RSS

விடிய விடிய பேசிக் கொண்டே இருக்கலாம் யாருக்கும் தெரியாமலே…

               என்ன கொடும சார் - பகுதி 1

நான் ஒன்றும் காதலுக்கு எதிரியல்ல, காதலில் விரக்தியுற்றவனுமல்ல..
ஆனாலும் காதலிப்பவர்களின் அட்டகாசங்களைக் கண்டு நொந்து நூலாகியவன்..


ஊரில் - பாடசாலை மாமர நிழலிலும், பொது நூலக குட்டிச் சுவரிலும், பல்கலைக் கழகத்தில் - மர நிழல் கதிரைகளிலும், வாகனத் தரிப்பிடங்களிலும் விடுதியில் - விடுதி முற்றத்திலும், திண்ணையிலும் உற்கார்ந்துகொண்டு பூப்பறிக்கும் காதலர்களைப் பார்த்து என்ன கொடும சார் இது என்று கவலைப் பட்டவன்.நம்ம நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள்.  தங்கள் காதலியரோடு விடிய விடயப் பேசிவிட்டு விடிந்தெழும்பியும் பேசுவார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியாது பக்கத்தில் தூங்கிக் கொண்டிருப்பவனுக்குக் கூட கேட்காத அளவிற்கு பல மணி நேரங்கள் பேசுவார்கள். நன்றாகப் படித்துக் கொண்டிருப்பவன் திடீரென தானாப் பேசுவான் பார்த்தால் கையில் ஃபோன் இருக்கும். எப்ப ஃபோன் மணி அடித்தது எப்ப பேசத் தொடங்கினான் என்றே தெரியாது. இப்போ சிலர் Bluetooth செவிப்பன்னி(ear piece) வாங்கியிருக்கிறார்கள்.
ஏன் என்று கேட்டால் அதிக நேரம் பேசுவதால் கை வலிக்கிறதாம்.

அதிலும் உபஹார நண்பர்களின் கொடுமை ரொம்ப ஓவர். நள்ளிரவு 12 மணியிலிருந்து மாலை 6 மணிவரை வெளிச் செல்லும் அழைப்பு இலவசம் என்பதால் சரியாக நள்ளிரவு 12 மணிவரை காத்திருந்து ஃபோன் பேசுறாங்க. அதானால நமக்கு காலையில் எழும்புவதற்கு எந்தப் பிரச்சினையில். ராசா காலையில 6 மணிக்கு எழுப்பாட்டிவிடு என்று சொன்னா சரியா 6 மணிக்கு நம்மள எழுப்பிவிட்டு அதுக்கபுறம் அவங்க தூங்குவாங்க. அதுவரைக்கும் ஃபோன்ல தொங்குவாங்க.

இவர் உபஹார சிம்மொன்று வாங்கி வைத்துக் கொண்டு அவவுக்கு சாதரண மொபிடெல் சிம் வாங்கிக் கொடுப்பார். அது போல ப்ளாஸ்டர் சிம் வாங்கிக் கொண்டு அவவுக்கு சாதாரண டயலொக் சிம் வாங்கிக் கொடுப்பார்.
நேரசூசி போட்டு காதல் செய்வாங்க.
நள்ளிரவு 12 மணி தொடக்கம் மறு நாள் மாலை 6 மணிவரை உபஹார
மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை ப்ளாஸ்டர்.
இப்படிப் போகுது இவிங்க காதல்,

இன்னும் சிலர் வீட்டிலிருந்து அனுப்பும் காசு விரயமாகிவிடக் கூடாது என்பதற்காக 3 வேளை சாப்பிடாமல் இரண்டு வேளை சாப்பிடுவது ஒரு வேளை சாப்பாட்டுக் காசை மிச்சம் பிடித்து அந்த காசில் ஃபோன் பேசுவது…. என்ன கொடும சார் இது…...

நட்ட நடு ராத்திரியில இருட்டு ரூம்ல, நுழம்புக் கடியோட, வேருக்க விருவிருக்க தன்னந் தனியா பிசாசு மாதிரி உட்காந்து  கொண்டு போன்ல தொங்குவாங்க....
அப்படி என்னதான் பேசுவார்களோ….????

எல்லம் சொந்த அனுபவமா என்று கேட்டுவிடாதீர்கள்.. அப்படி ஒன்றுமில்லை யாவும் நேரில் கண்டவை....

இந்தக் காதலர்கள் காதலில் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ மொபிடல், டயலொக் நிறுவன உரிமையாளர்கள் கோடீஸ்வரர்களாகிக் கொண்டு செல்கின்றார்கள்.

                                    (கொடுமை தொடரும்…..)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments:

pathikka pattawan சொன்னது…

மற்றவங்க காதலிக்க தொடங்கும் முன்பே நீங்க காதலித்து முடித்தவர் போல இருக்கு .........

ஒரு வேல நீங்க காதலித்த TIME இல PHONE இருந்து இருந்தா நீங்களும் இப்படித்தான் செய்து இருபிங்க போல ...

மற்றது இப்படி ஒரு Article எழுத வேண்டி ஒரு தேவை ஏற்பட்டு இருக்காது சுஹைல் நானாவுக்கு .........

அவர்களாவது காதலியிடம் மட்டும் தான் விடிய விடிய பேசுகிறார்கள் ஆனால் சிலர் உபஹர சிம் வைத்துகொண்டு அதே ஊரில் - பாடசாலை மாமர நிழலிலும், பொது நூலக குட்டிச் சுவரிலும், பல்கலைக் கழகத்தில் - மர நிழல் கதிரைகளிலும், வாகனத் தரிப்பிடங்களிலும் விடுதியில் - விடுதி முற்றத்திலும், திண்ணையிலும் உற்கார்ந்துகொண்டு நம்ம நண்பர்கள் சிலர் தங்கள் நண்பியரோடு விடிய விடயப் பேசிவிட்டு விடிந்தெழும்பியும் பேசுவார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியாது பக்கத்தில் தூங்கிக் கொண்டிருப்பவனுக்குக் கூட கேட்காத அளவிற்கு பல மணி நேரங்கள் பேசுவார்கள். இப்படி பூப்பறிக்கும் அந்த நண்ப > நன்பியர்களைப் பார்த்து என்ன கொடும சார் இது என்று கவலைப் பட்டவன் நான்........

நம்ம இருவருக்கும் என்ன ஒரு ஒற்றுமை............

நன்றாக எழுதுகிறிர்கள் சுஹைல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ...............

கே. ஆர்.விஜயன் சொன்னது…

எல்லாம் வயசுக்கோளாறு தொழில் நுட்பத்தை சரியாக(தவறாக !!) பயன்படுத்துகின்றனர். திருமணம் ஆகி விட்டால் இவர்கள் பேசவே மாட்டார்கள்.

Ahamed Suhail சொன்னது…

@கே. ஆர்.விஜயன்

உண்மைதான் ஐய்யா.

இப்படி பல மணி நேரம் ஃபோனிலயே எல்லாவற்றையும் பேசிவிட்டு கல்யாணத்தின் பின் என்னதான் பேசுவார்களோ....?

இவர்களுக்கு கல்யாணம் ஒரு அங்கீகாரமாக இருக்குமே தவிர ஒரு புத்துணைர்ச்சியாய் இராது என்பது எனது கருத்து.

நன்றி ஐய்யா வருகைக்கும் கருத்துக்கும்