RSS

2012 டிசெம்பர் 21ல் உலகம் அழியப்போகுதாமே...?

2012 டிசெம்பர் 21ல் உலகம் அழியப்போகிறது.. முழு மனித இனமும் செத்து மடியப்போகின்றது என்று அண்மைய நாட்களில் பலராலும் பரவலாகப் பேசப்படுகின்றது.என்றோ ஒரு நாள் உலகம் அழியும் என்பது உண்மை ஆனால் இந்த 2012 டிசெம்பர் 21 அன்றுடன் உலகம் அழியப் போகின்றது என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் டிசம்பர் மாதத்தில் முன்னர் இடம்பெற்ற சுனாமி போன்று இயற்கையின் கோரத் தாண்டவங்கள் நிகழலாம். எதிர்பார்க்காத ஒரு புறத்தால் அழிவுகள் வரலாம் வராமலும் விடலாம் ஆனால் உலகம் அழியும் என்பதை ஏற்கமுடியவில்லை 

 2012 டிசெம்பர் 21 அன்றுடன் உலகம் அழியப் போகின்றது என்று வாதிடுபவர்கள் அதற்காக சொல்லும் காரணங்களில் முக்கியமான இரண்டு
 1.நிபிறு பிரளயம்
2.மாயன் நாட்காட்டி 2012.12.21 அன்றுடன் முடிவடைதல்
இவை இரண்டு தொடர்பாகவும் அறிய எனக்கு ஆர்வமேற்பட்டு இணையத்தில் தேடியதில் கிடைத்த முக்கிய/ சுவாரஸ்ய தகவல்களை இங்கே பகிர்கிறேன். 

நிபிறு பிரளயம்:   
சூரியத்தொகுதியை போலவுள்ள பல்லாயிரக்கணக்கான தொகுதியில் ஒரு தொகுதியிலிருந்து நிபிறு எனும் கோள் 3600 வருடங்களுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் இதன் போது நிபிறுவின் துணைக்கோள்களுடன் சேர்த்து மொத்தமாக 6 கோள்கள் பூமியை பாதிப்புக்குள்ளாக்கும்.

இதனால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை வெடிப்புக்கள் மற்றும் நிலங்கள் பல துண்டுகளாக பிளவடையும் இதனைத் தொடர்ந்து சுமார் 2 வருடங்களில் படிப்படியாக மிக மெதுவான முறையில் பூமி தன்னை மீளமைக்கும். இதற்கிடையில் பூமியிலுள்ள மனிதர்களில் 23 பங்கினருக்கு மேல் அழிந்துவிடுவார்கள். இதுவே 'நிபிறு பிரளயம்' என்று சொல்லப்படுகிறது. 

மாயன் நாட்காட்டி.
பிரளயம், கிரங்கள் தாக்குதல் நட்சத்திரங்கள் மோதுதல் என்பது முன்னரே  கேள்விப்பட்ட விடையங்கள் என்பதால் அதில் அதிக ஆர்வம் வரவில்லை. இந்த மாயன் நாட்காட்டி என்ன? , யார் இந்த மாயன்கள் என்பதை அறிவதிலேயே அதிக ஆர்வம் ஏற்பட்டது அந்த வகையில் தேடியதில்….. 

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது 

மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர் மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. 

அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடுங்கியியது. ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது. 

மாயா காலக்கணக்கு முறை என்பது கொலம்பசுக்கு முந்திய இடையமெரிக்காவின் மாயா நாகரிக மக்களும்; குவாத்தமாலா, மெக்சிக்கோவின் ஒவாக்சக்கா ஆகியவற்றின் மேட்டுநிலப் பகுதியில் வாழும் தற்கால மாயா சமூக மக்களும் பயன்படுத்திய காலக்கணக்கு முறை. இது, காலக்கணக்கு முறைகளையும், நாள்கோள் விவரங்களையும் உள்ளடக்கியது.

மாயா காலக்கணக்கு முறையின் முக்கிய அம்சங்கள், இடையமெரிக்கப் பகுதி முழுதும், குறைந்தது கிமு 5 ஆம் நூற்றாண்டில் இருந்தாவது பொதுப் பயன்பாட்டில் இருந்த முறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த முறை சப்போட்டெக், ஒல்மெக் போன்ற முந்திய இடையமெரிக்க நாகரிகங்களும்; மிக்சுட்டெக், அசுட்டெக் போன்ற சமகால அல்லது பிந்திய நாகரிகங்களும் பயன்படுத்திய காலக்கணக்கு முறைகளின் அம்சங்கள் பலவற்றையும் உள்ளடக்கி இருந்தது 

இடையமெரிக்கக் காலக்கணக்கு முறையை மாயாக்கள் தோற்றுவிக்கவில்லை எனினும், அவர்கள் செய்த விரிவாக்கங்களும், மெருகூட்டலுமே அக் காலக்கணக்கு முறைக்குச் உயர்நயத் தன்மையைக் கொடுத்தது. மாயா காலக்கணக்கு முறை உரிய முறையில் ஆவணப்படுத்தப்பட்டதும், முழுமையாக விளங்கிக்கொள்ளப் பெற்றதுமான ஒரு காலக்கணிப்பு முறை.

மாயாக்களின் தொன்ம மரபுகள், குடியேற்றவாதக் காலத்தில் ஆவணப்படுத்திய யுக்காடிய விவரிப்புகள், பிந்திய செந்நெறிக்காலத்தையும் பின்செந்நெறிக் காலத்தையும் சேர்ந்த கல்வெட்டுக்கள் போன்றவை, காலக்கணிப்பு முறை பற்றிய அறிவையும், எழுத்து, பண்பாட்டின் பிற அடிப்படையான அம்சங்களையும், இட்சாம்னா என்னும் கடவுள் மாயர்களின் முன்னோருக்குக் கொடுத்ததாகச் சொல்கின்றன. 

மாயன்களின் எண்முறை: 
20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.

மாயன் எண்முறை இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. இது மூன்று குறியீடுகளை மாத்திரமே கொண்டிருக்கின்றது.

   Ѳ கண் போன்ற ஒரு உருவம் பூச்சியத்தைக் குறிக்கின்றது.
   ஒன்றையும்
   ஐந்தையும் குறிக்கின்றது.

    
  இந்த அடிப்படையில் பார்க்கும் போது 20 என்ற இலக்கம் வெறும் 4 கிடைக்கோடுகளை மாத்திரமே கொண்டிருக்கும் என நினைக்கின்றேன்
  20 - நான்கு கிடைக்கோடுகள்
  21 - நான்கு கிடைக்கோடுகளின் மேல் ஒரு புள்ளி
  22 - நான்கு கிடைக்கோடுகளின் மேல் இரு புள்ளிகள்
  30 - 5 கிடைக்கோடுகள்
  என்று செல்லும் என நினைக்கின்றேன். ஆனால் 19 ற்குப் பிறகு எந்த இலக்கத்தின் உருவத்தினையும் அறிய முடியவில்லைஎப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை 

  Among their other accomplishments, the ancient Mayas invented a calendar of remarkable accuracy and complexity. At right is the ancient Mayan Pyramid Chichen Itza, Yucatan, Mexico. The Pyramid of Kukulkan at Chichén Itzá, constructed circa 1050 was built during the late Mayan period, when Toltecs from Tula became politically powerful. The pyramid was used as a calendar: four stairways, each with 91 steps and a platform at the top, making a total of 365, equivalent to the number of days in a calendar year.
  The Maya calendar was adopted by the other Mesoamerican nations, such as the Aztecs and the Toltec, which adopted the mechanics of the calendar unaltered but changed the names of the days of the week and the months. An Aztec calendar stone is shown above right.
  The Maya calendar uses three different dating systems in parallel, the Long Count, the Tzolkin (divine calendar), and the Haab (civil calendar). Of these, only the Haab has a direct relationship to the length of the year.

  What is the Long Count?
  The Long Count is really a mixed base-20/base-18 representation of a number, representing the number of days since the start of the Mayan era. It is thus akin to the Julian Day Number.
  The basic unit is the kin (day), which is the last component of the Long Count. Going from right to left the remaining components are:

   uinal
   (1 uinal = 20 kin = 20 days)
   tun
   (1 tun = 18 uinal = 360 days = approx. 1 year)
   katun
   (1 katun = 20 tun = 7,200 days = approx. 20 years)
   baktun
   (1 baktun = 20 katun = 144,000 days = approx. 394 years)


  முழுமையான வாசிப்புக்கு
  Maya Cycles of Time


   Mayan Calendar animation until December 21, 2012


   Diagnosis2012 Calendar Converter and Calculator


   நன்றி:
  1. http://www.webexhibits.org/calendars/calendar-mayan.html
  2. http://mathdl.maa.org/images/cms_upload/MayaTimeCycles2-143624.pdf
  3. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
  4. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
  5. http://www.virakesari.lk/article/feature.php?vid=51

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

சூப்பர் சிக்ஸஸ் - 1

ஃபேஸ்புக்கில் நண்பர்கள் பகிர்ந்த புகைப்படைங்களில் என்னை அதிகம் சிரிக்க வைத்த சிறந்த 6 புகைப்படங்களை இங்கு உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்


# 6

# 5


# 4

 

# 3
# 2

 கீழே உள்ள இந்தப் புகைப்படம்தான் என்னை மிக மிகக் கவர்ந்ததும் அதிகம் சிரிக்கவைத்ததும். அந்த கடைசி லுக்கு இருக்கே... யெம்மா.... என்னா ஒரு லுக்கு... சான்சே இல்ல.... 4 நாள் நினைச்சு நினைச்சு சிரிச்சன்..

Top 1
Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

ஃபேஸ்புக் நைட் (FB Night)


பசியிருக்கும் தூக்கமிருக்கும் மனமிருக்காது
பிகரு ஒன்னு சற் வந்தால் தூக்கம் வராது
பிகரு ஒன்னு சற் வந்தால் தூக்கம் வராது
தூக்கம் கண்ணைப் பறித்தாலும்  ஆசைவிடாது
தட்டிலிருக்கும் சாப்பாட்டை திண்ண நேரமிராது

பசியிருக்கும் தூக்கமிருக்கும் மனமிருக்காது
பிகரு ஒன்னு சற் வந்தால் தூக்கம் வராது

கட்டவிழந்த மனது சற்பண்ண பெண்களைத் தேடும்
பாதித் தூக்கம் வந்து வந்து கண்களை மூடும் -
கட்டவிழந்த மனது சற்பண்ண பெண்களைத் தேடும்
இருந்தும்
பாழாய்ப்போன மனதில் இன்னும் சற் பண்ணத் தோணும்
பக்கத்து வீட்டு சேவல் அதிகாலையில் கூவும்
அந்த நேரம் புத்திக்குள் சில்லூரி கத்தும்


Fb Chatku நேரமும் இல்லை காலமும் இல்லையே
அடுத்த நாளும் இந்த நிலையில் மாற்றமில்லையே
Fb Chatku நேரமும் இல்லை காலமும் இல்லையே
அடுத்த நாளும் இந்த நிலையில் மாற்றமில்லையே

தப்பு என்று மனசு சொல்லும் புத்தி கேட்பதில்லையே
அடுத்த நாளும் Face book வந்தால் இந்த நிலையே

பசியிருக்கும் தூக்கமிருக்கும் மனமிருக்காது
பிகரு ஒன்னு சற் வந்தால் தூக்கம் வராது (ரீமிக்ஸ் கவிஞர் : அஹமட் சுஹைல்)

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

சீ சீ இந்த பிகர் அட்டு பிகர்ர்ர்ர்

ஒரு ஊர்ல ஒரு பைய்யன் இருந்தானாம்.
அவன் ஒவ்வுருநாளும் ஃபேஸ்புக் வரும் போதும்
ஒரு அழகான ஃபிகர் People you may know பகுதியில இருக்குமாம்
இவனுக்கும் அந்த ஃபிகர் மேல ரொம்ப ஆசையாம்..
ஆஹா சூப்பர் ஃபிகருப்பா.. இத எப்படியாவது ஃப்ரெண்டாக்கி
அப்புறம் லவ் பண்ணி செட்டில் ஆகிடனும்னு ஆசையாம்,

சரி இன்னைக்கே ஆரம்பிச்சிடுவம்னு சொல்லி
அந்த பிகருக்கு Friend Request அனுப்பினானாம்
அந்த நாள் முழுதும் வெயிட் பண்ணிப் பாத்தானாம்
Friend Request accept ஆகவே இல்லையாம்.
சரின்னு அடுத்த நாளும் வந்து பாத்தானம் அப்பவும்
Friend Request accept ஆகில்லையாம்.
இப்படியே ஒரு வருசம் காத்திருந்தான் அப்பவும்
Friend Request accept ஆகில்லையாம்.

வெறுத்துப் போன அவன் “சீ சீ இந்த பிகர் அட்டு பிகர்ர்ர்ர்
எண்டு மனச தேத்திக்கிட்டு
அடுத்த பிகருக்கு Request அனுப்புறதில்ல பிசியாகிட்டானாம்.

நாங்களும் பண்ணுவோமில்ல ரீமேக்கு...
-- ரீமேக் டிரெக்டர் - சுஹைல் --

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

வேர்ல்ட் கப் - சோக கீதம்


போ போ போ நீ கப்ப கொண்டு போ
போ போ போ எனக்கு கப்பு வேணாம் போ
எனக்கு ஒன்னும் கவலை இல்ல போடா சமி போ
நீ என்ன வேண்னாலும் ஆட்டம் போடு சோகமில்ல போ
போ போ போ நீ கப்ப கொண்டு போ
போ போ போ எனக்கு கப்பு வேணாம் போ

அடுத்த வேர்ல்டுகப்பிலும் ஃபைனல்
வரத்தான் போறோம் பார்மகனே
இலங்கை போல கிரிக்கட் ஆட எவரும் இல்ல
சொல்லப் போற நீதானே நீதானே
வெஸ்டிண்டீஸ் நீயே கப்பத் தூக்கிட்டியே
எதிர் பாராத நேரம் ஃபோர்மாகி நீயும்வெண்டுட்டியே.

போ போ போ நீ கப்ப கொண்டு போ
போ போ போ எனக்கு கப்பு வேணாம் போ

 ஆண்டவனே எங்கள் அணியில் என்ன குறை கூறு
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ள நீரு
ஓய்ந்திடாமலே  நான்கு ஃபைனல் வந்தோம்
மாறிடாமலே நான்கிலும் தோல்வியைத் தழுவினோம்
கண்டவனெல்லாம் கூடி கேலி பேசுறான்
ஓடி ஒழிஞ்சவனெல்லாம் நக்கல் பண்ணுறான்

போ போ போ
சமி நீ நாட்டைவிடுப் போ
போ போ போ
நீ எக்கேடோ கெட்டுப் போ

ஓஓஓஓஒ
மூன்று முறை  தோற்றும் அழுததில்லை நானும்
இம்முறை தோற்றதால் நான் அழுவதென்ன நியாயம்
அணி பலமாக இருந்ததினால் கிண்ணம் நமெக்கென்று நானும் நம்பினேன்
வழமைபோல் அணி சொதப்பிடவே சாகப் பார்க்கிறேன்
கிண்ணம் வெல்லாமல் போனதினால் போச்சு நிம்மதி
நான்காம் முறையும் கிண்ணம் கிடைக்கலையே
எல்லாம் நம்விதி நம்விதி

எனக்கு ஒன்னும் கவலை இல்ல போடா சமி போ
நீ என்ன வேண்னாலும் ஆட்டம் போடு சோகமில்ல போ

போ போ போ
நீ கப்பைத் தூக்கிப் போ
போ போ போ
எங்களுக்கு அதிஷ்டமில்ல போ

அடுத்த வேர்ல்டுகப்பிலும் ஃபைனல்
வரத்தான் போறோம் பார்மகனே

இலங்கை போல கிரிக்கட் ஆட எவரும் இல்ல
சொல்லப் போற நீதானே நீதானே

வெஸ்டிண்டீஸ் நீயே கப்பத் தூக்கிட்டியே….
சொல்லாமக் கொல்லாமா எதிர் பாராத நேரம்
ஃபோர்மாகி அடிச்சிட்டியே..

போ போ போ

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

---------இதுவும் கடந்துபோகும்---------சொல்றதுக்கு எதுவுமே இல்லைங்க…. குறித்த நாளில் சிறப்பாக விளையாடிய அணி இறுதியில் வென்றது. அது இறுதிப் போட்டியாக இருந்ததும் எமது இலங்கை அணியாக இல்லாது விட்டதும் எமக்கு வேதனைதான்…

தொடர்ச்சியாக 4 உலகக் கிண்ண இறுதிப்போட்டிகள் வருவதற்கு தனித்தன்மையான / அதீத திறமை வேண்டும். அந்த இறுதிப்போட்டிகளில் வெல்வதற்கு கொஞ்சம் அதிர்ஷ்ட்டமும் வேண்டும்…. எமக்கு கிண்ணம் வெல்லும் திறமையும் இருந்தது அதனை வெல்ல முழுத்தகுதியும் இருந்தது.
ஆனால் அதிர்ஷ்ட்டம்தான் இதுவரை கிட்டவில்லை.

உலகக் கிண்ணம் எனும் என் ஆசை, கனவு, பிரார்த்தனை எல்லாம் 4வது முறையும் தவிடு பொடியானதில் எனக்கு மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது.
எவளவோ ஏமாற்றங்கள் கண்ட மனது என்றாலும் இந்த மாதிரியான ஏமாற்றங்கள் ஏற்படுத்தும் வலி பாரியதாகவே இருக்கின்றது.
கடந்த தோல்விகளைவிட இந்தத் தோல்வி சொந்த மண்ணில், சொந்த நாட்டு ரசிகர்களின் முன்னால் பெறப்பட்ட இந்தத் தோல்வி கொடுமையானது.
ஆரம்பச் சுற்றுடனே வெளியேறியிருந்தால் கூட இவ்வளவு கவலை வந்திருக்குமா என்பது சந்தேகமே.

இலங்கை அணியின் தோல்வியை கிரிக்கட் ரசிகனாக ஏற்றுக்கொள்கிறேன்…..ஆனால் இலங்கை கிரிக்கட்டின் ரசிகனாக இந்தத் தோல்வியை மனம் ஏற்க மறுக்கிறது.

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் சொல்லவரவில்லை, சொல்லியும் பயனில்லை. எம்மவர்களின் பிழைகள் முதல் 10 ஓவர்களில் 32 ஓட்டங்களைக் கொடுத்துவிட்டு மீதிப் பத்து ஓவர்களில் 105 ஓட்டம் கொடுத்த போது எமது வெற்றியின் முதல் படி சறுக்கியது, மலிங்க 4 ஓவர்களில் 54 ஓட்டம் கொடுத்தபோது இரண்டாவது படி சறுக்கியது, டில்சானின் டக் அவுட் மூலம் 3வது படியும், மழையின் சிறு தூத்தலைக் கண்டு மஹெல டக்வேர்த் லூயிஸ் ஓட்ட இலக்கை கடக்க அவசரப்பட்டு ஆட்டமிழந்தபோது நாம் தோற்றேவிட்டோம்.

மீதமான வீரர்கள் தமது நம்பிக்கையை இழந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தமையும் இறுதி நம்பிக்கையாய் இருந்த ஜீவன் மெண்டீஸ் - திசெர பெரேராவின் ரன் அவுட்டோடு நாம் படு தோல்வி அடைந்தோம். அந்நேரம் இலங்கை ரசிகர்களாகிய எம் மனதில் பேரிடி விழுந்தது.

இறுதிப் போட்டியின் மொத்தம் 40 ஓவர்களில் முதல் பத்து ஓவர்கள் மாத்திரம் எம் கை ஓங்கியிருந்தது அதன் பின்னரான 30 ஓவர்களும் மே.இ.தீவுகள் அணியின் கை ஓங்கியிருந்தது.

மே.இ.தீவுகள் அணியை விட திறமையால் எம் அணி மேலோங்கித்தான் இருந்தது. ஆனால் எம் அணியினர் இலகுவாக அழுத்தத்திற்கு ஆளாகித் தவித்தார்கள் ஆனால் மே.இ.தீவுகள் அணியினர் சிறப்பாக அழுத்தத்தினைக் கையாண்டார்கள் கட்டுப்படுத்தினார்கள். ஒவ்வொரு ஆட்டமிழப்பின் போதும் அவர்களின் நடனம் நமக்கு வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது ஆனால் அதுதான் அவர்களின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவியது என்றால் மிகையாகாது.. அந்த இடத்தில்தான் இலங்கை அணி சறுக்கிவிட்டது.

திசேர பெரேராவின் ஆட்டமிழப்போடு என்னால் அதற்கு மேல் மெச்சைப் பார்க்கவே முடியவில்லை. பார்க்கும் சக்தி எனக்கிருக்கவில்லை அதற்குப் பின்னர் என்ன நடந்தது, யார் யார் எத்தனை ஓட்டங்கள் பெற்றார்கள்? மே.இ.தீவுகள் அணியின் வெற்றிக் கொண்டாட்டம் எப்படி இருந்தது? (நிச்சயமாக Gangam Style இருந்திருக்கும் என்பது உறுதி) எதுவுமே தெரியாது.இலங்கை அணி எத்தனை ஓட்டங்களால் தோற்றது என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

இந்தத் தோல்விக்குப் பின்னர் நான் பார்க்கும் எல்லோரும் சந்தோசமாய் இருப்பது போலும், எல்லோரும் என்னைப் பரிதாபமாய்ப் பார்ப்பது போலும் ஒரு உணர்வு.

வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு இந்தத் தோல்வியால் எவ்வளவு அழுத்தம், கவலை இருக்குமோ அதைவிட பலமடங்கு அழுத்தம், கவலை அந்த வீரர்களுக்கு இருக்கும். உண்மையில் 4 உலக்கிண்ண இறுதிப்போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி என்பது எவ்வளவு பெரிய கவலை என்பது இலங்கை அணியின் ரசிகர்களாகிய எமக்குத்தான் தெரியும்.

இலங்கை கிரிக்கடின் Die Heart Fan ஆன எனக்கு இந்தத் தோல்வி தந்த ரணம் ஆறுவதற்கும் கவலை நீங்கி வழமைக்குத் திரும்பவும் பல நாட்கள் ஆகும்.
ஒவ்வொரு முறையும் இலங்கை அணி தோற்கும் போதும் இலங்கை அணி மீது வெறுப்பு வந்ததே இல்லை. கிரிக்கட் மீது வெறுப்பு வரும். இனி கிரிக்கட் பார்க்கவே கூடாது கிரிக்கட்டுக்கு அடிமையாகிவிடக்கூடாது என்றுதான் நினைப்பேன். ஆனால் அடுத்த தொடர் ஆரம்பமாகும் போதும் முன்னரைவிட பல மடங்கு நேசத்தோடு இலங்கை அணிக்கு என் ஆதரவு இருக்கும்….. முடியவில்லை இலங்கை கிரிக்கட்டிலிருந்து என்னால் தூரமாக முடியவில்லை.

அணிக்கு ஆதரவு வழங்குவதும் அப்புறம் மனம் நொறுங்குவதும் பின்னர் மீண்டும் ஆதரவு வழங்குவதும் என்று செல்கிறது என் வாழ்க்கை.

என்னைப் பொறுத்தவரையில் இலங்கைக் கிரிக்கட் அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த தலைவர் மஹெல ஜயவர்த்தன. வீரர்களை ஆக்ரோசமாக அதே நேரம் கிரிக்கட் ஸ்ப்ரிட்டோடு வழி நடத்துவதில் வல்லவர். மஹெலவின் பல தன்மைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதற்குப் பல காரணங்கள். இப்படி என்னை மிகவும் கவர்ந்த தலைவர் மஹெல தனது தலைமையில் ஒரு உலகக் கிண்ணத்தைதானும் வெல்லவேண்டும் என்பது எனது மிகப் பெரிய ஆசை. ஆனால் இவ்வாசை இனி நிறைவேற வாய்ப்பில்லை என்பதே எனக்கு மிகப் பெரும் கவலை.

கடந்த 2011 உலகக் கிண்ணக்கிரிக்கட் போட்டிகள் நடைபெற்றபோது எனக்கு பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு இறுதி செமஸ்டர் பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோற்றபோது எந்நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. என்னால் படிக்கக் கூட முடியவில்லை. என் தாய் ஃபோன் பண்ணி என்னிடம் நல்லாப் படிக்காய் தானே என்று கேட்டபோது என்னால் பொய் சொல்ல முடியவில்லை. என்னால் படிக்க முடியவில்லை இலங்கையணியின் தோல்வி என்னை மிகவும் பாதித்துவிட்டது என்று வேதனையோடு கூறினேன். அவர்களுக்கும் என் வேதனை புரிந்தது எனக்கு ஆறுதல் சொன்னார்கள். என் பெற்றோர் சகோதரர்கள் எல்லோரும் அடிக்கடி ஃபோன் பண்ணி என்னைத் தேற்றியதால்தான் என்னால் மீதமிருந்த பரீட்சையை எழுதிமுடிக்க முடிந்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படி? ஏன் இப்படி ஒரு முட்டாள்தனமான ரசிகனாக் இருக்கிறேன் என்று எனக்கு புரியவே இல்லை.

அப்படி ஒரு நிலைதான் இம்முறையும் ஆனால் நல்லவேளை இம்முறை பரீட்சைகள் எதுவுமில்லை. ஆனாலும் மனதில் இருக்கும் வலி இன்னும் ஆறவில்லை. ஆனால் மற்றவர்கள் வழமைக்குத் திரும்பிவிட்டதைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது.
ஏன் என்னால் மட்டும் முடியவில்லை….? ஹ்ம்ம் இதுவும் கடந்து போகும்.

கிரிக்கட் ஒரு விளையாட்டுதான் அதற்கு நான் இப்படி அடிமையாய்க்கிடப்பது அதிகம்தான்… மூளை சொல்கிறது மனது கேட்குதில்லையே.

இந்தத் தோல்வி தந்தவலி இன்னும் அதிகமாகும் என்பதால் FB,Cricinfo போன்ற தளங்கள் பக்கமோ வேறேதும் இணையத்தளங்கள்பக்கமோ, டீவி, ஸ்போர்ட்ஸ் நியூஸ் பக்கமோ போகவே இல்லை.இந்த இரண்டு நாட்களையும் கடத்த நான் பட்டபாடு ஹ்ம்ம்ம்… மனதை ஆறுதல்படுத்த என்னென்ன செய்யலாம் என்று தேடிய போதுதான் நான் இருக்கும் மாபோளை நகருக்கு மிக அண்மையில் எலகந்த என்னுமிடத்தில் ஒரு அழகிய கடற்கரை இருப்பது அறியக்கிடைத்தது. புண்பட்ட நெஞ்சுக்கு ஒரு ஆறுதல்….ஹ்ம்ம்ம்

பார்ப்போம் இதுவும் கடந்து போகும்

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

என்னடா மக்கள்ஸ்....? இந்த வாட்டி அடிச்சிடுவீங்கதானே...?

***** இலங்கை கிரிக்கட் அணிக்கு தீவிர ரசிகனின் இதயத்தில் இருந்து ஒரு கடிதம் ****

என்னடா மக்கள்ஸ்....? இந்த வாட்டி அடிச்சிடுவீங்கதானே...?

அடுத்தடுத்து வேர்ல்ட் கப் ஃபைனலுக்கு வந்து ஆசை காட்டி மோசம் பண்ணி எங்கள சாச்சுப்புட்டீங்க இந்தவாட்டியாவது ஏதாவது பண்ணுங்க மக்கள்ஸ்.... ஹார்ட் பீட் இப்பவே செக்கனுக்கு 500, 1000 எண்டு எகிறுது.....

ஆப்படிக்கிறதா இருந்தா ஆரம்ப சுற்றுலையே அடிச்சிட்டு கிளம்பிடனும்
அரையிறுதி, இறுதிவரை வந்தெல்லாம் அடிக்கப்புடாது...... இந்தவாட்டி ஆப்படிக்கமாட்டீங்கன்னு நம்புறன் இத்துனோண்டு மனசு அது ஓவர் இடியையெல்லாம் தாங்காதுப்பா.......
பாத்து ஏதாச்சும் பண்ணுங்க...... எங்களால முடிஞ்ச துஆக்கள நாங்க கேக்குறோம்....

விவரம் தெரிய ஆரம்பிச்ச காலப்பகுதியில 1996 ல உலகக் கிண்ணத்த வென்று அடி மனசுல இனம்புரியாத ஒரு பாதிப்பத் தந்துட்டீங்க
அந்த வயசுல மனசுல பசுமரத்தாணி போல பதிந்த கிரிக்கட் அதுவும் கிண்ணம்வென்ற இலங்கை அணி, வெற்றிக்கொண்டாங்கள்,
ஊடகங்களில் வெளியான செய்திகள் எல்லாம் சேர்ந்து என் நாடு, என் அணி, என் மக்கள் என்றொரு உணர்வை மனதில் உருவாக்கி ஆட்கொண்டுட்டு......

அந்த அணியில் இருந்த வீரர்கள்தான் என் முதல் கதாநாயகர்கள் அவர்களோடு ஆரம்பித்த கிரிக்கட் உணர்வு இன்னும்
ஆழமாத் தொடருது

சனத் ஜயசூரிய, ரொமேஸ் களுவிதாரன, மஹனாம, மார்வன் அடபத்து, அரவிந்த எண்டு பாத்து பாத்து பக்குவப்பட்ட மனசு. ஜயசூரிய - களுவிதாரன அடியப்பார்க்க எத்துன மாலை நேர வகுப்புகள கட் அடிச்சிருப்போம்...
 நாங்க இன்னைக்கு வகுப்புக்கு போறதா இல்லையான்னு
தீர்மானிக்கிறதே சனத் ஜயசூரியதான்... வகுப்பு தொடங்கும் வரை அவரு அடிச்சா வகுப்பு கட்,  அதுக்குமுன்னாடி அவுட்டான வகுப்புக்கு
போவோம்....

 அந்த அடிப்படையில வந்த மனசு என்ன நடந்தாலும் அடங்கமாட்டேங்குது..... இனியும் அடங்காது போலிருக்கு....


எந்தவொரு தொடருக்கும் நீங்க போகும் போதும் அணி எவ்வளவு பலவீனமாகவிருந்தாலும் நீங்க ஏதாச்சும் பண்ணுவீங்க சாதிப்பீங்கன்னு
நம்பிப் பார்ப்போம்...  ஆதரவு தருவோம்..ஆனா இம்முறை நல்ல பலமா, நல்ல ஃபோர்ம்ல இருக்கீங்க. நம்பிக்கை, எதிர்பார்ப்பு எல்லாம் பலமடங்கு அதிகமா இருக்கு ஏமாத்திடாதீங்கடா செல்லம்ஸ்...


மனசு என்னென்னமோ உளறுது.... உடம்பெல்லாம் சிலிர்க்குது.. என்னாகுமோ ஏதாகுமோ....?
இப்பவே செம டென்சன்.., சாப்பிட முடியல, தூங்க முடியல, சிந்தனையெல்லாம் இந்த உலகக் கிண்ணம் பற்றிதான்...
ஹ்ம்ம்ம்ம்ம்ம்... இன்னும் எவளவோ சொல்ல நினைச்சன் எல்லாம் சொல்ல முடியல அடுத்த மடலில் சந்திப்போம்....

பாவிப் பய சின்ன வயசுல இருந்தே இப்புடி (இலங்கை) கிரிக்கட்டுக்கு சீரியஸ் ரசிகனாகிட்டு ஒவ்வொரு மெச் நடக்கும் போதும் படுறான் பாடு
அநியாயமா ஒரு உசுர சாச்சுப்புடாதீங்கடா.... உங்கள ரொம்ம்ம்ம்ம்ம்ப நம்பிட்டு இருக்கோம்...

யா அல்லாஹ்...


நன்றி

இப்படிக்கு
இலங்கை கிரிக்கட்டின் தீவிர ரசிகன்
_அஹமட் சுஹைல்-

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

வடை போச்சே (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -4)


  வடிவேல் சிங்கமுத்து காமெடிகள்ள ரொம்பவும் ஃபேமசான கொமெடி ஒன்னு இருக்கு.. “என்ன வேணும் எண்ண வேணும்அது மாதிரி நம்ம லைஃப்லையும் ஒரு காமெடி நடந்துதுன்னா பாருங்களேன்……

  அதுக்கு முன்னாடி சிங்களத்துல அவுறுதுஎன்ற சொல்; வருடம்(Year) என்பதற்கும் பயன்படுத்துவாங்க, புதுவருடப் பிறப்பு (New year) அதற்கும் பயன்படுத்துவாங்க….

  சரி நம்ம மேட்டருக்கு வரலாம்  எங்க பல்கழைக் கழக பட்டமளிப்பு விழா கொழும்பு BMICH ல ஏப்ரல் 5ல் நடந்துது. அதற்கான உத்தியோக பூர்வ படப்பிடிப்பாளர்களாக கண்டியில் இருக்கும் புகைப்பட நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்திருந்தாங்க. பட்டமளிப்பு நிகழ்வுகள் ஆரம்பமாக முதலிலேயே அவர்களுக்குரிய கட்டணங்கள செழுத்தி பற்றுச்சீட்டும் வாங்கியாச்சுவிழாவும் திருப்தியா முடிஞ்சுது..(எங்க டீன் என் பெயரை பிழையாக உச்சரிச்சதத் தவிர)

  பட்டமளிப்பு விழா முடிஞ்சு ஒவ்வொருத்தரும் வெளியேறிக்கொண்டிருக்கும் போது நானும் நம்ம புகைப்படப் பிடிப்பாளர்கள்கிட்ட ஃபோட்டோக்களை எப்ப எடுக்கலாம் என்று கேட்கலாம் என்று அவர்கிட்ட போனன்….
  அவர் சிங்களவர்

  நான்:  அண்ணா இந்த ஃபோட்டோகள எப்ப எடுக்கலாம்..?
  (ayye me photos tika kavadhdha ganda puluvan)

  அவர் : இந்த வருசத்துக்குப் பிறகு
  (me avuruddhen passe..)

  நான் : அண்ணா சொல்லுங்க.. எப்ப எடுக்கலாம்..?
  Ayye kiyannakko kavaddha ganda puluvan

  அவர் : வருசத்துக்குப் பிறகு எடுக்கலாம் தம்பி
  (Avuruddhen passe puluvan malli…)

  நான் : ஐய்யோ அண்ணா பகிடி பண்ணாம சொல்லுங்கோவன்
  (Ane aiiye vihilu karannethuva kiyannako….)

  அவர் : பகிடி இல்ல தம்பி இந்த வருசத்துக்குப் பிறகுதான் எடுக்க ஏலும்
  (Vihilu ne malli me avuruddhen passe thama ganda puluvan)

  நான் : இத டிவலொப் பண்ணித்தர ஒரு வருசம் போகுமா?
  (Meka develop karanda avuruddhek oonedha)

  அவர் : அப்படி இல்ல தம்பி வருசத்துக்கு எல்லாரும் லீவு போட்டுட்டு போயிடுவாங்கதானே, அவங்க லீவு முடிச்சிட்டு வந்த பிறகுதான் வேலைய ஆரம்பிப்போம். அதனால வருசம் முடிஞ்சு ஒன்று அல்லது ரெண்டுகிழமையாலதான் இதை எடுக்கலாம்
  (Ehema nevei malli avuruddhekata okkomala nivaadu dhaala  yanava nedha.. Nivaduven passe thamai vede patanganne…  aenisha avuruddhen passe sathi eka dhekakin ganda puluvan….)

  அப்போதான் க்ளிக் ஆச்சு….
  ஏய் நீ எந்த அவுறுதுவ சொன்ன….? அடப்பாவி…..
  நான் வருசத்தப்பற்றி கதைச்ச இந்தப் பயபுள்ள புதுவருடம் ஏப்ரல் 14 ஐப் பற்றி கதைச்சிருக்கான்…..

  அச்சச்சோ வடை போச்சே…. அப்புறம் ஒரு மாதிரியா சேப் பண்ணீட்டு

  நான் : அண்ணா நீங்க சொன்னது ஏப்ரல் 14 புதுவருசத்தப்பற்றியா…?

  அவர் : ஆமா நீங்க என்ன நினைச்சீங்க…?

  நான் : நான் நினைச்சன் ஃபோட்டோ தர ஒருவருசம் போகும்னு சொல்றீங்கண்ணு..

  அப்புறம் நாங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து சிரிச்சிக்கிட்டோம்
  ஒரே சிரிப்புதான் நகைச்சுவைதான் காமெடிதான் போங்க..

  அப்புறம் அவருக்கு Happy New Year சொல்லிட்டு நான் வந்துட்டன்... அப்புறமாத்தான் யோசிச்சன் ஆரம்பத்துலையே ஆங்கிலத்துல பேசிருக்கலாமோ... என்று

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

எங்க மல்பரி டீம்கு நான் ரொம்ப முக்கியம்

நிருபர் : சுஹைல் நீங்க கிரிக்கட் விளையாட்டப் பற்றி நிறைய
பேசுறீங்க. உங்க கிரிக்கட் வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்க

நான் : ஆமா நான் ”மாபோல மல்பரி Team” கு விளையாடினன்.
நான் இல்லாம அந்த டீம்ல யாரும் கிரிக்கட் விளையாடமாட்டாங்க.

நிருபர் : ஓஹ்.. நீங்க கெப்டனா..?

நான் : இல்ல கெப்டன் இல்ல... ஆனா நான் அவங்களுக்கு ரொம்ப முக்கியம். நான் இல்லாம அவங்களுக்கு விளையாடவே முடியாது
அவங்க விளையாடனும்னா நான் கண்டிப

்பா வேணும் அவங்களுக்கு.

நிருபர் : அதாவது உங்க அதீத திறமை உங்க டீம்கு வேணும். நீங்கதான் அணியின் முதுகெலும்பு அப்படித்தானே..?

நான் : இல்ல இல்ல அப்படி இல்ல... எங்கட வீட்டதான் எங்க டீம்ட Bat, Ball, Stumps எல்லாம் வைக்குற. நான் இல்லன்னா அவங்களுக்கு அத எடுத்து விளையாட ஏலாதே. அதனாலதான் எங்கட Team விளையாடனும்னா நான் அவங்களுக்கு கட்டாயம் வேணும்.

நிருபர் : &%^&$^%#@


(அவங்க சிங்களத்துல சொன்னாங்க அதையே நான் தமிழில் சொன்னன்)

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

வரலாறு Strategic Time out உருவான வரலாறுஎங்க ”வத்தள Buffaloes” அணிக்கும் ”கஜுவத்த எக்சத்” அணிக்கும் இடையிலான ஒரு T20 போட்டியொன்று வத்தள Buffaloes மைதானத்துல நடந்துது; அப்போ நாங்க ”வத்தள Buffaloes” ஃபீல்டிங் செய்துட்டு இருந்தப்போ வழமை போல எருமை மாடுகள்(Buffaloes) கூட்டமொன்று மைத்தானுத்துக்கு நடுவால மைதானத்த க்ரொஸ் பண்ணி போய்க்கொண்டிருந்துது. அதுகள் எல்லாம் போய் முடியும் வரைக்கும் நாங்க எல்லாரும் ஒன்னா கூடி கதைச்சிட்டு இருந்தோம்.
முதல்ல போற எருமை இன்னாருடையது அடுத்தது அன்னாருடைய எருமைனு எருமைகளைக் காட்டி எருமைகளைப் பற்றி கதைச்சிட்டு இருந்தோம்.

இத தள்ளி நின்னு பார்த்துட்டிருந்த ”கஜுவத்த எக்சத்” டீம்நாங்க ஏதோ Game Plan போடுறதாகவும் அவங்கள அவுட்டாக்க ப்ளான் பண்றதாவும் தப்பா நினைச்சிட்டாங்க.

 எருமைகள் எல்லாம் போய் முடிஞ்சதும் நாங்க எங்க ஃபீல்டிங்கை தொடங்கினோம்...

எங்க ஃபீல்டிங் முடிஞ்சதும் ”கஜுவத்த எக்சத்” டீம் ஃபீல் பண்ணிட்டிருந்தாங்க. ஒரு கட்டத்துல ”கஜுவத்த எக்சத்” டீம் காரங்க நீங்க ஃபீல் பண்ணும் போது 2 நிமிசம் டைம் எடுத்து கூடிப் பேசினீங்கதானே... Game Plan போட்டீங்கதானே அது மாதிரி நாங்களும் 2 நிமிசம் டைம் எடுப்போம்னு சொல்லி எடுத்துக்கிட்டாங்க....அப்படி ஆரம்பமானதுதான் Strategic Time out

எருமைகள் மைதானத்துக்குள்ள வரும்போது அவற்றை விரட்ட ஒரு வகையான பயங்கர சத்தம் வாற ஊதியொன்னால ஊதி ஊதித்தான் எருமைகளை விரட்டுவம்.... அதை அப்படியே கொப்பி பண்ணி ஐ.பி.எல் ID TONE ஆக வெச்சிக்கிட்டாங்க.

ஆக ”வத்தள Buffaloes” நாங்க எருமை மாடுகள் போறதுக்காக ஒதுங்கி நின்னத. Strategic Time out ஆகவும்; எருமை மாடுகளை விரட்றதுக்காக ஊதின Sound அ ஐ.பி.எல் ID TONE ஆகவும் வெச்சிக்கிட்டாங்க.

இதுதாங்க Strategic Time out மற்றும் ஐ.பி.எல் ID TONE உருவான வரலாறு.


நன்றி : Fans Talk

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

T20 உலகக் கிண்ணம் 2012 - இலங்கை அணி


ICC T20 உலகக் கிண்ணம் 2012. கிரிக்கட் உலகமே இலங்கை பக்கம் தன் பார்வையைத் திருப்பியிருக்கிறது. கிரிக்கட் ரசிகர்கள் சாரை சாரையாக இலங்கையை நோக்கி வந்தவண்ணமுள்ளனர். மாபெரும் கிரிக்கட் திருவிழா நாளை ஆரம்பமாகிறது.

ICC T20 உலகக் கிண்ணம் என்ற ஒரே இலக்கை நோக்கி 12 நாடுகள் பலப்பரீட்சை நடாத்த தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தத்தம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த பதினைவருடன் களத்திற்கு வந்திருக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியிலும் விளையாடப் போகும் இறுதிப் பதினொருவரும் யார்? ஒவ்வொரு அணியினதும் வியூகங்கள், அனுகுமுறைகள் எப்படி இருக்கப் போகின்றன? எந்த அணி சாதிக்கப் போகின்றது என்று கிரிக்கட் ஆர்வலர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் இம்முறை களமிறங்கும் 12 அணிகளில் வெற்றிவாய்ப்புகள் அதிகமுள்ள 5 அணிகள் அல்லது கிண்ணம் வெல்ல வாய்புள்ள முதல் 5 அணிகள் முறையே 1. இலங்கை 2.தென்னாபிரிக்கா 3. பாக்கிஸ்தான் 4. இந்தியா 5.மேற்கிந்தியத் தீவுகள்

இலங்கை அணி வீரர்களின்  பலம் பலவீனம்...


இலங்கை அணி அடுத்தடுத்த உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளில் இறுதிப் போட்டிவரை முன்னேறி இறுதிப் போட்டியில் இலக்கை அடைய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள நிலையில் இந்த உலக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளை எதிர்கொள்கிறது. கடந்த கால அனுபவங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்தப்  போட்டிகளை இலங்கை அணி சிறப்பாக விளையாடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மஹெல ஜயவர்தனவின் சிறப்பான தலைமைத்துவத்தின் கீழ் புதிய பயிற்றுவிப்பாளர் புதிய திறமையான இளம் வீரர்கள் என புது இரத்தம் பாய்ச்சப்பட்டு சிங்கங்கள் களத்தில் குதிக்கின்றன.

மஹெலவின் தலைமைத்துவம் பலமாய் ஒரு புறமிருக்க SLPL போட்டிகளில் பெற்றுக்கொண்ட ஃபோர்ம் இலங்கை வீரர்களுக்கு இம்முறை பெரிதும் உதவும்.   SLPL போட்டிகளில் என்னைக்கவர்ந்த இளம் வீரர்களில் இவர்கள் இம்முறை T20 உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி சார்பாக விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்ட சிலவீரர்களில் முக்கியமானவர்களான டில்சான் முனவீர, அகில தனஞ்ஜைய இருவரும் அணியில் இணைக்கப்பட்டமை இலங்கை கிரிக்கட் ரசிகன் என்ற வகையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக்கொடுத்தது.

23 வயதான டில்சான் முனவீர SLPL போட்டிகளில் மிகவும் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக SLPL T20 போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 23 பந்துகளில் 44 ஓட்டங்கள் பெற்று அணிவெற்றிபெற வழிவகுத்திருந்தார் என்பது சிறப்பாகும். திலகரட்ன டில்சான் போலவே அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடிய முனவீர நீண்ட கால அடிப்படையில் டில்சானின் பிரதியீடாகவே கருதப்படுகிறார்.

இம்முறை T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் TM டில்சானுடன் இவர்தான் ஆரம்பவீரராகக் களமிறங்குவார் என மிகப் பரவலாக நம்பப்படுகிறது. இலங்கையின் துடுப்பாட்டம் அனுபவம் வாய்ந்த வீரர்களான டில்சான் சங்கா மற்றும் தலைவர் மஹெல ஆகிய மூவரிலேயே பெரிதும் தங்கியிருப்பதால். மஹெல இம்முறை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அல்லாமல் 4ம் இலக்க வீரராகவே களமிறங்க அதிக வாய்புள்ளது. அதுதான் இலங்கை அணிக்கு சிறந்ததும்கூட

எனவே TM டில்சானுடன் டில்சான் முனவீர ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குமிடத்து இலங்கையின் மத்திய வரிசை பலம்பெறுவதுடன் அட்டகாசமான அதிரடியான ஆரம்பம் கிடைக்கும்.

18 வயதான அகில தனஞ்சைய. இம்முறை பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இளைய அறிமுக வீரர். SLPL தவிர்ந்த எந்தவிதமான முதற்தரப் போட்டிகளிலும் விளையாடிய அனுபவமில்லாத இவரின் தெரிவு பாரிய விமர்சனங்களை உருவாக்கிய போதும் இவர்மீது அணியின் சிரேஸ்ட்ட வீரர்கள் , அணியின் பயிற்றுவிப்பாளர் மட்டுமல்லாம் அணியின் தலைவர் மஹெல ஜயவர்த்தன ஆகியோயிரின் பலத்த ஆதரவுடன் குறிப்பாக மஹெலவின் பாரிய ஆதரவுடன் உலகக் கிண்ண அணியில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார்.

தனது சுழல் பந்துவீச்சில் பலவகையறாக்களை கொண்டு துடுப்பாட்டவீரர்களை இவர் திணரடிப்பதால் இவருக்கு சிறந்த ஒரு எதிர்காலம் உண்டு.  SLPL போட்டிகளில் சிறப்பாக தனது திறமையினை வெளிக்காட்டியிருந்த இவருக்கு தலைவர் உட்பட அணியில் பலரது பலத்த ஆதரவு இருந்த போதும் விளையாடும் இறுதிப் பதினொருவரில் இவர் தனக்கான இடத்தைப் பிடித்துக்கொள்வதில் பாரிய போட்டி இருக்கப்போகின்றது.

இலங்கை அணியின் தற்போதை அனுகுமுறை, வீரர்களின் திறமை மற்றும் அனுபவம் அடிப்படையில் விளையாடும் இறுதிப் பதினொருவரில் ஒரு சுழல்பந்துவீச்சாளருக்கே வாய்ப்பு அதிகம். அப்படி ஒரு சுழல்பந்துவீச்சாளருடன் விளையாடுவதாயின் சுழல்பந்துவீச்சில்  ஸ்திரமான இடத்தைப் பிடித்துக்கொண்ட தற்போது ஃபோமில் இருக்கும் ரங்கன ஹெரத்,  ICC T20 பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4வது இடத்தில் இருக்கும் அஜந்த மெண்டிஸ் ஆகியோருடன் அகில தனஞ்சைய போட்டியிடவேண்டியிருக்கும். மூத்த இரு சுழல் பந்துவீச்சாளர்களின் அனுபவ அடிப்படையில் ஒப்பிடுகையில் அகில தனஞ்சையவுக்கு ஒரு போட்டியிலேனும் வாய்ப்புக் கிடைப்பது மிகவும் சிரமமானது அப்படிக் கிடைத்தால் சந்தோசப்படுபவர்களில் நானும் ஒருவன்.

இலங்கை அணியின் துடுப்பாட்டவரிசையைப் பொறுத்தவரையில் மஹெல, டில்சான், சங்கா ஆகியோரோடு சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிசும் ஃபோமில் இருப்பது திருப்தி. திரிமான்னவும் தன் பங்கிற்கு சிறப்பாக செயற்படுகின்றார். இலங்கை அணியின் உபதலைவரும் சகலதுறை நட்சத்திரமுமான ஏஞ்சலோ மெத்யூஸ் தனது துடுப்பாட்டத்தில்  Go Slow முறையைக் கைவிட்டு அதிரடியாக ஆடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.  இலங்கையின் Good Finisher ஆன மெத்யூஸ் அதிரடி கலந்த ஃபோமில் இருப்பது இலங்கை அணிக்கு கூடுதல் பலம்.

மஹெல, சங்கா,டில்சான் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தின் முதுகெலும்புகள். இவர்கள் நல்ல ஃபோமில் இருக்கின்றனர். சங்கக்கார தனது ஸ்ட்ரைக்  ரேட்டைக் கூட்டவேண்டும், மஹெல, டில்சான் அவசரப்படாமல், அநாவசியாமான Shot Selections கு செல்லாமல் பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும் அவ்வளவுதான்.

பாவம் சந்திமல் ஃபோர்முக்கு வருவதில் தடுமாறிக்கொண்டிருக்கின்றார். இம்முறை விளையாடும் இறுதிப் பதினொருவரில் சந்திமாலுக்கு வாய்ப்புக் கிடைப்பது மிகக் கடினம். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முனவீர அல்லது மத்திய வரிசை வீரர் திரிமான்ன இருவரில் ஒருவர் சோபிக்கத் தவறும் பட்சத்திலேயே சந்திமலுக்கான வாசல் திறக்கப்படும்.

இலங்கை அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை மலிங்க, குலசேகர,  இரங்க ஆகியோர் வேக/மிதவேக பந்துவீச்சாளர்களாக இருக்க மெண்டிஸ்,ஹேரத், தனஞ்சய ஆகியோர் முழு நேர சுழல் பந்துவீச்சாளர்களாகவும் அணியில் இடம் பிடித்துள்ளனர். சகலதுறை வீரர்களாக மெத்யூஸ், திசர பெரேரா,ஜீவன் மென்டிஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இம்முறை இலங்கை அணியானது அனுபவம் இளமை இரண்டும் சம அளவில் கலந்த ஒரு கலவையாகவே உள்ளது. துடுப்பாட்டம், சகல துறை, சுழல் , வேகம் என்பவற்றில தற்போது ஃபோமில் உள்ள வீரர்களே தெரிவு செய்யப்பட்டிருப்பதால் 100% சிறப்பான பெறுபேறுகளை எதிர்பார்க்கலாம்.

என்னைப் பொறுத்தவரையில் இலங்கை அணி சார்பாக விளையாடப் போகும் இறுதிப் பதினொருவர்கள் இவர்கள்தான்.

1.டில்சான் முனவீர
2.டில்சான்
3.சங்கக்கார
4.மஹெல ஜயவர்த்தன
5.திரிமான்ன
6.ஏஞ்சலோ மெத்யூஸ்
7.ஜீவன் மெண்டிஸ்
8.திசர பெரேரா
9.நுவன் குலசேகர
10.லசித் மலிங்க
11.ரங்கன ஹெரத்/ அஜந்த மெண்டிஸ்

சந்திமல் ஃபோமில் இல்லாததால் வாய்ப்புக் கிடைப்பது கொஞ்சம் கஸ்ட்டமானவிடையம், சமிந்த இரங்க சிறப்பாகப் பந்துவீசினாலும் அவருக்கான வாய்ப்பும் குறைவு. ஏனெனில் ஏனையவீரர்கள் அவருக்கான இடத்தினை தம்வசப்படுத்திக்கொண்டார்கள்.

வீரர்கள் தம் திறமையினை 100% வெளிப்படுத்துமிடத்து வெற்றி நமதே….

சொந்த நாட்டில் விளையாடுவது என்பதும் இலங்கை அணிக்கு சாதகமான நிலைமையைக் கொடுக்கும்.

இலங்கை அணியின் குழு C இனைப் பொறுத்தவரை தற்போது Test, ODI, T20 மூன்றிலும் தரப்படுத்தலில் முதலிடம் பிடித்திருக்கும் தென்னாபிரிக்க அணியும் சிம்பாப்பே அணியும் இடம்பெறுகின்றன.  இலங்கை அணிக்கு தென்னாபிரிக்க அணியின பாரிய சவாலாக இருப்பார்கள் என்பது உறுதி. அவர்களின் ஸ்விங் மற்றும் அசுர வேகப்பந்து வீச்சாளர்களையும் டிவில்லியர்ஸ் ,அம்லா போன்ற தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களையும் சமாளிப்பதில்தான் இலங்கை அணியின் சாமர்த்தியம் மற்றும் அணியின் பலம் என்பன அனைவருக்கும் வெளிப்படும்.

ஆடுகளத்தைப் பொறுத்தவரையில் இலங்கையின் குழு நிலைப் போட்டிகள் இரண்டும் ஹம்பாந்தோட்டையிலேயே இருக்கின்றன. கொழும்பில் போட்டிகளை வைத்திருந்தால் இலங்கை ரசிகர்களின் ஆதரவு பலமாக இருந்திருக்கும்.  சொந்த மைதானம் என்றபோதும் ஆர்.பிரேமதாச மைதானமானது ஹம்பாந்தோட்டை சூரிய வெவ மைதானத்தைவிட  ஒப்பீட்டளவில் இலங்கை அணியினருக்கு மிகவும் பரீட்சையமானது. இது இப்படி இருக்க எதற்காக இலங்கை அணியின் முதலிரு போட்டிகளையும் ஹம்பாந்தோட்டையில் வைத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மழையினால் பாதிப்பு வரலாம் என்ற சந்தேகமோ தெரியாது..

எது எப்படி இருந்த போதும் சம பலம் பொருந்திய அணி இம்முறை T20 உலகக்கிண்ணத்தை வெல்லும். வெல்ல வேண்டும்.

இலங்கை அணிக்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS