RSS

பிரபல பாடகர் Akon இலங்கை வர விசா மறுப்பு.

பிரபல பாடகர் Akon இலங்கை வருவதற்கான வீசா வழங்க இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது நம்மனைவருக்கும் தெரிந்ததே…… இது தொடர்பான பதிவொன்றை சற்றுத் தாமதமானாலும் உங்களோடு ஆர்வத்தோடு பகிர்ந்துகொள்கின்றேன்.   
உலகப் புகழ் பெற்ற பாடகர் Akon தனது பாடல்களால் பல ரசிகர்களையும், புகழையும் சம்பாதித்ததோடு பல எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர். Smack that, Naanaa போன்ற இவரது பல பாடல்கள் மிகப் பிரபல்யமானவை. அதே வேளை I wana ……………… you,  My …………….. என்ற சில பாடல்களின் மூலம் பலரது எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர்.Akon பங்கு கொள்ளும் மாபெரும் இசை நிகழ்ச்சியொன்றை MTV/MBC நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறவிருந்தது.இருந்தபோதும் Akon இலங்கை வருவதற்குரிய விசாவினை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துவிட்டது.

இதன் காரணமாக பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டதோடு பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.ஆனாலும் Akon இற்கு விசா வழங்க மறுத்ததில் எந்தவித அரசியல் காரணமும் இல்லை என்று கூறும் அரசாங்கம் தன் தரப்பு நியாயங்களையும் தெரிவித்திருந்தது.இவரது பாடலொன்றின் காட்சியில் புத்தரின் உருவப்படத்தினை பிண்ணணியாக வைத்து அரை நிர்வாணப் பெண்கள் நடனமாடிய காட்சி இடம்பெற்றிருந்தது. இது புத்தரையும் பெளத்த மதத்தினைப் பின்பற்றுபவர்களையும் அவமானப்படுத்துவதாக அமைந்திருந்தது. இதனால் இவர் உலகலாவிய ரீதியில் பெளத்தர்களின் எதிர்ப்பினைச் சம்பாதித்துக்கொண்டார்.Akon இன் பல பாடல்களில் ஆபாச வார்த்தைகள் அதிகம் காணப்படுவதாகவும், பல பாடல்கள் பெளத்த சமயத்திற்கு முரணாணவை என்றும் அவர் இலங்கையில் பாடுவதற்கு தயாரித்து வைத்திருந்த பாடல்கள் சிலவும் பெளத்த சமய விழுமியங்களை மீறும் வகையில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அரசாங்கம் பெற்றுத் தந்த சுதந்திரம் சமாதானதும், சுபீட்சமானதும் வாழ்க்கைக்கே தவிர பெளத்த மத கலாச்சாரங்களையும், விழுமியங்களையும் கெடுப்பதற்கல்ல என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.மேலும் Akon இன் இவ் இசை நிகழ்ச்சிக்காக 2500 ரூபா - 25000 ரூபா வரை டிக்கட்டுக்கள் விக்கப்பட்விருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.Akon இன் வருகையை பல சமயத் தலைவர்களும், மதக் குழுக்களும் எதிர்த்திருந்தன.இது போன்ற பல காரணங்களை ஆராய்ந்த பின்னரே Akon இற்கு இலங்கை வர விசா வழங்குவதில்லை என்ற முடிவை அரசாங்கம் எடுத்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

ரஜரட்டைப் பல்கலைக் கழகம் கால வரயறையின்றி மூடப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு முதல் அனைத்து மாணவர்களும் வளாகத்தைவிட்டு வெளியேறவேண்டும் என உத்தரவு.

இது ஒரு கறுப்பு சரித்திரம்
இலங்கை ரஜரட்டைப் பல்கலைக் கழகத்தின் மிகிந்தலை வளாகத்தில் பிரயோக விஞ்ஞான பீடம், முகாமைத்துவ  பீடம், சமூக விஞ்ஞான பீடம் என்பன அமைந்திருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் முகாமைத்துவ பீட மாணவர்கள் சிலருக்கும் பிரதேசவாசிகள் சிலருக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது. இதனால் கோபமுற்ற பிரதேச வாசிகள் பல்கலைக் கழக
 மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர். பிரச்சினையில் சம்பந்தப்படாத, ஏனைய பீட மாணவர்களும் பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு இலக்கானார்கள். இதனால் பிரச்சினை பூதகரமானது மட்டுமல்லாமல் பிரச்சினை மொத்த பல்கலைக் கழக மாணவர்களுக்கும் ஊரவர்களுக்கும் என்று மாற்றம் பெற்றது.

நேற்றிரவு 8 மணியளவில் ஊர்மக்கள் ஒன்று கூடி வந்து மாணவர் விடுதிகளைத் தாக்கினர். இதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள் திருப்பித் தாக்கியதில் ஊர் மக்களில் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பிரச்சினை இன்னும் பெரிதானது.

ஊர்மக்கள் தொடர்ந்தும் பல்கலைக் கழகத்தினுள்ளும், விடுதிகளினுள்ளும் நுழையமுற்பட்டபோதும் மாணவர்களின் கடுமையான எதிர்த் தாக்குதல்களினால் அவை முறியடிக்கப்பட்டன. ஆனாலும் பல்கலைக் கழக வளாகத்திற்கு வெளியே நின்று கற்களைக் கொண்டு தாக்கியதில் கட்டிடங்களுக்கு ஓரளவு சேதமேற்பட்டது.

அதே வேளை பல்கலைக் கழகத்திற்கு வெளியே பலகலைக் கழக நிருவாகத்தின் கீழ் இயங்கிவரும் விடுதிகளுக்குள்  நுழைந்தவர்கள் அவற்றைச் சேதமாக்கியதோடு, சில பொருட்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர். 

பல்கலைக் கழக வளாகத்திற்கு வெளியே பல விடுதிகள் அமைந்திருந்தன. அவற்றில் ஊர்மக்களை எதிர்க்கக் கூடிய அளவிற்கு மாணவர்கள் தங்கியிருக்கவில்லை.  இதனால் ஊர்மக்கள் திரண்டு வருவதை அறிந்த மாணவர்கள் நட்ட நடு இரவில் அங்கிருந்து உடனடியாக வெளியேறி அருகிலுள்ள பற்றைக் காடுகளுக்குள் பதுங்கியிருந்தனர். இதனால் மாணவர்களுக்கு பாதிப்புகள் வரவில்லை. அதிகாலை 3மணிவரை பற்றைகளுக்குள் தஞ்ஞமடைந்திருந்த மாணவர்கள் பொலிசாரினால் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு பல்கலைக் கழக வளாகத்தினுள் அமைந்திருக்கும் விடுதிகளில் சேர்க்கப்பட்டனர்.

இதேவேளை தகவல் அறிந்து விரைந்துவந்த பொலீசார் பல்கலைக் கழகத்தின் பிரதான நுழைவாயிலில் மட்டுமே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். ஏனைய பகுதிகளில் அவர்கள் நிறுத்தப்படவில்லை. இதனால் மற்றய பகுதிகளினூடாக ஊர்மக்கள் நுழைய முற்படுவதும், கற்களைக் கொண்டு தாக்குவதும் தொடர்ந்தும் நிலவியது.

இதனைத் தடுக்க அனைத்து மாணவர்களும் இணைந்து சுழற்சி முறையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர். கிரிக்கட் துடுப்பு மட்டை, விக்கட், தடிகள் மற்றும் இரும்புக் குழாய்கள் சகிதம் களமிறங்கிய மாணவர்கள் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  வெளி விடுதிகளிலுள்ள மாணவர்கள் அனைவரும் பல்கலைக் கழக வளாகத்திற்குள் அழைத்து வரப்பட்டதோடு, அனைத்து மாணவ, மாணவியரும் பல்கலைக் கழக வளாகத்தின் மத்திய பகுதிகளில் அமைந்திருந்த விடுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.(காரணம் ஏனைய விடுதிகளுக்கு கல்லெறித் தாக்குதல் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.)

உயரமான கட்டிடங்களின் மேல் ஏறிய சில மாணவர்கள் அங்கிருந்து கொண்டு கையடக்கத் தொலைபேசி மூலமாகவும்,  விசேட சமிஞ்ஞைகள் மூலமாகவும் வெளியே நடக்கும் விடயங்களையும், ஊர்மக்களின் நடமாட்டங்களையும் பற்றித் தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தனர்.
யாரவது சந்தேகத்திற்கிடமாக நடமாடினாலோ, அல்லது வளாகத்திற்குள் நுழைய முற்பட்டாலோ உடனே தகவல் கீழே தயார் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு திரண்டுவந்து தாக்குதல்களை நடத்தி அவர்களை விரட்டியடிப்பர்.

இந்த பாதுகாப்பு நடைமுறை சுழற்சி முறையில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டது. இதன் மூலம் பிரதேசவாசிகள் வளாகத்திற்குள் நுழைய பல தடவைகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.

இதேவேளை மறுநாள் காலை உபவேந்தர் தலைமையில் ஒன்று கூடிய பல்கலைக் கழக செனற் சபை நிலைமைகளை ஆராய்ந்தபின்னர் பல்கலைக் கழகம் நண்பகல் 12.30 இலிருந்து காலவரையறையின்றி மூடப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் மாலை 4 மணிக்கு முதல் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும், மாணவர்களின் வெளியேற்றத்திற்குரிய பாதுகாப்பை செய்து தருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் முன்னதாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 4 மாணவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலீசார் அறிவித்திருந்தனர். எனவே அந்த 4 மாணவர்களும் விடுதலை செய்யப்படும்வரை யாரும் வெளியேறப் போவதில்லை என்று அனைத்து மாணவர்களும் உறுதியாகத் தெரிவித்திருந்தனர். இதனால் பல்கலைக் கழக மாணவ சங்கத் தலைவர்கள், பல்கலைக் கழக நிருவாகிகள் மற்றும் பொலீசாருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கைதான அந்நான்கு மாணவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பல்கலைக் கழக வளாகத்தைவிட்டு வெளியேற இணங்கிக் கொண்டனர்.  அதேவேளை வெளியே முறுகல் நிலை தொடர்ந்தவண்ணமே இருந்தது.

மாணவர்களை பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பிரகாரம் மாணவர்கள் அனைவரும் பல்கலைக் கழக பஸ் வண்டிகள் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு பொலீசார் மற்றும் இலங்கை இராணுவத்தின் கஜபா படையினரின்(மோட்டார் வண்டிப் படையணியினரின்) விசேட பாதுகாப்போடு ஊர்மக்களின் கூக்குரல் மற்றும் எதிர்ப்புகளையும் கடந்து அநுராதபுரம் பிரதான பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டனர்.

தற்போது பல்கலைக் கழகத்திற்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அநேகமாக ஏப்ரல் விடுமுறையின் பின்னரே பல்கலைக் கழகம் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பல்கலைக் கழகம் வரும்போது மிகிந்தலை மக்கள் பிரச்சினைகளை மறந்து மன்னித்து ஏற்றுக் கொள்வார்களா? இல்லை மனதில் வைராக்கியம் வைத்து கொலை வெறியோடு பழிவாங்கப் போகிறார்களா..?
இறைவனுக்கே வெளிச்சம்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

விடிய விடிய பேசிக் கொண்டே இருக்கலாம் யாருக்கும் தெரியாமலே…

               என்ன கொடும சார் - பகுதி 1

நான் ஒன்றும் காதலுக்கு எதிரியல்ல, காதலில் விரக்தியுற்றவனுமல்ல..
ஆனாலும் காதலிப்பவர்களின் அட்டகாசங்களைக் கண்டு நொந்து நூலாகியவன்..


ஊரில் - பாடசாலை மாமர நிழலிலும், பொது நூலக குட்டிச் சுவரிலும், பல்கலைக் கழகத்தில் - மர நிழல் கதிரைகளிலும், வாகனத் தரிப்பிடங்களிலும் விடுதியில் - விடுதி முற்றத்திலும், திண்ணையிலும் உற்கார்ந்துகொண்டு பூப்பறிக்கும் காதலர்களைப் பார்த்து என்ன கொடும சார் இது என்று கவலைப் பட்டவன்.நம்ம நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள்.  தங்கள் காதலியரோடு விடிய விடயப் பேசிவிட்டு விடிந்தெழும்பியும் பேசுவார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியாது பக்கத்தில் தூங்கிக் கொண்டிருப்பவனுக்குக் கூட கேட்காத அளவிற்கு பல மணி நேரங்கள் பேசுவார்கள். நன்றாகப் படித்துக் கொண்டிருப்பவன் திடீரென தானாப் பேசுவான் பார்த்தால் கையில் ஃபோன் இருக்கும். எப்ப ஃபோன் மணி அடித்தது எப்ப பேசத் தொடங்கினான் என்றே தெரியாது. இப்போ சிலர் Bluetooth செவிப்பன்னி(ear piece) வாங்கியிருக்கிறார்கள்.
ஏன் என்று கேட்டால் அதிக நேரம் பேசுவதால் கை வலிக்கிறதாம்.

அதிலும் உபஹார நண்பர்களின் கொடுமை ரொம்ப ஓவர். நள்ளிரவு 12 மணியிலிருந்து மாலை 6 மணிவரை வெளிச் செல்லும் அழைப்பு இலவசம் என்பதால் சரியாக நள்ளிரவு 12 மணிவரை காத்திருந்து ஃபோன் பேசுறாங்க. அதானால நமக்கு காலையில் எழும்புவதற்கு எந்தப் பிரச்சினையில். ராசா காலையில 6 மணிக்கு எழுப்பாட்டிவிடு என்று சொன்னா சரியா 6 மணிக்கு நம்மள எழுப்பிவிட்டு அதுக்கபுறம் அவங்க தூங்குவாங்க. அதுவரைக்கும் ஃபோன்ல தொங்குவாங்க.

இவர் உபஹார சிம்மொன்று வாங்கி வைத்துக் கொண்டு அவவுக்கு சாதரண மொபிடெல் சிம் வாங்கிக் கொடுப்பார். அது போல ப்ளாஸ்டர் சிம் வாங்கிக் கொண்டு அவவுக்கு சாதாரண டயலொக் சிம் வாங்கிக் கொடுப்பார்.
நேரசூசி போட்டு காதல் செய்வாங்க.
நள்ளிரவு 12 மணி தொடக்கம் மறு நாள் மாலை 6 மணிவரை உபஹார
மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை ப்ளாஸ்டர்.
இப்படிப் போகுது இவிங்க காதல்,

இன்னும் சிலர் வீட்டிலிருந்து அனுப்பும் காசு விரயமாகிவிடக் கூடாது என்பதற்காக 3 வேளை சாப்பிடாமல் இரண்டு வேளை சாப்பிடுவது ஒரு வேளை சாப்பாட்டுக் காசை மிச்சம் பிடித்து அந்த காசில் ஃபோன் பேசுவது…. என்ன கொடும சார் இது…...

நட்ட நடு ராத்திரியில இருட்டு ரூம்ல, நுழம்புக் கடியோட, வேருக்க விருவிருக்க தன்னந் தனியா பிசாசு மாதிரி உட்காந்து  கொண்டு போன்ல தொங்குவாங்க....
அப்படி என்னதான் பேசுவார்களோ….????

எல்லம் சொந்த அனுபவமா என்று கேட்டுவிடாதீர்கள்.. அப்படி ஒன்றுமில்லை யாவும் நேரில் கண்டவை....

இந்தக் காதலர்கள் காதலில் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ மொபிடல், டயலொக் நிறுவன உரிமையாளர்கள் கோடீஸ்வரர்களாகிக் கொண்டு செல்கின்றார்கள்.

                                    (கொடுமை தொடரும்…..)

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இந்த 30 நாட்களுக்குள் என் வாழ்வில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்(ல்)கின்றேன்.

பெப்ரவரி மாதம் இறுதியில் இருந்து மார்ச் மாதம் இறுதி வரையான 30 நாட்களுக்குள் என் வாழ்வில் எத்தனையோ  விசயங்கள் நடந்துவிட்டன.

தொடர்ச்சியான பரீட்சைகள், தொடர்ச்சியான பயணங்கள் இப்படி எத்தனையோ....

இந்த  30 நாட்களுக்குள் என் வாழ்வில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்(ல்)கின்றேன்.

 ஏறத்தாழ 4 மாத பயிற்சிகளின் பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின்
    தென்றல் அலைவரிசையில் எனக்கு பகுதி நேர அறிவிப்பாளராக நியமனம் கிடைத்தது.
   பயிற்சி முடித்த 16 பேரில் 5 பேருக்கு மாத்திரமே தென்றலில் நியமனம் கிடைத்தது.
   மற்றவர்களுக்கு தேசிய சேவை.
  நியமனக் கடிதம் கிடைத்த சந்தோசமான செய்தியை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள
முடியாத நிலைமை, காரணம் மறுநாள் எனக்கு பரீட்சை இருந்தது.

தொடர்ச்சியான பரீட்சைகளின் காரணமாக நியமனம் கிடைத்து 10 நாட்களின் பின்னர்தான்  நிகழ்ச்சி செய்ய வாய்ப்புக் கிட்டியது.
இது வரையில் 4 நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன்.மீண்டும் பரீட்சை என்பதால் இந்த வாரம் நிகழ்ச்சிகள் செய்ய முடியவில்லை.


ஒரு வாரம் பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கொழும்பில் தங்கியிருக்கக் கூடிய அற்புதமான வாய்ப்புக் கிட்டியது. அற்புதமான அந்த நாட்கள் என் சோகத்தையெல்லம் மறக்கடித்த அழகிய நாட்கள். அந்த நாட்களுக்காய் மீண்டும் ஏங்கிக்கொண்டிருக்கின்றேன்.

கடந்த வார இறுதியில் என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய விரிவுரையாளரான கலாநிதி.நசீர் அவர்களோடு கதைக்கும் வாய்ப்புக் கிட்டியது. பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளரான இவர், (Visiting Lecturer)ஆக எங்களுக்கு வருவது வழமை.

அதன்படி கடந்த வாரம் வந்த அவர் என்னோடு நீண்ட நேரம் பேசினார். எனது எதிர் காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள பல ஆலோசனைகளைக் கூறினார், அத்தோடு அறிவிப்புத் துறைமீதுள்ள எனது ஆர்வத்தை கூறைத்துக் கொள்ளுமாறும், இந்த துறையை மார்க்க அடிப்படையிலும், கடந்த கால நிகழ்வுகள் அடிப்படையிலும் விழக்கினார். இது தொடர்பாக பல மணி நேரம் எனக்கு அறிவுரையும் ஆலோசனையும் தந்தார். அவர் கூறிய விடயங்கள்  அனைத்தும் உண்மையே..

சிறிது சிறிதாக விலகிவிடுவதாகவும், என் எதிர்காலத்தை வேறு துறையில் அமைத்துக் கொள்வதாகவும் அவருக்கு நான் வாக்குறுதி அளித்திருக்கின்றேன். சிறு வயதிலிருந்து ஆர்வம் கொண்டு படிப்படியாக முன்னேறி அடைந்த அடைவு இது.
சிலதை அடைய சிலதை இழந்துதானே ஆகனும், அது தானே நியதி.. பார்க்கலாம்...

இவைதான் கடந்த 30 நாட்களில் என் வாழ்வில் நடந்த குறிப்பிட்டு சொல்லக் கூடிய முக்கிய நிகழ்வுகள்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS