RSS

ஆசியக் கிண்ணம் 2010 இறுதிப் போட்டி இன்று

ஆசியக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி இன்று தம்புள்ளை மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. இலங்கை இந்திய அணிகள் மோதிக்கொள்ளும் இவ்விறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக 3 முறை கிண்ணம் வென்ற அணி என்ற சாதனையையும், அதிக தடவைகள் (5தடவை) ஆசியக் கிண்ணத்தை வென்ற அணி என்ற பெருமையையும் தனதாக்கிக் கொள்ளும். மறு புறத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 15 வருடங்களின் பின்னர் ஆசியக் கிண்ணத்தினை வென்ற சந்தோசம் கிடைப்பதுடன் அதிக தடவை ஆசிய கிண்ணத்தினை (5 தடவை) வென்ற பெருமையும் கிட்டும்.

கடைசியாக இலங்கை இந்திய அணிகள் மோதிக்கொண்ட 15 இறுதிப் போட்டிகளில் இலங்கை அணி 7 இறுதிப் போட்டிகளிலும் இந்திய அணி 6 இறுதிப் போட்டிகளிலும் வென்றிருக்கின்றன.

கடந்த செவ்வாய்க் கிழமை இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுகளால் இலகுவாக வெற்றியீட்டி அதே மனத்திடத்துடன் இன்று களமிறங்குகின்றது.
எது எப்படியோ இன்று இடம்பெறப் போகும் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது. எனவே இரு அணிகளும் வெற்றிக்காக உயர்ந்த பட்சம் போராடும் என நம்பலாம்.

இன்று எதிர்பார்க்கபடும் அணி.

இலங்கை:
1.உபுல் தரங்க 2.திலகரத்ன டில்சான் 3.குமார் சங்ககார 4.மஹெல ஜயவர்த்தன 5.திலின கண்டம்பி/திலான்  சமரவீர 6.ஏஞ்சலோ மெத்தியூஸ் 7.சாமர கபுகெதர 8.ஃபர்வீஸ் மஹ்ரூஃப் 9.நுவான் குலசேகர 10.லசித் மலிங்க 11.முத்தையா முரளீதரன்

இந்தியா:
1.கெளதம் காம்பீர் 2.தினேஸ் கார்த்திக் 3.ரோஹிட் சர்மா 4.மஹேந்திர சிங் தோனி 5.விராட் கோலி 6.சுரேஸ் ரெய்னா 7.ரவீந்ர ஜடேஜா 8.ஹர்பஜான் சிங் 9.ப்ரவீன் குமார் 10.சஹீர் கான் 11. அசீஸ் நெஹ்ராஆசியக் கிண்ணப் தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் போது எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான புகைப்படங்களில் சிலவற்றை நகைச்சுவையாகப் பகிர்ந்திருக்கின்றேன். அதையும் பாருங்களேன்.


பாருங்களேன் இன்னாமா போஸ் குடுத்திருக்காய்ங்க என்று.....

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பாசக்கார பய புள்ளைங்க..

பாசக்கார பய புள்ளைங்க..
கொஞ்ச நாள் ஊர்பக்கம் போகாததுக்கு என்னமா அன்ப பாய்ச்சுறாய்ங்க....

மச்சான் எப்படா ஊருக்கு வர்ர? எங்குறதும். சுஹைல் நாநா எப்ப ஊருக்கு வாறிங்க எண்டு கேக்குறதும். நாம கிரிக்கட் விளையாடுரல்லியா
எங்குறதும்? ஊர் பொன்னுங்க கலர்ஸ் கூடிட்டு நீங்க வந்தாத்தான் சரியாகும் எங்குறதும். ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்களும். அச்சச்சோ எவ்ளோ பாசம்.


நம்ம பசங்களுக்கு பதில் சொல்லி சொல்லி முடியல்ல. அதுதான் எல்லாருக்கும் பொதுவா ஒரு லெட்டர் இல்ல ஒரு மடல் ஆ...ஆ....ஆ ஒரு கடிதம்னே வெச்சுக்கலாம்.


மக்கள்ஸ் கவலப்படாதிங்க. நான் வந்துடுவன். நான் மட்டும் என்ன உங்கள விட்டுட்டு இங்க சந்தோசமாவா இருக்கன்? கலண்டர்ல சிவப்பு கலர்ல ஏதாவது நாள் இருக்கான்னு பாத்துட்டுத்தான் இருக்கன். ஞாயிற்றுக் கிழமைய தவிர வேற ஒன்னையும் காணலியே...? நீங்க கவலப்படாதிங்க இன்னும் கொஞ்ச நாள் பாப்பம்...

லீவு தரல்லியோ எவனுக்காவது ஒருத்தனுக்கு இருட்டடி கொடுத்தா கொஞ்ச நாளைக்கு கெம்பச மூடிடுவாங்க. அப்புறம் ஒன்னுமே தெரியாத மாதிரி நானும் வந்துடுவன்.
சரியா?

யாருக்கு இருட்டடி எண்டுதானே கேக்குறீங்க? ரெண்டு மூனு பேர் இருக்கானுக. எல்லாரையும் நோர்ட் பண்ணி வெச்சிருக்கன்.
சொன்னா நம்ப மாட்டீங்க ரெண்டு மூனூ லெக்சர்ஸ்மாரும் இருக்காங்க. கஞ்சப் பசங்க. மார்க்ஸ் போடவே மாட்டானுங்க.ஏதோ அவங்க ஊட்டு காச தாற மாதிரி.
சும்மா மார்க்ஸ அள்ளிப் போட்டா என்ன கொறஞ்சா போயிடும்? நீங்க கோவப்படாதிங்க. நான் பாத்துக்குறன். நீங்க வேற அவசரப்பட்டு
விக்கட் பொல்லு, பெட் அது இதெல்லாம் தூக்கிட்டு வந்துடாதிங்க. அன்னனுக்கு அவமானமா போயிடும். நானே பாத்துக்குறன். தேவப்பட்ட
கூப்பிடுறன் என்ன?

லீவு கிடச்சா தப்பிச்சானுங்க. இல்லன்னா அவ்ளோதான்....

நான் ஊருக்கு வந்தா அப்புறம் கச்சேரி ஆரம்பம்தான். அதுவரைக்கும் கொஞ்சம் மனச கல்லாக்கிட்டு கவலைய மறந்து இருங்க என்ன?
நான் சொல்லித் தந்த மாதிரி கிரிக்கட் விளையாடுங்க. லைப்ரரி மதில்ல நம்ம இடத்த யாருக்கும் விட்டுக் குடுத்துடாதிங்க. அதோட இப்பவே உண்டியல்ல காசுகள சேமிச்சு வெச்சுக்கங்க. அப்புறம் கிழங்குக் கடைக்கு போக காசு இல்ல, கொத்துரொட்டி சாபிட காசு இல்ல பீசா சாப்பிட காசு இல்ல எண்டு என் உயிர வாங்கப்படாது. ஏன்னா போன முற மாதிரி இந்த முற செலவழிக்க முடியாது. காரணம்தான் தெரியுமே? ஃபோன் ஒண்டு வாங்குறதுக்கு நானும் உண்டியல்ல காசு சேமிக்கிறன்.

தெரியும்தானே.? அப்புறம் றஹீம் ஹோட்டல்ல புதுசா சிக்கன் ஃப்ரைட் ரைஸ் நல்லாரிக்காமெண்டு ஒரு தகவல் காத்துல வந்திச்சு. அதையும் கொஞ்சம் என்னெண்டு பாக்கவேண்டிக் கிடக்கு சரியா?இப்போதைக்கு ஊர்ல நடக்குற விசயங்கள அடிக்கடி அப்-டேட் பன்னுங்க. விசேசமா யாராரு ஓவரா கலர்ஸ் காட்ராங்க எங்குறது, ஊர்ல யாராரு லவ் பன்றாங்க,  எத்துனபேர் ஓடிப்போய்டாங்க ,அப்புறம் நம்ம நெட்வேர்க் ஏரியாவுல மிஸ்ஸான பொன்னுங்க பத்தின தகவல எல்லாம் அப்-டேட் பண்ணிக்கோங்க சரியா? வெளிநாட்டுக்கு போன யாரெல்லாம் வந்திருக்காங்க என்னென்ன கொண்டு வந்திருக்காங்க? புதுசா யாரு வெளி நாடு போறாங்க? எங்குறது. அப்புறம் யாராருக்கு கல்யாணம் நடந்திருக்கு, யாரார் வீட்ல எப்பப்ப சாப்பாடு எங்குற தகவலெல்லாம் வந்தாகனும். ஓகே..?

இதெல்லாம் ஏன் கேக்குறன் எண்டால்... அடுத்த முறை ஊருக்கு வரும்போது எதுவுமே தெரியாம வந்தா நம்ம தலையிலயே மிளகா அரச்சுடுவானுங்க. அதான் முற்கூட்டிய தயாரிப்பு. புரிஞ்சுதா?

அப்புறம் முக்கியமான ஒரு விசயத்த சொல்ல மறந்துட்டன். அதாவது இங்க சரியான சூடுடா மக்கள்ஸ்.  ஏசிலேயே இருந்து பழகிடமா இங்க கொஞ்சம் கஸ்டமா இருக்கு, சரி பரவால்ல. சமாளிச்சுகுறன். அத நெனச்சு நீங்க கவலப்படாதிங்க. அப்புறம் அண்ணனுக்கு கஸ்ட்டமா போயிடும் என்ன?
சரி இப்போ இவ்வளவு போதும். எனக்கு தூக்கம் தூக்கமா வருது அப்புறம் நேர்ல சந்திப்பம் என்ன.இப்படிக்கு.

உங்கள் .................................(உங்களுக்கு பிடிச்ச மாதிரி டீசண்டான சொல்லப்போட்டு இடைவெளிய நிறப்பிக்கோங்க.)

சுஹைல்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

ஆசியக் கிண்ணம் 2010

உலகக் கிண்ண உதைப் பந்தாட்டப் போட்டிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்துக்குள்ளேயே ஆசிய கிரிக்கட் ரசிகர்களின் மற்றுமொரு திருவிழா ஆரம்பமாகின்றது.


அதுதான் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள்.இலங்கை, பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்திய அணிகள் பங்குகொள்ளும் ஆசிய கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இன்று ஆரம்பமாகின்றன. இம்முறை அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புள்ளை மைதானத்திலே இரவு பகல் போட்டிகளாக நடைபெறவுள்ளமை முக்கிய அம்சமாகும்.

ஆசியாவின் பலம் மிக்க நான்கு அணிகளும் தங்களுக்குள் பலப் பரீட்சை நடாத்தப் போகும் ஆசியக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளுக்கு இன்னும் ஒரு சிறப்பும் உண்டு. உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கு முன்னதாக இவ்வணிகள் மோதிக் கொள்ளும் மாபெரும் தொடர் இது என்பதே அச்சிறப்பு.

போட்டி அட்டவணை இதுதான்

முதலாவது போட்டி
ஜூன் 15 செவ்வாய்           இலங்கை v பாக்கிஸ்தான்

2வது போட்டி
ஜூன் 16 புதன்                     பங்களாதேஸ் v இந்தியா

3வது போட்டி\
ஜூன் 18 வெள்ளி             இலங்கை v பங்களாதேஸ்


4வது போட்டி
சனி ஜூன் 19                     இந்தியா v பாக்கிஸ்தான்

5வது போட்டி
திங்கள் ஜூன் 21             பங்களாதேஸ் v பாக்கிஸ்தான்

6வது போட்டி
செவ்வாய் ஜூன் 22      இலங்கை v இந்தியா

வியாழன் ஜூன் 24
இறுதிப் போட்டி - TBC v TBC


இது வரை 9 ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர்கள் நடைபெற்றிருக்கின்றன. இதில் இலங்கை இந்திய அணிகள் தலா 4 தடவையும் பாக்கிஸ்தான் அணி ஒரு தடவையும் சம்பியனாகியிருக்கின்றன. பங்களாதேஸ் அணியினருக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை.

நடப்பு ஜம்பியனான இலங்கை அணி இறுதியாக இடம்பெற்ற இரு ஆசியக் கிண்ணப் போடிகளையும் வெற்றி கொண்டிருக்கும் நிலையில் இம்முறையும் வெற்றிபெற்று தொடர்ச்சியாக 3 முறை சம்பியனாகி இந்தியாவின் சாதனையைச் சமப்படுத்துமா என்பதை பொறுத்திருந்தூதான் பார்க்க வேண்டும்.இலங்கை அணி.

சிம்பாப்வே மும்முனைத் தொடரை வெற்றிகொண்ட பின்னர் இலங்கை அணியினர் இப்போட்டியை எதிர்கொள்கின்றனர்.அணித் தலைவர் குமார் சங்ககார, லசித் மலிங்க, மகெல ஜயவர்தன, முத்தையா முரளீதரன் ஆகியோர் மீண்டும் அணியில் இணைகின்றனர். ஆனாலும் சிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய தினேஸ் சந்திமல், ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் அணியில் இல்லை. இது பலருக்கும் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை அணி விபரம் வருமாறு.

1.குமார் சங்ககார (தலைவர்)
2. முத்தையா முரளீதரன் (உப தலைவர்)
3.திலகரத்ன டில்சான்
4.ரங்கன ஹேரத்
5.மஹெல ஜயவர்த்தன
6.சுராஜ் ரந்தீவ்
7.திலின கண்டம்பி
8.சாமர கபுகெதர
9.நுவன் குலசேகர
10.ஃபர்வீஸ் மஹ்ரூஃப்
11.லசித் மலிங்க
12.ஏஞ்சலோ மெத்தியூஸ்
13.திலான் சமரவீர
14.உபுல் தரங்க
15.சானக வெலகெதர

இலங்கை அணி தெரிவு தொடர்பில் தெரிவுக் குழுத் தலைவர் அரவிந்த டீ சில்வா கூறுகையில்
”சனத் ஜயசூரியவின் தொடர்ச்சியான மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக அவரை அணியில் இணைத்துக்கொள்ளவில்லை. சில தந்திரோபாய நடவடிக்கைகளைக் கையாளும் நோக்கில் அஜந்த மெண்டிசை அணியில் இணைத்துக் கொள்ளவில்லை. அணித் தெரிவில் சில தந்திரோபாயங்களைக் கையாண்டிருக்கின்றேன் அது தொடர்பில் எதிர்க்கருதுகளை தெரிந்துகொள்ளவோ அல்லது அதை எதிரணியினர் தெரிந்துகொள்ளவோ நான் விரும்பவில்லை.” என்று கூறியிருந்தார்.

ஃபர்வீஸ் மஹ்ரூஃப் மற்றும் ரங்கன ஹெரத் ஆகியோரின் தெரிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரவிந்த டீ சில்வா “சகல துறை ஆட்டக் காரர்கள் இருவகை ஒன்று துடுப்பாட்ட சகலதுறை வீரர் அடுத்தது பந்துவீச்சு சகல துறை வீரர். அந்தவகையில் எஞ்சலோ மெத்தியூஸ் துடுப்பாட்ட சகல துறை வீரர், ஃபர்வீஸ் மஹ்ரூஃப் பந்து வீச்சு சகல துறை வீரர். தம்புள்ள மைதானத்தைப் பொறுத்தவரை மஹ்ரூஃப் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த அவர் இப்போது 100% உடல் தகுதியோடு இருகிறார் எனவே அவரை அணியில் இணைத்திருக்கின்றோம்.

பாகிஸ்தான் அணியில் சிறந்த வலது கைத் துடுப்பாட்ட வீரர்கள் அதிகம் இருப்பதால் எமக்கு ஒரு இடது கை சுழல் பந்துவீச்சாளர் தேவை அத்துடன் பவர் பிலே ஓவர்களில் மாறுபட்ட விதத்தில் பந்துவீசக் கூடிய சுழல் பந்துவீச்சாளர் தேவைப்பட்டார் எனவே அனுபவம்வாய்ந்த ரங்கன ஹெரத்தினை தெரிவு செய்தோம்.”

டினேஸ் சந்திமால், ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் அணியில் இடம்பெறாமை தொடர்பில் கருத்துக் கூறிய அரவிந்த டீ சில்வா ”சிம்பாப்வே தொடரில் அவ்விருவரும் உண்மையிலேயே மிகச் சிறப்பாக விளையாடினார்கள். ஆசியக் கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தவரை முதல் மூன்று போட்டிகளில் இரண்டிலாவது அவர்களுக்கு விளையாட வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை. அவ்வாறிருப்பின் அவர்களுக்கு அவுஸ்திரேலியா செல்லும் ஏ அணியுடன் இணைந்து விளையாட உள்ள அருமையான வாய்ப்பும் கை நழுவி விடும். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் அவுஸ்திரேலியா செல்லும் ஏ அணியுடன் இணைந்து அதில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதே அவ் இளம் வீரர்களுக்கு சிறந்ததென நான் கருதுகிறேன்” இவ்வாறு அணித் தேர்வு தொடர்பில் அரவிந்த டீ சில்வா கருத்துத் தெரிவித்தார்.

உண்மையில் சிறந்த தூர நோக்கும், நுட்பமும் வாய்ந்த அணித் தெரிவு. என்னைப் பொறுத்தவரையில் சரியான காலகட்டத்தில் சரியான ஒருவர் சரியான பொறுப்பை கையேற்றிருக்கிறார்.

அரவிந்த டீ சில்வாவின் தெரிவிலான இலங்கை அணி சாதிக்க என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.


பாகிஸ்தான் அணி.
பாக்கிஸ்தான் அணிக்குள் இடம்பெற்ற பல வெட்டுகுத்துகளுக்கு பின்னர் ஒரு இளம் அணி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தான் அணியினைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரு வருட தடை விதிக்கப்பட்ட சொகைப் மாலிக் அதனை எதிர்த்து வெற்றி பெற்று மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார். தலைவராகவிருந்து நீக்கப்பட்ட அவர் இப்போது அஃப்ரிடியின் தலைமைத்துவத்தின் கீழ் விளையாடப் போகின்றார். அடுத்தவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சொகைப் அக்தார். நீண்ட இடைவேளையின் பின்னர் மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். அக்தரின் வருகை பாகிஸ்தானின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அக்தரின் ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும். அக்தர் பந்த வீச ஓடிவரும் வேகம் ஸ்டைல், பந்தின் வேகம், எதிரணி வீரர்களை முறைக்கும் பார்வை, விக்கட்டினை வீழ்த்திய பின்னர் பருந்து போல் கைகளை விரித்து வட்டமிட்டு ஓடும் அழகு இவையெல்லாவற்றையும் ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன். இம்முறை
சாதிப்பாரா என்று பார்க்கலாம்.

பாகிஸ்தான் அணி விபரம்

1.சஹீட் அஃப்ரிடி (தலைவர்)
2.சல்மான் பட் (உப தலைவர்)
3.அப்துல் ரஸாக்
4.அப்துர் ரஹ்மான்
5.அஸாட் ஸஃபீக்
6.இம்ரான் ஃபர்ஹட்
7.கம்ரன் அக்மல்
8.முஹம்மட் ஆமிர்
9.முஹம்மட் அஸிஃப்
10.சயீட் அஜ்மல்
11.சசாய்ப் ஹசன்
12.சொகைப் அக்தர்
13.சொஹைப் மாலிக்
14.உமர் அக்மல்
15.உமர் அமின்


இந்திய அணி.

சிம்பாப்வே மும்முனைத் தொடரின் மோசமான தோல்வியைத் தொடர்ந்து களம் இறங்கும் இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பில்லை. அதே போல் சச்சின் டெண்டுல்கர் சுய விருப்பில் ஓய்வில் இருக்கிறார். ஏற்கனவே டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சோபிக்காமையால் பலத்த கண்டனத்துக்குள்ளாகியிருந்த நிலையில் களம் இறங்குகிறது இந்திய அணி.

இந்திய அணி விபரம்

1.மகேந்திர சிங் தோனி (தலைவர்)
2.விரேந்தர் சேவாக் (உப தலைவர்)
3.ரவிசந்திரன் அஸ்வின்
4.அசோக் டிண்டா
5.கெளதம் காம்பிர்
6.ஹர்பஜான் சிங்
7.ரவீந்திர ஜடேஜா
8.சஹீர் கான்
9.விராட் கோலி
10.ப்ரவீன் குமார்
11.அஸிஸ் நெஹ்ரா
12.ப்ரகயன் ஒஜா
13.சுரேஸ் ரெய்னா
14.ரோஹித் சர்மா
15.செளரப் திவாரி


பங்களாதேஸ் அணி.

சில சமயங்களில் விஸ்வரூபம் எடுக்கும் சில சமயங்களில் பரிதாமாகத் தோற்கும் ஒரு அணி. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் பின்னர் களம் இறங்குகிறார்கள்.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் சிறந்த ஃபோமில் இருக்கிறார்.தலைவர் சகீப் அல் ஹசன், முஹம்மட் அஸ்ரபுல் போன்ற வீரர்களும் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்பலாம். எந்த அணிக்கும் சவால் விடக்கூடிய இளம் அணி பார்க்கலாம் சாதிக்கிறார்களா என்று.

பங்களாதேஸ் அணி விபரம்.

1.சகீப் அல் ஹஸன் (தலைவர்)
2.முஸ்ஃபிகுர் ரஹீம் (உப தலைவர்)
3.அப்துர் ரசாக்
4.இம்ருல் கைஸ்
5.ஜஹ்ருல் இஸ்லாம்
6.ஜுனைந் சித்தீக்
7.மஹ்மூதுல்லாஹ்
8.மஸ்ரஃபீ மோர்த்தசா
9.முஹம்மட் அஸ்ரஃபுல்
10.நயீம் இஸ்லாம்
11.ருபெல் ஹுசைன்
12.சஃபீயுல் இஸ்லாம்
13.சுஹர்வாதீ சுவோ
14.சயீந் ரஸெல்
15.தமீம் இக்பால்


அனுபவம் + இளமை + துடிப்போடு நான்கு அணிகளும் களமிறங்குகின்றன. சுவாரஸ்யமான போட்டித் தொடரினை கண்டுகளிக்க ஆவலாய் காத்திருக்கின்றேன்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உலகக் கிண்ண உதைப் பந்தாட்டப் போட்டிகள் 2010.

2010 உலகக் கிண்ணப் போட்டிகள் பற்றிய எனது சிறப்புப் பதிவினை முன்னரே தந்துவிட வேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தபோதும் பல்கலைக் கழகத்தில் படிப்பு கொஞ்சம் அதிகமானதாலும், எனக்கேட்பட்ட சுகவீனம் காரணமாகவும் சிறிது தாமதமேற்பட்டுவிட்டது.

எது எப்படியோ உலகக் கிண்ணப் உதைப் பந்தாட்டப் போட்டிகள் தொடர்பில் நான் அறிந்தவை, பத்திரிகைகள், இணையத் தளங்கள் மூலமாக தேடிப் பெற்றுக்கொண்ட முக்கிய குறிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.


உலகக் கிண்ண உதைப் பந்தாட்டப் போட்டிகள் 2010.


உதைப்பந்தாட்டப் போட்டிகள் சுமார் 60 வருட வரலாறு கொண்டவை.
இற்றைக்கு சரியாக 30 வருடங்களுக்கு முன்னர் 1950 ஜூலை 13ம் திகதி உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாகின.

உதைப்பந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு திருவிழாவான 2010 உலகக் கிண்ணப் போட்டிகள் இம்முறை கோலாகமாக தென்னாபிரிக்காவில் நேற்று ஆராம்பமாகின. 32 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டிகள் மொத்தமாக 31 நாட்கள் இடம்பெறவுள்ளன.

நேற்று கண்கவர் நிகழ்ச்சிகளோடு 2010 ம் ஆண்டுக்கான உதைப்பந்தாட்டத் திருவிழா மிகச் சிறப்பாக ஆரம்பமாகியது.

நேற்றைய நாள் இரண்டு போட்டிகள் இடம்பெற்றன. ஆனால் இரண்டுமே வெற்றி தோல்வியின்றியே முடிவடைந்திருந்தன.

முதலில் தென்னாபிரிக்கா மற்றும் மெக்சிக்கொ அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் தலா 1 கோல்களைப் போட்டதன் காரணமக போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

உருகுவே மற்றும் ஃபிரான்ஸ் அணிகளுக்கிடையில் இடம் பெற்ற இரண்டாவது போட்டியும் கோல்கள் எதுவும் போடாத நிலையில் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

2010 உலகக் கிண்ணப் போட்டிகளில் பெரிதும் பிரகாசிக்கப் போகும் வீரர்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்படும் வீரர்கள் இவர்கள்தான். இம்முறை இவர்கள் மீதான எதிர்பார்ப்புகளே அதிகமாகவிருக்கின்றன்.


1.லியோனல் மெஸ்ஸி, விங்கர், அர்ஜென்டினா
2.மைகான், தடுப்பாட்ட வீரர், பிரேசில்,
3.வேயன் ரூனி, ஸ்டிரைக்கர், இங்கிலாந்து
4.சாமுவேல் எட்டோ, ஸ்டிரைக்கர், காமரூன்
5.இகர் கசில்லாஸ், கோல்கீப்பர், ஸ்பெயின்
6.கிளின்ட் டெம்ப்சி, மிட் பீல்டர், அமெரிக்கா
7.கிறிஸ்டியானோ ரொனால்டோ, விங்கர், போர்ச்சுகல்
8.பெர்னாண்டோ டோரஸ், ஸ்டிரைக்கர், ஸ்பெயின்
9.ஸ்டீவன் பியனார், மிட்பீல்டர், தென் ஆப்பிரிக்கா
10.ராபின் வான் பெர்ஸி, ஸ்டிரைக்கர், ஹாலந்து
11.பிராங்க் ரிபெரி, மிட்பீல்டர், பிரான்ஸ்இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் மொத்தமாக 32 அணிகள் பங்குபற்றுகின்றன. போட்டிகளை நடத்தும் நாடு என்பதால் தென்னாபிரிக்க அணி சிறப்பு அணியாக இணைக்கப்பட்டுள்ளது.இம்முறை பங்குபற்றும் அணிகளின் விபரம் வருமாறு
.(2010 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னரான நிலை)

1.தென்னாபிரிக்கா : தரப்படுத்தலில் 83வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 2.

2.உருகுவே : தரப்படுத்தலில் 16வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 10 . முதலாவது உலகச் சம்பியன். மொத்தமாக 2 தடவை உலகச் சம்பியனாகியுள்ளது.

3.மெக்சிக்கோ: தரப்படுத்தலில் 17வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை13 .

4.ஃபிரான்ஸ் : தரப்படுத்தலில் 9வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 12 . உலகச் சம்பியனாகியுள்ள தடவை 1.

5.ஸ்பெயின் : தரப்படுத்தலில் 2வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை12 .

6.சுவிட்ஸர்லாந்து: தரப்படுத்தலில் 24வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 8.

7.சிலி : தரப்படுத்தலில் 18வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 7 .

8.ஹொன்டூராஸ் : தரப்படுத்தலில் 38வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 1 .

9.ஆர்ஜெண்டீனா : தரப்படுத்தலில் 7வது இடம், விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 14 . இது இதுவரை 2 தடவைகள் உலகச் சம்பியனாகியுள்ளது.

10.தென்கொரியா : தரப்படுத்தலில் 47வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 7.

11.கிரேக்கம் : தரப்படுத்தலில் 13 வது இடம். விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 1.

12.நைஜீரியா : தரப்படுத்தலில் 21 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 3.

13.இங்கிலாந்து : தரப்படுத்தலில் 8 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 12. உலகச் சம்பியானான தடவைகள் 1.

14.ஐக்கிய அமெரிக்கா : தரப்படுத்தலில் 14 வது இடம். விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 12

15. அல்ஜீரியா : தரப்படுத்தலில் 30 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 2

16.ஸ்லோவேனியா : தரப்படுத்தலில் 25 வது இடம். விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 1.

17.ஜேர்மணி : தரப்படுத்தலில் 6வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 16. 3 தடவை உலகக் கிண்ண சம்பியனாகியுள்ளது.

18.சேர்பியா : தரப்படுத்தலில் 15 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 10.

19.அவுஸ்திரேலியா : தரப்படுத்தலில் 20வது இடம். இதுவரை விளையாடியுள்ள போட்டிகளின் எண்ணிக்கை 2.

20.கானா : தரப்படுத்தலில் 32வது இடம். இதுவரை விளையாடியுள்ள போட்டிகளின் எண்ணிக்கை 1.

21.டென்மார்க் : தரப்படுத்தலில் 36வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 3.

22.நெதர்லாந் : தரப்படுத்தலில் 4 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 8.

23.ஜப்பான் : தரப்படுத்தலில் 45வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 3.

24.கெமரூன் : தரப்படுத்தலில் 19வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 15.

25.இத்தாலி : தரப்படுத்தலில் 5வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 16. 4 தடவை உலகக் கிண்ண சம்பியன்.

26.பரகுவே : தரப்படுத்தலில் 31வது இடம். விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 7.

27.நியூசிலாந்து : தரப்படுத்தலில் 78வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 1.

28.ஸ்லோவாக்கியா : தரப்படுத்தலில் 34 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 8.

29.போர்த்துக்கல் : தரப்படுத்தலில் 3 வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 4.

30.பிரேசில் : தரப்படுத்தலில் 1வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 18. 5 தடவை உலகக் கிண்ணச் சம்பியன்.

31.ஐவரி கோஸ்ட் : தரப்படுத்தலில் 27வது இடம். இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 1.

32.வடகொரியா : இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணத் தொடர்களின் எண்ணிக்கை 1.

இதுவரை உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்ற ஆண்டுகளும் வெற்றி பெற்ற நாடுகளும்.

ஆண்டு     வென்ற அணி

1930                 உருகுவே
1934                 இத்தாலி
1938                 இத்தாலி
1950                 உருகுவே
1954                 ஜேர்மனி
1958                 பிரேசில்
1962                 பிரேசில்
1966                 இங்கிலாந்து
1970                 பிரேசில்
1974                 ஜேர்மனி
1978                 ஆர்ஜெண்டீனா
1982                 இத்தாலி
1986                ஆர்ஜெண்டீனா
1990                ஜெர்மனி
1994                பிரேசில்
1998               ஃபிரான்ஸ்
2002               பிரேசில்
2006                இத்தாலி
2010                ?????

இதுவரை காலமும் இடம்பெற்ற உலக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிள்  தொடர்பான சிறப்புப் பார்வை.
.(2010 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னரானது)

** பிரேசில் அதிகபட்சமாக 5 தடவைகள் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.


** பிரேசில் உதைப்பந்தாட்ட ஜாம்பவான் பீலே 1958ல் வேல்ஸுக்கு எதிராக தனது 17வயதும் 239 நாட்களிலும் பெற்ற கோலே உலகக் கிண்ணத்தில இளம் வீரர் ஒருவர் பெற்ற கோலாகும்.

** ஜேர்மனி அதிகபட்சமாக 92 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளது.

** உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை விட்டுக் கொடுத்த அணி ஜேர்மனியாகும்.

** இந்தோனேசியா குறைந்த பட்சம் ஒரேயொரு உலகக் கிண்ணப் போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ளது.

** உலகக் கிண்ண போட்டித் தொடர்களில் அதிக போட்டிகளுக்கு அணித் தலைவராகச் செயல்பட்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆர்ஜெண்டீனாவின் டியாகோ மரடோனாவாவார். இவர் 1984-1994 வரை 16 போட்டிகளை வழி நடத்தியுள்ளார்.

** உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக வெற்றியீட்டிய அணி பிரேசில் ஆகும். பிரேசில் இதுவரை 64 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.


** அதிக உலக்கிண்ணப் போட்டிகளில் தோல்வியடைந்த அணி மெக்சிகோவாகும்.இது இதுவரை 22 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.


** கெமரூனின் ரொஜர் மில்லர் 1994ம் ஆண்டு தனது வயது 42 ஆண்டுகளும் 39 நாட்களுமாகவிருக்கும்போது ரஸ்யாவுக்கெதிரான போட்டியொன்றில் கோளொன்றைப் போட்டார். இதுவே உலக்கிண்ணப் போட்டியொன்றில் வயதான வீரர் பெற்றுக் கொண்ட கோலாகும்.

** உலக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களைப் போட்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் பிரேசிலின் ரொனால்டோ ஆவார். இவர் மொத்தமாக 15 கோல்களைப் போட்டுள்ளார்.

**உலக்கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களைப் போட்டுள்ள அணி பிரேசிலாகும். இது இதுவரை 201 கோல்களைப் போட்டுள்ளது.

** 2002ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தில் துருக்கி 11வது வினாடியில் கோல் போட்டது. இந்த கோலைப் போட்ட ஹகன் சுகுர் உலகக் கிண்ண போட்டியொன்றில் அதிவேக கோல் போட்டவர் என்ற சாதனைக்கு சொந்தக் காரணானார்.

** 1982 ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஹங்கேரி அணி எல்சல்வடோர் அணிக்கு எதிரான போட்டியில் 10 கோல்களைப் போட்டதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியொன்றில் அணியொன்று போட்ட அதிக கோல்கள் என்ற சாதனையை தனதாக்கிக் கொண்டது.

** 1998ம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் மொத்தமாக 171 கோல்கள் போடப்பட்டன.இதுவே உலகக் கிண்ணத் போட்டித் தொடரில் பெறப்பட்ட அதிக கோல்களாகும்.

** உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரேசில் அதிகபட்சமாக 11 தொடர் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

** பெனால்டி சூட்-அவுட் மூலம் அதிக உலகக் கிண்ணப் போட்டிகளை வென்ற அணி ஜேர்மனியாகும். ஜெர்மனி பெனால்டி சூட்-அவுட் மூலம் 4 போட்டிகளில் வெற்றியீடியுள்ளது.

** 1950ம் ஆண்டில் ரியோடி ஜெனீரோவில் நடந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் உருகுவே - பிரேஸில் அணிகள் மோதின. இந்தப் போட்டியை பார்வையிட அரங்கில் 199854 பேர் வந்திருந்தனர். உலகக் கிண்ணப் போட்டியொன்றை பார்வையிட அதிகம் பேர் வந்த சந்தர்ப்பம் இதுவேயாகும்.

** 1930ம் ஆண்டு உருகுவேயில் நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ண போட்டியில் ருமேனிய - பெரு அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை கண்டுகளிக்க 300 பார்வையாளர்கள் மாத்திரமே வந்திருந்தனர். உலகக் கிண்ண போட்டி ஒன்றை பார்வையிட மிகக் குறைவான ரசிகர்கள் வந்த போட்டி இதுவாகும்.

** வட அயர்லாந்து வீரர் நோர்மன் வைட் சைட் 1982ம் ஆண்டு யூகோஸ்லாவியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது வயது 17 ஆண்டுகளும் 41 நாட்களுமாகும். இவரே உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய இளம் வீரராவார்.

** இதுவரை நடைபெற்ற அனைத்து உலகக் கிண்ணப் தொடர்களில் பங்குபற்றிய ஒரே நாடு பிரேசிலாகும்.

** 1958,1998, மற்றும் 2006ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளில் அதிகபட்சமாக தலா 4 ஓன் கோல்கள் போடப்பட்டன.

** ஃபிரான்ஸ் வீரர் சினடின் சிடேன் மற்றும் பிரேசிலின் கபு ஆகியோர் அதிகபட்சமாக உலகக் கிண்ணத்தில் 6 எச்சரிக்கை அட்டைகளைப் பெற்றுள்ளனர்.

** உலகக் கிண்ணத்தில்போட்டியிலிருந்து வேகமாக வெளியேற்றப்பட்டவர் உருகுவேயின் பெடிஸ்டா ஆவார். 1986ம் ஆண்டு ஸ்கொட்லாந்துடனான போட்டியில் போட்டியின் 56வது வினாடியில் இவர் வெளியேற்றப்பட்டார்.

**உலகக் கிண்ணப் போட்டிகளில் போட்டியொன்றில் அதிக கோல்கள் போட்டவர் ரஷ்ய வீரர் ஒலெக் ஸ்லென்கோ ஆவார். அவர் 1994ம் ஆண்டு கெமரூனுக்கு எதிரான போட்டியில் 5 கோல்களைப் போட்டார்.

** 2002ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் பிரேசில் 7 வெற்றிகளைப் பெற்றதே தொடர் ஒன்றில் அணி ஒன்று பெற்ற அதிக வெற்றியாகும்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

ஐஃபா விருது விழா 2010

பொலிவூட்டின் உயர் விருது விழாவாகக் கருதப்படும் ஐஃபா  2010 விருது விழா  கடந்த சனிக் கிழமை சுகததாச உள்ளக அரங்கில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. ஒரு சில பிரபலங்களைத் தவிர்த்து ஏராளமான நட்சத்திரங்கள் இதில் கலந்துகொண்டனர்.பல கோடி பணச்செலவில் இடம்பெற்ற இவ்விழா எதிர் பார்த்ததுபோலவே வெற்றிகரமாக அமைந்ததா? இல்லை தோல்வி கண்டதா என்பது ஒரு புறமிருக்கட்டும். அரசுக்கு ஆதவானவர்கள் இவ்விழா மிகச் சிறப்பாக, வெற்றிகரமாக அமைந்தது என்கிறார்கள். அரசுக்கு எதிரானவர்களோ அரசுக்கு இது பலத்த அடியென்றும் இதனால் பலகோடி நட்டம் என்றும் கூறுகிறார்கள்.
இந்த விடயங்களுக்குள் ஆழமான அரசியல் இருப்பதால் அது நமக்கு வேண்டவே வேண்டாம்.

ஐஃபா 2010 விருது விழாவில் வழங்கப்பட்ட விருதுகள் எவை யார் யார் இம்முறை விருதுகளைப் பெற்றார்கள் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

மொத்தமாக வழங்கப்பட்ட 27 விருதுகளில் 16 விருதுகளை 3 இடியட்ஸ் பெற்றுச் சாதனை படைத்தது.

1.சிறந்த திரைப்படம் - 3 இடியட்ஸ்  -விது வினோத் சோப்ரா


சிறந்த திரைப்படத்துக்காக 3 இடியட்ஸுடன் போட்டி போட்ட படங்கள்
பொனி கபூர் - வோண்டட்
அனுராக் கஸ்யப் ,ரோனி ஸ்க்ரீவாலா - டேவ் டி
விசால் பரத்வாஜ் , ரோனி ஸ்க்ரீவாலா - காமினி
சுனில் மன்சண்டா , ஏபி க்ரோப் - பா என்ற போது


2.சிறந்த நடிகர் - அமிதாப்பச்சன் (பா)


அமிதாப் பச்சனுடன் இவ்விருதிற்காக போட்டியிட்டவர்கள்
அமீர் கான் - 3 இடியட்ஸ்
சைஃப் அலிகான் - லவ் ஆஜ் கால்
சல்மான் கான் - வோண்டட்
சஹீட் கபூர் - காமினி
ரன்பிர் கபூர் - வேக் அப் சிட்

சிறந்த நடிகை - கரீனா கபூர் (3 இடியட்ஸ்)
                                    வித்யா பாலன் (பா)


3..சிறந்த இயக்குனர் - ராஜ்குமார் ஹிரானி (3 இடியட்ஸ்)

4.சிறந்த நகைச்சுவை நடிகர் - சஞ்சை தத் ( ஓல் த பெஸ்ட்)

5..சிறந்த வில்லன் - போமன் இரானி (3 இடியட்ஸ்)
6..சிறந்த துணை நடிகை - திவ்யா டட்டா (டெல்லி 6)

    சிறந்த துணை நடிகர் - சர்மன் ஜோசி (3 இடியட்ஸ்)


7.இவ்வருடத்தின் சிறந்த அறிமுக நடிகர் - ஒமி வைந்யா (Jackie Bhagnani)

  இவ்வருடத்தின் சிறந்த அறிமுக நடிகை - ஜெகுலின் ஃபெர்னாண்டஸ் (Mahie Gill)


                 (இலங்கையைச் சேர்ந்தவர்)


8.சிறந்த கதை - அபிஜாட் ஜோசி, ராஜ்குமார் ஹிரானி, விது வினோத் சோப்ரா (3 இடியட்ஸ்)

9.சிறந்த பாடலாசிரியர் - ஸ்வானண்ட் கிர்கிரே (3 இடியட்ஸ்)

10.சிறந்த பிண்ணணிப் பாடகர் - ஷான் -பெஹ்டி ஹவா சா த ஹோ
          (3 இடியட்ஸ்)

     சிறந்த பிண்ணணிப் பாடகி - கவிதா சேத் - எக் டரா (Wake Up Sid)


11.சிறந்த இசையமைப்பாளர் - ப்ரிடாம் சக்கரவர்த்தி (லவ் ஆஜ் கால்)

12.சர்வதேச ரீதியில் சாதனை படைத்தவர் - அனில் கபூர்


13.ஐஃபா க்றீன் குளோபல் விருது - விவேக் ஓபராய்


14.சிறந்த திரைக் கதை - அபிஜாட் ஜோசி, ராஜ்குமார் ஹிரானி, விது வினோத் சோப்ரா (3 இடியட்ஸ்)

15.சிறந்த ஒளிப்பதிவாளர் - சி.கே.முரளீதரன் (3 இடியட்ஸ்)

16.சிறந்த வசனகர்த்தா - அபிஜாட் ஜோசி, ராஜ்குமார் ஹிரானி (3 இடியட்ஸ்)

17.சிறந்த பிண்ணனி இசை - சஞ்சேய் வந்ரேக்கர், அடுல்           ரானிங்கா, சாண்டனு மொய்ட்ரா (3 இடியட்ஸ்)

18.சிறந்த படத் தொகுப்பாளர் - ராஜ்குமார் ஹிரானி (3 இடியட்ஸ்)

19.சிறந்த ஒலிப்பதிவாளர் - பிஸ்வடீப் சட்டெர்ஜி, நிஹால் ரஞ்சன் சாமெல் (3 இடியட்ஸ்)

20.சிறந்த பாடல் ஒலிப்பதிவு - பிஸ்வடீப் சட்டெர்ஜி, சச்சி கே சங்கவி (3 இடியட்ஸ்)

21.சிறந்த மீள் ஒலிப்பதிவாளர் - அனுப் தேவ் (3 இடியட்ஸ்)


22.சிறந்த நடன இயக்குனர் - பொஸ்கோ மார்டிஸ், கேசர் கொன்சால்வ்ஸ் (லவ் ஆஜ்கால்)


23.சிறந்த உடை அலங்காரம் - அனாஹிடா ஷெரோஃப் அடான்ஞனியா, டொலி அஹுல்வாலியா (லவ் ஆஜ்கால்)

24.சிறந்த கலை இயக்குனர் - சாபு சிரில் (அலடின்)

25.சிறந்த காட்சியமைப்பு - சால்ஸ் டார்பி (அலடின்)

26.சிறந்த சண்டைப் பயிற்சி - ஸியாம் கெளசால் (காமினி)

27.சிறந்த ஒப்பனையாளர் - க்ரிஸ்டியன் டின்ஸ்லி, டொமினி டில் (பா)


இவ்விருதுகளுக்கு மேலதிகமாக பிரபல தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ், பொலிவூட்டின் முன்னாள் நடிகை ஜீனத் அமன் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இம்முறை சிறந்த அறிமுக நடிகைக்கான விருது பெற்ற இலங்கையரான ஜகலின் ஃபெர்னாண்டஸ் 1984 ஜூன் 2ல் பிறந்தவர். இவர் 2006ம் வருடம் மிஸ் சிறீலங்காவாகத் தெரிவானார்.அதே வருடம் இடம்பெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியிலும் (மிஸ் யுனிவேர்ஸ் போட்டியிலும்) கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


பி.கு:  எனது பதிவுகளைப் பார்க்கும் நீங்கள் உங்கள் கருத்துகளை பின்னூட்டம் (கொமென்ஸ்) மூலம் வழங்கினால் அது எனக்கு உட்சாகமளிக்கும். அத்தோடு உங்கள் வாக்குகளையும் இட்டு என்னை இன்னும் ஊக்கப்படுத்துங்களேன்............

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இரும்புக்கோட்டை முறட்டுச் சிங்கம் அஸ்லம்

இரும்புக்கோட்டை நீதிமன்றத்தில் பயங்கர பதற்றம். காரணம் முக்கியமான வழக்கு ஒன்றை விசாரித்து மறண தண்டனை விதிக்கப்படப் போகின்றது.
சட்டத்தரணி:  கனம் நீதிபதி அவர்களே குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ரிஃபாஜ் ஒரு ஹோட்டல் ஊழியர், அவர் கடமை புரியும் ஹோட்டலில் தினமும் 5 கீரவடை, 10 தோசை, 5 வடை, 5 பராட்டா இதுதான் தினசரி வியாபாரம், இப்படிப்பட்ட பாரிய(?) ஹோட்டலின் உணவுகளை ஈ மொய்க்காமல் பாதுகாப்பதற்கான பொறுப்புதான் ரிஃபாஜுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இவர் சம்பவதினத்தன்று அங்கிருந்த அனைத்து உணவுகளையும் திருடி உண்டுவிட்டார். மிச்சசொச்சங்களை லண்டனிலுள்ள தனது தம்பிக்கு பாய் பார்சல் சேவிசில் அனுப்பியிருக்கிறார். (படுபாவி எனக்கு 2 கீரவட தந்திருந்தான்னா அவனுக்கு ஆதரவா வாதாடியிருப்பன்.) இதற்குரிய ஆதாரம் இந்த பென் ரைவிலிருக்கிறது. எனவே இந்த திருடனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.நீதிபதி : இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீங்கள் என்ன சொல்லப்போகுறீர்கள்.


ரிஃபாஜ் : இல்லை ஐய்யா இது பொய்யான குற்றச்சாட்டு. நான் எந்த தப்பும் செய்யவில்லை. என்னைத் தூக்கிலிட்டால் என் பேஸ்புக் நண்பர்கள் பாவம். அவர்கள் காமெடி பண்ண ஆளில்லாமல் அநாதையாகிவிடுவார்கள். எனவே என்னை மன்னித்துவிடுங்கள்.


சட்டத்தரணி : இல்லை நீதிபதி அவர்களே. இவர் அண்மைக் காலமாக பேஸ்புக் பக்கமே வருவதில்லை. அதனால் இவரை யாரும் இப்பொழுது பேஸ்புக்கில் காமெடிபன்ணுவதில்லை. எனவே மரண தண்டனையை கட்டாயம் கொடுக்க வேண்டும்.


நீதிபதி : ரிஃபாஜ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக பென்ரைவ் மூலமா நிரூபிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் போனவாரம் திருடி சாப்பிட்ட கீரவடையின் சில துண்டுகள் இன்னும் அவரது வாயில் ஒட்டிக் கொண்டிருப்பதால் இவந்தான் திருடன். இதனால் ச.போ.ச 119 சட்டத்தின்படி இவருக்கு மின்சார கதிரையில் உட்காரவைத்து மரணதண்டனை வழங்க இந் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.மரணதண்டனைக்குரிய அனைத்து ஏட்பாடுகளும் முடிந்தாகிவிட்டது. ரிஃபாஜ் கதிரையில் அழுதுகொண்டே உட்கார்ந்திருக்கிறார். ஆழியை அழுத்தும் நேரம் பார்த்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. அதே நேரம் ஒட்டகத்தில் 4 பேர் உள்ளே வந்து ரிஃபாஜைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள்.


பாலைவனத்தின் ஒரு இடத்தில் ரிஃபாஜும் கடத்தி வந்த 4 பேரும் நிற்கிறார்கள்.ரிஃபாஜ் : யார் நீங்க? எதுக்காக என்னைக் கடத்திவந்தீங்க?நால்வரும் தங்கள் முகமூடியை கழற்றுகிறார்கள். சிறாஜ், ரிசாட், ரிஸ்வி, பெளசான் இவர்கள்தான் அந்நால்வரும். ரிஃபாஜுக்கு ஒரே குழப்பம்.


ரிஃபாஜ் : ஏன் என்னைக் கடத்திட்டு வந்தீங்க?றிசாட் : இங்கப்பாரு எங்க களவானிப் பயபுள்ள சங்கத்துல (க.ப.சங்கம்) அஸ்லம் என்டு ஒருத்தன் இருந்தான். அவந்தான் எங்க சங்கத்தலைவன். அவன் பயங்கர திருடன். பயங்கர வேட்டைக்காரன். கள்ளக் கோழி பிடிக்குறது, காட்டுக்குள்ள இறங்கி முயல் பிடிக்குறது, இளநீர்க்குலை, வாழைக் குலை, ஈச்சங் குலை எல்லாம் திருடுறதுல பலேகில்லாடி.இந்த ஃபோடோவையெல்லாம் பாரு.


ரிஃபாஜ் : அடப்பாவி என்னை மாதிரியே இருக்கானேய்யா?


சிராஜ் : இப்போ அவன் எங்க சங்கத்துல இல்ல. திடீரெண்டு உம்றா போனான், அப்புறம் ஹஜ் போனான். இப்போ எங்க சங்கத்தை விட்டே போயிட்டான். அது எங்க நாலு பேரையும் தவிர மத்த எவனுக்குமே தெரியாது. அதனால தலைவரில்லாம எங்க சங்கம் குவாட்டர் அடிச்ச கோவிந்தன் மாதிரி தள்ளாடுது. நீ அவன மாதிரி இருக்குறதாலதான் உன்னை தூக்கிட்டு வந்தோம்.
பெளசான் : நீ எங்க சங்கத்துக்கு தலைவனா இருக்கனும். அதாவது நடிக்கனும். அப்படி நடிச்சேன்னா உனக்கு நீ திருடினியே அதே மாதிரி ஒவ்வொருநாளும் கீரவடை, பராட்டா, தோசை ஏன் அஸ்லம் விரும்பிச்சாப்பிர்ர தையிர் வடையும் ஃபிரீயா தருவம். என்ன சொல்ற.றிஃபாஜ் : அப்படிய்யா? இதெல்லாம் ஒவ்வொருநாளும் தருவீங்க எண்டா எனக்கு டபுல் ஓகே.ரிசாட் : நீ அஸ்லம் மாதிரி நடிக்குறதுல ஒரு சிக்கல் இருக்கு. அஸ்லம் தன் நிழலைவிட வேகமா கோழிக்கு மேல பாய்ந்து அதக் கொல்லக்கூடியவன். அதுமட்டுமில்ல தென்னமரத்துல ஏறி இளநீர் குலைய பறிச்சிப்போட்டுவிட்டு அது கீழ விழமுன்னர் அஸ்லம் கீழ நிப்பான். இது உன்னால முடியுமா?ரிஃபாஜ் : ஐய்யோ… இதெப்புடி…. என்னால முடியாது. ஆனா என்னால எதிர்ல இருக்குறவன் கை கழுவி வரமுன்னமே முழுக் கோழியா எலும்பக்கூட மிச்சம் வெக்காம முழுசா முழுங்க முடியும். அதோட மத்தவன் வெட்டின இளநீர அவன் குடிக்கமுதல்லே பறிச்சுக் குடிக்க முடியும். அதுக்கப்புறம் அவன் தாறஅடிய சத்தமே போடாம வாங்கமுடியும். அவளவுதான்ரிஸ்வி: சரி பரவாயில்ல விடு. நாங்க ஒரு கோழியப் பிடிச்சு கொன்று உன் முன்னாடி போடுறம் நீ கப்புனு அதுக்குமேல பாய்ந்து அத நீதான் கொண்ட மாதிரி பில்ட் அப் குடு. உனக்கு முன்னாடியே மரத்துல ஏறி நான் நிப்பன். அதுக்கப்புறம் நீ ஏறி இளநி குலைய பறிக்குறமாதிரி பறிச்சிட்டு இறங்கு அதுக்கப்புறம் நான் ஒரு குலையப் பறிச்சி கீழ போடுறன். நம்ம சங்கத்து முட்டாளுக அத நம்பிடுவானுங்க. சரியா?நால்வரும் சேர்ந்து க.ப.சங்கத்தப்பத்தி அஸலத்துக்கு சொல்லிக்கொடுத்தாங்க. அப்புறம் எல்லோரும் க.ப.சங்கத்து தலைமையகத்துக்கு வந்துட்டாங்க. அங்க சங்கத்தாளுக எல்லாம் நிக்குறானுக. அஸ்லம் திரும்பி வாரத கண்டதும் எல்லோரும் குதூகலிக்குறாங்க.

க.ப.சங்கத் தலைவன் அஸ்லம் வாழ்க! கோழிக் கள்ளன் அ…….ம் வாழ்க, இளநீர் திருடும் இளிச்சவாயன் அ….ம் வாழ்க, எங்கள் சங்கத்து ஆழுக மீது விழும் ஒவ்வொரு அடியையும் தானே வாங்கும் தானைத் தலைவன் அஸ்லம் வாழ்க!பலத்த வரவேற்பினைத் தொடர்ந்து தலைமை உரையாற்ற அஸ்லம்(ரிஃபாஜ்) அழைக்கப்பட்டார். தலைவர் உரை ஆரம்பம்.”ஹ்ஹ்ம்ம்……….. அன்பார்ந்த க.ப.சங்க உபதலைவர் லொடுக்குப்பாண்டி அவர்களே, க.ப.சங்க வட்டச் செயலாளர் வண்டு முருகன் அவர்களே, சதுரச் செயலாளர் கைப்புள்ள அவர்களே, க.ப.சங்கத்தின் உறுப்பினர்களான களவானிப்பயபுள்ளைகளே! உங்கள் எல்லாருக்கும் வணக்கம். நம்ம க.ப.சங்கத்தின் கொள்கையின்படி ஒரு வேளை திண்ணாலும் அதை களவெடுத்துதான் நாங்கள் திண்ண வேண்டும். இது வரைக்கும் நாம எப்புடி இருந்தோமிங்குறது முக்கியமில்ல இனிமே எப்புடி இருக்கப் போறம் எங்குறதுதான் முக்கியம்,(எல்லோரும் ஒரே அமைதி) நான் இப்படி கஸ்ட்டப்பட்டு பன்ஞ் டயலொக் சொல்றனே…. எவனாவது ஒருத்தன் கை தட்டினீங்கலாடா ட்யூப் லைட்டுக்கு பொறந்தவனுகளே….(தலைவர் ஆவேசமானதைக் கண்ட ரிசாட் ஆறுதல் படுத்துகிறார். உரை தொடர்கிறது.) நாம இனிமே நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்காப் பண்ணனும். (கைதட்டல்) நம்ம சங்கத்து ஆளுக மேல எவனாவது கை வெச்சா அத நான் பாதுட்டு சும்மா இருக்கமாட்டன். அவன் மீது விழுற அடிய நானே வாங்குவன். (கைதட்டல்){”பயபுள்ளைகளுக்கு ஆசையப்பாரு?” தன் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார்.} இந்த வேளையில நம்ம சங்கத்துக்கு பரம எதிரியான கட்டதொரைக்கு ஒன்னு சொல்ல ஆசப்படுறன். டேய் கட்டதொர முடிஞ்சா என் சங்கத்து ஆள டச் பண்ணிப்பாரு. அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி (கைதட்டல்) ஒரு கோழிதான் களவெடுத்தாலும் அத எல்லாரும் சேர்ந்து கோலாகலமாச் சாப்புடனும். ஆனா மிஞ்சின எலும்ப எனக்கு தந்துடனும். இத்துடன் எனது உரையை முடிச்சுக்குறன். வயித்தெரிச்சலோட கேட்டுட்டு இருந்த பயபுள்ளைங்க எல்லாருக்கும் நன்றி. ”தலைவர் உரையைத் தொடர்ந்து க.ப.சங்க கொள்கையின்படி செயட்படுவதாக சபத்மெடுத்துவிட்டு எல்லோரும் கலைந்து செல்கிறார்கள்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS