RSS

ஃபுல்டோஸ் போடாதடா அடிக்கிறானுகன்னு தெரியுதில்ல...

அஃப்ரிடி: கடைசி 6 ஓவர் பாஸ்.. மொத்தம் 3 பேர் சேர்ந்து கதறக் கதற.. மூச்சுத் திணறத் திணற 115 ரன் அடிச்சாங்க பாஸ்... நானும் சரி அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டன்

நான்:
ஏன் பாஸ்.. நீங்க அட்டாக் பண்ணலியா..?

அஃப்ரிடி: அடிக்கும் போது ரோஸ் டெய்லர் மத்தவன்கிட்ட சொல்றான்.. ”எப்படி அடிச்சாலும் ஃபுல் டோஸ் போளாவே போடுறானுகடா.. இவனுங்க ரொம்ப நல்லவனுங்கடா”ன்னு சொல்லிட்டான் பாஸ்
நானும் எம்புட்டு நேரம்தான் அழாதவன் மாதிரி ரொம்ப நல்லவனா நடிக்கிறது..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹி ஹி எப்புடிப் போட்டாலும் அவுட்டாகுறானுங்கடா.

6 ஓவர் பாஸ்... மூச்சுச்த் திணறத் திணற...
115 அடிச்சானுக பாஸ்.....
முடியல

எவளவுதான் அடிச்சாலும் அழப்புடாது.. முகத்த சிரிச்ச மாதிரியே வெச்சிக்கனும்



இன்னாங்கடா என்கிட்ட சண்டை பிடிச்சி இடையில மெச்சி குழப்பலாமெண்டு பாக்குறீங்களா... ங்கொய்யால அது மட்டும் என்கிட்ட நடக்காது




மச்சான்.... பாத்து அடிடா... இந்த போலும் கிரவ்ண்டுக்கு வெளியில போனா அப்புறம் வேற போள் இல்லையாம்..
மொத்தம் 13 போள் கிரவுண்டுக்கு வெளியில போயிட்டு




அடிங்கடா உங்களால எவளவு முடியுமோ அவ்வளவுக்கு அடிங்க...




ஆஹா... மறுபடியும் நம்மகிட்டையே போள் வருதே... இந்த முறையாவது ஒழுங்க பிடிச்சிடுவனா..?




பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிப்பாத்திருக்கன்..
ஆனா இப்படி சிக்ஸ் சிக்ஸா அடிச்சு பிறந்தநாள் கொண்டாடி நான் பாத்ததே இல்ல..




ம்ம்.... நமக்கு மட்டும் சரிய்யா குறிபாத்து போடுறானுக..




சிரிடா சிரி... ட்ரெசிங் ரூம்ல நான் வாங்கப் போற அடி எனக்குதான் தெரியும்.




பாருங்கடா பெட்டை இப்படிப் பிடிச்சி இப்படித்தான் அடிக்கனும்... இனியாவது என்னைப் பார்த்து தெரிஞ்சுக்குங்க..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இலங்கை அணியினர் ஆட்ட நிர்ணய சதியில்(மே பிடபத மகிந்த அபேசுந்தரகே)

கடந்த சனிக்கிழமை இலங்கை பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி தோல்வி கண்டதற்கு இலங்கை அணியினர் ஆட்ட நிர்ணய சதியில் (மெச் பிக்ஸிங்)ஈடுபட்டதுதான் காரணமாம்.
அதில் மஹெல மற்றும் சமரவீர ஆஹியோர்தான் இந்த சதியில் ஈடுபட்டார்களாம்.


பாக்கிஸ்தான் வர்த்தகர் ஒருவருடன் 20 இலட்சம் பந்தயம் கட்டியதால்தான் மஹெலவும் சமரவீரவும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டார்களாம்.

இது சுயாதின தொலைக்காட்சியின் சிங்கள பிரதான செய்தியின் பின்னர் இடம்பெறும் ”விமசும” என்ற விமர்சன நிகழ்ச்சியில் மஹிந்த அபேசுந்தரவினால் சொல்லப்பட்டிருந்தது.(விமர்சனப் பிரதி எழுதியவர் மஹிந்த அபேசுந்தர)

இப்படியான பொய்யான அபாண்டமான பழியை ஈவிரக்கமின்றி சுமத்தியிருக்கும் இவர் ஒரு பத்திரிகையாசிரியர். இவரை பத்திரிகை ஆசிரியர் என்பதைவிட கதாசிரியர் என்றி சொல்வது மேல். நன்றாக கதை அளக்கிறார். இந்த மனிசனை ஒருமையில் திட்டனும் போல் இருக்கிறது ஆனாலும் நாகரீகம் கருதி விட்டுவிடுகிறேன்.

மிஸ்டர் அபேசுந்தர:
கடந்த காலங்களில் தேர்தல் காலங்களில், யுத்தகாலங்களில் நீங்கல் அள்ளிவிட்டதை மக்கள் ரசித்தார்கள்.  விமசும பிடபத மஹிந்த அபேசுந்தரகே எனும் போது மக்கள் சந்தோசப்பட்டார்கள். அந்தக் காலம் அப்படி இருந்தது. அன்று கிடைத்த பேரும் புகழும் உங்களுக்கு இப்போது இல்லை எனும் போது கிரிக்கட் வீரர்களை இலக்காக்கி புகழ் தேட விரும்புகிறீரோ....?


கெத்தாராம மைதான ஆடுகளத்தின் தன்மை, அம்மைதானத்தில் விளையாடும் போது நாணயச்சுழற்சியின் முக்கியத்துவம், அந்த மைதானத்தில் இரண்டாவது துடுப்பாடும் அணியினருக்கு எவளவு பாதகமானது போன்ற சாதரண தகவல்கள் கடந்த கால போட்டி முடிவுகள் சம்பந்தமான எதுவும் அறியாதவராக இந்த செய்தியை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது.


உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுக் கொடிருக்கும் தருணத்தில், முக்கியமான போட்டிகள நடைபெறவுள்ள வேளையில் எமது வீரர்களை இப்படி அபாண்டம் சுமத்தியிருப்பது அவர்களின் மனநிலை மற்றும் ஆற்றதிறணில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எள்ளளவும் சிந்திக்கவில்லையா நீங்கள்.

இந்த செய்திகள் தொடர்பாக விளையாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் இந்நாள் வீரர்கள் தங்கள் எதிர்ப்பை ஒருமித்துக் காட்டியிருப்பது மிக்க மகிழ்ச்சி.இதுவே எமது பலம்.

எம் வீரர்களுக்கு:
இலக்கை நோக்கிய பயணத்தில் இவையெல்லாம் சிறு முற்கள்.... தட்டிவிட்டுவிட்டு உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்..
வாழ்த்துக்கள்..


சர்ச்சைக்குள்ளான வீடியோ செய்து இது. அதற்கு கொடுத்திருக்கும் பின்னணி இசையைப் பாருங்களன்.
ஏதோ முக்கியமான தலைவர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு ஒலிக்கும் பிண்ணணி மாதிரி.

மே பிடபத மகிந்த அபேசுந்தரகே:

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS