RSS

அசோக டீ சில்வா-OUT <>குமார் தர்மசேன-NOT OUT


சர்வதேச கிரிக்கட் கவுன்சிலான ஐ.சி.சி அண்மையில் தனது 
 Emirates Elite Panel of ICC Umpires  முதல் நிலை நடுவர்கள் குழாமை வெளியிட்டிருக்கின்றது

கடந்த காலங்களில் இந்தக் குழாமில் இருந்து தம் தீர்ப்புகளின் மூலம் சர்ச்சைகளைக் கிளப்பி வந்த இருவர் நீக்கப்பட்டு அண்மைக்காலமாக சிறப்பாக செயற்பட்டுவரும் இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழாமில் இலங்கை சார்பாக இதுவரை இருந்துவந்த அசோக்க டீ சில்வா நீக்கப்பட்டிருக்கின்றார். அதேபோன்று அவுஸ்திரேலிய நடுவரான டெரெல் ஹாப்பரும் நீக்கப்பட்டிருக்கின்றார்.

இவர்களிருவரின் இடத்திற்கும் அண்மைக் காலமாக நடுவர்களாக மிகச்சிறப்பாக செயற்பட்டுவரும் இலங்கையின் குமார் தர்மசேன மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் கெட்டெல்ப்ரோ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் அண்மைக்காலமாக மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகின்றமையே இவர்களின் இந்தத்  தெரிவிற்கு காரணம்.

அசோக டீ சில்வா  பிழையான தீர்ப்புகள் மூலம் அவ்வப்போது சர்ச்சைகளுக்குள் சிக்கி வந்திருந்தாலும், கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளின் போது அவரது பெறுபேறு மிக மோசமாக இருந்தமையே அவர் விலக்கப்பட்டதற்கான காரணமாகும். இவரின் மோசமான தீர்ப்புகளின் காரணமாக இவர் உலகக் கிண்ணப் போட்டிகளின் முக்கிய போட்டிகளில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது (போட்டி அட்டவணைப்படி அவரே நடுவராக பெயரிடப்பட்டிருந்த போதும் அவற்றிலிருந்து அவர் விலக்கப்பட்டிருந்தார்.)

டெரெல் ஹாப்பரைப் பொறுத்தவரையிலும் அண்மைய உலகக் கிண்ணப் போட்டிகளின் போது இவரது பெறுபேறுகளும் மிக மோசமாகவே இருந்தது.
முன்னதாக இங்கிலாந்து - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது கிரேம் ஸ்மித்தின் பிடியெடுப்பொன்று விக்கட் காப்பாளாரிடம் சென்றது. அது மீள்பரிசீலனைக்காக 3ம் நடுவரான டெரெல் ஹாப்பரிடம் சென்றபோது அதை அவர் துடுப்பு மட்டையில் பட்ட எந்த சத்தமும் வரவில்லை எனவே அது ஆட்டமிழப்பு அல்ல என்று தீர்மானித்தார். ஆனால் உண்மையில் அது ஒரு ஆட்டமிழப்பு.  இது ஆட்டமிழப்பாக இருந்தும் ஏன் 3ம் நடுவரால் ஆட்டமிழப்பு வழங்கப்படவில்லை என்று பின்னர் விசாரித்தால் டெரெல் ஹாப்பர் தனது கணணியின் ஒலி அளவை (Volume) அதிரிகரித்திருக்கவில்லை என்பது தெரிந்தது.

இப்படி டெரெல் ஹாப்பரின் பெறுபேறுகள் திருப்தியில்லாததன் காரணமாக அவர் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இப்படிப்பட்ட குழப்பமான நிலை காரணமாகவே ஐ.சி.சியின் குழு டெரெல் ஹாப்பர் மற்றும் அசோக்க டீ சில்வா ஆகியோரை நீக்கிவிட்டு குமார் தர்மசேன மற்றும் ரிச்சர்ட் கெட்டெல்ப்ரோ  ஆகியோரைத் தெரிவு செய்திருக்கிறது.

இந்த தெரிவினை மேற்கொண்ட தெரிவுக் குழுவில் ஐ.சி.சியின் பொது முகாமையாளர் டேவிட் ரிச்சட்சன், .சி.யின் முதன்மை போட்டி மத்தியட்சகர் ரன்ஞன் மடுகல்ல, பயிற்றுவிப்பாளர் மற்றும் முதல்தர போட்டிகளின் நடுவரான டேவிட் லொய்ட் மற்றும் முன்னாள் நடுவர் வெங்கட்ராகவன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

1996ம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியில் முக்கிய வீரராக இருந்தவர்.
இவர்  நடுவரான போது இலங்கையின் வயது குறைந்த சர்வதேச நடுவர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.


இந்த தெரிவு தொடர்பில் குமார் தர்மசேன கூறுகையில்,
இது எனக்கு மகிழ்ச்சியானதும் பெருமையானதுமான ஒரு செய்தி. இந்தத்  துறையில் புகழ்பூத்த மதிக்கத்த நடுவர்கள் குழாமோடு என்னையும் இணைத்திருப்பது பெருமைஅளிக்கிறது. நடுவராக எனது பயணத்தை ஆரம்பிக்கையில் நான் அடைய நினைத்த மிகப்பெரிய இலக்கு இது. இதை அடைந்துவிட்டேன். இனி இதைத் தக்கவைத்துக்கொள்ள அயராது உழைப்பேன்” என்று கூறினார்.


தனது தெரிவு பற்றி ரிச்சர்ட் கெட்டெல்ப்ரோ கூறுகையில்:
இந்தத் தெரிவின் மூலம் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எதிர்காலத்தில் வரப்போகும் சவால்களை எதிர்கொள்ளக் காத்திருக்கின்றேன் 
என்றார்


ஐ.சி.சி இன் முதல் நிலை நடுவர்கள் குழாம் விபரம்.
Emirates Elite Panel of ICC Umpires (2011-12)

Billy Bowden

Aleem Dar

Steve Davis

Kumar Dharmasena

Billy Doctrove

Marais Erasmus

Ian Gould

Tony Hill

Richard Kettleborough

Asad Rauf

Simon Taufel

Rod Tucker




Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) இனைக் கொண்டாட நீங்கள் தயாரா..?


SLPL  ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக்20-20 போட்டிகளின் முதலாவது போட்டித்தொடர் இந்த வருடம் நடைபெறவிருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அதன் உத்தியோகபூர்வ போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றது.  ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4வரை போட்டிகள் நடைபெறும்

SLPL தொடர்பாக ஒரு அறிமுகத்தினைப் பெறவிரும்புவோர்
SLPL தொடர்பான எனது முன்னைய பதிவினைப் பார்க்கவும்


தற்போது SLPL தொடர்பான சில உத்தியோக பூர்வமுடிவுகள் வெளியாகி இருக்கின்றன அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

முதலில் ஒரு விடையத்தை சொல்லியாக வேண்டும்.பொதுவாக ஒரேமாதிரியான இரு விடயங்கள் ஒன்றன் பின் ஒன்று நடக்கும்போது முதலாவது விடயத்தினை சாதாரணமாகப் பார்ப்பவர்கள் இரண்டாவதினை முன்னையதோடு ஒப்பிட்டு நோக்குவார்கள்.ஒப்பிட்டு விமர்சிப்பார்கள்.


அதை SLPL இலும் நாம் அவதானிக்கமுடியும்காரணம் IPL  தான் முதலிம் அறிமுகமாகியதுஎனவே SLPL இனை பார்ப்பவர்கள் அதனை IPL உடன் ஒப்பிட்டுத்தான் பார்ப்பார்கள்விமர்சிப்பார்கள்

அவர்களுக்கு  சில விடையங்களை SLPL தொடங்குவதற்கு முன்னதாகவே சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

  1.  IPL இனை நடாத்துவது உலகின் மிகப் பணக்கார கிரிக்கட் சபையான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைஇலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையோ கடன் பழுவுடன் இயங்குகின்றது எனவே இரண்டுக்குமிடையிலான வித்தியாசம் எப்படி இருக்குமென்று புரிந்துகொண்டால் சரி.

  1. IPL அணிகளை வாங்கியிருப்பது இந்தியாவின் டொப் 10 பணக்காரர்கள் மற்றும் கோடிகளில் புரளும் மிகப்பிரபலமான சினிமா நட்சத்திரங்கள்.எனவே அவர்கள் தங்கள் பணங்களை கொட்டி தங்கள் அணிகளைப் பலப்படுத்துவார்கள் ஆனால் இங்கே…….

  1. ஆக 20 மில்லியன் மக்கள் உள்ள ஒரு நாட்டில் நடக்கும் ஒரு தொடருக்கும்  1000மில்லியன் மக்கள் உள்ல ஒரு நாட்டில் நடக்கும் ஒரு தொடருக்குமிடையில் எப்படிப்பட்ட ஒரு வித்தியாசம் இருக்குமென்பதை நான் விவரிக்கவேண்டியதில்லைவிளம்பர அனுசரனை பார்வையாளர்கள் எண்ணிக்கை என்று எவளவோ விடையங்கள் பங்களிப்பு செய்யும்..

இப்படி ஏராளமான விடயங்களை சொல்லிக்கொண்டு போகலாம்எனவே SLPL இனை IPL உடன் ஒப்பிடுபவர்கள் இவற்றைக் கருத்தில்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றேன்.

இனி SLPL தொடர்பான மேலதிக விபரங்களுக்கு வரலாம்.

இதுவரையில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு  அணியினதும் தலைவர்கள் விபரம்போட்டி அட்டவணைஇதுவரை உறுதியாகியுள்ள வெளிநாட்டு வீரர்களின் விபரம்,ஒவ்வொரு அணிக்குமான இலட்சினை(Logo)  என்பனபற்றி அறியமுடிகிறது.


    அணித்தலைவர்கள்:

மொத்தமாக 7மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அணிகள் இம்முறை களமிறங்குகின்றனஅதில்

    Basnahira Bears - Tillakaratne Dilshan
    Kandurata Kites - Kumar Sangakkara
    Ruhuna Rhinos - Sanath Jayasuirya
    Wayamba Wolves - Mahela Jayawardena 
    Uva Unicorns - Chaminda Vaas    
    Nagenahira Nagas - Shahid Afridi
    Uthura Oryxes - Daniel Vettori

ஆகியோர் அணித்தலைவர்களாக செயற்படவுள்ளனர்.


போட்டி அட்டவணை
:


போட்டிகள் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 4வரை நடைபெறவுள்ளனஇம்முறை அனைத்துப்போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானதிலேயே நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
     
    Jul 19 (Tue) 8pm - Basnahira Bears v Kandurata Kites 
    Jul 20 (Wed) 4pm - Nagenahira Nagas v Ruhuna Rhinos
                             8pm - Uthura Oryxes v Wayamba Wolves
    Jul 21 (Thu) 4pm - Uva Unicorns v Basnahira Bears
                            8pm - Kandurata Kites v Nagenahira Nagas
    Jul 23 (Sat) 4pm - Ruhuna Rhinos v Uthura Oryxes
                           8pm - Wayamba Wolves v Uva Unicorns
    Jul 24 (Sun) 4pm - Basnahira Bears v Nagenahira Nagas
                            8pm - Kandurata Kites v Ruhuna Rhinos
    Jul 25 (Mon) 4pm - Uthura Oryxes v Uva Unicorns
                             8pm - Wayamba Wolves v Basnahira Bears
    Jul 26 (Tue) 4pm - Kandurata Kites v Uthura Oryxes
                            8pm - Nagenahira Nagas v Wayamba Wolves
    Jul 28 (Thu) 4pm - Ruhuna Rhinos v Uva Unicorns
                           8pm - Uthura Oryxes v Basnahira Bears
    Jul 29 (Fri) 4pm - Wayamba Wolves v Kandurata Kites
                          8pm - Uva Unicorns v Nagenahira Nagas
    Jul 30 (Sat) 4pm - Basnahira Bears v Ruhuna Rhinos
                          8pm - Kandurata Kites v Uva Unicorns
    Jul 31 (Sun) 4pm - Nagenahira Nagas v Uthura Oryxes
                            8pm - Ruhuna Rhinos v Wayamba Wolves
    Aug 2 (Tue) 8pm - 1st Semi-Final
    Aug 3 (Wed) 8pm- 2nd Semi-Final
    Aug 4 (Thu) 8pm - Final

    இதுவரையில் உறுதியாகியுள்ள வெளிநாட்டு வீரர்களின் விபரம்:

அவுஸ்திரேலியா: David Warner, Shaun Tait, Callum Ferguson, Daniel Christian.


பங்களாதேஸ்: Tamim Iqbal.


இந்தியா: Dinesh Karthik, Irfan Pathan, Manish Pandey, Manoj Tiwary, Munaf Patel, Paul Valthaty, Praveen Kumar, Ravichandran Ashwin, Ravindra Jadeja, Saurabh Tiwary, Umesh Yadav, Vinay Kumar.

அயர்லாந்து: Kevin O'Brien.

நியூசிலாந்து: Daniel Vettori.

பாக்கிஸ்தான்: Imran Nazir Shahid Afridi, Shoaib Akhtar, Sohail Tanvir, Umar Akmal, Wahab Riaz.

தென்னாபிரிக்கா: Albie Morkel, Herschelle Gibbs, Lonwabo Tsotsobe, Makhaya Ntini.

மே.இந்தியத்தீவுகள்: Chris Gayle Danza Hyatt, Darren Bravo, Kieron Pollard.



அணிகளின் இலட்சினை
:


SLPL  அணிகளின் பெயர்கள் சற்று வித்தியாமாக இருக்கின்றதுகாரணம் மாகாணங்களின் சிங்களப் பெயர்களுடன்(புராதனப் பெயர்களுடன்சில சிறப்புத்தன்மை வாய்ந்த விலங்குகளின் ஆங்கிலப் பெயர்களையும் இணைத்து அணிகளின் பெயர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

SLPL வெற்றிபெற்ற என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். 



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நாங்களும் சென்சரி அடிச்சிட்டோமில்ல-100 UP

இது என்னுடைய 100வது பதிவு. கொஞ்சம் கலக்கலா கொஞ்சம் காமெடியா ஒரு முயற்சி பண்ணலாமேன்னு யோசிச்சப்போ கணப்பொழுதில் என் மனதில் உதித்ததுதான் இந்த ஐடியா.

நானே எழுதிய ஒரு உல்டா கவிதை இது. அதை என் குரலில் பதிவி செய்து உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.

கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்களேன்.

பிடிச்சிருக்கா...? 
பிடிச்சிருக்கோ இல்லியோ உங்கள் எண்ணத்தை ஓட்டு + பின்னூட்டம் மூலம் சொல்லுங்களேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தூங்கும் குழந்தையினை புது உலகில் கண்ட தாய்-அற்புதம்























பின்லாந்தைச் சேர்ந்த இப்பெண் குழந்தையின் தாய் தூங்கும் தன் குழந்தையை புது உலகிற்கு கொண்டு சென்றிருக்கின்றார். அற்புதமான கலை நயத்துடன் கூடிய இந்த அலங்கார அமைப்பினை செய்த அத்தாயின் கலை நயத்திற்கும் ரசனைக்கும் வாழ்த்துக்கள்.

மின்னஞ்சல் மூலம் வந்த இது என்னை மிகவும் கவர்ந்துவிட்டதால் உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.

** மின்னஞ்சல் மூலம் இதனைப் பகிர்ந்து கொண்ட நண்பன் ரிஸ்விக்கு நன்றி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL)


2011ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகள் மிக விறு விறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ள நிலையில். இலங்கை கிரிக்கட் சபையினால் ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) போட்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இது இலங்கை கிரிக்கட் முன்னதாகவே திட்டமிட்டதா இல்லை மிக அண்மையில் திட்டமிடப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனாலும் எனக்கு என்னமோ இது மிக அண்மைய நாட்களில் கேள்விப்பட்ட ஒரு விடயமாகவே இருக்கின்றது.
இலங்கை கிரிக்கட்டின் மிக துணிகர செயலாக இதைக் கருதலாம். ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

இது ஒரு புறமிருக்க…20-20 போட்டிகளின்  வருகையால் டெஸ்ட் போட்டிகளின் நிலமை பரிதாபகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் ஐ.பி.எல் மற்றும் SLPL இன் வருகையால் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாமல் தேசிய அணிகளின் போட்டிகள் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் இருக்கின்றது. எதிர்காலத்தில் வேறு நாடுகளும் இதேபோல் தங்கள் நாட்டில் ஆரம்பித்தால் பிறகுசர்வதேச கிரிக்கட்டின் நிலை பரிதாபம்தான்..

SLPL  இன் வருகையானது இலங்கையின் கிரிக்கட் வீரர்களுக்கு விசேடமாக இளம் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.  இலங்கை கிரிக்கட் அமைப்புக்கும் வீரர்களை இனம்கண்டு வாய்ப்பு வழங்க சிறந்த சந்தர்ப்பமாகவும் இது அமையும். வீரர்களுக்கு SLPL இல் வாய்ப்பு வழங்குவதன் மூலம் சர்வதேச தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கி நாட்டின் கிரிக்கட்டை முன்னேற்ற முடியும். அந்த வகையில் SLPL இனை வரவேற்போம் வாழ்த்துவோம்.

SLPL அறிமுகம்:

இலங்கையின் 7 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 7 அணிகள் பங்குகொள்ளும் ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) போட்டிகள் இலங்கையில் ஜூலை மாத இறுதி அளவில் ஆரம்பமாகவுள்ளன. உறுதியான போட்டி நிரல் வெளியிடப்படாத நிலையில் ஜூலை கடைசி முதல் ஆகஸ்ட் ஆரம்ப நாட்கள் வரை போட்டிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

18 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இப்போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு தடவை மாத்திரமே மோதவுள்ளன. இதில் அதிக புள்ளிகளைப் பெறும் முதல் நான்கு அணிகளும் அரைதியிறுதிப்போட்டிக்கு தெரிவாகும். இறுதிப்போட்டியில் வெல்லும் அணி சம்பியன்ஸ் லீக் 20-20 போட்டிகளுக்கு தகுதிபெறும்.

SLPL  போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்ட Somerset Entertainment  Ventures  (Singapore based Promotion Company. )
என்ற நிறுவனம் 5 வருடங்களுக்கு வாங்கியிருக்கின்றது.

போட்டிகள் இலங்கை நேரப்படி மாலை 4 மணி  மற்றும் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும். ஒரு போட்டி மாத்திரம் நடைபெறும் நாட்களில் 8 மணிக்கு ஆரம்பமாகும்.

 இவ்வாண்டிற்கான ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளில் கலந்துகொள்ளும் 7 மாகாணங்களும் வருமாறு:
 
 Basnahira(மேல் மாகாணம்), Kandurata(மத்திய மாகாணம்), Nagenahira(கிழக்கு மாகாணம்), Ruhuna(தென் மாகாணம்), Uthura(வட மாகாணம்), Uva (ஊவா மாகாணம்), Wayamba(வட மேல் மாகாணம்)

அணிகளின் பெயர்கள் வருமாறு:
RUHUNA RHINOS, KANDURATA KITES, UVA UNICORNS, NAGENAHIRA NAGAS, BASNAHIRA  BEARS, WAYAMBA WOLVES, UTHURA ORYXES

வீரர்களைத் தேர்வு செய்தல்:
 
ஒவ்வொரு அணிக்குமான வீரர்களை இலங்கை கிரிக்கட் அமைப்பே தேர்வு செய்யவுள்ளது. வீரர்களைத் தெரிவு செய்யும்போது முடிந்தவரை அவர்கள் சார்ந்த மாகாண அணிகளுக்கே அவ்வீரர்கள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அணியும் உள்நாட்டு வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கியிருக்கும். ஒரு அணியில் 16 தொடக்கம் 18 வீரர்கள் உள்ளடங்கி இருப்பார்கள்.


சர்வதேச வீரர்களை ஒவ்வொரு அணிக்கும் தேர்வு செய்யும்போது ஐ.பீ.எல் இல் இருந்து மாறுபட்ட விதத்தில் அதாவது வீரர்களை ஆடு மாடுகள் போல் ஏலம் கேற்காமல் இலங்கை கிரிக்கட் தேர்வாளர்களினால் ஒவ்வொரு அணியினது பலம் பலவீனத்தைப் பொறுத்து ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். இது வீரர்களுக்கு கெளரவமான ஒரு முடிவாக இருக்கும் என நம்பலாம்.


விழையாடும் இறுதிப் பதினொருவரையும் தேர்வு செய்யும் முறை:
 
போட்டியில் விளையாடும் இறுதிப் பதினொருவரில் கண்டிப்பாக குறைந்தபட்சம் 7 இலங்கை வீரர்களும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களும் உள்ளடங்கியிருப்பர். அதிலும் ஒருவீரராவது 21 வயதுக்குட்பட்ட இலங்கை வீரராக இருப்பார்.

இலங்கையின் பிரபலமான முன்னாள் வீரர்கள் அணிகளுக்கான ஆலோசகர்களாக அல்லது பயிற்றுவிப்பாளர்களாக இருப்பார்கள்.


இதுவரையில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் வெளிநாட்டு வீரர்களாக இம்முறை SLPL இல் விளையாடவுள்ள வீரர்கள்:
கிரன் பொலார்ட்,க்ரிஸ் கெயில்,சஹீட் அஃப்ரிடி,டேனியல் விட்டோரி,டேனியல் க்ரிஸ்டியன், ஹேர்சல் கிப்ஸ் மற்றும் கெவின் ஓப்ரைன்

SLPL  இல் இந்திய வீரர்களின் பங்களிப்பையும் இலங்கை கிரிக்கட் எதிரிபார்த்திருக்கிறது.  இது தொடர்பில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்திய தேசிய மற்றும் உள்ளூர்ப் போட்டிகளோடு முரண்படாவண்ணம் இந்திய வீரர்கள் SLPL  இல் விளையாடுவதில் எந்தப் பிரச்சினையுமில்லைஎன்று குறிப்பிட்டிருக்கின்றது.

எனவே இனிவரும் நாட்களில் இந்திய வீரர்களும் SLPLஇல் இணைந்து கொள்வார்கள் என நம்பலாம். அத்தோடு SLPL காலப்பகுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிற்கிடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளதனால் அத்தொடரில் விளையாடாத இந்திய வீரர்கள் SLPL இல் இணைந்துகொள்ளக்கூடும்.



இலங்கையில் மொத்தம் 9மாகாணங்கள் உள்ள நிலையில் 7 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு அணிகளே இம்முறை SLPL இல் களமிறங்குகின்றன. மீதமுள்ள இரண்டு மாகாணங்களான ரஜரட்டை மற்றும் சப்ரகமுவா ஆகிய மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி எந்த அணிகளும் களமிறக்கப்படவில்லை.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கட்டின் செயலாளர் நிசாந்த ரணதுங்க தெரிவிக்கையில்

SLPLஇன் துவக்கத்திலே அதிக அணிகளை இணைப்பதைவிட அணிகளின் எண்ணிக்கையினைக் குறைத்து போட்டித்தொடரின் விறுவிறுப்பையும் போட்டித்தன்மையையும் அதிகரிக்கும் முகமாக அணிகளின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தி இருக்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் ரஜரட்ட மற்றும் சப்ரகமுவ மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அணிகள் களமிறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த பல மைதானங்கள் அதிலும் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்ற மைதானங்கள் பல உள்ள நிலையில் அனைத்து போட்டிகளையும் ஆர்.பிரேமதாசா மைதானத்திற்கு மட்டுப்படுத்தியமை தொடர்பில் நிசாந்த ரணதுங்க கருத்துக் கூறுகையில்


சர்வதேச ரீதியில் ஒவ்வொரு நாட்டு வீரர்களுக்கும் பல போட்டித் தொடர்கள் உள்ளன.எனவே எமது SLPL போட்டிகளை 18 நாட்களுக்குள் நடாத்தி முடிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மைதானங்களில் போட்டிகளை நடாத்தும் போது மிகக் குறைந்த காலப்பகுதிக்குள் வீரர்கள் அதிக பயணங்களை மேற்கொள்ளவேண்டி வரும். இது வீரர்களுக்கு சோர்வையும் அசெளகரியத்தையும் கொடுக்கும் இதனைக் கருத்தில் கொண்டே போட்டிகள் அனைத்தும் ஆர்.பிரேமதாச மைதானத்திற்கு மட்டுப்படுத்தினோம் என்று தெரிவித்தார்.


SLPL தொடர்பாக அதன் 5 வருட உரிமையினை வாங்கியிருக்கும்  Somerset Entertainment  Ventures  நிறுவனத் தலைவர் இவ்வாறு கூறுகின்றார்.

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS