RSS

ஏலேய் நான் ஊருக்குப் போறன் ஊருக்குப் போறன் ஊருக்குப் போறன்


 
வேப்பமரம் புளியமரம்
ஆலமரம் பூமரம்
ஊருக்குத்தான் வரப்போறன் கேட்டுக்கோ
பைனெண்டாறு துருசிப்பக்கம் குளிக்கவரும் குட்டீங்களே
ஊருக்குத்தான் வரப்போறன் கேட்டுக்கோ
பன்சலை பBன சத்தம் கேட்காத தூரம் போறேன்
துர்நாற்றம் வீசும் சாக்கடைகள் இல்லாத தூரம் போறேன்
சுப்பர் லைனர் பஸ்ஸுலதான் நானும் போறன் ஊருக்குத்தான்
சுப்பர் லைனர் பஸ்ஸுலதான் நானும் போறன் ஊருக்குத்தான்

(வேப்பமரம்...)

சில்லுனு காலையில் எழுந்திருச்சி
பெட்டை எடுத்து கிரிக்கட் ஆடுவேங்க
கிரிக்கட் ஆடும் போது கொஞ்சம் காயம் பட்டா
நான் பொறந்த மண்ணெடுத்து பூசுவேனுங்க
ஹேய் பல நாள் ஆசை நனவாச்சு
பெத்தவங்க மனசு குளிர்ந்தாச்சு
அண்ணாவோட காரெடுத்துக்கொண்டு ரொக்கெட் வேகத்துல
பந்தாவா சீறிக்கிட்டு போகபோறேங்க
சுஹைல் சாரோட பவனி சாலையில போனா
பொனுங்க பார்வையெல்லாம் என் பக்கம் திரும்புமே தானா
கலர் கலரா போகும் ஃபிகருங்க என்னைப் பாத்துபுட்டா போதும்க
ஓரமா நின்னு மூக்கு மேல விரல வெச்சு லுக்கு விடுவாங்க

(வேப்பமரம்...)

எங்க ஏரியாப் பொனுங்கள சைட்டு அடிக்கிறவன்
சின்ன வயசுலையே சிகரெட் புடிக்கிறவன்
கோழி திருடுறவன் ஆட்டை அமுக்குறவன்
நான் வாறதுக்குள்ள ஒழுங்கா திருந்திக்குங்க
வட்டி வாங்கி திண்ணா ஒதைப்பேங்க
பெத்தவள திட்டுனா மிதிப்பேங்க
ரோட்டுல கிரிக்கட் ஆடும் பசங்கள கண்டா
நானும் ஜாலியா சேர்ந்துக்குவேங்க

ஜாலியாக சுத்தும் பட்டாம் பூச்சி போல
நான் ஊர் சுத்துறத தடுத்தா தலையில் குட்டுவேங்க
குட்டு பட்ட நீயும் ஒன்னா சுத்த வந்தா
சத்தியமா உன்னையும் சேத்து ஊர சுத்துவேண்டா

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நாங்களும் க்ரேஜுவேட்டாக்கும் (செமெஸ்டர் - 1)


அறிமுகம்

 
பல்கலைக் கழக வாழ்க்கை சிலருக்கு கனவு சிலருக்கு வெறுப்பு. ஆனாலும் அந்த வாழ்க்கை பல்கலைக் கழகம் சென்ற பலருக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைக் கொடுத்திருக்கும். பலருக்கு வாழ்க்கைத் துணை கூட கொடுத்திருக்கும்.

எனக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைத்தவேளை நான் பல்கலைக் கழகம் போவதில் ஆர்வம் காட்டவே இல்லை.  என் இலக்கை அடைய நான் போதியளவு முயற்சிக்கவில்லை ஆனாலும் கிடைத்ததை ஏற்றுக்கொள்ளவும் நான் தயாரில்லை. எனவே பல்கலைக் கழகம் சென்று 3 அல்லது 4 வருடங்களைக் கடத்த எனக்கு விருப்பமில்லை. வேறு ஏதாவது பாடநெறிகளை முடித்துவிட்டு வேலைக்குப் போகனும் என்பதில் நான் குறியாய் இருந்தேன்.

ஆனாலும் எங்கள் வீட்டில் இதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. என்னை எவ்வளவோ கட்டாயப்படுத்தினார்கள் படிப்பித்த ஆசிரியர்கள் சொந்தங்கள் என்று யார் யாரெல்லாம் வந்து என்னை எப்படி எப்படி எல்லாம் மூளைச் சலவை(Brain wash) செய்தார்கள். நான் மசியவே இல்லை.

ஒரு நால் என் பெற்றோர் என்னை தனியாக கூப்பிட்டு அருகில் உற்கார வைத்து உன் முடிவுல மாற்றமிருக்காஎன்று கேட்டாங்க இல்லை என்றேன்.
உன்னை வேற கோர்ஸ் செய்ய வேணாமுன்னு சொல்லல. அதையும் செய் ஆனா அதுக்கு முதல்ல கெம்பஸ்ஸ முடி. கெம்பஸ் முடிக்காம நீ எந்த கோர்ஸ் செய்தாலும் உனக்கு இருக்கப்போற Academic qualification வந்தும் AL பாஸ் மட்டும்தான். ஆனா நீ கெம்பஸ் முடிச்சால் ஒரு க்ரேஜுவட் எண்ட தகுதி இருக்கும். ப்ரொமோசன் கிடைக்கும் போது கை கொடுக்கும்என்றெல்லாம் சொன்னாங்க. நான் அமைதியாகவே இருந்தேன்.

கடைசியாக சொன்னாங்க பாருங்கஅதாங்க என் முடிவ ஒரு கணத்தில மாத்திடுச்சு.
சரி அதையெல்லாம் விடு. உன்னை இவளவு கஸ்ட்டப்பட்டு படிப்பிச்சத்துக்கு நீ எங்களுக்கு கொடுக்கப் போற சந்தோசம் இதுதானா..? எங்க பிள்ளையும் ஒரு பட்டதாரி என்று நாங்களும் பெருமையா சொல்ல, நாங்களும் சந்தோசப்பட உனக்கு விருப்பமில்லைத்தானே…
உனக்காக கஸ்ட்டப்பட்ட எங்களுக்கு இப்படி ஒரு சந்தோசத்த கொடுக்க உனக்கு இஸ்ட்டமில்லன்னா இதுக்கு மேலையும் நாங்க இதப்பத்தி கதைக்கல உன் இஸ்ட்டப்படி செய்


அவ்வளவுதான் அடுத்த நாள் நான் கெம்பஸ்ல இருந்தன்
.

இப்படி பெற்றோருக்காகத்தான் நான் கெம்பஸ் போனன் என்றதாலோ என்னவோஆரம்பத்துல இருந்தே எனக்கு கெம்பஸ் வாழ்க்கை பிடிக்கவே இல்லை. காலப்போக்கில் மனநிலையில் கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டாலும் அது எனக்கு ஒரு சுமையாகவே இருந்தது. எனக்கு நானே தனிமையை தேடிக் கொண்டேன்.

அடிக்கடி சோர்ந்து போவேன். அப்போதெல்லாம் நான் மனதில் எண்ணிக்கொள்வது என் பெற்றோரின் சந்தோசத்திற்காக அவர்களின் ஆசையை நிறைவேற்ற வந்திருக்கன்என்பதைத்தான். அந்த எண்ணம்தான் என் பல்கலைக் கழக வாழ்க்கையை தொடருவதற்கு எனக்கிருந்த ஒரே பலம்.
இன்று நான் என் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிவிட்ட பெருமிதத்தில் இருக்கின்றேன்.

இப்படிப்பட்ட பல்கலைக் கழக வாழ்க்கையில் நான் அனுபவிச்ச, சந்திச்ச சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.
நாங்களும் க்ரேஜுவேட்டாக்கும்என்ற இந்தப் பதிவு மூலம் தொடர்ச்சியாக எனது பல்கலைக் கழக வாழ்க்கையின் சுவாரஸ்யமான விடையங்களை பகிர்ந்துகொள்வேன்.


பல்கலைக் கழக ராகிங்ல இருந்து ஆரம்பிப்போம்

எனது பல்கலைக் கழகத்தில் ராகிங் சற்று வித்தியாசம்.சனி ஞாயிறு தவிர்ந்து மொத்தம் 23 நாட்கள் ராகிங் நடக்கும். ராகிங் பண்ணுவதெற்கென்று 8 பேர் கொண்ட ராகிங் குழுவினர் இருப்பாங்க.. அவங்க தவிர வேறு யாரும் ராகிங் பண்ணமாட்டாங்க.ராகிங்கின் கடைசி வாரத்தில்தான் மற்ற எல்லோரும் ராகிங் பண்ண வாய்ப்புக் கிடைக்கும். மற்ற நாட்களில் இந்த 8 பேரும் ராகிங் பண்ணும் போது அவங்கள பாதுகாக்கவும், ராகிங்கைப் பார்க்கவும் எல்லா சீனியரும் வந்து இருப்பாங்க. ராகிங் நடக்கும் ஆனால் ஒரு சீனியரின் விரல் நுனி கூட எங்கள் மேல் படாது.. அதுதான் அங்கே சிறப்பு.

பல்கலைக் கழக கெண்டீனில் புதியமாணவர்கள் எல்லோரையும் வைத்துதான் பொது ராகிங் (common ragging) தான் நடக்கும்.கெண்டீனில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் கதிரைகளில் நாங்களிருப்போம் ராகிங்கும் நடக்கும்.

இப்படி எங்களுக்கு ராகிங் நடக்கும் முதல் வாரம். எல்லோருக்கும் ஒரு பெயர் வைப்பார்கள். அந்தப் பெயர் படு கன்றாவியா இருக்கும். அந்தப் பெயரை தெரிவு செய்து கொடுப்பதே பெண் சீனியர்கள்தான். அந்தப் பெயரை கார்ட் என சொல்வார்கள்.

அன்று காலையில்  முதல் 10 மாணவர்களுக்கு கார்ட் வைத்தார்கள். அன்று மாலை நாங்கள் எல்லோரும் கெண்டீனில் இருக்கிறோம் ஒரு சீனியர் வந்தான். ஒருத்தனை கை நீட்டி எழும்புடா என்றான். அவன் மரியாதையாக எழும்பி நின்னான்.
உன் கார்ட் என்னசீனியர் கேட்டான். இவன் மறந்து போய் ஏதோ ஞாபகத்துல கொமெர்சல் பேங் கார்ட் என்று சொன்னானே பார்க்கலாம். சீனியருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஒரு மாதிரியாக சிரிப்பைக் கட்டுப் படுத்திக்கொண்டு. அவனை பச்சை பச்சையாகத் திட்டினான்.

அடுத்த சீனியர் வந்து. எங்க எல்லாரையும் எழும்ப சொன்னான். எழும்பினோம்.
உங்களுக்கு சிரிப்பு என்னடா…. எல்லாரும் முட்டி போட்டு நில்லுங்கடான்னு சொல்லி முட்டுக் கால்லா நிக்க வெச்சிட்டு போயிட்டான் அந்தப் படுபாவி.

கார்ட பிழைய சொன்னதுக்கு அந்த நண்பனுக்கு குடுத்த தண்டனை என்ன தெரியுமா தவழ்ந்து தவழ்ந்து ஒவ்வொருத்தர்கிட்டையும் போய்
என்னுடைய உண்மையான கார்ட் இது…. நான் பிழையா கொமெர்சல் பேங் கார்ட சொல்லிட்டன்  என்று எங்க எல்லார்கிட்டையும் சொல்லனும். அவனும் சொன்னான்.


இன்னும் சொல்வேன்

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

லண்டனில்ல மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்குறாங்க
லண்டனிலே மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் என்று சொல்லுறாங்க
எத்தனையோ பொம்பளைங்க ஊர் பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர் பார்ர்க்கப் போறாங்க
ஐயயோ வெற்கக் கேடு யாருக்குத் தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப் புரியும்

நல்ல நல்ல மாப்பிளையாம் பெண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சீதனத்தை அள்ள நினைக்குறாங்க..
எத்தனையோ பொம்பளைங்க ஏமாந்து போனாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஏமாறப் போறாங்க..

ஐயயோ வெற்கக் கேடு யாருக்குத் தெரியும்..
இந்த நாட்டுக்குள்ளே நரிகள் உண்டு யாருக்குப் புரியும்?

அன்றொரு நாள் நடந்ததொரு அவசரக் கலியாணம்
ப்ளேனிலேதான் பறந்துவந்தார் மாப்பிள்ளை சிவஞானம்
மாப்பிளையும் பெண்ணுமாக வெளியூர் பிரயாணம்
போன பிளேனில் திரும்பி வந்தாள் போச்சுது அவள் மானம்

ஐயயோ வெற்கக் கேடு யாருக்குத் தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப் புரியும்

லண்டனில்ல மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் என்று சொல்லுறாங்க
எத்தனையோ பொம்பளைங்க ஊர் பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர் பார்ர்க்கப் போறாங்க
ஐயயோ வெற்கக் கேடு யாருக்குத் தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப் புரியும்

எஞ்சினீயர் என்று சொல்லி புழுகித் தள்ளினாராம்
லண்டனிலே ஹோட்டலில் ஓர் வெயிட்டர் வேலைதானாம்
கொண்டுபோன காசிலேதான் காரும் வாங்கினாராம்
என்று அந்தப் பெண்ணும் வந்து சொல்லி அழுதாழாம்

லண்டனில்ல மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் என்று சொல்லுறாங்க
எத்தனையோ பொம்பளைங்க ஊர் பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர் பார்ர்க்கப் போறாங்க
ஐயயோ வெற்கக் கேடு யாருக்குத் தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப் புரியும்


** என்னைக் கவர்ந்த நம்ம நாட்டு பொப் இசைப் பாடகர் நித்தி கனகரத்தினத்தின் பாடல்.Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நேயர்களின் அமோக ஆதரவோடு 14ஆவது ஆண்டில் தடம் பதிக்கிறது உங்கள் முதற்தர வானொலி சக்தி FM...


13ஆண்டுகளை நிறைவு செய்து, நேயர்களின் அமோக ஆதரவோடு 14ஆவது ஆண்டில் தடம் பதிக்கிறது உங்கள் முதற்தர வானொலி சக்தி FM...

சிகரம் தொட்டு மகிழ்ந்தபோதும், தடைகள் வந்து தகர்த்தபோதும் தோழோடு தோழாக பக்கபலமாக எப்போதும் எம்மைச் சூழநின்ற அன்பு நேயநெஞ்சங்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.
உங்கள் ஆதரவுடன் இன்னும் புதுமைகள் படைப்போம்.... தொடர்ந்தும் சக்தி FM உடன் இணைந்திருங்கள்

(சக்திக் குடும்பத்தின் ஒரு அங்கத்தவனாக நானும் இருப்பதையிட்டு இந்த வேளையில் மிகவும் மகிழ்வுறுகின்றேன்)


நெய்தல் மண்ணில் நிலை கொண்ட தமிழே
கொய்தல் இல்லா மலர் போன்ற இசையே
இரண்டும் சேர்ந்து உறவாடும் அழகே சக்தி

தாயிற் தவழும் தாலாட்டுப் போலே
ஆயற் கூட்டம் அமுதத்தைப் போலே
நேயர் கூட்டம் பலகோடி உனக்கே சக்தி

அமிர்தாய்க் கொஞ்சும் தமிழ் பேசும் நெஞ்சில் மக்கள் தோழன் நீயே
வரமாய் இசையில் வரலாறு படைக்கும் வானொலி வேந்தன் நீயே
உலகம் முழுதும் இசை என்ற தசத்தால் இணைக்கும் சக்தி நீயே
நல்லோர் இசையை தமிழ் வானில் விதைத்தாய் சக்தி
இளமை கொஞ்சும் தமிழ் கொண்ட இசையென உரைக்கும் சக்தி நீயே..
சொல்லா ஆண்டு பல்லாண்டு வாழ்வாய் சக்தி!!!!
Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

மேரி ஹிந்தி குச் காஸ் நெஹிஹே....

Aapka naam kyaa hai  :
உங்கப்பனுக்கு நாமம் போட்டாச்சு

Aapsey milkar khushi huee! :
அப்புசாமிட பாலைக் குடிச்சிட்டியேடா பாவி

Kyaa aap ko yahaan accha lagtaa hai :
என்ன சொன்னாலும் கோ படம் சூப்பர் ஹிட்டுதான்

    Aap kyaa kaam kartey hain? :
உன்னோட கராட்டி மாஸ்டர் யாரு?  

Mujhey Hindi bhaashaa acchee lagtee hai.:
உன்னோட இந்தி பாசை எங்க ஆச்சிக்கி ரொம்ப பிடிச்சிட்டுதாம்

Aapkee umar kyaa hai :
உமறுக்கு ஆப்பு ரெடிடோய்....

Naaey saal kee shubhaechaen  :
நாயே வீட்டுக் கீ எங்கன்னு சொல்லித் தொலடா

Kripaya karkey yeh likkh deejeeae. - கிழவி சுட்ட வடைய டீஜே லைக்    பண்ணினார்டோய்...

    Meri Hindi kucch khaas nahi hai.  :
மேரிட ஹிந்தி க்ளாசுக்கு காசு இல்லியாமாம்

    Kitney bajey hain?  :
கிட்னி போயே போச்சு

    Jaldi karo!   :
ஜட்டிய மாத்து

dhil dhu paaga hai :
சீ தூ பாக்காத

Hamara Dil Aapke Paas Hai :
எண்ட பிள்ளை எப்படியோ எக்சாம்ல பாஸ் ஆகிட்டு

Aag Ka Dariya :
போடா தடியா

Thodisi Bewafaii :
தோசையும் ஹாஃப் பொயிலும்

    Yeh Kaisa Insaaf :
அந்தக் கழுத இன்ஸாஃப்

Chura Liyaa Hai Tumne :
சுறா பாக்கப் போன உனக்கு அறிவில்லையா


Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நாங்க அம்புட்டு ஃபேமஸ் ஆகிட்டோம்மா...?

பெருசா ஒன்னுமில்லீங்க.. என்னோட ஃபேஸ்புக் சுவர்ல நான் கிறுக்கியவைதாங்க....


**
மீன்காரன் கூவும் சத்தம்
மரக்கறி விற்கும் சத்தம்

சைக்கிள் பெல்லின் சங்கீதம்
சைக்கிளில் டபுள்ஸ் போகும் பேரின்பம்

நட்புகளின் நக்கல் பேச்சின் இம்சை
நட்புகளோடு ஊர் சுற்றும் சுகம்

ஹபாயா போட்டு தலை குனிந்து நடக்கும் பெண்கள்
மாலை நேர மைதானம்/லைப்ரரிக் கட்டுதரும் ஆறுதல்..

இரவு நேரக் கிழங்குக் கடை
ஓவராப் பசிச்சா கொத்து ரொட்டி

மாதம் ஒரு ”காலை”ச் சாப்பாடு
ஆற்றில் குளிக்கும் உற்சாகம்

இல்ல இவை இல்ல வெளிநாட்டில் இவை இல்ல.


**
தொண்டன் : தலைவரே எல்லாரும் நம்ம மேல செருப்பு வீசுராங்க வாங்க ஓடிடலாம்.

தலைவர் : இருடா இப்பதான் ஒரு புதுச்செருப்பு வந்திருக்கு அதுட சோடி செருப்பும் வரும் வரைக்கும் நின்னு பேசுவம். அது வந்த உடனே அதையும் எடுத்துட்டு ஓடிரலாம்..

**
பல்கலைக் கழகத்தில் ராகிங்கை (பகிடிவதையை) ஒழிப்போம் என்று கங்கனங்கட்டிய அரசாங்கம் அதில் குறித்தளவு வெற்றியும் கண்டது.

இப்போது அரசாங்கமே ராகிங்கை தமது பொறுப்பில் எடுத்துள்ளது. மாணவர்களை 3 வாரம் இராணுவ முகாமிலிட்டு அரசாங்கமே நேரடியாக மாணவர்களை ராகிங் செய்யப்போகிறது.

(ஒரே காமெடியா இல்ல...?)


**
எல்லோருக்கும் சொர்க்கத்துக்குச் செல்லும் ஆசை இருக்கிறது. 
ஆனால் யாருக்கும் மரணிப்பதற்கு விருப்பம் இல்லை.

**
பார்ரா..
நாங்க அம்புட்டு ஃபேமஸ் ஆகிட்டோம்மா...? காலங்காத்தாலையே ஜனாதிபதி நமக்கு மெசேஜ் அனுப்புறார்னா பாருங்களன்...

"Obata suba vesak Mangallayak Wewa
janadhipathi Mahinda Rajapaksa"

இவளவு நாளும் ஒபாமா, பான்கீமூன் அவங்ககிட்ட இருந்துதான் Call & Msg வந்துட்டு இருந்துது இப்போ இவரும் ஆரம்பிச்சாட்டாரு.

ஒரே கஸ்ட்டமப்பா...


**
ஓ மை கோர்ட்... கெம்பஸ்ல இருந்தவரைக்கும் நம்ம பொக்கெட் மணிக்கு பஞ்சமே இல்ல.. ஏதாச்சும் காரணத்த சொல்லி காசு வாங்கிடலாம். ஆனா ஊருக்கு வந்த பிறகு செம வரட்சி..
காசு கேட்டா வீட்ல இருக்கிற உனக்கு என்ன அடங்காத செலவுன்னு டயலாக் வேற..

இறைவா ஒரு தொழிலுக்கு போய் சம்பளம் எடுக்கும் வரை ஒரு நல்ல மனிசன எனக்கு ஸ்பொன்சராய் ஆக்குவாயாக.. இல்லன்னா ஒரு பணக்காரப் பையனாப் பாத்து எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் ஆக்குவாயாக.

**
எனக்கு ஒரு ரசிகை இப்படி கடிதம் அனுப்பியிருந்தாள்.

“நான் உங்களுக்காக எதையும் செய்யக் காத்திருக்கின்றேன். எதையும் என்றால்.. எதையும்...”

அதை நான் என் காதலியிடம் கொடுத்து இதற்கு நீயே பதிலனுப்பு என்று கூறினேன்.
அதற்கு அவள் இவ்வாறு பதிலனுப்பினாள்.

“ஏற்கனவே அவருக்காக எதையும் செய்ய நானொருத்தி காத்திருக்கிறேன். அதாவது எதையும் என்றால் எதையும்”

எப்புடி நம்மாளு?

**
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்

கொத்தடிமை கொத்தடிமைன்னு சொல்றாய்ங்களே.. அப்படின்னா யாரு பாஸ்?

கொத்து வாங்க காசில்லாம அடிமை வேல செய்றவிங்களா...??
இல்லன்னா சாப்பிட்ட கொத்துக்கு காசு குடுக்காம அடிமையா சிக்கினவிங்களா..?
அபடியும் இல்லன்னா..
உடம்பில் கொத்துகளைக் கட்டிக்கொண்டு அடிமை வேலை செய்றவிங்களா?
யாரு பாஸ்?

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

எனது தந்தையே இனிமேல் நீங்கள் என்னுடன் கதைக்க வேண்டுமானால் தொலைபேசியை நாடவேண்டாம்(பூகம்பம் - அதிர்வு 1)

அவர் ஒரு மறைவான ராணுவ மனிதன்

 யஹ்யா அய்யாஸ்


தொலைபேசி அழைப்பு ஒரு முறை வந்ததுதுண்டிக்கப்பட்டதுமீண்டும் வந்தது... துண்டிக்கப்பட்டது.. மூன்றாவது முறை வரவில்லை. மறுமுறை கைத் தொலைபேசியில் மணி அடிக்கத் தொடங்கியதும் உஸாமாவின் மனைவி அதனைக் கையில் எடுத்தாள். அது தனது கணவரின் நண்பருக்கான அழைப்பு என அறிந்துகொண்ட அவள் ஸுப்ஹ் தொழுகைவரை விழித்திருந்து பின் உறங்கிக் கொண்டிருக்கும் கணவனை எழுப்பி அவர் மூலம் அதனை அவரது நண்பனுக்கு அனுப்பினாள். அவள் அப்பாவி, விஷயங்களின் பாரதூரம் பற்றி ஓரளவு அறிவு இருந்தாலும் நடக்கப்போவது பற்றி ஊகிக்கக் கூடிய சக்தி அவளுக்கு இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாளா என்ன?

அப்போது நேரம் சுமாராக 9 மணி இருக்கும்.ஜும்மாவுடைய நாள் என்பதால் பள்ளிக்குப் போகும் நேரத்தை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்நண்பனை எழுப்பி கைத்தொலைபேசியை கையில் கொடுத்துவிட்ட உஸாமா நண்பனின் அறையில் உற்கார்ந்துகொண்டு கதவை மூடிக்கொண்டான். தனது ஆருயிர் நண்பனின் தந்தை பேசுகிறார் என்பது அவனுக்குத் தெரியும். ஏனெனில் அதனை எதிர்பார்த்தே அவர்கள் நின்றனர்.

யா வாலிதி…. (எனது தந்தையே) அஸ்ஸலாமு அலைக்கும்…” என உஸாமாவின் நண்பன் வாயாற வாழ்த்தினான். பாலைவனத்தின் கடும் வெயிலில் இருக்கும் போது காய்ந்து வரண்டு போன வாய்க்கு குளிர்ந்த பானம் கிடைத்தால் ஏற்படும் இன்பம் தனது நண்பன் தொலைபேசியில் கூறிய வார்த்தைகளால் உஸாமாவுக்கு ஏற்பட்டது. புன்முறுவல் பூத்தவண்ணம் தனது நெஞ்சைத் தடவிக் கொண்டான் அவன்.

உரையாடல் தொடர்ந்தது…. “எனது தந்தையே இனிமேல் நீங்கள் என்னுடன் கதைக்க வேண்டுமானால் தொலைபேசியை நாடவேண்டாம். தொலைபேசியைப் பாவிப்பது என்னைப் பொறுத்தமட்டில் ஆபத்தானதுஎன நண்பன் கூறி முடிப்பதற்குள் புசுக்”  என ஒரு சப்தம்தான் கேட்டது. அருகிலிருந்த உஸாமா திடுக்கிட்டான். “ …..  என்னஎன திகைப்புடன் அறையை உற்று நோக்கினான். புகை மண்டலம் அறையை ஆக்கிரமித்திருப்பதைக் கண்டான்.

பலஸ்தீனை மீட்ட சுல்தான் ஸலாஹுதீன் அய்யூபி, யூதர்களுக்கெதிரான போராட்டத்துக்கு அஸ்திவாரம் போட்ட இஸ்ஸுதீன் அல் கஸ்ஸாம் ஆகியோர் போன்று கருதப்பட்டு வந்த தனது நண்பன் விழுந்து கிடப்பதையும் அவனது காது உட்பட தலையின் வலது பக்கமும் வலது கையும் சிதைந்து கிடப்பதையும் பார்க்க அவனது கண்கள் மறுத்தேவிட்டன. அவனது கண்களில் இருந்து கண்ணீர் பொங்கிப் பிரவாகிப்பதற்கென கண் இமைகளுடன் போராடிக்கொண்டிருந்தது……. இறுதியில் வெற்றிபெற்று பீறிட்டுப் பாய்ந்து அவனது தாடியை நனைத்துக்கொண்டு கீழ் நோக்கி வடிய ஆரம்பித்தது. அதுக்கென்ன தெரியும்? உஸாமாவின் உள்ளம் வேண்டிக்கொண்டதால்தானே வெளிவருகிறது

உஸாமாவின் இதயத்துடிப்பு படார்படார்என நெஞ்சுடன் வேகமாக மோதிக்கொண்டிருந்தது. கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தனஆனால் கைவிரல்களோ ஒருவனது கழுத்தை நெரிப்பதற்கு தயாராகும் விதத்தில் வட்டமாக வளைந்த நிலையில் காணப்பட்டன. இப்போது உஸாமா தனது ஆருயிர் நண்பனது உடலுக்கு உயிரூட்டுவதற்கும், தமது எதிரியின் உயிரை பலி எடுப்பதற்கும் ஆயத்தமான நிலையில் தோற்றமளித்தான். அவன் அதிக பதற்றத்துடன் காணப்பட்டான்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்எனக் கூறி அவன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டான்ஒரு நிமிடமேனும் அவ்விடத்தில் வீணாக்க விரும்பாமல் உடனே நண்பன் மீளாத்துயிர் கொண்டிருக்கும் அறையை மூடிவிட்டு வெளியேறினான். தனது மனைவியிடம் விசயத்தைக்கூறி, அவளையும் பிள்ளைகளையும் அவ்வறையின் பக்கம் போகவேண்டாம் என எச்சரித்தான் உஸாமா.

கதாஇப் (கதாஇப் இஸ்ஸுத்தீன் அல் கஸ்ஸாம் - அதாவது இஸ்ஸுத்தீன் அல் கஸ்ஸாம் படைப்பிரிவு. ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவு இதுதான்) இன் மறைவிடத்துக்கு தொலைபேசி அழைப்பு பறந்ததுஇஸ்ரேலிய இயல்பு வாழ்வில் ஒரு செயற்கைப் பூகம்பத்தை ஏற்படுத்திய, பலஸ்தீன போராட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் காட்டித்தந்த, அந்த ஜீவனின் குரல் ஓய்ந்த செய்தி கதாஇபுக்கு எத்திவைக்கப்பட்டது.

அதி நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி மிக நுட்பமாகத் திட்டமிடப்பட்ட இந்த நாச வேலையை இஸ்ரேல் புரிந்துள்ளது என கதாஇபுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அசம்பாவிதம் பற்றிய செய்தியை தமது மறு அறிவித்தல் வரும்வரை யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம் என கதாஇபின் மறைவிடத்திலிருந்து உஸாமாவுக்கு அறிவுறுத்தல் வந்தது.

உஸாமாவுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. சிலை போல் திகைத்து நின்றான். சுவரைப் பார்த்தான். நிலத்தைப் பார்த்தான். முகட்டைப் பார்த்தான். நாற்காலியைப் பார்த்தான்எத்திசையை அவன் நோக்கினாலும் தனது அருமை நண்பனின் புன் முறுவல் பூத்த முகமே அவனது கண்களுக்குள் நிழலாடிக்கொண்டிருந்தது. அவன் அப்படியே தன்னையும் அறியாமல் வீட்டின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த சாய்வு நாட்காலியில் அமர்ந்துகொண்டான்

அவனது கண்கள் பத்து நாட்கள் அழுது புலம்பிய ஒருவரது கண்களைப் போன்று சிவந்து காணப்பட்டனகவலையின் வடு காரணமாக கன்னம் வீங்கியிருந்தது. அடிக்கடி அவன் தனது கீழ் உதட்டினை பற்களால் கடித்துக்கொண்டான்.

அப்படியே இருக்கும் போது தனது மனக்கண்களின் கதவை யாரோ தட்டுவது போன்று உணர்ந்தான்….

பிஃர்ஸைத் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது இருவரும் ஒன்றாக வாழ்ந்த காலம். ஒரே வீட்டில் அறை எடுத்துத் தங்கிய காலம். இது சுமார் 10 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. அய்யாஸ் ஒரு சாதரண நண்பன் என்றால் உஸாமா இதை எப்போதோ மறந்திருப்பான். ஆனால் அல்லாஹ்வுக்காக இணைந்த உள்ளங்கள் ஆயிற்றேஎப்படி மறப்பது? தனக்கும் அய்யாஸுக்கும் முதல் முதலில் ஏற்பட்ட சந்திப்பை நோக்கி அவனது எண்ணங்கள் விரைந்தன….

அய்யாஷுடன் பல்கலைக் கழகத்தில் கூட்டாக இஸ்லாமியப் பணி புரிந்த காலத்தை மீட்டினான். யூதர்கள் இஸ்லாமிய பூமியான பலஸ்தீனை ஆக்கிரமித்தது பற்றி இருவரும் அடிக்கடி கதைப்பதுண்டு.

உஸாமா…! பலஸ்தீன் எங்களுடையது தானே. யூதர்களை விட அதில் எமக்குத்தானே அதிக உரிமையுண்டு..?” என அய்யாஷ் அடிக்கடி கூறுவார்.
யூதர்களின் இருதயத்தை வெடிக்கவைக்கும் சக்தியை எமக்கு அல்லாஹ்  தந்தால் அவர்களைத் துரத்தியடிப்பது இலகுவான காரியம் உஸாமா!! “ என்பார்.
ஆம் அய்யாஷ், நாம் முதலில் ஒன்றுபடவேண்டும், அப்போதுதான் அல்லாஹ்வின் உதவி எம்மைநாடி வரும்”  என உஸாமா பதில் கொடுப்பார்.

நாட்கள்  உருண்டோடினஇருவரும் பட்டம் பெற்று வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது. “உஸாமா..! எம்மை எதிர் நோக்கும் நாட்களில் செய்வதற்கென ஏதாவது திட்டம் உன்னிடம் உண்டா..?” என அய்யாஷ் ஒரு நாள் கேட்க,
 “ஏன் அப்படிக் கேட்கிறாய் எனக்கு விளங்கவில்லையே…!?”
 
அட.. ! இன்னும் சில நாட்களில் எமது படிப்பும் பரீட்சைகளும் முடிவடைந்துவிடும். அப்போது மூட்டை முடிச்சுகளை சுறுட்டிக்கொண்டு வீடு நோக்கி நடைபோட வேண்டி வரும். அந்த நாட்களைப் பற்றியே நான் கேட்கிறேன் உஸாமா!!”

.. அதையா நீ நினைத்து வருந்துகிறாய்..? உண்மையில் எனது எண்ணமும் இந்த நாட்களில் அதனையே சுற்றிக்கொண்டிருக்கிறது…” என உஸாமா பதில் கொடுத்தார்.

இருவரும் படிப்பை முடித்துவிட்டு பிரிந்து சென்றுவிட்டனர்….                       தொடரும்................ 

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

அகடெமி விருதுகள்

ஆரம்பம் முதல் இன்றுவரை திரைப்படத் தயாரிப்புத் துறையில் ஐக்கிய அமெரிக்காவே முன்னிலையில் இருந்து வருகின்றது. கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹொலிவூட் என்ற நகரே திரைப்பட உலகின் தலைநகராகக் கருதப்படுகின்றது.

Academy of Motion Picture Arts and Sciences (திரைப்படக் கலைகள், இயல்கள் என்பவற்றுக்கான அகடெமி) என்ற அமைப்பு 1927 மே மாதத்தில் ஹொலிவூட்டில் ஸ்தாபிக்கப்பட்டது. திரைப்படத் தொழிற் துறையில் கலாசார, கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றத்தை ஏற்படுத்துதல் அதன் பிரதான நோக்கமாக அமைந்தது. அத்தோடு திரைப்படத் தொழிலில் அரிய சாதனைகளைப் புரிவோரை அங்கீகரித்துப் பாராட்டுவதும் அதன் இன்னொரு நோக்கமாக இருந்தது.

இந்த ஸ்தாபனத்தின் தொழிற்பாடுகளுள் மிகவும் பிரசித்தமானது வருடம் தோறும் அது நடத்தும் அகெடமி விருதுகள்(Academy Awards) வழங்கும் நிகழ்ச்சியாகும். திரைப்பட உற்பத்தி, நடிப்பு ஆகிய துறைகளில் வருடந்தோறும்  25 வகையான தனியாள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு அகெடமி விருதுகள் வழங்கப்படுகின்றனஇன்று திரைப்படத்துறையில் அகடெமி விருது பெறுவது பெருஞ்சாதனையாகவும் பெருமைக்குரியதாகவும் கருதப்படுகின்றது.


முதலாவது அகடெமி விருதுகள் 1929 மே 16ம் திகதி வழங்கப்பட்டன.  1927 / 28 காலப்பிரிவில் உற்பத்திசெய்யப்பட்ட திரைப்படங்களே இவ்விருதுகளுக்காகக் கவனத்தில் எடுக்கப்பட்டன. முதல் தடவையாக அகடெமி விருது பெற்றவர்களுள் Emil Jannings(சிறந்த நடிகர்), Janet Gaynor(சிறந்த நடிகை), Frank Borzage(சிறந்த நெறிப்படுத்துனர்), என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். அவ்வருடத்தில் Wings  என்ற திரைப்படமே சிறந்த படைப்பாகத் தெரிவு செய்யப்பட்டது.

அகடெமியின் 2,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களே இரகசிய வாக்கெடுப்பின் மூலம் விருதுக்குரிய படத்தையும் ஆட்களையும் தெரிவுசெய்கின்றனர். வாக்கெடுப்பின் முடிவுகள் சுயாதீனமான கணக்காய்வு நிறுவனம் ஒன்றைக்கொண்டு அட்டவணைப்படுத்தப்பட்டு அதனடிப்படையில் தெரிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு ஒஸ்கார்’(Oscar) என்றழைக்கப்படும் தங்கமுலாம் பூசப்பட்ட சிறிய வெண்கலச் சிலை பரிசாக வழங்கப்படுகின்றது. Cedric Gibbons என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இச்சிலை George Stanly என்ற சிற்பியினால் வார்க்கப்பட்டது.
இது 34.3cm உயரமும் 3.9kg நிறையும் கொண்டது. 1931ம் ஆண்டிலேயே அதற்கு ஒஸ்கார்என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது 

அகடெமியின் நிர்வாகப் பணிப்பாளராக வந்த Margaret Herrick என்பவர் முதன் முதலாக இச்சிலையைக் கண்டபோது இது எனது மாமன் ஒஸ்காரைப் போல் இருக்கிறது என்று குறிப்பிட்டாராம். பின்னர் அப்பெயரே அதற்கு நிலைத்துவிட்டது. இப்போது அகடெமி விருதினை ஒஸ்கார் விருதுஎனவும் அழைக்கின்றனர்.

அகாடெமி விருதுகள்
 • சிறந்த நடிகருக்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
 • சிறந்த துணை நடிகருக்கான அகாடெமி விருது: 1936 - தற்போதுவரை
 • சிறந்த நடிகைக்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
 • சிறந்த துணை நடிகைக்கான அகாடெமி விருது: 1936 - தற்போதுவரை
 • சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாடெமி விருது: 2001 - தற்போதுவரை
 • சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாடெமி விருது: 1931 - தற்போதுவரை
 • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
 • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
 • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாடெமி விருது: 1948 - தற்போதுவரை
 • சிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
 • சிறந்த குறுந்திரைப்படத்திற்கான(சிறப்பு) அகாடெமி விருது: 1943 - தற்போதுவரை
 • சிறந்த குறுந்திரைப்படத்திற்கான(குறுங்கதை) அகாடெமி விருது: 1941 - தற்போதுவரை
 • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாடெமி விருது: 1935 - தற்போதுவரை
 • சிறந்த வேறு மொழி படத்திற்கான அகாடெமி விருது: 1947 -தற்போதுவரை
 • சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாடெமி விருது: 1931 - தற்போதுவரை
 • சிறந்த ஒப்பனைக்கான அகாடெமி விருது: 1981 - தற்போதுவரை
 • சிறந்த அசல் இசைக்கான அகாடெமி விருது: 1934 - தற்போதுவரை
 • சிறந்த அசல் பாட்டிற்கான அகாடெமி விருது:1934 - தற்போதுவரை
 • சிறந்த படத்திற்கான அகாடெமி விருது :1928 - தற்போதுவரை
 • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாடெமி விருது: 1963 - தற்போதுவரை
 • சிறந்த இசைக்கான அகாடெமி விருது: 1930 - தற்போதுவரை
 • சிறந்த திரைவண்ணத்திற்கான அகாடெமி விருது: 1939 - தற்போதுவரை
 • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
 • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடெமி விருது: 1940 - தற்போதுவரை

சிறப்பு அகாடெமி விருதுகள்
இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.
 • சிறப்பு அகாடெமி விருது: 1929 - தற்போதுவரை
 • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடெமி விருது: 1931 - தற்போதுவரை
 • கோர்டன் . சாயர் விருது: 1981 - தற்போதுவரை
 • ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போதுவரை
 • இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போதுவரை
  ** நன்றி : அரும்பு + விக்கிபீடியா.Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பூகம்பம் : பலஸ்தீன முஜாஹித் யஹ்யா அய்யாஸின் போராட்ட வரலாறு (பாகம்- 01)

அவர் ஒரு மறைவான ராணுவ மனிதன்


அறிமுகம்…..

மனித வரலாற்றில் அநேகமான நபிமார்களைத் தந்த பெருமை பலஸ்தீனுக்கே உரித்தானது. இஸ்லாத்தின் முதலாவது கிப்லாவும், மூன்றாவது புனிதஸ்தலமான அல் அக்ஸாவும் அங்கேதான் அமைந்துள்ளது. நபிமார்களான மூஸா, ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் பிரச்சாரத் தளமாக பலஸ்தீன் விளங்கியுள்ளதால் அது யூத கிறிஸ்தவர்களுக்கும் புனிதமானதே! இயற்கை வளங்களும், பசுமைச் செழிப்பும் மிக்க பலஸ்தீன் பலமுறை முஸ்லிம்களின் கையிலிருந்து பறிபோய் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. இறுதியாக பிரித்தானிய காலணித்துவவாதிகள் உஸ்மானிய கிலாபத்திற்குக் கீழிருந்த பலஸ்தீனைக் கைப்பற்றி அதனை யூதர்கள் ஆக்கிரமித்துக்கொள்ள வழி அமைத்துக் கொடுத்தார்கள். அங்கே இஸ்ரேல் என்னும் முன் பின் தெரியாத ஒரு நாடு ஈன்றெடுக்கப்பட்டது.

1948ல் இஸ்ரேல் உருவானது முதல் பலஸ்தீனில் முஸ்லிம் சிறுவர்களதும், முதியோர்களதும், தாய்மார்களதும், இளைஞர்களதும் இரத்தம் ஈவிரக்கமின்றி ஓட்டப்பட்டே வந்துள்ளது. இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்களான பென் குரியோன்,மெனாசெம் பெகின்,இஸ்ஹாக் ரபின்,ஷிமோன் பெரஸ், ஏரியல் ஷெரோன் போன்றவர்கள் கூட ராணுவத்திலும், பயங்கரவாதக் குழுக்களிலும் இருந்த போது முஸ்லிம்களது இரத்தக் கறைகளை தங்களது கைகளில் பூசிக் கொண்டவர்கள்தாம்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பலஸ்தீனில் உதயமான மாவீரர்களுள் யஹ்யா அய்யாஸ் இரு காரணங்களுக்காக பிரதான இடத்தை வகிக்கின்றார். ஒன்று அவர் இஸ்லாமிய வழிமுறைகளைப் பின்பற்றிப் போராடியது. அடுத்தது, தற்கொலைத் தாக்குதல், குண்டு பொருத்தப்பட்ட வாகனங்களை வெடிக்கவைத்தல் போன்ற யுத்த முறைகளை (MODUS OPERANDI) முதன் முதலில் அறிமுகப்படுத்தியமை. இங்கே தற்கொலைத் தாக்குதல் இஸ்லாத்தில் கூடுமா? என்ற சர்ச்சை எழுகின்றது. அல்லாமா யூஸுப் அல் கர்ழாவி போன்ற உலகின் தலை சிறந்த உலமாக்கள், பலஸ்தீன் ஜிஹாதில் தற்கொலைத் தாக்குதல் கூடுமென ஃபத்வா வழங்கியுள்ளனர்.

ஒரு சாதாரண விவசாயிக்கு மகனாகப் பிறந்த அய்யாஷ் அபார திறமைசாலியாக காணப்பட்டார். ரசாயனப் பொறியியல் துறையில் பயின்று இஸ்ரேலிய ராணுவத்தினரையே ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு குண்டு தயாரிப்பதிலும், திட்டமிடுவதிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். முப்பது வயதையும் எட்டாத இந்த இளைஞன் யூதர்களின் உள்ளங்கள் வெடிக்குமளவு அவற்றுள் பீதியையும், அச்சத்தையும் உண்டுபண்ணினார். அதுவரை காலமும் சுற்றுப்புறத்தில் இருந்த வந்த யூதப் எதிர்ப்புப் போராட்டத்தை இஸ்ரேலின் இதயத்திற்கே எடுத்துச் சென்ற பெருமையும் அவரையே சாரும். ஹமாஸ் இயக்கம் அய்யாஷைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர் ஒரு மறைவான ராணுவ மனிதன்என வர்ணித்தது.

தமக்கு மத்தியில் மாறுவேடத்தில் வாழ்ந்துவந்த அவரைத் தேடிப் பிடிக்க இஸ்ரேலுக்கு நான்கு வருடங்கள் பிடித்தன. இதற்காக அது பெருந்தொகைப் பணத்தையும் செலவிட நேர்ந்தது.

முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருந்த இந்த கிராமத்து இளைஞன் தனது வாழ்வில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அன்றி வேறு எந்த எதிர்பார்ப்புக்களையும் வைத்திருக்கவில்லை. அவரது நண்பர்களின் கூற்றுப்படி அய்யாஷ் ஒரு அசாதாரண ஈமான் தாரியாகக் காணப்பட்டார். தனது மரணம் நெருங்கி வந்து கொண்டிருப்பதாக அவர் கொலை செய்யப்பட்ட நாளன்று ஸுபுஹின் பின் தனது உற்ற நண்பனான உஸாமா ஹமாதிடம் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கின் அதி நவீன ராணுவச் சக்தியான இஸ்ரேலுக்கு எதிராக துணிவுடன் எழுந்து நின்ற இந்த உத்தம தியாகியை, முஸ்லிம் தியாகியை முஸ்லிம் உலகம் மறக்கக் கூடாது. அவரது நுட்பங்கள், திட்டமிடல்,அர்ப்பணம்,போர்த்தந்திரங்கள் ஆகியவற்றில் அநியாயக் காரர்களின் அழுங்குப் பிடியிலிருந்து விடுபட விரும்பும் ஒவ்வொரு இளைஞனும், யுவதியும், வயோதிபரும் கற்றுக்கொள்ள நிறையப் படிப்பினகள் உள்ளன. பெற்றோர் இந்த இலட்சிய மனிதனை தமது பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யவேண்டும்.

அய்யாஸ் மறைந்து வாழ்ந்த ஒரு மனிதன் என்பதனால் அவரது தியாக வாழ்வும், பணிகளும் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகவே வெளிவந்துள்ளன என்பதுவும் யூதர்கள் பலஸ்தீனில் புரிந்துவந்துள்ள அராஜகங்களை எடுத்துக்கூறுவதோடு அவர்கள் மத்தியில் காணப்படும் உட்பிளவுகளை அம்பலப்படுத்துவதும்தான் இந்த ஆக்கத்தின் நோக்கங்களில் முக்கியமானதாகும்.

இதில் ஆங்காங்கே கையாளப்படும் குர்ஆன் வசனங்கள் யூதர்கள் பற்றி அருளப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் சாட்டப்பட்டுள்ள யூதர்கள் சியோனிஸ இயக்கத்தைச் சார்ந்த இனவாதிகளே. இவர்களே இஸ்ரேலில் பலத்துடனும் அரசியல் செல்வாக்குடனும் காணப்படுகின்றனர். அதேவேளை யூதர்களுக்கு மத்தியில் நல்ல மனிதர்களும் உள்ளனர். அவர்கள் யூதர்களுக்கு உள்ளது போன்றே பலஸ்தீனியர்களுக்கும் உரிமை உள்ளன எனபதை வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு மத்தியில் முஃமின்கள் எனப்படும் விசுவாசிகளும் உள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
(ஆலு இம்ரான்:110)

இச்சிறிய முயற்சி இலட்சியமுள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் திடவுறுதியை ஏற்படுத்தவேண்டும். அல்லாஹ்வின் சேனைக்கு முன் யூத சக்திகள்  விரைவிலோ அல்லது காலம் தாழ்த்தியோ தவிடு பொடி ஆகிவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். அய்யாஸ் போன்ற  சுதந்திரப் போராளிகளை மேலும் உருவாக்க தூண்டுதலாக அமைய வேண்டும் என அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன். அவனின் உதவியின்றி எதுவும் ஆகாது.

அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றிகொள்வோர் ஒருவருமில்லை! உங்களை அவன் கைவிட்டுவிட்டாலோ அதற்குப் பின் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்?
(
ஆலு இம்ரான் : 160)

தொடரும்……...

*** பலஸ்தீனின் முஜாஹித் யஹ்யா அய்யாஸ் என்ற மாவீரனின் போராட்ட வரலாறை உள்ளடக்கிய ”பூகம்பம்” என்ற நூல் எனது நண்பன் ஒருவனால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 178 பக்கங்கள் கொண்ட இந்நூலை ஒரே நாளில் அதுவும் 2 - 3 மணித்தியாங்களுக்குள் கண்ணீர் மல்க நான் வாசித்து முடித்தேன். அந்தளவு சுவாரஸ்யமாகவும்,ஆர்வமாகவும்,கவரக்கூடியதாகவும் இருந்த மாவீரன் யஹ்யா அய்யாஸின் போராட்ட வரலாறினை எனது நற்புகளோடு பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. இதனை நான் ஒவ்வொரு வாரமும் தொடராக எழுத மிகுந்த ஆசையோடும் ஆர்வத்தோடும் காத்திருக்கின்றேன்…


இது பலஸ்தீனின் முஜாஹித் யஹ்யா அய்யாஸ் என்ற மாவீரனின் போராட்ட வரலாறை வெளிப்படுத்தும் வண்ணம் M.ஆஸிம் அலவி அவர்களால் எழுதப்பட்டு  இஸ்லாமிக் புBக் ஹவுஸ் இனால் புத்தகமாக வெளியிடப்பட்ட பூகம்பம் என்ற தலைப்பில் அமைந்த புத்தகத்தின் நேரடிப் பிரதியாகும்.

எழுத்தாளர் :  M.ஆஸிம் அலவி
வெளியீடு :   இஸ்லாமிக் புBக் ஹவுஸ்


Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS