ஊரு
விட்டு வெளியூர் வந்து குடும்பத்தை பிரிந்திருக்கும் போதுதான்
குடும்பத்தின் மீது பாசம் பொங்கும். குறிப்பாக தாய் மீது பாசம் பொங்கிப்
பிரவாகிக்கும் தாய் நமக்காக செய்யும் தியாகங்கள் பட்ட கஸ்டங்கள் நினைவு
வரும். தாயைப் பிரிந்து வெளியூரில் இருக்கும்போது தாயைப் பற்றி கவிதை
எழுதச் சொன்னால் தாயின் பெருமையை கட்டுரையில் வடிக்கச் சொன்னால் பக்கம்
பக்கமாக கவிதையும், புத்தகம் புத்தகமாக கட்டுரையும் வரும். தாயைக்
கையில் தாங்கனும் போலிருக்கும், தாயை உக்கார வைத்து பணிவிடை பல புரியத்
தோணும். அதுவே ஊருக்கு வந்து தாயருகில் இருக்கும்போது எல்லாம் தலைகீழாக
மாறிவிடும். தாய் கேட்கும் சிறு உதவிகூட பல நேரங்களில்
உதாசீணப்படுத்தப்படும்... இதுதான் இன்று பலரது நிலை.
தினமும் 3 வேளையும் தாய் வடித்துக்கொட்டும் உணவை அவருக்கு உணவு இருக்குமா இல்லையா என்றுகூட யோசியாது பானை பானையாய்த் தின்றுவிட்டு பிள்ளைகளும் கணவனும் சென்ற பின் மிஞ்சுவது தனது கால் வயிற்றுக்கும் போதாத நிலையில் தனக்கு போதுமாக்கிக் கொண்டு அல்லது பகல் சாப்பாட்டில் மிஞ்சிய கொஞ்ச உணவையும் காலைச் சாப்பாட்டில் மிஞ்சியதையும் (பகல் சமைத்த சோற்றோடு காலையில் சமைத்த இடியப்பம்/ரொட்டியையும்) கலந்து உண்டுவிட்டு முக மலர்வோடு இருப்பார்.. தனக்கு உணவு போதாமல் விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது உணவை பிள்ளைகளும் கணவரும் தாராளாமாகச் சாப்பிட்டுவிட்டார்கள் என்ற மகிழ்ச்சிதான் அவரது வெளிப்பாடாக இருக்கும்.
இப்படிப் பல பெருமைகளைத் தியாகங்களைக் கொண்டா தாய்மாரின் மீதான பிள்ளைகளின் பாசம் இன்று ஃபேஸ்புக் ஸ்டேடசோடு மட்டுமே நின்றுவிடுவது துரதிஸ்ட்டம்.
ஐயிரண்டு திங்கள் அல்லல் பட்டு அயராது பாதுகாத்து எம்மைப் பெற்ற தாயை இன்றைய தினத்திலாவது நினைவுகொள்வோம்,,
எனது நட்பிலுள்ள தாய்மார்களுக்கும் நட்புகளின் தாய்மாருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..

0 comments:
கருத்துரையிடுக