RSS

24-10-2009 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்

என் வாழ்வில் இடம்பெற்ற வரலாற்று நிகழ்வொன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு..
இது பெருமைக்காக அல்ல என் சந்தோசத்திற்காக....

24-10-2009 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.
ஒரு மாபெரும் சபையிலே என் பெற்றோரை ஏற்றிப் பெருமைப்படுத்திய நாள்..
பல  பிரபலங்கள் முன்னிலையில் நான் விருது பெற்ற நாள்..

24-10-2009 அன்றுதான் எனக்கு வானொலிக் குயில் கெளரவ விருது கிடைத்தது. அவ்விருது கிடைத்து இன்றுடன் சரியாக ஒருவருடம் பூர்த்தியாகின்றது.

என் பெற்றோர் சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில்
பல பிரபலங்கள் மேடையில் நின்று கரகோசம் செய்ய
பிரமாண்டமான சபையிலே
சபையோர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோசம் செய்து வாழ்த்த
நான் இவ்விருதினைப் பெற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில்  வடித்திட இயலாது.

அவ்விருதை நான் பெற்ற அந்த தருணத்தின் போதான ஒளிப்பதிவு இது..

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே….

இவ்விருதினை நான் பெற ஊக்கமளித்த என் பெற்றோருக்கும்
என் சகோதரர்கள் மற்றும் உறவுகளுக்கும்
என் நட்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

அக்னி தந்த சொந்தங்களுக்கும்  என் உளப்பூர்வமான நன்றிகள்.


நான் விருதுபெற்றபோது...

a                                                





நான் பெற்ற விருது என் வீட்டை இப்படி அலங்கரிக்கிறது....


இதையும் பாருங்களேன்: வானொலிக் குயில் விருது விழா

*** எனக்கு இவ்விருதுடன் இன்னும் இரண்டு பதக்கங்களும் சான்றிதழும் கிடைத்தன...

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS