RSS

ஹலால் !!!!!!!!!!!!



ஹலால் வாபஸ் பெறப்பட்டதாக அறிந்த உடனே எழுந்து  கோபம் கவலையின் வெளிப்படுத்தியிருந்தேன்.
அதுவரையில் ரிஸ்வி முஃப்தி அவர்களின் உரையை கேட்டிருக்கவீல்லை. ஆனால் அவரின் உரையைக் கேட்டதன் பின்னர் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டேன்.

ஹலால் உணவு உற்பத்தியை உறுதிப்படுத்தும் நடவடிக்கை வாபஸ் பெறப்படவில்லை மாறாக ஹலால் இலச்சினை
பொறிப்பதைத்தான் வாபஸ் பெற்றிருக்கிறார்கள் அதுவும் முன்னர் கட்டாயமாக்கப்படிருந்த ஹலால் இலச்சினை இப்போது
விருப்பத் தேர்வாக்கப்பட்டிருக்கிறது(Optional) அதாவது விரும்பியவர்கள் பொறிக்கலாம் விருப்பம் இல்லாதவர்கள் விட்டுடலாம்.
ஆனால் ஜம்மியதுல் உலமாவின் ஹலால் ஸிஸ்ட்டம் தொடர்ந்தும் இருக்கும். ஹலால் பொருட்களை முஸ்லிம்கள் பிரித்தறிய ஜம்மியதுல் உலமாவின்
இணையத்தளம், ஹொட்லைன், எஸ்.எம்.எஸ் மூலாமாக அறிவுறுத்தப்படும். இதற்காகவென ஒரு தனி தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்படும்.

பொது பலசேனாவின் மற்றுமொரு குற்றச்சாட்டு ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலமாக சிங்களவர்களிடம் இருந்து பெறப்படும் கோடிக்கணக்கான
பணம் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது, தலிபான் அல்குவைதாவுக்கு வழங்கப்படுகின்றது என்ற மொக்குத் தனமா குற்றச்சாட்டிற்கும்
சேறு பூசும் விதமாக வழமையான கட்டண அறவீட்டையும் கைவிட்டு இலவசமாகவே அந்த நடவடிக்கை தொடரப்போகிறது.
இதற்குரிய செலவை ஏற்றுக்கொள்ள முஸ்லிம் தனவந்தகர்களும் முஸ்லிம் வர்த்தகர்களும் முன்வந்திருக்கிறார்கள்.
இதன்மூலம் பொது பலசேனாவின் இந்த குற்றச்சாட்டும் தவிடுபொடியாக்கப்படவுள்ளது.

இந்த ஹலால் சான்றிதழ் விடையத்தில் ஜம்மியதுல் உலமா சபை படிப்படியான நடவைக்கைகளையும் கைக்கொண்டிருக்கின்றது.
முதலில் 70:30 முறைமை அதாவது ஒரு பொளின் 70% மானவற்றிற்கு ஹலால் சான்றிதழ் பொறிப்பதில்லை,. 30% ஆனவற்றிற்கு ஹலால் சான்றிதழ் பொறிப்பது.
அது நடைமுறைச் சாத்தியம் குறைவானது என்பதால் அடுத்த கட்டமாக அரசாங்கத்திடம் இதனைப் பொறுப்பெடுக்கச் சொல்வது. அதனை அராசங்கம் நிராகரித்தது.
எனவே எடுக்கக் கூடிய இறுதியானதும் சிறந்ததுமான முடிவான இந்த முடிவுக்கு ஜம்மியதுல் உலமா சபை முன்வந்திருக்கின்றது.

பொது பலசேனாவின் நோக்கம் ஹலாலை அகற்றுவது என்பதைவிட முஸ்லிம் சிங்கள இனக் கலவரத்தை தூண்டுவதே அவர்களின் முக்கியமான
இலக்காக இருந்தது. அது இந்த முடிவின் மூலம் இன்று முறியடிக்கப்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஏற்றுமதியாளர்களீன் வேண்டுகோளிற்கு இணங்க ஹலால் சான்றிதழ் வழமைபோன்று
வழங்கப்படும். உள்நாட்டுச் சந்தையில் ஹலால் முத்திரை பதிக்கப்பட்ட பொருட்களை விட்கலாம் விட்காமல் விடலாம். ஆனால் எது ஹலால்
எது ஹறாம் என்பதை முன்னர் ஹலால் முத்திரை மூலம் அறியத்தந்த ஜம்மியதுல் உலமா இனி அதை அவர்களின் இணையதளம், ஹொட்லைன், எஸ்.எம்,எஸ்
மூலமாக, பள்ளிவாசல்களின் மூலமாக அறிவிக்கவுள்ளது. அவ்வளவுதான் மாற்றம். எனவே தொடர்ந்தும் ஹலால் உணவுகளை உறுதிப்படுத்தும் ஜம்மியதுல் உலமாவின்
பணி தொடர்ந்தும் நடைபெறும்.

”எப்படி லோகோவைப் பார்த்து வாங்குவதை மக்களுக்கு நாங்கதான் அறிமுகம்செய்தமோ
அதேபோல லோகோ இல்லாமலும் இதை நீங்க அடையாளம் காண்பதற்கு  இன்ஸா அலாஹ் நாங்களே உங்களுக்கு வழிகாட்டுவோம்”ரிஸ்வி முஃப்தி

ரிஸ்வி முஃப்தியின் கருத்தப்படி பெளத்த பிக்குகளுடன் கடந்த காலங்களில் இடம்பெற்றா ஹலால் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்தைகளின் போது பொது பலசேனா மட்டுமல்லாது
ஏனைய பிக்குகளும் பெளதர்களும் ஹலால் பொருட்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார்கள் என்பது புலனாகின்றது. எனவே ஹலால் விடையத்தில் இந்த முடிவு எடுக்கப்படாவிட்டிருந்தால்
பொது பலசேனாவிடமிருந்து மட்டுமல்ல ஏனைய பெளதர்களிடம் இருந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியிருந்திருக்கும்.

 ஆக. எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் கொஞ்சம் இறங்கி வந்து எடுக்கப்படக்கூடிய ஒரு சிறந்த முடிவே எடுக்கப்பட்டுள்ளதாக இதனை என்னால் பார்க்க முடிகிறது.

சரி இனிவரும் காலங்களில் பொது பலசேனாவின் அடுத்தகட்ட அட்டூழியங்களை ஜம்மியதுல் உலமா சபை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் அவர்களுக்கும்
எங்களுக்கும் இருக்கப் போகும் சவால். இன்ஸா அல்லாஹ் பார்ரகலாம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS