பிரபல பாடகர் Akon இலங்கை வருவதற்கான வீசா வழங்க இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது நம்மனைவருக்கும் தெரிந்ததே…… இது தொடர்பான பதிவொன்றை சற்றுத் தாமதமானாலும் உங்களோடு ஆர்வத்தோடு பகிர்ந்துகொள்கின்றேன்.
உலகப் புகழ் பெற்ற பாடகர் Akon தனது பாடல்களால் பல ரசிகர்களையும், புகழையும் சம்பாதித்ததோடு பல எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர். Smack that, Naanaa போன்ற இவரது பல பாடல்கள் மிகப் பிரபல்யமானவை. அதே வேளை I wana ……………… you, My …………….. என்ற சில பாடல்களின் மூலம் பலரது எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர்.
Akon பங்கு கொள்ளும் மாபெரும் இசை நிகழ்ச்சியொன்றை MTV/MBC நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறவிருந்தது.
இருந்தபோதும் Akon இலங்கை வருவதற்குரிய விசாவினை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துவிட்டது.
ஆனாலும் Akon இற்கு விசா வழங்க மறுத்ததில் எந்தவித அரசியல் காரணமும் இல்லை என்று கூறும் அரசாங்கம் தன் தரப்பு நியாயங்களையும் தெரிவித்திருந்தது.
இவரது பாடலொன்றின் காட்சியில் புத்தரின் உருவப்படத்தினை பிண்ணணியாக வைத்து அரை நிர்வாணப் பெண்கள் நடனமாடிய காட்சி இடம்பெற்றிருந்தது. இது புத்தரையும் பெளத்த மதத்தினைப் பின்பற்றுபவர்களையும் அவமானப்படுத்துவதாக அமைந்திருந்தது. இதனால் இவர் உலகலாவிய ரீதியில் பெளத்தர்களின் எதிர்ப்பினைச் சம்பாதித்துக்கொண்டார்.
Akon இன் பல பாடல்களில் ஆபாச வார்த்தைகள் அதிகம் காணப்படுவதாகவும், பல பாடல்கள் பெளத்த சமயத்திற்கு முரணாணவை என்றும் அவர் இலங்கையில் பாடுவதற்கு தயாரித்து வைத்திருந்த பாடல்கள் சிலவும் பெளத்த சமய விழுமியங்களை மீறும் வகையில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அரசாங்கம் பெற்றுத் தந்த சுதந்திரம் சமாதானதும், சுபீட்சமானதும் வாழ்க்கைக்கே தவிர பெளத்த மத கலாச்சாரங்களையும், விழுமியங்களையும் கெடுப்பதற்கல்ல என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் Akon இன் இவ் இசை நிகழ்ச்சிக்காக 2500 ரூபா - 25000 ரூபா வரை டிக்கட்டுக்கள் விக்கப்பட்விருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Akon இன் வருகையை பல சமயத் தலைவர்களும், மதக் குழுக்களும் எதிர்த்திருந்தன.
இது போன்ற பல காரணங்களை ஆராய்ந்த பின்னரே Akon இற்கு இலங்கை வர விசா வழங்குவதில்லை என்ற முடிவை அரசாங்கம் எடுத்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக