RSS

இலங்கை அணியின் வரலாற்றுச் சாதனை

நேற்று என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று.. காரணம் இலங்கை அணியின் வரலாற்றுத் தொடர் வெற்றி..

அவுஸ்திரேலிய மண்ணில் அவர்களுக்கெதிராக பெறப்பட்ட வரலாற்றுத் தொடர் வெற்றி.
இலங்கையின் கிரிக்கட் வரலாற்றில் 26 வருட பகீரதப் பிரயத்தனத்தின் பின்னர் இலங்கை அணியானது அவுஸ்திரேலிய அணிக்கெதிராகப் பெற்றுக் கொண்ட முதலாவது தொடர் வெற்றி.

அவுஸ்திரேலிய அணியுடனான 20-20 போட்டியை வென்றபின்னர் ஆரம்பமான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இதுவரையில் இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இலங்கை அணியினர் 2-0 என்ற கணக்கில் தம் வசப்படுத்தி வரலாறு படைத்துள்ளனர்.

குமார் சங்கக்கார தலைமையிலான இளம் இரத்தம் பாய்ச்சப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி சகல துறைகளிலும் கலக்குகிறது. மட்டுமல்ல இலங்கை அணியில் சகல துறை இளம் வீரர்கள் நிரம்பி வழிகின்றனர்.

முதலாவது போட்டி மலிங்க + மெத்தியூசின் அசத்தலான 9ம் விக்கட் உலக சாதனை  இணைப்பாட்டத்தின் மூலம் பெறப்பட்டது. அதில் அதிஸ்டமும் கலந்திருந்தது என்று சொன்னாலும் நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக மிகச் சிறப்பான சகலதுறை ஆட்டத்தின் மூலமாக வெற்றி கிடைத்தது.

நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில்:
உபுல தரங்க(86*) டில்சான்(47), சங்கக்கார(45) ஆகியோர் கலக்க

பந்துவீச்சில்:
மலிங்க(1), நுவன் குலசேகர, திசர பெரேராமுரளீதரன் மற்றும் ரண்டிவ் ஆகியோர் இரண்டு விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

இலங்கை அணியினரின் களத்தடுப்பும் உயர் தரத்தில் இருக்கிறது.

அணியின் இவ்வாறான வெற்றிகள் உலகக் கிண்ணப் போட்டிகளை எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு சிறந்த உந்துதலாகவும், உளவியல் ரீதியாக பெரிய பலமாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை

இளம் வீரர்கள் முதல் சிரேஸ்ட்ட வீரர்கள்வரை அனைவரும் சகல துறைகளிலும் பிரகாசிக்கின்றனர். அனைவரிடமும் அணி வெல்ல வேண்டும் என்ற தாகம் தெரிகின்றது…அதற்கான போராட்ட குணமும் இருக்கிறது.

இத்தொடரில் மீதமுள்ள ஒரு போட்டியையும் வென்று அவுஸ்திரேலிய அணியினருக்கு White Wash கொடுத்து இன்னுமொரு வரலாற்றைப் படைக்க எம் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

சிறப்பான ,கட்டுக்கோப்பான, ஒற்றுமையான இவ்வணி இன்னும் சாதிக்கும், வரலாறு படைக்கும்.
அவற்றைக் கண்டு மகிழ காத்திருப்போம்...


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பரீட்சை மண்டபத்தில் அப்புக் குட்டி

நம்ம அப்புகுட்டி காசு குடுத்து ரொம்ப கஸ்ட்டப்பட்டு பல்கலைக் கழகம் போனாருங்குறது… பழைய கதஅண்ணாத்த எப்படித்தான் எக்ஸாம் எழுதினாலும் பாஸ் ஆகவே முடியல.  நம்ம பாஸ் என்கிர பாஸ்கரன் மாதிரித்தான் அப்புக் குட்டியும்பிட்டெல்லாம் பக்காவ எழுதிட்டுப் போனாலும் பாத்தெழுதவோ இல்ல அத வெச்சு பாஸ் பண்ணவோ நம்ம அப்புக் குட்டியால முடியல
இப்போ Second Yearல இருக்கும் அப்புக்குட்டிக்கு First Year பாடங்கள் நிறைய அரியஸ் இருக்கு.

அத எழுத எக்ஸாம் ஹோள் வந்தா அப்புக்குட்டிய தவிர மத்த எல்லாருமே ஜூனியர் பசங்க.. அப்புக் குட்டிக்கு தர்ம சங்கடமான நிலவெக்கம் பசங்க மூஞ்சப் பாக்கவும் முடியல எக்ஸாம் எழுதவும் மண்டைக்க சரக்கு இல்ல. சீனியர் லெக்சரர் அப்புக் குட்டி பக்கத்துல நின்னு அவர் மேலையே கண்ண வெச்சிட்டிருந்ததால அப்புக்குட்டிக்கு கொண்டுவந்த பிட்டகூட பாத்தெழுத முடியல்ல..

இந்த நிலமைலதான் அப்புக் குட்டி மனசுல  இந்த situation Song
போகுது..

(ராவணன் படம்உசுரே போகுதே பாடல் மெட்டு)

இந்த கெம்பஸுல எப்ப வந்து நானும் சேர்ந்தன்
இந்த எக்ஸாமுக்கு எதுக்கு நானும் வந்தன்...

டி எக்ஸாம் ஹோள் ரொம்ப பெருசுதான்
எக்ஸாம் பேப்பர் என்னமோ சிறிசுதான்
அடி எக்ஸாம் ஹோள் ரொம்ப பெருசுதான்
எக்ஸாம் பேப்பர் என்னமோ... சிறிசுதான்

என் இதையம் ஓவரா துடிக்குதடி
கையெல்லாம் பயங்கரமா நடுங்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
எக்ஸாம் பேப்பர நானும்... பாக்கையில
ஓஓ..... நானும் தவிக்குறன் பிட்டடிக்கப் பாக்குறன்
பிட்டடிக்க  என்னால முடியலடி
Second Year  ஆக நானிருந்தும்
First Year  எக்ஸாம் எழுதுறண்டி
பிட்டும் பேனாவும் முன்னாலிருந்தும்
ஒரு வரிகூட எழுத முடியலடி


எனக்கும் எக்ஸாமுக்கும் தூரம் தூரம்
எழுத நெனக்குறன் முடியல
மனசு சொல்லும் குறுக்கு வழிய
செஞ்சு பாக்க என் மனசு கேக்கல
தவியா... தவிச்சு...
மனசு தடம் கெட்டு ஏதேதோ தோணுதடி

சீனியர்…. லெக்சரர்...
 (என்னதள்ளி நின்னு பாத்து சிரிக்கிரார்டி

என் மண்டக் கிறுக்கு தீருமா...
என் நிலம இப்போதைக்கு மாறுமா?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போடியம்மா...

சீனியரும்... ஜூனியரும்... ஒன்னா ஒரே எக்சாம் எழுதும்
என் மானமும்... ரோசமும்... இப்போ காத்துல பறக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
எக்ஸாம் பேப்பர நானும் பாக்கையில
ஓஓ..... நானும் தவிக்குறன் பிட்டடிக்கப் பாக்குறன்
பிட்டடிக்க  என்னால முடியலடி
Second Year  ஆக நானிருந்தும்
First Year  எக்ஸாம் எழுதுறண்டி
பிட்டும் பேனாவும் முன்னாலிருந்தும்
ஒரு வரிகூட எழுத முடியலடி

இந்த கெம்பஸில இது ஒன்னும் புதிசில்ல
ஒன்னு ரெண்டு பிட்டடிக்கும் என்னப் போல

மனசு சொல்லி பிட்டெழுதிப்போட்டன் பொக்கட்டுல
அத எடுத்து பாக்க வழியுமில்ல
எட்ட இருக்கும் லெக்சரர பாத்து
என்னமோ தோணுது மனசுக்குள்ள
அங்கால அத்துன பேர் எக்சாம் எழுதினாலும்
அந்த மனுசன் என்ன விட்டுப் போகல

பிட்டடிக்கிரதா..  இல்லையா
முடிவுக்கு வர என்னால் முடியலையே
அந்தாள் (இங்கநின்னா
என்னால் பயப்படாம பிட்டடிக்க முடியலையே

என் நெலம இவளவு கேவலமா
இந்தாள் அங்கால போகுமா

நான் தவிக்குறன்
இந்த மனுசன் சிரிக்கிறான்

சீனியரும்... ஜூனியரும்... ஒன்னா ஒரே எக்சாம் எழுதுறம்
என் மானமும்... ரோசமும்.. இப்போ காத்துல பறக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
எக்ஸாம் பேப்பர நானும் பாக்கையில
ஓஓ..... நானும் தவிக்குறன் பிட்டடிக்கப் பாக்குறன்
பிட்டடிக்க  என்னால முடியலடி
Second Year  ஆக நானிருந்தும்
First Year  எக்ஸாம் எழுதுறண்டி
பிட்டும் பேனாவும் முன்னாலிருந்தும்
ஒரு வரிகூட எழுத முடியலடி

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ரஜரட்டைப் பல்கலைக் கழகமும் தமிழ்வின்னின் பிழையான பரப்புரைகளும்.

தமிழ்வின் இணையத்தளத்தில் கடந்த  புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010 அன்றும்  வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010 அன்றும் இடம்பெற்ற ரஜரட்டைப் பல்கலைக் கழகம் தொடர்பான செய்திகளைப் பார்த்தவுடன் நான் மிகவும் கவலையும் ஆச்சரியமும் வேதனையும் அடைந்தேன்.

ரஜரட்டைப் பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு மாணவன் என்ற வகையில் தமிழ் வின்னின் இந்த இரு செய்திகளையும் நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன்.
பரபரப்பிற்காக கட்டுக்கதைகளை அள்ளிவிடவேண்டாமென்றும் அதாரமற்ற அபாண்டமான தகவல்களை வெளியிடவேண்டாமென்றும் தமிழ்வின்னின் குழுமத்தைக் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழ் வின் வெளியிட்ட செய்திகள் இவைதான்


(க்லிக் செய்வதன் மூலம் முழுவதுமாகப் படிக்கவும்)

இவை இரண்டுமே திரிபுபடுத்தப்பட்ட அபாண்டமான செய்திகள்.

குறித்த பல்கலைக் கழக மாணவன் என்ற வகையிலும், விடயங்களை அறிந்தவன் என்ற வகையிலும் இது தொடர்பான விளக்கத்தினை வழங்குவது என் கடமை.

அண்மைய சில நாட்களாக இலங்கையின் பல பல்கலைக் கழகங்களில் பல பிரச்சினைகள் இடம்பெற்றுவருவது உண்மை.

இம்முறை இந்த பிரச்சினைகளுக்கு பல காரணங்கள் உள்ளன. அண்மைய இப்பிரச்சினை ஆரம்பித்தமைக்கான முக்கியமான காரணங்கள் இரண்டு.

ஒன்று ரஜரட்டை பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற பிரச்சினை
மற்றையது பேராதெனிய பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற பிரச்சினை.

ரஜரட்டைப் பலகலைக் கழகத்தில் இடம்பெற்ற பிரச்சினை.

மாணவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் உரிய முறையில் அனுமதி பெற்று ஒரு நாடகமொன்றை அரங்கேற்ற தயாராகினர்இலவசக் கல்வியின் மகத்துவத்தைப் பற்றியும் தனியார் பல்கலைக் கழகத்தினால் வரப்போகும் பிரச்சினைகளையும் வலியுறுத்தி இந்நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று மாலை 4 மணியளவில் அரங்கேற இருந்த அந்நாடகத்திற்கான முற்கூட்டிய ஏற்பாடுகளைச் செய்ய சென்ற மாணவர்களுக்கு பல்கலைக் கழக கேற்போர் கூடத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டதோடு அவர்களது நாடகத்தினை அரங்கேற்ற அனுமதியும் மறுக்கப்பட்டது.இதனால் மாணவர்களின் ஆயிரக்கணக்கான பணமும் வீணாகிப்போனது. வெளியிலிருந்து வருகை தந்த நாட்டியக் குழுவினரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதன் காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைக் கழக பீடாதிபதியின் காரியாலையத்தைச் சுற்றிவழைத்து உபவேந்தரை வெளியேறவிடாமல் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்துவைத்தனர். இதனால் உபவேந்தர் பொலீசாரை வரவழைத்து பிரச்சினையை கட்டுப்படுத்த முனைந்தார். இதன் போது 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பேராதனையில் இடம்பெற்ற பிரச்சினை

தனியார் பலகலைக் கழகங்களை ஆதரிக்கும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் பேராதனைப் பலகலைக் கழகத்திற்கான வருகையை எதிர்த்து கூக்குரலிட்ட மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.இதற்கு மாணவர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புக் காட்டியதால் மாணவர்களுக்கு பல்கலை கழக வழாகத்திற்குள் வருவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டது

இவைதான் பல்கலைக் கழகங்களகங்கள் இரண்டிலும் தற்போது தோன்றியுள்ள அசாதாரண நிலமைகளிற்கான அடிப்படைக் காரணிகள்.

இதன் பின்னர் இரு பல்கலைக் கழக மாணவர்களும் கூட்டாக இணைந்து கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கவேண்டும், தனியார் பல்கலைக் கழகங்களைத் தடைசெய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன்  கொழும்பிலுள்ள பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குளு கட்டிடத்துக்கு முன்பாகா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது பொலீசாருடன் ஏற்பட்ட மோதலினால் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதனால்  பிரச்சினை பூதாகரமானது.

பொலீசார் மற்றும் உயர்கல்வி அமைச்சரின் இச்செயல்களைக் கண்டிக்கும் பொருட்டும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டுமென்று கோரியும் ரஜரட்டை பல்கலைக் கழக மாணவர்கள் அனைவரும் விரிவுரைகளைப் பகிஸ்கரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் இறுதி ஆண்டு மாணவர்களும், ICT மாணவர்களும் கலந்துகொள்வதில்லை என்ற முடிவும் கூட்டாக எடுக்கப்பட்டது. காரணம் இறுதியாண்டு மாணவர்களின் கடைசி செமஸ்ட்டர் இது. அத்துடன் ICT மாணவர்களின் பரீட்சைக்காலம் இது. இது தவறும் பட்சத்தில் மேலும் ஒருவருடம் இவர்கள் காத்திருக்கவேண்டிவரும் எனவே அவர்கள் விரிவுரைகள் மற்றும் பரீட்சைகளுக்கு செல்ல மற்ற மாணவர்கள் விரிவுரைகள் பகிஸ்கரிப்பது என்பதுதான் திட்டம்.
முகாமைத்துவ பீட இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களுக்கும்  பரீட்சைக் காலம் ஆனால் அவர்கள் முற்றாக பரீட்சைகளைப் பகிஸ்கரிக்கின்றனர்.

உண்மையில் குறித்த Batch மாணவர்கள் அனைவரும் கூட்டாகப் பரீட்சைகளைப் பகிஸ்கரித்தால் மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. மாறாக ஒரு மாணவனாவது பரீட்சை மண்டபத்திற்குள் சென்று பரீட்சை எழுதினாலும் அதாவது முத்திரையிடப்பட்ட பரீட்சைத் தாள்ப் பொதி உடைக்கப்பட்டால் அந்த Batch இல் மீதமுள்ள அனைத்து மாணவர்களும் Refferd அல்லது Fail பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்ற நிலைக்கு ஆளாகின்றனர்.
இது பல்கலைக் கழக பரீட்சை விதிகளில் ஒன்று.

நிலைமை இப்படி இருக்க கடந்த திங்கட் கிழமை அன்று
மாணவ சங்கத்தோடு ஒத்துப் போகாத முகாமைத்துவ பீட  மாணவ மாணவியர் சிலர் வீம்பிற்காக சென்று பரீட்சைகள் எழுதினர். இதனால் ஆத்திரமடைந்த முகாமைத்துவ் பீட மாணவிகள் சிலர் பரீட்சை எழுதிய மாணவிகளுடன் வாய்த்தர்க்கத்திலீடுபட்டனர். இது இறுதியில் கை கலப்பில் முடிந்தது.
காயத்திற்குள்ளான 4 மாணவிகள் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சண்டை தொலைக் காட்சிகளிலும் காட்டப்பட்டது.

இதன் பின்னர்தான் பொலீசார் வரவழைக்கப்பட்டனர். அதுவும் பரீட்சை நடைபெறும் நாட்களில் பரீட்சை ஆரம்பமாக சில மணி நேரம் முன்னதாக வரும் பொலீசார் பரீட்சை மண்டபத்திற்கும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் மட்டும் பாதுகாப்பு வழங்குகின்றனர். பரீட்சை முடிவடைந்து மண்டபத்தைவிட்டு மாணவர்கள் வெளியேறிய பின்னர் பொலீசாரும் பல்கலைக் கழக வழாகத்திலிருந்து வெளியேறிவிடுகின்றனர். இதுதான் இந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் நிகழ்வு.
திரும்பவும் சொல்கிறேன் பரீட்சை நடைபெறும் நாட்களில் பரீட்சை  நடைபெறும் நேரத்தில் மாத்திரம் பரீட்சைகள் தடையின்றி நடைபெறவும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவுமே பொலீசார் வந்து செல்கிறார்களே தவிர தமிழ்வின்னில் சொல்லப்பட்டதுபோல் பலகலைக் கழகம் முற்றாக பொலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வரவோ, மாணவர்கள் விடுதிகளிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்படவோ இல்லை.

இந்த செய்தி பிரசுரிக்கப்பட்ட
புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 11:57.02 AM GMT +05:30இந்த நேரத்தில் நான் பல்கலைக் கழகத்தில் Integer Programming Problem விரிவுரையில் இருந்தேன். என்னுடன் பலமாணவர்கள் இருந்தார்கள்அன்று முழுநாளும் அனைத்து விரிவுரைகளும் நடந்தன. மாணவர் வருகை மிகக் குறைவு என்றாலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் நடந்தன.
(நிலமை இப்படி இருக்க ஏன்  இப்படி ஒரு பொய்யான தகவல்  தமிழ்வின்னிடமிருந்து..?)


இரண்டாவது செய்தி பற்றி சொல்வதற்கு எதுவுமே இல்லை.

அந்த செய்தியில் வெளிவந்ததுபோல் மாணவிகளின் கைய்யைப் பிடித்து இழுக்க பொலீசார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் இருக்கவே இல்லை.(பல்கலைக் கழக வளாகத்திற்குள்தான் விடுதிகளும் உள்ளன. தவிரவும் இப்படியான அசாதாரான நிலைமை பல்கலைக் கழகத்திற்குள் இருக்கையில் மாணவர்களின் துணையின்றி மாணவிகள் விடுதிக்கு வெளியே நடமாடுவதே இல்லை)

நான் பதிவை எழுதும் இந்நேரம் வரையில் மாணவர்களின் அமைதியான பகிஸ்கரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறதே தவிர மாணவர்கள் கொதித்தெழவுமில்லை, வேரெந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுமில்லை.

அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் பொலீசாருக்கு எதிராக ஆக்ரோசமான எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கும். அப்படி எதுவுமே நடக்கவில்லை.. எல்லாம் சுத்தப் பொய்.

தமிழ்வின்னின் இரு செய்திகளிலும்
எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்என்று அடிக்கடி வருகிறதே.. மேலும் குறிப்பிட்ட அந்த செய்தியாளர் யார்????????
உண்மையில் அவர் மிகிந்தலையில் இருக்கிறாரா? இல்லை வேரெங்குமிருந்துகொண்டு சினிமாக் கதை எழுதுகிறாரா? அல்லது குறைந்த பட்சம் ரஜரட்டைப் பல்கலைக் கழக தகவல்களை நேரடியாக அறிந்துகொள்ளும் தூரத்திலாவது இருக்கிறாரா..?

தயவு செய்து உண்மையான செய்திகளைக் கொடுங்கள் இப்படி கற்பனையில் அபாண்டம் சுமத்தாதீர்கள்..


குறிப்பு 1: 
அத்துடன் ஏற்கனவே கைதாகியுள்ள மாணவர்கள் தொடர்ந்து 12ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டங்கள் அனைத்தும் பூதகராமாகுமே தவிர அடங்கப்போவதில்லை.
எதிர்வரும் வரும் நாட்கள் மிக முக்கியமான நாட்ளாக அமையலாம்ஒன்றில் போராட்டங்கள் பூதாகரமாகி பல்கலைக் கழகங்கள் மூடப்படலாம் இல்லையேல் பலகலைக் கழக போராட்டங்கள் வித்தியாசமான முறையில் அடக்கப்படலாம்... பொறுத்திருந்து பார்போம்

குறிப்பு 2:
அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளை இவ்வாறு முரட்டுத் தனமாக கையாளக் காரணம் என்ன..? என்பதை அடுத்த பதிவில் தருகிறேன்.


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS