RSS

இன்று ஆரம்பமாகும் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்து அணிகள்.

ஐ.சி.சி T20 உலகக் கிண்ணத் தொடரின் உச்சக்கட்டமிது. 12 அணிகளிலிருந்து 4 அணிகள் தேர்வு செய்யப்பட்டாகிவிட்டது. இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இனி வாழ்வா சாவாப் போராட்டம். அரையிறுதியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டி இல்லையேல் வெளியேற்றம்.


இன்று ஆரம்பமாகும் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்து அணியை எதிர் கொள்கின்றது. சம பலமிக்க அணிகளாக இருந்தாலும் இலங்கையின் ஆதிக்கம் அதிகமாகவிருக்கும் என நம்பலாம்….

இலங்கை அணியில் முரளி இல்லாததும், சனத் ஃபோமில் இல்லாததும் இங்கிலாந்து அணிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் அதேவேளை பீட்டர்ஸன் இல்லாதது இலங்கை அணிக்கு மகிழ்ச்சி தரும்.

இலங்கை அணியில் சிறந்த சகலதுறை வீரர்கள் உள்ளமை இலங்கை அணிக்கு மிகச் சிறந்த பலம்.

இந்தியாவுடன் விளையாடிய இலங்கை அணித் தேர்வு அருமை. அதில் திலான் துசாரவுக்குப் பதிலாக நுவன் குலசேகரவை இணைத்திருக்கலாம்.
கடந்த போட்டியில் விளையாடிய அதே இலங்கை அணிதான் விளையாடும் என்று எதிர் பார்க்கப்பட்டாலும், திலான் துசார நீக்கப்படலாம், சனத்(?????)

அஜந்த மெண்டிசுக்கு இன்றைய போட்டியில் விளையாட வாய்பு அதிகம். எனினும் அவரது பெறுபேறுகள் சிறப்பாகவில்லை.. எனவே அவர் இப்போதைக்குத் தேவையில்லை. சுராஜ் ரண்டிவ் சிறப்பாக விளையாடுகிறார்.

அதேவேளை மெண்டிஸை அணியில் இணைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என்று சங்கக்கார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மஹெல ஜயவர்த்தனவுடன் இன்று டில்சான் களமிறங்குவார் என நம்புகிறேன். டில்சான் ஃபோமுக்கு திரும்பியுள்ளமை இங்கிலாந்து அணியினருக்கு பலத்த அச்சுறுத்தலாகவிருக்கும்.

திசர பெரேரா- மலிங்க இறுதி 5 ஓவர்களையும் வீசினால் இங்கிலாந்து அணியினரின் கடைசி 5 ஓவர்களில் ஓட்ட வேகத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம்.

மஹெல, சங்கக்கார, டில்சான், மெத்தியூஸ்,கபுகெதர ஆகியோரை
துடுப்பாட்டத்திலும்; மலிங்க, மெத்தியூஸ், சுராஜ்,பெரேரா ஆகியோரை பந்து வீச்சிலும் இங்கிலாந்து அணியினர் சமாளிக்க வேண்டியிருக்கும்.

இங்கிலாந்து சார்பாக கீவெஸ்டர், லம்ப் ஆகியோர் சிறப்பான ஆரம்ப இணையாகவுள்ளனர். மைக்கல் யார்ட்லி மற்றும் ட்ரிம் ப்ரெஸ்னன் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் க்ரேம் ஸ்வான் பந்து வீச்சிலும் பிரகாசிப்பதால் இவர்கள் தொடர்பில் இலங்கை அணியினர் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

எப்படியிருந்த போதும் இன்று ஒரு விறுவிறுப்பான ஆட்டமொன்று கிரிக்கட் ரசிகர்களுக்கு கிடைக்குமென்பதில் சந்தேகமே இல்லை….

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS