RSS
என்னுள்ளே.... என்னுள்ளே. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்னுள்ளே.... என்னுள்ளே. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அவர்கள் அடிக்கவில்லை இவர்கள் கொடுத்தார்கள்.

வாற bats man எல்லாம் 100 அடிக்குறானுங்க.
Bowlers எல்லாம் விக்கட் எடுக்குறானுங்க… எல்லாரும் அடிச்சு பழகிக்குறானுங்க.
என்ன ஆச்சு நம்ம அணிக்கு.
உலகக் கிண்ணத் தொடருக்கு முதல் இலங்கை அணியினை முற்றாக மறுசீரமைக்க வேண்டியது மிக முக்கிய தேவை.
டில்ஹார ஃபெர்னாண்டோ, மஹ்ரூஃப், ஜீவன் மெண்டிஸ் போன்றவர்கள் மீண்டும் அணிக்கு வரவேண்டும்.
*****************************************

1996ம் ஆண்டு முதல் நான் பார்த்துவரும் இலங்கை கிரிக்கட் அணியின் மிகக் கேவலமான தொடர் இது. அதிலும் மிகக் கேவலமாக ஆடிய போட்டி இன்றைய போட்டி. இந்தத் தொடர் முழுதும் இந்தியர்கள் சிறப்பாக ஆடினார்கள் என்பதை விட இலங்கை அணியினர் ஓட்டங்களையும் விக்கட்டுக்களையும் வாரி வழங்கினர் என்பதே உண்மை.

பந்துவீச்சு எதிரணியினரை மிரட்டவில்லை.
துடுப்பாட்டத்தில் அதிரடி இல்லை.
களத்தடுப்பில் சுறு சுறுப்பு இல்லை.
ஆக மொத்தத்தில் அவர்கள் அடிக்கவில்லை இவர்கள் கொடுத்தார்கள்.

இந்த தொடர் முழுவதும் 100 அடித்த இந்திய வீரர்கள் அனைவருக்கும் இலங்கை வீரர்கள் 2, 3 வாய்புகள் வழங்கியிருந்தனர். ஏகப்பட்ட பிடிகளைத் தவற விட்டனர். இன்றைய் போட்டியில் கூட ரோஹித் சர்மா 4 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை இலகுவான பிடி ஒன்றினை திசர தவற விட்டதன் மூலம் இலக்கு 404 ஆனது.

இன்று ரோஹித் சர்மாவின் 4 பிடியெடுப்பு வாய்புகளைக் கோட்டை விட்டனர். இப்படி விட்டால் 200 என்ன 300 அடிப்பதுகூட பெரியவிடையமல்ல.(ரோஹித் சர்மாவின் திறமையினை குறைத்துமதிப்பிடவில்லை ஆனால் இதே ரோஹித் சர்மா அவுஸ்திரேலிய, இங்கிலாந்து மண்ணில் 100 ஓட்டங்கள் பெறட்டும் அவர் திறமையானவர் என ஒத்துக்கொள்கின்றேன்.)


இந்த தொடரில் இலங்கையின் மோசமான ஆட்டத்திற்கு இலங்கை கிரிக்கட் நிருவாகமே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். அவசரமான தொடருக்கு பணத்தை வாங்கொக்கிக்கொண்டு ஒத்துக்கொண்ட கிரிக்கட் நிருவாகம் உண்மையிலேயே தொடருக்காக மட்டும் பணத்தைப் பெற்றுக்கொண்டதா இல்லை தொடரினை மொத்தமாக தாரைவார்ப்பதற்கும் சேர்த்து பெற்றுக்கொண்டனரா என எண்ணத்தோணுது.

இந்தத் தொடருக்கு ஒத்துக்கொண்டதன் மூலம் இலங்கை கிரிக்கட் நிருவாகமானது…………..

இலங்கை கிரிக்கட்டுக்கு கேவலாமான வரலாற்றுப் பதிவினை உருவாக்கி விட்டனர்.
சிரேஸ்ட வீரர்களின் முறுகளையும் அதிருப்தியையும் சம்பாதித்துக்கொண்டனர்.
சிறப்பான தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.
வெற்றிகரமான ஆண்டாக இருந்த இவ்வாண்டை படுதோல்வியோடு முடித்து வைத்துவிட்டனர்.
இலங்கை வீரர்களினதும் ரசிகர்களினதும் உளவியலில் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டனர்.


இந்தத் தொடர் முழுவதும் இலங்கை அணியினரின் ஆட்டம் சிம்பாப்வே கென்யா அணியினரின் ஆட்டத்தை விடவும் படுமோசமாக இருக்கிறது.
நுவன் குலசேகர, அஜந்த மெண்டிஸ் ஆகியவர்களின் சரக்குத் தீர்ந்தாச்சு இனியும் அவர்கள் அணிக்கு தேவையில்லை. குசல் பெரேரா ??????
இலங்கை திருநாட்டில் குறைந்தபட்சம் 140km/h வேகத்தில் பந்துவீசும் ஒருவர் கூடவா இன்னும் பிறக்கவில்லை…?

பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு அனைத்திலும் இலங்கை அணி இந்தத் தொடர் முழுவதும் படு மோசம். அணி வீரர்கள் சோர்ந்த நிலையில் ஆடுகின்றனர். வழமையான இலங்கை அணியின் தரத்தில் 10% கூட கிடையாது.

மார்வன், வாஸ் இருவரின் பயிற்றுவிப்பும் கேள்விக்குறியாகி நிற்கின்றது. சமகாலத்தில் விளையாடிய வீரர்களை பயிற்றுவிப்பாளர்களாக அணியில் வைத்திருப்பது அணியின் திறனில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் அது சிறந்ததொரு வெளியீட்டினை(Out put) தராது என்பதும் எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அதுவே இப்பொழுது நடைபெறுகிறது. இலங்கை அணியினை உலக தரத்திற்குக் கொண்டுவருவதற்கான ஆற்றல், நுட்பம் மார்வனிடம் இருப்பதாக நான் நம்பவில்லை.


இந்தத் தொடர் இலங்கை கிரிக்கட்டிற்கும், கிரிக்கட் நிருவாகத்திற்கும் பல படிப்பினைகளைத் தந்திருப்பதோடு உடனடியானதும் அதிரடியானதுமான பல மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய நிலைமையினை வலிந்து உருவாக்கிவிட்டிருக்கின்றது என்பதே யதார்த்தம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..

ஊரு விட்டு வெளியூர் வந்து குடும்பத்தை பிரிந்திருக்கும் போதுதான் குடும்பத்தின் மீது பாசம் பொங்கும். குறிப்பாக தாய் மீது பாசம் பொங்கிப் பிரவாகிக்கும் தாய் நமக்காக செய்யும் தியாகங்கள் பட்ட கஸ்டங்கள் நினைவு வரும். தாயைப் பிரிந்து வெளியூரில் இருக்கும்போது தாயைப் பற்றி கவிதை எழுதச் சொன்னால் தாயின் பெருமையை கட்டுரையில் வடிக்கச் சொன்னால் பக்கம் பக்கமாக கவிதையும், புத்தகம் புத்தகமாக கட்டுரையும் வரும். தாயைக் கையில் தாங்கனும் போலிருக்கும், தாயை உக்கார வைத்து பணிவிடை பல புரியத் தோணும். அதுவே ஊருக்கு வந்து தாயருகில் இருக்கும்போது எல்லாம் தலைகீழாக மாறிவிடும். தாய் கேட்கும் சிறு உதவிகூட பல நேரங்களில் உதாசீணப்படுத்தப்படும்... இதுதான் இன்று பலரது நிலை.

தினமும் 3 வேளையும் தாய் வடித்துக்கொட்டும் உணவை அவருக்கு உணவு இருக்குமா இல்லையா என்றுகூட யோசியாது பானை பானையாய்த் தின்றுவிட்டு பிள்ளைகளும் கணவனும் சென்ற பின் மிஞ்சுவது தனது கால் வயிற்றுக்கும் போதாத நிலையில் தனக்கு போதுமாக்கிக் கொண்டு அல்லது பகல் சாப்பாட்டில் மிஞ்சிய கொஞ்ச உணவையும் காலைச் சாப்பாட்டில் மிஞ்சியதையும் (பகல் சமைத்த சோற்றோடு காலையில் சமைத்த இடியப்பம்/ரொட்டியையும்) கலந்து உண்டுவிட்டு முக மலர்வோடு இருப்பார்.. தனக்கு உணவு போதாமல் விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது உணவை பிள்ளைகளும் கணவரும் தாராளாமாகச் சாப்பிட்டுவிட்டார்கள் என்ற மகிழ்ச்சிதான் அவரது வெளிப்பாடாக இருக்கும்.

இப்படிப் பல பெருமைகளைத் தியாகங்களைக் கொண்டா தாய்மாரின் மீதான பிள்ளைகளின் பாசம் இன்று ஃபேஸ்புக் ஸ்டேடசோடு மட்டுமே நின்றுவிடுவது துரதிஸ்ட்டம்.

ஐயிரண்டு திங்கள் அல்லல் பட்டு அயராது பாதுகாத்து எம்மைப் பெற்ற தாயை இன்றைய தினத்திலாவது நினைவுகொள்வோம்,,

எனது  நட்பிலுள்ள தாய்மார்களுக்கும் நட்புகளின் தாய்மாருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..

 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நகரத்துப் பையன் Vs கிராமத்துப்புப் பையன்

நகரத்துப் பையன் Vs கிராமத்துப்புப் பையன்
&
நகரத்துப் பெற்றோர் Vs கிராமத்துப் பெற்றோர்.

 காலையில் எழுந்து தயாராகி ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ் போட்டுக்கொண்டு,தோளில் துடுப்பு மட்டையைப் கொழுவிகொண்டு பெற்றோர் ஆசியோடு,அவர்களின் வழியனுப்புதலோடு கிரவ்ண்டுக்கு போறவன் - நகரத்துப் பையன்

எப்படா அப்பா வெளியில போவாரு..? எப்படா அம்மா அடுப்படியில பிசியாவானு காத்திருந்து சோர்ட்ஸுக்கு மேலால டவுசர போட்டு அல்லது ட்ரவுசருக்கு மேலால சாரன உடுத்தி மறைச்சுக்கிட்டு வீட்டின் பின்புறமா/வாசலில் எங்கேயோ ஒழித்துவைத்த துடுப்பு மட்டை, விக்கட்டுகளை மதிலுக்கு மேலால் தூக்கிப் போட்டு திருடனைப்போல் ஒழிந்து ஒழிந்து கிரவுண்டுக்குப் போனால் அவன் - கிராமத்துப் பையன்

கிரவுண்டில் மகன் விளையாடும் அழகைக் கண்டு பெருமைப்பட்டு கரகோசம் செய்து உட்சாகப்படுத்தி மகிழ்ந்தால் அது - நகரத்துப் பெற்றோர்...

கிரவுண்டில் விளையாடிக்கொண்டிருக்கும் மகனை தேடிவந்து கன்னத்தில் ரெண்டு விட்டு, காதைத் திருகி தர தரவென இழுத்துச் சென்றால் அது - கிராமத்துப் பெற்றோர்...

சில நூறு கிலோமீற்றர் நிலப்பரப்பு வித்தியாசத்தில் பெற்றோரின் மனங்களில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்......

குறிப்பு : எனது பெற்றோர் இவ்விடையத்தில் எனக்கு பூரண சுதந்திரம் தந்திருந்தமை நான் பெற்ற பாக்கியம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

--- மலரும் நினைவுகள் ----

அல்லி அர்ஜுணா படத்திலிருந்து  jaanaki, Srinivas பாடிய

எந்தன் நெஞ்சில்ல் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்...
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே.....

பாடல் ஒலிக்கிறது என் மனதிலும் பாடசாலை சம்பவமொன்று நினைவு வருகிறது.

இந்தப் பாடலை O/l படிக்கும் போது பாடசாலையில் ஒரு நாள் எதேச்சையாக பாடிக்கொண்டு போனேன்.  என் பின்னால் வந்த மாணவி ஒருத்தி சீ... போடா என்று
வெட்கப்படுக்கொண்டே ஓடினாள் யாரென்று திரும்பிப் பார்த்தால் என் நண்பி பாஹிமா... ஏன் அப்படி வெட்கப்பட்டாள் அவள்? என்று யோசித்த போதுதான் புரிந்தது.
 நான் பாடிய பாடல் வரிகள்தான் காரணம் என்று

எந்தன் நெஞ்சில்ல் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்... என்ற வரிகள் அவளுக்கு

எந்தன் நெஞ்சில் பாஹிமா
உன் எண்ணம் பாஹிமா

என்று கேட்டிருக்கிறது...... ஹ்ம்ம்ம்ம்ம்

அதுக்கப்புறம் விடுவமா நாங்க... பாஹிமாவை எங்க பார்த்தாலும் எந்தன் நெஞ்சில்ல் பாஹிமா
உன் எண்ணம் பாஹிமாதான்..... அவளும் முறைச்சிட்டு ஒரே ஓட்டமாய் ஓடிடுவாள்...... ஹ்ம்ம் அது ஒரு காலம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வந்தாள் - சென்றாள் - மீண்டும் இறந்துவந்தாள்



அவள் ஒரு அழகிய தேவதை…… பார்ப்பவரை கவர்ந்திழுக்க தேவையான அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற அழகி அவள். பாடசாலை விடுமுறை என்பதால் தன் சொந்த ஊரான சாய்ந்தமருதில் இருந்து எங்கள் ஊரிலுள்ள அவளது உறவினர்களான எங்கள் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தாள். அவர்களோடு எங்கள் வீட்டிற்கும் வந்திருந்தாள்…. அளவாகப் பேசினாள் ஆனால் அழகாகப் பேசினாள்எங்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாள்; சென்றுவிட்டாள்

சரியாக 2 வாரங்கள்தான் போயிருக்கும் அவள் மீண்டும் வந்தாள்இல்லை இல்லை கொண்டுவரப்பட்டாள்.. அவளது குடும்பத்தைச் சேர்ந்த 5 ஜனாசாக்களோடு ஆறாவதாய் அவளும் உழவு இயந்திரப் பெட்டியில் கொண்டுவரப்பட்டாள்….
.
அந்த அழகிய முகம் முழுவதும் சேறு….. அழகாய் அளவாய்ப் பேசிய வாய் நிறைய கடல் மணல், அற்புத அபிநயங்கள் காட்டிய கைகளிலும் உடலிலும் காயங்கள். ஆக மொத்தத்தில் பெளர்ணமி நிலவு அன்று அமாவாசையாய்க் காட்சி தந்தது. சுனாமியின் கோரப் பிடியில் அந்த தேவதையும் சிக்கிக்கொண்டாள். சிதைந்து போனாள்….

அன்று அழுதன என் கண்கள்பலர் மத்தியில் வெட்கமின்றி அழுதன என் கண்கள்..

அவள் பிரிந்து இன்றுடன் 9 வருடம் ஆனபோதும் இன்னும் நினைவில் இருக்கிறது அவள் முகம்.

எங்கோ இருந்து வந்து ஒரு நாள் பழகிய யாரோ ஒரு உறவுக்காக எனக்கே அந்த வலி அந்த கவலையென்றால்….

இந்தச் சுனாமியால் பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், சகோதரனை, சகோதரியை, உறவுகளை இழந்த உள்ளங்கள் என்ன பாடுபட்டிருக்கும்? என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கும்?
உணர முடிகிறது உணரமட்டும்தான் முடிகிறது.

இந்த சுனாமியில் உயிர்நீத்த அத்தனை உயிர்களையும் இறைவன் பொருந்திக்கொள்ளவேண்டும்….

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஹலால் !!!!!!!!!!!!



ஹலால் வாபஸ் பெறப்பட்டதாக அறிந்த உடனே எழுந்து  கோபம் கவலையின் வெளிப்படுத்தியிருந்தேன்.
அதுவரையில் ரிஸ்வி முஃப்தி அவர்களின் உரையை கேட்டிருக்கவீல்லை. ஆனால் அவரின் உரையைக் கேட்டதன் பின்னர் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டேன்.

ஹலால் உணவு உற்பத்தியை உறுதிப்படுத்தும் நடவடிக்கை வாபஸ் பெறப்படவில்லை மாறாக ஹலால் இலச்சினை
பொறிப்பதைத்தான் வாபஸ் பெற்றிருக்கிறார்கள் அதுவும் முன்னர் கட்டாயமாக்கப்படிருந்த ஹலால் இலச்சினை இப்போது
விருப்பத் தேர்வாக்கப்பட்டிருக்கிறது(Optional) அதாவது விரும்பியவர்கள் பொறிக்கலாம் விருப்பம் இல்லாதவர்கள் விட்டுடலாம்.
ஆனால் ஜம்மியதுல் உலமாவின் ஹலால் ஸிஸ்ட்டம் தொடர்ந்தும் இருக்கும். ஹலால் பொருட்களை முஸ்லிம்கள் பிரித்தறிய ஜம்மியதுல் உலமாவின்
இணையத்தளம், ஹொட்லைன், எஸ்.எம்.எஸ் மூலாமாக அறிவுறுத்தப்படும். இதற்காகவென ஒரு தனி தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்படும்.

பொது பலசேனாவின் மற்றுமொரு குற்றச்சாட்டு ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலமாக சிங்களவர்களிடம் இருந்து பெறப்படும் கோடிக்கணக்கான
பணம் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது, தலிபான் அல்குவைதாவுக்கு வழங்கப்படுகின்றது என்ற மொக்குத் தனமா குற்றச்சாட்டிற்கும்
சேறு பூசும் விதமாக வழமையான கட்டண அறவீட்டையும் கைவிட்டு இலவசமாகவே அந்த நடவடிக்கை தொடரப்போகிறது.
இதற்குரிய செலவை ஏற்றுக்கொள்ள முஸ்லிம் தனவந்தகர்களும் முஸ்லிம் வர்த்தகர்களும் முன்வந்திருக்கிறார்கள்.
இதன்மூலம் பொது பலசேனாவின் இந்த குற்றச்சாட்டும் தவிடுபொடியாக்கப்படவுள்ளது.

இந்த ஹலால் சான்றிதழ் விடையத்தில் ஜம்மியதுல் உலமா சபை படிப்படியான நடவைக்கைகளையும் கைக்கொண்டிருக்கின்றது.
முதலில் 70:30 முறைமை அதாவது ஒரு பொளின் 70% மானவற்றிற்கு ஹலால் சான்றிதழ் பொறிப்பதில்லை,. 30% ஆனவற்றிற்கு ஹலால் சான்றிதழ் பொறிப்பது.
அது நடைமுறைச் சாத்தியம் குறைவானது என்பதால் அடுத்த கட்டமாக அரசாங்கத்திடம் இதனைப் பொறுப்பெடுக்கச் சொல்வது. அதனை அராசங்கம் நிராகரித்தது.
எனவே எடுக்கக் கூடிய இறுதியானதும் சிறந்ததுமான முடிவான இந்த முடிவுக்கு ஜம்மியதுல் உலமா சபை முன்வந்திருக்கின்றது.

பொது பலசேனாவின் நோக்கம் ஹலாலை அகற்றுவது என்பதைவிட முஸ்லிம் சிங்கள இனக் கலவரத்தை தூண்டுவதே அவர்களின் முக்கியமான
இலக்காக இருந்தது. அது இந்த முடிவின் மூலம் இன்று முறியடிக்கப்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஏற்றுமதியாளர்களீன் வேண்டுகோளிற்கு இணங்க ஹலால் சான்றிதழ் வழமைபோன்று
வழங்கப்படும். உள்நாட்டுச் சந்தையில் ஹலால் முத்திரை பதிக்கப்பட்ட பொருட்களை விட்கலாம் விட்காமல் விடலாம். ஆனால் எது ஹலால்
எது ஹறாம் என்பதை முன்னர் ஹலால் முத்திரை மூலம் அறியத்தந்த ஜம்மியதுல் உலமா இனி அதை அவர்களின் இணையதளம், ஹொட்லைன், எஸ்.எம்,எஸ்
மூலமாக, பள்ளிவாசல்களின் மூலமாக அறிவிக்கவுள்ளது. அவ்வளவுதான் மாற்றம். எனவே தொடர்ந்தும் ஹலால் உணவுகளை உறுதிப்படுத்தும் ஜம்மியதுல் உலமாவின்
பணி தொடர்ந்தும் நடைபெறும்.

”எப்படி லோகோவைப் பார்த்து வாங்குவதை மக்களுக்கு நாங்கதான் அறிமுகம்செய்தமோ
அதேபோல லோகோ இல்லாமலும் இதை நீங்க அடையாளம் காண்பதற்கு  இன்ஸா அலாஹ் நாங்களே உங்களுக்கு வழிகாட்டுவோம்”ரிஸ்வி முஃப்தி

ரிஸ்வி முஃப்தியின் கருத்தப்படி பெளத்த பிக்குகளுடன் கடந்த காலங்களில் இடம்பெற்றா ஹலால் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்தைகளின் போது பொது பலசேனா மட்டுமல்லாது
ஏனைய பிக்குகளும் பெளதர்களும் ஹலால் பொருட்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார்கள் என்பது புலனாகின்றது. எனவே ஹலால் விடையத்தில் இந்த முடிவு எடுக்கப்படாவிட்டிருந்தால்
பொது பலசேனாவிடமிருந்து மட்டுமல்ல ஏனைய பெளதர்களிடம் இருந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியிருந்திருக்கும்.

 ஆக. எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் கொஞ்சம் இறங்கி வந்து எடுக்கப்படக்கூடிய ஒரு சிறந்த முடிவே எடுக்கப்பட்டுள்ளதாக இதனை என்னால் பார்க்க முடிகிறது.

சரி இனிவரும் காலங்களில் பொது பலசேனாவின் அடுத்தகட்ட அட்டூழியங்களை ஜம்மியதுல் உலமா சபை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் அவர்களுக்கும்
எங்களுக்கும் இருக்கப் போகும் சவால். இன்ஸா அல்லாஹ் பார்ரகலாம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வேர்ல்ட் கப் - சோக கீதம்










போ போ போ நீ கப்ப கொண்டு போ
போ போ போ எனக்கு கப்பு வேணாம் போ
எனக்கு ஒன்னும் கவலை இல்ல போடா சமி போ
நீ என்ன வேண்னாலும் ஆட்டம் போடு சோகமில்ல போ
போ போ போ நீ கப்ப கொண்டு போ
போ போ போ எனக்கு கப்பு வேணாம் போ

அடுத்த வேர்ல்டுகப்பிலும் ஃபைனல்
வரத்தான் போறோம் பார்மகனே
இலங்கை போல கிரிக்கட் ஆட எவரும் இல்ல
சொல்லப் போற நீதானே நீதானே
வெஸ்டிண்டீஸ் நீயே கப்பத் தூக்கிட்டியே
எதிர் பாராத நேரம் ஃபோர்மாகி நீயும்வெண்டுட்டியே.

போ போ போ நீ கப்ப கொண்டு போ
போ போ போ எனக்கு கப்பு வேணாம் போ

 ஆண்டவனே எங்கள் அணியில் என்ன குறை கூறு
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ள நீரு
ஓய்ந்திடாமலே  நான்கு ஃபைனல் வந்தோம்
மாறிடாமலே நான்கிலும் தோல்வியைத் தழுவினோம்
கண்டவனெல்லாம் கூடி கேலி பேசுறான்
ஓடி ஒழிஞ்சவனெல்லாம் நக்கல் பண்ணுறான்

போ போ போ
சமி நீ நாட்டைவிடுப் போ
போ போ போ
நீ எக்கேடோ கெட்டுப் போ

ஓஓஓஓஒ
மூன்று முறை  தோற்றும் அழுததில்லை நானும்
இம்முறை தோற்றதால் நான் அழுவதென்ன நியாயம்
அணி பலமாக இருந்ததினால் கிண்ணம் நமெக்கென்று நானும் நம்பினேன்
வழமைபோல் அணி சொதப்பிடவே சாகப் பார்க்கிறேன்
கிண்ணம் வெல்லாமல் போனதினால் போச்சு நிம்மதி
நான்காம் முறையும் கிண்ணம் கிடைக்கலையே
எல்லாம் நம்விதி நம்விதி

எனக்கு ஒன்னும் கவலை இல்ல போடா சமி போ
நீ என்ன வேண்னாலும் ஆட்டம் போடு சோகமில்ல போ

போ போ போ
நீ கப்பைத் தூக்கிப் போ
போ போ போ
எங்களுக்கு அதிஷ்டமில்ல போ

அடுத்த வேர்ல்டுகப்பிலும் ஃபைனல்
வரத்தான் போறோம் பார்மகனே

இலங்கை போல கிரிக்கட் ஆட எவரும் இல்ல
சொல்லப் போற நீதானே நீதானே

வெஸ்டிண்டீஸ் நீயே கப்பத் தூக்கிட்டியே….
சொல்லாமக் கொல்லாமா எதிர் பாராத நேரம்
ஃபோர்மாகி அடிச்சிட்டியே..

போ போ போ

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

---------இதுவும் கடந்துபோகும்---------



சொல்றதுக்கு எதுவுமே இல்லைங்க…. குறித்த நாளில் சிறப்பாக விளையாடிய அணி இறுதியில் வென்றது. அது இறுதிப் போட்டியாக இருந்ததும் எமது இலங்கை அணியாக இல்லாது விட்டதும் எமக்கு வேதனைதான்…

தொடர்ச்சியாக 4 உலகக் கிண்ண இறுதிப்போட்டிகள் வருவதற்கு தனித்தன்மையான / அதீத திறமை வேண்டும். அந்த இறுதிப்போட்டிகளில் வெல்வதற்கு கொஞ்சம் அதிர்ஷ்ட்டமும் வேண்டும்…. எமக்கு கிண்ணம் வெல்லும் திறமையும் இருந்தது அதனை வெல்ல முழுத்தகுதியும் இருந்தது.
ஆனால் அதிர்ஷ்ட்டம்தான் இதுவரை கிட்டவில்லை.

உலகக் கிண்ணம் எனும் என் ஆசை, கனவு, பிரார்த்தனை எல்லாம் 4வது முறையும் தவிடு பொடியானதில் எனக்கு மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது.
எவளவோ ஏமாற்றங்கள் கண்ட மனது என்றாலும் இந்த மாதிரியான ஏமாற்றங்கள் ஏற்படுத்தும் வலி பாரியதாகவே இருக்கின்றது.
கடந்த தோல்விகளைவிட இந்தத் தோல்வி சொந்த மண்ணில், சொந்த நாட்டு ரசிகர்களின் முன்னால் பெறப்பட்ட இந்தத் தோல்வி கொடுமையானது.
ஆரம்பச் சுற்றுடனே வெளியேறியிருந்தால் கூட இவ்வளவு கவலை வந்திருக்குமா என்பது சந்தேகமே.

இலங்கை அணியின் தோல்வியை கிரிக்கட் ரசிகனாக ஏற்றுக்கொள்கிறேன்…..ஆனால் இலங்கை கிரிக்கட்டின் ரசிகனாக இந்தத் தோல்வியை மனம் ஏற்க மறுக்கிறது.

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் சொல்லவரவில்லை, சொல்லியும் பயனில்லை. எம்மவர்களின் பிழைகள் முதல் 10 ஓவர்களில் 32 ஓட்டங்களைக் கொடுத்துவிட்டு மீதிப் பத்து ஓவர்களில் 105 ஓட்டம் கொடுத்த போது எமது வெற்றியின் முதல் படி சறுக்கியது, மலிங்க 4 ஓவர்களில் 54 ஓட்டம் கொடுத்தபோது இரண்டாவது படி சறுக்கியது, டில்சானின் டக் அவுட் மூலம் 3வது படியும், மழையின் சிறு தூத்தலைக் கண்டு மஹெல டக்வேர்த் லூயிஸ் ஓட்ட இலக்கை கடக்க அவசரப்பட்டு ஆட்டமிழந்தபோது நாம் தோற்றேவிட்டோம்.

மீதமான வீரர்கள் தமது நம்பிக்கையை இழந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தமையும் இறுதி நம்பிக்கையாய் இருந்த ஜீவன் மெண்டீஸ் - திசெர பெரேராவின் ரன் அவுட்டோடு நாம் படு தோல்வி அடைந்தோம். அந்நேரம் இலங்கை ரசிகர்களாகிய எம் மனதில் பேரிடி விழுந்தது.

இறுதிப் போட்டியின் மொத்தம் 40 ஓவர்களில் முதல் பத்து ஓவர்கள் மாத்திரம் எம் கை ஓங்கியிருந்தது அதன் பின்னரான 30 ஓவர்களும் மே.இ.தீவுகள் அணியின் கை ஓங்கியிருந்தது.

மே.இ.தீவுகள் அணியை விட திறமையால் எம் அணி மேலோங்கித்தான் இருந்தது. ஆனால் எம் அணியினர் இலகுவாக அழுத்தத்திற்கு ஆளாகித் தவித்தார்கள் ஆனால் மே.இ.தீவுகள் அணியினர் சிறப்பாக அழுத்தத்தினைக் கையாண்டார்கள் கட்டுப்படுத்தினார்கள். ஒவ்வொரு ஆட்டமிழப்பின் போதும் அவர்களின் நடனம் நமக்கு வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது ஆனால் அதுதான் அவர்களின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவியது என்றால் மிகையாகாது.. அந்த இடத்தில்தான் இலங்கை அணி சறுக்கிவிட்டது.

திசேர பெரேராவின் ஆட்டமிழப்போடு என்னால் அதற்கு மேல் மெச்சைப் பார்க்கவே முடியவில்லை. பார்க்கும் சக்தி எனக்கிருக்கவில்லை அதற்குப் பின்னர் என்ன நடந்தது, யார் யார் எத்தனை ஓட்டங்கள் பெற்றார்கள்? மே.இ.தீவுகள் அணியின் வெற்றிக் கொண்டாட்டம் எப்படி இருந்தது? (நிச்சயமாக Gangam Style இருந்திருக்கும் என்பது உறுதி) எதுவுமே தெரியாது.இலங்கை அணி எத்தனை ஓட்டங்களால் தோற்றது என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

இந்தத் தோல்விக்குப் பின்னர் நான் பார்க்கும் எல்லோரும் சந்தோசமாய் இருப்பது போலும், எல்லோரும் என்னைப் பரிதாபமாய்ப் பார்ப்பது போலும் ஒரு உணர்வு.

வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு இந்தத் தோல்வியால் எவ்வளவு அழுத்தம், கவலை இருக்குமோ அதைவிட பலமடங்கு அழுத்தம், கவலை அந்த வீரர்களுக்கு இருக்கும். உண்மையில் 4 உலக்கிண்ண இறுதிப்போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி என்பது எவ்வளவு பெரிய கவலை என்பது இலங்கை அணியின் ரசிகர்களாகிய எமக்குத்தான் தெரியும்.

இலங்கை கிரிக்கடின் Die Heart Fan ஆன எனக்கு இந்தத் தோல்வி தந்த ரணம் ஆறுவதற்கும் கவலை நீங்கி வழமைக்குத் திரும்பவும் பல நாட்கள் ஆகும்.
ஒவ்வொரு முறையும் இலங்கை அணி தோற்கும் போதும் இலங்கை அணி மீது வெறுப்பு வந்ததே இல்லை. கிரிக்கட் மீது வெறுப்பு வரும். இனி கிரிக்கட் பார்க்கவே கூடாது கிரிக்கட்டுக்கு அடிமையாகிவிடக்கூடாது என்றுதான் நினைப்பேன். ஆனால் அடுத்த தொடர் ஆரம்பமாகும் போதும் முன்னரைவிட பல மடங்கு நேசத்தோடு இலங்கை அணிக்கு என் ஆதரவு இருக்கும்….. முடியவில்லை இலங்கை கிரிக்கட்டிலிருந்து என்னால் தூரமாக முடியவில்லை.

அணிக்கு ஆதரவு வழங்குவதும் அப்புறம் மனம் நொறுங்குவதும் பின்னர் மீண்டும் ஆதரவு வழங்குவதும் என்று செல்கிறது என் வாழ்க்கை.

என்னைப் பொறுத்தவரையில் இலங்கைக் கிரிக்கட் அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த தலைவர் மஹெல ஜயவர்த்தன. வீரர்களை ஆக்ரோசமாக அதே நேரம் கிரிக்கட் ஸ்ப்ரிட்டோடு வழி நடத்துவதில் வல்லவர். மஹெலவின் பல தன்மைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதற்குப் பல காரணங்கள். இப்படி என்னை மிகவும் கவர்ந்த தலைவர் மஹெல தனது தலைமையில் ஒரு உலகக் கிண்ணத்தைதானும் வெல்லவேண்டும் என்பது எனது மிகப் பெரிய ஆசை. ஆனால் இவ்வாசை இனி நிறைவேற வாய்ப்பில்லை என்பதே எனக்கு மிகப் பெரும் கவலை.

கடந்த 2011 உலகக் கிண்ணக்கிரிக்கட் போட்டிகள் நடைபெற்றபோது எனக்கு பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு இறுதி செமஸ்டர் பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோற்றபோது எந்நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. என்னால் படிக்கக் கூட முடியவில்லை. என் தாய் ஃபோன் பண்ணி என்னிடம் நல்லாப் படிக்காய் தானே என்று கேட்டபோது என்னால் பொய் சொல்ல முடியவில்லை. என்னால் படிக்க முடியவில்லை இலங்கையணியின் தோல்வி என்னை மிகவும் பாதித்துவிட்டது என்று வேதனையோடு கூறினேன். அவர்களுக்கும் என் வேதனை புரிந்தது எனக்கு ஆறுதல் சொன்னார்கள். என் பெற்றோர் சகோதரர்கள் எல்லோரும் அடிக்கடி ஃபோன் பண்ணி என்னைத் தேற்றியதால்தான் என்னால் மீதமிருந்த பரீட்சையை எழுதிமுடிக்க முடிந்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படி? ஏன் இப்படி ஒரு முட்டாள்தனமான ரசிகனாக் இருக்கிறேன் என்று எனக்கு புரியவே இல்லை.

அப்படி ஒரு நிலைதான் இம்முறையும் ஆனால் நல்லவேளை இம்முறை பரீட்சைகள் எதுவுமில்லை. ஆனாலும் மனதில் இருக்கும் வலி இன்னும் ஆறவில்லை. ஆனால் மற்றவர்கள் வழமைக்குத் திரும்பிவிட்டதைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது.
ஏன் என்னால் மட்டும் முடியவில்லை….? ஹ்ம்ம் இதுவும் கடந்து போகும்.

கிரிக்கட் ஒரு விளையாட்டுதான் அதற்கு நான் இப்படி அடிமையாய்க்கிடப்பது அதிகம்தான்… மூளை சொல்கிறது மனது கேட்குதில்லையே.

இந்தத் தோல்வி தந்தவலி இன்னும் அதிகமாகும் என்பதால் FB,Cricinfo போன்ற தளங்கள் பக்கமோ வேறேதும் இணையத்தளங்கள்பக்கமோ, டீவி, ஸ்போர்ட்ஸ் நியூஸ் பக்கமோ போகவே இல்லை.இந்த இரண்டு நாட்களையும் கடத்த நான் பட்டபாடு ஹ்ம்ம்ம்… மனதை ஆறுதல்படுத்த என்னென்ன செய்யலாம் என்று தேடிய போதுதான் நான் இருக்கும் மாபோளை நகருக்கு மிக அண்மையில் எலகந்த என்னுமிடத்தில் ஒரு அழகிய கடற்கரை இருப்பது அறியக்கிடைத்தது. புண்பட்ட நெஞ்சுக்கு ஒரு ஆறுதல்….ஹ்ம்ம்ம்

பார்ப்போம் இதுவும் கடந்து போகும்

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பத் அடுவென் ஃபுல் ரைஸ் (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -3)


நாங்களும் க்ரேஜுவட்டாக்கும் என்ற பகுதியினூடக நான் என் பல்கலைக் கழக வாழ்க்கையில நடத்த சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்வது வழக்கம் அந்த வகையில் இன்னைக்கும் ஒரு சம்பவத்த பார்க்கலாம்…….. நிகழ்ச்சிய ஆரம்பிக்க முன்னர் ஒரு சிறிய அறிமுகம்
(அச்சச்சோ ரேடியோல பேசுற மாதிரியே வருதே….. சாரி)

சிங்களத்தில அடு (adu) என்றொரு சொல் இருக்கு அத தமிழ்ல்ல சொன்னா குறைவு, கொஞ்சம் அப்படின்னு பொருள்படும்.
அதே நேரம் இத இன்னுமொரு இடத்தில வித்தியாசமா பாவிப்பாங்க அதாவது ஒரு கடையில சோறு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அது போதாம விட்டா அடு பத்கொடுங்கன்னு சொன்னா இன்னும் கொஞ்சம் சோறு மேலதிகமாக கொடுப்பாங்க…….
இதான் அறிமுகம் இனி மேட்டருக்கு போகலாம்..


பத் அடுவென் ஃபுல் ரைஸ்
Hero "X" missing

நான் இருந்த ரூம்ல மொத்தம் 4 பேர் சில நேரம் 5 பேராகவும் மாறும். இதுல ஒவ்வொருத்தருக்கும் பல பல சுவாரஸ்யமான கதைகளிருக்கு. இன்றைய கதைக்கு  கதாநாயகன் “X" இருக்காரே இவரைச் சுற்றி பல சுவாரஸ்ய சம்பவங்கள் இருக்கு. எங்கள் பலகலைக் கழகத்தின் பல சர்ச்சைகளின் நாயகன் இவர்.

ஒரு நாள் நாங்க நண்பர்கள் எல்லாரும் வழமையா சாப்பிடும் ஹொட்டல்கு இரவு சாப்பாடிற்கு போனோம். அந்த ஹொட்டல்ல ப்ரைட் ரைஸ் ரெண்டு விதமாக் கிடைக்கும். ஒன்று நோர்மல் ஃப்ரைட் ரைஸ் அடுத்தது ஃபுல் ஃபிரைட் ரைஸ்.. (அந்த ஹொட்டல்ல இந்த ஃபுல், நோர்மல் சிஸ்டத்தை அறிமுகம் செய்த பெருமை எங்களையே சேரும்) ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னா ஃபுல்னு சொன்னா ரைஸ் அதிகமா இருக்கும். ரெண்டுபேர் சாப்பிடலாம் ஒப்பீட்டளவில் விலையும் குறைவு. வழமையாக நாங்க 4 பேர் போனால். 2 ஃபுல்ரைஸ் போட்டு 4 ப்லேட்ல சமனா(?) பிரிச்சு சாப்பிடுவோம்…(சாப்பிட 10நிமிசம் போகுமெண்டால் அதை சமனா பிரிக்க 30 நிமிசம் போகும்.)

அண்டைக்கு சாப்பிட போனமா போய் நாலு பேரும் போய் உட்கார்ந்தாச்சு. நான் போய் ரைஸ் மாஸ்டர்கிட்ட 2 ஃபுல் ரைஸ் ப்லேட் 4க்கு தாங்க..... ரைஸ் கொஞ்சம் கூட போடுங்க” (இத சிங்களத்தில எப்படி சொல்லனுமோ அப்படி) சொல்லிட்டு வந்துட்டன். அங்க அவர் ரைஸ் போடுறார்.. நாங்க உற்கார்ந்து எங்கட வழமையான கதைகள் கலாய்ப்புகள்ள ஈடுபட்டுட்டு இருந்தோம். அந்த நேரம் பார்த்து நம்ம ஹீரோ "X" திடீர்ன எழும்பி மச்சான் இண்டைக்கு எனக்கு சரியான பசி அவன்கிட்ட போய் ரைஸ்ஸ கூட போட்டு கேக்கனும் இரு நான் சொல்லிட்டு வாறன் எண்டு எழுந்து போனான்.

இங்க என்ன விசயம்னா நம்ம ஹீரோ "X” க்கு  வளவா சிங்களம் பேசத் தெரியாது….. சரி நம்ம ஹீரோ என்னதான் சொல்றார்னு பார்ப்போமேன்னு அவரையே பார்த்துட்டு இருந்தோம்

ஹீரோ "X": அய்யே ஃபுல் ரைஸ் தெகெய் ப்ளேட் ஹதரகட பத் அடுவென் தாண்ட….
(
அண்ணா ஃபுல் ரைஸ் ரெண்டு; ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)
பயபுள்ள இப்படி சொல்லிச்சு…. எங்களுக்கு சிரிப்பு ஸ்டார்ட்..

ரைஸ் மாஸ்டர் : ஃபுல் ரைஸ் த நோர்மல் ரைஸ்த?
(
ஃபுல் ரைஸ்ஸா நோர்மல் ரைஸ்ஸா?)

ஹீரோ "X": அய்யே ஃபுல் ரைஸ் தெகெய் ப்ளேட் ஹதரகட ரைஸ் அடுவென் தாண்ட….
(
அண்ணா ஃபுல் ரைஸ் ரெண்டு; ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)

ரைஸ் மாஸ்டர் : பத் அடுவென் தாலா ரைஸ் கன்னவானம் நோர்மல் ரைஸ் கண்டக்கோ
(சோறு குறைவா போட்டு ரைஸ் எடுக்குறதெண்டால் நோர்மல் ரைஸ் எடுங்களன் )

ஹீரோ "X": நே ஐய்யே ஃபுல் ரைஸ் தமை. பத் அடுவென் தாலா தெண்ட
(இல்ல அண்ணா ஃபுல் ரைஸ்தான் சோறு கொஞ்சமா போட்டு தாங்க)

எங்களுக்கு சிரிப்ப அடக்க முடியல….  ரைஸ் போடுறவன் ரைஸ் போடுறத அப்படியே நிறுத்திட்டான்…. இன்னும் கொஞ்சம் விட்டா அப்படியே ரைஸ் போடுற சட்டிய இவன் தலையிலையே கவுட்டுவிட்டுருவான்….
நான் அப்படியே சிரிச்சிக்கிட்டே..” டேய் மாப்பூ இங்க வாடான்னு நம்ம ஹீரோ "X" ஐ கூப்பிட்டன்.

வந்தான்.

நான் :டேய் இப்போ உன் பிரச்சினை என்னடா?

ஹீரோ "X": இல்லடா பசிக்குது சோற கூட போட்டு ரைஸ் போடுடான்னு சொன்னா அவன் நோர்மல் எடுக்க சொல்றாண்டா

நான் : (சிரிச்சிக்கிட்டே..) அத நீ எப்படி சொன்ன?

ஹீரோ "X": ஃபுல் ரைஸ் தெகெய் ப்ளேட் ஹதரகட பத் அடுவென் தாண்ட….
(
ஃபுல் ரைஸ் ரெண்டு ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)

நான் : டேய் சோறு அதிகமா வேணும்னு இங்க சொல்லிட்டு அங்க குறைவாப் போடுங்கன்னு சொல்லிருக்கியேடாலூசா நீ…?

ஹீரோ "X": இல்லியேடா அடுதானே போட சொன்னன்……?

நான் : டேய் ராசா அடுவென் தாண்ட எண்டா கொஞ்சமா போடுங்கன்னுதான் அர்த்தம்

ஹீரோ "X": அப்போ நாம சாப்பிடும் போது சோறு போதாம விட்டா அடு பத் தெண்ட அப்படித்தானேடா கேக்குறது.. அப்படின்னா சோறு இன்னும் தாங்கன்னுதானேடா அர்த்தம்..அதத்தான் அவன்கிட்டையும் சொன்னன்.

நான் : (சபா இப்பவே கண்ணக் கட்டுதே..) டேய் அது… “பத் அடுய் தவ தென்ன” (சோறு போதாது இன்னும் தாங்க) எண்டதுட சோர்ட் ஃபோம்டா.
அதையும் இதையும் குழப்பிக்கிட்டுபோடாங்ங்ங்ங்….

ஹீரோ "X": அடப்பாவீ.... டேய் இது எனக்குத் தெரியாதேடா......
டேய் போடா போய் திரும்ப சரியா சொல்லிட்டு வாடா.. அவன் வேற.... சோற குறைச்சு போட்ருவான்... போடா போய் சொல்லுடா... ப்ளீஸ்...

(எங்களுக்கு ஒரே சிரிப்பு) 


அவனுக்கு விளக்கம் குடுத்திட்டு திரும்ப போய் ரைஸ் ஓடர் பண்ணிட்டு வந்தன். அன்றைய நாள் வயிறு வலிக்க சிரித்ததிலே கழிந்தது.. அதுக்கு பிறகு நம்ம ஹீரோ "X" சாப்பாடு ஓடர் பண்றதே இல்ல.

அன்னைக்கு மட்டுமில அன்னாத்தைய இப்போ பார்த்தாலும் சொல்லி சொல்லி சிரிக்கும் சம்பவங்களில் இதுவும் ஒன்னு.



………இன்னும் சொல்வேன்………………..




Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நண்பேண்டா.. (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -2)



எங்க பல்கலைக் கழகத்துல ராகிங் காலத்துல காலைல 6 மணிக்கு பல்கலைக் கழகம் போகனும் காலைல 6மணி இருந்து 8 மணிவரை கெண்டீன்ல ராகிங் நடக்கும்.அப்புறம் ஆங்கில லெக்சர்ஸ் லெக்சர் ஹோள்ள நடக்கும். திரும்ப 12 மணிக்கு சாப்பாடு; கெண்டீன் வரனும் சாப்பாட்டுக்குக் கூடவே ராகிங் நடக்கும். அப்புறம் 1மணி இருந்து 4 மணிவரை லெக்சர் திரும்ப 4 மணி இருந்து 6 மணிவரை கெண்டீனில் ராகிங். இதுதான் அவங்க நிகழ்ச்சி நிரல்.

கெண்டீன்ல வரிசையாக அடுத்தடுத்து அருகில் வைக்கப்பட்டிருக்கும் கதிரைகளில் ஒரு ஆண் பெண் ஆண் பெண் என்று அடுத்தடுத்து இருக்கவேண்டும். மீதமானவர்கள் பின்னால் அருகருகே இருப்பார்கள்.

ராகிங் செய்ய நியமிக்கப்பட்ட 8 சிரேஸ்ட்ட மாணவர்களில் ஒருவர் மாத்திரம் தமிழ் மற்றவர்கள் அனைவரும் சிங்களவர்கள். எனக்கு ஓரளவு சிங்களம் தெரியும் என்றாலும் எனக்கு சிங்களமே தெரியாது என்றுதான் சொல்லி இருந்தேன். அப்படித்தான் நடித்தேன். காரணம் சிங்கள் தெரியும் என்று சொல்லி இருந்தால் எல்லாரும் வந்து ராகிங் பண்ணுவார்கள். ஆனால் சிங்களம் தெரியாது என்று சொல்லியிருந்ததால் அந்த தமிழ் அண்ணா மட்டும்தான் எப்பவாவது வந்து ராகிங் பண்ணூவாரு. அதுவும் அவர் ரொம்ப சொங்கித் தனமா காமெடிப் பீசா இருக்குறதால  நமக்கு அவரப் பார்த்தா பயம் வராது சிரிப்புத்தான் வரும்.

இப்படி சிங்களம் தெரியாதுன்னு சொன்னதால நிறைய நல்லது நடந்தாலும் சில கெட்டதுகளும் நடந்தது. அத்தோடு சிங்களம் தெரிஞ்சுக்கிட்டு தெரியாதமாதிரி நடிக்கிறது ரொம்பக் கஸ்ட்டமா இருந்துது. அவற்றையும் பிறகு பதிவேன்

இப்போ இன்றைய விசயத்துக்கு வருவோம்..

நண்பேண்டா……………..


இப்படித்தான் அன்றொரு நாள் நான் கொஞ்சம் தாமதமாக கெம்பஸ் சென்றதால் கெண்டீனில் பின் வரிசையில் அமர நேர்ந்தது. கதிரையில் உட்கார்ந்துகொண்டு பக்கத்தில் பார்த்தால் நம்ம ரூம் நண்பந்தான் அருகில். ஆஹா தோள் கொடுப்பான் தோளனும் இருக்கானே அப்போ ஜாலிதான் எண்டு நினைச்சு நம்பி உட்கார்ந்தன்.

எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்துது. கொஞ்ச நேரத்துல நம்ம ரூம் மெட் அதுதான் என் அருகில் இருந்த நண்பன் வயிற்றப் பிடிச்சிக்கிட்டு வளையிறான், நெளியுறான், குனியுறான், நிமிர்ரான். எனக்கு உள்ளுக்குள்ள சிரிப்புதான். “போங்க தம்பி ராகிங் ஆரம்பிச்சு இத்துன நாள்ள உங்கள மாதிரி எத்துன பேரோட நடிப்பப் பாத்துட்டம் என்று மனசுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டேன்.

நேரம் போகப் போக அவனது நெளிவு, குழைவு எல்லாம் அதிகரிக்குது. திரும்பி அவனைப் பார்த்து என்னாச்சுடான்னு கேட்க முடியாது. கேட்டால் சீனியர்ட கண்ல பட்டா அப்புறம் ஆப்புதான். அதனால அடென்சல்லஇருந்துட்டே அவனப் பார்க்காம நேராப் பார்த்துட்டு என்னடா உனக்குப் பிரச்சினை..? என்று கேட்டா. ”இல்லடா வயிறு ரொம்ப வலிக்குது தாங்க முடியலடா. ரொம்பக் கஸ்ட்டமா இருக்குடா” ந்னு சொன்னான்.சரி இவனுங்ககிட்ட சொல்லிட்டு ரூமுக்குப் போடான்னு சொன்னன்.
இல்லடா எனக்கு சிங்களத்துல சொல்லத் தெரியாதுடா… ப்ளீஸ் நீ கொஞ்சம் சொல்லுடாஎன்றான்.

டேய் விளையாடுறியா எனக்கு சிங்களம் தெரியாதுன்னு சொல்லி வெச்சிருக்கன். இப்போ சிங்களத்துல சொன்னா என் கதை கந்தல். நீயே எப்படியாவது சொல்லு என்று சொல்லிட்டு நான் என் பாட்டுல இருந்துட்டன்.

இவனும் கொஞ்சம் ஓவரா நெளியத்தொடங்கிட்டான். அதோட ப்ளீஸ்டா ஹெல்ப் பண்ணூடாஎன்று ரொம்ப ரொம்ப ஓவரா என்கிட்ட கெஞ்சத் தொடங்கிட்டான்.
எனக்கும் அவனப் பாத்தா ரொம்ப பாவமாத்தான் இருந்துச்சு. ஒரு வேளை இவனுக்கு உண்மையில வயிற்றுவலியா இருக்குமோன்னு ஒரு டவுட்டும் வந்துச்சு. சரி ஏதோ ஒரு மனிதாபிமான அடிப்படையில் உதவலாம்; என்ன ஆனாலும் பரவாயில்ல என்று மனச கல்லாக்கிட்டு சீனியர் ஒருவன் வரும் வரை காத்துக்கொண்டிருந்தேன்.

அதற்கிடையில் நண்பன் கூட பரஸ்பர உடன்படிக்கியொன்றையும் ஏற்படுத்திக்கொண்டேன். அதாவது டேய் இங்கப்பாரு.. உன்னைக் கேட்டு விடுறன், ஆனா நீ போறப்போ தனியா போக முடியல என் ரூம் மேட் இவனையும் கூட கூட்டிட்டு போறன் என்று சொல்லி என்னையும் கூட்டிட்டு போகனும் சரியா?இதுதான் உடன்படிக்கை. அவனும் சரின்னு சொன்னான்.

எதிர்பார்த்தது போல் சீனியரும் வந்தான். இவன் வளையிறது நெளியிறதெல்லாம் அவன் கண்ணுக்குப் பட்டுட்டு. வந்தான்

சீனியர் : டேய்.. என்னடா நேரா இருக்கத் தெரியாத உனக்கு..? (சிங்களத்தில்)
நண்பன் : ……………….. பதில் எதுவும் சொல்லாம வயிறைப் பிடிச்சுட்டு ஏதோ சைகை செய்தான்.

சீனியர் : என்னடா…? என்ன பிரச்சினை உனக்கு?(சிங்களத்தில்)
நண்பன் : ………………… வயிற்றுவலி அண்ணா.. (வயிற்றைப் பிடித்துக்கொண்டு தமிழில் சொன்னான்)

சீனியர் : என்னடா சொல்றாய் தெளிவா சொல்லுடா(சிங்களத்தில்)
நண்பன் : வயிற்றுவலி தாங்க முடியல (தமிழில்)

இவன் சொல்றது அவனுக்கும் அவன் சொல்றது இவனுக்கும் புரியல.
எனக்கு சிரிப்பு ஒரு பக்கம். நாமளா வாயைக் குடுத்து வாய்ல புண்ணோட போகனுமான்னு குழப்பம் ஒரு பக்கம்.
அந்த நேரமாப் பார்த்து.. சீனியர் என்னைப் பார்த்து...

சீனியர் : டேய்இவன் என்னடா சொல்றான்.. என்ன பிரச்சினை அவனுக்கு..?(சிங்களத்தில்)
நான் : வயிற்று வலியாமாம் (தமிழில்)

சீனியர் : சிங்களத்துல சொல்லுடா(சிங்களத்தில்)
நான் : ……….. (அமைதியாக சொல்றதா வேணாமான்னு யோசனையில்)
நண்பன் : ப்ளீஸ்டா.. சொல்லுடா.. அல்லாஹ்வுக்காக சொல்லுடா

சீனியர் : என்ன பிரச்சினைடா அவனுக்கு…? (சிங்களத்தில்)
நான் : இவனுக்கு வயிற்று வலியாம்.. ரொம்பக் கஸ்ட்டமா இருக்காம் (சிங்களத்தில்)

சீனியர் : இருக்க முடியாதாமா…?(சிங்களத்தில்)
நான் : ரொம்பக் கஸ்ட்டமா இருக்காம்போடிங்குக்கு போகனுமாம்.(சிங்களத்தில்)

சீனியர் : இரு வாறன் (என்று சொல்லிட்டுபோய் ஒரு 5 நிமிசத்துல தமிழ் பேசுற சீனியர கூட்டிக்கிட்டு திரும்பி வந்தான்)

தமிழ் சீனியர் : என்னடா.. பிரச்சினை உனக்கு..?
நண்பன் : வயிறு வலிக்குது தாங்க முடியல

தமிழ் சீனியர் :  டேய் பொய் சொல்லி நடிக்காத..
நண்பன் : இல்லை அண்ணா.. சத்தியமா

தமிழ் சீனியர் :  சரி பெனடோல் ரென்டு தாறன் போட்டுட்டு இருக்குறியா..
நண்பன் : இல்லை அண்ணா.. தாங்க முடியல கஸ்ட்டமா இரூக்கு. ரூமுக்குப் போகனும்

தமிழ் சீனியர் சரி.. தனியாப் போவியா….?
நண்பன் : ஓம் அண்ணா..

நான் : அடப்பாவி, துரோகி என்னைக் கழட்டிவிட்டியேடா பன்னாட.. (மனசுக்குள்ள)

தமிழ் சீனியர் : சரி வா
(என்று அவனைக் கூட்டிட்டு போனான்.)

நானும் ஏமாற்றத்தோட கதிரையில உற்கார நினைச்சாஅந்த சிங்கள சீனியர் என்னை முறைச்சுப் பாத்துட்டே இருந்தான்.
ஆஹா…. வில்லங்கம் வெறித்தனமாப் பாக்குதேநாம இன்னைக்கு காலின்னு நினச்சுக்கிட்டன்

சீனியர் : அப்போ உனக்கு சிங்களம் தெரியும் என்ன? (சிங்களத்தில்)
நான் : …………. (அமைதி)

சீனியர் : சிங்களம் தெரிஞ்சு வெச்சிக்கிட்டு எங்களையெல்லாம் ஏமாற்றியிருக்காய் என்ன? (சிங்களத்தில்)
நான் :………..  மீண்டும் அமைதி

சீனியர் : டேய்உனக்கு சிங்களம் தெரியும்னு எனக்குத் தெரியும்இப்போ பேசுறியா இல்ல  முட்டி போடுறியா..? (சிங்களத்தில்)
நான் : ………………… மீண்டும் அமைதி

சீனியர் கடுப்பாகிட்டான்…..

சீனியர் : நடிக்கிறாய் என்னஇரு இன்னைக்கு உனக்கு சிங்களம் தெரியும் எண்டத நான் ப்ரூஃப் பண்றன். இப்படியே நில்லு

என்று சொல்லிட்டு போயிட்டான்
.
(என் மனசுக்குள்ள என்னை மாட்டிவிட்டுட்டு போனானே ஒரு துரோகி அவனை சபிச்சுக்கிட்டே இருந்தன்..)

அந்த சீனியர் போக இன்னொருத்தன் வந்தான். அவன விட இவன் டெரரா இருந்தான்.

2வது சீனியர் : டேய் இங்கவா…?
நான் : ஆஹா கூப்பிடுறானே….தனியாக் கூப்பிடுறானே (மனசுக்குள்ள)

2வது சீனியர் : சிங்களம் நல்லாப் பேசுறாய் ஆனா தெரியாதமாதிரி எங்களையெல்லாம் ஏமாத்துறாய் என்ன..? எங்களப் பார்த்தா பொன்னையன் மாதிரியா தெரியுது உனக்கு..?

நான் : ஹி ஹ்ஹி ஹி (மனசுக்குள்ள)

2வது சீனியர் அவனால முடிஞ்ச அளவுக்கு என்கிட்ட கேட்டுப் பார்த்தான்..
ஆனால் என்பதில் வெறும் அமைதியும் தமிழுமே

ஒருத்தன் மாறி ஒருத்தன் வந்து எவளவோ மிரட்டிப் பாத்தானுக..
அசரவே இல்ல.. நாள் முழுதும் நாந்தான் அவனுங்களுக்கு பலிக்கடா..

அதுல ஒருத்தன்.. ”நீ இன்னைக்கு சிங்களத்துல பேசலன்னா வீட்டுக்குப் போகவே முடியாதுன்னான்.
ஆஹா என்னடா பெரிய பெரிய ஆப்பா போடுறானுங்களேன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டாலும்  அப்பவும் நாங்க அமைதிதான்.

அவனுங்களுக்கே முடியாம. கடைசியில தமிழ் சீனியர் அனுப்பினானுங்க..

தமிழ் சீனியர் : டேய் சிங்களம் தெரிஞ்சா தெரியும்னு சொல்லிட்டு போய் உற்காரண்டா

நான் : போங்க பாஸ் சிங்களம் தெரியலன்னு சொன்னா இன்னைக்கு மட்டும்தான் கஸ்ட்டம். தெரியும்னு சொன்னா ஏமாற்றினதுக்கு வேறையா, இருக்குற நாற்களுக்கு வேறையான்னு எங்கள சின்னாபின்னமாக்குவீங்க. நாங்க நம்பமாட்டோம். (மனசுக்குள்ள)

தமிழ் சீனியர் : என்னடா பேசாம இருக்காய்சிங்களம் தெரியும்னு ஒத்துக்கிறியா..?

(அட்டென்சன்ல நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு நான் சொன்னன்...)

நான் :இல்ல அண்ணாஎனக்கு சிங்களம் தெரியாது. இங்க வந்த கொஞ்ச நாள்ளதான் சில வசனங்கள் படிச்சன். அத வெச்சித்தான் இப்போ பேசினன். அதுபோல வீடு எங்க இருக்கு? உங்க ஊர் எது? பெயர் என்ன? இவளவும் தெரியும். இதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது அண்ணா.

நம்ம பதில் அண்ணாத்தைய திருப்திப்படுத்திருக்கும் போல

தமிழ் சீனியர் : இத அவங்ககிட்ட சொல்லிருக்கலாமேடா..

நான் : அவங்க சிங்களத்துல என்னென்னவோ கேட்டாங்க. அவங்க என்ன கேட்டாங்கன்னோ அதுக்கு எப்படி பதில் பதில் சொல்ற எண்டோ எனக்கு தெரியல அண்ணா. அதான் எதுவுமே பேசல.
(
இதுதான் முழுப் பூசனிக்காயை சோத்துல மறைக்குறது என்பது)

தமிழ் சீனியர் : சரி நில்லு வாறன்

அண்ணாத்தை போய் மற்ற சீனியர்கள்கிட்ட நான் சொன்னதயெல்லாம் சொல்லிருப்பாரு போல. அவுகளும் சமாதானமாகிட்டு மொத்தமா வந்தாங்க.

மிச்சம் மீதி வெச்சதுகளையும் திட்டி முடிச்சிட்டு..
ஒருத்தன் நாளைக்கு வரும்போது பத்து வசனம் பாடமாக்கிட்டு வரனும்

மற்றவன்
சிங்களப் பாட்டொன்னு பாடமாக்கிட்டு வா
இப்படி ஏகப்பட்ட ஹோர்ம் வேர் கொடுத்தானுங்க. நானும் அமைதியா கேட்டுட்டே இருந்தன்.
 
ஆனாலும் பாருங்கோ அவனுங்க சொன்னது சிங்களத்துல. நான் வேற சிங்களம் தெரியாதுன்னு இவளவு நேரம் சாதிச்சிட்டு இருக்கன். அப்ப கூட சிங்களத்துல சொல்லிட்டு போறானுங்க…… என்ன கொடுமை இது..

ஆனாலும் அன்றைய நாள் முழுதும் எனக்கு வை ப்ளட்..? சேம் ப்ளட் தான்


ஒரு துரோகியால கொலைக் களத்துல தனியா நின்னு போராடி ரணகளமாகி ரூமுக்கு வந்தா.. “வயிற்றுவலின்னு அங்க அழுது புலம்பி, என்னையும் கோர்த்துவிட்டுட்டு வந்த அந்த துரோகி இங்க கட்டில்ல மல்லாக்காப் படுத்துக்கிட்டு சுவர்ல ரெண்டு காலையும் வெச்சிக்கிட்டு ஜாலியா பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கு

எனக்கு எப்படி இருக்கும்
….? வந்த ஆத்திரத்துல கையில இருந்த புத்தகத்தால அவன் மூஞ்சில வீசி அடிச்சிட்டு அவன்கூட போட்ட சண்டைல அவன் மண்டையே உடஞ்சிருக்கும். ஆனா மன்னிப்பு கேட்டான்.. நமக்கு  வேற இழகிய மனசா மன்னிச்சு விட்டுட்டன். ஆனா கொஞ்ச நாள் அவன்கூட பேசவே இல்ல..


இன்னும் சொல்வேன்….



குறிப்பு:
பல்கலைக் கழக வாழ்க்கையில் நான் அனுபவிச்ச, சந்திச்ச சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.
நாங்களும் க்ரேஜுவேட்டாக்கும்என்ற இந்தப் பதிவு மூலம் தொடர்ச்சியாக எனது பல்கலைக் கழக வாழ்க்கையின் சுவாரஸ்யமான விடையங்களை பகிர்ந்துகொள்வேன்.
 


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஏலேய் நான் ஊருக்குப் போறன் ஊருக்குப் போறன் ஊருக்குப் போறன்


 
வேப்பமரம் புளியமரம்
ஆலமரம் பூமரம்
ஊருக்குத்தான் வரப்போறன் கேட்டுக்கோ
பைனெண்டாறு துருசிப்பக்கம் குளிக்கவரும் குட்டீங்களே
ஊருக்குத்தான் வரப்போறன் கேட்டுக்கோ
பன்சலை பBன சத்தம் கேட்காத தூரம் போறேன்
துர்நாற்றம் வீசும் சாக்கடைகள் இல்லாத தூரம் போறேன்
சுப்பர் லைனர் பஸ்ஸுலதான் நானும் போறன் ஊருக்குத்தான்
சுப்பர் லைனர் பஸ்ஸுலதான் நானும் போறன் ஊருக்குத்தான்

(வேப்பமரம்...)

சில்லுனு காலையில் எழுந்திருச்சி
பெட்டை எடுத்து கிரிக்கட் ஆடுவேங்க
கிரிக்கட் ஆடும் போது கொஞ்சம் காயம் பட்டா
நான் பொறந்த மண்ணெடுத்து பூசுவேனுங்க
ஹேய் பல நாள் ஆசை நனவாச்சு
பெத்தவங்க மனசு குளிர்ந்தாச்சு
அண்ணாவோட காரெடுத்துக்கொண்டு ரொக்கெட் வேகத்துல
பந்தாவா சீறிக்கிட்டு போகபோறேங்க
சுஹைல் சாரோட பவனி சாலையில போனா
பொனுங்க பார்வையெல்லாம் என் பக்கம் திரும்புமே தானா
கலர் கலரா போகும் ஃபிகருங்க என்னைப் பாத்துபுட்டா போதும்க
ஓரமா நின்னு மூக்கு மேல விரல வெச்சு லுக்கு விடுவாங்க

(வேப்பமரம்...)

எங்க ஏரியாப் பொனுங்கள சைட்டு அடிக்கிறவன்
சின்ன வயசுலையே சிகரெட் புடிக்கிறவன்
கோழி திருடுறவன் ஆட்டை அமுக்குறவன்
நான் வாறதுக்குள்ள ஒழுங்கா திருந்திக்குங்க
வட்டி வாங்கி திண்ணா ஒதைப்பேங்க
பெத்தவள திட்டுனா மிதிப்பேங்க
ரோட்டுல கிரிக்கட் ஆடும் பசங்கள கண்டா
நானும் ஜாலியா சேர்ந்துக்குவேங்க

ஜாலியாக சுத்தும் பட்டாம் பூச்சி போல
நான் ஊர் சுத்துறத தடுத்தா தலையில் குட்டுவேங்க
குட்டு பட்ட நீயும் ஒன்னா சுத்த வந்தா
சத்தியமா உன்னையும் சேத்து ஊர சுத்துவேண்டா

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நாங்களும் க்ரேஜுவேட்டாக்கும் (செமெஸ்டர் - 1)


அறிமுகம்

 
பல்கலைக் கழக வாழ்க்கை சிலருக்கு கனவு சிலருக்கு வெறுப்பு. ஆனாலும் அந்த வாழ்க்கை பல்கலைக் கழகம் சென்ற பலருக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைக் கொடுத்திருக்கும். பலருக்கு வாழ்க்கைத் துணை கூட கொடுத்திருக்கும்.

எனக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைத்தவேளை நான் பல்கலைக் கழகம் போவதில் ஆர்வம் காட்டவே இல்லை.  என் இலக்கை அடைய நான் போதியளவு முயற்சிக்கவில்லை ஆனாலும் கிடைத்ததை ஏற்றுக்கொள்ளவும் நான் தயாரில்லை. எனவே பல்கலைக் கழகம் சென்று 3 அல்லது 4 வருடங்களைக் கடத்த எனக்கு விருப்பமில்லை. வேறு ஏதாவது பாடநெறிகளை முடித்துவிட்டு வேலைக்குப் போகனும் என்பதில் நான் குறியாய் இருந்தேன்.

ஆனாலும் எங்கள் வீட்டில் இதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. என்னை எவ்வளவோ கட்டாயப்படுத்தினார்கள் படிப்பித்த ஆசிரியர்கள் சொந்தங்கள் என்று யார் யாரெல்லாம் வந்து என்னை எப்படி எப்படி எல்லாம் மூளைச் சலவை(Brain wash) செய்தார்கள். நான் மசியவே இல்லை.

ஒரு நால் என் பெற்றோர் என்னை தனியாக கூப்பிட்டு அருகில் உற்கார வைத்து உன் முடிவுல மாற்றமிருக்காஎன்று கேட்டாங்க இல்லை என்றேன்.
உன்னை வேற கோர்ஸ் செய்ய வேணாமுன்னு சொல்லல. அதையும் செய் ஆனா அதுக்கு முதல்ல கெம்பஸ்ஸ முடி. கெம்பஸ் முடிக்காம நீ எந்த கோர்ஸ் செய்தாலும் உனக்கு இருக்கப்போற Academic qualification வந்தும் AL பாஸ் மட்டும்தான். ஆனா நீ கெம்பஸ் முடிச்சால் ஒரு க்ரேஜுவட் எண்ட தகுதி இருக்கும். ப்ரொமோசன் கிடைக்கும் போது கை கொடுக்கும்என்றெல்லாம் சொன்னாங்க. நான் அமைதியாகவே இருந்தேன்.

கடைசியாக சொன்னாங்க பாருங்கஅதாங்க என் முடிவ ஒரு கணத்தில மாத்திடுச்சு.
சரி அதையெல்லாம் விடு. உன்னை இவளவு கஸ்ட்டப்பட்டு படிப்பிச்சத்துக்கு நீ எங்களுக்கு கொடுக்கப் போற சந்தோசம் இதுதானா..? எங்க பிள்ளையும் ஒரு பட்டதாரி என்று நாங்களும் பெருமையா சொல்ல, நாங்களும் சந்தோசப்பட உனக்கு விருப்பமில்லைத்தானே…
உனக்காக கஸ்ட்டப்பட்ட எங்களுக்கு இப்படி ஒரு சந்தோசத்த கொடுக்க உனக்கு இஸ்ட்டமில்லன்னா இதுக்கு மேலையும் நாங்க இதப்பத்தி கதைக்கல உன் இஸ்ட்டப்படி செய்


அவ்வளவுதான் அடுத்த நாள் நான் கெம்பஸ்ல இருந்தன்
.

இப்படி பெற்றோருக்காகத்தான் நான் கெம்பஸ் போனன் என்றதாலோ என்னவோஆரம்பத்துல இருந்தே எனக்கு கெம்பஸ் வாழ்க்கை பிடிக்கவே இல்லை. காலப்போக்கில் மனநிலையில் கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டாலும் அது எனக்கு ஒரு சுமையாகவே இருந்தது. எனக்கு நானே தனிமையை தேடிக் கொண்டேன்.

அடிக்கடி சோர்ந்து போவேன். அப்போதெல்லாம் நான் மனதில் எண்ணிக்கொள்வது என் பெற்றோரின் சந்தோசத்திற்காக அவர்களின் ஆசையை நிறைவேற்ற வந்திருக்கன்என்பதைத்தான். அந்த எண்ணம்தான் என் பல்கலைக் கழக வாழ்க்கையை தொடருவதற்கு எனக்கிருந்த ஒரே பலம்.
இன்று நான் என் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிவிட்ட பெருமிதத்தில் இருக்கின்றேன்.

இப்படிப்பட்ட பல்கலைக் கழக வாழ்க்கையில் நான் அனுபவிச்ச, சந்திச்ச சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.
நாங்களும் க்ரேஜுவேட்டாக்கும்என்ற இந்தப் பதிவு மூலம் தொடர்ச்சியாக எனது பல்கலைக் கழக வாழ்க்கையின் சுவாரஸ்யமான விடையங்களை பகிர்ந்துகொள்வேன்.


பல்கலைக் கழக ராகிங்ல இருந்து ஆரம்பிப்போம்

எனது பல்கலைக் கழகத்தில் ராகிங் சற்று வித்தியாசம்.சனி ஞாயிறு தவிர்ந்து மொத்தம் 23 நாட்கள் ராகிங் நடக்கும். ராகிங் பண்ணுவதெற்கென்று 8 பேர் கொண்ட ராகிங் குழுவினர் இருப்பாங்க.. அவங்க தவிர வேறு யாரும் ராகிங் பண்ணமாட்டாங்க.ராகிங்கின் கடைசி வாரத்தில்தான் மற்ற எல்லோரும் ராகிங் பண்ண வாய்ப்புக் கிடைக்கும். மற்ற நாட்களில் இந்த 8 பேரும் ராகிங் பண்ணும் போது அவங்கள பாதுகாக்கவும், ராகிங்கைப் பார்க்கவும் எல்லா சீனியரும் வந்து இருப்பாங்க. ராகிங் நடக்கும் ஆனால் ஒரு சீனியரின் விரல் நுனி கூட எங்கள் மேல் படாது.. அதுதான் அங்கே சிறப்பு.

பல்கலைக் கழக கெண்டீனில் புதியமாணவர்கள் எல்லோரையும் வைத்துதான் பொது ராகிங் (common ragging) தான் நடக்கும்.கெண்டீனில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் கதிரைகளில் நாங்களிருப்போம் ராகிங்கும் நடக்கும்.

இப்படி எங்களுக்கு ராகிங் நடக்கும் முதல் வாரம். எல்லோருக்கும் ஒரு பெயர் வைப்பார்கள். அந்தப் பெயர் படு கன்றாவியா இருக்கும். அந்தப் பெயரை தெரிவு செய்து கொடுப்பதே பெண் சீனியர்கள்தான். அந்தப் பெயரை கார்ட் என சொல்வார்கள்.

அன்று காலையில்  முதல் 10 மாணவர்களுக்கு கார்ட் வைத்தார்கள். அன்று மாலை நாங்கள் எல்லோரும் கெண்டீனில் இருக்கிறோம் ஒரு சீனியர் வந்தான். ஒருத்தனை கை நீட்டி எழும்புடா என்றான். அவன் மரியாதையாக எழும்பி நின்னான்.
உன் கார்ட் என்னசீனியர் கேட்டான். இவன் மறந்து போய் ஏதோ ஞாபகத்துல கொமெர்சல் பேங் கார்ட் என்று சொன்னானே பார்க்கலாம். சீனியருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஒரு மாதிரியாக சிரிப்பைக் கட்டுப் படுத்திக்கொண்டு. அவனை பச்சை பச்சையாகத் திட்டினான்.

அடுத்த சீனியர் வந்து. எங்க எல்லாரையும் எழும்ப சொன்னான். எழும்பினோம்.
உங்களுக்கு சிரிப்பு என்னடா…. எல்லாரும் முட்டி போட்டு நில்லுங்கடான்னு சொல்லி முட்டுக் கால்லா நிக்க வெச்சிட்டு போயிட்டான் அந்தப் படுபாவி.

கார்ட பிழைய சொன்னதுக்கு அந்த நண்பனுக்கு குடுத்த தண்டனை என்ன தெரியுமா தவழ்ந்து தவழ்ந்து ஒவ்வொருத்தர்கிட்டையும் போய்
என்னுடைய உண்மையான கார்ட் இது…. நான் பிழையா கொமெர்சல் பேங் கார்ட சொல்லிட்டன்  என்று எங்க எல்லார்கிட்டையும் சொல்லனும். அவனும் சொன்னான்.


இன்னும் சொல்வேன்

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS