RSS

ஸாக்கிர் நாயக்

ஸாக்கிர் அப்துல் கரிம் நாயக் (ஸாக்கிர் நாயக்) 1965ம் வருடம் ஒக்டோபர் 18ம் திகதி மும்பாயில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை St. Peter's High School இலும் அதன்பின்னர் Kishinchand Chellaram College இலும் தொடர்ந்தார். வைத்தியரான இவர் தனது மருத்துவக் கல்வியை Topiwala National Medical College and Nair Hospital இல் கற்றார். MBBS பட்டத்தினை University of Mumbai இல் பெற்றுக் கொண்டார்.
மறைந்த மா மேதை அஹ்மட் தீதாத் அவர்களின் தஃவாப் பணியினால் உந்தப்பட்ட ஸாகிர் நாயக் அவர்கள் 1991 ம் ஆண்டிலிருந்து தன்னையும் தஃவாத் துறையில் ஈடுபடுத்தத் தொடங்கினார். 45 வயதாகும் ஸாக்கிர் நாயக் அவர்கள் இஸ்லாம் தொடர்பாக மற்றவர்கள் கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களை நீக்குவதில் அயராது பாடுபடுகின்றார். இஸ்லாத்தினை அல்குர்ஆன், அல்-ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக விளக்குவதோடு தர்க்க ரீதியிலும் விஞ்ஞான அடிப்படையிலும் இவர் வழங்கும் விரிவுரைகள் அற்புதமானவை.நேயர்களின் நேரடிக் கேள்விகளுக்கு உடனடியாகவும் தெளிவாகவும் விளக்கமளிப்பது இவரது தனிச்சிறப்பு. அனைத்து மத நூல்களையும் படித்து மனனமிட்டுள்ள இவர் நொடிப் பொழுதில் அனைத்து நூல்களினையும் அத்தியாயம் வரிகளோடு ஆதாரமாகக் குறிப்பிட்டு விளக்கமளிப்பதால் இவரது உரை உலகப் புகழ்மிக்கதாகத் திகழ்கின்றது. இவரது ஞாபக சக்தி அபரிமிதமானது.இவரது அற்புதமான விளக்கத்தினால் இவர் உரை நிகழ்த்தும் அதே சபையில் பலர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றார்கள்.Indian Express பத்திரிகையானது 2009ம் வருடம் பெப்ரவரி 22ம் திகதி வெளியிட்ட “100 Most Powerful Indians in 2009” என்ற தரப்படுத்தலில் ஸாக்கிர் நாயக் அவர்களுக்கு 82ம் இடம் வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று

"Top 10 Spiritual Gurus of India" என்ற விசேட தரப்படுத்தலில் ஸாக்கிர் நாயக் அவர்களுக்கு 3வது இடம் வழங்கப்பட்டிருந்தது.ஸாக்கிர் நாயக் அவர்கள் உலகின் பல பாகங்களிலும் புகழ்பெற்ற பல விவாதங்களில் பங்குபற்றியிருக்கின்றார்.

இவற்றுள் 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிக்காக்கோவில் Dr. William Campbell அவர்களுடன் "The Qur'an and the Bible: In the Light of Science" என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதமும், 2006ம் வருடம்ஜனவரி 21ல் Sri Sri Ravi Shankar அவர்களுடன் God in Islam and Hinduism என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதத்தையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். இதில் ஏறத்தாழ 50,000 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

2006 செப்டம்பரில் 16வது போப் பெனடிக் அவர்களை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஸாக்கிர் நாயக் அவர்கள் அழைத்த போதும் 16வது போப் பெனடிக் அதனை நிராகரித்துவிட்டார்.

உலகெங்கிலுமுள்ள பல பிரபலமான பல்கலைக் கழகங்களில் இஸ்லாம் தொடர்பாக பல முக்கிய விரிவுரைகளையும், விவாதங்களையும் ஸாக்கிர் நாயக் நிகழ்த்தியிருக்கிறார்.

2007 நவம்பர் மாதத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் டெல்லியில் ஸாக்கிர் நாயக் அவர்கள் தனது தலைமையில் 10 நாள் சமாதான மாநாட்டினை நடாத்தி வருகின்றார். இதில் உலகெங்கிலுமிருந்து பல மார்க்க அறிஞ்சர்கள் கலந்து மார்க்க சொற்பொழிவினை நிகழ்த்திவருகின்றார்கள்.

IRF (Islamic Research Foundation) என்ற அமைப்பின் நிறுவனத் தலைவரான இவர் இதன் மூலம் பல தாயீக்களை உருவாக்கி வருகின்றார். Pease TV என்ற தொலைக்காட்சி ஒலிபரப்பின் மூலம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இவர் தனது தஃவாப் பணியினைத் தொடர்கின்றார்.ஸாக்கிர் நாயக்கிற்கு எதிராக பல விமர்சனங்கள் வெளிவந்தாலும் அவற்றையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து தனது தஃவாப் பணியில் தொடர்ந்தும் பயணிக்கின்றார்.

இப்படி பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட ஸாக்கிர் நாயக் அவர்கள் இன்று மாலை 6.45 மணிக்கு கொழும்பு சுகததாச திறந்த வெளியரங்கில் "Peace Through Religion" என்ற தலைப்பில் மாபெரும் சொற்பொழிவினை நிகழத்தவிருக்கின்றார். சொற்பொழிவின் முடிவில் பார்வையாளர்களின் நேரடிக் கேள்விகளுக்கும் பதிலளிக்கக் காத்திருக்கின்றார்.எனவே இஸ்லாம் தொடர்பாக உங்களுக்குள்ள சந்தேகங்களையும், தெளிவின்மையையும் போக்கிக் கொள்ள இந்த அற்புதமான நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன். விசேடமாக முஸ்லிம் அல்லாத நண்பர்களை இஸ்லாம் தொடர்பான தெளிவான விளக்கத்தினை பெற்றுக் கொள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றேன்.ஸாக்கிர் நாயக் அவர்களின் தஃவாப் பணி வெற்றிகரமாகத் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

எனது உலக சாதனை

நான் கட்டாயம் இத சொல்லியே ஆகனும்....

வழமையாக மாலை வேளையில் நான் எங்கள் பாடசாலை மைதானத்தில் கிரிக்கட் விளையாடுவது வழக்கம். அவ்வாறு இன்று விழையாடும் போதுதான் நான் அந்த சாதனையை நிகழ்த்தினேன்.

அதற்கு முதல் என்னைப் பற்றி ஒரு பில்ட்-அப்பினை உங்களுக்கு தருவது மிக முக்கியம். வலதுகை துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளரான நான் துடுப்பாட்டத்தில் மஹெல ஜயவர்த்தன, மாவன் அத்தபத்து போன்று ஆடக்கூடியவன், அதாவது Touch Player என்று சொல்வார்களே அப்படித்தான். பந்துவீச்சில் இரண்டுவிதமான பந்துவீச்சு முறையைக் கையாள்கின்றேன். ஒன்று சமிந்த வாஸ் போன்று High arm action மற்றையது லசித் மலிங்க போன்று Side Arm action அந்த வகையில் இன்று நான் Side Arm action ஐத்தான் பயன்படுத்தினேன். காரணம் காற்று பந்து வீசும் திசைக்கு எதிர்த் திசையில் வீசியமையினால் காற்றை எதிர்த்து வேகமாகப் பந்து வீச இம்முறையைப் பயன்படுத்தினேன். சரி பில்ட்-அப் போதும் மேட்டருக்கு வரலாம்.

இன்று நான் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கட்டுகளைக் கைப்பற்றி லசித் மலிங்கவின் உலக சாதனையைச் சமப்படுத்தியிருக்கின்றேன்.

 ஒருவர் 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசலாம். எனது 3வது ஓவரில்தான் இந்த சாதனை நிகழ்ந்தது.

முதலாவது பந்து அகலப் பந்து. இரண்டாவது பந்தில் அஸ்லம் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அதற்கடுத்த பந்தில் சலாம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார், அதற்கடுத்த பந்தில் சியான் பிடிகொடுத்து ஆட்டமிழந்த போது ஹெட்ரிக்கினைப் பூர்த்தி செய்தேன். அடுத்த பந்துக்கு நெளசாட் விக்கட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்ததன் மூலம் நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக நான்கு விக்கட்டுகளைக் கைப்பற்றி மலிங்கவின் சாதனையைச் சமப்படுத்தினேன். அடுத்த பந்திலும் அழகான ஆட்டமிழப்பொன்றுக்குரிய வாய்ப்பிருந்தது. நேராக நடு விக்கட்டுக்கு நான் வீசிய பந்தை ஃபர்ஹான் விக்கட்டினை மறைத்து ஆடினான் மிகவும் அழகான LBW ஆட்டமிழப்பது. இருந்தும் எங்கள் விழையாட்டில் LBW ஆட்டமிழப்பை கொடுப்பதில்லை என்பதால் அவ்வாட்டமிழப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இறுதிப் பந்தில் ஓட்டமெதுவும் கொடுக்கவில்லை. இதன் படி அந்த ஓவரில் 1 ஓட்டம் மட்டுமே கொடுத்து 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினேன்.

இன்றைய நாளில் மொத்தமாக நான் வீசிய 3 ஓவர்களில் 15 ஓட்டங்கள் கொடுத்து 7 விக்கட்டுக்களைக் கைப்பற்றினேன்.

எப்புடி…..? நாங்க யாரு…?

இப்படிப்பட்ட சாதனையை தரம் 7ல் படிக்கும் போதும் நிகழ்த்தியிருந்தேன். ஆனாலும் அக்கால கட்டத்தில் தொழில்நுட்ப வசதிகள் பெரிதாக இல்லாததால் அவை சரியான முறையில் வெளி உலகுக்கு எத்திவைக்கப் படவில்லை. ஆனால் இம்முறை அதை நானாகவே வெளி உலகுக்கு எடுத்துரைக்கின்றேன்.


இச்சாதனையின் மூலமாக இலங்கை கிரிக்கட் தேர்வாளர்களுக்கு ஒரு செய்தியை சொல்லிவைக்க ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் வீரர்களைத் தேர்வு செய்யும் போது கொழும்பையும் அதனை அண்மித்த பிரதேசங்களிலுள்ளவர்களையும் மட்டுமே தேர்வு செய்கின்றீர்கள். ஆனால் கொழுப்பிலிருந்து வெகு தொலைவிலுள்ள பிரதேசங்களிலும் என் போன்ற திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். எனவே 2011 உலகக் கிண்ணத்தை வெல்லும் எண்ணமிருந்தால் என்னையும் அணியில் இணைத்துக் கொள்ளுங்கள்.


(இந்த சாதனையைப் பற்றி ஃபேஸ் புக்கிலும், வலைப் பதிவிலும் போட ஆலோசனை கூறிய நம்ம நண்பர் வஹாபிற்கு நன்றிகள்.)

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1

ம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ் தனது குடிசையில் குடிசை ஓவியர் ஓமக்குட்டனுடன் ஏதோ செய்துகொண்டிருக்கின்றார். இந்த நேரம் பார்த்து நம் அமைச்சர் மங்குனிப் பாண்டியன் அங்கே வருகிறார்.


அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: மன்னா என்ன இது கொடுமை.

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: எது அமச்சரே?

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: இல்லை மன்னா இங்கே உங்கள் பட்டுப்போன உடல் மறைக்கப்பட்டிருகிறது; அங்கே அவனின் தலை மறைக்கப் பட்டிருக்கிறது எனக்கொன்றும் புரியவில்லை மன்னா.


இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: இந்த தேய்ந்து போன றப்பர் செருப்பு போன்ற என் தலை அந்த கட்டுமஸ்தான உடலோடு இணையப்போகின்றது.அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: அப்படியென்றால் கொலையா மன்னா.

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: உனக்கு ஒரு எ…………….. புரியாது என்கூடவே இருந்தால் உனக்கும் என் மக்குப் புத்திதானே வரும்.
அமைச்சரே நானொரு மொள்ளமாரி, கேப்மாரி என்பது ஒரு புறமிருக்கட்டும். எனது இந்த நசுங்கிப் போன உடம்பை எதிர்கால சந்ததியினர் பார்த்தார்களேயானால் காறித் துப்பிவிடுவார்கள். காலில் போட்டிருப்பதைக் கொண்டு அடித்துவிடுவார்கள். ஆடு,மாடுகள் கூட என்மேல் கழிந்துவிடும். வாழும் போதும் அடிவாங்கி மாண்ட பிறகும் அடிவாங்க இந்த உடம்பால் முடியாது அமைச்சரே…..

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: ஆமாம் மன்னா. இப்பொழுதே உங்கள் உடம்பு மலேரியா வந்த மண்புழு மாதிரித்தான் இருக்கிறது……


இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: ம்ம்…………………….(ஆஹா நம்ம வீக்னஸ்ஸ விபரமாச் சொல்றானேய்யா..?)
இப்படி வராலாற்றில் அடிவாங்கியே காலம் தள்ளும் மானங்கெட்டவனாய் நான் இருக்க விரும்பவில்லை. அதானால் என்ன செய்யலாம் என்று களிவறையில் உட்கார்ந்து யோசித்தபோது பாழாய்ப்போன என்மனதில் உதித்ததுதான் இத்திட்டம். இதைப் பார்த்தாவது நம் வருங்காலச் சந்ததியினர் இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ் என்பவன் இந்த உலகமே அசிங்கப்படுத்தும் ஒரு மடையன், ஒரு கிறுக்கன் என்று நம்பிவிடுவார்களில்லையா…..? ஹஹ்ஹா
எப்படி என் திட்டம். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே……

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: ஆமாம் மன்னா நீங்கள் ஒரு சொங்கி என்பது இந்த மக்களுக்கு தெரியவா போகிறது.?
சரி மன்னா எதற்காக இவனது உடலை உங்கள் உடலோடு சேர்த்து வரைகிறீர்கள்.

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்:  நீயொரு மங்குனி அமச்சர் என்பதை மணிக்கொருமுறை நிரூபித்துக் கொண்டிருக்கிறாய். (அது சரி என்கூட இருந்தா அவன் புத்தி இப்படித்தானேயிருக்கும்.)

இவன் யார் தெரியுமா? நானொரு பெண்ணின் பின்னால்(கலைப்பீடம்) சுற்றி அலைந்தது உனக்குத் தெரியும்தானே.அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: ஆமாம் மன்னா. ஒன்றாக சேர்ந்து அடியும் வாங்கினோமே….. என்னா... அடி. அத மறப்பனா மன்னா?

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: அடேய்… அரச ரகசியத்தை அம்பலப்படுத்தாதடா சோமாரி.

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: ஸ்ஸ்ஸ்சாரி மன்னா, நீங்கள் கூறுங்கள்.

இம்சை அரசன் 32ம் எலிகேசி ஹரூஸ்: (மன்னர் அமைச்சரின் காதில் மெதுவாக சொல்கிறார்.) அன்று நம்மிருவரையும் அடித்து மிதித்து, சாக்கடைக்குள் முக்கி எடுத்தானே அவன்தாண்டா இவன்.

அமைச்சர் மங்குனிப் பாண்டியன்: அவனா இவன். ஐய்யோ ஆளைவிடுங்கள் மன்னா.

(அமைச்சர் ஓடத் துவங்குகிறார். மன்னர் அமைச்சரின் கையைப் பிடித்து ஏதோ ரகசியமாகச் சொல்கிறார்.)

மன்னர் என்ன சொன்னார் அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பிறகு சொல்கிறேன்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நெத்தலி - சுறா பார்ட்-2 (ரிப்பீட்டு...)

பன் பிக்சர்ஸ் கவலையுடன் வழங்கும் அதிரடி நாயகனின் நெத்தலி(சுறா பார்ட்-2)


நடிகர்கள் - ஹஸ்ஸான் (நெத்தலி) ரிஃபாஜ் அஸ்லம் (வில்லன்) , மற்றும் பலர்.

 

நெத்தலி (சுறா பார்ட்-2)
 
உதயபுரத்து விளையாட்டு மைதானத்தில் பெரும் சனக் கூட்டம். எல்லோருமே மைதானத்தின் அருகிலிருக்கும் காட்டினைப் பார்த்துகொண்டிருக்கின்றனர். "காலையில் கிரிக்கட் விளையாடும் போது பந்து பக்கத்துல இருந்த காட்டுகுள்ள போயிடுச்சு அத எடுக்கப் போன நம்ம நெத்தலியையும்(நெத்தலி - ஹஸ்ஸான் இவர்தான் கதையின் ஹீரோ) மத்தக் குளுவினரையும் காணல்லன்னு ஊரெல்லாம் ஒரே களேபரம்… "

பொலீசார் வந்து பற்றைகள், குட்டைகளெல்லாம் நோண்டி எப்புடியோ எல்லாரையும் கண்டுபிடிச்சு இழுத்துட்டு வந்துடாங்க…ஆனா நம்ப ஹீரோ நெத்தலிய (அதான் நம்ம ஹஸ்ஸான்) மட்டும் காணல்ல…. எல்லாருக்கும் கவல.
எல்லாரும் போய் நெத்தலிய காணல்ல எங்கிறத நம்ம கஃபார் ஓ.ஐ.சீ கிட்ட சொல்றாங்க..

”இங்கப் பாருங்கப்பா உங்கள தேடி கண்டு பிடிச்சதே ரொம்ப பெரிய விசயம், காட்டுக்குள்ள பாம்பெல்லாம் கெடக்கு திரும்ப தேடேலாது அதுமட்டுமில்ல உங்கள கூட்டிட்டு போக கைமிசினையும் வரச் சொல்லியாச்சு நெத்தலி வந்தான்னா இடம் காணாது பேசாம விட்டுட்டு வாங்க போவம்”. என்று கஃபார் ஓ.ஐ.சீ எவ்வளவோ சொல்லியும் மக்கள் கேக்கல்ல…

”இல்ல சார் நாங்க நெத்தலி இல்லாம வரமாட்டம். அவனுக்கு விளையாடத் தெரியாட்டியும் நல்லா போல் ”பொறுக்கி”த் தருவான், அவந்தான் எங்களுக்கு கடைக்கு போய் சாமான் வாங்கித் தாறது, குளிக்கப் போனா முதுகு தேச்சு விடுற (என்ன லுக்கு ஆம்பிளைகளுக்கு மட்டும்…. வாயப் பொழந்துடுவீங்களே...) கால் வலிச்சா அமுக்கி விடுற (இதுவும் ஆம்பிளைக்குத்தான் சார்) அவன் எங்களுக்கு வேணும்.”

இப்புடி மக்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காட்டுக்குள் இருக்கிற பனமரத்துல சல சலப்பு. எல்லாரும் திரும்பிப் பாக்குறாங்க;

பனமரத்துல இருந்து நம்ப நெத்தலி இறங்கிவாறான். எல்லோரும் அவன நோக்கி ஓடிப்போய் கட்டிப் புடிக்குறாங்க.. நம்ப அம்ரலங்காட மனைவியும் நெத்தலிய கட்டிப் பிடிக்கப் போக ”அடிப்பாவி நானும்தான் காணம போனன் என்ன வந்து கட்டிப் பிடிச்சியாடி பாவி இரு வீட்ட போய் வெச்சுக்குறன்.” என்டு மிரட்டி தன் பக்கம் இழுத்துட்டு போயிட்டான் அம்ரலங்கா.

கஃபார் ஓ.ஐ.சீ : என்னப்பா நெத்தலி எங்க போன நீ

நெத்தலி : இல்ல சார் பந்த தேடிகிட்டே மேல பாத்தனா பனமரத்துல ஒரு பனம் பழம் இருந்திச்சி சார். நம்ப பசங்க கண்டானுங்கன்ன விடமாடனுங்க அதான் எல்லாரையும் பேசி அனுப்பிட்டு, ஒத்தருக்கும் தெரியாம நான் மட்டும் மரத்துல ஏறி பனம் பழத்த சாப்பிட்டன் சார்.

கஃபார் ஓ.ஐ.சீ : சரி நெத்தலி பனம் பழத்துல ஏதாச்சும் மிச்சமிருக்கா..?

நெத்தலி : இல்ல சார் எல்லாம் முடிஞ்சு, கையில இருந்ததையும் கூட நக்கிட்டன் சார்.

”எத்துன பனம் பழம் சாப்பிட்டாலும் கையில இருக்குறதையும் நக்குவான் இந்த நெத்தலி” பன்ச் டயலொக்(மொபிடலும்தான்)வேற.

(நம்ப கஃபார் ஓ.ஐ.சீ சூடாகிட்டார்.)

கஃபார் ஓ.ஐ.சீ : சரி எல்லாரும் கை மிசின்ல ஏறி வீட்டுக்குப் போங்கப்பா…


அடுத்த காட்சி


நம்ம வில்லன் ரிஃபாஜ் அஸ்லதுக்கு உதய புரத்து மைதானத்துல மிச்ச நாளாவே ஒரு கண்.(மைதானத்துல மட்டுமில்ல உதய புரத்து குட்டிக மேலயும்தான்)

எப்புடியாவது உதய புரத்து கிரவ்ண்ட வளச்சிப் போட்டு கல்லுவாடி போடனுங்கிறதுதான் அவர்ட நீண்ட நாள் ஆச. (சவுதி அரேபியாவுல ஒட்டகம் கழுவி உழச்ச காச எப்புடியாவது நாசமாக்கனுமே.)


ஒரு நாள் திடீரென்டு யாரோ நம்ம நெத்திலிட தலையில நச்சின்னு பொல்லால போட்டு ஆள சாச்சிட்டு போயிட்டானுங்க. நெத்தலிக்கு ஒன்னுமே புரியல்ல.

இந்த நேரம் பாத்து யாரோ உதய புரத்து கிரவ்ண்ட வயல உழவுற மாதிரி உழுது வெச்சிருந்தானுங்க. ஊர்க்காரங்க எல்லாரும் நம்ம ஹரூஸ்தான் நித்திரக்கண்ணுல வயலுக்கும் மைதானத்துக்கும் வித்தியாசம் தெரியாம உழவு மிசின குறுக்கால விட்டிருப்பானாக்கும் எண்டு நெனச்சு கவலையோட கிரவ்ண்ட பாத்துட்டு இருந்தாங்க.ஆனா அஸ்லதுட தம்பி ஆதிஃப் தான் யாரையும் இந்த கிரவ்ண்டுல விளையாடாம ஆக்கி அண்ணாத்தட ஆசைய நிறைவேத்தி வெக்க இப்புடி சதி செய்தான் எண்டு யாருக்குமே தெரியாது.(இதுக்குன்னே லண்டன்ல இருந்து வந்திருந்தான் படுபாவி..)


இதுக்குள்ள அங்க வந்த நம்ம வில்லன் றிஃபாஜ் அஸ்லம் பெரிய இவனாட்டம் ”இங்கப் பாருங்க இனிமே இந்த கிரவ்ண்டுல உங்களால விளையாட முடியாது, நான் ஆளுக்கொரு பிளாஸ்டிக் பெட்டும், பிளாஸ்டிக் போலும் தாறன் எல்லாரும் வாங்கிட்டு செட்டவட்ட கிரவ்ண்டுல போய் விளையாடுங்க” என்டு சொல்ல;

எல்லாருக்கும் இதான் சரின்னு பட்டிச்சு.(ஓசில வேற பிளாஸ்டிக் பெட்டும், பிளாஸ்டிக் போலும் கிடைக்குதே விடுவாங்களா?) கொடுக்குறத வாங்கிட்டு கிளம்ப தயாரான நேரம் பாத்து நம்ம ஹீரோ நெத்தலி வந்துடான்.


எல்லாரும் பிளாஸ்டிக் பெட்டும், பிளாஸ்டிக் போலும் வாங்கிட்டு செட்டவட்ட கிரவ்ண்டுக்கு போக தயாரா நிக்குறத பாத்த நம்ம நெத்தலிக்கு மூத்…… சாறி ஆத்திரம் வந்துட்டுது.
“எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க? ஓசில ஏதும் கிடைச்சா வாங்கிட்டு கிளம்பிர்ரதா? யோசிக்க வேணா? செட்டவட்ட கிரவ்ண்டுக்க போனவுடனே உங்கள விளையாட விட்டிடுவாங்களா? சிராஜ் முஹம்மட் சிராஜ், ரிஸ்வி ரிஃபாஜ், கே.ம். ஃபெளசான் எல்லா களவானிப் பசங்களும் அங்கதான் இருக்கானுங்க. உங்க பிளாஸ்டிக் பெட், பிளாஸ்டிக் போல் எல்லாத்தையும் பறிச்சு உங்கள அடிச்சு விரட்டிடுவானுங்க. அப்புறம் எங்க போய் விளையாடுவீங்க? பேசாம வாங்கினத குடுத்துடுங்க; நாம இந்த கிரவ்ண்ட சரியாக்கி இங்கையே விளையாடுவம்” என்று ஆவேசமாக நெத்தலி பேச,,

எல்லாரும் வாங்கின பிளாஸ்டிக் பெட், பிளாஸ்டிக் போல் எல்லாத்தையும் திரும்ப கொடுத்துடாங்க. இதனால கோபமடைந்த நம்ம அஸ்லம் நெத்தலிய தனிய கூப்பிட்டு ”இங்கப்பாரு உனக்கு வேனும்னா 2 பெட் 2 போல் எக்ஸ்ராவா தாரன், ஒரு தொப்பியும் தாரன் வாங்கிட்டு பேசாம எல்லாரையும் கூட்டிட்டு கிளம்பு” என்று சொல்ல;

நம்ம நெத்தலி ”இங்கப்பாரு அஸ்லம் என் டீமுல இருக்குறவனுங்க பிச்சக்கார பசங்கதான் அதுக்காக நீ குடுக்குறத வாங்கிட்டு போயிடுவன் எண்டு நெனச்சுடாத. உன் கண் முன்னாடியே இந்த கிரவ்ண்ட மட்டமாக்கி டீம்ல இருக்குற எல்லாருக்கும் ஆளுக்கொரு பிளாஸ்டிக் பெட், பிளாஸ்டிக் போல் வாங்கிக் குடுத்து இங்கையே விழையாடிக் காட்டுறன்” என்று சவால் விட்டான்.


சவால்ல ஜெயிக்குறது எப்படி எண்டு நெத்தலி யோசிச்சான். பேசாம என்.ஜி.ஓ வெச்சிருக்கிற காமில் இம்டாட் கிட்ட போய் ஏதாவது உதவி கேட்டுப் பாப்பம் என்று முடிவெடுத்த நெத்தலி காமில் இம்டாட்டை சந்திது தன் தேவையைச் சொன்னான்.

”போடாங் ங்கொய்யா நானே எவனாச்சும் ஏதாச்சும் கொண்டுவந்து தரமாட்டானா எண்டு பாத்திடிருக்கன்; எங்கிட்டப் போய்… போடா வேலையப் பாத்துட்டு போ…..” என்று துரத்திவிட்டார்.

நெத்தலிக்கு குழப்பம், யோசிச்சான். ஒரு முடிவெடுத்தான். அதையே செய்தும் முடித்தான்.

ஆத்திஃப் லண்டன்ல இருந்து வெள்ளக்காரன் கிட்ட சுட்டுட்டு வந்த லெப்டொப்ப நம்ம நெத்தலி சுட்டு அத வித்து முதல்ல தனக்கு ஒரு லுமாலா சைக்கிளும் அப்புறமா தனது டீம்ல இருக்கிற எல்லாருக்கும் ஆளுக்கொரு பிளாஸ்டிக் பெட், பிளாஸ்டிக் போல் வாங்கிக் கொடுத்தது மட்டுமில்லாம கிரவ்ண்டையும் சரி செய்தான்.

நெத்தலியின் இந்த வீரச் செயலுக்கு உதயபுரமே திரண்டு அவனுக்கு விழா எடுத்துக் கொண்டாடியது.

”நெத்தலி எதெல்லாம் பன்றான் இதப் பண்ணமாட்டானா?”
                           **********************************

படம் முடிஞ்சுது அடுத்து சேவல்காரன் சாரி காவல்காரனோட சந்திப்போம்

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இளவரசர் சுஹைல் நாளை நாடு திரும்புகிறார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்த நமது இளவரசர் சுஹைல் நாளை நாடு திரும்புகிறார். விசேட விமானம் மூலம் நாடு திரும்பும் இவர் நாளை அதிகாலை 4 மணியளவில் Green Lane விமான நிலையத்தில் வந்திறங்குவார் என அரண்மனைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இளவரசர் வருகையால் சம்மாந்துறை நகரம் விழாக் கோலம் பூணுகிறது.


மன்னர்: அமைச்சரே…. அரண்மனை வாசலில் இளம் பெண்கள் வந்து    
                 கூடி நிற்கின்றனரே என்ன காரணம்?


அமைச்சர் : ஆமாம் மன்னா நமது இளவரசர் சுஹைல் நாளை இங்கு 
                         வருகிறார் இல்லையா.. அவரைக் காணவே இளம் பெண்கள்      புத்தாடை உடுத்தி புது மணம் பூசி உற்சாகமாய் வந்திருக்கிறார்கள் மன்னா…

மன்னர்: இளவரசர் சுஹைல் இன்று இரவு 7.30க்கு புறப்பட்டு நாளை அதிகாலை 4 மணிக்குத்தானே வருவார்..

அமைச்சர் : ஆமாம் மன்னா இளவரசர் நாளை அதிகாலைதான் வருவார் என்றாலும். முன்னரே வந்துவிட்டால்தான் நெரிசல் இல்லாமல் அவர் முகம் காண முடியும் என்று இவர்கள் நேற்றே வந்துவிட்டார்கள் மன்னா….

மன்னர்.: அப்படியா அமைச்சரே.. இளவரசர் சுஹைல் என்றால் நம் இளம் பெண்களுக்கு அவ்வளவு இஸ்டமோ..??

அமைச்சர்: ஆமாம் மன்னா..

மன்னர்.: சரி அமைச்சரே இளவரசரை வரவேற்கும் ஏற்பாடுகள் எப்படிப் போகிறது. ?

அமைச்சர்: எல்லாம் ஏற்பாடாகிவிட்டது மன்னா…
                        தாள வாத்தியங்கள் இசைக்க எமது இராணுவத்தின் பேண்ட்      வாத்தியக் குழு, கடற்படை பேண்ட் வாத்தியக் குழு, விமானப் படை பேண்ட் வாத்தியக் குழு, பொலீஸ் பேண்ட் வாத்தியக் குழு எல்லோரும் தயார் மன்னா..மலர் தூவும் பெண்களும் தயார், எமது விமானப் படையினரும் 4 ஹெலிகொப்டர்களில் வந்து மலர் தூவ அனுமதி கேட்டார்கள் மன்னா… அவர்கள் ஆசையையும் கெடுப்பானேன் என்று அதற்கும் அனுமதி கொடுத்திருக்கிறேன் மன்னா. செங்கம்பளமும் தயார் மன்னா….


மன்னர் : நல்லது அமைச்சரே.. இளவரசர் சுஹைல் ஒரு வாரம் இங்கே தங்கியிருப்பார் அந்த ஒரு வாரமும் நமது நாடு திருவிழாக் காணவேண்டும்.

 அமைச்சர்: நிச்சயமாக மன்னா. மன்னா……….
                            (அமைச்சர் தலையைச் சொறிகிறார்...)

மன்னர்: என்ன அமைச்சரே.. என்ன விசயம்?

அமைச்சர் : இல்லை மன்னா….. இளவரசர் வருவதைக் கேள்விப்பட்ட அயல் நாட்டு இளவரசியர் தமன்னா, பாவனா, மீரா ஜெஸ்மின், ப்ரியா மணி, அஞ்சலி,அனுஸ்கா, அன்றியா,சமீரா ரெட்டி எல்லோரும் இளவரசர் சுஹைலைக் காண இங்கு வர அனுமதி கேற்கிறார்கள் மன்னா…

மன்னர்: அப்படியா இளவரசருக்கு இளம் பெண்களின் அன்புத் தொல்லை.. சரி சரி வரச் சொல். அப்படியே இளவரசருடன் அவர்களுக்கு இராப் போசனத்துக்கும் ஏற்பாடு செய்.

அமைச்சர்: ஆகட்டும் மன்னா…. மன்னா…
(அமைச்சர் மீண்டும் தலையைச் சொறிகிறார்...)

மன்னர்: இன்னுமென்ன அமைச்சரே..?

அமைச்சர்: எனது மகள் த்ரிசாவும் இருக்கிறாள் மன்னா..

மன்னர்: என்ன…????????????????

(அமைச்சர் தன் கோரிக்கை நிறைவேறாத கவலையில் மெதுவாக நடந்து செல்கிறார்.)

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

சுறா படம் பார்க்கப்போன சூடாமணி

இந்திய நண்பர் ஒருவரின் பதிவில் படித்ததும் பிடித்துவிட்ட இதை நம் நண்பர்களுக்காக சுட்டு, கொஞ்சம் டிக்கரிங், பெயின்டிங் பண்ணி எனது பதிவில் இடுகின்றேன்.

படித்துவிட்டு நீங்களும் சிரிக்கலாம், காவல்காரன் பாக்கவும் போகலாம்.சுறா படம் பார்க்கப்போன சூடாமணி


உதய புரத்து சூடாமணி மெயின் ரோட்டில் சட்டையைக் கிழித்துக் கொண்டு ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறான். இதக் கேள்விப்பட்டு அங்க போனான் சூடாமணியின் உயிர் நண்பன் ரமணா.

"நானடிச்சா தாங்க மாட்டே! நாலுமாசம் தூங்க மாட்டே!"

சூடாமணியின் அம்மா: வா ரமணா.! தெய்வம் மாதிரி வந்தே! இங்கே பாரு, என் பேச்சைக் கேட்காம அந்தப் படத்துக்குப் போயி இந்த நிலைமைக்கு ஆயிட்டான் பாரு!

ரமணா.: ஒண்ணும் கவலைப்படாதீங்கம்மா! இவனை அரோகரா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாம்.

இடம்: அரோகரா ஆஸ்பத்திரி

ரமணா.: சார்..சார், எமர்ஜென்ஸி வார்டு எந்தப் பக்கம் இருக்கு?

வோர்ட்போய்: என்னாச்சு?

ரமணா.: என் ஃபிரண்டு சூடாமணி ’சுறா’ படம் பார்த்திட்டான் சார்

வோர்ட்போய்: ஐயையோ, அதுக்குன்னு புதுசா வார்டு திறந்திருக்காங்க பாரு! அங்கே கொண்டு போங்க!

இடம்: அரோகரா ஆஸ்பத்திரியின் ’சுறா’ வார்டு

ரமணா: டாக்டர், இவன் சுறா படத்துக்குப் போயிட்டான். எப்படியாவது காப்பாத்துங்க! எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.

டாக்டர்: யோவ், நாலஞ்சு நாளா இங்கே வர்றதெல்லாம் அந்தக் கேசு தானய்யா! பன்றிக்காய்ச்சலுக்குக் கூட இங்கே இவ்வளவு கூட்டம் வரலே! முதல்லே நீங்க வெளியே இருங்க!

(ரமணா வெளியேறுகிறார்)

டாக்டர்: நர்ஸ்! இந்தக் கேஸைப் பார்த்தா ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தைப் பார்த்தே பைத்தியம் பிடிச்சவன் மாதிரியிருக்கே!

நர்ஸ்: என்ன பண்ணலாம் டாக்டர்?

டாக்டர்: நமக்கு மட்டும் தானே தெரியும்? நாமபாட்டுக்கு இது சுறாபோபியான்னு ட்ரீட்மெண்ட் பண்ணுவோம். அந்த ரமணா கிட்டே போயி சொல்லிடுங்க!

(நர்ஸ் வெளியே சென்று ரமணாவிடம் சொல்லுகிறார்)நர்ஸ்: உள்ளே ட்ரீட்மெண்ட் நடந்திட்டிருக்கு! காப்பாத்திடலாம். எதுக்கும் நீங்க கேஷ்-கவுண்டரிலே போயி ஒரு ஐநூத்தி ஓரு ரூபாய் அட்வான்ஸ் கட்டிருங்க! அப்பத்தான் அட்மிட் பண்ணிப்போம்.

(ரமணா கேஷ்-கவுன்டருக்குப் போய், ஐநூற்றி ஒன்று ரூபாய் அட்வான்ஸ் கட்டி, சூடாமணியின் பெயரில் ரசீது வாங்குகிறார். பிறகு, மருந்துக்கடைக்குச் சென்று முப்பத்தி மூன்று ரூபாய் பதினெட்டு பைசாவுக்கு மருந்து வாங்கி, அதற்கான பில்லிலும் சூடாமணியின் பெயர்போட்டுப் பெற்றுக்கொள்ளுகிறார்)

ரமணா: டாக்டர், சூடாமணிக்கு எப்படியிருக்கு?

டாக்டர்: ஒரு ஊசி போட்டோம்! அந்த நேரம் பார்த்து எங்க டாக்டர் ஒருத்தரோட ரிங் டோனிலே வில்லு பாட்டு வந்திச்சா! திரும்ப பைத்தியம் முத்திருச்சு! ஹைதராபாத்துலேருந்து டாக்டர் கடகடாலு ரெட்டின்னு ஒரு ஸ்பெஷலிஸ்ட் தலைமறைவா ஓடிவந்து சென்னையிலே தங்கியிருக்காரு! ஆந்திராவுலே பொப்புலு கப்புலுன்னு தெலுங்குப்படம் ரிலீஸ் ஆனபோது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தவரு! ஆனா, விசிட்டிங் ஃபீஸ் நூத்தி ஓரு ரூபாயும் சிகரெட் பக்கட்டும் கொடுக்கணும்.

ரமணா: பணத்தைப் பத்திக்கவலைப்படாதீங்க சார்! நூத்தி ஒண்ணு என்ன, கூட ஒரு ரூபாய் சேர்த்து நூத்தி ரெண்டாவே கொடுக்கறேன். வந்து பார்க்கச் சொல்லுங்க சார்!

(டாக்டர் கடகடாலு ரெட்டி சைக்கிள் ரிக்ஷாவில் வந்து இறங்கி, சூடாமணியைப் பரிசோதிக்கிறார்)

ரமணா: டாக்டர், சூடாமணிக்கு என்ன ஆச்சு?

க.க.ரெட்டி: ரொம்ப சீரியசாத் தான் இருக்காரு! முழிச்சிருக்கும்போது பஞ்ச் டயலாக் பேசறாரு! தூக்க ஊசி போட்டா விஜய் பாட்டுப்பாடறாரு! இன்னும் ரெண்டு மணிநேரம் கழிச்சு அஜித் பாட்டுப் பாடினாருன்னா பொழைக்கிற வாய்ப்பிருக்கு!

இடம்: அரோகரா ஆஸ்பத்திரி-சுறா வார்டு

நர்ஸ்: சார், இந்தப் பைத்தியம் என்னைத் தமன்னான்னு நினைச்சுக்கிட்டு குத்தாட்டம் போடலாமான்னு கேட்குது! சீக்கிரம் இதை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க சார்!

டாக்டர்: முதல்லே இவரைக் கீழ்ப்பாக்கத்துக்கு எடுத்திட்டுப் போகச் சொல்லலாம்.

இடம்: சுறா வார்டு வராண்டா

ரமணா: சூடாமணி அம்மா! இப்போ டாக்டர் வருவாரு! நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணினோம். பேஷியன்ட் பைத்தியத்தைத் தெளிவிக்க முடியலேன்னு சொல்லுவாரு பாருங்க!

(டாக்டர் வருகிறார்)

டாக்டர்: ஐயாம் சாரி மிஸ்டர் ரமணா! நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணினோம். பேஷியன்ட் பைத்தியத்தைத் தெளிவிக்க முடியலே

சூடாமணி அம்மா: ரமணா, அப்படியே சொல்லுறாரு! நீங்க ரெண்டு பேரும் கூட்டா?

ரமணா: சும்மாயிருங்கம்மா நீங்க சொல்லுங்க டாக்டர்

டாக்டர்: மொத்தம் அறுநூத்தி எட்டு ரூபாய் செலவாயிருக்கு! மீதி நூத்தி ஏழு ரூபாயைக் கட்டிட்டு பேஷியன்டை நீங்க கீழ்ப்பாக்கத்துக்குக் கூட்டிக்கிட்டுப்போகலாம்.

ரமணா: இன்னும் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தா நாங்க சூடாமணியைக் கூட்டிக்கிட்டுப் போறோம்.

டாக்டர்: வாட்? என்ன சொல்றீங்க??

ரமணா: செலவைப் பத்திக்கவலைப்படாதீங்கன்னு டாக்டர் கிட்டேயும், டைரக்டர் கிட்டேயும் சொல்லக் கூடாது! ரெண்டு பேரும் செலவை இழுத்து விட்டு கடைசியிலே எல்லாருக்கும் ஆப்பு வச்சிடறீங்க!

புரியலே டாக்டர்? ஏற்கனவே வில்லு படம் பார்த்ததிலேருந்தே பைத்தியம் பிடிச்சதா கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியே சர்டிபிகேட் கொடுத்த ஆளுக்கு சுறாபோபியான்னு ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கீங்க! அதுக்கான ஆதாரம் எங்கிட்டே இருக்கு! அரோகரா ஆஸ்பத்திரியோட எம்.டி, இங்கே, இப்போ வந்தாகணும்.

டாக்டர்: அவரு இப்போ வரமுடியாது ரமணா! மார்னிங் ஷோ ’சுறா’ பார்க்க ஃபேமிலியோட போயிருக்காரு.

ரமணா: என்னது? பேமிலியோட போயிருக்காரா? அப்படீன்னா அவரு பேய்முழியோட தான் திரும்பி வருவாரு!
டாக்டர்: ரமணா, இதோ என் சம்பளப்பணம் அப்படியே தந்திடறேன்! ரமணா படத்துலே விஜயகாந்த் பண்ணுற மாதிரி பண்ணிடாதே! இந்தா பதினையாயிரம் ரூபாய் இருக்கு! வச்சுக்கோ, சூடாமணியைக் கூட்டிக்கிட்டு முதல்லே இடத்தைக் காலிபண்ணு!

ரமணா: சூடாமணி அம்மா! இந்தாங்க இதுலே பதினைஞ்சு ரூபாய் இருக்கு! மீதி பதினாலாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி அஞ்சு ரூபாயை என்னோட சர்வீஸ் சார்ஜா எடுத்துக்கிட்டேன். சூடாமணியைக் கூட்டிக்கிட்டு அப்படியே 23Cயைப் பிடிச்சு நீங்க வீடுபோய்ச் சேருங்க!

சூடாமணி அம்மா:  மவராசா! நீ நல்லாயிருக்கணும்! சூடாமணி! சூடாமணி! வாடா வூட்டுக்குப்போகலாம்.

ரமணா: டாக்டர்! நம்ம நாட்டுலேயே நாலெழுத்துப் படிச்சவங்க ரெண்டே பேரு தான். ஒருத்தன் SSLC; இன்னொருத்தன் MBBS. இப்படிப் பணத்துக்காக படத்தோட பெயரை மாத்தி மாத்தி வைத்தியம் பார்க்கறீங்களே?

டாக்டர்: தெரியாமப் பண்ணிட்டோம் ரமணா! மன்னிச்சிருங்க!

ரமணா: மன்னிப்பு, தமிழிலே எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை! உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தாங்க டிக்கெட்! எல்லா டாக்டருங்களும் போய் ’சுறா’ படம் பாருங்க!

டாக்டர்: ஐயோ (மயக்கம் போட்டு விழுகிறார்)

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இன்று ஆரம்பமாகும் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்து அணிகள்.

ஐ.சி.சி T20 உலகக் கிண்ணத் தொடரின் உச்சக்கட்டமிது. 12 அணிகளிலிருந்து 4 அணிகள் தேர்வு செய்யப்பட்டாகிவிட்டது. இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இனி வாழ்வா சாவாப் போராட்டம். அரையிறுதியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டி இல்லையேல் வெளியேற்றம்.


இன்று ஆரம்பமாகும் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்து அணியை எதிர் கொள்கின்றது. சம பலமிக்க அணிகளாக இருந்தாலும் இலங்கையின் ஆதிக்கம் அதிகமாகவிருக்கும் என நம்பலாம்….

இலங்கை அணியில் முரளி இல்லாததும், சனத் ஃபோமில் இல்லாததும் இங்கிலாந்து அணிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் அதேவேளை பீட்டர்ஸன் இல்லாதது இலங்கை அணிக்கு மகிழ்ச்சி தரும்.

இலங்கை அணியில் சிறந்த சகலதுறை வீரர்கள் உள்ளமை இலங்கை அணிக்கு மிகச் சிறந்த பலம்.

இந்தியாவுடன் விளையாடிய இலங்கை அணித் தேர்வு அருமை. அதில் திலான் துசாரவுக்குப் பதிலாக நுவன் குலசேகரவை இணைத்திருக்கலாம்.
கடந்த போட்டியில் விளையாடிய அதே இலங்கை அணிதான் விளையாடும் என்று எதிர் பார்க்கப்பட்டாலும், திலான் துசார நீக்கப்படலாம், சனத்(?????)

அஜந்த மெண்டிசுக்கு இன்றைய போட்டியில் விளையாட வாய்பு அதிகம். எனினும் அவரது பெறுபேறுகள் சிறப்பாகவில்லை.. எனவே அவர் இப்போதைக்குத் தேவையில்லை. சுராஜ் ரண்டிவ் சிறப்பாக விளையாடுகிறார்.

அதேவேளை மெண்டிஸை அணியில் இணைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என்று சங்கக்கார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மஹெல ஜயவர்த்தனவுடன் இன்று டில்சான் களமிறங்குவார் என நம்புகிறேன். டில்சான் ஃபோமுக்கு திரும்பியுள்ளமை இங்கிலாந்து அணியினருக்கு பலத்த அச்சுறுத்தலாகவிருக்கும்.

திசர பெரேரா- மலிங்க இறுதி 5 ஓவர்களையும் வீசினால் இங்கிலாந்து அணியினரின் கடைசி 5 ஓவர்களில் ஓட்ட வேகத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம்.

மஹெல, சங்கக்கார, டில்சான், மெத்தியூஸ்,கபுகெதர ஆகியோரை
துடுப்பாட்டத்திலும்; மலிங்க, மெத்தியூஸ், சுராஜ்,பெரேரா ஆகியோரை பந்து வீச்சிலும் இங்கிலாந்து அணியினர் சமாளிக்க வேண்டியிருக்கும்.

இங்கிலாந்து சார்பாக கீவெஸ்டர், லம்ப் ஆகியோர் சிறப்பான ஆரம்ப இணையாகவுள்ளனர். மைக்கல் யார்ட்லி மற்றும் ட்ரிம் ப்ரெஸ்னன் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் க்ரேம் ஸ்வான் பந்து வீச்சிலும் பிரகாசிப்பதால் இவர்கள் தொடர்பில் இலங்கை அணியினர் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

எப்படியிருந்த போதும் இன்று ஒரு விறுவிறுப்பான ஆட்டமொன்று கிரிக்கட் ரசிகர்களுக்கு கிடைக்குமென்பதில் சந்தேகமே இல்லை….

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

தொடரட்டும் இலங்கை அணியின் வெற்றி நடை....

ஐ.சி.சி T20 போட்டிகளில் இடம்பெற்ற மிகவும் விறுவிறுப்பானதும் கடைசிப் பந்தில் வெற்றி பெறப்பட்டதுமான சுவாரஸ்யமான போட்டி. நேற்று இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.

மிக முக்கியமானதும், மிகுந்த விறுவிறுப்பானதுமான போட்டியில் இலங்கை அணியினர் மிகச் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர். இதன் மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை அணியினர் முண்ணேறியிருக்கின்றனர்.


நேற்றைய போட்டியானது இலங்கை, இந்தியா,மேற்கிந்தியத் தீவுகள் அணியினருக்கு மிகுந்த முக்கியமான போட்டியாகவிருந்தது. இலங்கை அணியினர் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பு அதிகமாகும். இலங்கை அணியினரை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டால் இந்திய அணியினருக்கும் அரையிறுதிக்கு ஒரு சிறிய வாய்ப்புக் கிடைக்கும் என்ற நிலையில் நேற்றைய போட்டி ஆரம்பமானது.

மிக முக்கியமான நாணயச் சுழற்சியில் வெற்றியடைந்த இந்திய அணியினர் எதிர்பார்த்ததைப் போன்றே முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தனர்.
சிறப்பான ஆரம்பத்தை இந்திய அணியினர் பெற்றுக் கொண்டனர். ஒரு கட்டத்தில் இந்திய அணியினர் 190 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுவிடக்கூடிய வாய்ப்பிருந்தது. ஆனாலும் அவர்களால் 163 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இந்திய அணியினர் முதல் 10 ஓவர்களில் 90/1 ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும் இறுதி 10 ஓவர்களில் 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். இதற்கான முக்கிய காரணம் இலங்கை பந்துவீச்சாளர்களான திசர பெரேரா மற்றும் லசித் மலிங்க ஆகியோரின் அற்புதமான பந்துவீச்சு. அதிலும் திசர பெரேராவின் இறுதி ஓவர்கள் அற்புதம். யோக்கர் பந்துகளை விக்கட்டுக்கு வெளியே அகலமாக வீசும் நுட்பத்தின் மூலமாக இந்திய அணியினரின் ஓட்ட வேகத்தை மட்டுப்படுத்தினார்.இலங்கை அணிக்கு இறுதி ஓவர்களை லசித் மாலிங்கவுடன் இணைந்து சிறப்பாக வீச அருமையான வீரர் திசர பெரேராதான். இவ்விரு வீரர்களையும் கொண்டு இறுதி 5 ஓவர்களை சிறப்பாக கையாளலாம்.

குமார் சங்கக்கார கெளதம் காம்பீரின் பிடி ஒன்றையும், சுரேஸ் ரெய்னாவின் ஸ்டம் ஒன்றையும் தவறவிட்டார். மற்றப்படி இலங்கை அணியினரின் களத்தடுப்பு சிறப்பாகவிருந்தது.

163 என்ற வெற்றியிலக்கை நோக்கிய பயணத்தில் இலங்கை அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. கடந்த போட்டிகளில் அதி உன்னத துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மஹெல ஜயவர்தன 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணிக்கு இடி விழுந்தது. தொடர்ந்து சனத் ஜயசூர்யவும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழக்க அவுஸ்திரேலியாவுடன் நடந்த நிலைதானோ என்ற கவலை இலங்கை ரசிகர்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.(சனா…. இனி கஸ்டம்)


தொடர்ந்து ஜோடி சேர்ந்த சங்ககார - டில்சான் ஜோடி இலங்கையின் இனிங்சிற்கு புது இரத்தம் பாய்ச்சினர். டில்சான் முக்கியமான நேரத்தில் ஃபோமுக்கு திரும்பிவிட்டார். டில்சான் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மீண்டும் போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியது. அதன் பின் இணைந்த சங்கக்கார - மெத்தியூஸ் ஜோடி விக்கட்டில் நிலைத்து நின்று ஓட்டங்களை படிப்படியாக அதிகரித்தனர்.


இலங்கை இனிங்சின் 11வது ஓவரில் ஓட்ட வேகத்தை சடுதியாக அதிகரிக்க நினைத்த சங்கக்கார - மெத்தியூஸ் ஜோடி அதில் வெற்றியும் கண்டனர். அதிரடியாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சங்கக்கார 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சற்றுத் தழம்பல் நிலை ஏற்பட்டது. பின்னர் ஜோடி சேர்ந்த மெத்தியூஸ் - கபுகெதர ஜோடி (என்னைப் பொறுத்தவரை இலங்கையின் எதிர்கால தலைவர், உபதலைவர்கள்) சிறப்பாக நிதானமான அதிரடியினை வெளிப்படுத்தினர்.

இந்திய அணிக்கு முதலாவது இலக்கு இலங்கை அணியினரை 143 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என்பது. இலங்கையணியினரின் முதலாவது இலக்கு 143ஐத் தாண்டவேண்டுமென்பது. போட்டி சுவாரஸ்யம் கூடியது. ஒரு கட்டத்தில் 14- 17ம் ஓவர் வரை இலங்கையணியினரின் திட்டம் 143ஐ எடுத்தால் மட்டும் போதுமென்பது போல் இருந்தது. காரணம் அதிரடியாக ஆடாமல் சாதாரணமாக ஆடினார்கள்.

போட்டியின் உச்சக்கட்டம்….8 பந்துகளில் 25 ஓட்டங்கள் பெறவேண்டும். 19வது ஓவரின் 5வது பந்துவிச்சில் கபுகெதர 6 ஓட்டமொன்றை விளாசியதன் மூலம் இந்தியாவின் 143 என்ற இலக்கு தகர்க்கப்பட்டது. 19வது ஓவரின் இறுதிப் பந்தில் மற்றுமொரு 6 ஓட்டத்தை கபுகெதர விளாச போட்டி உச்சம் பெற்றது.
இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் பெறவேண்டும்… இறுதி ஓவரின் முதல் பந்தில் மெத்தியூஸ் அற்புதமான 6 ஓட்டமொன்றைப் பெற்றுக் கொடுத்தார். அடுத்த பந்தில் மெத்தியூஸ்(46) ரன்-அவுட்.

இறுதிப் பந்தில் 3 ஓட்டம் பெறவேண்டும்….

அசிஸ் நெஹ்ரா கபுகெதரவை நோக்கி வீசிய பந்து கபுகெதர தனது முன்னங்காலில் பாய்ந்து ஓங்கி அடிக்கின்றார்… ஆம் கவர் திசையில் அற்புதமான ஆறு ஓட்டம்.

இலங்கை அணி 5 விக்கட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளதோடு அரையிறுதிக்கும் முன்னேற்றம். இலங்கை அணியினரின் சிறப்பான சகலதுறை ஆட்டம் மூலமாக பெறப்பட்ட வெற்றியிது.                         இலங்கை அணிக்கு எமது உளம் நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

கபுகெதர ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 36 ஓட்டங்கள். போட்டியின் ஆட்ட நாயகன் ஏஞ்சலோ மெத்தியூஸ்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

எனக்கிருந்த மற்றுமொரு சவாலையும் நான் வெற்றிகரமாக முறியடித்துவிட்டேன்...

எனக்கிருந்த மற்றுமொரு சவாலையும் நான் வெற்றிகரமாக முறியடித்துவிட்டேன்... மிகுந்த மகிழ்ச்சியாகவிருக்கின்றது...


இன்று அதிகாலை நிகழ்ச்சிக்காக நேற்றிரவு நேரகாலத்தோடு தூங்கவேண்டும் என்று எண்ணினேன் ஆனாலும் 12மணியளவில்தான் தூங்கமுடிந்தது...சரியாகத் தூங்கவுமில்லை. சரியாக 4 மணிக்கு அழைத்துச் செல்ல வாகனம் வரும். அதற்கு முன் தயாராகவேண்டும்.. பயம், பதற்றம்

ஒரு வேளை என்னை அறியாமல் தூக்கம் போய்விட்டால் என்ன நடக்கும்..? என்ற கற்பனை வேறு.. தூக்கமே வரவில்லை.அதிகாலை 1 மணியிலிருந்து 2.50வரை 10 நிமிடத்துக்கொரு முறை விழிக்குறதும், நேரத்தைப் பாக்குறதும்.. முடியல்ல...

எப்படியோ உரிய நேரத்துக்கு கலையகம் வந்தாச்சு...

நிலையத்தின் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் போதுள்ள நடைமுறைகளை இன்றுதான் அறிய முடிந்தது... அவை சுவாரஸ்யமானவை..

அலுவலகத்தில் அன்றைய தினத்தின் பத்திரிகைகளை பெறவேண்டும், தொழில் நுட்ப உதவியாளரின் அறையில் கையொப்பமிட்டு அன்றைய நாளின்

வர்த்தக நிரலைப்(Buisness Schedule) பெறவேண்டும், கலையகத்திலுள்ள நிகழ்சி நிரலை(Program Schedule) சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

தேசிய கீதம் - நிகழ்ச்சி ஆரம்பம்
“நேரம் ஐந்து மணி இது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தென்றல்.நேயர்கள் அனைவருக்கும் இனிய காலைப் பொழுதின் இதமான வணக்கம். இன்று மே மாதம் 11ம் நாள் 2010ம் வருடம் புலர்ந்துள்ள இந்நாள் நம்மனைவருக்கும் இனிதான நன்நாளாக அமைவதோடு இன்றைய நாளில் யாரெல்லாம் நற்காரியங்களை நாடியிருக்கின்றார்களோ அவர்களின் நற்காரியங்கள்அனைத்தும் இனிதே நிறைவேற வேண்டுமென இறைவனை வேண்டி இன்றைய தென்றலின் நிகழ்ச்சிகளை இனிதே ஆரம்பிக்கின்றோம்”
 இது நான் இன்றைய நிகழ்ச்சியை ஆரம்பித்த விதம்.
இன்றைய குறள் - கீதாஞ்சலி - என்றும் இனியவை - காலை 6 மணி பிரதான செய்திகள் - வைகறை நாதம் - பொங்கும் பூம்புனல் - தகவல் மஞ்சரி.

அதிகாலை 5 மணிமுதல் 9 மணிவரை தொடர்ச்சியாக 4 மணித்தியாலங்கள். அதிகாலை 2.50க்கு எழுந்ததிலிருந்து 6 மணி பிரதான செய்திகளின் போது கிடைத்த சிறிய இடைவெளியில் அவசரமாக குடித்த Tea ஐத் தவிர வேறு எந்த உணவுமில்லை, நேரமுமில்லை. ம்....... என்ன செய்வது....

இன்றைய நிகழ்ச்சிகளை அவதானமாகவும், ஆர்வமாகவும், அனுபவித்தும் தொகுத்து வழங்கினேன்.. அப்படி இருந்தும் ஒரு சிறு பிழை நேர்ந்துவிட்டது...

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட ஒரு நிகழ்ச்சி தொடர்பாக எனக்கிருந்த தெளிவின்மை காரணமாக ஒரு சிறு பிழை நடந்துவிட்டது. அது தவிர மற்றப்படி எல்லாம் சிறப்பாகவே அமைந்தது.

நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் பாராட்டினர். சிரேஸ்ட அறிவிப்பாளர்கள் முக்கியமாக கட்டுப்பாட்டாளர் மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி அனைவரும் மனம் திறந்து பாராட்டினர். பாடல் தொகுப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு என்பன சிறப்பாக அமைந்ததாகப் பாராட்டினார்கள். அதே நேரம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற குறிப்பிட்ட அப்பிழையை சுட்டியும் காட்டினர். முதல் தடவை என்பதாலும், இந் நிகழ்ச்சியை இதற்கு முன்னர் சரியாகக் நான் கேட்காததாலும் இச்சிறு பிழை இடம்பெற்றதாகவும் கூறினர். அது நூற்றுக்கு நூறு உண்மையே..

எனது இன்றைய நிகழ்ச்சி தொடர்பில் நண்பர்கள், சிரேஸ்ட அறிவிப்பாளர்களின் பாராட்டினால் நான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.

இதை விடவும் இன்றைய நாளில் நான் சந்தோசப்பட இன்னுமொரு முக்கிய விடயமிருக்கின்றது. எனது குரலில் தென்றலில் ஒரு விளம்பரம் ஒலிக்கப் போகின்றது.

சிரேஸ்ட அறிவிப்பாளர் கனிஸ்டா லூக்கஸ் அக்காவுடன் இணைந்து இவ் விளம்பரத்திற்கு குரல் கொடுத்திருந்தேன். விளம்பரம் என்பதைவிட அறிவித்தல் என்றே கூறவேண்டும். “யாழ்fm இல் பகுதி நேர அறிவிப்பாளராக இணைய விரும்புகிறீர்களா” என்று அது ஆரம்பிக்கின்றது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் யாழ்fm ற்கான பகுதி நேர அறிவிப்பாளருக்கான விண்ணப்பம் கோரும் அறிவித்தல் அது.

இதன் மூலமாக நான் இல்லாத நேரத்திலும் தென்றலில் என் குரல் ஒலிக்கப்போகிறது.


மிகுந்த மகிழ்ச்சியாகவிருக்கின்றது...

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

எனக்குவிடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு சவால்.....

இலங்கையின் அரச வானொலியான தென்றலின் நாளைய நாள் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.தென்றலின் நிகழ்சிகள் வழமையாக அதிகாலை 5 மணிக்கு தேசிய கீதத்தோடு ஆரம்பமாகும்.

அதிகாலை 5 மணிமுதல் 9 மணிவரை தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலங்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவேண்டும்.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந் நிகழ்ச்சியை சிரேஸ்ட அறிவிப்பாளர்களுடன் இணைந்து தொகுத்திருந்தாலும் நாளை நான் தனியே கடமை புரிய வேண்டும்.


நிகழ்சிக்காக என்னை அழைத்த என் உயர் அதிகாரி..
”புதிய அறிவிப்பாளர்களில் முதன் முதலாக உங்களுக்குத்தான் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.. உங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து உங்களுக்கே தரவேண்டும் என்பதற்காகத் தந்திருக்கிறோம் முக்கியாமான நிகழ்ச்சி எனவே கவனமாகச் செய்யுங்கள்.” என்று அறிவுரை வழங்கினார்.
இதைக் கேட்ட போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் வழமையை விட பதற்றமும், பயமும் அதிகரித்திருக்கிறது...

ரொம்ப எதிர் பாக்கிறாங்களோ எனத் தோணுகிறது...


தென்றலில் பல நிகழ்ச்சிகளைத் தனியேயும், சிரேஸ்ட அறிவிப்பாளர்களுடன் இணைந்தும் தொகுத்து வழங்கியிருக்கின்றேன்...
ஆனால் என்னமோ தெரியாது இந்த முறை பதற்றமும், பயமும் அதிகமாய் இருக்கிறது....

அதிகாலையில் எழுந்து உரிய நேரத்திற்குள் சென்றுவிட வேண்டும்.... நிகழ்சியை திறம்பட தொகுக்க வேண்டும்...
இதுதான் எனக்கிருக்கும் சவால்..

எது எப்படியோ நம்பிக்கையோடு களமிறங்குகின்றேன்....

காலை 5 - 9 மணிவரை வாய்ப்பிருந்தால் கேட்டுத்தான் பாருங்ளேன்....

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...

உலகெங்கிலுமுள்ள அன்னையர் அனைவருக்கும் என் உளம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்.
முதியோர் இல்லங்களில் அநாதையாக்கப்பட்டிருக்கும் பெற்றோரை அவர்தம் பிள்ளைகள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பராமரிக்க இறைவன் அருள் புரிவானாக.....


உயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...

ஒரு துளியில் உருவாகி
உனக்குள்ளே கருவாகி
உன் ரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி
உயிர் பெற்று வந்தோமம்மா..... ஒ..ஓஓ....

உயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...
உயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...

பூவுண்ணு பாத்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு குணமுண்டு
தாயின்னு பாத்தாக்கா எல்லாத்தாய்க்கும் ஒரே குணம்தான் உண்டு...

பூவுண்ணு பாத்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு குணமுண்டு
தாயின்னு பாத்தாக்கா எல்லாத்தாய்க்கும் ஒரே குணம்தான் உண்டு...

எதுவும் நிறையும் தாயிருந்தாக்கா எல்லாம் மறையும் தாயிருந்தா......
எதுவும் நிறையும் தாயிருந்தாக்கா எல்லாம் மறையும் தாயிருந்தா......

எந்தத் தாய்க்கும் மரணம் கூடாது சாமி தாய்மை இல்லேனா சுத்தாது பூமி

ஒரு துளியில் உருவாகி
உனக்குள்ளே கருவாகி
உன் ரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி
உயிர் பெற்று வந்தோமம்மா.....

உயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...
சாமின்னு பாத்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு குணமுண்டு...
தாயின்னு பாத்தாக்கா எல்லாத்தாய்க்கும் ஒரே குணம்தான் உண்டு...

சாமின்னு பாத்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு குணமுண்டு...
தாயின்னு பாத்தாக்கா எல்லாத்தாய்க்கும் ஒரே குணம்தான் உண்டு...

எதுவும் கிடைக்கும் தாயிருந்தாக்கா எல்லாம் தொலையும் தாயிருந்தாக்கா
எதுவும் கிடைக்கும் தாயிருந்தாக்கா எல்லாம் தொலையும் தாயிருந்தாக்கா

எந்தத் தாய்க்கும் மரணம் கூடாது சாமி தாய்மை இல்லேனா சுத்தாது பூமி

ஒரு துளியில் உருவாகி
உனக்குள்ளே கருவாகி
உன் ரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி
உயிர் பெற்று வந்தோமம்மா.....

உயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS