RSS

அப்புக்குட்டி+பாயும் பெட்சீட்டும்

நம்ம அப்புக்குட்டி டுபாயில 10 வருசமா வேல செஞ்சாருங்குறது நம்ம எல்லாருக்கும் தெரியும்.. டுபாய் மெயின் ரோடு பக்கத்துல குறுக்கு சந்த ஒட்டி இருக்குற கேக்குறான் மேய்க்கிறான்” கம்பெனில கண்ணாடி தொடைக்குற வேல.
10 வருசமா ஊருக்கே வராம டுபாயில இருந்த அப்புக்குட்டிக்கு தீடீரெண்டு ஊருக்குப் போற ஆச வந்துட்டுதுஆபீஸ்லையும் ரெண்டு மாச லீவு எடுத்துட்டாரு.

ஊருக்குப்போறதுக்கு இன்னும் நாள் இருக்கு.. சரி ஊருக்குப் போறமே மனைவி பிள்ளைகளுகு பிடிச்ச ஏதும் வாங்கிக்கொடுப்பமே எண்டு நெனச்ச அப்புக்குட்டி வீட்டுக்குப் போனப்போட்டாரு.


அப்புக்குட்டியின் மனைவி ஜலஜா பேசினாங்கஅப்புக்குட்டியும் தான் ஊருக்கு வாற விசயத்தை சொல்லிட்டு ஜலஜாவுக்கு என்னென்ன வேணும்னு எல்லாம் கேட்டுத்தெரிஞ்சுகிட்டாரு.
அப்புறம் தன் செல்லப் பிள்ளை புலிகேசிக்கு என்ன வேணும்னு கேக்க அவன பேசச்சொன்னாரு

அப்பா அப்புக்குட்டியும் மகன் புலிகேசியும் பேசிக்கிறாங்க

அப்புக்குட்டி மகனே செல்லம் எப்படிடா இருக்க..?

புலிகேசி நான் நல்லா இருக்கேன் அப்பா..

அப்புக்குட்டி செல்லம் நான் அடுத்த வாரம் ஊருக்கு வாறண்டா உனக்கு என்னென்ன சாமான் வாங்கி வரட்டும்.. சொல்லு..

புலிகேசி அப்பா எனக்கு.. எனக்கு மியூசிக் வாற சப்பாத்தும்ம் அப்புறம் விளையாட்டுத் துப்பாக்கி ம்ம்… ம்ம் அப்புறம் மணிக்கூடுடி.வி கேம் எல்லாம் வாங்கிட்டு வாங்க… சரியா…?

அப்புக்குட்டி சரிடா செல்லம் உனக்கு எல்லாம் வாங்கிட்டு வாறன்.

புலிகேசி ஆ … அப்பா … இன்னொன்னு சொல்ல மறந்துட்டன்

அப்புக்குட்டி என்னடாச் செல்லம்..?

புலிகேசி : நம்ம பக்கத்து வீட்டு மாமாவுக்கு ஒரு பாயும் பெட்சீட்டும் வாங்கிட்டு வாங்க அப்பா….

அப்புக்குட்டி …. எதுக்குடா..?

புலிகேசி இல்லப்பா… அந்த மாமாவுக்கு அவங்க வீட்ட தூங்குறதுக்கு பாயும் பெட்சீட்டும் இல்லையாமெண்டு நம்ம அம்மாட பாயில அம்மா பக்கத்துலையே தூங்குறாருப்பா.. பெட்சீட் கூட அம்மாட பெட்சீட்டாலதான் போத்திக்கிறாரு….
பாவம் அம்மாவும் அந்த மாமவும் அவங்களுக்கு புறண்டு படுக்க இடமில்லாம நெருக்குப்பட்டு தூங்குறாங்கப்பா….
பாவம்தானே அந்த மாமாவும் அம்மாவும்… இல்லப்பா…??
கட்டாயம் பெட்சீட்டும்பாயும் வாங்கிட்டு வாங்க..
நான் வெக்கிறன்பா..

அப்புக்குட்டி : ???????? %%%%%%%%?????????

சார் அந்த அரிவாளையும் பெக் பண்ணுங்க..


குறிப்பு:
அந்தா மாமா யாராக இருந்தாலும் உடனடியாக தலைமறைவாகிடுங்க..
(ஆஹா எல்லாரும் நம்மளையே கோரஸா பாக்குறாங்களே…..  நோ… நோ… அப்படியெல்லாம் பாக்கப்பிடாது….. நான் ஒரு பச்ச மண்ணு)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Admin சொன்னது…

பழைய கதைய இப்படி புதுசா மாத்தினா எங்களுக்கு என்ன தெரியாமலா போயிடும்...
(என்றாலும் உங்கள் மொழிநடை சூப்பா்)

அஹமட் சுஹைல் சொன்னது…

நன்றி ஃபர்ஹத்..

ம்ம்.... இது ரீமேக் ஸ்டோரீ..