RSS

என்னுள்ளே 2010இன் அதிர்வலைகள்

ஆண்டே புது ஆண்டே
 பொதிசுமக்கும் குழந்தைகளின்
புத்தகங்கள் குறைப்பாயா..?
பரீட்சை இன்றி கல்வியை வெல்லும்
பாடத்திட்டம் தருவாயா?
புத்தாண்டே புத்தாண்டே
நோய்களெல்லாம் களைவாயா..?
அழுக்கில்லாத காற்றும் நீரும்
அகிலம் முழுதும் தருவாயா..?
பெற்றோலும் தீர்ந்துவிட்டால்
கார்காலம் தருவாயா..?

2010ம் ஆண்டைக் கடந்து 2011ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் இத்தருணத்தில் 2010ம் ஆண்டு என் வாழ்வில் ஏற்படுத்திச்சென்ற சில அதிர்வுகளைத் திரும்பிப்பார்க்க ஆசைப்படுகின்றேன்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றலின் பண்பலையில் ஒரு அறிவிப்பாளனாக எனது குரல் முதல் முறையாக ஒலித்த நாள்.
13/1/2010 புதன் கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரை தென்றலில் ஒலிபரப்பான இதம் தரும் ரிதம்” நிகழ்ச்சியின் மூலமாகத்தான் எனது அறிமுகம் இடம்பெற்றது.

அன்று மாலை 3 - 6 மணிவரை இடம்பெற்ற இதம் தரும் ரிதம் நிகழ்ச்சிதான் என் முதலாவது நிகழ்ச்சி.
சிரேஸ்ட மூத்த அறிவிப்பாளரான கே.ஜெயகிருஷ்னா அண்ணா, சிரேஸ்ட அறிவிப்பாளர் ரஜினி அன்றூ அக்கா ஆகியோரோடு இணைந்து முதலாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்புக் கிட்டியது.

தென்றலில் என் குரல் முதன் முதலில் ஒலித்த நேரம் : மாலை 3 மணி 41நிமிடம்

ரஜரட்டைப் பல்கலைக் கழகம் கால வரயறையின்றி மூடப்பட்டது. மாலை 4 மணிக்கு முதல் அனைத்து மாணவர்களும் வளாகத்தைவிட்டு வெளியேறவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது கறுப்பு சரித்திரம்,

முகாமைத்துவ பீட மாணவர்கள் சிலருக்கும் பிரதேசவாசிகள் சிலருக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது. இதனால் கோபமுற்ற பிரதேச வாசிகள் பல்கலைக் கழகமாணவர்களைத் தாக்கத் தொடங்கினர். பிரச்சினையில் சம்பந்தப்படாத, ஏனைய பீட மாணவர்களும் பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு இலக்கானார்கள். இதனால் பிரச்சினை பூதகரமானது மட்டுமல்லாமல் பிரச்சினை மொத்த பல்கலைக் கழக மாணவர்களுக்கும் ஊரவர்களுக்கும் என்று மாற்றம் பெற்றது.

மாணவர்களை பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பிரகாரம் மாணவர்கள் அனைவரும் ல்கலைக் கழக பஸ் வண்டிகள் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு பொலீசார் மற்றும் இலங்கை இராணுவத்தின் கஜபா படையினரின்(மோட்டார் வண்டிப் படையணியினரின்) விசேட பாதுகாப்போடு ஊர்மக்களின் கூக்குரல் மற்றும் எதிர்ப்புகளையும் கடந்து அநுராதபுரம் பிரதான பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டனர்.(ஏறத்தாழ ஒன்றரை மாதத்தின் பின்னர் மீண்டும் பல்கலைக் கழகம் திறக்கப்பட்டது. எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை)



இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றலின் அன்றைய நாள் நிகழ்சிகளை ஆரம்பிக்கும் பொறுப்பு முதன் முதலாக எனக்கு வழங்கப்பட்டது.

அதிகாலை 5 மணிமுதல் 9 மணிவரை தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலங்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன்.
நாட்டின்  அரச வானொலியின் அன்றைய நாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தவன் என்ற மகிழ்ச்சி மிகுந்த உட்சாகத்தைத் தந்தது.


என் சகோதரர் Dr.A.I.Ahamed Ziyad     
திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார்.
இத்திருமணம் எங்கள் இல்லத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

(இதன் மூலமாக என் ரூட்டும் கொஞ்சம் க்ளியராச்சு லிஸ்டுல்ல அடுத்தது நாமதான்)



இது தவிர எனது சொந்த உழைப்பில் எனக்கு ரொம்பப் பிடிச்ச Hand Phone  மற்றும்  Dongle என்பனவற்றை என்னால் வாங்க முடிந்தது.

இந்த ஆண்டில் எனக்கு மிகச்சிறந்த நற்புகள் ஃபேஸ்புக் மூலமாகக் கிடைத்தன. அதில் அற்புதமான நண்பி ஒருத்தர் இந்த ஆண்டில் ஃபேஸ்புக் மூலமாகக் கிடைத்தது எனக்கு மிகப்பெரும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஃபேஸ்புக் தந்த அழகிய நற்பு அது.

இவைதான் கடந்த ஆண்டில் என் வாழ்வில் இடம்பெற்ற நான் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடையங்கள்.

இவை தவிர க்டந்த வருடத்தில் சில குப்பைகளும் இருக்கின்றன.

என் நண்பனாக இருந்தவன் எனக்கு துரோகியாக மாறியதும், கூட இருந்து குழிபறித்ததும் இந்த ஆண்டில்தான்.

சம்பந்தமே இல்லாமல் இருவர் என்வாழ்வில் ஏககாலத்தில் வந்து என்னில் சீசோ ஆடியது இந்த ஆண்டில்தான். அவர்கள் சந்தோசத்திற்காக என் வாழ்க்கையில் விழையாடிய துரோகச் செயல் இடம்பெற்ற ஆண்டும் இதுதான். என் வாழ்வில் நான் செய்த மாபெரும் வரலாற்றுத் தவறு அவர்களிருவருக்கும் இடம் கொடுத்தது.
ஆனாலும் அந்த தவறு தொடர்ந்தும் நீடிக்கவில்லை. நான் விளங்கிக்கொண்டேன் விலகிக் கொண்டேன்.

இப்படி ஒரு சில குப்பைகளைத் தவிர்த்து 2010ம் ஆண்டு ஓரளவு மகிழ்வாகவே இருந்தது.

மலரும் 2011ம் வருடம் எப்படி அமையப் போகின்றது என்ற ஆர்வம் எதிர்பார்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
இந்த ஆண்டில் எனக்கு கிடைக்க இருக்கும் மிகப் பெரிய சந்தோசம் என் பல்கலைக் கழகப் படிப்பு நிறைவு பெறப்போகின்றது என்பதுதான். இது தவிர வேறென்ன மகிழ்ச்சிகள் எனக்குக் கிடைக்க இருக்கிறதோ? என்ற ஆவலில் காத்திருக்கின்றேன்.

போரே இல்லாத பொன்னுலகம்
நீ கொண்டுவா
சலிப்பாகாமல் மனம் பார்கின்ற
அந்த காதல் நீ கொண்டுவா
பூகம்பே இல்லாத பூமியை நீ கொண்டுவா
புத்தம் புது ஆண்டே
தேன் பூக்கும் புது ஆண்டே
பூக்கள் நீ தரவா
தேன் புன்னகை நீ தரவா
போர்களம் உழுதுவிடு
அங்கே பூச்செடி நட்டுவிடு
அனுகுண்டு அத்தனையும்
பசிஃபிக் கடலில் கொட்டிவிடு
மனிதர்கள் விரும்பும் வரை
மண்ணில் மனிதனை வாழவிடு
நிலவுக்கு போய் வரவே எங்கள்
எங்கள் தெம்புக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில்
உணர்ச்சிக்கு வலிமை கொடு

வருக 2011 வருக 2011
வருக வருகவே

அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
Happy New Year












Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆழிப்பேரலைக்கு இன்றுடன் ஆறு வயசு

பாலூட்டிக் கொடிருந்த தாய்
தன் குழந்தையை திடீரென தூக்கி விழுங்கிவிட்டாள்
--------சுனாமி---------  
                                                                     (மூ.மேத்தா)



டிசம்பர் 26 சுனாமி சீற்றம் கொண்டு பல உயிர்களைக் காவுகொண்டுவிட்டு
அடங்கி இன்றுடன் 6 வருடங்கள் ஆகின்றன.
ஆனால் அது ஏற்படுத்திய வலியும் சோகமும் மாறாத் துயராய் நம்மனதில்
இன்னும் தொடர்கின்றன.

இதில் கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர், அநாதரவானவர்கள் பல லட்சம் பேர்

சுனாமியைப் பற்றி ஆராயவோ, அதன் சுவடுகளைப் பற்றிப் பேசவோ
நான் இந்தப் பதிவை எழுதவில்லை. இன்றைய நாளில் என் மனதில் எழுந்த
சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

சுனாமியினால் பலியான பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, இன்றைய நாள் காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிட
மெளன அஞ்சலி செலுத்துமாறு அரசாங்கம் வேண்டியிருந்தது.

இன்று காலை சரியாக 9.25க்கு அனைத்து வானொலிகளும் சுனாமியினால் பலியான மக்களுக்காக அஞ்சலி செலுத்தும் முகமாக எமது சேவை
2 நிமிடம் நிறுத்தப்படுகிறது என்ற அறிவித்தலோடு தமது சேவையை 2 நிமிடங்கள் நிறுத்தி மெளன அஞ்சலி செலுத்தின.


அனைத்து தமிழ் சிங்கள ஆங்கில வானொலிகளும் தங்கள் சேவையை 2நிமிடம் இடை நிறுத்தி அஞ்சலி செலுத்தின.
(குறித்த ஒரு வானொலியில் மாத்திரம் சுனாமி தொடர்பான நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அவர்கள் நேரத்தில ஏதும் பிழையா இல்லை வேறேதுமான்னு தெரியல)


தொலைக் காட்சிகளில் சுயாதீன தொலைக்காட்சி தவிர ஏனைய தொலைக்காட்சி சேவைகளில் கறுப்பான பிண்ணனியில் சுனாமியில் பலியானவர்களுக்கான மெளன அஞ்சலி என்ற வாசகத்தோடு வைக்கப்பட்ட அகல்விளக்கொன்று அமைதியாக எரிந்துகொண்டிருந்தது. 


சுயாதீன தொலைக்காட்சியில் மாத்திரம் பிரதான வீதியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள், பாதசாரிகள் சரியாக 9.25க்கு தாம் நின்ற இடத்திலேயே அமைதியாக நின்று மெளன அஞ்சலி செலுத்திவிட்டு,
9.27க்கு மீண்டும் தங்கள்  பயணத்தை தொடரும் காட்சியை நேரடியாக ஒலிபரப்பினர்.


இது ஒவ்வொரு வருடமும் நடைபெறும் நிகழ்வுதான் என்றாலும் இம்முறை என்னவோ என்னை அதிகம் பாதித்துவிட்டது. இனம் புரியாத இருண்ட சோகம் மனதுக்குள் சுமையாக தங்கிக்கொண்டது.

சுனாமியினால் எனதூர் பாதிக்கப்பட்வில்லையென்றாலும் சுனாமியின் கோரத்துக்கு இலக்கான அயலூர் மக்களை அரவணைத்து, ஆறுதல்படுத்திய ஊர்.
சுனாமியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான  உயிர்கள் நல்லடக்கப் செய்யப்பட்டதும் இங்கேதான். அந்த மக்களின் கதறல்கள்,புலம்பல்களை  கஸ்ட்டங்களை நேரடியாக கண்டிருக்கிறோம்.
அவை எம் மனதில் மாறாத வடுக்கள்


நேரடிப் பாதிப்பற்ற எமக்கே இந்த கவலை என்றால் நேரடிப்பாதிப்புக்குள்ளான அந்த மக்களின் உளநிலை எப்படி இருக்கும்..?
நினைத்தாலே கொடுமை..


ஆழிப் பேரலையின் ஆக்ரோசத்துக்கு இரையான உயிர்களின் ஈடேற்றத்துக்கு என் பிரார்த்தனைகளும், சுனாமியின் சீற்றத்தில் தம் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து பரிதவிக்கும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களும் உரித்தாகட்டும்

ஆழிப்பேரலை தொடர்பாய் சக பதிவர் பிரஷாவின் வரிகள் கீழே
 
ஆழிப்பேரலையாய் 
ஆவேசமாய் நீ வந்து...
ஆயிரம் ஆயிரம் உயிர்களை
ஆவேசமாய் அள்ளி சென்றாய்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடினும்
ஆறிடுமா எமக்கு நீ தந்த காயம்....

இயற்கையின் விந்தையும் பெரிது
இயற்கையின் சீற்றமும் பெரிதென
இயற்கையாய் புரியவைத்துச் சென்ற
இம்சை அரசனே ஆழிப்பேரலையே....

உறங்கிய உறவுகளை உறக்கத்தில் அள்ளிசென்றாய்
உறங்காத உறவுகளை உறங்காமல் அள்ளிச்சென்றாய்
உன் பசி தீர்த்திட ஏன் உயிர்கள் மேல் ஆசை கொண்டாய்?
பல்லாயிரம் உயிர்களும் உனக்கென்ன பாவம் செய்தனர்?
பரிதாபம் காட்டாமல் பவ்வியமாய் இழுத்துச்சென்றாய்...

ஒவ்வொரு ஆண்டிலும் ஓர் நாள் உன் நாளாய்
ஓசையுடன் வந்து தடம் பதித்து நீ சென்றாய்..
அந்நாள் கறுப்பு நாள் எம்வாழ்வில்
உன்வருகையால்
கணவனை இழந்து விதவையாய் எத்தனை பெண்கள்
மனைவியை இழந்து தனிமையில் எத்தனை ஆண்கள்
பெற்றோரை இழந்து தனிமையில் தவித்திடும் குழந்தைகள்
பிள்ளைகளை  இழந்த சோர்ந்திட்ட பெற்றோர்கள்...
இழப்புக்கள் ஏராளம் கூறிட
வார்த்தைகளில்லை...... 










Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நெத்தலி - சுறா பார்ட்-2 (ரிப்பீட்டு...)

பன் பிக்சர்ஸ் கவலையுடன் வழங்கும் அதிரடி நாயகனின் நெத்தலி(சுறா பார்ட்-2)


நெத்தலி (சுறா பார்ட்-2)

உதயபுரத்து விளையாட்டு மைதானத்தில் பெரும் சனக் கூட்டம். எல்லோருமே மைதானத்தின் அருகிலிருக்கும் காட்டினைப் பார்த்துகொண்டிருக்கின்றனர். "காலையில் கிரிக்கட் விளையாடும் போது பந்து பக்கத்துல இருந்த காட்டுகுள்ள போயிடுச்சு அத எடுக்கப் போன நம்ம நெத்தலியையும்(நெத்தலி - ஹஸ்ஸான் இவர்தான் கதையின் ஹீரோ) மத்தக் குளுவினரையும் காணல்லன்னு ஊரெல்லாம் ஒரே களேபரம்… "

பொலீசார் வந்து பற்றைகள், குட்டைகளெல்லாம் நோண்டி எப்புடியோ எல்லோரையும் கண்டுபிடிச்சு இழுத்துட்டு வந்துடாங்க…ஆனா நம்ப ஹீரோ நெத்தலிய (அதான் நம்ம ஹஸ்ஸான்) மட்டும் காணல்ல…. எல்லோருக்கும் கவல.
எல்லோரும் போய் நெத்தலிய காணல்ல எங்கிற விசயத்த நம்ம கஃபார் ஓ.ஐ.சீ கிட்ட சொல்றாங்க..

இங்கப் பாருங்கப்பா உங்கள தேடி கண்டு பிடிச்சதே ரொம்ப பெரிய விசயம், காட்டுக்குள்ள பாம்பெல்லாம் கெடக்கு திரும்ப தேடேலாது அதுமட்டுமில்ல உங்கள கூட்டிட்டு போக கைமிசினையும் வரச் சொல்லியாச்சு நெத்தலி வந்தான்னா இடம் காணாது பேசாம விட்டுட்டு வாங்க போவம்”. என்று கஃபார் ஓ.ஐ.சீ எவ்வளவோ சொல்லியும் மக்கள் கேக்கல்ல…

இல்ல சார் நாங்க நெத்தலி இல்லாம வரமாட்டம். அவனுக்கு விளையாடத் தெரியாட்டியும் நல்லா போல் ”பொறுக்கி”த் தருவான், அவந்தான் எங்களுக்கு கடைக்கு போய் சாமான் வாங்கித் தாறது, குளிக்கப் போனா முதுகு தேச்சு விடுற (என்ன லுக்கு ஆம்பிளைகளுக்கு மட்டும்…. வாயப் பொழந்துடுவீங்களே...) கால் வலிச்சா அமுக்கி விடுற (இதுவும் ஆம்பிளைக்குத்தான் சார்) அவன் எங்களுக்கு வேணும்.”

இப்புடி மக்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காட்டுக்குள் இருக்கிற பனமரத்துல சல சலப்பு. எல்லோரும் திரும்பிப் பாக்குறாங்க;

பனமரத்துல இருந்து நம்ப நெத்தலி இறங்கிவாறான். எல்லோரும் அவன நோக்கி ஓடிப்போய் கட்டிப் புடிக்குறாங்க.. நம்ப அம்ரலங்காட மனைவியும் நெத்தலிய கட்டிப் பிடிக்கப் போக ”அடிப்பாவி நானும்தான் காணம போனன் என்ன வந்து கட்டிப் பிடிச்சியாடி பாவி இரு வீட்ட போய் வெச்சுக்குறன்.” என்டு மிரட்டி தன் பக்கம் இழுத்துட்டு போயிட்டான் அம்ரலங்கா.

கஃபார் ஓ.ஐ.சீ : என்னப்பா நெத்தலி எங்க போன நீ

நெத்தலி : இல்ல சார் பந்த தேடிகிட்டே மேல பாத்தனா பனமரத்துல ஒரு பனம் பழம் இருந்திச்சி சார். நம்ப பசங்க கண்டானுங்கன்ன விடமாடனுங்க அதான் எல்லாரையும் பேசி அனுப்பிட்டு, ஒத்தருக்கும் தெரியாம நான் மட்டும் மரத்துல ஏறி பனம் பழத்த சாப்பிட்டன் சார்.

கஃபார் ஓ.ஐ.சீ : சரி நெத்தலி பனம் பழத்துல ஏதாச்சும் மிச்சமிருக்கா..?

நெத்தலி : இல்ல சார் எல்லாம் முடிஞ்சு, கையில இருந்ததையும் கூட நக்கிட்டன் சார்.

”எத்துன பனம் பழம் சாப்பிட்டாலும் கையில இருக்குறதையும் நக்குவான் இந்த நெத்தலி” பன்ச் டயலொக்(மொபிடலும்தான்)வேற.

(நம்ப கஃபார் ஓ.ஐ.சீ சூடாகிட்டார்.)

கஃபார் ஓ.ஐ.சீ : சரி எல்லாரும் கை மிசின்ல ஏறி வீட்டுக்குப் போங்கப்பா…


அடுத்த காட்சி


நம்ம வில்லனுக்கு உதய புரத்து மைதானத்துல மிச்ச நாளாவே ஒரு கண்.(மைதானத்துல மட்டுமில்ல உதய புரத்து குட்டிக மேலயும்தான்)

எப்புடியாவது உதய புரத்து கிரவ்ண்ட வளச்சிப் போட்டு கல்லுவாடி போடனுங்கிறதுதான் அவர்ட நீண்ட நாள் ஆச. (சவுதி அரேபியாவுல ஒட்டகம் கழுவி உழச்ச காச எப்புடியாவது நாசமாக்கனுமே.)


ஒரு நாள் திடீரென்டு யாரோ நம்ம நெத்திலிட தலையில நச்சின்னு பொல்லால போட்டு ஆள சாச்சிட்டு போயிட்டானுங்க. நெத்தலிக்கு ஒன்னுமே புரியல்ல.

இந்த நேரம் பாத்து யாரோ உதய புரத்து கிரவ்ண்ட வயல உழவுற மாதிரி உழுது வெச்சிருந்தானுங்க. ஊர்க்காரங்க எல்லாரும் நம்ம ஹரூஸ்தான் நித்திரக்கண்ணுல வயலுக்கும் மைதானத்துக்கும் வித்தியாசம் தெரியாம உழவு மிசின குறுக்கால விட்டிருப்பானாக்கும் எண்டு நெனச்சு கவலையோட கிரவ்ண்ட பாத்துட்டு இருந்தாங்க.



ஆனா வில்லண்ட தம்பி சரவணன் தான் யாரையும் இந்த கிரவ்ண்டுல விளையாடாம ஆக்கி அண்ணாத்தட ஆசைய நிறைவேத்தி வெக்க இப்புடி சதி செய்தான் எண்டு யாருக்குமே தெரியாது.(இதுக்குன்னே லண்டன்ல இருந்து வந்திருந்தான் படுபாவி..)


இதுக்குள்ள அங்க வந்த நம்ம வில்லன்  பெரிய இவனாட்டம் ”இங்கப் பாருங்க இனிமே இந்த கிரவ்ண்டுல உங்களால விளையாட முடியாது, நான் ஆளுக்கொரு பிளாஸ்டிக் பெட்டும், பிளாஸ்டிக் போலும் தாறன் எல்லாரும் வாங்கிட்டு செட்டவட்ட கிரவ்ண்டுல போய் விளையாடுங்க” என்டு சொல்ல;

எல்லாருக்கும் இதுதான் சரின்னு பட்டிச்சு.(ஓசில வேற பிளாஸ்டிக் பெட்டும், பிளாஸ்டிக் போலும் கிடைக்குதே விடுவாங்களா?) கொடுக்குறத வாங்கிட்டு கிளம்ப தயாரான நேரம் பாத்து நம்ம ஹீரோ நெத்தலி வந்துடான்.


எல்லாரும் பிளாஸ்டிக் பெட்டும், பிளாஸ்டிக் போலும் வாங்கிட்டு செட்டவட்ட கிரவ்ண்டுக்கு போக தயாரா நிக்குறத பாத்த நம்ம நெத்தலிக்கு மூத்…… சாறி ஆத்திரம் வந்துட்டுது.
எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க? ஓசில ஏதும் கிடைச்சா வாங்கிட்டு கிளம்பிர்ரதா? யோசிக்க வேணா? செட்டவட்ட கிரவ்ண்டுக்க போனவுடனே உங்கள விளையாட விட்டிடுவாங்களா?  எல்லா களவானிப் பசங்களும் அங்கதான் இருக்கானுங்க. உங்க பிளாஸ்டிக் பெட், பிளாஸ்டிக் போல் எல்லாத்தையும் பறிச்சு உங்கள அடிச்சு விரட்டிடுவானுங்க. அப்புறம் எங்க போய் விளையாடுவீங்க? பேசாம வாங்கினத குடுத்துடுங்க; நாம இந்த கிரவ்ண்ட சரியாக்கி இங்கையே விளையாடுவம்” என்று ஆவேசமாக நெத்தலி பேச,,

எல்லாரும் வாங்கின பிளாஸ்டிக் பெட், பிளாஸ்டிக் போல் எல்லாவற்றையும் திரும்ப கொடுத்துடாங்க. இதனால கோபமடைந்த நம்ம வில்லன் நெத்தலிய தனிய கூப்பிட்டு ”இங்கப்பாரு உனக்கு வேனும்னா 2 பெட் 2 போல் எக்ஸ்ராவா தாரன், ஒரு தொப்பியும் தாரன் வாங்கிட்டு பேசாம எல்லாரையும் கூட்டிட்டு கிளம்பு” என்று சொல்ல;

நம்ம நெத்தலி ”இங்கப்பாரு என் டீமுல இருக்குறவனுங்க பிச்சக்கார பசங்கதான் அதுக்காக நீ குடுக்குறத வாங்கிட்டு போயிடுவன் எண்டு நெனச்சுடாத. உன் கண் முன்னாடியே இந்த கிரவ்ண்ட மட்டமாக்கி டீம்ல இருக்குற எல்லாருக்கும் ஆளுக்கொரு பிளாஸ்டிக் பெட், பிளாஸ்டிக் போல் வாங்கிக் குடுத்து இங்கையே விழையாடிக் காட்டுறன்” என்று சவால் விட்டான்.


காட்சி - 3

சவால்ல ஜெயிக்குறது எப்படி எண்டு நெத்தலி யோசிச்சான். பேசாம என்.ஜி.ஓ வெச்சிருக்கிற பவாஸ்கிட்ட போய் ஏதாவது உதவி கேட்டுப் பாப்பம் என்று முடிவெடுத்த நெத்தலி; பவாஸை சந்தித்து தன் தேவையைச் சொன்னான்.

போடாங் ங்கொய்யா நானே எவனாச்சும் ஏதாச்சும் கொண்டுவந்து தரமாட்டானா எண்டு பாத்திடிருக்கன்; எங்கிட்டப் போய்… போடா வேலையப் பாத்துட்டு போ…..” என்று துரத்திவிட்டான்.

நெத்தலிக்கு குழப்பம், யோசிச்சான். ஒரு முடிவெடுத்தான். அதையே செய்தும் முடித்தான்.

சரவணன் லண்டன்ல இருந்து வெள்ளக்காரன் கிட்ட சுட்டுட்டு வந்த லெப்டொப்ப நம்ம நெத்தலி சுட்டு அத வித்து முதல்ல தனக்கு ஒரு லுமாலா சைக்கிளும் அப்புறமா தனது டீம்ல இருக்கிற எல்லாருக்கும் ஆளுக்கொரு பிளாஸ்டிக் பெட், பிளாஸ்டிக் போல் வாங்கிக் கொடுத்தது மட்டுமில்லாம கிரவ்ண்டையும் சரி செய்தான்.

நெத்தலியின் இந்த வீரச் செயலுக்கு உதயபுரமே திரண்டு அவனுக்கு விழா எடுத்துக் கொண்டாடியது.

நெத்தலி எதெல்லாம் பன்றான் இதப் பண்ணமாட்டானா?
                           **********************************

படம் முடிஞ்சுது அடுத்து சேவல்காரன் சாரி காவல்காரனோட சந்திப்போம்




Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS