என்னடா மக்கள்ஸ்....? இந்த வாட்டி அடிச்சிடுவீங்கதானே...?
***** இலங்கை கிரிக்கட் அணிக்கு தீவிர ரசிகனின் இதயத்தில் இருந்து ஒரு கடிதம் ****
என்னடா மக்கள்ஸ்....? இந்த வாட்டி அடிச்சிடுவீங்கதானே...?
அடுத்தடுத்து வேர்ல்ட் கப் ஃபைனலுக்கு வந்து ஆசை காட்டி மோசம் பண்ணி எங்கள சாச்சுப்புட்டீங்க இந்தவாட்டியாவது ஏதாவது பண்ணுங்க மக்கள்ஸ்.... ஹார்ட் பீட் இப்பவே செக்கனுக்கு 500, 1000 எண்டு எகிறுது.....
ஆப்படிக்கிறதா இருந்தா ஆரம்ப சுற்றுலையே அடிச்சிட்டு கிளம்பிடனும்
அரையிறுதி, இறுதிவரை வந்தெல்லாம் அடிக்கப்புடாது...... இந்தவாட்டி ஆப்படிக்கமாட்டீங்கன்னு நம்புறன் இத்துனோண்டு மனசு அது ஓவர் இடியையெல்லாம் தாங்காதுப்பா.......
பாத்து ஏதாச்சும் பண்ணுங்க...... எங்களால முடிஞ்ச துஆக்கள நாங்க கேக்குறோம்....
விவரம் தெரிய ஆரம்பிச்ச காலப்பகுதியில 1996 ல உலகக் கிண்ணத்த வென்று அடி மனசுல இனம்புரியாத ஒரு பாதிப்பத் தந்துட்டீங்க
அந்த வயசுல மனசுல பசுமரத்தாணி போல பதிந்த கிரிக்கட் அதுவும் கிண்ணம்வென்ற இலங்கை அணி, வெற்றிக்கொண்டாங்கள்,
ஊடகங்களில் வெளியான செய்திகள் எல்லாம் சேர்ந்து என் நாடு, என் அணி, என் மக்கள் என்றொரு உணர்வை மனதில் உருவாக்கி ஆட்கொண்டுட்டு......
அந்த அணியில் இருந்த வீரர்கள்தான் என் முதல் கதாநாயகர்கள் அவர்களோடு ஆரம்பித்த கிரிக்கட் உணர்வு இன்னும்
ஆழமாத் தொடருது
சனத் ஜயசூரிய, ரொமேஸ் களுவிதாரன, மஹனாம, மார்வன் அடபத்து, அரவிந்த எண்டு பாத்து பாத்து பக்குவப்பட்ட மனசு. ஜயசூரிய - களுவிதாரன அடியப்பார்க்க எத்துன மாலை நேர வகுப்புகள கட் அடிச்சிருப்போம்...
நாங்க இன்னைக்கு வகுப்புக்கு போறதா இல்லையான்னு
தீர்மானிக்கிறதே சனத் ஜயசூரியதான்... வகுப்பு தொடங்கும் வரை அவரு அடிச்சா வகுப்பு கட், அதுக்குமுன்னாடி அவுட்டான வகுப்புக்கு
போவோம்....
அந்த அடிப்படையில வந்த மனசு என்ன நடந்தாலும் அடங்கமாட்டேங்குது..... இனியும் அடங்காது போலிருக்கு....
எந்தவொரு தொடருக்கும் நீங்க போகும் போதும் அணி எவ்வளவு பலவீனமாகவிருந்தாலும் நீங்க ஏதாச்சும் பண்ணுவீங்க சாதிப்பீங்கன்னு
நம்பிப் பார்ப்போம்... ஆதரவு தருவோம்..ஆனா இம்முறை நல்ல பலமா, நல்ல ஃபோர்ம்ல இருக்கீங்க. நம்பிக்கை, எதிர்பார்ப்பு எல்லாம் பலமடங்கு அதிகமா இருக்கு ஏமாத்திடாதீங்கடா செல்லம்ஸ்...
மனசு என்னென்னமோ உளறுது.... உடம்பெல்லாம் சிலிர்க்குது.. என்னாகுமோ ஏதாகுமோ....?
இப்பவே செம டென்சன்.., சாப்பிட முடியல, தூங்க முடியல, சிந்தனையெல்லாம் இந்த உலகக் கிண்ணம் பற்றிதான்...
ஹ்ம்ம்ம்ம்ம்ம்... இன்னும் எவளவோ சொல்ல நினைச்சன் எல்லாம் சொல்ல முடியல அடுத்த மடலில் சந்திப்போம்....
பாவிப் பய சின்ன வயசுல இருந்தே இப்புடி (இலங்கை) கிரிக்கட்டுக்கு சீரியஸ் ரசிகனாகிட்டு ஒவ்வொரு மெச் நடக்கும் போதும் படுறான் பாடு
அநியாயமா ஒரு உசுர சாச்சுப்புடாதீங்கடா.... உங்கள ரொம்ம்ம்ம்ம்ம்ப நம்பிட்டு இருக்கோம்...
யா அல்லாஹ்...
நன்றி
இப்படிக்கு
இலங்கை கிரிக்கட்டின் தீவிர ரசிகன்
_அஹமட் சுஹைல்-

Post Comment
வடை போச்சே (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -4)
வடிவேல்
சிங்கமுத்து காமெடிகள்ள ரொம்பவும் ஃபேமசான கொமெடி ஒன்னு இருக்கு.. “என்ன வேணும் எண்ண வேணும்” அது மாதிரி நம்ம லைஃப்லையும் ஒரு காமெடி
நடந்துதுன்னா பாருங்களேன்……
அதுக்கு
முன்னாடி சிங்களத்துல ”அவுறுது” என்ற சொல்; வருடம்(Year) என்பதற்கும்
பயன்படுத்துவாங்க, புதுவருடப்
பிறப்பு (New year) அதற்கும்
பயன்படுத்துவாங்க….
சரி நம்ம மேட்டருக்கு வரலாம்…
சரி நம்ம மேட்டருக்கு வரலாம்…
எங்க
பல்கழைக் கழக பட்டமளிப்பு விழா கொழும்பு BMICH ல ஏப்ரல் 5ல் நடந்துது. அதற்கான உத்தியோக பூர்வ படப்பிடிப்பாளர்களாக
கண்டியில் இருக்கும் புகைப்பட நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்திருந்தாங்க. பட்டமளிப்பு நிகழ்வுகள் ஆரம்பமாக முதலிலேயே
அவர்களுக்குரிய கட்டணங்கள செழுத்தி பற்றுச்சீட்டும் வாங்கியாச்சு… விழாவும் திருப்தியா முடிஞ்சுது..(எங்க டீன் என் பெயரை பிழையாக உச்சரிச்சதத்
தவிர)
பட்டமளிப்பு
விழா முடிஞ்சு ஒவ்வொருத்தரும் வெளியேறிக்கொண்டிருக்கும் போது நானும் நம்ம
புகைப்படப் பிடிப்பாளர்கள்கிட்ட ஃபோட்டோக்களை எப்ப எடுக்கலாம் என்று கேட்கலாம்
என்று அவர்கிட்ட போனன்….
அவர்
சிங்களவர்…
நான்: அண்ணா
இந்த ஃபோட்டோகள எப்ப எடுக்கலாம்..?
(ayye me photos tika kavadhdha ganda puluvan)

அவர் : இந்த வருசத்துக்குப் பிறகு
(me avuruddhen passe..)
நான் : அண்ணா சொல்லுங்க.. எப்ப எடுக்கலாம்..?
Ayye kiyannakko
kavaddha ganda puluvan
அவர் : வருசத்துக்குப் பிறகு எடுக்கலாம் தம்பி
(Avuruddhen passe
puluvan malli…)
நான் : ஐய்யோ அண்ணா பகிடி பண்ணாம சொல்லுங்கோவன்
(Ane aiiye vihilu
karannethuva kiyannako….)
அவர் : பகிடி இல்ல தம்பி இந்த வருசத்துக்குப்
பிறகுதான் எடுக்க ஏலும்
(Vihilu ne malli me
avuruddhen passe thama ganda puluvan)
நான் : இத டிவலொப் பண்ணித்தர ஒரு வருசம் போகுமா?
(Meka develop karanda avuruddhek oonedha)

அவர் : அப்படி இல்ல தம்பி வருசத்துக்கு எல்லாரும்
லீவு போட்டுட்டு போயிடுவாங்கதானே,
அவங்க லீவு முடிச்சிட்டு வந்த பிறகுதான் வேலைய ஆரம்பிப்போம். அதனால வருசம் முடிஞ்சு ஒன்று அல்லது
ரெண்டுகிழமையாலதான் இதை எடுக்கலாம்
(Ehema nevei malli
avuruddhekata okkomala nivaadu dhaala
yanava nedha.. Nivaduven passe thamai vede patanganne… aenisha avuruddhen passe sathi eka dhekakin
ganda puluvan….)
அப்போதான்
க்ளிக் ஆச்சு….
ஏய் நீ எந்த அவுறுதுவ சொன்ன….? அடப்பாவி…..
நான் வருசத்தப்பற்றி கதைச்ச இந்தப் பயபுள்ள புதுவருடம் ஏப்ரல் 14 ஐப் பற்றி கதைச்சிருக்கான்…..
அச்சச்சோ வடை போச்சே…. அப்புறம் ஒரு மாதிரியா சேப் பண்ணீட்டு

நான் : அண்ணா நீங்க சொன்னது ஏப்ரல் 14 புதுவருசத்தப்பற்றியா…?
அவர் : ஆமா நீங்க என்ன நினைச்சீங்க…?
நான் : நான் நினைச்சன் ஃபோட்டோ தர ஒருவருசம் போகும்னு சொல்றீங்கண்ணு..
அப்புறம் நாங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து சிரிச்சிக்கிட்டோம்…

ஒரே
சிரிப்புதான் நகைச்சுவைதான் காமெடிதான் போங்க..
அப்புறம் அவருக்கு Happy New Year சொல்லிட்டு நான் வந்துட்டன்... அப்புறமாத்தான் யோசிச்சன் ஆரம்பத்துலையே ஆங்கிலத்துல பேசிருக்கலாமோ... என்று

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)