் உண்டியல்ல காசு சேமிக்கிறன்.

தெரியும்தானே.? அப்புறம் றஹீம் ஹோட்டல்ல புதுசா சிக்கன் ஃப்ரைட் ரைஸ் நல்லாரிக்காமெண்டு ஒரு தகவல் காத்துல வந்திச்சு. அதையும் கொஞ்சம் என்னெண்டு பாக்கவேண்டிக் கிடக்கு சரியா?



இப்போதைக்கு ஊர்ல நடக்குற விசயங்கள அடிக்கடி அப்-டேட் பன்னுங்க. விசேசமா யாராரு ஓவரா கலர்ஸ் காட்ராங்க எங்குறது, ஊர்ல யாராரு லவ் பன்றாங்க,  எத்துனபேர் ஓடிப்போய்டாங்க ,அப்புறம் நம்ம நெட்வேர்க் ஏரியாவுல மிஸ்ஸான பொன்னுங்க பத்தின தகவல எல்லாம் அப்-டேட் பண்ணிக்கோங்க சரியா? வெளிநாட்டுக்கு போன யாரெல்லாம் வந்திருக்காங்க என்னென்ன கொண்டு வந்திருக்காங்க? புதுசா யாரு வெளி நாடு போறாங்க? எங்குறது. அப்புறம் யாராருக்கு கல்யாணம் நடந்திருக்கு, யாரார் வீட்ல எப்பப்ப சாப்பாடு எங்குற தகவலெல்லாம் வந்தாகனும். ஓகே..?

இதெல்லாம் ஏன் கேக்குறன் எண்டால்... அடுத்த முறை ஊருக்கு வரும்போது எதுவுமே தெரியாம வந்தா நம்ம தலையிலயே மிளகா அரச்சுடுவானுங்க. அதான் முற்கூட்டிய தயாரிப்பு. புரிஞ்சுதா?

அப்புறம் முக்கியமான ஒரு விசயத்த சொல்ல மறந்துட்டன். அதாவது இங்க சரியான சூடுடா மக்கள்ஸ்.  ஏசிலேயே இருந்து பழகிடமா இங்க கொஞ்சம் கஸ்டமா இருக்கு, சரி பரவால்ல. சமாளிச்சுகுறன். அத நெனச்சு நீங்க கவலப்படாதிங்க. அப்புறம் அண்ணனுக்கு கஸ்ட்டமா போயிடும் என்ன?
சரி இப்போ இவ்வளவு போதும். எனக்கு தூக்கம் தூக்கமா வருது அப்புறம் நேர்ல சந்திப்பம் என்ன.



இப்படிக்கு.

உங்கள் .................................(உங்களுக்கு பிடிச்ச மாதிரி டீசண்டான சொல்லப்போட்டு இடைவெளிய நிறப்பிக்கோங்க.)

சுஹைல்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆசியக் கிண்ணம் 2010

உலகக் கிண்ண உதைப் பந்தாட்டப் போட்டிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்துக்குள்ளேயே ஆசிய கிரிக்கட் ரசிகர்களின் மற்றுமொரு திருவிழா ஆரம்பமாகின்றது.


அதுதான் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள்.



இலங்கை, பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்திய அணிகள் பங்குகொள்ளும் ஆசிய கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இன்று ஆரம்பமாகின்றன. இம்முறை அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புள்ளை மைதானத்திலே இரவு பகல் போட்டிகளாக நடைபெறவுள்ளமை முக்கிய அம்சமாகும்.

ஆசியாவின் பலம் மிக்க நான்கு அணிகளும் தங்களுக்குள் பலப் பரீட்சை நடாத்தப் போகும் ஆசியக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளுக்கு இன்னும் ஒரு சிறப்பும் உண்டு. உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கு முன்னதாக இவ்வணிகள் மோதிக் கொள்ளும் மாபெரும் தொடர் இது என்பதே அச்சிறப்பு.

போட்டி அட்டவணை இதுதான்

முதலாவது போட்டி
ஜூன் 15 செவ்வாய்           இலங்கை v பாக்கிஸ்தான்

2வது போட்டி
ஜூன் 16 புதன்                     பங்களாதேஸ் v இந்தியா

3வது போட்டி\
ஜூன் 18 வெள்ளி             இலங்கை v பங்களாதேஸ்


4வது போட்டி
சனி ஜூன் 19                     இந்தியா v பாக்கிஸ்தான்

5வது போட்டி
திங்கள் ஜூன் 21             பங்களாதேஸ் v பாக்கிஸ்தான்

6வது போட்டி
செவ்வாய் ஜூன் 22      இலங்கை v இந்தியா

வியாழன் ஜூன் 24
இறுதிப் போட்டி - TBC v TBC


இது வரை 9 ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர்கள் நடைபெற்றிருக்கின்றன. இதில் இலங்கை இந்திய அணிகள் தலா 4 தடவையும் பாக்கிஸ்தான் அணி ஒரு தடவையும் சம்பியனாகியிருக்கின்றன. பங்களாதேஸ் அணியினருக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை.

நடப்பு ஜம்பியனான இலங்கை அணி இறுதியாக இடம்பெற்ற இரு ஆசியக் கிண்ணப் போடிகளையும் வெற்றி கொண்டிருக்கும் நிலையில் இம்முறையும் வெற்றிபெற்று தொடர்ச்சியாக 3 முறை சம்பியனாகி இந்தியாவின் சாதனையைச் சமப்படுத்துமா என்பதை பொறுத்திருந்தூதான் பார்க்க வேண்டும்.



இலங்கை அணி.

சிம்பாப்வே மும்முனைத் தொடரை வெற்றிகொண்ட பின்னர் இலங்கை அணியினர் இப்போட்டியை எதிர்கொள்கின்றனர்.அணித் தலைவர் குமார் சங்ககார, லசித் மலிங்க, மகெல ஜயவர்தன, முத்தையா முரளீதரன் ஆகியோர் மீண்டும் அணியில் இணைகின்றனர். ஆனாலும் சிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய தினேஸ் சந்திமல், ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் அணியில் இல்லை. இது பலருக்கும் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை அணி விபரம் வருமாறு.

1.குமார் சங்ககார (தலைவர்)
2. முத்தையா முரளீதரன் (உப தலைவர்)
3.திலகரத்ன டில்சான்
4.ரங்கன ஹேரத்
5.மஹெல ஜயவர்த்தன
6.சுராஜ் ரந்தீவ்
7.திலின கண்டம்பி
8.சாமர கபுகெதர
9.நுவன் குலசேகர
10.ஃபர்வீஸ் மஹ்ரூஃப்
11.லசித் மலிங்க
12.ஏஞ்சலோ மெத்தியூஸ்
13.திலான் சமரவீர
14.உபுல் தரங்க
15.சானக வெலகெதர

இலங்கை அணி தெரிவு தொடர்பில் தெரிவுக் குழுத் தலைவர் அரவிந்த டீ சில்வா கூறுகையில்
”சனத் ஜயசூரியவின் தொடர்ச்சியான மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக அவரை அணியில் இணைத்துக்கொள்ளவில்லை. சில தந்திரோபாய நடவடிக்கைகளைக் கையாளும் நோக்கில் அஜந்த மெண்டிசை அணியில் இணைத்துக் கொள்ளவில்லை. அணித் தெரிவில் சில தந்திரோபாயங்களைக் கையாண்டிருக்கின்றேன் அது தொடர்பில் எதிர்க்கருதுகளை தெரிந்துகொள்ளவோ அல்லது அதை எதிரணியினர் தெரிந்துகொள்ளவோ நான் விரும்பவில்லை.” என்று கூறியிருந்தார்.

ஃபர்வீஸ் மஹ்ரூஃப் மற்றும் ரங்கன ஹெரத் ஆகியோரின் தெரிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரவிந்த டீ சில்வா “சகல துறை ஆட்டக் காரர்கள் இருவகை ஒன்று துடுப்பாட்ட சகலதுறை வீரர் அடுத்தது பந்துவீச்சு சகல துறை வீரர். அந்தவகையில் எஞ்சலோ மெத்தியூஸ் துடுப்பாட்ட சகல துறை வீரர், ஃபர்வீஸ் மஹ்ரூஃப் பந்து வீச்சு சகல துறை வீரர். தம்புள்ள மைதானத்தைப் பொறுத்தவரை மஹ்ரூஃப் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த அவர் இப்போது 100% உடல் தகுதியோடு இருகிறார் எனவே அவரை அணியில் இணைத்திருக்கின்றோம்.

பாகிஸ்தான் அணியில் சிறந்த வலது கைத் துடுப்பாட்ட வீரர்கள் அதிகம் இருப்பதால் எமக்கு ஒரு இடது கை சுழல் பந்துவீச்சாளர் தேவை அத்துடன் பவர் பிலே ஓவர்களில் மாறுபட்ட விதத்தில் பந்துவீசக் கூடிய சுழல் பந்துவீச்சாளர் தேவைப்பட்டார் எனவே அனுபவம்வாய்ந்த ரங்கன ஹெரத்தினை தெரிவு செய்தோம்.”

டினேஸ் சந்திமால், ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் அணியில் இடம்பெறாமை தொடர்பில் கருத்துக் கூறிய அரவிந்த டீ சில்வா ”சிம்பாப்வே தொடரில் அவ்விருவரும் உண்மையிலேயே மிகச் சிறப்பாக விளையாடினார்கள். ஆசியக் கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தவரை முதல் மூன்று போட்டிகளில் இரண்டிலாவது அவர்களுக்கு விளையாட வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை. அவ்வாறிருப்பின் அவர்களுக்கு அவுஸ்திரேலியா செல்லும் ஏ அணியுடன் இணைந்து விளையாட உள்ள அருமையான வாய்ப்பும் கை நழுவி விடும். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் அவுஸ்திரேலியா செல்லும் ஏ அணியுடன் இணைந்து அதில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதே அவ் இளம் வீரர்களுக்கு சிறந்ததென நான் கருதுகிறேன்” இவ்வாறு அணித் தேர்வு தொடர்பில் அரவிந்த டீ சில்வா கருத்துத் தெரிவித்தார்.

உண்மையில் சிறந்த தூர நோக்கும், நுட்பமும் வாய்ந்த அணித் தெரிவு. என்னைப் பொறுத்தவரையில் சரியான காலகட்டத்தில் சரியான ஒருவர் சரியான பொறுப்பை கையேற்றிருக்கிறார்.

அரவிந்த டீ சில்வாவின் தெரிவிலான இலங்கை அணி சாதிக்க என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.


பாகிஸ்தான் அணி.
பாக்கிஸ்தான் அணிக்குள் இடம்பெற்ற பல வெட்டுகுத்துகளுக்கு பின்னர் ஒரு இளம் அணி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தான் அணியினைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரு வருட தடை விதிக்கப்பட்ட சொகைப் மாலிக் அதனை எதிர்த்து வெற்றி பெற்று மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார். தலைவராகவிருந்து நீக்கப்பட்ட அவர் இப்போது அஃப்ரிடியின் தலைமைத்துவத்தின் கீழ் விளையாடப் போகின்றார். அடுத்தவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சொகைப் அக்தார். நீண்ட இடைவேளையின் பின்னர் மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். அக்தரின் வருகை பாகிஸ்தானின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அக்தரின் ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும். அக்தர் பந்த வீச ஓடிவரும் வேகம் ஸ்டைல், பந்தின் வேகம், எதிரணி வீரர்களை முறைக்கும் பார்வை, விக்கட்டினை வீழ்த்திய பின்னர் பருந்து போல் கைகளை விரித்து வட்டமிட்டு ஓடும் அழகு இவையெல்லாவற்றையும் ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன். இம்முறை
சாதிப்பாரா என்று பார்க்கலாம்.

பாகிஸ்தான் அணி விபரம்

1.சஹீட் அஃப்ரிடி (தலைவர்)
2.சல்மான் பட் (உப தலைவர்)
3.அப்துல் ரஸாக்
4.அப்துர் ரஹ்மான்
5.அஸாட் ஸஃபீக்
6.இம்ரான் ஃபர்ஹட்
7.கம்ரன் அக்மல்
8.முஹம்மட் ஆமிர்
9.முஹம்மட் அஸிஃப்
10.சயீட் அஜ்மல்
11.சசாய்ப் ஹசன்
12.சொகைப் அக்தர்
13.சொஹைப் மாலிக்
14.உமர் அக்மல்
15.உமர் அமின்


இந்திய அணி.

சிம்பாப்வே மும்முனைத் தொடரின் மோசமான தோல்வியைத் தொடர்ந்து களம் இறங்கும் இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பில்லை. அதே போல் சச்சின் டெண்டுல்கர் சுய விருப்பில் ஓய்வில் இருக்கிறார். ஏற்கனவே டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சோபிக்காமையால் பலத்த கண்டனத்துக்குள்ளாகியிருந்த நிலையில் களம் இறங்குகிறது இந்திய அணி.

இந்திய அணி விபரம்

1.மகேந்திர சிங் தோனி (தலைவர்)
2.விரேந்தர் சேவாக் (உப தலைவர்)
3.ரவிசந்திரன் அஸ்வின்
4.அசோக் டிண்டா
5.கெளதம் காம்பிர்
6.ஹர்பஜான் சிங்
7.ரவீந்திர ஜடேஜா
8.சஹீர் கான்
9.விராட் கோலி
10.ப்ரவீன் குமார்
11.அஸிஸ் நெஹ்ரா
12.ப்ரகயன் ஒஜா
13.சுரேஸ் ரெய்னா
14.ரோஹித் சர்மா
15.செளரப் திவாரி


பங்களாதேஸ் அணி.

சில சமயங்களில் விஸ்வரூபம் எடுக்கும் சில சமயங்களில் பரிதாமாகத் தோற்கும் ஒரு அணி. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் பின்னர் களம் இறங்குகிறார்கள்.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் சிறந்த ஃபோமில் இருக்கிறார்.தலைவர் சகீப் அல் ஹசன், முஹம்மட் அஸ்ரபுல் போன்ற வீரர்களும் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்பலாம். எந்த அணிக்கும் சவால் விடக்கூடிய இளம் அணி பார்க்கலாம் சாதிக்கிறார்களா என்று.

பங்களாதேஸ் அணி விபரம்.

1.சகீப் அல் ஹஸன் (தலைவர்)
2.முஸ்ஃபிகுர் ரஹீம் (உப தலைவர்)
3.அப்துர் ரசாக்
4.இம்ருல் கைஸ்
5.ஜஹ்ருல் இஸ்லாம்
6.ஜுனைந் சித்தீக்
7.மஹ்மூதுல்லாஹ்
8.மஸ்ரஃபீ மோர்த்தசா
9.முஹம்மட் அஸ்ரஃபுல்
10.நயீம் இஸ்லாம்
11.ருபெல் ஹுசைன்
12.சஃபீயுல் இஸ்லாம்
13.சுஹர்வாதீ சுவோ
14.சயீந் ரஸெல்
15.தமீம் இக்பால்


அனுபவம் + இளமை + துடிப்போடு நான்கு அணிகளும் களமிறங்குகின்றன. சுவாரஸ்யமான போட்டித் தொடரினை கண்டுகளிக்க ஆவலாய் காத்திருக்கின்றேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS