RSS

என்ன ஒரு வில்லத்தனம்........

பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட நாடகப் போட்டி.

அந்தப் பாடசாலை மாணவர்கள் நான்கு ஐந்து தடவைகள் ஒத்திகை பார்த்தபின் சிறப்பாக தமது நாடகத்தை மேடையில் நடத்திக்கொண்டிருந்தனர். அதில் ஒரு காட்சி அயல் வீட்டவர்கள் இருவர் குப்பை கொட்டுவது தொடர்பாக வாக்குவாதப்படுவது போன்றதொரு காட்சி...

வாக்குவாதம் உக்கிரமடைந்து சென்றுகொண்டிருக்கின்றது. அதில் ஒரு மாணவன் சண்டையின் உச்சக்கட்டத்தில் அடுத்து பேச வேண்டிய வசனங்களை மறந்துவிட்டான். அந்த வசனங்கள் கோபாவேசத்துடன் பேசப்படவேண்டிய வசனங்கள் துரதிஸ்ட்ட வசமாக அவனுக்கு அது மறந்துபோய்விட்டது.
அதனை சமாளிப்பதற்காக தனக்குத் தெரிந்த தூசண வார்த்தைகளையா கலந்து பேசுவது...?? இதில் மற்றயவனின் தாயை இழுத்து வேறு பேசிவிட்டான்.

மற்றவன் சும்மா விடுவானா அவன் மாறி இவனுக்கும், இவனது தாய்க்கும் தூசண வார்த்தைகளால் ஏசிவிட்டான். சண்டை உக்கிரமடைந்து செல்கின்றது. ஏனைய பாடசாலை ஆசிரியர்கள் அதிர்ச்சியுடன் தலையில் கைவைத்தபடி மற்ற மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்தபடி

நிலைமைய உணர்ந்த நாடகம் நடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சுதாகரித்துக்கொண்டு ஒருவாறு தமது நாடகத்தை முடித்துவிட்டு கீழே இறங்கிவிட்டனர்.

பலத்த சர்ச்சை, விமர்சனங்களின் பின்னர் மாணவர்கள் மீண்டும் மேடையேறி “நாடகத்தை யதார்த்தபூர்வமாக நடிக்கவேண்டும் என்பதற்காக சில தகாத வார்த்தைகளைப் பேசிவிட்டோம் இதற்காக அனைவரிடத்திலும் மன்னிப்புக் கோருகின்றோம்” என்று மன்னிப்புக்கோரியதன் பின்னர்தான் விடயம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததாம்.

(எனது பாடசாலை சக ஆசிரியர் ஒருவர் தான் முன்னர் கற்பித்த பாடசாலையில் தனக்கு நடந்த சம்பவம்பற்றிக் கூறி நான் வயிறு வலிக்கச் சிரித்த ஒரு கதை)

 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS