ஹாய் ஃப்ரெண்ட்ஸ் இந்த நாட்கள்ள நான் ரொம்பவே சந்தோசமா இருக்கன்.
காரணம் என் 2வது சகோதரருக்கு திருமணம். அதனால் என் வீடே புதுப் பொலிவு பெற்றிருக்கிறது. நான் உட்பட என் பெற்றோர், குடும்பத்தினர்,உறவினர்கள் அனைவரும் உட்சாகமாக குதூகலமாக இருக்கிறோம்.
என் சந்தோசத்தினை என் நட்புள்ளங்களான உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு…
என் சகோதரர் Dr.A.I.Ahamed Ziyad நாளை 16-10-2010 சனிக்கிழமை திருமண பந்தத்தில் இணைகிறார். எங்கள் வீட்டிலேயே இத்திருமணம் நடைபெறுகிறது.
எனது சகோதரின் திருமண மற்றும் குடும்ப வாழ்க்கை மகிழ்வாகவும் இனிமையானதாகவும் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்...…
தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என் சகோதரரிற்கு உங்கள் வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் வழங்குங்களேன்.. ப்ளீஸ்…
மிக முக்கிய குறிப்பு:
அடுத்தது நாமதான் மாப்ஸ்..... எனவே நம்ம திருமணத்துக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்...
(சபா... நாளைல இருந்து லச்சக்கணக்குல திருமண விண்னப்பங்கள் வரப்போகுதே அதையெல்லாம் எப்படி சமாளிக்கப் போறேனோ..?)
0 comments:
கருத்துரையிடுக