RSS

நண்பேண்டா.. (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -2)எங்க பல்கலைக் கழகத்துல ராகிங் காலத்துல காலைல 6 மணிக்கு பல்கலைக் கழகம் போகனும் காலைல 6மணி இருந்து 8 மணிவரை கெண்டீன்ல ராகிங் நடக்கும்.அப்புறம் ஆங்கில லெக்சர்ஸ் லெக்சர் ஹோள்ள நடக்கும். திரும்ப 12 மணிக்கு சாப்பாடு; கெண்டீன் வரனும் சாப்பாட்டுக்குக் கூடவே ராகிங் நடக்கும். அப்புறம் 1மணி இருந்து 4 மணிவரை லெக்சர் திரும்ப 4 மணி இருந்து 6 மணிவரை கெண்டீனில் ராகிங். இதுதான் அவங்க நிகழ்ச்சி நிரல்.

கெண்டீன்ல வரிசையாக அடுத்தடுத்து அருகில் வைக்கப்பட்டிருக்கும் கதிரைகளில் ஒரு ஆண் பெண் ஆண் பெண் என்று அடுத்தடுத்து இருக்கவேண்டும். மீதமானவர்கள் பின்னால் அருகருகே இருப்பார்கள்.

ராகிங் செய்ய நியமிக்கப்பட்ட 8 சிரேஸ்ட்ட மாணவர்களில் ஒருவர் மாத்திரம் தமிழ் மற்றவர்கள் அனைவரும் சிங்களவர்கள். எனக்கு ஓரளவு சிங்களம் தெரியும் என்றாலும் எனக்கு சிங்களமே தெரியாது என்றுதான் சொல்லி இருந்தேன். அப்படித்தான் நடித்தேன். காரணம் சிங்கள் தெரியும் என்று சொல்லி இருந்தால் எல்லாரும் வந்து ராகிங் பண்ணுவார்கள். ஆனால் சிங்களம் தெரியாது என்று சொல்லியிருந்ததால் அந்த தமிழ் அண்ணா மட்டும்தான் எப்பவாவது வந்து ராகிங் பண்ணூவாரு. அதுவும் அவர் ரொம்ப சொங்கித் தனமா காமெடிப் பீசா இருக்குறதால  நமக்கு அவரப் பார்த்தா பயம் வராது சிரிப்புத்தான் வரும்.

இப்படி சிங்களம் தெரியாதுன்னு சொன்னதால நிறைய நல்லது நடந்தாலும் சில கெட்டதுகளும் நடந்தது. அத்தோடு சிங்களம் தெரிஞ்சுக்கிட்டு தெரியாதமாதிரி நடிக்கிறது ரொம்பக் கஸ்ட்டமா இருந்துது. அவற்றையும் பிறகு பதிவேன்

இப்போ இன்றைய விசயத்துக்கு வருவோம்..

நண்பேண்டா……………..


இப்படித்தான் அன்றொரு நாள் நான் கொஞ்சம் தாமதமாக கெம்பஸ் சென்றதால் கெண்டீனில் பின் வரிசையில் அமர நேர்ந்தது. கதிரையில் உட்கார்ந்துகொண்டு பக்கத்தில் பார்த்தால் நம்ம ரூம் நண்பந்தான் அருகில். ஆஹா தோள் கொடுப்பான் தோளனும் இருக்கானே அப்போ ஜாலிதான் எண்டு நினைச்சு நம்பி உட்கார்ந்தன்.

எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்துது. கொஞ்ச நேரத்துல நம்ம ரூம் மெட் அதுதான் என் அருகில் இருந்த நண்பன் வயிற்றப் பிடிச்சிக்கிட்டு வளையிறான், நெளியுறான், குனியுறான், நிமிர்ரான். எனக்கு உள்ளுக்குள்ள சிரிப்புதான். “போங்க தம்பி ராகிங் ஆரம்பிச்சு இத்துன நாள்ள உங்கள மாதிரி எத்துன பேரோட நடிப்பப் பாத்துட்டம் என்று மனசுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டேன்.

நேரம் போகப் போக அவனது நெளிவு, குழைவு எல்லாம் அதிகரிக்குது. திரும்பி அவனைப் பார்த்து என்னாச்சுடான்னு கேட்க முடியாது. கேட்டால் சீனியர்ட கண்ல பட்டா அப்புறம் ஆப்புதான். அதனால அடென்சல்லஇருந்துட்டே அவனப் பார்க்காம நேராப் பார்த்துட்டு என்னடா உனக்குப் பிரச்சினை..? என்று கேட்டா. ”இல்லடா வயிறு ரொம்ப வலிக்குது தாங்க முடியலடா. ரொம்பக் கஸ்ட்டமா இருக்குடா” ந்னு சொன்னான்.சரி இவனுங்ககிட்ட சொல்லிட்டு ரூமுக்குப் போடான்னு சொன்னன்.
இல்லடா எனக்கு சிங்களத்துல சொல்லத் தெரியாதுடா… ப்ளீஸ் நீ கொஞ்சம் சொல்லுடாஎன்றான்.

டேய் விளையாடுறியா எனக்கு சிங்களம் தெரியாதுன்னு சொல்லி வெச்சிருக்கன். இப்போ சிங்களத்துல சொன்னா என் கதை கந்தல். நீயே எப்படியாவது சொல்லு என்று சொல்லிட்டு நான் என் பாட்டுல இருந்துட்டன்.

இவனும் கொஞ்சம் ஓவரா நெளியத்தொடங்கிட்டான். அதோட ப்ளீஸ்டா ஹெல்ப் பண்ணூடாஎன்று ரொம்ப ரொம்ப ஓவரா என்கிட்ட கெஞ்சத் தொடங்கிட்டான்.
எனக்கும் அவனப் பாத்தா ரொம்ப பாவமாத்தான் இருந்துச்சு. ஒரு வேளை இவனுக்கு உண்மையில வயிற்றுவலியா இருக்குமோன்னு ஒரு டவுட்டும் வந்துச்சு. சரி ஏதோ ஒரு மனிதாபிமான அடிப்படையில் உதவலாம்; என்ன ஆனாலும் பரவாயில்ல என்று மனச கல்லாக்கிட்டு சீனியர் ஒருவன் வரும் வரை காத்துக்கொண்டிருந்தேன்.

அதற்கிடையில் நண்பன் கூட பரஸ்பர உடன்படிக்கியொன்றையும் ஏற்படுத்திக்கொண்டேன். அதாவது டேய் இங்கப்பாரு.. உன்னைக் கேட்டு விடுறன், ஆனா நீ போறப்போ தனியா போக முடியல என் ரூம் மேட் இவனையும் கூட கூட்டிட்டு போறன் என்று சொல்லி என்னையும் கூட்டிட்டு போகனும் சரியா?இதுதான் உடன்படிக்கை. அவனும் சரின்னு சொன்னான்.

எதிர்பார்த்தது போல் சீனியரும் வந்தான். இவன் வளையிறது நெளியிறதெல்லாம் அவன் கண்ணுக்குப் பட்டுட்டு. வந்தான்

சீனியர் : டேய்.. என்னடா நேரா இருக்கத் தெரியாத உனக்கு..? (சிங்களத்தில்)
நண்பன் : ……………….. பதில் எதுவும் சொல்லாம வயிறைப் பிடிச்சுட்டு ஏதோ சைகை செய்தான்.

சீனியர் : என்னடா…? என்ன பிரச்சினை உனக்கு?(சிங்களத்தில்)
நண்பன் : ………………… வயிற்றுவலி அண்ணா.. (வயிற்றைப் பிடித்துக்கொண்டு தமிழில் சொன்னான்)

சீனியர் : என்னடா சொல்றாய் தெளிவா சொல்லுடா(சிங்களத்தில்)
நண்பன் : வயிற்றுவலி தாங்க முடியல (தமிழில்)

இவன் சொல்றது அவனுக்கும் அவன் சொல்றது இவனுக்கும் புரியல.
எனக்கு சிரிப்பு ஒரு பக்கம். நாமளா வாயைக் குடுத்து வாய்ல புண்ணோட போகனுமான்னு குழப்பம் ஒரு பக்கம்.
அந்த நேரமாப் பார்த்து.. சீனியர் என்னைப் பார்த்து...

சீனியர் : டேய்இவன் என்னடா சொல்றான்.. என்ன பிரச்சினை அவனுக்கு..?(சிங்களத்தில்)
நான் : வயிற்று வலியாமாம் (தமிழில்)

சீனியர் : சிங்களத்துல சொல்லுடா(சிங்களத்தில்)
நான் : ……….. (அமைதியாக சொல்றதா வேணாமான்னு யோசனையில்)
நண்பன் : ப்ளீஸ்டா.. சொல்லுடா.. அல்லாஹ்வுக்காக சொல்லுடா

சீனியர் : என்ன பிரச்சினைடா அவனுக்கு…? (சிங்களத்தில்)
நான் : இவனுக்கு வயிற்று வலியாம்.. ரொம்பக் கஸ்ட்டமா இருக்காம் (சிங்களத்தில்)

சீனியர் : இருக்க முடியாதாமா…?(சிங்களத்தில்)
நான் : ரொம்பக் கஸ்ட்டமா இருக்காம்போடிங்குக்கு போகனுமாம்.(சிங்களத்தில்)

சீனியர் : இரு வாறன் (என்று சொல்லிட்டுபோய் ஒரு 5 நிமிசத்துல தமிழ் பேசுற சீனியர கூட்டிக்கிட்டு திரும்பி வந்தான்)

தமிழ் சீனியர் : என்னடா.. பிரச்சினை உனக்கு..?
நண்பன் : வயிறு வலிக்குது தாங்க முடியல

தமிழ் சீனியர் :  டேய் பொய் சொல்லி நடிக்காத..
நண்பன் : இல்லை அண்ணா.. சத்தியமா

தமிழ் சீனியர் :  சரி பெனடோல் ரென்டு தாறன் போட்டுட்டு இருக்குறியா..
நண்பன் : இல்லை அண்ணா.. தாங்க முடியல கஸ்ட்டமா இரூக்கு. ரூமுக்குப் போகனும்

தமிழ் சீனியர் சரி.. தனியாப் போவியா….?
நண்பன் : ஓம் அண்ணா..

நான் : அடப்பாவி, துரோகி என்னைக் கழட்டிவிட்டியேடா பன்னாட.. (மனசுக்குள்ள)

தமிழ் சீனியர் : சரி வா
(என்று அவனைக் கூட்டிட்டு போனான்.)

நானும் ஏமாற்றத்தோட கதிரையில உற்கார நினைச்சாஅந்த சிங்கள சீனியர் என்னை முறைச்சுப் பாத்துட்டே இருந்தான்.
ஆஹா…. வில்லங்கம் வெறித்தனமாப் பாக்குதேநாம இன்னைக்கு காலின்னு நினச்சுக்கிட்டன்

சீனியர் : அப்போ உனக்கு சிங்களம் தெரியும் என்ன? (சிங்களத்தில்)
நான் : …………. (அமைதி)

சீனியர் : சிங்களம் தெரிஞ்சு வெச்சிக்கிட்டு எங்களையெல்லாம் ஏமாற்றியிருக்காய் என்ன? (சிங்களத்தில்)
நான் :………..  மீண்டும் அமைதி

சீனியர் : டேய்உனக்கு சிங்களம் தெரியும்னு எனக்குத் தெரியும்இப்போ பேசுறியா இல்ல  முட்டி போடுறியா..? (சிங்களத்தில்)
நான் : ………………… மீண்டும் அமைதி

சீனியர் கடுப்பாகிட்டான்…..

சீனியர் : நடிக்கிறாய் என்னஇரு இன்னைக்கு உனக்கு சிங்களம் தெரியும் எண்டத நான் ப்ரூஃப் பண்றன். இப்படியே நில்லு

என்று சொல்லிட்டு போயிட்டான்
.
(என் மனசுக்குள்ள என்னை மாட்டிவிட்டுட்டு போனானே ஒரு துரோகி அவனை சபிச்சுக்கிட்டே இருந்தன்..)

அந்த சீனியர் போக இன்னொருத்தன் வந்தான். அவன விட இவன் டெரரா இருந்தான்.

2வது சீனியர் : டேய் இங்கவா…?
நான் : ஆஹா கூப்பிடுறானே….தனியாக் கூப்பிடுறானே (மனசுக்குள்ள)

2வது சீனியர் : சிங்களம் நல்லாப் பேசுறாய் ஆனா தெரியாதமாதிரி எங்களையெல்லாம் ஏமாத்துறாய் என்ன..? எங்களப் பார்த்தா பொன்னையன் மாதிரியா தெரியுது உனக்கு..?

நான் : ஹி ஹ்ஹி ஹி (மனசுக்குள்ள)

2வது சீனியர் அவனால முடிஞ்ச அளவுக்கு என்கிட்ட கேட்டுப் பார்த்தான்..
ஆனால் என்பதில் வெறும் அமைதியும் தமிழுமே

ஒருத்தன் மாறி ஒருத்தன் வந்து எவளவோ மிரட்டிப் பாத்தானுக..
அசரவே இல்ல.. நாள் முழுதும் நாந்தான் அவனுங்களுக்கு பலிக்கடா..

அதுல ஒருத்தன்.. ”நீ இன்னைக்கு சிங்களத்துல பேசலன்னா வீட்டுக்குப் போகவே முடியாதுன்னான்.
ஆஹா என்னடா பெரிய பெரிய ஆப்பா போடுறானுங்களேன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டாலும்  அப்பவும் நாங்க அமைதிதான்.

அவனுங்களுக்கே முடியாம. கடைசியில தமிழ் சீனியர் அனுப்பினானுங்க..

தமிழ் சீனியர் : டேய் சிங்களம் தெரிஞ்சா தெரியும்னு சொல்லிட்டு போய் உற்காரண்டா

நான் : போங்க பாஸ் சிங்களம் தெரியலன்னு சொன்னா இன்னைக்கு மட்டும்தான் கஸ்ட்டம். தெரியும்னு சொன்னா ஏமாற்றினதுக்கு வேறையா, இருக்குற நாற்களுக்கு வேறையான்னு எங்கள சின்னாபின்னமாக்குவீங்க. நாங்க நம்பமாட்டோம். (மனசுக்குள்ள)

தமிழ் சீனியர் : என்னடா பேசாம இருக்காய்சிங்களம் தெரியும்னு ஒத்துக்கிறியா..?

(அட்டென்சன்ல நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு நான் சொன்னன்...)

நான் :இல்ல அண்ணாஎனக்கு சிங்களம் தெரியாது. இங்க வந்த கொஞ்ச நாள்ளதான் சில வசனங்கள் படிச்சன். அத வெச்சித்தான் இப்போ பேசினன். அதுபோல வீடு எங்க இருக்கு? உங்க ஊர் எது? பெயர் என்ன? இவளவும் தெரியும். இதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது அண்ணா.

நம்ம பதில் அண்ணாத்தைய திருப்திப்படுத்திருக்கும் போல

தமிழ் சீனியர் : இத அவங்ககிட்ட சொல்லிருக்கலாமேடா..

நான் : அவங்க சிங்களத்துல என்னென்னவோ கேட்டாங்க. அவங்க என்ன கேட்டாங்கன்னோ அதுக்கு எப்படி பதில் பதில் சொல்ற எண்டோ எனக்கு தெரியல அண்ணா. அதான் எதுவுமே பேசல.
(
இதுதான் முழுப் பூசனிக்காயை சோத்துல மறைக்குறது என்பது)

தமிழ் சீனியர் : சரி நில்லு வாறன்

அண்ணாத்தை போய் மற்ற சீனியர்கள்கிட்ட நான் சொன்னதயெல்லாம் சொல்லிருப்பாரு போல. அவுகளும் சமாதானமாகிட்டு மொத்தமா வந்தாங்க.

மிச்சம் மீதி வெச்சதுகளையும் திட்டி முடிச்சிட்டு..
ஒருத்தன் நாளைக்கு வரும்போது பத்து வசனம் பாடமாக்கிட்டு வரனும்

மற்றவன்
சிங்களப் பாட்டொன்னு பாடமாக்கிட்டு வா
இப்படி ஏகப்பட்ட ஹோர்ம் வேர் கொடுத்தானுங்க. நானும் அமைதியா கேட்டுட்டே இருந்தன்.
 
ஆனாலும் பாருங்கோ அவனுங்க சொன்னது சிங்களத்துல. நான் வேற சிங்களம் தெரியாதுன்னு இவளவு நேரம் சாதிச்சிட்டு இருக்கன். அப்ப கூட சிங்களத்துல சொல்லிட்டு போறானுங்க…… என்ன கொடுமை இது..

ஆனாலும் அன்றைய நாள் முழுதும் எனக்கு வை ப்ளட்..? சேம் ப்ளட் தான்


ஒரு துரோகியால கொலைக் களத்துல தனியா நின்னு போராடி ரணகளமாகி ரூமுக்கு வந்தா.. “வயிற்றுவலின்னு அங்க அழுது புலம்பி, என்னையும் கோர்த்துவிட்டுட்டு வந்த அந்த துரோகி இங்க கட்டில்ல மல்லாக்காப் படுத்துக்கிட்டு சுவர்ல ரெண்டு காலையும் வெச்சிக்கிட்டு ஜாலியா பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கு

எனக்கு எப்படி இருக்கும்
….? வந்த ஆத்திரத்துல கையில இருந்த புத்தகத்தால அவன் மூஞ்சில வீசி அடிச்சிட்டு அவன்கூட போட்ட சண்டைல அவன் மண்டையே உடஞ்சிருக்கும். ஆனா மன்னிப்பு கேட்டான்.. நமக்கு  வேற இழகிய மனசா மன்னிச்சு விட்டுட்டன். ஆனா கொஞ்ச நாள் அவன்கூட பேசவே இல்ல..


இன்னும் சொல்வேன்….குறிப்பு:
பல்கலைக் கழக வாழ்க்கையில் நான் அனுபவிச்ச, சந்திச்ச சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.
நாங்களும் க்ரேஜுவேட்டாக்கும்என்ற இந்தப் பதிவு மூலம் தொடர்ச்சியாக எனது பல்கலைக் கழக வாழ்க்கையின் சுவாரஸ்யமான விடையங்களை பகிர்ந்துகொள்வேன்.
 


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

துவாரகா சொன்னது…

Superb..உங்க friend என்ன பாட்டு பாடிக்கொண்டிருந்தார்.......?

Ahamed Suhail சொன்னது…

@துவாரகா
காதல் வெண்ணிலா கையில் சேருமா..?

NIZAMUDEEN சொன்னது…

நாடகமாகவே எழுதிட்டீங்களே. ப்ளே (PLAY), பலே!

Ahamed Suhail சொன்னது…

@NIZAMUDEEN

ஹா ஹா நன்றி சகோ..
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கம்