RSS

10வது உலகக் கிண்ணத்தை வெல்ல இலங்கை அணிக்குள்ள சாதக பாதக நிலைகள்


10வது உலகக் கிண்ண போட்டிகள் தொடர்பாக நான் இடும் இறுதிப் பதிவு இது என நம்புகிறேன்.

10வது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் 2 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில். கிரிக்கட் ரசிகர்களிடம் பரபரப்பு அதிகரித்தவண்ணமே உள்ளது. தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி அனைத்திலும் உலகக் கிண்ணம் தொடர்பான செய்திகளும் அது தொடர்பான விளம்பரங்களும் ஆக்கிரமித்துள்ளன.

வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பரபரப்பு இம்முறை இலங்கையிலும் காணப்படுகிறது. இலங்கை வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்த ஏராளமான விடையங்கள் இடம்பெறுகின்றன. பிரமாண்ட தோல் பந்து, ரசிகர்களின் கை பதிக்கப்பட்ட உலகக் கிண்ண மாதிரி, ரசிகர்களின் கையொப்பமிடப்பட்ட பிரமாண்ட துடுப்பு என்று ஒருபக்கம் இருக்க. மறு பக்கம்
உலகக்கிண்ண பாடல்கள் எக்கச்சக்கமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

சூரியன்,சக்தி,வெற்றி என்று ஒவ்வொரு வானொலிகளும் ஒவ்வொரு பாடல்,இசைக்குளுக்கள் மற்றும் பலர் என்று உலகக் கிண்ண பாடல்களுக்கு பஞ்சமே இல்லாமல் எக்கெச்சக்கமான பாடல்கள்.
இவையெல்லாம் ரசிகர்களாகிய நமக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தாலும் மறுபுறம் எம் வீரர்களுக்கு மிதமிஞ்சிய அழுத்தத்தைக் கொடுத்துவிடுமோ என்ற பயமும் என்னுள் நிலவுகின்றது


இம்முறை உலகக் கிண்ணம் வெல்ல அதிக வாய்புள்ள அணிகளாக நான் சொல்வது
1.இலங்கை
2.இலங்கை
3.இலங்கை
4.இந்தியா
5.தென்னாபிரிக்கா

இது ஒரு புறமிருக்க இம்முறை களமிறங்கும் இலங்கை அணி தொடர்பாக ஒரு பார்வையை செலுத்த ஆவல் கொள்கின்றேன்.

இம்முறை இலங்கை அணியின் சாதக பாதக நிலைகளைப் பார்த்தோமானால்..

முதலில் இலங்கை அணிக்கு பாதகமாக உள்ளவற்றைப்  பார்ப்போம்

என்னைப் பொறுத்தவரை சனத் மற்றும் வாஸ் இல்லாமை இலங்கை அணிக்கு மிகப் பெரும் பாதகமாகவே கருதிகின்றேன்ஆரம்பத்தில் பரவாயில்லை என்று தோன்றினாலும் போகப் போக சனத் மற்றும் வாஸ் இல்லாமை ஒரு பெரும் இழப்பாகவே நான் கருதுகிறேன். இவ்விரு மாபெரும் வரலாற்றுச் சாதனையாளர்களை இந்த உலகக் கிண்ணத்தோடு கெளரவமாக வழியனுப்பியிருக்கலாம் அவர்களின் அனுபவத்தையும் பெற்றிருக்கலாம்…. இனி அதுதான் நடக்காத காரியம் என்றாயிற்றே

அடுத்த பாதகமாக நான் சொல்வது இம்முறை எமது வீரர்கள் மீது ஊடகங்கள் மற்றும் ரசிகர்களால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள்.இவ்வழுத்தங்களால் எமது வீரர்களின் மீது அதிக அழுத்தம் உருவாகி அவர்களின் இயல்பான ஆட்ட்டம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் என்னுள் நிலவுகிறது.

இம்முறை சொந்த நாட்டில் நடைபெறுவதால் கிடைக்கும் மைதான அநுகூலத்தை முழுமையாக பெற்றுக்கொள்ளக் கூடிய அணிகள் பங்களாதேஸ் மற்றும் இந்தியா மாத்திரமே..இலங்கைக்கு இது கிடைக்கப்போவதில்லை,

காரணம் இலங்கையில் போட்டிகள் நடைபெறவுள்ள 3 மைதானங்களும் புதியவை. கெத்தாராம மைதானம் பழையது என்றாலும் அது புனர்நிர்மானம் செய்யப்பட்டு ஆடுகளம் மாற்றப்பட்டுள்ளதால் அதையும் புதிது போன்றே கருதவேண்டியுள்ளது.

இம்மூன்று மைதானங்களிலும் போதியளவு போட்டிகளோ பயிற்சிகளையோ இலங்கை வீரர்கள் மேற்கொள்ளவில்லை என்பது மிகுந்த வேதனையானதும் கவலையானதுமாகும்.இந்த விடையத்தில் இலங்கை கிரிக்கற் அதிகாரிகள் மீது நான் மிகவும் கோபம் கொள்கின்றேன். மிக முக்கியமான தொடர் அதுவும் உலகக் கிண்ணத் தொடர் சொந்த நாட்டில் நடைபெறும் பொழுது உள்ளூர் அணிக்கு எவ்வளவு அனுகூலங்களை எடுத்துக்கொள்ளமுடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கேற்றாற்போல் மைதான வேலைகள், போட்டி அட்டவணைகளை அமைத்திருக்கவேண்டும்….
இப்போது எவ்வித முன்னனுபவமும் இல்லாத மைதானங்களில் சொந்த நாட்டு அணி அதுவும் உலகக் கிண்ணத்தொடரில் ஆடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை…. இதை என்னென்று சொல்வது
சொந்த நாட்டிலேயே பழக்கப்பட்ட பரீட்சையமான மைதானம்/ஆடுகளம் என்ற அநுகூலத்தை உள்ளூர் அணிக்கு பெறமுடியாது என்றால் அப்போட்டி சொந்த நாட்டில் நடந்தால் என்ன வேறு நாட்டில் நடந்தால் என்ன..?
எல்லாம் ஒன்றுதான்..

இறுதிப்போட்டி உற்பட ஏராளமான போட்டிகள் பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவிருப்பதும் இலங்கை அணிக்கு பாதகமாகவே அமையும். காரணம் இரவு வேளையில் பனிப்பொழிவு சாத்தியம் இருப்பதால் சுழல்பந்து வீச்சாளர்களை அதிகம் கொண்ட எமது அணிக்கு பாதகமாகவே இருக்கும். அத்தோடு எமது வேகப்பந்துவீச்சின் முதுகெலும்பான லசித்மாலிங்க சைட் ஆர்ம் எக்சன் மூலம் பந்துவீசுவதால் அவருக்கும் இப்பனிப்பொலிவு சிக்கலாகவே அமையும். பந்தின் வழுக்கும் தன்மை காரணமாக தமது இலக்கில் பந்துவீச பந்துவீச்சாளர்கள் பெரிதும் சிரமப்படுவார்கள்.

இவை எமக்கு பாதகமாக இருக்க மறு புறத்தில் எமது அணிக்கு சாதகமான விடையங்களும் உள்ளன.

என்னதான் பரீட்சையமில்லாத உள்ளூர் மைதானங்கள் என்றாலும் உள்ளூரில் நடைபெறும் போட்டிகள் என்பதால் வீரர்களின் மனநிலைமை அவர்களுக்கு தெம்பாகவே இருக்கும் என நம்பலாம். உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் சொந்த நாட்டில் பரீட்சயமான சீதோஸ்ண நிலையில் ஆடும் போது எமது வீரர்கள் தம் முழுத்திறமையையும் வெளிக்கொணர எவ்வித சிக்கலும் இருக்கப் போவதில்லை. இது இலங்கை அணிக்கு இருக்கும் மிகப்பெரும் சாதகமாகும்.(இந்திய பங்களாதேஸ் அணிகளுக்கும் இது பொருந்தும்)

உலகக்கிண்ணதுக்காக தெரிவாகியிருக்கும் வீரர்கள் உரிய காலகட்டத்தில் ஃபோமுக்கு திரும்பியிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் தைரியத்தையும் கொடுத்திருக்கும். குறிப்பாக டில்ஸான்,தரங்க,மஹெல,சங்ககார என அனைவரும் நல்ல ஃபோமில் இருக்கிறார்கள் அது போல மலிங்க,குலசேகர,முரளி ஆகியோரும் சிறப்பாக செயற்படுவது எமக்கு சாதகத் தன்மையை இன்னும் அதிகரிக்கும்.

எமது சாதனை மன்னன் முத்தைய்யா முரளீதரன் விளையாடும் கடைசி உலகக் கிண்ணம் அல்லது ஒரு நாள் தொடர் இது என்பதால் முரளி தன் முழு முயற்சியையும்,முழுப் பலத்தையும் பிரயோகித்து அணியின் வெற்றிக்காக பெரிதும் போராடுவார். இதுவும் எமக்கு உலகக் கிண்ணம் வெல்லுவதற்கு சாதகமானதே..

கடந்த காலங்களில் குமார் சங்கக்காரவின் தலைமைத்துவம் எனக்குப் பிடிக்கவே இல்லை. போராட்ட குணம், வீரர்களை சரியாக வழி நடத்தல், கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்தல் போன்ற எதுவும் அவரிடம் காணப்பவில்லை. அதிகமாக கோவப்படுதல், பந்துவீச்சாளர்களை ஏசிப்பேசுதல் என்று அவரின் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவே இல்லை. நான் என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லும் விடயம்இலங்கை அணிக்கு ஒரு ஸ்டைல் இருக்கு எப்படியோ தட்டுத்தடுமாறி இறுதிப்போட்டிக்கு வந்து, இறுதிப்போட்டியில் அபாரமாகப் போராடி கிண்ணத்தை வெல்லுவார்கள், ஆனால் சங்ககார தலைவரான பிறகு இலகுவாக இறுதிப்போட்டிக்கு வந்து பரிதாபமாக தோற்றுப் போவார்கள்என்று. ஆனால் இப்போது சங்கக்காரவின் செயற்பாடுகளில் மாற்றம் தெரிகிறது. அத்தோடு மகேல உபதலைவராக இருப்பதால் நம்பிக்கையும் ஆறுதலும் கிடைக்கிறது. இது வீரர்கள் மத்தியிலும் புது உத்வேகத்தைக் கொடுக்கும்.இதுவும் எமக்கு சாதகமானதே.


இளமை + அனுபவம் கலந்த சமபலமான அணி தெரிவு செய்யப்பட்டிருப்பதும், வீரர்களிடம் ஒற்றுமை போராட்ட குணம் அதிகரித்திருப்பது எமக்கு சாதகமானதே..

அவுஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுத் தொடர் வெற்றி, மே..தீவுகள் அணிக்கெதிரான தொடர் வெற்றி, பயிற்சிப் போட்டிகளில் அபார வெற்றி என்று அடுத்தடுத்த வெற்றிகளோடு உலக் கிண்ணத் தொடரை எதிர்கொள்வதால் வீரர்கள் உளவியல் ரீதியாக நல்ல நிலையில் இருப்பார்கள் எனவே இதுவும் எமது அணி கிண்ணம் வெல்ல சாதகமானதே..

இப்படி பாதகங்களை விட சாதகமான தன்மைகள் அதிக இருப்பதால் உலகக் கிண்ணத்தை வெல்வதில் இலங்கை அணிக்கு எவ்வித சிக்கல்களும் இருக்கப் போவதில்லை.

அண்மையில் இலங்கை அணிப் பயிற்றுவிப்பாளர்நாங்கள் வழமைக்கு மாற்றமாக 7 துடுப்பாட்ட வீரர்கள் 4 பந்துவீச்சாளர்களோடு களம் இறங்கப்போகிறோம்என்று கூறியிருந்தார் இது எவ்வாறான திட்டமோ தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் விளையாடப் போகும் இறுதிப் பதினொருவர் :
தரங்க,டில்ஸான்,சங்ககார,மஹெல,சமரவீர,சாமர சில்வா,மெத்தியூஸ்,மலிங்க,முரளி, குலசேகர,ஹெரத்.

இதில் சாமர சில்வாவின் இடம் கபுகெதர-பெரேரா-சாமர சில்வா இவர்களுக்கிடையில் மாறிக்கொள்ளும். ஹெரத்தின் இடம்
மென்டிஸ்-ஹெரத்-பெரேரா-டில்ஹார இவர்களுக்கிடையில் மாறிக்கொள்ளும். என நம்பலாம். இதில் மேற்சொன்ன 11வரும்தான் நான் எதிர்பார்க்கும் அதிகம் சாத்தியமான சிறந்த பதினொருவர்.

இறுதியாக இலங்கை அணியினருக்கு ஒரு விடயம்:
தரங்க,டில்ஸான்,சங்ககார,மஹெல,சமரவீர,சாமர சில்வா,கபுகெதர, ஆகியோர் துடுப்புடனும் மெத்தியூஸ்,மலிங்க,முரளி, குலசேகர,ஹெரத்,டில்ஹார,மெண்டிஸ், பெரேரா பந்துடனும் காத்திருக்க பெர்ஸி அங்கிள் தேசியக் கொடியுடன் சுத்தி சுத்தி வர மைதானம் முழுதும் ரசிகர்கள் நாங்க கரசோசத்தோடு உற்சாகமா இருக்க வேறென்னவேண்டும் உங்களுக்கு…? ஆனால் கிண்ணம் வேண்டும் எங்களுக்கு...

எது எப்படியோ உலகக் கிண்ண இறுதிப்போட்டி நடைபெறவுள்ள ஏப்ரல் இரண்டு என்னுடைய பிறந்த நாள், அன்று எனக்கு கிண்ணத்தை பிறந்த நாள் பரிசாகத் தரவேண்டியது இலங்கை கிரிக்கட் வீரர்களின் பொறுப்பு..

இலங்கை கிரிக்கட்டின் தீவிர ரசிகனான எனக்கு பிறந்த நாள் பரிசாக உலகக் கிண்ணத்தை வென்று தருவார்களா எமது அணியினர்..?
ஆவலோடு காத்திருக்கின்றேன்.

வெற்றி நமக்கே…. இன்ஸா அல்லாஹ்

** உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் அதே காலப்பகுதியிலேயே எனது பல்கலைக் கழக இறுதிப் பரீட்சைகளும் நடைபெறவிருப்பதால் இம்முறை உலகக் கிண்ணத்தை முழுமையாக திருப்தியாக கண்டுகளிக்க முடியுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என்னங்க நீங்க இப்புடி சொல்றீக லவ் பன்றன்னா சும்மாவா?


என்னங்க நீங்க இப்புடி சொல்றீக ஒரு பிள்ளைய லவ் பன்றன்னா சும்மாவா? அந்த பிள்ளைய மடக்குறதுக்கு எவ்வளவு கஸ்டமெண்டு தெரியுமா?


முதல்ல ஒரு பிள்ளையைப் பாக்கனும் அத நமக்குப் பிடிக்கனும். அதுக்கப்புறம் அது பின்னால போய் அதுட வீடெங்க இருக்கு, அம்மா அப்பா யாரு? தம்பி தங்கச்சி விசேசமா அண்ணா இருக்கானா என்டு விசாரிக்கனும் சும்மாவா?

அதுக்கப்புறம் அந்த ரோட்டுல நாம சுத்துற சுத்துவையிலேயே ரோடு பள்ளமாகி கொஞ்ச நாள்ள அந்த ஏரியாக்காரங்க தண்ணியெடுக்குற அழவுக்கு கிணறு மாதிரி பள்ளமாகனும். என்னாங்குறீங்க?

அந்த பிள்ளட வீட்டுக்கு பக்கதுல எவனையாவது கூட்டாளி பிடிக்கனும். அவன் வீட்ட அடிக்கடி போய் வரனும். அந்த டைம்ல நம்மாள லுக்குவிடனும்.
ஏலுமாயிருந்தா நம்மாளு தம்பிய கரெக்ட் பண்ணனும். அவனுக்கு டொபிகள், சொக்லேட்டுகள் கொடுத்து நம்ம பக்கம் வெச்சிக்கனும். அடிக்கடி அப்டேட்டுகள அவன்கிட்ட இருந்தே எடுத்துக்கனும்.

பைசிகிள்ள போனா சரியா  நம்மாளு வீட்டுக்கு முன்னாடியே செயின் கலர்ர மாதிரி பைசிகள் செயினுக்கு ஒரு ப்ரோகிறாம் பண்ணி வெக்கனும். சரியா அவ வீட்டு முன்னாடியே செயின் கலரணும், அத போடுற சாக்குல லுக்குவிடனும். கொஞ்சம் தில்லிருந்தா கையில கிறீஸ் பட்டுடுன்னு சொல்லி அவங்க வீட்டுலையே கை கழுவ தண்ணி கேக்கணும். நம்மாளே தண்ணி கொண்டுவந்து தந்தா நமக்கு எங்கையோ மச்சமிருக்கு. அவங்க அம்மாவோ வேற யாருமோ தண்ணி கொண்டுவந்து தந்தா சொறி.கொம்

மோட்டார் சைக்கிள்ள போனா சரியா அவங்க வீட்டு முன்னாடியே ஸ்டார்ட் நிக்கனும். (அதுக்கும் ஜாவாவுல ஒரு ப்ரோகிராம் பண்ணி வெக்குறது நல்லது) ஸ்டார்ட் எடுக்குரமாதிரி எடுக்கனும் ஆனா ஸ்டார்ட் வரப்படாது. அப்புறம் Choke கலட்டி என்னமோ பன்னனும். அந்த நேரத்துலயும் அவள பாக்குறதே நம்ம Targetta இருக்கனும்.

சொந்தக்காரங்க, அல்லது தெரிஞ்சவங்க கல்யாணம் நடக்கப் போகுதுன்னு வைங்க. நம்மாளு ஏரியாவுல கல்யாணக் கார்ட் கொடுக்குற  பொறுப்ப சில பல பில்ட்-அப்புகளோட நாமளே ஏத்துக்கணும்(உடனே நான் அந்த ஏரியாவுல போய் குடுக்கன் எண்டு சொல்லிடப்படாது….. காரணம் நம்ம நண்பர்கள் கண்டுபிடிச்சிடுவானுகள். அந்த ஏரியாவுல கார்ட் குடுக்க வேண்டி இருந்தாலும் சரி, இல்லாட்டியும் சரி நம்மாளு வீட்ட போய் யாரோ ஒரு இழிச்சவாயன் பெயர சொல்லி இவர்ட வீடு எங்க இருக்குனு கேக்கனும். அப்ப கூட நம்மாளுக்கு கலர்ஸ் காட்ட மறந்துடப்படாது.

பிள்ள ஸ்கூலுக்கு வரும் போது காவலுக்கு நாமளும் கூட பின்னாடி வரனும்.
ஸ்கூல் விட்டுப் போகும்போது கூடவே போய் அவிங்க வீட்ட விடனும். ட்யூசன் வகுப்புக்கு வரும் போதும் அப்படித்தான்.
இதெல்லாம் நம்ம மீதுள்ள சமூகப் பொறுப்பு. அவிங்க குடுமபத்தாளுகளுக்கு இல்லாத அக்கறை நமக்கு இருக்கோனும். இல்லனா எப்படி மடக்குறது யோசிங்க…?

நம்மாளு நம்ம கூடவே படிக்கிற பொண்ணா இருந்தா ரொம்ப லேசு. இல்லன்னாலும் பரவா இல்ல. சமாளிக்கலாம்.

கெண்டீன், தண்ணீர்க் குழாய், காலை ஆராதனைக் கூட்டம் இதெல்லாம் நம்மாள கரெக்ட் பண்ண பாடசாலை சூழல் தந்த அற்புத சந்தர்ப்பங்கள்மிஸ்பண்ணிடப்புடாது.

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டீ, மாணவர் மன்றம், இலக்கிய மன்றம், பாடசாலை சுற்றுலாஇதெல்லாம் எதுக்கூங்குறன்…?
எல்லாம் நம்ம காதல டெவலப் பண்ணத்தான். இதுகள எல்லாம்  நல்ல யூஸ் பண்ணிக்கனும். அப்புறம் வடபோச்சேன்னு பீல் பண்ணப்புடாது.

இதெல்லாம் நீண்டகால நடவடிக்கைங்கசும்மாவா…? ஒரு பொண்ண லவ் பண்ண வெக்கிரண்டா சும்மாவா…?

எவ்வளவு கஸ்ட்டம் எவளவு செலவுஅதெல்லாம் அனுபவிக்கனுங்க….
எதையும் தாங்கும் இதையம் போல், உதையும் தாங்கும் உடம்பும் வேணும்...இல்லன்னா லவ் பண்ண முடியுமா...?

இந்த காதலால விழும் அடி உதை சிறுசாக இருந்தாலும் அந்த பொன்னு முன்னாடி பெரிய அடியாகவும், மத்தவங்க முன்னாடி அடியே வாங்காத மாதிரியும் நடிக்கனும், இதுக்கு ரொம்ப நடிப்புத் திறமையும் வேணும்.

முக்கியமா அந்த பொண்ண சுற்றி நம்ம வலைப்பின்னல்கள உருவாக்கனும். உதாரணமா அவளின் நெருங்கிய தோழி, பக்கத்து வீட்டு பைய்யன் அல்லது பொண்ணு இப்படி. அப்பதான் அவள் எங்க போறாள் எப்ப போறாள் எல்லா தகவலும் கிடைக்கும். என்ன நான் சொல்றது.

இப்பிடி நிறைய ஐட்டங்கள் கஸ்ட்டங்கள் இருக்கு பாஸ், சொல்லிகிட்டே போகலாம்.

இப்பிடி ரொம்பக் கஸ்ட்டப்பட்டு அந்தப் பொண்ண இம்ப்ரெஸ் பண்ணி நம்ம லவ்வ சொல்லப் போறப்போ.. அது நமக்கு சக்ஸஸ் ஆகலாம் சக்ஸஸ் ஆகாமையும் போகலாம்.. இப்படிக் கஸ்ட்டப்பட்டு சக்ஸஸ் ஆனா நமக்கு உடம்புல மச்சம், கஸ்ட்டம எதுவுமே இல்லாம சக்ஸஸ் ஆனா நமக்கு மச்சத்துல உடம்பு.

ஆனா சக்ஸசே ஆகலன்னா .................???
அதுக்காக மனசு தளரப்புடாது நெஞ்சு உடஞ்சிடப்புடாது.

அடுத்த ரூட்டுல மாறிப்போயிட்டே இருக்கனும். இது சம்பந்தமா சுவாமி கமலானந்த என்ன சொல்றாருன்னா..? “ ஒரு டாக்டர் பொண்ணூ நோ சொன்னா ஒரு நேர்ஸ் பொண்ண காதலிஅப்படின்னு  மிகப் பெரிய தத்துவத்த 2 வரில சொல்லிட்டாரு.  அதையே நாம ஃபலோ பண்ணனும் என்ன…?

எப்படியோங்க……
காதலை புனிதமாகப் பேணும் காதலர்களுக்கு என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மலேசியாவில் அப்புக் குட்டி


நம்ம அப்புக்குட்டிக்கு நீண்ட நாட்களா மலேசியா போகனும்னு ஆசை. அதுக்கு கைவசம் போதிய பணமில்ல, ஆனாலும் தீராத ஆசை. எப்படியாவது மலேசியா போய்த்தான் ஆகனும். என்ன பண்ணலாம் எண்டு மல்லாக்க படுத்து மணிக்கணக்கா யோசிச்சாரு நம்ம அப்பு. ஏதோ ஒரு ஐடியா உதிச்சுது.

அந்த ஊர்ல ஊர்காவி உலகநாதன் அப்படின்னு ஒருத்தன். அதென்ன ஊர் காவி உலகநாதன். ஆமாங்க அவன் படகு மூலமா வேறு ஊருக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ சட்ட விரோதமா ஆட்கள காவிக்கொண்டுபோய் விடுவான். அதனாலதான் அவன் பெயரு ஊர்காவி உலகநாதன்.

அவன் ஞாபகம்தான் நம்ம அப்புக் குட்டிக்கு வந்துது. அவன போய் சந்திச்சுப் பேசினா குறைஞ்ச செலவுல மலேசியா போயிடலாம் எண்டு நம்பிக்கையில் உலகநாதன போய் சந்திச்சுது நம்ம அப்புக் குட்டி.

சரி குறைஞ்ச செலவுல உன்னைக் கொண்டுபோய் விடுறன், ஆனா நீ இன்னும் 5 பேர சேர்த்துக்கிட்டு வரனும். இல்லன்னா ரொம்ப செலவாகும்.”.. என்று உலகநாதன் கராரா சொல்லிட்டான்.

அப்புக் குட்டியும் ஊரெல்லாம் சுற்றி 5 பேரை சேத்துக்கிட்டாரு. அவனுங்களும் வேலை வெட்டி இல்லாம வெளிநாடு போற கனவுல இருந்த பயபுள்ளைங்க. அப்புக்குட்டியும்.. "மலேசியால நல்ல வேலைகிடைக்கும் நல்ல சம்பளம் வாங்க போகலாம்" எண்டு மூழைச் சலவை செய்து கூட்டி வந்துட்டார்.

எல்லாரும் பேசின படி காசக் கொடுத்துட்டாங்க.
ஊர் உறவுகளுக்கு பிரியாவிடை சொல்லி கண்ணீர்மல்க பயணம் ஆரம்பம்.

ஊர்காவி உலகநாதன் எல்லாரையும் படகில் ஏற்றி ஆழ்கடல்ல சுத்துறான் சுத்துறான் எங்க போகுது எங்க வருது ஒன்னுமே புரியல இருக்குற 6 பேருக்கும். படகு கடல்ல போயிட்டே இருக்கு. இவங்களும் மலேசியாக் கனவோட அவங்க அவங்க திட்டங்கள பேசிட்டே போனாங்க.

எப்படியோ பல மணி நேர பயணத்தின் பின் படகு ஒரு மணல் மேட்டை அண்மித்தது. படகை நிறுத்திய ஊர்காவி உலகநாதன். “இங்கப் பாருங்க. அதோ தெரியுதே அதுதான் மலேசியா, போட்டுல அங்கால போகமுடியாது.. மலேசியா கடல் படை ,பொலீஸ் எல்லாம் நிக்கும்.நீங்க இந்த மணல் மேடு வழியா போனீங்கன்னா இலகுவாப் போயிடலாம். என்று சொல்லி எல்லாரையும் இறக்கிட்டு திரும்பிப் போயிட்டான்.

அப்புக் குட்டி தலைமையிலான குழு மலேசியா வந்து சேர்ந்த பெருமை + மகிழ்ச்சியோடு ஓட்டமும் நடையுமாக உட்சாகமாக மணல் திட்டு வழியா நகரத்துக்கு வந்து சேர்ந்தாங்க.

அப்பதான் அப்புக் குட்டிட குழுவில் இருந்த ஒருத்தன் டேய் அங்கப்பாருடா என்று கத்தினான். எல்லாரும் அவன் காட்டின திசையில பார்த்தா…….

கொழும்பு - கற்பிட்டி இலங்கைப் போக்குவரத்து சபை பஸ் போகுது.

அடப்பாவி உலகநாதா…. மலேசியா எண்டு சொல்லி கற்பிட்டில கொண்டுவந்து விட்டுட்டியேடா பாவிஎன்று எல்லோரும் ஒப்பாரி வைத்தார்கள். கூடவே அப்புக் குட்டிக்கு ஆத்திரம் அடங்குமட்டும் கும்மிட்டு போயிட்டாங்க.

ஆனால் அப்புக் குட்டிக்கு அடி எல்லாம் வலிக்கவே இல்ல. அத விட்டுட்டு அப்பு  ஏதையோ ஆழமாய் யோசித்தார்

இலங்கைப் போக்குவரத்து சபை (சி.டி.பி)பஸ் இங்க எங்க வந்துச்சு..? ஒருவேளை மலேசியாக்கு இலங்கைல இருந்து நேரடி பஸ் போட்டுட்டாய்ங்களோ..? 
அடச்சே அநியாயமா இவ்வளவு காசு குடுத்து படகுல வந்தத இந்த பஸ்ல வந்திருக்கலாமேசெலவு மிச்சமாயிருக்குமே என்று பீல் பண்ணத் தொடங்கிட்டார்.

பிட்டு: பாவம் பயபுள்ள கற்பிட்டிய மலேசியான்னு நினச்சு அங்கதான் சுத்திக்கிட்டு திரியுது. யாராச்சும் கண்டா பயபுள்ளைய பிடிச்சு பஸ் ஏத்திவிடுங்க.





Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் தாய் நாட்டிற்கு இன்று 63வது சுதந்திர தினம்.


என் தாய் நாட்டிற்கு இன்று 63வது சுதந்திர தினம்.
(ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா)
ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
(சிங்கள மொழியிலான தேசிய கீதம்)
Sri Lanka Matha, apa Sri Lanka, 
Namo Namo Namo Namo Matha. 
Sundara siri barini, 
Surändi athi Sobamana Lanka 
Dhanya dhanaya neka mal pala thuru piri, jaya bhoomiya ramya. 
Apa hata säpa siri setha sadana, jee vanaye Matha! 
Piliganu mana apa bhakti pooja, 
Namo Namo Matha. 
Apa Sri Lanka, 
Namo Namo Namo Namo Matha, 
apa Sri Lanka, Namo Namo Namo Namo Matha. 

Obave apa vidya obamaya apa sathya obave apa shakti 
apa hada thula bhakti oba apa aloke 
apage anuprane oba apa jeevana ve 
apa muktiya obave 
Nava jeevana demine nithina apa 
Pubudu karan matha 
Gnana veerya vadavamina ragena yanu 
mana jaya bhoomi kara 
Eka mavekuge daru kala bavina 
yamu yamu wee nopama 
Prema vadamu sama bheda durara da Namo Namo Matha 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS