RSS

எந்த போஸ்ட் போட்டார்க்கும் உய்வுண்டாம் ........



** எந்த போஸ்ட் போட்டார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
எண்ட சொந்த போஸ்ட்டை coppy பண்ணியவர்க்கு.

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -






**நாங்கெல்லாம் நடுக் கடலிலையே ஹாயா நடந்து திரீரவிங்க..
எங்ககிட்ட போய் கடலுக்கு போறதுக்கு கப்பல் வேணுமா? தோணி வேணுமான்னு? கேட்டு அவமனாப்படுத்தப்புடாது...

போங்க தம்பி போங்க.. போய் பிடிச்ச மீன விக்கிற வழியப்பாருங்க..

(நல்லாக் கேக்குறாய்ங்கைய்யா டீட்டியலு)





**திருமணமான பெண்களைக் குறிக்கும் Mrs என்பதை தமிழ் படுத்தும் போது சிலர் “திருமதி” என்றும் சிலர் “திருவாட்டி” என்றும் பயன்படுத்துகிறார்களே..அது ஏன்?

திரு என்றால் கணவன் என்றும் பொருள்படும்.
“கணவனை மதிப்பவர்களை திருமதி” என்றும்
“கணவனை ஆட்டிப்படைப்பவர்களை திருவாட்டி”
என்றும் சொல்கிறார்கள்.

(எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ..?)





**தனி ஒரு மனிதனுக்கு Facebook Account இல்லை எனில்
ஜெகத்தினை எரித்திடுவோம்....

- புரட்சிக் கவிஞர் அஹமட் சுஹைல் -





**எங்க ஆத்தா
கரண்ட் கனெக்சன் எடுத்தா..
பைப்லைன் கனெக்சன் எடுத்தா
டெலிஃபோன் கனெக்சன் எடுத்தா

ஆனா ADSL கனெக்சன் எடுக்காம விட்டுப்புட்டாவே...?

ஒவ்வொரு நாளும் டொங்களுக்கு ரீ லோர்ட் பண்ணிப் பண்ணி என் சொத்துதான் அழியுது...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்







**வருக்கன் பலாப்பழத்தை தண்ட
மடியில் வளத்தாட்டி
சுள களத்தித் தின்னவந்தார் மச்சான்
வாய்க்கவில்லை போறாருகா!

(அவனுக்கு தனது மச்சி மீது ஓர் ஆசை. ஆசையை நிறைவேற்ற எண்ணி மச்சியின் வீட்டிற்கு செல்கிறான் அவன்.
அதற்கு இடம் கொடுக்கவில்லை அவள். பாவம் அவன் ஏமாந்து திரும்பிச் செல்வதைப் பார்த்து அவள் நையாண்டி செய்வதே இப்பாடல்.
இதில் ”வருக்கன் பலாப்பழமாக” அவள் உருவகிக்கப்படுகின்றாள். ”சுளை” என்பது கற்பு.) >எங்கள் பிரதேச நாட்டார் பாடல்களில் ஒன்று<





**கண்டியிலே ஒரு பொண்டாட்டி அந்தக்
கரவாகுல ஒரு வைப்பாட்டி
நானும் ஒரு பொண்டாட்டி இந்த
நாசமத்துப் போவானுக்கு!

(இன்னுமொரு நாட்டார் பாடல்)







**ஈ மெயில் அனுப்புற காலமிது நீங்க புறாவுக்கு ஓலை கட்டி அனுப்ப சொல்றீங்க..
டிஜிட்டல் இசை கேற்கும் எங்கள நீங்க க்ராமஃபோன் இசைத்தட்டு கேக்க சொல்றீங்க..
டீ.ஜேஸ் கலக்குற காலத்துல நீங்க பாகவதர் கச்சேரி பண்ண சொல்றீங்க..

இது ஜெனரேசன் கேப்.. அது புரியாத ரேப்..

சரி கம தேவையில்ல வெஸ்டேர்ன் தேவையில்ல கர்நாட்டிக் தேவையில்ல...
இருக்கவே இருக்கு ”ரெப்பூ” மாப்பு போட்டுத்தாக்கு போட்டுத்தாக்கு நீதாண்டா டாப்பூ

(பிடித்த உள்ளூர் பாடலொன்றின் வரிகள்)


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2012 ICC T20 உலகக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில்


 

2012ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள  ICC T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான இலச்சினை (லோகோ) மற்றும் உலகக் கிண்ண போட்டி அட்டவணை, மைதானங்களின் விபரங்கள் என்பனவற்றின் வெளியீடு மற்றும் உலகச் சம்பியன் அணிக்கு வழங்கப்படும் உலகக் கிண்ணத்தின் அறிமுகம் என்பன நேற்று கொழும்பில் Ceylon Continental Hotel இல் ஐசிசி இன் தலைமை நிருவாகி ஹாரூன் லோகார்ட், இலங்கை கிரிக்கட் இடைக்கால நிருவாக சபைத் தலைவர் உபாலி தர்மதாச, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணித் தலைவி சசிகலா சிரிவர்தன ஆகியோரின் கலந்துகொள்ளலுடன் வெகு சிறப்பாக இடம்பெற்றது.


ஹாரூன் லோகார்ட்,சங்கக்கார, சசிகலா சிரிவர்தன மற்றும் 
உபாலி தர்மதாச ஆகியோரும் இரு உலகக் கிண்ணங்களும்


மகளிருக்கான கிண்ணத்தோடு இலங்கை மகளிர் அணித் தலைவி உள்ள நிலையில் ஆடவருக்கான கிண்ணத்தோடு ஏன் இலங்கை அணித் தலைவர் டில்சான் இல்லை என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது. பின்னர் புரிந்துகொண்டேன்.. இவ்வருடம் ஐசிசி இன் இரு விருதுகளை அதிலும் குறிப்பாக மக்கள் தெரிவு விருதைப் பெற்றவர் என்பதால் குமார் சங்கக்காரவுக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டிருக்கலாம். என்று புரிந்துகொண்டேன்


2012 செப்டெம்பர் 6ம் திகதி ஆரம்பமாகும் போட்டிகள் ஒக்டோபர் 7ம் திகதி இடம்பெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறுதிப் போட்டிகளுடன் நிறைவுக்கு வருகின்றது.
தொடர்ச்சியாக 20 நாட்களில் 42 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஆண்களுக்கான 27 போட்டிகளும் பெண்களுக்கான 15 போட்டிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2012 ICC T20 உலகக் கிண்ண இலச்சினை

நேற்று வெளியிட்டு வைக்கப்பட்ட இவ் இலச்சினையில் உள்ள வளைந்த எழுத்துக்கள் இலங்கையின் பெரும்பான்மையானவர்களான சிங்களவர்களைக் குறிப்பதோடு, சிவப்பு வண்ணம் மற்றும் திரவக் கோடுகள் இலங்கையர்களின் கலை மற்றும் பண்பாடுகளைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது. மேலும் இச்சின்னத்தில் உள்ள சுழல் பந்துவீச்சாளர், கிரிக்கட் பந்து எனபன கிரிக்கட்டையும் குறிக்கின்றன.


2012ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ICC T20 உலகக் கிண்ணப் போட்டிகள் இலங்கையின் முக்கிய 4 மைதானங்களில் இடம்பெறவுள்ளன.
இதில் மகளிருக்கான T20 உலகக் கிண்ணப் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம், பல்லேகல மைதானம், ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஆகிய மைதானங்களிலேயே அனைத்து போட்டிகளும் நடைபெறவுள்ளன.

ஆண்கள் பெண்கள் இரு சாராருக்குமானா ICC T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஒக்டோபர் 7ல் இடம்பெறும்.

இலங்கை அணியானது சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க அணியுடன் குழு இல் இடம்பெற்றிருக்கிறது.

எதிர்வரும வருடம் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ணப்போட்டியானது ஐ.சி.சி T20 உலகக் கிண்ணப் போட்டிகளின் நான்காவது உலகக் கிண்ணப் போட்டியாக இலங்கையில் இடம்பெறவிருக்கின்றது. முந்தைய மூன்று உலகக் கிண்ணத்தொடர்களில் முதலாவது தொடர் தென்னாபிரிக்கா(2007) இலும் 2வது இங்கிலாந்தில்(2009) இலும் 3வது உலகக் கிண்ணத் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் (2010) இலும் இடம்பெற்றன.


2012 இலங்கை ஐ.சி.சி T20 உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்துவதன் மூலம் இலங்கையில் நடைபெறும் ஐ.சி.சியின் 5வது மிகப் பிரமாண்ட கிரிக்கட் நிகழ்வாக இது இருக்கும். முன்னதாக 1996 உலகக் கிண்ணப் போட்டிகள் அதனைத் தொடர்ந்து 2002ல் சம்பியன் கிண்ணப் போட்டிகள் அதனைத் தொடர்ந்து 2006ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் என்பவற்றோடு இறுதியாக 2011 உலகக் கிண்ணப் போட்டிகளையும் இலங்கை நடாத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




2012 .சி.சி T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை (ஆண்களுக்கானது)

Tue Sep 18           19:30 local
1st Match, Group C - Sri Lanka v Zimbabwe
Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota

Wed Sep 19           15:30 local
2nd Match, Group B - Australia v TBC
R Premadasa Stadium, Colombo

Wed Sep 19           19:30 local
3rd Match, Group A - India v TBC
R Premadasa Stadium, Colombo

Thu Sep 20           19:30 local
4th Match, Group C - South Africa v Zimbabwe
Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota

Fri Sep 21           15:30 local
5th Match, Group D - Bangladesh v New Zealand
Pallekele International Cricket Stadium

Fri Sep 21           19:30 local
6th Match, Group A - England v TBC
R Premadasa Stadium, Colombo

Sat Sep 22           15:30 local
7th Match, Group C - Sri Lanka v South Africa
Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota

Sat Sep 22           19:30 local
8th Match, Group B - Australia v West Indies
R Premadasa Stadium, Colombo

Sun Sep 23           15:30 local
9th Match, Group D - New Zealand v Pakistan
Pallekele International Cricket Stadium

Sun Sep 23           19:30 local
10th Match, Group A - England v India
R Premadasa Stadium, Colombo

Mon Sep 24           19:30 local
11th Match, Group B - West Indies v TBC
R Premadasa Stadium, Colombo


Tue Sep 25           :30 local
12th Match, Group D - Bangladesh v Pakistan
Pallekele International Cricket Stadium

Thu Sep 27           15:30 local
13th Match, Super Eights, Group 1 - TBC v TBC (C1 v D2)
Pallekele International Cricket Stadium

Thu Sep 27           | 19:30 local
14th Match, Super Eights, Group 1 - TBC v TBC (A1 v B2)
Pallekele International Cricket Stadium

Fri Sep 28           15:30 local
15th Match, Super Eights, Group 2 - TBC v TBC (D1 v C2)
R Premadasa Stadium, Colombo

Fri Sep 28           19:30 local
16th Match, Super Eights, Group 2 - TBC v TBC (B1 v A2)
R Premadasa Stadium, Colombo

Sat Sep 29           15:30 local
17th Match, Super Eights, Group 1 - TBC v TBC (C1 v B2)
Pallekele International Cricket Stadium

Sat Sep 29           19:30 local
18th Match, Super Eights, Group 1 - TBC v TBC (B1 v C2)
Pallekele International Cricket Stadium

Sun Sep 30           15:30 local
19th Match, Super Eights, Group 2 - TBC v TBC (D1 v A2)
R Premadasa Stadium, Colombo

Sun Sep 30           19:30 local
20th Match, Super Eights, Group 2 - TBC v TBC (B2 v D2)
R Premadasa Stadium, Colombo

Mon Oct 1           15:30 local
21st Match, Super Eights, Group 1 - TBC v TBC (A1 v C1)
Pallekele International Cricket Stadium

Mon Oct 1           19:30 local
22nd Match, Super Eights, Group 1 - TBC v TBC (B1 v D1)
Pallekele International Cricket Stadium


Tue Oct 2           15:30 local
23rd Match, Super Eights, Group 2 - TBC v TBC (A2 v C2)
R Premadasa Stadium, Colombo

Tue Oct 2           19:30 local
24th Match, Super Eights, Group 2 - TBC v TBC
R Premadasa Stadium, Colombo

Thu Oct 4           19:00 local
1st Semi-Final - TBC v TBC
R Premadasa Stadium, Colombo

Fri Oct 5           19:00 local
2nd Semi-Final - TBC v TBC
R Premadasa Stadium, Colombo

Sun Oct 7           19:00 local
Final - TBC v TBC
R Premadasa Stadium, Colombo






Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதலிக்கு ஓர் அப்பாவிக் காதலனின் கடிதம்!


அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் ,MC இல் மாலை சந்திக்கலாம் என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்.

அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார்
 ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர்.

MC இலும், KFC லும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன்.
வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…
அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில்
இருந்தபோது தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…வயசாச்சில்ல… என தன் திருவாய் மலர்ந்தார்.

திடப்பொருட்களிலிருந்து ஃபலூடா போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார்.
  
அப்பாடா, முடித்துவிட்டார் என்ற ஆசுவாசத்தை ஒரு ஒரேஞ் ஜூஸ் என்ற வார்த்தையில்  உடைத்தார்.
ஒரேஞ் ஜூஸும், 420 பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர  திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை.

தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன் என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஹோட்டல் தவளகிரிக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது
இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க… நாளக்கி பின்னேரம் kfc வந்துடுங்க… அப்ப பேசிக்கலாம் என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

KFC இல் உங்கப்பனின் அடுத்த கொலைவெறித் தாக்குதலுக்கு பலியாக நான் தயாரில்லை. அதுக்கு வேறொருவன் சிக்குவான் குடும்பத்தோட சேர்ந்து அவன சிதச்சிடுங்க..



இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய முன்னாள் காதலன்.


*** சுடப்பட்டு லைட்டா டிங்கர் பண்ணப்பட்டது...



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இங்கிலாந்தில் மொத்தமாக மொட்டை அடிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துக்கூறுகிரார் மிஸ்டர் தோனி...


நான் : ஹெல்லோ தோனி எப்படி இருக்கீங்க…..? என்ன சார் நீங்க இங்கிலாந்துக்கு போய் படுதோல்வி அடைஞ்சுட்டு வந்திருக்கீங்களேஎன்னாச்சு..?



தோனி : அந்த கொடுமைய ஏன் சார் கேக்குறீங்க.. மனிசனா சார் அவனுங்க…? யாருமில்லாத காட்டுல ஓநாய்தான் ராஜா எண்ட நினைப்புல பந்தாவா நாங்கதான் டெஸ்ட்ல முதலாமிடம் நாங்கதான் ஒன் டே சம்பியன் எண்டு சொல்லிட்டு பந்தாவா திரிஞ்சன். ஆனா அது பொறுக்கலியே இந்த இங்கிலாந்துக்காறனுகளுக்கு….
எங்ககிட்ட இருந்த முதலாமிடம் எண்ட பட்டத்த அன்பாக் கேட்டிருந்தா கொடுத்துட்டு போயிருப்பன் பாஸ்.. அத விட்டுட்டு இந்தப் படுபாவிங்க கன்னாபின்னா அடிச்சு நொறுக்கி உருட்டிப் பிரட்டி பறிச்சு எடுத்துட்டானுங்க பாஸ்எண்ட வாழ்க்கையில மட்டுமில்ல இந்திய கிரிக்கட் வரலாற்றிலேயே இந்தியா வாங்கின மரண அடின்னா இதாத்தான் இருக்கும் பாஸ்…. அடியா அது…? முடியல

நான் : என்னாச்சு தோனி உங்க கதைய விளக்கமா சொல்லுங்களன் கேப்பம்..

தோனி : ஆமா பாஸ்.. நான் பாட்டுக்கு செவனேன்னு ஐ.பி.எல், T20  எண்டு குட்டிக் குட்டி மெச்சுகளா விழையாடிட்டு இருந்தன் பாஸ்.. அந்த நேரம் பாத்து மே..தீவுகளுக்கு போய் வாங்கடான்னு சொன்னானுங்கசரி அவனுக வேற கெயில் மாதிரி முக்கியமான ஆட்கள் இல்லாம சப்ப டீமா இருந்தானுங்களா.. நானும் தைரியமா என் குரூப்ப கூட்டிக்கிட்டு போனன்.  அந்த சப்ப டீமையே ஒரு மாதிரியா சமாளிச்சிட்டு பாத்தா அடுத்தது இங்கிலாந்துக் காரனுங்க கூப்பிட்டானுங்க…. சரி இந்த நேரம் அங்க நல்ல குளிர் கிளைமட் வெக்கேசனுக்கு போற மாதிரி ஜாலியா போய் வரலாம்னு போனன் பாஸ்மே..தீவுகளுக்கு மெச் எண்டதும் வராத எங்கட டீம்ல இருந்த கிழடு கட்டைங்க வருத்தக்காரனுங்க எல்லாரும் கிளம்பி வந்துட்டானுங்க பாஸ்இதுல என்ன கொடுமைனா காயம்னு ஹொஸ்பிட்டல்ல அட்மிட்டாகி இருந்தவனுங்ககூட ஓசில இங்கிலாந்துக்கு போறம் எண்ட உடனே ஹொஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்துட்டானுங்க பாஸ்

நான் : ஹி ஹி அப்புறம் என்னாச்சு..?

தோனி : என்ன சார் பன்றது.. கிழடு கட்டைங்க, வருத்தக்காரனுங்களையும் அள்ளிக்கிட்டு நானும் நம்பிப் போனன். ஆனா அப்புறம்தான் தோனிச்சு ஏண்டா இங்க வந்தம் எண்டு. ஓசில இங்கிலாந்துக்கு போய்வர ஆசைப்பட்டது எவ்வளவு தப்புன்னு அப்ப புரிஞ்சுது பாஸ்..

நான் : அடடா என்னாச்சு தோனி?

தோனி : என்ன சார் ஆகல்ல? என்னதான் ஆகல்ல? இங்கிலாந்த சிம்பிளா அடிச்சிட்டு வரலாம் எண்ட நம்பிக்கையில போன எங்கள..இங்கிலாந்துக் காரனுங்க இனி வருவியா..? இங்க வருவியாஎண்டு செம சாத்து சாத்திப்புட்டானுங்க பாஸ்..

நான் : அந்தக் கதைய சொல்லுங்களன் தோனி?

தோனி : ஏன் சார் வயித்தெரிச்சலக் கிளப்புறீங்க…?
100 வருசம் ஒரு மூலையில உக்காந்து போத்தல் போத்தலா ஃபாரின் சரக்கு அடிச்சாலும் மறக்க முடியாத ஒரு கறுப்பு வரலாறு பாஸ்

நான் : பரவால்ல சொல்லுங்க பாஸ்……

தோனி : முதல்ல ஒரு இடத்துல கொண்டுபோய் விட்டானுங்க பாஸ்பெரிய கிரவ்ண்டுதான் ஆனா வந்த எல்லாரும் சின்னப் பசங்க…. சரி சின்னப் பசங்கதானேன்னு போனா……. யெம்மாடி க்ராதகனுகள் பாஸ்ஒரு 3 நாள் வெச்சு அடிச்சானுகள்…. செம அடி பாஸ். அதுல அருன் சுப்பையான்னு ஒருத்தன். பாத்தா நம்ம ஏரியாக் காரன் மாதிரியே இருந்தான். அவனுக்கு என்மேல என்ன கோவமோ தெரியல செம அடி அடிச்சிப்புட்டான் பாஸ்சரி இப்பதானே இங்கிலாந்துக்கு வந்திருக்கிறம் க்ளைமட்  ஒத்துக்கல போக போகச்சரியாகிடும்னு சிம்பிளா எடுத்துக்கிட்டம் பாஸ்

அப்புறம் 2 ,3 நாள்ள ஒரு ஏசி பஸ் வந்து நின்னுச்சு சரி எல்லாரும் ஏறுங்க போகலாம்னு சொன்னானுங்க…. சரி ஏதோ இங்கிலாந்த ஃப்ரீயா சுத்திக் காட்டப்போறானுங்கன்னு நம்பி ஏறினன் பாஸ்அந்த ஏசி பஸ் லோர்ட்ஸ் எங்குற இடத்துல போய் நின்னிச்சு…. அங்க போய் இறங்கின பிறகுதான் தெரிஞ்சுது இவனுங்க கூட்டி வந்தது சுத்திக்காட்ட இல்ல.. சுத்தி சுத்தி அடிக்கன்னு…… மொத்தம் 5 நாள் பாஸ்…. சும்மா சுத்தி அடிச்சானுங்க.. அதுலையும் பீட்டர்சன், பிரையர் எண்டு ரெண்டு பேர் பாஸ்…. சும்மா அடிச்சு தொவச்சி காயப்போட்டுட்டே போயிட்டானுங்க பாஸ்…. அதுல ரொம்ப அடிவாங்கினது நம்ம சஹீர் கான் தான்ஒரு இனிங்சோடையே காயம்னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டான் பாஸ்…..

சரி 5 நாள் வெச்சி ஆச தீர அடிச்சிட்டானுங்கதானேகொஞ்சம் ரெஸ்ட்டு தருவானுங்கன்னு பாத்தா அப்புறமா நொடிங்ஹாம் எண்ட இடத்துக்கு கூட்டிப்போனானுங்க பாஸ்அங்கையும் இதே மாதிரித்தான் ஆனா என்ன முதல்ல நாங்க அடிக்கும் போது அடிவாங்குற மாதிரி வாங்கினானுங்க பாஸ்…. பயபுள்ளைங்க நல்லா அடிவாங்குரானுங்கன்னு நாங்களும் இன்னும் ஓங்கி அடிக்க அவனுங்க உசாராகிட்டானுங்க பாஸ்அதுல பெல் எண்டு ஒருத்தன் அவன் கொலைவெறியோட திருப்பி தாக்கினான் பாஸ்ஒரு கட்டத்துக்கு மேல எங்களால முடியலஎவளவூ நேரம்தான் நாங்களும் வலிக்காத மாதிரியே நடிக்கிறதுஅப்படியே அவனுங்க கால்ல விழுந்துட்டம் பாஸ்……. முதல்ல அடிவாங்கிட்டு ஹொஸ்பிட்டல்ல அட்மிட் ஆன காம்பீரு அப்புறம் வரவே இல்ல தெரியுமா..?

இருக்குறவனுங்கள வெச்சிக்கிட்டே அடிவாங்க வேண்டியதா போச்சு
என்னால இதுக்குமேல முடியவே இல்லஉடனே நாட்டுக்கு ஃபோனப்போட்டு அங்க இருந்த ஆஃபீசர்கிட்ட எப்படியாவது எங்கள காப்பாத்துங்க சார்னு கெஞ்சினன் கூத்தாடினன்அப்பதான் எங்க ஆபீசாருங்க கூடி பிளான் பண்ணி ஹொஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருந்த சேவாக்க பிடிச்சி வெளிக்கிடுத்தி அனுப்பினானுங்க.. அதுல அவருக்கு ஏகப்பட்ட பில்ட் அப் வேறு….

நான்: அப்புறம் என்ன பாஸ் நடந்துச்சு….?

தோனி : அப்புறம் என்ன ஆகுறது.. ஏலுமெண்ட மட்டுக்கு அவனுங்களும் எங்களுக்கு அடிச்சிட்டு; அப்புறமா ஸ்ட்ரோஸ் இருக்கான்ல ஸ்ட்ரோஸ் யாருக்கோ ஃபோனப்போட்டான் பாஸ். ஃபோனப்போட்டு டேய் தம்பிகளா சப்ப பார்ட்டிகள் வந்து மாட்டிருக்கு எவளவு அடிச்சாலும் தாங்குரானுங்கள்டா.. இவனுங்களுக்கு நாங்க அடிச்சு டயர்ட் ஆகிட்டம் நீங்க வேணும்னா ஒரு 2 நாளைக்கு வெச்சி அடிச்சி பழகிக்கங்கடாநாங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்துடுறம்னு சொன்னான் பாஸ்.. அந்தப் பசங்களும் அனுப்பிவிடுங்க அண்ணாத்த எண்டு; சொல்ல இவனுங்களும் ஒரு ஏசி பஸ்ஸுல ஏத்தி அனுப்பிவிட்டானுங்க…. அந்த பஸ்ஸும் நேரா நோர்தம்டன் எண்ட இடத்துக்கு போய் நின்னுது….  பாத்தா சின்னப் பசங்க மாதிரி இருந்தானுங்க சரி மெதுவா அடிப்பானுங்கன்னு பார்த்தா.. ம்ஹும்.. ஆட்கள் சின்னதா இருந்தாலும் அடியில ஒரு குறையுமே இல்ல……. ஹும்ம்ம்ம்ம்.. அவனுங்களும் ஒர் 2 நாள் வெச்சி அடிச்சிட்டு வந்த அதே பஸ்ஸில ஏத்தி விட்டானுங்க....

நான் : சேவாக்கு ஒன்னும் சாதிக்கலியா பாஸ்..?

தோனி : கிழிச்சாரு…….

நான் : ஹி ஹி அப்புறம் அடுத்த கொலைக் கழத்துக்கு சாரி கிரவுண்டுக்கு கூட்டிப் போனாங்களா பாஸ்…?.

தோனி : ஆமா பாஸ் 2 நாள் முன்னாடியே கூட்டிப் போயிட்டானுங்க.. அங்க போய் ஒரு ஹோட்டல்ல நின்னம் பாஸ் அந்த நேரமாப் பாத்து அந்த ஏரியால பெரிய கலவரம்

நான் : ஏன் பாஸ் என்னாச்சு.. ப்ளேயர்ஸ் அடிச்ச காணாதுன்னு பப்லிக்கும் உங்களுக்கு அடிக்க கிளம்பி வந்துட்டாங்களா பாஸ்..?

தோனி : டாய்ய்ய்ய்ய்ய்ய்…… நான் போறண்டா பேட்டி முடிஞ்சுது. நான் போறன்.

நான் : சாரி பாஸ் சாரி யூ ப்ரொசீட் (நம்மகிட்ட மட்டும் ரோசம் பொத்துக்கிட்டு வந்துடும்...)

தோனி : ம்ம்…. அந்த நாட்டுல பெரிய கலவரம் கடைகள் பத்தி எரியுது, கண்ணாடிகள் உடையுது…. ஆனாலும் பாருங்கோ ரணகளத்துலையும் ஒரு கிழு கிழுப்பு மாதிரி இந்தக் கலவரத்துலையும் எங்களுக்கு ஒரு சந்தோசம். இந்த நாட்டுல கலவரம் எங்களுக்கு பாதுகாப்பு இல்லன்னு சொல்லிட்டு நைசா எஸ்கேப்பாகிடலாம்னு பிளான் பண்ணி; சந்தோசத்துல பொருற்களையும் பெக் பண்ணி வெச்சிட்டு தயாரா இருந்தாநாட்டுல இருக்குற எங்க ஆபிசருங்க….. கொலை வெறி பிடிச்சவனுங்கஅங்க இருந்துட்டு பாதுகாப்பு எல்லாம் பிரச்சினை இல்ல; எல்லாம் திருப்தியா இருக்குன்னு அறிக்கை விடுதுங்கஅவனுங்களுக்கு எங்க மேல பழைய பகை இருந்துது பாஸ்; அதுதான் இப்படி மாட்டி விட்டுட்டு வேடிக்கை பாக்குறானுங்க….

அதுல வேற நம்ம சுனில் கவாஸ்கர் இங்கிலாந்துக்காரங்க இந்தியா வந்து இங்க இப்படி நடந்திருந்தா உடனே பாதுகாப்பு பிரச்சினைன்னு சொல்லிட்டு ஓடிருப்பாங்க.. ஆனா நாங்க இடையில வராம இருந்து தொடரை முடிச்சிட்டுதான் வருவம் எண்டு மொக்கைத் தனமா ஒரு அறிக்கை விடுது.
அவரு அணித்தலைவரா இருந்து இப்படி ஒரு சப்ப அணியோட இங்கிலாந்து வந்து மாட்டி இருந்தா அவர்ட டங்குவார் கிழிஞ்சிருக்கும்….

நம்மள அந்தக் கலவர பூமியில சிக்க வச்சு கலவரப்படுத்தனும் எண்டதுல மத்தவனுங்கள விட நம்ம ஆபீசருங்க கண்ணும் கருத்துமா இருந்தானுங்கஅப்புறம் நாம என்ன பண்ண முடியும்? இவனுங்களும் கலவரம் வெளியில இல்லடா கிரவ்டுகுள்ளதான் வாங்க காட்டுறம் எண்டு எங்கள கூட்டிட்டுப் போய் சிக்கினானுங்கடா சிடு மூஞ்சிகன்னு எங்கள வெச்சு சாத்து சாத்துன்னு சாத்தினானுங்க. அதுலையும்  இந்த முறைதான் பாஸ் செம டோசு…. அதுல அவன் குக்கும், மோர்கனும் பண்ணின அதகளம் இருக்கே என்கிட்டு போய் சொல்றது..?
நாட்டுல இருந்து பயங்கர பில்டப்புகளோட வந்த நம்ம சேவாக்கு வழமை போல டக்வாக்குதான்.. ரெண்டுதடவையும் மொத அடிலையே பெவிலியனுக்கு ஓடி வந்துட்டான் பாசு….
இவனையெல்லாம்……………….

அவனுங்களால முடியுமான மட்டும் அடிச்சிட்டு விட்டுட்டானுங்க பாசு

நான் : ஏன் பாசு நீங்க திரும்பி அடிக்கலியா….

தோனி : இல்ல பாஸ்…. அடிக்கும் போது ஸ்ட்ராஸ் சொல்றான் டேய் இவனுங்க எம்புட்டு அடிச்சாலும் தாங்குரானுங்கடாரொம்ப நல்லவனுங்களா இருக்கானுங்கடாஇவனுங்கள லண்டனுக்கு கூட்டிப்போய் அங்க வெச்சு அடிப்பம்.. அவனுங்களுக்கு லண்டன சுத்திப்பாத்த மாதிரியும் இருக்கும் நம்மகிட்ட அடிவாங்கின மாதிரியும் இருக்கும்னுசொன்னான பாஸ்அதானலதான் பாஸ் சும்மா அடம்பிடிக்காம நல்ல பிள்ளையாட்டம் அடிவாங்கினா லண்டனுக்கு கூட்டிப்போவானுங்க எண்ட நம்பிக்கையில வலிக்காதா மாதிரியே இருந்துட்டன் பாஸ்..

நான் : அடச்சீ ^&((* *^$^&**(  %#$$&& *%$#*&#%$#%

தோனி : ஓகே பாஸ்.. நோமென்சன்

நான் : ம்ம்..மேல சொல்லுப்பா

தோனி : அப்புறம் ஜாலியா லண்டனுக்கு கூட்டி வந்தானுங்க பாஸ்…. அங்க மட்டும் நாங்க எதையாவது கிளிச்சிருப்போம்னா பாஸ் நினைக்கிறீங்க…? அப்படி ஒரு தப்பான நினைப்பு உங்க மனசுல இருந்தா அத உடனே அழிச்சிடிங்க பாஸ்…..
வழமை போல நாங்களும் குத்தவெச்சு உக்காந்தம், அவனுங்களும் கும்மிட்டு போயிட்டானுங்கஇந்த முறை நம்ம பெல்லும்,பீட்டர்சனும்தான் பாஸ் ஓவராக் கும்மிட்டானுங்கஅவனுங்களும் ஒரு 5 நாள் வெச்சி அடிச்சிட்டு விட்டுட்டான்னுங்க. சரி ஆசையாதானே அடிக்கானுங்க அடிச்சிட்டு போகட்டுமேன்னு விட்டுட்டன்….

நான் : ஏன் பாசு விட்டீங்க..?

தோனி : இல்ல பாசு என்னதான் அவனுங்க எங்கள கூப்பிட்டு வெச்சி கும்மாங்குத்து குத்தினாலும்ஃப்ரீயா நல்ல சாப்பாடு போட்டானுங்க, நல்ல ஏசி ரூம், ஏசி பஸ், கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள்னு எல்லாமே ஃபீரீயா செஞ்சானுங்க பாஸ்அடிக்கிறதுல எப்படி வஞ்சகம் பண்ணலியோ அப்படியேதான் பாஸ் கவனிப்பும். அந்த நன்றிக்கடனுக்குதான் பாஸ் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டன். இப்புடி ஃப்ரியா எல்லாம் கிடைக்குதுன்னா இன்னும் கொஞ்சநாள் கூடுதலா அடிவாங்கினாலும் தப்பில்ல பாஸ்..

அதுமட்டுமில்லாம பீட்டர்சன் பெல்லுக்கிட்ட சொன்னான் மச்சான் இதுதாண்டா இவனுங்க சிக்கியிருக்கிற கடைசி சான்ஸ்.. இத விட்டுடாத;முடியும் மட்டும் அடின்னு சொன்னான். ஆஹா... கடைசியா வெச்சி அடிக்கானுங்க இதுக்கப்புறம் விட்டுடுவானுங்க எண்ட சந்தோசத்துல அப்படியே இருந்துட்டன் பாஸ்.. அடி தந்த வலியை விட கடைசி மெச் எண்ட சந்தோசம்தான் பாஸ் அதிகம்.... 

நான் : நீ நல்லவண்டா தோனி.. அது சரி இப்படிப்பட்ட சொங்கித்தனமான நீங்க எப்படிடா முதல் இடத்துக்கு வந்தீங்க….?

தோனி : நாங்க எங்க பாஸ் முதல் இடத்துக்கு வந்தது…? அவனுங்களாவே எங்களுக்கு தந்து அழகு பாத்தானுங்க அவனுங்களே புடுங்கிக்கிட்டானுங்க.. டாப்ல இருந்தவனுங்க 1ம் இடத்துக்காக அவனுங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு விழுந்தானுங்க; பாத்தன் 1ம் இடம் ஃப்ரீயா இருந்துச்சு ;போய் உட்காந்துக்கிட்டன்  அது ஒரு தப்பா…? அந்த இடம் தேவன்னா குடுத்திருக்கமாட்டமா..? அதுக்காக இப்புடி கூப்பிட்டு வெச்சு முழுசாவா மொட்டை அடிக்கிறது….?

நான் : சரி கடைசியா உங்க நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க..?

தோனி : நான் என்னத்த பாஸ் சொல்றதுஎப்படியும் இங்கிலாந்துல இருந்து நாட்டுக்கு போக இன்னும் 1 மாசம் ஆகும். அதுக்குள்ள மக்கள் இதையெல்லாம் மறந்துடுவாங்கஅடுத்த ஐ.பி.எல்ல எல்லாருமா ஜாலியா செட் ஆகிடுவம் பாஸ்..

நான் : ஹி ஹி சரி நாட்டுக்கு போய் முதல் வேலையா என்ன செய்வீங்க..?

தோனி : முதல் வேலையா ஹொஸ்பிடல்ல அட்மிட்டாகி இருக்கிற நம்ம காம்பீரு, சஹீர், சச்சின், இசாந்,யுவராஜ் எல்லாரையும் போய் மீட் பண்ணுவன் பாஸ்.. அவனுங்ககிட்ட அதெப்பிடிடா இந்த மாதிரி டைம்ல சொல்லிவெச்ச மாதிரி உங்களுக்கு காயம் வருது.. ஐபிஎல் டைம்ல இதெல்லாம் வராதாடா..?  
எண்டு கேக்கனும் பாஸ்..

இந்த 5 பேருக்கும் இங்கிலாந்தில கலக்கத் தொடங்கின வயிறு இன்னும் கலக்கி முடியலியாம் பாஸ்சன் டீ வி செய்திப்படி இவனுங்களுக்கு இன்னும் நிக்காமப் போயிட்டிருக்காம்
நமக்கு இதெல்லாம் பழகிடிச்சி பாஸ்..

நான் : ஹி ஹிநன்றி தோனி. உங்கள் மனம் திறந்த பேட்டிக்கு நன்றி.

 தோனி : உங்களுக்கும் நன்றி பாஸ். என் மனசுல இருந்த மிகப் பெரிய சோகத்தை உங்ககிட்ட சொன்னதன் மூலம் கொஞ்சம் ஆறுதல் கிடச்ச மாதிரி இருக்கு பாஸ்...

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS