RSS

அகடெமி விருதுகள்

ஆரம்பம் முதல் இன்றுவரை திரைப்படத் தயாரிப்புத் துறையில் ஐக்கிய அமெரிக்காவே முன்னிலையில் இருந்து வருகின்றது. கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹொலிவூட் என்ற நகரே திரைப்பட உலகின் தலைநகராகக் கருதப்படுகின்றது.

Academy of Motion Picture Arts and Sciences (திரைப்படக் கலைகள், இயல்கள் என்பவற்றுக்கான அகடெமி) என்ற அமைப்பு 1927 மே மாதத்தில் ஹொலிவூட்டில் ஸ்தாபிக்கப்பட்டது. திரைப்படத் தொழிற் துறையில் கலாசார, கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றத்தை ஏற்படுத்துதல் அதன் பிரதான நோக்கமாக அமைந்தது. அத்தோடு திரைப்படத் தொழிலில் அரிய சாதனைகளைப் புரிவோரை அங்கீகரித்துப் பாராட்டுவதும் அதன் இன்னொரு நோக்கமாக இருந்தது.

இந்த ஸ்தாபனத்தின் தொழிற்பாடுகளுள் மிகவும் பிரசித்தமானது வருடம் தோறும் அது நடத்தும் அகெடமி விருதுகள்(Academy Awards) வழங்கும் நிகழ்ச்சியாகும். திரைப்பட உற்பத்தி, நடிப்பு ஆகிய துறைகளில் வருடந்தோறும்  25 வகையான தனியாள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு அகெடமி விருதுகள் வழங்கப்படுகின்றனஇன்று திரைப்படத்துறையில் அகடெமி விருது பெறுவது பெருஞ்சாதனையாகவும் பெருமைக்குரியதாகவும் கருதப்படுகின்றது.


முதலாவது அகடெமி விருதுகள் 1929 மே 16ம் திகதி வழங்கப்பட்டன.  1927 / 28 காலப்பிரிவில் உற்பத்திசெய்யப்பட்ட திரைப்படங்களே இவ்விருதுகளுக்காகக் கவனத்தில் எடுக்கப்பட்டன. முதல் தடவையாக அகடெமி விருது பெற்றவர்களுள் Emil Jannings(சிறந்த நடிகர்), Janet Gaynor(சிறந்த நடிகை), Frank Borzage(சிறந்த நெறிப்படுத்துனர்), என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். அவ்வருடத்தில் Wings  என்ற திரைப்படமே சிறந்த படைப்பாகத் தெரிவு செய்யப்பட்டது.

அகடெமியின் 2,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களே இரகசிய வாக்கெடுப்பின் மூலம் விருதுக்குரிய படத்தையும் ஆட்களையும் தெரிவுசெய்கின்றனர். வாக்கெடுப்பின் முடிவுகள் சுயாதீனமான கணக்காய்வு நிறுவனம் ஒன்றைக்கொண்டு அட்டவணைப்படுத்தப்பட்டு அதனடிப்படையில் தெரிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு ஒஸ்கார்’(Oscar) என்றழைக்கப்படும் தங்கமுலாம் பூசப்பட்ட சிறிய வெண்கலச் சிலை பரிசாக வழங்கப்படுகின்றது. Cedric Gibbons என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இச்சிலை George Stanly என்ற சிற்பியினால் வார்க்கப்பட்டது.
இது 34.3cm உயரமும் 3.9kg நிறையும் கொண்டது. 1931ம் ஆண்டிலேயே அதற்கு ஒஸ்கார்என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது 

அகடெமியின் நிர்வாகப் பணிப்பாளராக வந்த Margaret Herrick என்பவர் முதன் முதலாக இச்சிலையைக் கண்டபோது இது எனது மாமன் ஒஸ்காரைப் போல் இருக்கிறது என்று குறிப்பிட்டாராம். பின்னர் அப்பெயரே அதற்கு நிலைத்துவிட்டது. இப்போது அகடெமி விருதினை ஒஸ்கார் விருதுஎனவும் அழைக்கின்றனர்.

அகாடெமி விருதுகள்
  • சிறந்த நடிகருக்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
  • சிறந்த துணை நடிகருக்கான அகாடெமி விருது: 1936 - தற்போதுவரை
  • சிறந்த நடிகைக்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
  • சிறந்த துணை நடிகைக்கான அகாடெமி விருது: 1936 - தற்போதுவரை
  • சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாடெமி விருது: 2001 - தற்போதுவரை
  • சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாடெமி விருது: 1931 - தற்போதுவரை
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாடெமி விருது: 1948 - தற்போதுவரை
  • சிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
  • சிறந்த குறுந்திரைப்படத்திற்கான(சிறப்பு) அகாடெமி விருது: 1943 - தற்போதுவரை
  • சிறந்த குறுந்திரைப்படத்திற்கான(குறுங்கதை) அகாடெமி விருது: 1941 - தற்போதுவரை
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாடெமி விருது: 1935 - தற்போதுவரை
  • சிறந்த வேறு மொழி படத்திற்கான அகாடெமி விருது: 1947 -தற்போதுவரை
  • சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாடெமி விருது: 1931 - தற்போதுவரை
  • சிறந்த ஒப்பனைக்கான அகாடெமி விருது: 1981 - தற்போதுவரை
  • சிறந்த அசல் இசைக்கான அகாடெமி விருது: 1934 - தற்போதுவரை
  • சிறந்த அசல் பாட்டிற்கான அகாடெமி விருது:1934 - தற்போதுவரை
  • சிறந்த படத்திற்கான அகாடெமி விருது :1928 - தற்போதுவரை
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாடெமி விருது: 1963 - தற்போதுவரை
  • சிறந்த இசைக்கான அகாடெமி விருது: 1930 - தற்போதுவரை
  • சிறந்த திரைவண்ணத்திற்கான அகாடெமி விருது: 1939 - தற்போதுவரை
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடெமி விருது: 1940 - தற்போதுவரை

சிறப்பு அகாடெமி விருதுகள்
இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.
  • சிறப்பு அகாடெமி விருது: 1929 - தற்போதுவரை
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடெமி விருது: 1931 - தற்போதுவரை
  • கோர்டன் . சாயர் விருது: 1981 - தற்போதுவரை
  • ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போதுவரை
  • இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போதுவரை




    ** நன்றி : அரும்பு + விக்கிபீடியா.



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பூகம்பம் : பலஸ்தீன முஜாஹித் யஹ்யா அய்யாஸின் போராட்ட வரலாறு (பாகம்- 01)





அவர் ஒரு மறைவான ராணுவ மனிதன்


அறிமுகம்…..

மனித வரலாற்றில் அநேகமான நபிமார்களைத் தந்த பெருமை பலஸ்தீனுக்கே உரித்தானது. இஸ்லாத்தின் முதலாவது கிப்லாவும், மூன்றாவது புனிதஸ்தலமான அல் அக்ஸாவும் அங்கேதான் அமைந்துள்ளது. நபிமார்களான மூஸா, ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் பிரச்சாரத் தளமாக பலஸ்தீன் விளங்கியுள்ளதால் அது யூத கிறிஸ்தவர்களுக்கும் புனிதமானதே! இயற்கை வளங்களும், பசுமைச் செழிப்பும் மிக்க பலஸ்தீன் பலமுறை முஸ்லிம்களின் கையிலிருந்து பறிபோய் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. இறுதியாக பிரித்தானிய காலணித்துவவாதிகள் உஸ்மானிய கிலாபத்திற்குக் கீழிருந்த பலஸ்தீனைக் கைப்பற்றி அதனை யூதர்கள் ஆக்கிரமித்துக்கொள்ள வழி அமைத்துக் கொடுத்தார்கள். அங்கே இஸ்ரேல் என்னும் முன் பின் தெரியாத ஒரு நாடு ஈன்றெடுக்கப்பட்டது.

1948ல் இஸ்ரேல் உருவானது முதல் பலஸ்தீனில் முஸ்லிம் சிறுவர்களதும், முதியோர்களதும், தாய்மார்களதும், இளைஞர்களதும் இரத்தம் ஈவிரக்கமின்றி ஓட்டப்பட்டே வந்துள்ளது. இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்களான பென் குரியோன்,மெனாசெம் பெகின்,இஸ்ஹாக் ரபின்,ஷிமோன் பெரஸ், ஏரியல் ஷெரோன் போன்றவர்கள் கூட ராணுவத்திலும், பயங்கரவாதக் குழுக்களிலும் இருந்த போது முஸ்லிம்களது இரத்தக் கறைகளை தங்களது கைகளில் பூசிக் கொண்டவர்கள்தாம்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பலஸ்தீனில் உதயமான மாவீரர்களுள் யஹ்யா அய்யாஸ் இரு காரணங்களுக்காக பிரதான இடத்தை வகிக்கின்றார். ஒன்று அவர் இஸ்லாமிய வழிமுறைகளைப் பின்பற்றிப் போராடியது. அடுத்தது, தற்கொலைத் தாக்குதல், குண்டு பொருத்தப்பட்ட வாகனங்களை வெடிக்கவைத்தல் போன்ற யுத்த முறைகளை (MODUS OPERANDI) முதன் முதலில் அறிமுகப்படுத்தியமை. இங்கே தற்கொலைத் தாக்குதல் இஸ்லாத்தில் கூடுமா? என்ற சர்ச்சை எழுகின்றது. அல்லாமா யூஸுப் அல் கர்ழாவி போன்ற உலகின் தலை சிறந்த உலமாக்கள், பலஸ்தீன் ஜிஹாதில் தற்கொலைத் தாக்குதல் கூடுமென ஃபத்வா வழங்கியுள்ளனர்.

ஒரு சாதாரண விவசாயிக்கு மகனாகப் பிறந்த அய்யாஷ் அபார திறமைசாலியாக காணப்பட்டார். ரசாயனப் பொறியியல் துறையில் பயின்று இஸ்ரேலிய ராணுவத்தினரையே ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு குண்டு தயாரிப்பதிலும், திட்டமிடுவதிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். முப்பது வயதையும் எட்டாத இந்த இளைஞன் யூதர்களின் உள்ளங்கள் வெடிக்குமளவு அவற்றுள் பீதியையும், அச்சத்தையும் உண்டுபண்ணினார். அதுவரை காலமும் சுற்றுப்புறத்தில் இருந்த வந்த யூதப் எதிர்ப்புப் போராட்டத்தை இஸ்ரேலின் இதயத்திற்கே எடுத்துச் சென்ற பெருமையும் அவரையே சாரும். ஹமாஸ் இயக்கம் அய்யாஷைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர் ஒரு மறைவான ராணுவ மனிதன்என வர்ணித்தது.

தமக்கு மத்தியில் மாறுவேடத்தில் வாழ்ந்துவந்த அவரைத் தேடிப் பிடிக்க இஸ்ரேலுக்கு நான்கு வருடங்கள் பிடித்தன. இதற்காக அது பெருந்தொகைப் பணத்தையும் செலவிட நேர்ந்தது.

முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருந்த இந்த கிராமத்து இளைஞன் தனது வாழ்வில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அன்றி வேறு எந்த எதிர்பார்ப்புக்களையும் வைத்திருக்கவில்லை. அவரது நண்பர்களின் கூற்றுப்படி அய்யாஷ் ஒரு அசாதாரண ஈமான் தாரியாகக் காணப்பட்டார். தனது மரணம் நெருங்கி வந்து கொண்டிருப்பதாக அவர் கொலை செய்யப்பட்ட நாளன்று ஸுபுஹின் பின் தனது உற்ற நண்பனான உஸாமா ஹமாதிடம் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கின் அதி நவீன ராணுவச் சக்தியான இஸ்ரேலுக்கு எதிராக துணிவுடன் எழுந்து நின்ற இந்த உத்தம தியாகியை, முஸ்லிம் தியாகியை முஸ்லிம் உலகம் மறக்கக் கூடாது. அவரது நுட்பங்கள், திட்டமிடல்,அர்ப்பணம்,போர்த்தந்திரங்கள் ஆகியவற்றில் அநியாயக் காரர்களின் அழுங்குப் பிடியிலிருந்து விடுபட விரும்பும் ஒவ்வொரு இளைஞனும், யுவதியும், வயோதிபரும் கற்றுக்கொள்ள நிறையப் படிப்பினகள் உள்ளன. பெற்றோர் இந்த இலட்சிய மனிதனை தமது பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யவேண்டும்.

அய்யாஸ் மறைந்து வாழ்ந்த ஒரு மனிதன் என்பதனால் அவரது தியாக வாழ்வும், பணிகளும் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகவே வெளிவந்துள்ளன என்பதுவும் யூதர்கள் பலஸ்தீனில் புரிந்துவந்துள்ள அராஜகங்களை எடுத்துக்கூறுவதோடு அவர்கள் மத்தியில் காணப்படும் உட்பிளவுகளை அம்பலப்படுத்துவதும்தான் இந்த ஆக்கத்தின் நோக்கங்களில் முக்கியமானதாகும்.

இதில் ஆங்காங்கே கையாளப்படும் குர்ஆன் வசனங்கள் யூதர்கள் பற்றி அருளப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் சாட்டப்பட்டுள்ள யூதர்கள் சியோனிஸ இயக்கத்தைச் சார்ந்த இனவாதிகளே. இவர்களே இஸ்ரேலில் பலத்துடனும் அரசியல் செல்வாக்குடனும் காணப்படுகின்றனர். அதேவேளை யூதர்களுக்கு மத்தியில் நல்ல மனிதர்களும் உள்ளனர். அவர்கள் யூதர்களுக்கு உள்ளது போன்றே பலஸ்தீனியர்களுக்கும் உரிமை உள்ளன எனபதை வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு மத்தியில் முஃமின்கள் எனப்படும் விசுவாசிகளும் உள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
(ஆலு இம்ரான்:110)

இச்சிறிய முயற்சி இலட்சியமுள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் திடவுறுதியை ஏற்படுத்தவேண்டும். அல்லாஹ்வின் சேனைக்கு முன் யூத சக்திகள்  விரைவிலோ அல்லது காலம் தாழ்த்தியோ தவிடு பொடி ஆகிவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். அய்யாஸ் போன்ற  சுதந்திரப் போராளிகளை மேலும் உருவாக்க தூண்டுதலாக அமைய வேண்டும் என அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன். அவனின் உதவியின்றி எதுவும் ஆகாது.

அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றிகொள்வோர் ஒருவருமில்லை! உங்களை அவன் கைவிட்டுவிட்டாலோ அதற்குப் பின் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்?
(
ஆலு இம்ரான் : 160)

தொடரும்……...

*** பலஸ்தீனின் முஜாஹித் யஹ்யா அய்யாஸ் என்ற மாவீரனின் போராட்ட வரலாறை உள்ளடக்கிய ”பூகம்பம்” என்ற நூல் எனது நண்பன் ஒருவனால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 178 பக்கங்கள் கொண்ட இந்நூலை ஒரே நாளில் அதுவும் 2 - 3 மணித்தியாங்களுக்குள் கண்ணீர் மல்க நான் வாசித்து முடித்தேன். அந்தளவு சுவாரஸ்யமாகவும்,ஆர்வமாகவும்,கவரக்கூடியதாகவும் இருந்த மாவீரன் யஹ்யா அய்யாஸின் போராட்ட வரலாறினை எனது நற்புகளோடு பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. இதனை நான் ஒவ்வொரு வாரமும் தொடராக எழுத மிகுந்த ஆசையோடும் ஆர்வத்தோடும் காத்திருக்கின்றேன்…


இது பலஸ்தீனின் முஜாஹித் யஹ்யா அய்யாஸ் என்ற மாவீரனின் போராட்ட வரலாறை வெளிப்படுத்தும் வண்ணம் M.ஆஸிம் அலவி அவர்களால் எழுதப்பட்டு  இஸ்லாமிக் புBக் ஹவுஸ் இனால் புத்தகமாக வெளியிடப்பட்ட பூகம்பம் என்ற தலைப்பில் அமைந்த புத்தகத்தின் நேரடிப் பிரதியாகும்.

எழுத்தாளர் :  M.ஆஸிம் அலவி
வெளியீடு :   இஸ்லாமிக் புBக் ஹவுஸ்


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நாங்களும் போடுவம்... கலர் கலராப் போடுவமில்ல.....

ஹெஹேய்.. யாருக்கிட்ட...? எங்ககிட்டேவா...?




அடப்பாவிகளா.. இவ்வளவு டீப்ப்ப்பாவா திங் பண்ணுவீங்க...?




இவரைத்தான் மாங்காய் மடையர் என்று தமிழில் நாங்கள் சொல்லுவோம்.




மவன இன்னைக்கு செத்தடா நீ.....




இந்த பாசுங்களே இப்படித்தான் பாஸ்...




தெருவுக்கொரு டாக்டர் இருந்தா இப்படித்தான்..
கிரிமினலா யோசிச்சு வைத்தியத்துக்கு ஆள் பிடிக்கத்
தோணும்..




ஹி ஹி என்ன கொடும சார் இது..?

** சிரிச்சீங்கதானே... அப்போ வோட்டையும் கருத்தையும் பதிஞ்சுட்டுப் போறது....

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS