என்னங்க நீங்க இப்புடி சொல்றீக ஒரு பிள்ளைய லவ் பன்றன்னா சும்மாவா? அந்த பிள்ளைய மடக்குறதுக்கு எவ்வளவு கஸ்டமெண்டு தெரியுமா?
முதல்ல ஒரு பிள்ளையைப் பாக்கனும் அத நமக்குப் பிடிக்கனும். அதுக்கப்புறம் அது பின்னால போய் அதுட வீடெங்க இருக்கு, அம்மா அப்பா யாரு? தம்பி தங்கச்சி விசேசமா அண்ணா இருக்கானா என்டு விசாரிக்கனும் சும்மாவா?
அதுக்கப்புறம் அந்த ரோட்டுல நாம சுத்துற சுத்துவையிலேயே ரோடு பள்ளமாகி கொஞ்ச நாள்ள அந்த ஏரியாக்காரங்க தண்ணியெடுக்குற அழவுக்கு கிணறு மாதிரி பள்ளமாகனும். என்னாங்குறீங்க?
அந்த பிள்ளட வீட்டுக்கு பக்கதுல எவனையாவது கூட்டாளி பிடிக்கனும். அவன் வீட்ட அடிக்கடி போய் வரனும். அந்த டைம்ல நம்மாள லுக்குவிடனும்.
ஏலுமாயிருந்தா நம்மாளு தம்பிய கரெக்ட் பண்ணனும். அவனுக்கு டொபிகள், சொக்லேட்டுகள் கொடுத்து நம்ம பக்கம் வெச்சிக்கனும். அடிக்கடி அப்டேட்டுகள அவன்கிட்ட இருந்தே எடுத்துக்கனும்.
பைசிகிள்ள போனா சரியா நம்மாளு வீட்டுக்கு முன்னாடியே செயின் கலர்ர மாதிரி பைசிகள் செயினுக்கு ஒரு ப்ரோகிறாம் பண்ணி வெக்கனும். சரியா அவ வீட்டு முன்னாடியே செயின் கலரணும், அத போடுற சாக்குல லுக்குவிடனும். கொஞ்சம் தில்லிருந்தா கையில கிறீஸ் பட்டுடுன்னு சொல்லி அவங்க வீட்டுலையே கை கழுவ தண்ணி கேக்கணும். நம்மாளே தண்ணி கொண்டுவந்து தந்தா நமக்கு எங்கையோ மச்சமிருக்கு. அவங்க அம்மாவோ வேற யாருமோ தண்ணி கொண்டுவந்து தந்தா சொறி.கொம்
மோட்டார் சைக்கிள்ள போனா சரியா அவங்க வீட்டு முன்னாடியே ஸ்டார்ட் நிக்கனும். (அதுக்கும் ஜாவாவுல ஒரு ப்ரோகிராம் பண்ணி வெக்குறது நல்லது) ஸ்டார்ட் எடுக்குரமாதிரி எடுக்கனும் ஆனா ஸ்டார்ட் வரப்படாது. அப்புறம் Choke கலட்டி என்னமோ பன்னனும். அந்த நேரத்துலயும் அவள பாக்குறதே நம்ம Targetta இருக்கனும்.
சொந்தக்காரங்க, அல்லது தெரிஞ்சவங்க கல்யாணம் நடக்கப் போகுதுன்னு வைங்க. நம்மாளு ஏரியாவுல கல்யாணக் கார்ட் கொடுக்குற பொறுப்ப சில பல பில்ட்-அப்புகளோட நாமளே ஏத்துக்கணும்(உடனே நான் அந்த ஏரியாவுல போய் குடுக்கன் எண்டு சொல்லிடப்படாது….. காரணம் நம்ம நண்பர்கள் கண்டுபிடிச்சிடுவானுகள். அந்த ஏரியாவுல கார்ட் குடுக்க வேண்டி இருந்தாலும் சரி, இல்லாட்டியும் சரி நம்மாளு வீட்ட போய் யாரோ ஒரு இழிச்சவாயன் பெயர சொல்லி இவர்ட வீடு எங்க இருக்குனு கேக்கனும். அப்ப கூட நம்மாளுக்கு கலர்ஸ் காட்ட மறந்துடப்படாது.
பிள்ள ஸ்கூலுக்கு வரும் போது காவலுக்கு நாமளும் கூட பின்னாடி வரனும்.
ஸ்கூல் விட்டுப் போகும்போது கூடவே போய் அவிங்க வீட்ட விடனும். ட்யூசன் வகுப்புக்கு வரும் போதும் அப்படித்தான்.
இதெல்லாம் நம்ம மீதுள்ள சமூகப் பொறுப்பு. அவிங்க குடுமபத்தாளுகளுக்கு இல்லாத அக்கறை நமக்கு இருக்கோனும். இல்லனா எப்படி மடக்குறது யோசிங்க…?
நம்மாளு நம்ம கூடவே படிக்கிற பொண்ணா இருந்தா ரொம்ப லேசு. இல்லன்னாலும் பரவா இல்ல. சமாளிக்கலாம்.
கெண்டீன், தண்ணீர்க் குழாய், காலை ஆராதனைக் கூட்டம் இதெல்லாம் நம்மாள கரெக்ட் பண்ண பாடசாலை சூழல் தந்த அற்புத சந்தர்ப்பங்கள்… மிஸ்பண்ணிடப்புடாது.
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டீ, மாணவர் மன்றம், இலக்கிய மன்றம், பாடசாலை சுற்றுலா… இதெல்லாம் எதுக்கூங்குறன்…?
எல்லாம் நம்ம காதல டெவலப் பண்ணத்தான். இதுகள எல்லாம் நல்ல யூஸ் பண்ணிக்கனும். அப்புறம் வடபோச்சேன்னு பீல் பண்ணப்புடாது.
இதெல்லாம் நீண்டகால நடவடிக்கைங்க… சும்மாவா…? ஒரு பொண்ண லவ் பண்ண வெக்கிரண்டா சும்மாவா…?
எவ்வளவு கஸ்ட்டம் எவளவு செலவு… அதெல்லாம் அனுபவிக்கனுங்க….
எதையும் தாங்கும் இதையம் போல், உதையும் தாங்கும் உடம்பும் வேணும்...இல்லன்னா லவ் பண்ண முடியுமா...?
இந்த காதலால விழும் அடி உதை சிறுசாக இருந்தாலும் அந்த பொன்னு முன்னாடி பெரிய அடியாகவும், மத்தவங்க முன்னாடி அடியே வாங்காத மாதிரியும் நடிக்கனும், இதுக்கு ரொம்ப நடிப்புத் திறமையும் வேணும்.
முக்கியமா அந்த பொண்ண சுற்றி நம்ம வலைப்பின்னல்கள உருவாக்கனும். உதாரணமா அவளின் நெருங்கிய தோழி, பக்கத்து வீட்டு பைய்யன் அல்லது பொண்ணு இப்படி. அப்பதான் அவள் எங்க போறாள் எப்ப போறாள் எல்லா தகவலும் கிடைக்கும். என்ன நான் சொல்றது.
இப்பிடி நிறைய ஐட்டங்கள் கஸ்ட்டங்கள் இருக்கு பாஸ், சொல்லிகிட்டே போகலாம்.
இப்பிடி ரொம்பக் கஸ்ட்டப்பட்டு அந்தப் பொண்ண இம்ப்ரெஸ் பண்ணி நம்ம லவ்வ சொல்லப் போறப்போ.. அது நமக்கு சக்ஸஸ் ஆகலாம் சக்ஸஸ் ஆகாமையும் போகலாம்.. இப்படிக் கஸ்ட்டப்பட்டு சக்ஸஸ் ஆனா நமக்கு உடம்புல மச்சம், கஸ்ட்டம எதுவுமே இல்லாம சக்ஸஸ் ஆனா நமக்கு மச்சத்துல உடம்பு.
ஆனா சக்ஸசே ஆகலன்னா .................???
அதுக்காக மனசு தளரப்புடாது நெஞ்சு உடஞ்சிடப்புடாது.
அடுத்த ரூட்டுல மாறிப்போயிட்டே இருக்கனும். இது சம்பந்தமா சுவாமி கமலானந்த என்ன சொல்றாருன்னா..? “ ஒரு டாக்டர் பொண்ணூ நோ சொன்னா ஒரு நேர்ஸ் பொண்ண காதலி” அப்படின்னு மிகப் பெரிய தத்துவத்த 2 வரில சொல்லிட்டாரு. அதையே நாம ஃபலோ பண்ணனும் என்ன…?
எப்படியோங்க……
காதலை புனிதமாகப் பேணும் காதலர்களுக்கு என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
2 comments:
அப்ப்ப்ப்ப்ப்பாடா.... எவ்வளவு சிரமம்?
ரொம்ப ஆஆ.....ராய்ச்சி செய்து
மிக விரிவாய் தொகுத்துள்ளீர்கள்,
டாக்டர் அஹமத் சுஹைல்!
(முதல் வடையா?)
@NIZAMUDEEN
மொத்த வடையும் உங்களுக்குத்தான்.
நீண்ட நாட்களுக்கு அப்புறம்.. ஏரியாப்பக்கம்.. என்னாச்சூ...???
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
கருத்துரையிடுக