உலகக் கிண்ண உதைப் பந்தாட்டப் போட்டிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்துக்குள்ளேயே ஆசிய கிரிக்கட் ரசிகர்களின் மற்றுமொரு திருவிழா ஆரம்பமாகின்றது.
அதுதான் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள்.
இலங்கை, பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்திய அணிகள் பங்குகொள்ளும் ஆசிய கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இன்று ஆரம்பமாகின்றன. இம்முறை அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புள்ளை மைதானத்திலே இரவு பகல் போட்டிகளாக நடைபெறவுள்ளமை முக்கிய அம்சமாகும்.
ஆசியாவின் பலம் மிக்க நான்கு அணிகளும் தங்களுக்குள் பலப் பரீட்சை நடாத்தப் போகும் ஆசியக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளுக்கு இன்னும் ஒரு சிறப்பும் உண்டு. உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கு முன்னதாக இவ்வணிகள் மோதிக் கொள்ளும் மாபெரும் தொடர் இது என்பதே அச்சிறப்பு.
போட்டி அட்டவணை இதுதான்
முதலாவது போட்டி
ஜூன் 15 செவ்வாய் இலங்கை v பாக்கிஸ்தான்
2வது போட்டி
ஜூன் 16 புதன் பங்களாதேஸ் v இந்தியா
3வது போட்டி\
ஜூன் 18 வெள்ளி இலங்கை v பங்களாதேஸ்
4வது போட்டி
சனி ஜூன் 19 இந்தியா v பாக்கிஸ்தான்
5வது போட்டி
திங்கள் ஜூன் 21 பங்களாதேஸ் v பாக்கிஸ்தான்
6வது போட்டி
செவ்வாய் ஜூன் 22 இலங்கை v இந்தியா
வியாழன் ஜூன் 24
இறுதிப் போட்டி - TBC v TBC
இது வரை 9 ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர்கள் நடைபெற்றிருக்கின்றன. இதில் இலங்கை இந்திய அணிகள் தலா 4 தடவையும் பாக்கிஸ்தான் அணி ஒரு தடவையும் சம்பியனாகியிருக்கின்றன. பங்களாதேஸ் அணியினருக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை.
நடப்பு ஜம்பியனான இலங்கை அணி இறுதியாக இடம்பெற்ற இரு ஆசியக் கிண்ணப் போடிகளையும் வெற்றி கொண்டிருக்கும் நிலையில் இம்முறையும் வெற்றிபெற்று தொடர்ச்சியாக 3 முறை சம்பியனாகி இந்தியாவின் சாதனையைச் சமப்படுத்துமா என்பதை பொறுத்திருந்தூதான் பார்க்க வேண்டும்.
இலங்கை அணி.
சிம்பாப்வே மும்முனைத் தொடரை வெற்றிகொண்ட பின்னர் இலங்கை அணியினர் இப்போட்டியை எதிர்கொள்கின்றனர்.அணித் தலைவர் குமார் சங்ககார, லசித் மலிங்க, மகெல ஜயவர்தன, முத்தையா முரளீதரன் ஆகியோர் மீண்டும் அணியில் இணைகின்றனர். ஆனாலும் சிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய தினேஸ் சந்திமல், ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் அணியில் இல்லை. இது பலருக்கும் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கை அணி விபரம் வருமாறு.
1.குமார் சங்ககார (தலைவர்)
2. முத்தையா முரளீதரன் (உப தலைவர்)
3.திலகரத்ன டில்சான்
4.ரங்கன ஹேரத்
5.மஹெல ஜயவர்த்தன
6.சுராஜ் ரந்தீவ்
7.திலின கண்டம்பி
8.சாமர கபுகெதர
9.நுவன் குலசேகர
10.ஃபர்வீஸ் மஹ்ரூஃப்
11.லசித் மலிங்க
12.ஏஞ்சலோ மெத்தியூஸ்
13.திலான் சமரவீர
14.உபுல் தரங்க
15.சானக வெலகெதர
இலங்கை அணி தெரிவு தொடர்பில் தெரிவுக் குழுத் தலைவர் அரவிந்த டீ சில்வா கூறுகையில்
”சனத் ஜயசூரியவின் தொடர்ச்சியான மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக அவரை அணியில் இணைத்துக்கொள்ளவில்லை. சில தந்திரோபாய நடவடிக்கைகளைக் கையாளும் நோக்கில் அஜந்த மெண்டிசை அணியில் இணைத்துக் கொள்ளவில்லை. அணித் தெரிவில் சில தந்திரோபாயங்களைக் கையாண்டிருக்கின்றேன் அது தொடர்பில் எதிர்க்கருதுகளை தெரிந்துகொள்ளவோ அல்லது அதை எதிரணியினர் தெரிந்துகொள்ளவோ நான் விரும்பவில்லை.” என்று கூறியிருந்தார்.
ஃபர்வீஸ் மஹ்ரூஃப் மற்றும் ரங்கன ஹெரத் ஆகியோரின் தெரிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரவிந்த டீ சில்வா “சகல துறை ஆட்டக் காரர்கள் இருவகை ஒன்று துடுப்பாட்ட சகலதுறை வீரர் அடுத்தது பந்துவீச்சு சகல துறை வீரர். அந்தவகையில் எஞ்சலோ மெத்தியூஸ் துடுப்பாட்ட சகல துறை வீரர், ஃபர்வீஸ் மஹ்ரூஃப் பந்து வீச்சு சகல துறை வீரர். தம்புள்ள மைதானத்தைப் பொறுத்தவரை மஹ்ரூஃப் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த அவர் இப்போது 100% உடல் தகுதியோடு இருகிறார் எனவே அவரை அணியில் இணைத்திருக்கின்றோம்.
பாகிஸ்தான் அணியில் சிறந்த வலது கைத் துடுப்பாட்ட வீரர்கள் அதிகம் இருப்பதால் எமக்கு ஒரு இடது கை சுழல் பந்துவீச்சாளர் தேவை அத்துடன் பவர் பிலே ஓவர்களில் மாறுபட்ட விதத்தில் பந்துவீசக் கூடிய சுழல் பந்துவீச்சாளர் தேவைப்பட்டார் எனவே அனுபவம்வாய்ந்த ரங்கன ஹெரத்தினை தெரிவு செய்தோம்.”
டினேஸ் சந்திமால், ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் அணியில் இடம்பெறாமை தொடர்பில் கருத்துக் கூறிய அரவிந்த டீ சில்வா ”சிம்பாப்வே தொடரில் அவ்விருவரும் உண்மையிலேயே மிகச் சிறப்பாக விளையாடினார்கள். ஆசியக் கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தவரை முதல் மூன்று போட்டிகளில் இரண்டிலாவது அவர்களுக்கு விளையாட வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை. அவ்வாறிருப்பின் அவர்களுக்கு அவுஸ்திரேலியா செல்லும் ஏ அணியுடன் இணைந்து விளையாட உள்ள அருமையான வாய்ப்பும் கை நழுவி விடும். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் அவுஸ்திரேலியா செல்லும் ஏ அணியுடன் இணைந்து அதில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதே அவ் இளம் வீரர்களுக்கு சிறந்ததென நான் கருதுகிறேன்” இவ்வாறு அணித் தேர்வு தொடர்பில் அரவிந்த டீ சில்வா கருத்துத் தெரிவித்தார்.
உண்மையில் சிறந்த தூர நோக்கும், நுட்பமும் வாய்ந்த அணித் தெரிவு. என்னைப் பொறுத்தவரையில் சரியான காலகட்டத்தில் சரியான ஒருவர் சரியான பொறுப்பை கையேற்றிருக்கிறார்.
அரவிந்த டீ சில்வாவின் தெரிவிலான இலங்கை அணி சாதிக்க என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.
பாகிஸ்தான் அணி.
பாக்கிஸ்தான் அணிக்குள் இடம்பெற்ற பல வெட்டுகுத்துகளுக்கு பின்னர் ஒரு இளம் அணி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தான் அணியினைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.
ஒரு வருட தடை விதிக்கப்பட்ட சொகைப் மாலிக் அதனை எதிர்த்து வெற்றி பெற்று மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார். தலைவராகவிருந்து நீக்கப்பட்ட அவர் இப்போது அஃப்ரிடியின் தலைமைத்துவத்தின் கீழ் விளையாடப் போகின்றார். அடுத்தவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சொகைப் அக்தார். நீண்ட இடைவேளையின் பின்னர் மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். அக்தரின் வருகை பாகிஸ்தானின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அக்தரின் ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும். அக்தர் பந்த வீச ஓடிவரும் வேகம் ஸ்டைல், பந்தின் வேகம், எதிரணி வீரர்களை முறைக்கும் பார்வை, விக்கட்டினை வீழ்த்திய பின்னர் பருந்து போல் கைகளை விரித்து வட்டமிட்டு ஓடும் அழகு இவையெல்லாவற்றையும் ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன். இம்முறை
சாதிப்பாரா என்று பார்க்கலாம்.
பாகிஸ்தான் அணி விபரம்
1.சஹீட் அஃப்ரிடி (தலைவர்)
2.சல்மான் பட் (உப தலைவர்)
3.அப்துல் ரஸாக்
4.அப்துர் ரஹ்மான்
5.அஸாட் ஸஃபீக்
6.இம்ரான் ஃபர்ஹட்
7.கம்ரன் அக்மல்
8.முஹம்மட் ஆமிர்
9.முஹம்மட் அஸிஃப்
10.சயீட் அஜ்மல்
11.சசாய்ப் ஹசன்
12.சொகைப் அக்தர்
13.சொஹைப் மாலிக்
14.உமர் அக்மல்
15.உமர் அமின்
இந்திய அணி.
சிம்பாப்வே மும்முனைத் தொடரின் மோசமான தோல்வியைத் தொடர்ந்து களம் இறங்கும் இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பில்லை. அதே போல் சச்சின் டெண்டுல்கர் சுய விருப்பில் ஓய்வில் இருக்கிறார். ஏற்கனவே டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சோபிக்காமையால் பலத்த கண்டனத்துக்குள்ளாகியிருந்த நிலையில் களம் இறங்குகிறது இந்திய அணி.
இந்திய அணி விபரம்
1.மகேந்திர சிங் தோனி (தலைவர்)
2.விரேந்தர் சேவாக் (உப தலைவர்)
3.ரவிசந்திரன் அஸ்வின்
4.அசோக் டிண்டா
5.கெளதம் காம்பிர்
6.ஹர்பஜான் சிங்
7.ரவீந்திர ஜடேஜா
8.சஹீர் கான்
9.விராட் கோலி
10.ப்ரவீன் குமார்
11.அஸிஸ் நெஹ்ரா
12.ப்ரகயன் ஒஜா
13.சுரேஸ் ரெய்னா
14.ரோஹித் சர்மா
15.செளரப் திவாரி
பங்களாதேஸ் அணி.
சில சமயங்களில் விஸ்வரூபம் எடுக்கும் சில சமயங்களில் பரிதாமாகத் தோற்கும் ஒரு அணி. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் பின்னர் களம் இறங்குகிறார்கள்.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் சிறந்த ஃபோமில் இருக்கிறார்.தலைவர் சகீப் அல் ஹசன், முஹம்மட் அஸ்ரபுல் போன்ற வீரர்களும் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்பலாம். எந்த அணிக்கும் சவால் விடக்கூடிய இளம் அணி பார்க்கலாம் சாதிக்கிறார்களா என்று.
பங்களாதேஸ் அணி விபரம்.
1.சகீப் அல் ஹஸன் (தலைவர்)
2.முஸ்ஃபிகுர் ரஹீம் (உப தலைவர்)
3.அப்துர் ரசாக்
4.இம்ருல் கைஸ்
5.ஜஹ்ருல் இஸ்லாம்
6.ஜுனைந் சித்தீக்
7.மஹ்மூதுல்லாஹ்
8.மஸ்ரஃபீ மோர்த்தசா
9.முஹம்மட் அஸ்ரஃபுல்
10.நயீம் இஸ்லாம்
11.ருபெல் ஹுசைன்
12.சஃபீயுல் இஸ்லாம்
13.சுஹர்வாதீ சுவோ
14.சயீந் ரஸெல்
15.தமீம் இக்பால்
அனுபவம் + இளமை + துடிப்போடு நான்கு அணிகளும் களமிறங்குகின்றன. சுவாரஸ்யமான போட்டித் தொடரினை கண்டுகளிக்க ஆவலாய் காத்திருக்கின்றேன்.
0 comments:
கருத்துரையிடுக