நம்ம பக்கத்துவீட்டு அப்புக்குட்டி தண்ட அறுபதாம் கல்யாண விழாவுக்கு என்னை வருமாறு அன்புக் கட்டள போட்டிருந்தாரு.
அன்னைக்கு ஞாயிற்றுக்கிழம எனக்கு எந்தவேலையுமில்ல…(மத்த நாள்ள மட்டும் வேல இருக்குறமாதிரீ பீத்துற…. அப்படியெல்லாம் சொல்லப்பிடாது.)
சரி நானும் போய்த்தான் பாப்பமே எண்டு சொல்லிட்டு அப்புக்குட்டி வீட்ட போனன். அங்க உலகத்துல்ல உள்ள கெழங் கட்டைகளெல்லாம் வந்திருந்திச்சிகள்.
நமக்கு கம்பெனிக்கு யாருமில்ல… அப்படியே ஒரு மாதிரியா ஃபங்ஸன் முடிஞ்சிடிச்சு… எல்லாரும் போயிட்டாங்க ஆனா எனக்கு நம்ம அப்புக்குட்டி 60 வருசம் எந்த சண்டையுமில்லாம தன் மனைவிகூட எப்படி வாழ்ந்தாரு? அதுட ரகசியமென்ன? எண்டு தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையா இருந்துது. கேட்டு தெரிஞ்சுகிட்டா நம்மட வாழ்க்கைக்கும் உதவுமே எண்ட ஆசைதான்.
அப்புக்குட்டி அண்னன்கிட்ட போனன்
நான் : அப்புக்குட்டி அண்ண..
அப்புக்குட்டி : ஆ…தம்பி என்ன இன்னும் போகலியா….? மிச்ச மீதிய அள்ளிகிட்டு போற ப்ளானா…??
நான் : சீச்சீ… அதுல்ல அண்ண. உங்ககிட்ட ஒரு விசயம் கேக்கனும்..
அப்புக்குட்டி: என்ன விசயம்
நான் : இல்ல… 60 வருசமா நீங்களும் உங்க மனைவியும் எந்த சண்டை சச்சரவுமில்லாம சந்தோசமா வாழ்ந்துட்டு வாறீங்களே.. அதன் ரகசியம் என்ன..? கொஞ்சம் சொல்லுங்களேன்…
அப்புக்குட்டி : ஓ… அதுவா..? எங்க கல்யாணம் முடிஞ்சு நாங்க தேன்னிலவுக்கு போனபோது நடந்த சம்பவம்தான் காரணம்..?
நான் : ஐய்யோ ஏதும் 18+ மேட்டரா…..???
அப்புக்குட்டி : அடச்சீ…. அதுல்லப்பா…..இது வேற ஒரு சம்பவம். எப்ப பாரு அதே நெனப்பாவே இரு. அதுசரி நீ என்ன பண்ணுவ உன் வயசு அப்படீ…
நான் : ஹி ஹி என்ன சம்பவம் நடந்துச்சு..? சொல்லுங்க.
அப்புக்குட்டி : நாங்க தேன்னிலவுக்கு ஒரு கிராமத்துக்கு போயிருந்தம்.அங்க ஒருநாள் மாலை வேளையில நாங்க ரெண்டுபேரும் தனித்தனியா ரெண்டு குதிரைகள்ள சவாரி போனம்..
நான் : என்ன அண்ணாத்த.. தேன்நிலவுக்குப் போய் தனித் தனி குதிரையில சவாரி போயிருக்கீங்களே….? சுத்த வேஸ்ட்டு அண்ணாத்த நீங்க…
அப்புக்குட்டி : டேய்… குறுக்க குறுக்க பேசாம கதைய கேளுடா…
நான் : ம்ம்ம்ம்… சொல்லுங்க…
அப்புக்குட்டி : நாங்க குதிரையில சவாரி போயிட்டிருக்கையில என் மனைவி வந்த குதிரை வழியில முரண்டுபிடிச்சுது….
என் மனைவி அதுகிட்ட ‘ இது முதற்தடவை ‘ எண்டு சொல்லிட்டு பயணத்த தொடர்ந்தாள்.
இடையில திரும்பவும் அந்த குதிரை அடம்பிடிச்சுது…அப்போ அவள் ‘இது இரண்டாவது தடவை’ என்று சொல்லிட்டு பயணத்தை தொடர்ந்தாள்.
கொஞ்ச தூரம் போனதும் குதிரை மீண்டும் அடம்பிடிச்சுது. ஒன்றுமே பேசாம கீழே குதித்த என் மனைவி அவள்ட கைத்துப்பாகிய எடுத்து குதிரையின் தலைக்குச்சுட்டாள். அது செத்துவிழுந்தது.
நான் : ஐய்யோ………
அப்புக்குட்டி : எனக்கு சரியான ஆத்திரம்… ’ஏண்டி ஒரு அப்பாவிக் குதிரைய இப்படி ஈவிரக்கமில்லாம சுட்டுக் கொன்றாய்.. உனக்கு அறிவில்லையா?’ அப்படின்னு ஆத்திரமா பேசிக் கண்டிச்சேன்.
என்னை உற்று நோக்கிய அவள் ‘இது முதற் தடவை’ என்றால்.
நான் : ஹி ஹி ஹி..அப்புறம்…?
அப்புக்குட்டி : அப்புறமென்ன..? அவ்வளவுதான் நடந்தது.. அதுக்கப்புறம் எங்க வாழ்க்கையில எவ்வித சச்சரவும் ஏற்படவே இல்ல….
நான் : ஹி ஹி அண்ணாத்த... ஹி ஹி நான் வரட்டா… ஹி ஹி ஹி சீக்கிரமா உள்ள போயிடுங்க அப்புறம் இரண்டாம் தடவ சொல்லிடப்போறா…. ஹி ஹி ஹி
(60ம் கல்யாணத்தின் ரகசியம் துப்பாக்கி முனையில் இருந்திருக்கு)
2 comments:
மாப்ஸ் கதையெல்லாம் நல்லா இருக்குது..
ஆமா உங்களுக்கு ஏப்போ கல்யாணம்..
உங்களுக்கு counting எல்லாம் இல்லையாம்
நேரே சூட்டிங் ஓடா் தானம்
நன்றி மாப்பூ..
ஆமா மாப்பூ........
நேரே சூடிங் ஓடர்தான்..... பாகலாம்....
என்கெளண்டர்ல போட்டுத் தள்ள ஒருத்தி வராமலா போயிடுவா..?
கருத்துரையிடுக