RSS
காதலர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதலர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வண்ணான்’ஸ் Day மருவி “வெலண்டைன்ஸ் Day” ஆச்சு

------ காதலர் தினம் --------

காதலர் தினத்தை எல்லாரும் “வெலண்டைன்ஸ் Day” அப்படின்னு சொல்லுவாங்க ஆனா அது தப்பு ”வண்ணான்’ஸ் Day” அதுதான் சரி
வண்ணான்’ஸ் Day தான் காலப்போக்கில மருவி “வெலண்டைன்ஸ் Day” ஆ மாறிப் போச்சு.

இந்த ”வண்ணான்’ஸ் Day” உருவான வரலாறு தெரியுமா உங்களுக்கு..? சொல்றன் கேளுங்க

இற்றைக்கு சில பல ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு காதல் ஜோடி இருந்துச்சாம்.. அதுதான் அந்த ஊர்ல முதலாவது காதல் ஜோடியாம்.. அவங்க காதல அவங்க ரெண்டு பேர் வீட்லையும் ஏத்துக்கவே இல்லையாம்.. 

எவ்வளவோ ட்ரை பண்ணியும் வருசக் கணக்கா காத்திருந்தும் இரு வீட்டாரும் சம்மதிக்கவே இல்லையாம். பொறுமை இழந்த ரெண்டுபேரும் ஒன்னா தற்கொலை பண்ணிக்க ஆத்துல குதிக்கப் போனாங்களாம்… 
அந்த நேரமா அந்த ஆத்துல ஒரு வண்ணான் உடுப்பு துவைச்சிட்டு நின்னானாம். அந்த ஊர்லையே அவர் மட்டும்தான் வண்ணானாம் அதனால அந்த ஊர் மக்கள் வண்ணான் எண்டுதான் அவரைக் கூப்பிடுவாங்களாம்….

அவரு அந்த காதல் ஜோடிய பாத்துட்டு என்ன பண்ணப் போறீங்கன்னு கேக்க அவங்க நடந்ததையெல்லாம் சொன்னாங்களாம்… 

அதைக் கேட்டு மனமிரங்கிய அந்த வண்ணான் இந்தக் காதல் சாகக்கூடாது கண்டிப்பா வாழனும்னு சொல்லி அவர்கிட்ட இருந்த கழுதையைக் கொடுத்து இந்தாப்பா இந்தக் கழுதைல ஏறி நீங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டே ஓடிடுங்க ஓடிப்போய் எங்கையாச்சும் போய் சந்தோசமா வாழுங்கப்பா எண்டு சொல்லி தன் கழுதையக் கொடுத்து அனுப்பிவச்சாராம்

அந்த ஜோடியும்டு கழுதைல ஊரை விட்டே ஓடிப் போயிட்டாங்களாம்….

இப்படி தன்னிடமிருந்த ஒரே ஒரு கழுதையையும் கொடுத்து காதலைச் சேர்த்து வெச்ச அந்த வண்ணானிடம் இருந்த நல்ல மனசு நமக்கு இல்லாம போயிட்டேன்னு நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்ட அந்த ஊர் நாட்டாம ஒரு முடிவுக்கு வந்தார். 

அதாவது அந்த காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிய நாளான பெப்ரவரி 14ஐ காதலர் தினமாக கொண்டாடவேண்டும் என்றும் அந்நாளுக்கு அந்த காதல கழுதையைக் கொடுத்து சேர்த்துவெச்ச வண்ணானின் ”வண்ணான்” எண்ட பெயர்சூட்டப்பவேண்டும் என்றும் மக்களுக்கு அறிவித்தார்..

அதாவது பெப்ரவரி 14 ”வண்ணான்’ஸ் Day”

மேலும் இந்த தினத்தில் ஊரிலுள்ள காதலர்கள் மற்றும் காதலித்து திருமணம் முடித்தவர்கள் அனைவரும் நாட்டாமை உட்காரும் ஆலமரத்தடியில் இருந்து அடுத்த ஊர் வரை ஓடி மீண்டும் நாட்டாமையின் ஆலமரத்தடிக்கு வர வேண்டும். வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பவர்கள் தாங்கள் இருக்கும் பார்க் பீச்சில் ஒரு ரவுண்ட் ஓடலாம்.. என்றும் உத்தரவிட்டார்……… 

இதுதான் வரலாறு…..இப்படி உருவானதுதான் இந்த ”வண்ணான்’ஸ் Day”. இதைத்தான் இப்ப உள்ளதுக கொஞ்சம் ஸ்டைல்லா வெலண்டைன்ஸ் Day னு மாத்திக்கிட்டு கொண்டாடிட்டு திரியுதுக.

(எப்புடீ….? நாங்களும் சொல்லுவோமில்ல History...)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இன்னிக்கு காதலர் தினமாமே,,,,?

---- இன்னிக்கு காதலர் தினமாமே ----

எத்தனை பேர் ரோமியோ - ஜூலியட் ஆகப் போறாங்களோ....?
எத்தனை பேர் தேவதாஸ் ஆகப் போகிறார்களோ..?
எத்தனை பேர் மீராவாகப் போகிறார்களோ...?

எத்தனை முத்தங்கள் பரிமாறப்படப் போகின்றனவோ...?
எத்தனை ஜோடிகள் எந்தப் புதருக்குள் ஒதுங்கப் போகிறதோ..?
எத்தனை குடும்பங்கள் சீரியழியப் போகின்றனவோ..?

எத்தனை ஐஸ்கிரீம்கள் சாப்பிடப்பட்ப் போகின்றனவோ...?
எததனை சாராய போத்தல்கள் குடிக்கப் படப்போகின்றனவோ...?
எத்தனை விச போத்தல்கள் குடிக்கப்படப் போகின்றனவோ...?

எத்தனை மனமாற்றங்கள் நிகழப் போகின்றனவோ...?
எத்தனை மதமாற்றங்கள் நிகழப் போகின்றனவோ...?

எத்தனை காதல் திருமணத்தில் முடியப்போகிறதோ..?
எத்தனை காதல் ஓட்டத்தில் முடியப்போகிறதோ..?

எத்தனை நண்பர்கள் துரோகிகளாகப் போகிறார்களோ...?
எத்தனை நண்பர்கள் காதலர்களாகப் போகிறார்களோ...?

எத்தனை அறைகள் எத்தனை அடிகள் விழப் போகின்றனவோ...?
எத்தனை சண்டைகள் வரப்போகிறனவோ...?
எத்தனை தற்கொலைகள் நிகழப் போகின்றனவோ...?

எத்தனை பேர் பிரமச்சரியத்தை தொடரப் போகிறார்களோ...?
எத்தனை  வீட்டு அலுமாரிகள் காதலர் தின பரிசுகளால் நிறையப் போகின்றனவோ..?

எத்தனை ஆயிரங்கள் லட்சங்கள் செலவாகப் போகின்றனவோ...?
எத்தனை பொய்கள் பேசப்படப் போகின்றனவோ..?



இதையெல்லாம் யோசிச்சா நமக்கு காதல் வரும் என்றீங்க.....?
ஹி ஹி ஹி


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உலகெங்கிலுமுள்ள காதலர்களுக்கு எனது இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.



உலகெங்கிலுமுள்ள காதலர்களுக்கு எனது இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.


இன்று உலகெங்குமுள்ள காதலர்கள் காதலர் தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.

இந்நாளில் காதலர்கள் தங்களுக்கிடையில் அன்பைப் பகிர்ந்து கொள்வதும், பரிசுப் பொருட்களைப் பரிமாரிக் கொள்வதும் சிறப்பம்சமாகும். அதிலும் இம்முறை காதலர் தினம் ஞாயிற்றுக் கிழமை வந்திருப்பதால் விசேட நிகழ்ச்சிகளையும், களியாட்டங்களையும் பற்றிக் குறிப்பிடவே தேவையில்லை.



அத்தோடு இதுவரை காதலியோ, காதலனோ கிடைக்காதவர்கள் தங்களுக்கேற்றவர்களை தேடிக் கொள்வதற்கும் இந்நாளைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.



இத்தினமானது ரோமில் வாழ்ந்த கிறிஸ்துவ தியாகியான வெலன்டைன் என்பவரின் நினைவாகக் கொண்டாடப்படுவதால் வெலன்டைன்ஸ் டேய் என்றும், காதலர்களே இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் தினம் என்று அழைக்கப்படுகின்றது.

.இக்காதலர் தினம் உருவானமை தொடர்பாக பல கதைகள் கூறப்பட்டாலும் பிரதானமாகச் சொல்லப்படும் கதை இதுதான்.
3ம் நூற்றாண்டில் ரோமில் வாழ்ந்த வெலன்ரைன் என்பவருக்கு ரோமை ஆண்ட கிளாடியஸ் என்ற மன்னனின் ஆட்சியைப் பிடிக்கவில்லை.

வெலன்ரைனுக்கு மட்டுமல்லாமல் அந்நாட்டில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கும் இம்மன்னனின் ஆட்சி பிடிக்கவில்லை. திருமணமான ஆண்களுக்கு தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு அரச படையில் இணைய விருப்பமிருக்கவில்லை. இதை அறிந்த மன்னன் ஆண்கள் திருமணம் செய்யாதுவிட்டால் படையில் இணைந்து கொள்வார்கள் என்பதற்காக ஆண்களைத் திருமணம் செய்யாது தடுப்பதற்காக சட்டமொன்றை உருவாக்கினான்.



அச்சட்டத்தை வெலன்ரைன் முற்றாக நிராகரித்தார். தவிரவும் தன்னைத் தேடிவரும் இளைஞர்களுக்கு இரகசியத் திருமணமும் செய்துவைத்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. சிரையிலிருந்த வெலன்ரைன் சிறை அதிகாரியின் மகளின் காதலில் விழுந்தார்.



கி.பி.269 ஃபெப்ரவரி 14ம் திகதியன்று தனக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென்று தெரிந்துகொண்ட வெலன்ரைன் சிறை அதிகாரியின் மகளுக்கு “உங்கள் வெலன்ரைனிடமிருந்து காதல்” (Love From Your Valantine) என்று குறிப்பொன்றில் எழுதிக் கொடுத்துவிட்டு இறந்துவிட்டார்.



அன்றைய நாளே இன்றுவரை வெலன்ரைன் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் தமது காதலைப் பறிமாறிக் கொள்வதும், தமது காதலை நினைவுபடுத்தும் முகமாக பரிசுப் பொருட்களை வழங்குவதும் வழக்கமாகிவிட்டது.
           


ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த செல்வி எஸ்தர் ஹோலன்ட் என்பவர்தான் முதல் வெலன்ரைன் அட்டையை அனுப்பியவராம்.



ரோமச் சக்கரவர்த்தி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் காதலர் தினம் ரோம் அரசி யூனோவைக் கெளரவிக்குமுகமாக ஃபெப்ரவரி 14 இல் விடுமுறை தினமாக்கப்பட்டதாகவும், ரோமர்கள் யூனோவைப் பெண் தெய்வம் என்றும், திருமணங்களுக்கான தெய்வம் என்றும் கருதியதால் ஃபெப்ரவரி 15 ஐ பெரிய விழாவாகக் கொண்டாடுவதாகவும் ஒரு தகவல் உண்டு.



ஃபெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தை விமர்சையாகக் கொண்டாடும் வழக்கம் முன்னரைவிட அண்மைய காலங்களில்தான் அதிகரித்து வருகின்றது. வானொலி, தொலைக் காட்சிகளில் காதல் வாரம் என்று கொண்டாடப்படும் அளவிட்கு காதலர் தின மோகம் அதிகரித்துவிட்டது.



காதலெனும் கடலில் மூழ்கி எழாதவர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். சிலர் மூழ்கி கரை சேர்ந்திருக்கிறார்கள், சிலர் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் சிலர் மூழ்கியே போயிருக்கிறார்கள்.



தமது காதல் வெற்றி பெறும் பட்சத்தில் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்லும் இளைஞர்கள், காதல் தோல்வியென்றதும் விரக்தியின் விளிம்பிற்குச் சென்று தம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.

                                       

காதல் என்பது மிகவும் புனிதமான ஒரு உறவு. இனிமையான உணர்வு, வர்ணமயமான உலகம்.

இப்படிப்பட்ட காதலின் புனிதத் தன்மையை இன்றைய இளைஞர்கள் பேணுகின்றார்களா என்றால் அது சந்தேகத்துகுரியதே.

பெரும்பாலான இளைஞர்கள் காதலை ஒரு பொழுது போக்காகவே கருதுகிறார்கள்.



கடற்கரை, பார்க், பொது இடங்கள் என்று எல்லா இடங்களிலும் காதலர்கள் அநாகரீகமாக நடந்துகொள்கின்றார்கள். இவற்றினால்தான் பெரியவர்கள் காதலின் மீது வெறுப்புக் கொள்கின்றார்கள்.
                                


அன்று காதல் உள்ளத்திலிருந்து உணர்வுபூர்வமாக வெளிப்பட்டது. ஆனால் இப்போது காதல் பொழுது போக்காக மாறிவிட்டது.

கண்டதும் காதல், பார்க்காமலே காதல், செல்போன் காதல் என்பவற்றையெல்லாம் தாண்டி இப்பொழுது ஃபேஸ்புக் காதல், ஹை 5 காதல் என்று தொழில்நுட்பத்தோடு சேர்ந்து காதலின் தன்மையும் மாறிக் கொண்டு செல்கின்றது.



காதலிக்கும் போது தம்மையும் மறந்து காதலிப்பதால் பல சமூக கலாச்சார சீரழிவுகள் ஏற்படுவதுடன், காதலர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது.



காதலின் புனிதத் தன்மையைப் பேணுவதுடன், கட்டுக் கோப்புடன் காதலித்தால் வளமான எதிர்காலம் நிச்சயம் கிட்டும்.

                    

காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் Gud Luck.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS