RSS

நாங்க அம்புட்டு ஃபேமஸ் ஆகிட்டோம்மா...?

பெருசா ஒன்னுமில்லீங்க.. என்னோட ஃபேஸ்புக் சுவர்ல நான் கிறுக்கியவைதாங்க....


**
மீன்காரன் கூவும் சத்தம்
மரக்கறி விற்கும் சத்தம்

சைக்கிள் பெல்லின் சங்கீதம்
சைக்கிளில் டபுள்ஸ் போகும் பேரின்பம்

நட்புகளின் நக்கல் பேச்சின் இம்சை
நட்புகளோடு ஊர் சுற்றும் சுகம்

ஹபாயா போட்டு தலை குனிந்து நடக்கும் பெண்கள்
மாலை நேர மைதானம்/லைப்ரரிக் கட்டுதரும் ஆறுதல்..

இரவு நேரக் கிழங்குக் கடை
ஓவராப் பசிச்சா கொத்து ரொட்டி

மாதம் ஒரு ”காலை”ச் சாப்பாடு
ஆற்றில் குளிக்கும் உற்சாகம்

இல்ல இவை இல்ல வெளிநாட்டில் இவை இல்ல.


**
தொண்டன் : தலைவரே எல்லாரும் நம்ம மேல செருப்பு வீசுராங்க வாங்க ஓடிடலாம்.

தலைவர் : இருடா இப்பதான் ஒரு புதுச்செருப்பு வந்திருக்கு அதுட சோடி செருப்பும் வரும் வரைக்கும் நின்னு பேசுவம். அது வந்த உடனே அதையும் எடுத்துட்டு ஓடிரலாம்..

**
பல்கலைக் கழகத்தில் ராகிங்கை (பகிடிவதையை) ஒழிப்போம் என்று கங்கனங்கட்டிய அரசாங்கம் அதில் குறித்தளவு வெற்றியும் கண்டது.

இப்போது அரசாங்கமே ராகிங்கை தமது பொறுப்பில் எடுத்துள்ளது. மாணவர்களை 3 வாரம் இராணுவ முகாமிலிட்டு அரசாங்கமே நேரடியாக மாணவர்களை ராகிங் செய்யப்போகிறது.

(ஒரே காமெடியா இல்ல...?)


**
எல்லோருக்கும் சொர்க்கத்துக்குச் செல்லும் ஆசை இருக்கிறது. 
ஆனால் யாருக்கும் மரணிப்பதற்கு விருப்பம் இல்லை.

**
பார்ரா..
நாங்க அம்புட்டு ஃபேமஸ் ஆகிட்டோம்மா...? காலங்காத்தாலையே ஜனாதிபதி நமக்கு மெசேஜ் அனுப்புறார்னா பாருங்களன்...

"Obata suba vesak Mangallayak Wewa
janadhipathi Mahinda Rajapaksa"

இவளவு நாளும் ஒபாமா, பான்கீமூன் அவங்ககிட்ட இருந்துதான் Call & Msg வந்துட்டு இருந்துது இப்போ இவரும் ஆரம்பிச்சாட்டாரு.

ஒரே கஸ்ட்டமப்பா...


**
ஓ மை கோர்ட்... கெம்பஸ்ல இருந்தவரைக்கும் நம்ம பொக்கெட் மணிக்கு பஞ்சமே இல்ல.. ஏதாச்சும் காரணத்த சொல்லி காசு வாங்கிடலாம். ஆனா ஊருக்கு வந்த பிறகு செம வரட்சி..
காசு கேட்டா வீட்ல இருக்கிற உனக்கு என்ன அடங்காத செலவுன்னு டயலாக் வேற..

இறைவா ஒரு தொழிலுக்கு போய் சம்பளம் எடுக்கும் வரை ஒரு நல்ல மனிசன எனக்கு ஸ்பொன்சராய் ஆக்குவாயாக.. இல்லன்னா ஒரு பணக்காரப் பையனாப் பாத்து எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் ஆக்குவாயாக.

**
எனக்கு ஒரு ரசிகை இப்படி கடிதம் அனுப்பியிருந்தாள்.

“நான் உங்களுக்காக எதையும் செய்யக் காத்திருக்கின்றேன். எதையும் என்றால்.. எதையும்...”

அதை நான் என் காதலியிடம் கொடுத்து இதற்கு நீயே பதிலனுப்பு என்று கூறினேன்.
அதற்கு அவள் இவ்வாறு பதிலனுப்பினாள்.

“ஏற்கனவே அவருக்காக எதையும் செய்ய நானொருத்தி காத்திருக்கிறேன். அதாவது எதையும் என்றால் எதையும்”

எப்புடி நம்மாளு?

**
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்

கொத்தடிமை கொத்தடிமைன்னு சொல்றாய்ங்களே.. அப்படின்னா யாரு பாஸ்?

கொத்து வாங்க காசில்லாம அடிமை வேல செய்றவிங்களா...??
இல்லன்னா சாப்பிட்ட கொத்துக்கு காசு குடுக்காம அடிமையா சிக்கினவிங்களா..?
அபடியும் இல்லன்னா..
உடம்பில் கொத்துகளைக் கட்டிக்கொண்டு அடிமை வேலை செய்றவிங்களா?
யாரு பாஸ்?

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

12 comments:

Mohamed Faaique சொன்னது…

வீட்டுல ச்சும்மா இருந்து இப்படி யோசிக்கிரத விட, பேசாம கொத்தடிமையா சேந்துடலாமே!!!

Ahamed Suhail சொன்னது…

@Mohamed Faaique
அப்படியெல்லாம் சொல்லி அசிங்கப்படுத்தப்புடாது பாஸ்.. நாங்க ரொம்ப பிசியாக்கும்

விக்கியுலகம் சொன்னது…

பதிவா இது அல்ல அல்ல சொற்பொழிவா ஹிஹி!

Farhath சொன்னது…

FB லதான் உங்க இம்சைன்னு இந்தப்பக்கம் வந்தா ...
இங்கயுமா ... பாஸ்..

Farhath சொன்னது…

//௧௦ நவம்பர், ௨௦௧௧ ௯:௩௯ பிற்பகல்//

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல்ல தமிழ் மேல என்னதான் பற்று இருந்தாலும் நம்பரக்கூட தமிழ்லேயேவா போடுவிங்க...

Ahamed Suhail சொன்னது…

@விக்கியுலகம்
அடடா இதுக்குப் பெயர்தான் சொற்பொழிவா....?

வட போச்சே

Ahamed Suhail சொன்னது…

@Farhath
நீங்க இந்தம் பக்கம் வரமாட்டீங்கன்னு நினச்சன் பாஸ்.. வந்துட்டீங்க என்ன?

ஹி ஹி கண்டுக்காதிங்க பாஸ்

VANJOOR சொன்னது…

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.


ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம்

.

NIZAMUDEEN சொன்னது…

அருமை.

Ahamed Suhail சொன்னது…

@NIZAMUDEEN
நன்றி நன்றி.

முன்னெல்லாம் அடிக்கடி வருவீங்க...? இப்பெல்லாம் காணவே கிடைப்பதில்லையே என்னாச்சு..?

NIZAMUDEEN சொன்னது…

@Ahamed Suhail
அதுவா.....?
சற்றே பிசி...
இன்ஷா அல்லாஹ் இனி அடிக்கடி வருவேன்...

Ahamed Suhail சொன்னது…

@NIZAMUDEEN
கண்டிப்பா வரனும்