RSS

பெருநாள் காசு இல்லனா.. அன்பாச் சொல்லிட்டு அனுப்பிடவேண்டியதுதானே.. அதுதானேய்யா ஒலக வழக்கம்


நான் சுத்தி வழைச்சுப் பேச விரும்பல
சம்பந்தப்பட்டவங்களப் பார்த்து நேரடியாவே கேக்குறன்..
பெருநாள் கொண்டாடுறீங்களா? இல்ல அராஜகம் பண்றீங்களா..?
என்ன பண்ணினான் அந்தப் பையன்? என்னையா தப்பு பண்ணீனான்?
ஏதோ ஆர்வக் கோளாறுல பெருநாள் காசு கேட்டுட்டான்...
பெருநாள் காசு இல்லனா.. சாரி காசு இல்லன்னு அன்பாச் சொல்லிட்டு அனுப்பிடவேண்டியதுதானே..
அதுதானேய்யா ஒலக வழக்கம்.
அத விட்டுப் போட்டு அம்பது பேர் முன்னாடி இந்த வயசுலையும் பெருநாள் காசு கேக்குறார்னு சொல்லி அசிங்கப்படுத்திருக்க நீயி…..
அட அசிங்கப்படுத்தினாலும் பரவால்லையா… போறவாற சின்னப் பிள்ளைங்களையெல்லாம் கூப்பிட்டு அங்கிள் கிட்ட பெருநாள் காசு கேளுங்கடான்னு கடுப்பேத்தியிருக்க நீயி...
அம்புட்டு பசங்களுக்கு பெருநாள் காசு கொடுக்குறதுக்கு இது என்ன கவர்மெண்ட் கஜானாவா இல்ல ஒலக வங்கியா?
ஏதோ அந்தப் பையன் பாடியில அவன் வீட்ல சாப்பிட்ட பலகாரம், மஸ்கட் தந்த எனர்ஜி இருந்ததனால அவன் ஓடி எஸ்கேப் ஆகிருக்கான்யா….
அப்டில்லாம அந்தப் பசங்க கிட்ட மாட்டி காசப் பறிகொடுத்திருந்தா அவன் dongle ற்கு யாரு ரீலோர்ட் பண்றது அவன் ஃபேஸ்புக் அக்கெளண்ட யாரு மெயிண்டைன் பன்றது…?
இவ்வளவு ஏன் முந்த நாள் கூட இப்டி ஒரு சம்பவம் நடந்துது.
இதே பையன் இன்னொரு சொந்தக்காரன் வீட்ட போய் பெருநாள் காசு கேட்டான்யா…
ஆனா அந்த சொந்தக்காரங்க அந்தப் பையன உன்னைய மாதிரி இம்புட்டு அசிங்கப்படுத்தல்ல..
ஒரு ஒரு மணிநேரம் ஆறுதலாப் பேசிட்டு அனுப்பிருக்காங்கையா
அதுவும் எப்டி பிள்ளைக்கு மனம் நோகக் கூடாதுங்குறதுக்காக ஃபலூடா, ஐஸ்கிறீம், அப்பிள், ஒரேஞ்னு வெராய்டி வெராய்டியா கொடுத்துட்டு. அப்புறம் பெருநாள் காசு இல்லனு நாசூக்கா சொல்லி அனுப்பிருக்காய்ங்கை..
அந்த நாகரீகம் கூட தெரியாது உனக்கு…..?
எப்டியெல்லாம் அசிங்கப்படுத்திப்போட்ட…
ஒரு பச்சத் தண்ணி கூட கொடுக்காம திருப்பி அனுப்பிருக்க நீயி…
எப்படியெல்லாம் கேட்டுப் பார்த்தான் அவன்…
கடைசிவரை ஒன்னுமே கொடுக்காம அனுப்பிருக்க..
இரக்கமில்லையா உனக்கு….?
(யாவும் கலப்படமற்ற கற்பனை )

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

VOPL உம் அண்ணனின் அட்டகாசங்களும்

** நாட்குறிப்பில் ஒரு பக்கம் ***
----- VOPL உம் அண்ணனின் அட்டகாசங்களும்.------

கடந்த வருடம் நம்ம அண்ணாத்தை ஒருவர் VOPL (Virakesari Online Primer League) விளையாட ஒரு மாதத்துக்கு முதலே ரெடியாகிட்டார். அடிக்கடி ஃபோன் பண்ணி ரூம்லதானே நிப்ப நான் கொழும்பு வந்தா உன் ரூம்லதான் தங்கணும் என்று ஒரு மாதமாக சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஒரு நாள் கொழும்பில் எனது ரூமில் தங்கியிருக்கிறேன் நம்ம அண்ணாத்தை ஃபோன் பண்ணினார்.

அவர் :எங்கடா கொழும்புலதானே இருக்க காலைல கொழும்புக்கு உண்ட ரூமுக்கு வாறன்.

(காலை 4.30க்கு வந்து சேர்ந்தார். நானும் அவருக்கு தூங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துவிட்டு வசந்தம் டீவியின் எமது பார்வை நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தயாரானேன்.)

நான் : பாஸ் நீங்க தூங்குங்க ப்ரோகிராம் முடிச்சிட்டு 7.15க்குள்ள வந்துடுவன வந்த உடனே கிளம்பிடுவம்.

அவர் : சரிடா சரிடா உன் லெப்டொப்ப ஒன் பண்ணி தந்துட்டு போ. ஒன்லைன்ல உண்ட நிகழ்ச்சியப் பாப்பம்.

நான் : அப்போ தூங்கலையா…?

அவர் : தூங்குறதான் எதுக்கும் ஒன் பண்ணி தந்துட்டு போ…

(நானும் லெப்டொப்பை ஒன்பண்ணிக் கொடுத்துட்டு நிகழ்ச்சிக்காக கலையகம் சென்று மீண்டும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு 7.15 ற்கெல்லாம் ரூமிட்கு திரும்பிவிட்டேன். ரூமுக்கு வந்து பார்த்தால் ரூம் அப்பவே சுத்தமாத்தான் இருந்தது நம்ம பாசு மேலும் சுத்தப்படுத்திவிட்டு மெச் விளையாடப் போக தயாராக இருந்தார்.
நானும் தயாரானேன் நான் தயாராகிக் கொண்டிருக்கும் நேரம் நம்ம அண்ணாத்தை நிண்ட இடத்துல துள்ளுறார் ஓடுறார், கைய கால நீட்டுறார்.. )

நான் : என்ன பாஸ் இது

அவர் : வோம் அப்டா வோம் அப்…

நான் : ஓஹ்ஹ்ஹ் ஓகே ஓகே

நான் : சரி வாங்க போகலாம் (பைக்ல போகும்போது) பாஸ் சாப்பிட்டுட்டு போவமா..?

அவர் : இல்லடா ஏற்கனவே லேட் ஆகிட்டு கிரவுண்டுக்கு போயிட்டு அங்க பக்கத்துல ஏதும் கடையில சாபிடுவம்

(கிறவ்ண்டுக்க வந்தா சும்மா இரிப்பம்னு இல்ல பெட்ட வாங்கி ரெண்டு சொட் போளை வாங்கி ரெண்டு போள்.. ஃபுல் ப்ரக்டிஸ் )

நான் : பாஸ் சாப்பிட்டுட்டு வருவமே செம பசி

அவர் : இருடா இரு

(அப்டி சொல்லிட்டு ஏதோ சாவு வீட்டுக்கு வந்த அரசியல்வாதி அங்க இருக்கிர எல்லார்க்கிட்டையும் வாண்டட்டா போய் அளவளாவுற மாதிரி நம்ம அண்ணாத்தையும் எல்லார்கிட்டையும் சுக நலம் விசாரிக்குது. எனக்கோ பசி அகோரம். )

நான் : பாஸ் வாரீங்களா இல்ல நான் போய் சாப்பிட்டு வரட்டுமா…?

அவர் : சரி வா போவம்….

நான் : பைக்ல போவமா

அவர் : இல்ல நடந்து போவம் பக்கத்துலதான் ஒரு கடை இருக்கு குயிக்கா போய்ட்டு வந்துருவம்.

(சாப்பாட்டுக் கடையில வெறும் பொல்ரொட்டியும் கட்ட சம்பலும்தான் இருந்துது. )

நான் : பாஸ் என்ன சாப்பிடுறீங்க….?

அவர் : இல்லடா நான் ஒண்டும் சாப்பிடல; சாப்பிட்டா சரியா விளையாட முடியாது ஒரு டீ மட்டும் குடிக்கிறன்.

நான் : ஒரு பொல் ரொட்டியாவது சாப்பிடுங்க பாஸ்…

அவர் : இல்லடா பசியோட போனதான் வெறியோட விளையாடலாம்

நான் : ஓ.. ஓகே ஓகே நமக்கு அப்டியெல்லாம் இல்ல பாஸு, வயிறுதான் முக்கியம். ( சொல்லிட்டே நான் ரெண்டு பொல் ரொட்டி ஒரு டீ நம்ம பாஸு பாதி ரொட்டி ஒரு டீ சாப்பிட்டோம்.சாபிட்டுவிட்டு கிரவுண்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தோம்….
வரும்போதே நம்ம பாஸ் துள்றாரு பாயுறாரு கைய முன்னுக்கு பின்னுக்கு சுத்துறாரு… )

நான் : என்ன பாஸ் வோமப்பா….?

அவர் : ஓமடா ஓமடா…..

நான் : ஓ… இருக்கட்டும் இருக்கட்டும்….

அவர் : டேய் வாடா கொஞ்சம் ஓடுவம்… அப்பதான் உடம்பு வேருக்கும் எல்லா தசைகளும் இழுபடும்….

நான் : ஓ இதுவும் வோமப்ல வருதா பாஸ்…..

அவர் :ஓம்டா ஓடுவமா..?

நான் : ஓகே ஓடிட்டா போச்சு…..

வோமப் பில்டப் எல்லாத்தையும் முடிச்சாச்சு. அண்ணன் ஒரு டீம் நான் வேறொரு டீம்…
அண்ணண்ட டீமுக்குதான் முதல் மெச் அண்ணந்தான் ஓபனர். அண்ணன் கலக்குவார் எண்டு நானும் நம்பி உட்கார்ந்து பார்த்தன்

அண்ணனை நோக்கி வேகமாக வீசப்பட்ட பந்து ஆம் அண்ணன் ஓங்கி அடித்தார் மட்டையில் படாமல் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு அண்ணன் ஆட்டமிழந்தார்.

அடுத்த மெச்சிலும் அண்ணன் முதலாவது பந்திலேயே ஓங்கியடித்து மட்டையில் படாமல் LBW முறையில் ஆட்டமிழந்து அண்ணன் வெளியேறினார்.

3வது போட்டியில் அண்ணனுக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இப்படி ஊர்ல இருந்து சில பல ஆயிரங்கள செலவு பண்ணி கொழும்பு வந்து எல்லாப் போட்டிகளிலும் டக்-அவுட் ஆகிப்போன நம் அண்ணனை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்ந்தேன்.

தொடரில் நான் விளையாடிய அணி சம்பியன். அண்ணனின் அணி படு தோல்வி. எல்லா மெச்களும் முடிந்து ரூமுக்கு வரும் வரை அண்ணன் என்னருகில் வரவே இல்லை. வந்தால் ஏதும் சொல்லிடுவேனோ என்ற தயக்கம். அங்கு வந்திருந்த பிரபல அறிவிப்பாளார் ஒருவரின் குட்டி மகனோடு ஒரு ஓரமாக விளையாடிக்கொண்டிருந்தார். அந்தக் குட்டிப் பையனோடு விளையாடத்தான் தான் சரி என்பதை அவர் தாமதமாகத்தான் புரிந்துகொண்டார்…

ரூமுக்கு வந்ததும் அண்ணனின் வேண்டுகோள் கட்டாயப்படுத்தலின் காரணமாக சினி சிட்டி தியட்டரில் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் பார்த்து அண்ணனின் சோகத்தைக் கொஞ்சம் குறைத்தோம். என்னா டைமிங்.

குறிப்பு : இதில் வரும் அண்ணாத்தை யாரென்று நான் சொல்லமாட்டேன். ஆனால் இந்தக் கதையை ஒரு குறும்படமாக இயக்கினால் @ Kanapathipillai Prapakaran அவர்தான் இந்தக் கதையின் ஹீரோ…..
காரணம் அவரால் மாத்திரமே இந்த கதையை உள்வாங்கி உயிரோட்டமாக ,யதார்த்தமாக நடிக்க முடியும்.
பாஸ் கால்சீட் கொஞ்சம் ஒதுக்கி வைங்கோ

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஐ.நா வே வந்தாலும் உன்னை ஒன்னும் பண்ண முடியாதுடா

---- சும்மா லொலலாயி................---

இலங்கையில் ஆட்கடத்தல் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு விசாரிக்க இலங்கை வந்திருக்கு. நம்ம மன்னர், ரணில், மங்கள உட்பட எல்லோரும் பஞ்சாயத்துக்கு வந்திருக்காங்க... மகனைத் தொலைத்த கோபாலுவிடம் விசாரணை

**** பஞ்சாயத்து ஆரம்பம். ***

ஆணைக் குழு தலைவர் : கோபாலு உன் பேச்சக் கேட்டுதான் பஞ்சாயத்தக் கூட்டிருக்கம் உன் பையன யாரு கடத்தினன்னு சொல்லு அதுக்குரிய தண்டனையக் குடுத்துடுவம்

கோபாலு : அது வந்துங்க......

மகி : டேய் குர்ரா குர்ரா… ஏகே 47அ. ஏகே 47 இப்ப தேவப்படாது தேவப்பட்டா பின்னாடி வாங்கிக்குறன். எதுக்கும் லோர்ட் பண்ணி வெச்சிக்க..

மங்கள : தலைவரே இதமாதிரி நிறைய ஆளுங்க காணாம போயிருக்காங்க. கடத்தல் காறனுகள எப்டியாவது கண்டுபிடிச்சு தூக்கில போடனும்

மகி : (ஆஹா மகிந்தா ஒவ்வொருத்தனும் இருக்குற வேகத்தப் பார்த்தா உன் அரும பெருமைக்கு ஆபத்து வந்துடுப் போல இருக்குடா…. ரொம்பக் கவனமா டீல் பண்ணி ஆட்டத்தக் கலச்சிடு ராசா)
ஆ….. ஆ.. பஞ்சாயத்து நடக்கட்டும் பஞ்சாயத்து நடக்கட்டும்… யாரா இருந்தாலும் தைரியமா சொல்லப்பா நீயி… பயப்புடாத….. ம்ம்ம்ம்ம்ம் பயப்புடாதடா…………

தலைவர் :ஏண்டா தயங்குற தைரியமா சொல்லுடா

மகி : சொல்லு நீதான் தைரியமான ஆளாச்சே சொல்லு.. ம்ம்ம்.... சொல்றா…..

தலைவர் : இதுக்குப் போயி ஏண்டா பயப்புர்ர சொல்றா

மகி: அட என்ன பெருசு வெவரமில்லாம பேசிட்டு இருக்க… நம்ம ஊர்க்காரங்க குணம் தெரியாம பேசிட்டு இருக்க…. இன்னார்தான்னு கோபாலு சொன்னான்னா பின்னால ஏதும் பிரச்சின வரும்னு யோசிக்கிறான் அவன் இல்லடா கோபாலு…? அப்டித்தானே….??

தலைவர் : என்னடா கோயில் மாடுமாதிரி தலையாட்டுற பயப்புடாம சொல்லுடா

ரணில் :
தலைவரே நான் என்ன நினைக்குறன்னா…

மகி: டேய் நீ என்ன நினைக்குறது…? அவன் நினைக்கவேணாம அவன் பொண்டாட்டி பிள்ளைங்க பற்றி என்னமோ நெனைக்குறன் நொனைக்குறண்டுட்டிருக்க…..

ரணில் : அப்ப பஞ்சாயத்துல நான் ஒன்னும் சொல்லக்கூடாதா….?

மகி : சொல்லக்கூடாதுடா சொல்லக் கூடாது உனக்கு சொல்ல உரிமை கிடையாது… நீ பாட்டுக்கு ஏதாவது சொல்லிட்டுப் போயிட்டேன்னா அனுபவிக்கிறது யாரு…. ப…. ப்ப்பாஅ அவந்தானே நீ பஞ்சாயத்துல உக்காந்து கிழிச்சது போதும் போடா போ….. பெரிய மனுசங்க பேசுறப்போ பேசின குத்திடுவன்.. நீங்க பேசுங்க பெருசு.. என்னடா மொறப்பு அவன் அவன் கஸ்ட்டம் அவ அவனுக்குத்தானேடா தெரியும்….

தலைவர் : ஏண்டா பயப்புர்ரா…..

மகி : அட என்ன தலைவரே….கோபாலு என்னைமாதிரி தைரியமான ஆளா இருந்தாலும் பரவால்ல கொஞ்சம் பயந்தவந்தானே…. ஏற்கனவே நம்ம ஊர்ல ஒரு அம்மாவும் பிள்ளையும் அண்ணன காணம் அவன ராணுவம்தான் கடத்தினன்னு சொன்னப்போ நம்ம பசங்க வீடு பூந்து அம்மாவையும் மகளையும் தூக்கி அம்மாவ ஒரு ஜெயில்லையும் மகள இன்னொரு ஜெயில்லையும் போட்டாங்களா இல்லையா…? அதெல்லாம் இவன் கண்முன்னாடி வந்து போகுமா இல்லையா…. பயப்புடதானே செய்வான்… லேசு வாக்குல கேளுங்க சொன்னா சொல்லட்டும் சொல்லலன்னா உட்ருவம்….

மங்கள : தயங்காம சொல்லுப்பா நாங்க இருக்கமில….

மகி : நீ இருப்பயா அவன் இருக்க வேணாமா….?

தலைவர் : டேய் மகி நீ தேவையில்லாம குறுக்க குறுக்க பேசுற

மகி : சம்பந்தப்பட்டவன் நாந்தான்யா பேச முடியும் அவனுக்குன்னு வேற யாரு இருக்கா….?

ரணில் : மகி வந்ததுல இருந்து நானும் பாத்துட்டு இருக்கன்… நீயே பேசிட்டு இருக்க அவனையும் பேச விடுய்யா….

மகி : எப்பிர்ரா பேசுவான் எப்பிடி பேசுவான். நீங்களே ஆளாளுக்கு பேசிட்டிருந்தா அவன் எப்பிர்ரா பேசுவான் நாய்களா…? நீங்கெல்லாம் இன்னைக்கு பஞ்சாயத்த முடிச்சிட்டு கெளம்பிடுவீங்கடா… அப்புறம் அவன் தனியாதானே இந்த ஊருக்க சுத்தனும். அவனுக்கும் அவன் உசிருக்கும் என்னடா உத்தரவாதம் இருக்கு…?

தலைவர் : டேய் மகி வந்ததுலிருந்து நானும் பாத்துட்டு இருக்கன் நீயே குறுக்க குறுக்கப் பேசிட்டு இருக்க. பஞ்சாயத்து தலைவர் நான் இருக்கன் நீயார்ரா குறுக்க குறுக்கப் பேசுறதுக்கு… அடிச்சா மீசப் பிச்சிக்கிட்டுப் போயிரும். உக்கார்ரா சும்மா.. கோபாலு நீ சொல்றா….

கோபாலு : ஐயா அது வேற யாருமில்லிங்க ….

மகி : பாத்தீங்களாய்யா இன்னும் சொல்றானில்ல பாத்தீங்களாய்யா… ஐய்யா…. குர்ரா அந்த AK47 இவன இங்கையே சுட்டுப் போட்டுர்ரன்… பெரிய மனிசன் காலையில இருந்து கேட்டுட்டு இருக்கீங்க சொல்றானா அவன்.... விடுங்கைய்யா…. டேய் சொல்றா சொல்றா நீயி சொல்றா….சரியான ஆளா இருந்தா சொல்றா…. இவளவு நேரமா கேட்டுட்டு இருக்கம் சொல்றானா பாருங்க...அயோக்கியப் பயல ராஸ்கல்….

தலைவர் : இர்ரா இர்ரா நான் கேக்குறன் நீ இர்ரா…. சொல்லித் தொலையேண்டா….

கோபாலு : ஐய்ய்ய்யா........என் பையன கடத்தினது யாருன்னு தெரியல.. யாரோ கடத்துற மாதிரி கனவு கண்டன்…. பஞ்சாயத்து கூட்டினது எனது தப்பு மன்னிச்சிடுங்க……

மகி : ஆ… போ… போ…. அவனே கடத்தினது யாருன்னு தெரியலன்னுட்டான் போ போ எந்திரிச்சுப் போ... பஞ்சாயத்துன்னா உடனே கூட்டத்தப் போட்டுர்ரது… போ போய் சோத்தப் பொங்கி கொழம்பு வெச்சு சாப்பிடுட்டு வேலையப் பாரு..ஊட்டுல யாரும் காணாமப் போனா யார்டையும் சொல்லிக் கேவலப்படாம என்கிட்ட சொல்லுங்கடா.. ஆ ஊன்னா கூடிர்ரது….

** ஐ.நா வே வந்தாலும் உன்னை ஒன்னும் பண்ண முடியாதுடா மகிந்தா இப்பிடியே மெயிண்டைன் பண்ணு… ஆ.. போ…. போ…




(கதை திரைக்கதை திரைக்குப் பின்னால் கதை உல்டா ரீமேக்கியது எல்லாம் - அஹமட் சுஹைல் .)

 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விசாகா கல்லூரி பழைய மாணவன் (நாங்களும் க்ரேஜுவட்டாக்கும் செமஸ்டர் - 05)

>>>> நாட்குறிப்பில் ஒரு பக்கம் >>>>>
---- விசாகா கல்லூரி பழைய மாணவன் ----

பல்கலைக் கழக நாட்களில் ஒரு நாள் விடுதி அறையில் நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஒவ்வொருவரும் தாம் படித்த பாடசாலைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அப்படியே ஒவ்வொருவரும் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து தாம் படித்த பிரபல பாடசாலைகள் பற்றிய பேச்சு ஆரம்பமானது.

அப்போது ஒவ்வொருவரும் தாம் படித்த ரோயல், டீ.எஸ் போன்ற பாடசாலைகள் பற்றி கதைத்தோம்.

அந்த நேரம் பார்த்து அமைதியாக இருந்த நண்பனொருவன்…..

”நான் 5ம் ஆண்டு ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணின. எனக்கு பிரபல பாடசாலையான கொழும்பு விசாக்கா கல்லூரியில் படிக்க வாய்ப்புக் கிடைச்சுது. ஆனா நான் போகல. அந்த ஸ்கூலால லெட்டர் வந்துது. நான் வீட்டாக்களோட போய் பார்த்தன். ஹொஸ்டல் வசதியெல்லாம் தாறண்டு சொன்னாங்க. ஆனா எங்க வீட்ட வெளியூருக்கு அனுப்பி படிப்பிக்க விரும்பல. அதால நான் போகல இல்லன்னா நானும் விசாக கொலீஜ்ல படிச்சிருப்பன்”
என்று சொல்லி முடித்தான்.

நாங்கள் நண்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரிப்பை அடக்கிக்கொள்ள முயன்றும் முடியவில்லை. எல்லோருமே கோரசாக சிரித்தோம்.

நாங்கள் சிரித்த காரணம் அவனுக்கு புரியவேயில்லை. மீண்டும்

“ என்ன பொய் சொல்றன் எண்டுதானே சிரிக்கிறீங்க. எனக்கு வந்த லெட்டர் இன்னமும் இருக்கு நான் ஒருநாளைக்கு கொண்டுவந்து காட்ரன் பாருங்க” என்றான்.

இப்பொழுது நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்…..

அவனுக்கு கொஞ்சம் குழப்பம் ,கொஞ்சம் கோபம்; கேட்டான் “ ஏண்டா சிரிக்கீங்க”

கட்டலில் இருந்து கீழே விழுந்து சிரித்துக்கொண்டிருந்த நான்…

“டேய் பக்கி விசாகா கொலீஜ் எங்குறது இலங்கையில இருக்குற ஃபேமசான Girls School டா”
என்று சொல்லிக்கொண்டே எனது சிரிப்பைத் தொடர்ந்தேன்.

அவனது முகத்தில் அசடு வழிந்தது.

O/L, A/L பரீட்சைகளுக்கு மொடல் பேப்பர்கள் வெளியிடுவதில் ரோயல் கல்லூரி மற்றக் கல்லூரிகள் போல விசாக்காக் கல்லூரியும் பிரபலம் அதில் அந்த பெயரை தெரிந்துகொண்டு ஆர்வக் கோளாறில் சொல்லிவிட்டான் நம்ம பய. அதுக்காக தனிப் பெண்கள் பாடசாலையில படிச்சன் எண்டா சொல்றது..

அன்று முதல் நமது நண்பர் “ விசாகா கல்லூரி Old boy" , விசாகா கல்லூரி மாணவி” என்று பல பெயர்களால் அழைக்கப்படலானார்.



** முன்னைய செமஸ்டர்களுக்கு

1. நாங்களும் க்ரேஜுவேட்டாக்கும் (செமெஸ்டர் - 1)

2.நண்பேண்டா.. (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -2)

3.பத் அடுவென் ஃபுல் ரைஸ் (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -3)

4.வடை போச்சே (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -4)




 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS