பல்கலைக்
கழக நாட்களில் பல சிங்கள நண்பர்களோடு முரண்பட்டுக்கொண்டதும், வாக்குவாதப்பட்டதும் இலங்கை-பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கட்
போட்டிகள் நடைபெறும் நாட்களில்தான்.
என்னதான்
இலங்கை எம் தாய்நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு உயிரைக் கொடுத்து நாம் ஆதரவு
வழங்கினாலும் சில சிங்கள நண்பர்களுக்கு என்னவோ நாம் பாக்கிஸ்தான் ஆதரவாளர்கள்
என்கிற நினைப்புதான்.
ஹொஸ்டலில், கெண்டீனில் உள்ள டீவிகளில் இலங்கை-பாக்கிஸ்தான் போட்டிகளைப் பார்க்கும்போது இலங்கை
அணி வீரர்கள் பாக்கிஸ்தான் விக்கட்டினை வீழ்த்திவிட்டாலோ அல்லது எமது துடுப்பாட்ட
வீரர்கள் 4 , 6 என விளாசிவிட்டாலோ
அவர்கள் எம்மை நக்கலடிப்பதும் கேலி செய்வதும் வழக்கம்.
இலங்கை
அணி வென்றுவிட்டால் அவர்கள் எங்களை வென்றுவிட்டதாக ”எப்படி அடி? ”என்று
நக்கலாகக் கேட்பதும். இலங்கை
பாக்கிஸ்தானிடம் தோற்றுவிட்டால் “ இப்போ
உங்களுக்கு சந்தோசம் என்ன? பாருங்கடா
அடுத்த மெச்ல அடிப்போம்” என்று
சவால் விடுவதும் பல சிங்கள நண்பர்களது வாடிக்கை.
அருகில்
இருந்து நம்மை அவதானித்த பின்னரும் இலங்கை அணியின் ஒவ்வொரு வெற்றியின் போதும் எமது
மகிழ்ச்சியைப் பார்த்த பின்னரும் சிலர் இப்படிக் கேட்பது வேதனை. அதனால் இலங்கை-பாக். போட்டிகள்
நடைபெறும்போது சிங்கள நண்பர்களோடு சேர்ந்து பார்ப்பதையே தவிர்த்துவந்தேன்.
இப்படித்தான்
ஒரு முறை இலங்கை அணி வெல்லவேண்டும் என மிகவும் எதிர்பார்த்த ஒரு போட்டியில் இலங்கை
அணி தோற்றுவிட்ட கவலையோடு நான் பல்கலைக் கழகம் செல்கையில் என்னோடு நன்றாகப் பழகிய
சிங்கள நண்பனொருவன் “இப்போது
உங்களுக்கு உள்ளுக்குள்ள நல்ல சந்தோசமா இருக்குமே.. ஏண்டா இப்படி துரோகிகளா இருக்கீங்க?” என்று என்னிடம் கேட்க நான் அவனோடு வாக்குவாதப்பட்டு பல்கலைக் கழகப்
பிரியாவிடையின் போதும் அவனோடு பேசவே இல்லை.
இன்றைய
சுதந்திர தின நிகழ்வுகளின் போது எனக்குள் இந்த பழைய ஞாபகங்கள் வந்து சென்றன.
இலங்கையில்
பிறந்து வளர்ந்து தாய் நாட்டு பற்றோடு இருக்கும் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்துக்கு
தமது நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டிய துர்ப்பாக்கியம். எமது நாட்டுப் பற்றை நிரூபிக்கவேண்டியது சிங்களவர்களுக்கு அல்ல நாட்டிற்கே.
எவன்
என்ன சொன்னாலும் எத்தனை பலசேனாக்கள் ஊளையிட்டாலும் நாம் என்றும் இலங்கையரே. எம் நாட்டின் மீதான பற்று பாசம் ஒரு போதும்
குறைந்துவிடாது.
அனைவருக்கும்
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
1 comments:
லங்கையில் பிறந்து வளர்ந்து தாய் நாட்டு பற்றோடு இருக்கும் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்துக்கு தமது நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டிய துர்ப்பாக்கியம்///
பாஸ் மிகவும் கவலை தரக் கூடிய விடயம்தான். இப்படியாக சமூக உணர்வுகளைக் வெளிக்காட்ட கூடிய இடங்களில் நாம் அவதானமாக நடக்க வேண்டும். நாட்டுப் பற்று தொடர்பாக சின்னதாக ஒரு விடயம் செய்தாலும் அதனை வெளியுலகு அறியக்கூடிய வித்தத்தில் செய்ய வேண்டும்
கருத்துரையிடுக