13ஆண்டுகளை நிறைவு செய்து, நேயர்களின் அமோக ஆதரவோடு 14ஆவது ஆண்டில் தடம் பதிக்கிறது உங்கள் முதற்தர வானொலி சக்தி FM...
சிகரம் தொட்டு மகிழ்ந்தபோதும், தடைகள் வந்து தகர்த்தபோதும் தோழோடு தோழாக பக்கபலமாக எப்போதும் எம்மைச் சூழநின்ற அன்பு நேயநெஞ்சங்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.
உங்கள் ஆதரவுடன் இன்னும் புதுமைகள் படைப்போம்.... தொடர்ந்தும் சக்தி FM உடன் இணைந்திருங்கள்
(சக்திக் குடும்பத்தின் ஒரு அங்கத்தவனாக நானும் இருப்பதையிட்டு இந்த வேளையில் மிகவும் மகிழ்வுறுகின்றேன்)
நெய்தல் மண்ணில் நிலை கொண்ட தமிழே
கொய்தல் இல்லா மலர் போன்ற இசையே
இரண்டும் சேர்ந்து உறவாடும் அழகே சக்தி
தாயிற் தவழும் தாலாட்டுப் போலே
ஆயற் கூட்டம் அமுதத்தைப் போலே
நேயர் கூட்டம் பலகோடி உனக்கே சக்தி
அமிர்தாய்க் கொஞ்சும் தமிழ் பேசும் நெஞ்சில் மக்கள் தோழன் நீயே
வரமாய் இசையில் வரலாறு படைக்கும் வானொலி வேந்தன் நீயே
உலகம் முழுதும் இசை என்ற தசத்தால் இணைக்கும் சக்தி நீயே
நல்லோர் இசையை தமிழ் வானில் விதைத்தாய் சக்தி
இளமை கொஞ்சும் தமிழ் கொண்ட இசையென உரைக்கும் சக்தி நீயே..
சொல்லா ஆண்டு பல்லாண்டு வாழ்வாய் சக்தி!!!!
4 comments:
உங்கள் பதிவுகள் ஏராளமான வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்
நான் முதலில் கேட்ட தனியார் வானொலி சக்தி. அந்த வகையில் ரொம்ப ரொம்ப இன்றும் பிடித்திருக்கின்றது. வாழ்த்துக்கள்.
ஒரு மாத காலம் சக்தி எப்.எம் அறிவிப்பாளர்களோடு அவர்கள் கலையகத்தில் பழகக் கிடைத்தது மறக்க முடியாத அனுபவம்.
@KANA VARO
நன்றி சகோ...
கருத்துரையிடுக